Tnpsc

4th December 2020 Current Affairs in Tamil & English

4th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஹயாபுசா 2 என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் விண்கலமாகும்?

அ. இஸ்ரேல்

ஆ. ஜப்பான்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. பிரான்ஸ்

 • ஜப்பானின் ‘ஹயாபுசா 2’ என்ற விண்கலமானது புவியிலிருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்ற சிறுகோளிலிருந்து ஓராண்டுகால பயணத்திற்குப் பிறகு தற்போது புவியை நோக்கி நெருங்கிவருகிறது. ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமையின்படி, இவ்விண்கலம் மண் மாதிரிகள் மற்றும் தரவுகளை பூமிக்கு கொண்டுவரும். அது சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் பூமியில் உள்ள உயிர்களின் தோற்றம் குறித்த தடயங்களை வழங்கும். மண் மாதிரிகள் அடங்கிய பொதியை தெற்கு ஆஸ்திரேலியாவில் அந்நிறுவனம் தரையிறக்கும்.

2. தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக, சுகாதார அமைச்சகத்திடமிருந்து உறுப்பு தானத்திற்காக சிறந்த மாநில விருதைப் பெற்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. கர்நாடகா

ஈ. தெலுங்கானா

 • ஒவ்வோர் ஆண்டும், நவ.27ஆம் தேதியை தேசிய உறுப்புதான நாளாக இந்திய அரசு அனுசரிக்கிறது. இந்த ஆண்டு, பதினோராவது உறுப்புதான நாளைக் குறிக்கிறது. உறுப்புதானத்திற்கான, ‘சிறந்த மாநில விருதானது’ தமிழ்நாட்டுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வழங்கியது. தமிழ்நாடு, இந்த விருதை தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பெறுவது குறிப்பிடத்தக்கது.

3. WHO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவில், குறைவான மலேரியா நோய்த் தாக்குதலைப் பதிவுசெய்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. வங்கதேசம்

இ. பாகிஸ்தான்

ஈ. மியான்மர்

 • WHO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் குறைவான மலேரியா நோய்த்தாக்குதலைப் பதிவுசெய்த நாடு இந்தியா ஆகும். ‘உலக மலேரியா அறிக்கை – 2020’இன்படி, இந்தியாவில், 2000ஆம் ஆண்டில் 20 மில்லியனாக இருந்த மலேரியா நோய்த்தாக்குதல் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் சுமார் 5.6 மில்லியனாகக் குறைந்துள்ளது. மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணி -க்கையும் இந்தியாவில் குறைந்துள்ளது. உலகளவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மலேரியாவால் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.

4. பெட்ரோடவா டேசியன் கோட்டையானது ஒரு பிரபலமான தொல்பொருள் நினைவுச்சின்னமாகும். அது எந்த நாட்டில் அமைந்துள்ளது?

அ. பிரான்ஸ்

ஆ. ருமேனியா

இ. பல்கேரியா

ஈ. சிலி

 • பெட்ரோடாவா டேசியன் கோட்டையானது ருமேனியாவின் பியட்ரா நீம்ட் நகரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்தக்கோட்டை, பொஆமு 82 மற்றும் பொ ஆ 106’இல் பண்டைய ஐரோப்பாவில் டேசியன் மக்களால் கட்டப்பட்டது. அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு தொலைதூர, மக்கள் வசிக்காத பாலைவனத்தில் முதல் மர்மமான உலோக ஒற்றைக் கட்டுமானம் காணாமல்போன சில நாட்களுக்குப்பின், கோட்டையிலிருந்து சில மீ., தொலைவிலுள்ள ருமேனியாவில் இதேபோன்ற இரண்டாவது கட்டமைப்பு தென்பட்டது. மறைந்து மீண்டும் தோன்றிய அந்த ஒற்றைக் கட்டுமானம் பளபளப்பான ஒரு முக்கோணத் தூணாகும்.

5. ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) எந்த மாநிலத்தின் மின் விநியோகத்தை சீரமைப்பதற்காக $132.8 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்கவுள்ளது?

அ. மேற்கு வங்கம்

ஆ. அஸ்ஸாம்

இ. மேகாலயா

ஈ. ஒடிசா

 • மேகாலயா மாநிலத்தில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை நவீனமயமாக்கி வலுப்படுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் $132.8 மில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம், ‘அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம்’ என்ற மேகாலயா மாநில அரசின் முயற்சிக்கு ஆதரவளிப்பதுடன் மின்சார விநியோகத்தை சீர்படுத்துவதன் வாயிலாக வணிக ரீதியாக மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பையும் குறைக்க முடியும்.

6. ‘குருபுராப்’ என்பது கீழ்க்காணும் எந்த சீக்கிய குருவின் பிறந்தநாளாகும்?

அ. குரு நானக்

ஆ. குரு கோபிந்த் சிங்

இ. குரு தேஜ் பகதூர்

ஈ. குரு அர்ஜன்

 • முதலாவது சீக்கிய குருவான குருநானக்கின் பிறந்தநாள், ‘குருநானக் தேவ் குர்புராப்’ எனக் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக, ‘குருபுராப்’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வேளையில், ‘பிரதமர் நரேந்திர மோடியும், சீக்கியர்களுடனான அவரது அரசாங்கத்தின் சிறப்பு உறவும்’ என்ற தலைப்பிலான நூலும் வெளியிடப்பட்டது. அது, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. குருநானக் அவர்களின் செய்திகளுடன் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் அது வெளியிடப்பட்டது.

7. ‘துவாரே சர்க்கார்’ என்ற பரப்புரைத் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. மேற்கு வங்கம்

இ. சத்தீஸ்கர்

ஈ. ஜார்க்கண்ட்

 • மேற்கு வங்க மாநில அரசு சமீபத்தில் “துவாரே சர்க்கார்” அல்லது “உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்” என்ற பெயரில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், கன்யாஸ்ரீ, காத்யா சதி, சிக்ஷாஸ்ரீ உள்ளிட்ட மாநிலத்தின் 11’க்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனை மக்கள் பெறமுடியும். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாநிலத்தில், “துவாரே சர்க்கார்” முகாம்கள் அமைக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

8. நடப்பாண்டில் (2020) வரும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Empowering persons with disabilities

ஆ. Building Back Better: Toward a Disability-Inclusive, Accessible and Sustainable Post-COVID-19 World

இ. Transformation towards sustainable and resilient society for all

ஈ. Ensuring inclusiveness and equality

 • மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துக்குமாக ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் டிச.3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை அனுசரிக்கிறது. 1992ஆம் ஆண்டு டிச.3 அன்று ஐநா இந்நாளை அறிவித்தது.
 • நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Building Back Better: Toward a disability-inclusive, accessible and sustainable post-COVID-19 World” என்பதாகும்.

9. வளர்ந்துவரும் இளந்திறமையாளர்களை கெளரவிக்கும் BAFTA அமைப்பின் புதிய முன்னெடுப்புக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. ஏ ஆர் இரகுமான்

ஆ. இரஜினிகாந்த்

இ. கமல்ஹாசன்

ஈ. ஜி வி பிரகாஷ்

 • வளர்ந்துவரும் இளந்திறமையாளர்களை கெளரவிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமியின் (BAFTA) புதிய முன்னெடுப்புக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் இரகுமான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘Breakthrough’ என்பது அந்த முன்னெடுப்பின் பெயராகும். ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவுடன் இந்தப் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

10. Cnemaspis avasabinae” என்ற புதிய குள்ள மரப்பல்லி வகையானது எம்மாநில எல்லைக்குள் அமைந்துள்ள கிழக்குத்தொடர்ச்சிமலையில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. ஒடிசா

ஈ. கர்நாடகா

 • ஓர் ஆராய்ச்சியாளர்கள் குழுமமானது, “Cnemaspis avasabinae” என்ற புதிய குள்ள மரப்பல்லி வகையை கண்டுபிடித்துள்ளது. அது கிழக்குத்தொடர்ச்சிமலையில் இதுவரையிலும் கண்டறியப்பட்ட மிகச்சிறிய இந்திய மரப்பல்லி வகையாகும். “Cnemaspis avasabinae” என்பது மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 12 மரப்பல்லி இனங்களுள் ஒன்றாகவும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வேலிகொண்டா மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மரப்பல்லி இனமும் ஆகும்.
 • இப்புதிய இனத்திற்கு, “சபினின் நெல்லூர் குள்ள மரப்பல்லி” என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த கட்டுரை, “A new species of South Asian Cnemaspis (Squamata: Gekkonidae) from the Eastern Ghats, India” என்ற தலைப்பில் ஜூடாக்சா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

1. Hayabusa2, which was making news recently, is a spacecraft of which country?

[A] Israel

[B] Japan

[C] United Kingdom

[D] France

 • Japan’s spacecraft named ‘Hayabusa2’ is approaching the Earth after a year–long journey from an asteroid Ryugu, about 300 million kilometers from earth. As per the Japan Aerospace Exploration Agency, the spacecraft will bring soil samples and data that could provide clues to the origins of the solar system and life on Earth. The agency would drop the capsule containing the samples, in southern Australia.

2. Which state received the best State award for Organ donation by the Health Ministry, for the sixth consecutive year?

[A] Tamil Nadu

[B] Andhra Pradesh

[C] Kerala

[D] Karnataka

 • Every year, November 27th is observed as Indian organ donation day by the Government of India. This year marks the 11th Organ Donation Day event. Tamil Nadu received the ‘Best State award’ for organ donation, by the National Organ and Tissue Transplant Organisation of the Union Ministry of Health and Family Welfare. This is the sixth consecutive year of the state receiving the award.

3. As per the recent statement of the WHO, which country recorded the highest reduction in Malaria cases, in South–East Asia?

[A] India

[B] Bangladesh

[C] Pakistan

[D] Myanmar

 • As per the recent statement, India recorded the highest reduction in Malaria cases, in the South–East Asian region. As per the ‘World Malaria Report 2020’, India reduced the number of cases from 20 million in 2000 to about 5.6 million in 2019. India also recorded a reduction in the number of deaths from malaria. Globally there were 229 malaria cases in 2019.

4. Petrodava Dacian Fortress is a famous archaeological landmark, located in which country?

[A] France

[B] Romania

[C] Bulgaria

[D] Chile

 • The Petrodava Dacian Fortress is the oldest historical monument located in Piatra Neamt city, Romania. The fort was built around 82 BC and AD 106 by the Dacian people in ancient Europe. Days after the first mysterious metal monolith disappeared in a remote, uninhabited desert in Utah, USA, a second similar structure has been spotted in Romania, a few metres away from the fortress. The monolith which disappeared and appeared again was a triangular, shiny pillar.

5. The Asian Development Bank (ADB) is to finance a USD 132.8 million loan to improve the power distribution in which state?

[A] West Bengal

[B] Assam

[C] Meghalaya

[D] Odisha

 • The Asian Development Bank (ADB) and the Government of India has recently signed a USD132.8 million loan to modernize the distribution network and improve the quality of power supplied in Meghalaya. This project supports the state government’s initiative “24×7 Power for All” initiative. This will also help the state reduce its high technical and commercial losses. Meghalaya has achieved 100 per cent electrification while there were incidents of frequent power interruptions.

6. ‘Gurupurab’ is the celebration of birth anniversary of which Sikh Guru?

[A] Guru Nanak

[B] Guru Gobind Singh

[C] Guru Tegh Bahadur

[D] Guru Arjan

 • The birth anniversary of the first Sikh guru, Guru Nanak is celebrated as the Guru Nanak Dev Gurpurab, commonly called as ‘Gurupurab’. On this occasion, a book titled ‘Prime Minister Narendra Modi and his Government’s Special Relationship with Sikhs’ was launched.
 • It is published by Ministry of Information and Broadcasting and was released in English, Hindi and Punjabi languages with the messages of Guru Nanak.

7. Which state has launched an outreach programme called ‘Duare Sarkar’?

[A] Odisha

[B] West Bengal

[C] Chhattisgarh

[D] Jharkhand

 • West Bengal state government has recently launched a massive outreach programme named “Duare Sarkar” or “Government at your doorstep”.
 • Under the programme, people can avail the benefit of over 11 schemes of the state including Kanyashree, Khadya Sathi and Sikshashree. Chief Minister Mamata Banerjee had announced to set up ‘Duare Sarkar’ camps in the state for redressing grievances of people.

8. International Day of Persons with Disabilities was celebrated on December 3 under which theme?

[A] Empowering persons with disabilities

[B] Building Back Better: toward a disability–inclusive, accessible and sustainable post COVID–19 World

[C] Ensuring inclusiveness and equality

[D] Transformation towards sustainable and resilient society for all

 • The International Day of Persons with Disabilities is observed every year on December 3 to promote the rights and well–being of persons with disabilities in all spheres of society and development and to increase awareness of the situation of persons with disabilities in every aspect of political, social, economic and cultural life.
 • The annual observance of the Day was proclaimed in 1992, by a United Nations General Assembly resolution. The 2020 theme is “Building Back Better: toward a disability–inclusive, accessible and sustainable post COVID–19 World”.

9. Who has been appointed as the Ambassador for the British Academy of Film and Television Arts (BAFTA) Breakthrough Initiative?

[A] A R Rahman

[B] Rajinikanth

[C] Kamalhasan

[D] G V Prakash

 • Music Composer AR Rahman was appointed as the Ambassador for the British Academy of Film and Television Arts (BAFTA) Breakthrough India 2020–21. This initiative is supported by Netflix.

10. A new species of dwarf gecko named “Cnemaspis avasabinae”, the smallest known Indian Gekkonid has been discovered in which state in Eastern Ghats?

[A] Tami Nadu

[B] Andhra Pradesh

[C] Karnataka

[D] Odisha

 • A team of researchers has discovered a new species of dwarf gecko named “Cnemaspis avasabinae”, This is identified as the smallest known Indian Gekkonid from the Eastern Ghats.
 • Cnemaspis avasabinae is the 12 species discovered outside the Western Ghats and the first species from the Velikonda Range, Andhra Pradesh. The new species has been given a common name “Sabin’s Nellore dwarf gecko”. The paper about the discovery “A new species of South Asian Cnemaspis (Squamata: Gekkonidae) from the Eastern Ghats, India” was published in Zootaxa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content