Tnpsc

4th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. குடியரசு நாள் அணிவகுப்பில், எம்மாநிலத்தின் அலங்கார ஊர்தி ‘சிறந்த அலங்கார ஊர்தி’ எனத் தெரிவு செய்யப்பட்டது?

அ) அஸ்ஸாம்

ஆ) திரிபுரா

இ) உத்தரபிரதேசம்

ஈ) குஜராத்

  • தில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுகளை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வழங்கினார். அயோத்தி கலாச்சாரத்தை வெளிப்படுத்திய, உத்தரபிரதேசத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது.
  • மத்திய அமைச்சகங்கள், துறைகள், CAPF மற்றும் பிற துணைப் படைகளின் அலங்கார ஊர்திகளுள் உயிரித்தொழில்நுட்பத்துறையின் அலங்கார ஊர்தி சிறந்த அலங்கார ஊர்தியாக தெரிவு செய்யப்பட்டது.

2. அண்மையில் வெளியிடப்பட்ட NSO’இன் திருத்தப்பட்ட மதிப்பீடுக -ளின்படி, 2019-20ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?

அ) 1.3%

ஆ) 3.2%

இ) 4.0%

ஈ) 5.2%

  • தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) அண்மையில் அதன் திருத்தப்பட்ட தேசிய கணக்கு தரவை வெளியிட்டது. தரவுகளின்படி, 2019-20’க்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.
  • உற்பத்தி மற்றும் கட்டுமானம்போன்ற இரண்டாம் நிலை துறைகளில் சுருக்கம் நிகழ்ந்ததன் காரணமாகவே முந்தைய மதிப்பீடான 4.2 சதவீத -த்திலிருந்து இச்சரிவு நிகழ்ந்துள்ளது. ஜனவரி மதிப்பீட்டில் வெளிப்படுத் -தப்பட்ட 6.1 சதவீதத்திற்கு எதிராக, 2018-19ஆம் ஆண்டின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3. செளரி செளரா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பஞ்சாப்

ஆ) உத்தரபிரதேசம்

இ) பீகார்

ஈ) மேற்கு வங்கம்

  • செளரி செளரா என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ‘செளரி செளரா’ சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க செளரி செளரா சம்பவம், 1922 பிப்.5 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் உள்ள செளரி செளரா என்ற நகரில் நடந்தது.
  • காவல்துறையினருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தின -ர். அதைத்தொடர்ந்து அந்தக் குழு காவல் நிலையத்தை எரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘மகாத்மா’ காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பம் பெற்றார்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘IN FAC T-81’ என்றால் என்ன?

அ) COVID தடுப்பூசி

ஆ) கடற்படைக்கலம்

இ) மீத்திறன் கணினி

ஈ) மெய்நிகர் நுண்ணறிவு கருவி

  • IN FAC T-81 என்பது Mk-II வகுப்பினைச் சார்ந்த இந்திய கடற்படையின் தாக்குதல் கலமாகும். இது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிப்பு மற்றும் தேடல் & மீட்பு ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இக்கலம், மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் பணிநீக்கஞ்செய்யப்பட்டது.
  • இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் இது கட்டப்பட்டது. கடந்த 1999’இல் INFAC கடற்படையில் சேர்க்கப்பட்டது.

5. 2020-21 பொருளாதார ஆய்வில் குறிப்பிட்டுள்ள ‘BNI’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Broad Necessities Index

ஆ) Bare Necessities Index

இ) Base Necessities Indicator

ஈ) Base National Indicator

  • நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கு இடையிலான குடிநீர், நலவாழ்வு மற்றும் வீட்டுவசதி நிலைமைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விவரிக்க 2020-21க்கான பொருளாதார ஆய்வு “Bare Necessities Index” (BNI)ஐ குறிப்பிட்டுள்ளது. நீர், நலவாழ்வு, வீட்டுவசதி, நுண்-சூழல் மற்றும் பிற வசதிகள் என 5 பரிமாணங்களில் 26 சுட்டிகளை இது பட்டியலிடுகிறது. இது உயர், நடுத்தர, குறைந்த என 3 பகுதிகளை வகைப்படுத்துகிறது.

6. பின்வரும் எந்தத் துறைக்கு நிதியளிப்பதற்காக, NaBFID என்ற புதிய வங்கியை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது?

அ) வேளாண்மை

ஆ) உட்கட்டமைப்பு

இ) MSME’கள்

ஈ) மீன்வளத்துறை

  • பட்ஜெட் அமர்வில், நிதி உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID) மசோதா 2021 அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேசிய வங்கியை (NaBFID) அரசாங்கம் அமைத்துள்ளது. அது நாட்டின் உட்கட்டமைப்பு நிதியுதவிக்கு உதவும். இந்த வளர்ச்சி நிதி நிறுவனம், உட்கட்டமைப்புத்திட்டங்களை ஆதரிக்கும் ஒரு முதன்மை வளர்ச்சி வங்கியாக செயல்படும்.

7. அனைத்து தனியார் கிரிப்டோகரன்ஸிகளையும் தடைசெய்து ஒரு இறையாண்மை டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) ஜப்பான்

ஈ) நியூசிலாந்து

  • அனைத்து தனியார் கிரிப்டோகரன்ஸிகளையும் தடைசெய்து இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) ஓர் இறையாண்மை டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான மசோதாவை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
  • கிரிப்டோகரன்ஸியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பா -டுகளையும் ஊக்குவிக்க சில விதிவிலக்குகளை அனுமதிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். உத்தியோகபூர்வ டிஜிட்டல் நாணயத்தின் சட்டமன்ற கட்டமைப்பும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. உலகளாவிய பாசுமதி அரிசி வர்த்தகத்தில் அதிக பங்களிப்பு செய்யும் நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) பாகிஸ்தான்

ஈ) நேபாளம்

  • 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா 4.45 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ($4.33 பில்லியன் டாலர் மதிப்புடையை) ஏற்றுமதி செய்தது. உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் இது 65% பங்காகும். பாகிஸ்தான், உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் எஞ்சிய சதவீதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் பாசுமதி அரிசி அந்நாட்டடள -வில் புவிசார் குறியீட்டைப்பெற்றது.
  • 2020 செப்டம்பரில் இந்தியா தனது பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. இவ்விரு நாடுகளும், பாசுமதியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புவிசார் குறியீடு ஏதும் இல்லாமல் தற்போது ஏற்றுமதி செய்கின்றன.

9. 1896’இல், ‘பிரபுத பாரத’ இதழைத் தொடங்கியவர் யார்?

அ) சுவாமி விவேகானந்தர்

ஆ) பால கங்காதர திலகர்

இ) பகத் சிங்

ஈ) தயானந்த சரசுவதி சுவாமிகள்

  • இந்தியாவின் ஆன்மீக அறிவின் செய்தியை பரப்புவதற்காக, 1896ஆம் ஆண்டில் மாத இதழான ‘பிரபுத்த பாரதத்தை’ சுவாமி விவேகானந்தர் தொடங்கினார். உத்தரகண்ட் மாநிலத்தில், அத்வைத ஆசிரமம் ஏற்பாடு செய்த ‘பிரபுத பாரத’வின் 125ஆவது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இது பத்திரிகை வெளியிடும் இடம். ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், ஸ்ரீ அரவிந்தோ போன்ற பல தலைவர்கள் இப்பத்திரிகைக்கு பங்களித்துள்ளனர்.

10. தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) இந்து பூஷண்

ஆ) R S ஷர்மா

இ) பிரவீன் கேதம்

ஈ) முகேஷ் குமார் கேதான்

  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் RS சர்மா, தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இந்து பூஷணின் மூன்றாண்டுகால பதவிவகிப்பைத் தொடர்ந்த ஓய்வை அடுத்து RS சர்மா இப்பதவிக்கு வந்துள்ளார்.
  • பொது நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மிக்க அமைப்பு இந்தத் தேசிய நலவாழ்வு ஆணையமாகும். Co-WIN குழுவின் தலைவராகவும் RS சர்மா உள்ளார்.

4th February 2021 Tnpsc Current Affairs in English

1. The Tableau of which state was adjudged best at the Republic Day parade?

A) Assam

B) Tripura

C) Uttar Pradesh

D) Gujarat

  • Uttar Pradesh’s tableau at this year’s Republic Day parade in New Delhi was adjudged the best and awarded by Union minister Kiren Rijiju.
  • The theme of Uttar Pradesh’s tableau depicting the Ram Temple was “Ayodhya: Cultural Heritage of Uttar Pradesh”. Department of Biotechnology is the best tableau among the Central Ministries, departments, the CAPF and other auxiliary forces.

2. As per the NSO’s revised estimates released recently, what was India’s GDP growth rate for 2019–20?

A) 1.3%

B) 3.2%

C) 4.0%

D) 5.2%

  • The National Statistical Office recently released its revised national account data. As per the data, the economic growth rate for 2019–20 was revised downwards to 4 percent.
  • The decrease from the previous estimate of 4.2% was mainly due to contraction in secondary sectors like manufacturing and construction. Real GDP growth of 2018–19 is estimated at 6.5%, against the 6.1 percent revealed in January estimate.

3. Chauri Chaura is a town located in which Indian state?

A) Punjab

B) Uttar Pradesh

C) Bihar

D) West Bengal

  • Chauri Chaura is a town located near Gorakhpur, in the state of Uttar Pradesh. Prime Minister Narendra Modi is to inaugurate the Chauri Chaura Centenary celebrations.
  • The historic Chauri Chaura incident took place on 5 February 1922 at the Chauri Chaura town in the United Province in British India. After a clash between the Police and a group of volunteers, the Police opened fire and the group torched the Police station. Gandhi withdrew the Non–cooperation movement after this incident.

4. What was ‘IN FAC T–81’, which was seen in the news recently?

A) COVID Vaccine

B) Naval Craft

C) Super Computer

D) Virtual Intelligence Tool

  • ‘IN FAC T–81’ is the Indian Naval Fast Attack Craft of the MK II class, which served the nation successfully for more than 20 years in surveillance and Search & Rescue. It was recently decommissioned at Naval Dockyard, Mumbai. It was built at Goa Shipyard Ltd in collaboration with an Israel manufacturer. The INFAC was commissioned into the Navy in 1999.

5. What is the expansion of BNI, mentioned in the Economic Survey 2020–21?

A) Broad Necessities Index

B) Bare Necessities Index

C) Base Necessities Indicator

D) Base National Indicator

  • he Economic Survey for 2020–21 has mentioned “Bare Necessities Index” (BNI), to describe the inequalities in access to bare necessities like drinking water, sanitation and housing conditions between urban and rural India.
  • The index lists 26 indicators on five dimensions namely water, sanitation, housing, micro–environment, and other facilities. It also classifies the regions in three levels namely high, medium, low.

6. NaBFID, the new bank which is proposed to be set up, is to finance which sector?

A) Agriculture

B) Infrastructure

C) MSME’s

D) Fisheries

  • The National Bank for Financing Infrastructure and Development (NaBFID) Bill 2021 is to be introduced in the Budget session.
  • The government is set up a National Bank for Financing Infrastructure and Development (NaBFID), which will facilitate the infrastructure financing of the country. The developmental financial institution (DFI) will act as a principal financial institution and development bank to support infrastructure projects.

7. Which country is to introduce a bill to ban all private cryptocurrencies and create a sovereign digital currency?

A) China

B) India

C) Japan

D) New Zealand

  • The Indian Government is to introduce a bill in Parliament to ban all private cryptocurrencies and create a sovereign digital currency by the Reserve Bank of India. The bill is to allow certain exceptions to promote the underlying technology of cryptocurrency and its uses.
  • A legislative framework on official digital currency is also expected to be created.

8. Which country has the highest share in global basmati rice trade?

A) China

B) India

C) Pakistan

D) Nepal

  • India exported 4.45 million tonnes basmati rice (worth USD 4.33 billion) in financial year 2019–20. It has a 65 percent share in global basmati trade. Pakistan makes the rest of the global trade.
  • Recently, Pakistan’s basmati rice has received a Geographical Indication (GI) registration within the country. India has applied to the EU for the GI tag for its basmati rice in September 2020. Both countries are exporting basmati to the EU without a GI tag from it.

9. Which Indian personality started the ‘Prabuddha Bharata’ journal in 1896?

A) Swami Vivekananda

B) Bala Gangadhar Tilak

C) Bhagat Singh

D) Dayananda Saraswati Swami

  • Swami Vivekananda started the ‘Prabuddha Bharata’, a monthly journal of the Ramakrishna order in 1896, to spread the message of India’s spiritual knowledge. Prime Minister Narendra Modi addressed the 125th Anniversary celebrations of ‘Prabuddha Bharata’ organized by Advaita Ashrama in Uttarakhand.
  • It is the place of publication of the journal. Several leaders like Netaji Subhas Chandra Bose, Bal Gangadhar Tilak, and Sri Aurobindo have contributed to the journal.

10. Who has been appointed as the new Chief Executive of the National Health Authority (NHA)?

A) Indu Bhushan

B) R S Sharma

C) Praveen Getam

D) Mukesh Kumar Khetan

  • Former chairman of the Telecom Regulatory Authority of India (TRAI), RS Sharma is appointed as the new Chief Executive Officer of National Health Authority (NHA).
  • He is to replace Indu Bhushan after his 3 year term. NHA is responsible for implementing the public health insurance scheme ‘Ayushman Bharat’ or Pradhan Mantri Jan Arogya Yojana. Sharma is also the Chairperson of an empowered committee on Co–WIN platform.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!