Tnpsc

4th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி-மைய வணிகத்திட்டத்தை உருவாக்கியுள்ள இந்திய அமைப்பு எது?

அ) DRDO

ஆ) ISRO 🗹

இ) HAL

ஈ) BEL

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி சார்ந்த வணிகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் 8 நிறுவனங்கள் இந்தத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரோவுடன் கூட்டாண்மைக்காக பதிவுசெய்துள்ளன. ஆர்வமுள்ள நபர்கள் ISRO’இன் திட்டங்கள் மற்றும் பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதாவது அளவுகோல் மாதிரிகள், T-சட்டைகள், விண்வெளிசார் கல்வி விளையாட்டுகள், அறிவியல் பொம்மைகள் போன்றவற்றை வாங்க முடியும். இவ்விளம்பரப்பயிற்சியானது மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் & தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் உருவாக்கும்.

2. நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முதலாவது உலக நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) 2021 ஜூலை.23

ஆ) 2021 ஜூலை.25 

இ) 2020 ஜூலை.27

ஈ) 2020 ஜூலை.29

  • நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான முதலாவது உலக நாள், ஜூலை.25 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை உலக நலவாழ்வு அமைப்பு ஒருங்கிணைந்து அனுசரித்தது. ஐநா பொது அவையானது 2021 ஏப்ரல்.28 அன்று நீர்நிலைகளில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உலகளாவிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் 236,000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். 5-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான பத்து முக்கிய காரணங்களுள் நீரில் மூழ்குவதும் ஒன்றென உள்ளது.

3. சமீபத்தில் தொடங்கப்பட்ட “ஆசாத் கி ஷௌர்யா கதா” கண்காட்சி என்பது பின்வரும் எந்த விடுதலைப் போராளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாகும்?

அ) சந்திரசேகர் ஆசாத் 

ஆ) பகத் சிங்

இ) சுபாஷ் சந்திர போஸ்

ஈ) ஜான்சி இராணி

  • விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒருபகுதியாக, தியாகி சந்திர சேகர் ஆசாதின் வாழ்வைப் போற்றும் வகையில் “ஆசாத் கி ஷௌர்யா கதா” என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுதில்லியில் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில், மத்திய கலாச்சார இணையமைச்சர் அர்ஜுன் இராம் மேக்வால் தொடங்கிவைத்தார்.

4. வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) நாகாலாந்து

ஆ) மேகாலயா 

இ) அஸ்ஸாம்

ஈ) சிக்கிம்

  • வடக்கு கிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் (NESAC) என்பது விண்வெளித்துறை மற்றும் வடகிழக்கு கவுன்சில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது மேகாலயா மாநிலத்தின் உமியத்தில் அமைந்து உள்ளது. வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தின் பல்நோக்கு மாநாட்டு மையம் மற்றும் கண்காட்சி அமைப்புக்காக அண்மையில் ஷில்லாங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

5. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு சார்ந்த விளையாட்டு எது?

அ) குறுவிரையோட்டம்

ஆ) மல்யுத்தம்

இ) குத்துச்சண்டை

ஈ) பளுதூக்குதல் 

  • 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 49 கிகிராம் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். P V சிந்துவுக்குப்பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற இரண்டாவது இந்திய பெண் இவராவார். மேலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்குபவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

6. பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதை வென்ற இந்திய நீரியலாளர் யார்?

அ) வினை பத்வார் 

ஆ) கரம்பீர் சிங்

இ) ஆர் ஹரி குமார்

ஈ) அனில் குமார் சாவ்லா

  • இந்தியாவின் தலைமை நீரியலாளர் வைஸ் அட்மிரல் வினை பத்வார், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படும் அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதைப்பெற்றுள்ளார். நீரியல் மற்றும் கடல் வரைபடப் பிரிவுகளில் அவரது படைப்புகளை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2006’இல் நிறுவப்பட்ட இந்த விருது, பிரிட்டிஷ் கடற்படைக் குழுவின் முதல் நீரியலாளரின் பெயரில் வழங்கப்படுகிறது. வினை பத்வாருக்கு கடந்த 2019’இல் வழங்கப்பட்டது இவ்விருது. தொற்றுபரவல் காரணமாக சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.

7. பன்னாட்டு எரிசக்தி முகமையுடன் இணைந்து, ‘இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்பு’ என்ற அறிக்கையை அறிமுகம் செய்த நிறுவனம் எது?

அ) BEE

ஆ) NITI ஆயோக் 

இ) PFC

ஈ) REC

  • “இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஒருங்கிணைப்பு 2021” பற்றிய அறிக்கை ஒன்றை NITI ஆயோக்கும் பன்னாட்டு எரிசக்தி முகமையும் இணைந்து வெளியிட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க வளங்கள் நிறைந்த மாநிலங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட ஆற்றல்மாற்ற சவால்களைப் புரிந்துகொள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் அரசுகளுடன் நடத்தப்பட்ட மும் மாநிலப்பயிலரங்கங்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும் இந்த அறிக்கை. இந்தியாவின் ஆற்றல் அமைப்பிற்கு மூலங்களை அடையாளங்காணவும் நவீன தொழில்நுட்பங்களை முன்னெடுக்கவும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

8. மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட ‘தங்க அரிசி’யை அங்கீகரித்த முதல் நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) பிலிப்பைன்ஸ் 

இ) சீனா

ஈ) இலங்கை

  • பிரகாசமான மஞ்சள் நிறங்கொண்ட மரபணு மாற்றஞ்செய்யப்பட்ட ‘தங்க அரிசி’யின் வணிக ரீதியான உற்பத்தியை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் ஆனது. இவ்வரியை அதிக ஊட்டச்சத்து மிக்கதாக ஆக்குவதற்காக வைட்டமின் ஏ முன்னோடி பீட்டா கரோட்டினால் இது செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த அரிசி சிறார் பருவ குருட்டுத்தன்மையை எதிர்த்துப் போராடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும், பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்தத் ‘தங்க அரிசி’யை உருவாக்கியுள்ளன.

9. இந்திய இராணுவத்தால் தொடங்கப்பட்ட மிகப்பெரிய பனிச் சறுக்கு பயணமான ‘ARMEX-21’ என்பது பின்வரும் எந்த இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது?

அ) லடாக் மற்றும் உத்தரகண்ட் 

ஆ) குல்மார்க் மற்றும் லடாக்

இ) மணாலி மற்றும் குல்மார்க்

ஈ) லடாக் மற்றும் ரோதாங் கணவாய்

  • ‘ARMEX-21’ என்பது ஒரு மிகப்பெரிய பனிச்சறுக்கு பயணமாகும். அது, இந்திய இராணுவத்தால் லடாக்கின் காரகோரம் கணவாயிலிருந்து உத்தரகாண்டின் லிபுலேக் கணவாய் வரை சுமார் 1500 கிமீ தூரத்தை உள்ளடக்கியுள்ளது. இது லடாக், இமாச்சலம், கார்வால் மற்றும் குமாவுன் கோட்டங்களுக்கு அருகேயுள்ள மெய்யான கட்டுப்பாட்டுக்கோட்டுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப்பதற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் நடத்தப்படுகிறது.

10. ரஷ்ய கடற்படையின் 325ஆவது கடற்படை தின விழாவில் பங்கேற்ற இந்தியக்கடற்படைக்கப்பல் எது?

அ) INS தபார் 

ஆ) INS திரிசூல்

இ) INS தல்வார்

ஈ) INS திரிகண்ட்

  • இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘இந்திரா கடற்படை’ 12ஆம் கூட்டுப்பயிற்சி பால்டிக் கடலில் கடந்த 28 & 29 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்தக் கூட்டுப்பயிற்சி முதன் முதலில் கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கூட்டுப் பயிற்சி இருநாட்டு கடற்படைகள் இடையேயான நீண்டகால யுக்தி கூட்டுறவை எடுத்துக்காட்டுகிறது.
  • ரஷ்ய கடற்படையின் 325ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்க INS தபார் போர்க்கப்பல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றது. அதன் ஒரு பகுதியாக இந்திரா கடற்படை-21 பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. 2 நாள் நடந்த கூட்டுப்பயிற்சியில், வான்தாக்குதலை முறியடிப்பது, கப்பல்கள் இடையே சரக்கு பரிமாற்றம், எரிபொருள் பரிமாற்றம், ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அமெரிக்காவிடமிருந்து `600 கோடிக்கு ‘ஹார்பூன்’ ஏவுகணை கொள்முதல்

கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய திறன்கொண்ட ‘ஹார்பூன்’ ஏவுகணையையும் அதன் உதிரி பாகங்களையும் சுமார் `600 கோடி மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு ஹார்பூன் ஏவுகணை அமைப்பை விற்பதற்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. ஹார்பூன் பராமரிப்பு அமைப்பு, ஏவுகணைக்கான உதிரிபாகங்கள், அதைப் பராமரிப்பதற்கான கருவிகள், ஏவுகணையைப் பரிசோதிப்பதற்கான கருவிகள், ஏவுகணையை எடுத்துச் செல்வதற்கான கருவிகள் உள்ளிட்டவையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஹார்பூன் ஏவுகணை அமைப்பை சுமார் `600 கோடிக்கு இந்தியாவுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும். இந்தோ-பசிபிக் பிராந்தியம், தெற்காசியப் பிராந்தியம் ஆகியவற்றில் அமைதி, நிலைத் தன்மை உள்ளிட்டவை நிலவுவதில் இந்தியா முக்கியப்பங்கு வகித்து வருகிறது.

பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ஹார்பூன் ஏவுகணை அமைப்பு உதவும். இதன் வாயிலாக தற்போதைய, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா திறம்பட எதிர்கொள்ளமுடியும். ஹார்பூன் ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விற்பதற்கான ஆவணங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை இறுதிசெய்துவருகிறது. ஏவுகணை அமைப்பு விற்பனையில் முதன்மை ஒப்பந்ததாரராக போயிங் நிறுவனம் திகழும்.

‘ஹார்பூன்’ ஏவுகணையின் சிறப்பம்சங்கள்:

கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஹார்பூன் ஏவுகணை அமைப்பு அமெரிக்க இராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்தடுத்த காலகட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல திறன்கொண்ட அந்த ஏவுகணை, ரேடாரின் துணையுடன் செயல்படும் தன்மைகொண்டது. கப்பல்களைத் தாக்கி அழிப்பதில் உலகின் மிகச்சிறந்த ஏவுகணை அமைப்பாக ஹார்பூன் உள்ளது.

தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஏவுகணையைப் பயன்படுத்தி வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ‘முக்கிய பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா வழங்கியது. அதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கிய தொழில்நுட்பங்களையும் போர்த் தளவாடங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

2. ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டம்: அறிவிப்புப் பலகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின்கீழ் கோவில்களில் வைக்கப்படும் அறிவிப்புப்பலகையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆக.06 முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக, 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் சென்னை திருமயிலையில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் தொடங்கப்படவுள்ளது.

3. நிறவெறிக்கு எதிராக ஐ.நா. தனிப்பிரிவு

நிறவெறிக்கு எதிரான ஐநா’இல் தனிப்பிரிவை உருவாக்க ஐநா பொதுக் குழு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நிறவெறிக்கு எதிரான புதிய பிரிவு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானத்தை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொது அவை நிறைவேற்றியுள்ளது.

ஆப்பிரிக்க வம்சாவளியினரின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு அந்த அமைப்பு பாடுபடும். கடந்க 2015 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கான ஆண்டுகளாக ஐநா அறிவித்துள்ளது. இந்த நிலையில், நிறவெறிக்கு எதிரான தனிப்பிரிவு தொடங்கப்படுகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

4. 04-8-2021 – விடுதலைப் போராட்ட வீரர் ‘தீரன்’ சின்னமலையின் 216ஆவது நினைவுநாள்

1. Which Indian organisation has rolled out a customised space–themed merchandise programme?

A) DRDO

B) ISRO 

C) HAL

D) BEL

  • The Indian Space Research Organisation launched a customised space–themed merchandise programme. Recently eight companies have registered for partnership with ISRO, to undertake this programme.
  • Interested persons will be able to purchase authorised products related to ISROs missions and work, such as scale models, T–shirts, space–themed educational games, science toys, among others. This brand promotion exercise will create awareness and interest among students, children and public, in space science and technology.

2. The first ever World Drowning Prevention Day is observed on which date, in 2021?

A) 2021 July.23

B) 2021 July.25 

C) 2020 July.27

D) 2020 July.29

  • The first ever World Drowning Prevention Day (WDPD) is observed 25 July 2021, co–ordinated by the World Health Organisation (WHO). The United Nations (UN) General Assembly adopted the resolution on global drowning prevention on 28 April 2021.
  • An estimated 236,000 people drown every year, and drowning is among the ten leading causes of death for children aged 5–14 years.

3. “Azad Ki Shaurya Gatha” exhibition, which was inaugurated recently, is based on the life of which freedom fighter?

A) Chandrasekhar Azad 

B) Bhagat Singh

C) Subhash Chandra Bose

D) Rani of Jhansi

  • Union Minister of State for Culture and Parliamentary Affairs Arjun Ram Meghwal recently inaugurated the exhibition “Azad Ki Shaurya Gatha” based on the life of the martyr ‘Chandrasekhar Azad’.
  • The exhibition was inaugurated at Indira Gandhi National Center for the Arts, New Delhi. This is a part of “Azadi Ka Amrit Mahotsav”, to celebrate 75 years of our country’s freedom. A series of programs are being organised by Ministry of Culture for celebrating “Azadi Ka Amrit Mahotsav”.

4. The North Eastern Space Applications Centre (NESAC) is located in which Indian state?

A) Nagaland

B) Meghalaya 

C) Assam

D) Sikkim

  • The North Eastern Space Applications Centre (NESAC) is a joint initiative of Department of Space (DOS) and the North Eastern Council (NEC). It is located in Umiam, Meghalaya. The Union Home Minister, Amit Shah, recently laid the foundation stone for the Multipurpose Convention Centre and Exhibition Facility of the North Eastern Space Applications Centre–NESAC, in Shillong.

5. Mirabai Chanu has registered India’s first medal at the Tokyo Olympics in which sporting event?

A) Sprint

B) Wrestling

C) Boxing

D) Weight lifting 

  • India’s weightlifter Mirabai Chanu has clinched the silver medal in the 49kg category and has opened the country’s medal account at the Tokyo Olympics 2021. She is the second India woman to bag a silver medal at the Olympics after PV Sindhu. Also, she became the first Indian woman weight lifter to win a silver at the Olympics.

6. Which Indian hydrographer won the Alexander Dalrymple award given by the British Government?

A) Vinay Badhwar 

B) Karambir Singh

C) R Hari Kumar

D) Anil Kumar Chawla

  • India’s chief hydrographer Vice Admiral Vinay Badhwar received the Alexander Dalrymple award by the British government, in recognition of his works in areas of hydrography and nautical cartography.
  • The award has been named after the first hydrographer of the British Admiralty and was instituted in 2006. Vice Admiral Badhwar was conferred with the award in 2019 but the award ceremony was held recently, due to the pandemic.

7. Which institution along with International Energy Agency (IEA) launched the ‘Renewables Integration in India’ report?

A) BEE

B) NITI Aayog 

C) PFC

D) REC

  • A report on “Renewables Integration in India 2021” was jointly launched NITI Aayog and the International Energy Agency (IEA).
  • The report is based on the outcome of three state workshops held with the Governments of Maharashtra, Karnataka and Gujarat to understand the specific energy transition challenges faced by these renewable–rich states. The report highlights that India’s power system requires identification of resources and advance technology initiatives.

8. Which is the first country to approve genetically modified ‘Golden rice’?

A) USA

B) Philippines 

C) China

D) Sri Lanka

  • The Philippines became the world’s first country to approve the commercial production of genetically modified “golden rice”, named for its bright yellow colour. The rice has been enriched with the vitamin A precursor beta–carotene to make it more nutritional.
  • Experts hope that this rice will combat childhood blindness. International Rice Research Institute (IRRI), along with Philippine Rice Research Institute has developed golden rice.

9. ARMEX–21, a major skiing expedition launched by the Indian Army covers which two regions?

A) Ladakh and Uttarakhand 

B) Gulmarg and Ladakh

C) Manali and Gulmarg

D) Ladakh and Rohtang Pass

  • ARMEX–21 is a major skiing expedition launched by the Indian Army from Karakoram Pass in Ladakh to Lipulekh Pass in Uttarakhand, covering around 1,500 km distance. This comes to close proximity with the LAC in Ladakh, Himachal, Garhwal and Kumaon sectors. The expedition comes amid border tensions between India and China.

10. Which Indian Naval Ship participated in the 325th Navy Day celebrations of the Russian Navy?

A) INS Tabar 

B) INS Trishul

C) INS Talwar

D) INS Trikhand

  • The 12th edition of exercise INDRA NAVY, a biennial bilateral maritime exercise between Indian Navy and Russian Navy was held in the Baltic Sea from 28 to 29 July 2021.
  • Initiated in 2003, Ex INDRA NAVY epitomises the long–term strategic relationship between the two navies. This exercise was undertaken as part of the visit of INS Tabar to St Petersburg, Russia to participate in the 325th Navy Day celebrations of the Russian Navy. The exercise was progressed over two days and included various facets of fleet operations such as anti–air firings, underway replenishment drills, helicopter ops, boarding drills and seamanship evolutions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!