TnpscTnpsc Current Affairs

4th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. சுகாதார அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 

இ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

  • நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயற்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டமான இது, 15ஆவது நிதி ஆணைய காலமான 2021–22 முதல் 2025–26 வரை செயல்படுத்துவதற்காக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பருவ மகளிர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Nationally Determined Contribution’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. பொருளாதாரம்

ஆ. பருவநிலை மாற்றம் 

இ. பாதுகாப்பு

ஈ. தொழிற்துறை

  • பாரிசு ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா கட்டமைப்பு மாநாட்டிற்கு (UNFCCC) இந்த NDC–கள் தெரிவிக்கப்படவுள்ளன. இந்தியா கடைசியாக 2015ஆம் ஆண்டு தனது NDC–ஐ சமர்ப்பித்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் GDPஇல் 45% வரை CO2 உமிழ்வு தீவிரத்தை குறைக்கவும், 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு 50 சதவீதம் வரையிலான ஒட்டுமொத்த நிறுவப்பட்ட மின்னாற்றல் திறனை அடையவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

3. ‘முதலமைச்சர் சம கல்வி நிவாரணம், உதவி மற்றும் மானியம் (சீராக்)’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. ஹரியானா 

ஈ. ஒடிஸா

  • ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அண்மையில், ‘முதலமைச்சர் சம கல்வி நிவாரணம், உதவி மற்றும் மானியம் (சீராக்)’ என்ற திட்டத்தைத்தொடங்கினார். பட்ஜெட் தனியார் பள்ளிகளில் அரசுப்பள்ளிகளின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) மாணவர்களுக்கு, ‘இலவச கல்வி’ வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், பெற்றோர் ஆண்டு வருமானம் `1.8 இலட்சத்துக்கும் குறைவாக உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரலாம்.

4. 2022 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை ஸ்டார்ட்–அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

அ. 25000

ஆ. 50000

இ. 75000

ஈ. 1,00,000

  • 75000 ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளதாக நடுவண் வணிகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) 75,000–க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்–அப்களை அங்கீகரித்துள்ளது. 808 நாட்களில் முதல் பத்தாயிரம் ஸ்டார்ட்–அப்களும், சமீபத்திய பத்தாயிரம் ஸ்டார்ட்–அப்கள் 156 நாட்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

5. இராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. ஒடிஸா

இ. கர்நாடகா

ஈ. உத்தரகாண்ட்

  • இந்தியாவிலிருந்து மேலும் 10 சதுப்பு நிலங்கள் இராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 12,50,361 ஹெக்டேர் ஆகும். இதன்மூலம் நாட்டின் மொத்த இராம்சர் தளங்கள் 64 ஆக மாறியுள்ளன. 10 புதிய இராம்சர் தளங்களில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள ஆறு தளங்களும், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒன்றும் அடங்கும்.

6. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக செஸ் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.20 

ஆ. ஆகஸ்ட்.20

இ. செப்டம்பர்.20

ஈ. அக்டோபர்.20

  • உலக சதுரங்க நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.20 அன்று கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச சதுரங்க நாள் என்றும் அழைக்கப்படுகிறது. 1924ஆம் ஆண்டு இதே நாளில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) பாரிஸில் நிறுவப்பட்டது. ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) கடந்த 1966ஆம் ஆண்டில் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான யோசனையை முன்மொழிந்தது.

7. 2022 – உலக மூளை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Brain Health for all 

ஆ. Brain: The CPU

இ. Brain for Knowledge

ஈ. Knowledge is Brain

  • உலக மூளை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.22 அன்று, பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், மூளை நலம் தொடர்பான வாதங்களை ஊக்குவிக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது. “Brain Health for all” என்பது நடப்பு 2022 ஆம் ஆண்டில் வரும் உலக மூளை நாளுக்கானக் கருப்பொருளாகும். இந்த நாள், உலகளவில் ஐந்து முக்கிய கருப்பொருள்களில் கவனஞ்செலுத்தும். அவை – விழிப்புணர்வு, தடுப்பு, வாதம், கல்வி மற்றும் அணுகல்.

8. 2023 – ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் எது?

அ. இந்தியா

ஆ. சீனா 

இ. இந்தோனேசியா

ஈ. நேபாளம்

  • ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்.8ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் என்று ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) உறுதிப்படுத்தியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது; ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் COVID–19 வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக, 2023ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதாக OCA அறிவித்தது.

9. 2022இல் நடைபெறும் ‘13ஆவது பீட்டர்ஸ்பெர்க் காலநிலை பேச்சுவார்த்தை’ நடைபெறும் இடம் எது?

அ. சிகாகோ

ஆ. பெர்லின் 

இ. நெதர்லாந்து

ஈ. சுவிட்சர்லாந்து

  • 13ஆவது பீட்டர்ஸ்பெர்க் காலநிலை பேச்சுவார்த்தையானது சமீபத்தில் பெர்லினில் தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இவ்வருடாந்திர காலநிலை அமைச்சர்கள் சந்திப்பிற்கு (COP–27) ஜெர்மனி மற்றும் எகிப்து தலைமை தாங்குகிறது. COP–27–இன் முக்கிய குறிக்கோளான காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துவதில் உள்ள வேறு பாடுகளைத் களைவதற்கு ஒருமித்த கருத்தை உருவாக்கவும், அரசியல் வழிகாட்டுதலை வழங்கவும் இம்முறைசாரா அமைச்சர்கள் கூட்டம் எண்ணுகிறது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற இந்தியாவின் முதல் பயணிகள் செல்லும் டிரோனின் பெயர் என்ன?

அ. ஆகாஷ்

ஆ. வருணா 

இ. ஜடாயு

ஈ. கருடன்

  • இந்தியாவின் முதல் பயணிகள் செல்லக்கூடிய டிரோனான ‘வருணா’, மனிதர்களை ஏற்றிக்கொண்டு 25 கிமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டது. அதால் 130 கிலோகிராம் எடை வரை சுமந்துசெல்லவியலும். தொடர்ச்சியாக 25–33 நிமிடங்கள் வரை இதால் பறக்கவியலும்.
  • இந்தியாவின் முதல் பயணிகள் செல்லக்கூடிய டிரோனான ‘வருணா’வின் செயல்விளக்கத்தை பிரதமர் மோடி அண்மையில் பார்வையிட்டார். ’வருணா’ என்ற இந்த டிரோனை ‘சாகர் டிபென்ஸ் எஞ்சினியரிங்’ என்ற ஸ்டார்ட்–அப் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. இந்தியா – மொரீஷியஸ் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பு ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா-மொரீஷியஸ் உயர் அதிகார வர்த்தகக் குழுவின் முதலாவது அமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது

இந்தியா-மொரீஷியஸ் உயரதிகார வர்த்தகக் குழுவின் முதலாவது அமர்வு புது தில்லியில் 2022 ஆகஸ்ட்.1 முதல் 3 வரை நடைபெற்றது.

2021 ஏப்.1 முதல் அமலில் உள்ள இந்தியா-மொரீஷியஸ் இடையேயான ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு ஒப்பந்தத்தின் பொதுவான செயல்பாடு மற்றும் அமலாக்கம் குறித்து ஆய்வுசெய்வதற்காக உயர் நிலை கூட்டு வர்த்தகக் குழு அமைக்கப்பட்டது.  இந்த ஒப்பந்தம் ஆப்பிரிக்க நாடு ஒன்றுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள முதலாவது ஒப்பந்தமாகும்.

இருநாடுகளுக்கும் இடையே 2019-20இல் $690.02 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2021-22இல் $786.72 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பரஸ்பர சுங்க நிர்வாக உதவி ஒப்பந்தம் செய்து கொள்ள இருதரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் விவாதத்தை தொடங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் அடுத்த அமர்வை 2023இல் நடத்துவதற்கு இருதரப்பும் முடிவு செய்துள்ளது.

2. பருவநிலை மாற்றம்: மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பருவநிலை மாற்ற இலக்கை அடைய தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்கு (NDC) நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரதமர் மோடி அறிவித்த 5 அம்சக்கொள்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட NDC-இன்கீழ், கரியமில வாயு வெளியேற்றத்தை வரும் 2030-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் குறைக்க நடுவணரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரத்தின் வாயிலாக வரும் 2030-க்குள் 50 சதவீதம் கூட்டு மின்சக்தியைப் பெறவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வெப்பநிலை அதிகரிப்பை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவான 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக கொண்டு வருவதை இலக்காக கொண்டு ஒரு நாடு வகுக்கும் திட்டம் அல்லது வியூகமே தேசிய அளவிலான மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு (NDC) ஆகும். இதற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்தியாவின் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் வரும் 2030க்குள் 500 GW திறனை எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

4th August 2022 Tnpsc Current Affairs in English

1. Which Union Ministry implements the ‘Saksham Anganwadi and Poshan 2.0′ scheme?

A. Ministry of Health

B. Ministry of Women and Child Development 

C. Ministry of Agriculture and Farmers Welfare

D. Ministry of Tribal Affairs

  • Ministry of Women and Child Development has issued Operational Guidelines for implementation of ‘Saksham Anganwadi and Poshan 2.0′. The Integrated Nutrition Support scheme has been approved by the Government of India for implementation during the 15th Finance Commission period 202l–22 to 2025–26. The programme aims to address the challenges of malnutrition in children, adolescent girls, pregnant women and lactating mothers.

2. ‘Nationally Determined Contribution (NDC)’ which is seen in the news, is a term related to which field?

A. Economy

B. Climate Change 

C. Defence

D. Industry

  • The Union Cabinet has approved India’s updated Nationally Determined Contribution (NDC) under the Paris Agreement. The NDCs are to be communicated to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC). India last submitted its NDC in the year 2015. India has committed to reduce the emissions intensity of its GDP by 45% by 2030 and achieving 50% cumulative electric power installed capacity from non–fossil fuel–based energy resources by 2030.

3. Which state launched the ‘Chief Minister Equal Education Relief, Assistance and Grant (Cheerag)’ scheme?

A. Telangana

B. Andhra Pradesh

C. Haryana 

D. Odisha

  • Haryana Chief Minister Manohar Lal Khattar recently launched the ‘Chief Minister Equal Education Relief, Assistance and Grant (Cheerag)’ scheme. It aims to provide ‘free education’ to Economically Weaker Section (EWS) students of government schools in budget private schools. Under the scheme, government school students whose parents have an annual verified income of less than Rs 1.8 lakh can enroll in private schools.

4. As of August 2022, how many start–ups are registered in India?

A. 25000

B. 50000

C. 75000

D. 1,00,000

  • Union Minister for Commerce & Industry Piyush Goyal announced that India has achieved a landmark milestone, as there are 75000 startups in the country. The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has recognized more than 75,000 startups.
  • The initial ten thousand startups were recognized in 808 days, while the latest ten thousand were achieved in only 156 days.

5. Vedanthangal Bird Sanctuary and Koonthankulam Bird Sanctuary, which were declared Ramsar sites, are located in which state?

A. Tamil Nadu 

B. Odisha

C. Karnataka

D. Uttarakhand

  • India has added 10 more wetlands designated as Ramsar sites to make the total sites in the country to 64, covering an area of 12,50,361 hectares. The 10 new sites include Six sites in Tamil Nadu including Vedanthangal Bird Sanctuary and Koonthankulam Bird Sanctuary and One each in Goa, Karnataka, Madhya Pradesh and Odisha.

6. When is the ‘World Chess Day’ celebrated every year?

A. July.20 

B. August.20

C. September.20

D. October.20

  • World Chess Day is observed on 20 July every year. It is also known as International Chess Day. On the same day in 1924, the International Chess Federation (FIDE) was founded in Paris. The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) proposed the idea of celebrating the day in 1966.

7. What is the theme of the ‘World Brain Day – 2022’?

A. Brain Health for all 

B. Brain: The CPU

C. Brain for Knowledge

D. Knowledge is Brain

  • ‘World Brain Day (WBD) 2022’ is marked every year on July 22, to increase public awareness and promote advocacy related to brain health. This year, the World Brain Day is dedicated to the theme “Brain Health for all”. WBD 2022 campaign will focus on five key messages globally: Awareness, Prevention, Advocacy, Education and Access.

8. Which is the venue of the Asian Games in 2023?

A. India

B. China 

C. Indonesia

D. Nepal

  • The Olympic Council of Asia (OCA) has confirmed that the postponed Asian Games will be held in Hangzhou, China from September 23 to October 8 in 2023. The Asian Games were scheduled to be held in September 2022 but the OCA announced the postponement until 2023 due to rise in Covid–19 cases in China earlier this year.

9. Which is the venue of the ‘13th Petersberg Climate Dialogue’ 2022?

A. Chicago

B. Berlin 

C. Netherlands

D. Switzerland

  • The 13th Petersberg Climate Dialogue began recently in Berlin. The two–day ministerial meet is chaired by Germany and Egypt, the hosts of annual climate meet (COP–27). The informal ministerial meet proposes to build consensus and provide political direction to resolve divergences in improving implementation of climate action, which is the core goal of COP–27.

10. What is the name of India’s first passenger drone which was recently seen in the news?

A. Akash

B. Varuna 

C. Jatayu

D. Garuda

  • Varuna, India’s first drone that can carry human pay–load has a range of 25 km. The passenger drone can carry 130 kg payload and has 25–33 minutes of flight time. Prime Minister Narendra Modi recently watched the demonstration of India’s first passenger drone, Varuna. ‘Varuna’ drone has been designed and developed by a startup ‘Sagar Defence Engineering’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!