TnpscTnpsc Current Affairs

4th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம், 1950’இல் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) உத்தரப்பிரதேசம்

ஈ) அஸ்ஸாம் 

  • அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் அண்மையில் ஒரு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அது கால்நடை பாதுகாப்புச் சட்டம், 1950’ஐ மாற்றியமைத்து அச்சட்டத்தை வலுப்படுத்துகிறது. வேளாண் நோக்கங்களுக்காக கால்நடைகளை எளிதாக கொண்டு செல்வதற்கும், அவற்றை கடத்துவோர்க்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்கும் இம்மசோதா வகை செய்யும்.

2. நீர் மறுபயன்பாடு தொடர்பான NMCG-TERI’இன் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ள இடம் எது?

அ) குருகிராம் 

ஆ) புது தில்லி

இ) மும்பை

ஈ) கொல்கத்தா

  • தேசிய தூய்மை கங்கை திட்டம் (NMCG) மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI) ஆகியவை இணைந்து நீர் மறுபயன்பாடு தொடர்பான NMCG-TERI’இன் சிறப்பு மையத்தை குருகிராம் – ஹரியானாவில் உள்ள TERI வளாகத்தில் தொடங்கியுள்ளன.
  • ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கும், ஆராய்ச்சி -க்கான இடைவெளிகளைக் கண்டறிவதற்கும், நீர் மறுப -யன்பாட்டில் அனைத்து வகையான ஆராய்ச்சிகளுக்கும் ஆதரவளிப்பதற்குமாக இம்மையம் நிறுவப்படுகிறது.

3. துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகை -யில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) தெலுங்கானா

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தடுக்கவுமாக ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதால், இதுவரை 130க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
  • மஞ்சள் நிற துணிப்பைகள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் சுபநிகழ்ச்சிகளின்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

4. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தைச் (SPMRM) செயல்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) தெலுங்கானா 

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தைச் (SPMRM) செயல்படுத்துவதில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது.
  • உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அடிப்படை சேவைகளை மேம்படுத்தவும், நன்கு திட்டமிடப்பட்ட தொகுதிகளை உருவாக்கவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நாடு முழுவதும் உள்ள 300 தொகுதிகளில் சங்கரெட்டி மற்றும் காமரெட்டி மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.

5. சமீபத்தில் மகளிர் ITF ஒற்றையர் பட்டத்தை வென்ற மொயுகா உச்சிஜிமா சார்ந்த நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான் 

இ) தென் கொரியா

ஈ) வட கொரியா

  • ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை மொயுகா உச்சிஜிமா தனது முதல் $25,000 பரிசுத் தொகையுடைய மகளிர் ITF ஒற்றையர் பட்டத்தை வென்றார். NECC டெக்கான் மகளிர் ITF சாம்பியன்ஷிப்பின் இருபதாவது பதிப்பின் ஒற்றையர் இறுதிப்போட்டியில் லாட்வியாவின் டயானா மார்சின்கெ
    -விகாவை அவர் தோற்கடித்தார். இரட்டையர் பிரிவில் ஜப்பானின் மற்றொரு ஜோடியான ஃபுனா கோசாகி மற்றும் மிசாகி மட்சுடா இரண்டாமிடம் பிடித்தனர்.

6. ‘கிராம் உஜாலா திட்டத்தைச்’ செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம் 

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல் & வன அமைச்சகம்

  • ‘கிராம் உஜாலா திட்டம்’ என்பது எரிசக்தி அமைச்சகத்தின் முதன்மையான திட்டமாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள குழல்விளக்குகளுக்கு மாற்றாக ஒவ்வொன்றும் `10 விலையில் மூன்றாண்டு உத்தரவாதத்துடன் அதிக தரமுள்ள LED பல்புகளை CESL வழங்குகிறது.
  • சமீபத்தில், CESL ஆனது கிராம் உஜாலா திட்டத்தின்கீழ் 50 இலட்சம் LED பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது.

7. அண்மையில் அதன் தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஆசிய நாடு எது?

அ) இலங்கை

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) வங்காளதேசம்

  • பாகிஸ்தானின் அமைச்சரவை நாட்டின் முதல் தேசிய பாதுகாப்புக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இது, பொருளாதார முன்னேற்றம் தேசிய பாதுகாப்பின் கருவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உயர் அதிகாரம் கொண்ட தேசிய பாதுகாப்புக் குழுவால் (NSC) அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. இது 2022-26 காலகட்டத்தை உள்ளடக்கிய ஐந்தாண்டு கொள்கை ஆவணமாகும்.

8. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அண்மைய பதிப்பு, கீழ்காணும் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?

அ) 2010

ஆ) 2015

இ) 2019 

ஈ) 2021

  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிமுறைகள், 2021’ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்புதிய விதிமுறைகள் நேரடிவிற்பனை நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பிரமிட் திட்டங்கள், பண சுழற்சி திட்டங்களில் ஈடுபட தடை விதிக்கிறது.

9. அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி அமைச்சருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான மசோதாவை பின்வரும் எந்த மாநிலத்தின் சட்டமன்றக் குழு நிறைவேற்றியுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) மகாராஷ்டிரா 

ஈ) தெலுங்கானா

  • மகாராஷ்டிர மாநில பொது பல்கலைக்கழக சட்டம், 2016 (3ஆவது திருத்தம்) மசோதாவை மகாராட்டிர சட்டமன்றக் குழு நிறைவேற்றியது. அரசு நடத்தும் பல்கலைக்கழகங்க -ளில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சருக்கு அதிக அதிகாரங்களை வழங்க இது முயற்சி செய்கிறது.
  • பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரிடம் அமைச்சர் பரிந்துரைகளை வழங்கவும் இந்த மசோதா அனுமதிக்கிறது. பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக அமைச்சரை நியமிக்கவும் இந்தச் சட்டம் முன்மொழிகிறது.

10. மதிப்பீட்டு நிறுவனமான ICRA’இன் கூற்றுப்படி, 2022 நிதியாண்டில் இந்தியாவின் மெய்யான GDP வளர்ச்சி விகிதம் எவ்வளவு என மதிப்பிடப்பட்டுள்ளது?

அ) 12.5%

ஆ) 11%

இ) 10%

ஈ) 9% 

  • 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கான GDP 9.0% விரிவாகும் என்ற தனது முன்னறிவிப்பை ICRA ரேட்டிங் தக்கவைத்துள்ளது. பொருளாதாரத்தின் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் K-வடிவ வேறுபாடு காணப்படும் என்று அது உறுதிபட கூறியுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2022-23) பொருளாதாரம் இதேபோன்ற 9.0% வளர்ச்சியைப் பராமரிக்கும் என ICRA நிறுவனம் எதிர்பார்க்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது

பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 29,114 அரிசி குடும்பஅட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ரூ.505 மதிப்புள்ள 21 பொருட்கள் வழங்க `1,088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.

21 பொருட்கள்

இதில், தலா ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை, தலா 50 கிராம் முந்திரி, திராட்சை,10 கிராம் ஏலக்காய், தலா 500 கிராம்உளுந்து, பாசிப்பருப்பு, உப்பு, தலா 100 கிராம் நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, துணிப்பை ஒன்று என 20 பொருட்களும், ஒரு கரும்பும் என 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக கூட்டுறவுத் துறை மூலம் ஏலம், முந்திரி, திராட்சைமற்றும் கரும்பு ஆகியவை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் 21 பொருட்களை யும் வழங்குவதற்கான, டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து, மாவட்டவாரியாக அமைச்சர்கள் தொடங்கிவைக்கின்றனர். விடுதல் இல்லாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2. சென்னை வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மை இடைக்கால அறிக்கை: முதல்வரிடம் சமர்ப்பித்தார் அறிவுரைக் குழுத் தலைவர்

சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான இடைக்கால அறிக்கையை, முதல்வர் மு க ஸ்டாலினிடம், அறிவுரைக் குழுவின் தலைவர் வெ திருப்புகழ் சமர்ப்பித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர்உரையாற்றும்போது, “சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ளக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், சுற்றுச்சூழல், நகர்ப்புறத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையரின் பரிந்துரை அடிப்படையில், சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில், டெல்லி நகர் மற்றும்ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பைஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை போராசிரியர் கபில் குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் வடகிழக்குப் பருவமழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாதிப்புகளையும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுப்பது தொடர்பான இடைக்கால அறிக்கையை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம், அறிவுரைக் குழுத் தலைவர் வெ திருப்புகழ் நேற்று சமர்ப்பித்தார். 90 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், சென்னையில் மழைப் பாதிப்புகளை தடுப்பதற்கான சில ஆலோசனைகளை குழு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் மழையால் பாதிக்கப்படும் 561 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மழை பாதிப்புகளைத் தடுக்க, நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் பல்வேறு வடிகால்களின் உண்மையான கொள்ளளவை மீட்க வேண்டும். சென்னையில் உள்ள மழைநீர்க் கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். கட்டுமானங்களை தரமானதாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

3. மின்சார வாகனம் தொடர்பான புதிய முதுநிலைப் படிப்பு சென்னை ஐஐடி’இல் அறிமுகம்

மின்சார வாகனம் தொடர்பான புதிய முதுநிலைப் பட்டப் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்துகிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு ஐஐடி-ல் மின் வாகனம் தொடர்பான புதிய முதுநிலைப் பட்டப் படிப்பு கொண்டுவரப்படுகிறது. இரு துறைசார்ந்த இரட்டைப்படிப்பாக இது அறிமுகப்படுத்தப்படும். இந்தப் படிப்பில் பி.டெக். 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சேரலாம். மொத்தம் 25 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

மின்சார வாகனவடிவமைப்பு, தகவல் தொடர்புஉள்ளிட்ட அம்சங்கள் அடங்கியதாகவும், மின்சார வாகன தயாரிப்புமேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் இந்தப் படிப்பு அமைந்திருக்கும்.

ஐஐடி-ல் பி.டெக். 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து 5 ஆண்டுகள் படித்தால், அவர்களுக்கு ஒருங்கிணைந்த எம்.டெக். பட்டம் வழங்கப்படும். இந்தப் படிப்புக்கான சேர்க்கை ஜனவரியில் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய படிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இன்ஜினீயரிங் டிசைன் துறைத் தலைவர் டி.அசோகன் கூறும்போது, “மின்சார வாகனப் பொறியாளர்களுக்குத் தேவைப்படும் அனைத்து திறமைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், 8 துறைகளின் கூட்டுமுயற்சியால் இந்தப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின் வாகனங்களுக்கான அடிப்படை விஷயங்கள், பேட்டரிகள், மோட்டார்கள் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவுபெறும் வகையில், மிகுந்த கவனத்துடன் இதற்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

4. இந்தியத் தடுப்பூசிகள்: ஒரு மீள் பார்வை

கரோனா வைரஸ் ஒமைக்ரான் வேடமிட்டு மூன்றாம் ஆண்டில் தடம்பதிக்கிறது. உலகளவில் இதை எதிர்கொள்ளத் தடுப்பூசிதான் ஒரே வழி என்று ஆரம்பம் முதலே பேசப்பட்டது. கரோனாவுக்கு எதிராக பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி முதன்முதலில் 2020 டிசம்பர் 8-ல் பிரிட்டனில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தது. இதுவரை 10 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றாளருக்கு உயிரிழப்பைத் தவிர்ப்பதில் தடுப்பூசியின் பங்கு மகத்தானது.

இந்தியாவில் இலவச கரோனா தடுப்பூசித் திட்டம் 2021 ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது. கோவிஷீல்டு, கோவேக்சின் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டது. மார்ச்-1 தொடங்கி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணைநோயுள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது. மே-1 தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதியளிக்கப்பட்டது. மே-14ல் ஸ்புட்னிக்-வி இணைந்துகொண்டது. இவற்றில் கோவிஷீல்டு 88.89%, கோவேக்சின் 10.79% பயன்படுத்தப்பட்டது. ஸ்புட்னிக்-வி 1%-க்கும் குறைவு.

நவம்பர் 3-ம் தேதி ‘வீடு தேடித் தடுப்பூசி’த் திட்டம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கு எதிரான பரப்புரைகளால் பொதுச் சமூகத்துக்கு ஏற்பட்ட தயக்கத்தாலும், நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உண்டானதாலும் இத்திட்டம் ஆரம்பத்தில் சுணக்கம் கண்டது. பின்னர், வேகமெடுத்தது. இதுவரை 145 கோடித் தவணைகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன. முழுமையாகச் செலுத்திக்கொண்டவர்கள் 64.2% பேர். 3 மாநிலங்களில் 100% இரண்டு தவணைகளும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்திய மருத்துவத் துறையில், குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசித் திட்டம் என்றிருந்த வரலாறு மாறிப்போனது. இதுவரை செய்யாத சாதனையாக ஒன்றிய அரசு இத்திட்டத்தை முன்வைத்தது. ஆனாலும், 2021 டிசம்பருக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. எனவே, இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி

இத்திட்டத்தின் தொடக்கத்தில் மூன்று வகைத் தடுப்பூசிகளுக்குமே இரண்டு தவணைகள் போதும் என்றது அரசு. ஆனால், களநிலவரத்தில், இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்களுக்குத் தடுப்பாற்றல் 6-9 மாதங்களே தாக்குப்பிடிப்பதாலும், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வேற்றுருவங்கள் இந்தத் தடுப்பூசிகளையும் தாண்டி மறுதொற்றை ஏற்படுத்துவதாலும், மூன்றாம் தவணையும் தேவை என்ற எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மூன்றாம் தவணையைச் செலுத்தத் தொடங்கின. இஸ்ரேல் நான்காவது தவணையைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. இந்தியாவிலும் ‘முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி’ எனும் பெயரில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி, மூன்றாவது தவணையைச் செலுத்த உள்ளனர். ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கும் இணைநோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் தவணைக்கு, முதல் இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகளுக்குப் பதிலாக மாற்றுத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது மிகுந்த பாதுகாப்பைத் தருவதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை அவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்தியாவில் மூன்றாம் தவணை தொடர்பான ஆராய்ச்சி வேலூரில் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவு வெளிவந்ததும் இந்தியாவில் எதை முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியாகச் செலுத்திக்கொள்வது என்பது தெளிவாகிவிடும். அண்மையில், கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் ஆகிய புரத வகைத் தடுப்பூசிகளும் அரசின் அனுமதி பெற்றுள்ளன. எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி, ஸ்புட்னிக் லைட், ஜைக்கோவ்-டி, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தும் இன்னும் செயலுக்கு வரவில்லை.

தமிழ்நாட்டின் நிலவரம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசித் திட்டம் வெற்றியடைய பல அடுக்கு நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. அவற்றில் மெகா தடுப்பூசி முகாம்கள் முக்கியமானவை. சென்ற வாரம் வரை 17 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும், சிம்லா மற்றும் இமாசலப் பிரதேசத்தைப் போல 100% இலக்கை உடனடியாக அதனால் எட்ட முடியவில்லை. புள்ளிவிவரப்படி பார்த்தால், தடுப்பூசிக்குத் தகுதியான 5.78 கோடிப் பேரில் 86% பேர் முதல் தவணைத் தடுப்பூசியையும் 59% பேர் இரண்டாவது தவணையையும் செலுத்திக்கொண்டுள்ளனர். 80 லட்சம் பேர் முதல் தவணையையும், 96 லட்சம் பேர் இரண்டாம் தவணையையும் இன்னமும் செலுத்திக்கொள்ளவில்லை. இவர்களில் மூத்த குடிமக்கள்தான் அதிகம். அரசின் கணக்குப்படி, தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய மூத்த குடிமக்களில் இதுவரை 61% பேர் ஒரு தவணை மட்டும் செலுத்திக்கொண்டுள்ளனர். 44% பேர் இரண்டு தவணைகளைச் செலுத்திக்கொண்டு முழுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர்.

தயக்கம் வேண்டாம்!

இந்தச் சூழலில், ஒன்றிய அரசு இணைநோயுள்ள மூத்த குடிமக்களுக்கு மூன்றாம் தவணையாக முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஒமைக்ரான் தீவிரமாகப் பரவும் என்பதால், அதன் தாக்குதலுக்கு உள்ளாகிற அதிக வாய்ப்பு மூத்த குடிமக்களுக்கே இருக்கிறது. இவர்கள்தான் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசிக்கு முன்நிற்க வேண்டும்.

இவர்களோ இணைநோய்களின் அச்சம் காரணமாகத் தடுப்பூசிக்குத் தயங்குகின்றனர். இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால்தான் நாட்பட்ட பாதுகாப்பு உறுதிப்படும் என்பதையும், தடுப்பூசியால்தான் கரோனா மரணங்களை உலகளவில் குறைக்க முடிந்தது என்பதையும் உணர்ந்து, இவர்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைக் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். இணைநோயுள்ளவர்களும் மூன்றாம் தவணையைச் செலுத்திக்கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைப் பிள்ளைகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த வாரத்திலிருந்து 15 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இது, இந்தியக் குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் திருப்தியாக இருந்ததால், குழந்தைகள் பயன்பாட்டுக்கு அரசின் அனுமதி பெற்றுள்ளது. ஆகவே, பெற்றோர் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியை வடிவமைத்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசித் துறைப் பெண் பேராசிரியை சாரா கில்பர்ட் கூறியுள்ளதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

கரோனா இன்னும் ஓய்ந்துவிடவில்லை. இந்தப் பெருந்தொற்றின் மூலம் நமக்குக் கிடைத்துள்ள தடுப்பூசி அறிவைத் தொலைத்துவிடக் கூடாது. தடுப்பூசித் தவணைகள் விஷயத்திலும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் அலட்சியம் ஆகாது. மீறினால், அடுத்த பெருந்தொற்று இதைவிட மோசமானதாகக்கூட இருக்கும்”.

டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தமிழ்நாட்டில் மூன்றாம் அலையைத் தொடங்கிவிட்டது என்ற எச்சரிக்கை வந்திருக்கும் இன்றைய சூழலில் எல்லோருக்குமான அறிவுறுத்தல் இது.

5. வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தி நீக்கம்

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறைச் சட்டம்-1987-ல் அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் பட்டியல் தொகுப்பிலிருந்து பருத்தியைத் தமிழ்நாடு அரசு நீக்கம் செய்து சந்தைக் கட்டண விலக்கு அளித்துள்ளது. இது தொடக்கத்தில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் நன்மை தருவதுபோல் இருப்பினும் நாளடைவில் மத்திய, மாநில அரசின் நிதியை அரசுச் சந்தைகள் எதிர்நோக்கும் கட்டாயம் ஏற்படும்.

தனது சுயநிதி (சந்தைக் கட்டண நிதி) மூலம் விவசாயிகளுக்கு எவ்வித சந்தை மேம்பாட்டுப் பணியையும் செய்ய இயலாமல் நலிவடைந்துவிடும். மத்திய வேளாண் சட்டங்களால் வேளாண் சந்தை அமைப்புகள் அழிந்துவிடும் என்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. அது போலத்தான் வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தியையும் அடுத்தடுத்த விளைபொருட்களையும் நீக்கினால், ஒழுங்குமுறை வேளாண் சந்தை அமைப்புகள் வலுவிழந்துபோய்விடும். அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

வணிகர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் விவசாயிகள் வர வேண்டிய நிலை ஏற்படும். இடைத்தரகர்கள் மீண்டும் வருவார்கள். அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வது சாத்தியமில்லா நிலை ஏற்படும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலைகூடக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகக்கூடும். பருத்தி போன்ற விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும், இந்தியப் பருத்திக் கழகம் கொள்முதல் செய்ய இடைத்தரகர்களையும் வணிகர்களையும் நாட வேண்டிய நிலை வரும்.

என்னதான் வேளாண் சந்தைகளுக்கு அரசு நிதி வழங்கினாலும், அது சுயமாக நிதி ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளும் நிலையில் இருந்தால்தான் அமைப்பு வலுப்பெறும். சந்தை அமைப்புகள் வலுவாக இருந்தால்தான், அதன் மூலம் வேளாண் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை அரசு கண்காணித்துக் கட்டுப்படுத்த இயலும். சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதற்கோ, நுகர்வோருக்குக் குறைந்த விலை கிடைக்கும் என்பதற்கோ எந்தவித ஆராய்ச்சித் தரவுகளும் இல்லை.

ஆகவே, சந்தைக்குள் நடக்கும் பரிவர்த்தனைக்கு மட்டும் சந்தைக் கட்டணம் விலக்கு அளித்துவிட்டு, வெளிப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தால் நிறைய வணிகர்கள் சந்தை அமைப்புக்குள் கொள்முதல் செய்யப் போட்டி போடும் நிலை வரும். விவசாயிகளுக்கும் போட்டி விலை கிடைக்கும். ஆகவே, பருத்தி போன்ற வேளாண் விளைபொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதும், முழுமையாகச் சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதையும் அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், 100 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வேளாண் விற்பனைச் சந்தைகளை உருவாக்கினால், சந்தை அமைப்பு மேம்படும். நல்ல விலை கிடைக்கும்போது உற்பத்தி தானாகப் பெருகும்.

6. சேதி தெரியுமா?

டிச.25: தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடித்தது.

டிச.25: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

டிச.26: பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

டிச.28: உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப்’பை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

டிச.29: அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டது. அதேபோல, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்கிற சிறார் கதை தொகுப்புக்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டது.

டிச.30: தேசிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘அடல்’ தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தது.

டிச. 31: ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப் பாடுகளைத் தமிழக அரசு அமல்படுத்தியது.

டிச.31: துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா எட்டாவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது.

ஜன.1: புளோரோனா என்கிற புதிய கரோனா வைரஸ் வேற்றுருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

7. வைர விழா காணும் சென்னையின் கணிதப் பெருமை

இந்தியாவின் அறிவு வளர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் தமிழ் மண் தொன்றுதொட்டு பங்களித்துவந்திருக்கிறது.. பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின், கல்வி உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த குறியீடுகளில் முன்னேறிய நாடாக உருமாற்றும் கனவைச் சுமந்த தலைவர்களின் ஆட்சி இந்தியாவில் அமைந்தது. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நவீன கல்வி – ஆய்வுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் அரசும் லட்சிய வேட்கை கொண்ட தனிநபர்களும் பங்களித்தனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் 1962இல் சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் (Institute Of Mathematical Sciences) என்னும் சுயாதீன ஆய்வு மையத்தைத் தொடங்கினார். அதன் இயக்குநராகவும் அவர் செயல்பட்டார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள கணித அறிவியல் நிறுவனம் கோட்பாடுசார் அறிவியல் பிரிவுகளுக்கான தேசிய ஆய்வு மையமாகச் செயல்பட்டுவருகிறது. 1984இலிருந்து இந்திய அணு ஆற்றல் துறையின் நிதியளிப்பில் இயங்கிவருகிறது. 2022 ஜனவரி 3 அன்று 60 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கணித அறிவியல் நிறுவனத்தைப் பற்றி அதில் நீண்ட காலம் பணிபுரிந்த பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

“கோட்பாடுசார் இயற்பியல் ஆய்வுக்கான மையமாக இது தொடங்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற எஸ்.சந்திரசேகர் இதைத் தொடங்கிவைத்தார். 5-6 ஆய்வாளர்களை உள்ளடக்கிய மையமாகத் தொடங்கப்பட்டு வளர்ந்துவந்தது. அணு ஆற்றல் துறையின் வருகைக்குப் பிறகு மேலும் பல மடங்கு வளர்ந்தது. கணிதம் (Mathematics), கோட்பாடுசார் இயற்பியல் (Theoretical Physics), கோட்பாடுசார் கணினி அறிவியல் (Theoretical Computer Science), கணக்கீட்டு உயிரியல் (Computational Biology) ஆகிய நான்கு துறைகளில் இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் முனைவர் பட்டம், ஒருங்கிணைந்த முனைவர் பட்டம் (Integrated Phd) ஆகியவை வழங்கப்படுகின்றன.

முக்கிய ஆய்வுகள்

கணிதத்தில் எண் கோட்பாடு, வடிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கியமான ஆய்வுத் திட்டங்கள் உள்ளன. கோட்பாடுசார் இயற்பியல் பிரிவில் நியூட்ரினோ இயற்பியல், துகள் இயற்பியல் உள்ளிட்டவை சார்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. கணக்கீட்டு உயிரியலில் உயிரியல் துறையில் நிகழும் பல புதிய கண்டுபிடிப்புகளின் கணக்கீட்டு அம்சங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. கோட்பாடுசார் கணினி அறிவியலில் அல்காரிதம்கள், கணக்கீட்டுக் கோட்பாடு, பாதுகாப்பு கோட்பாடு, கேம் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

அறிவியலைப் பரப்பும் பணி

நிறுவனத்துக்கு வெளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடையே கணிதம், அறிவியலைப் பரப்புவதற்கும் அவர்களின் அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்குமான பல்வேறு திட்டங்கள் (Outreach Programmes) ஆண்டு முழுவதும் கணித அறிவியல் நிறுவனத்தில் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் – ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்குத் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களும் ஆசிரியர்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின்படி பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தேசிய அறிவியல் நாளன்று (பிப்ரவரி 28) ‘சயின்ஸ் அட் தி சபா’ (Science at the Sabha) என்னும் பெயரில் அறிவியல் ஆய்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இப்படியாக ஆய்வு மட்டுமல்லாமல் மக்களிடையே கணிதத்தையும் அறிவியலையும் கொண்டு சேர்ப்பதற்கும் கணித அறிவியல் நிறுவனம் தொடர்ந்து பங்களித்துவருகிறது.

60ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

60 ஆண்டுகள் நிறைவை ஒட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் கணிதத்தின் முக்கியத்துவம், எப்போதைக்குமான பொருத்தப்பாடு, சமகால பயன்பாடுகள் ஆகியவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளிலிருந்து உலகை மீட்பதற்கான திட்டங்கள் அத்தியாவசியம் ஆகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பருவநிலை மாதிரியாக்கம், புவியைப் பாதுகாப்பதற்கான கணிதம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆய்வு மையத்தில் முன்பு பணியாற்றிய ஒரு ஆராய்ச்சியாளர் இமாலயத்தில் பனிச்சிகரங்கள் உருகுவது எப்படி என்பதைக் கணித மாதிரியாக்கம் மூலம் ஆய்வு செய்துவந்தார். பெருந்தொற்றுக் காலத்தில் தொற்றுப் பரவல், நோய்ப் பரவல் மாதிரியாக்கம் ஆகியவற்றைக் கணிதவியல் அடிப்படையில் புரிந்துகொண்டு திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இவை குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.

சர்வதேச கவனம்

கணித அறிவியல் நிறுவனத்தில் சர்வதேச தரத்திலான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கே ஆய்வு செய்தவர்களின் ஆய்வேடுகள் சர்வதேச ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன. கணித அறிவியல் நிறுவனத்தில் கோட்பாடுசார் கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சாகேத் சௌரப், கணித அறிவியலுக்கான 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதைப்’ பெற்றார். கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.பாலசுப்ரமணியன் பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ‘ஷெவாலியே’ விருதைப் பெற்றுள்ளார்.

8. புளூ, கரோனா வைரஸ் கலவையான புளூரோனா காய்ச்சல் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் நாட்டில் புளூ, கரோனா வைரஸ் கலவையான புளூரோனா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019 இறுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. தற்போது கரோனா வைரஸ் மரபணு மாறி புதிய வைரஸ்கள் உருவாகி வருகின்றன.

இந்த வரிசையில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸின் டெல்டாவும் ஒமைக்ரானும் கலந்து டெல்மைக்ரான் என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பதாக விஞ்ஞானிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில் இஸ்ரேலின் பேட்டா டேக்வா நகரில் உள்ளமருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அண்மையில் கரோனாஅறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவரது சளி மாதிரியை பரிசோதித்தபோது, ஒரே நேரத்தில் புளூ காய்ச்சல், கரோனாகாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. புதிய வகை காய்ச்சலுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் புளூரோனா என்று பெயரிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் கர்ப்பிணிகளிடையே புளூ காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. அவர்களில் பலர் புளூரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே புளூ, கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலில் பெரும்பாலானோருக்கு 3-ம் தவணை கரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தநாட்டில் 5-வது கரோனா அலைஏற்பட்டிருப்பதால் 4-ம் தவணைதடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டப்படுகிறது.

இஸ்ரேல் விஞ்ஞானிகள் கூறும்போது, “புளூரோனாகாய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு மூச்சுத் திணறல், உடல் உறுப்புகள் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வழக்கமான கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்றனர்.

9. குழந்தைகளுக்கு எதிரான இணையதளவழி குற்றங்கள் 2020-ல் 261 சதவீதம் அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த வகையில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த 2020-ம் ஆண்டில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும்குற்றவாளி என அறிவிக்கப்பட் டுள்ளார்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 207 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் பதிவான 70 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இது 196 சதவீதம் அதிகம் ஆகும். 2019-ல் முதலிடத்தில் இருந்த உத்தரபிரதேசம் 2020-ல் 197 வழக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. கர்நாடகா (144), கேரளா (126), ஒடிசா (71), ஆந்திரா (52) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இதுகுறித்து இத்துறை சார்ந்தநிபுணர்கள் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் இணைய தளங்களை குழந்தைகள் பார்ப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களும் அதிக அளவில் உருவாகி உள்ளன.

இதில் பெரும்பாலான வீடியோக்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த நபர்களே பதிவு செய்துள்ளனர்” என்றனர்.

1. Which state has recently passed an amendment to the Cattle Preservation Act,1950?

A) Tamil Nadu

B) Kerala

C) Uttar Pradesh

D) Assam 

  • The legislative assembly of the state of Assam has recently passed an amendment bill, which seeks to modify the Cattle Preservation Act, 1950 and strengthen the same. The additions made in the bill will provide for ease of transportation of cattle for agricultural purposes and ensure stringent punishment for cattle smugglers.

2. NMCG–TERI’s Center of Excellence (CoE) on water reuse is set to come up in which place?

A) Gurugram 

B) New Delhi

C) Mumbai

D) Kolkata

  • The National Mission for Clean Ganga (NMCG) and the Energy and Resources Institute (TERI) have launched the NMCG–TERI’s Center of Excellence (CoE) on Water Reuse, which would come up at TERI campus, Gurugram – Haryana. The Center is being established to foster research and innovation and identify knowledge gaps for research and support all forms of research in water reuse.

3. Which state launched ‘Meendum Manjappai’ scheme to promote use of cloth bags?

A) Tamil Nadu 

B) Kerala

C) Karnataka

D) Telangana

  • Tamil Nadu Chief Minister M K Stalin launched ‘Meendum Manjappai’ scheme to promote the use of cloth bags by the public and discourage the use of plastic bags.
  • The state has disconnected electricity from 130 factories so far due to violations of the single–use plastics ban. Yellow–coloured cloth bags were extensively used in the state during auspicious occasions.

4. Which Indian state stands first in the implementation of the Shyama Prasad Mukherji Rurban Mission (SPMRM)?

A) Karnataka

B) Telangana 

C) Bihar

D) West Bengal

  • Telangana stood first in the implementation of the Shyama Prasad Mukherji Rurban Mission (SPMRM). The scheme was launched four years ago to promote local economic development, enhance basic services and create well planned clusters. Sangareddy and Kamareddy districts claimed the first two positions among the 300 clusters across the country, where the programme is being implemented.

5. Moyuka Uchijima, who recently won the Women’s ITF singles title, is from which country?

A) China

B) Japan 

C) South Korea

D) North Korea

  • Japanese tennis player Moyuka Uchijima won her maiden $25,000 Women’s ITF singles title. She defeated Diana Marcinkevica of Latvia in the singles final of the 20th edition of the NECC Deccan $25,000 Women’s ITF Championships. Another Japanese pair Funa Kozaki and Misaki Matsuda won the second place in doubles title.

6. Which Union Ministry is implementing ‘Gram Ujala programme’?

A) Ministry of Power 

B) Ministry of Rural Development

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Environment, Forest and Climate Change

  • Gram Ujala scheme is a flagship scheme of the Union Ministry of Power. Convergence Energy Services Limited (CESL) is providing high quality LED bulbs with 3 years guarantee at a cost of INR 10 per bulb in exchange of working incandescent bulbs. Recently, CESL has achieved a remarkable milestone of distributing 50 lakhs LED bulbs under Project Crore of Gram Ujala programme.

7. Which Asian Country recently unveiled its National Security Policy?

A) Sri Lanka

B) Pakistan 

C) Afghanistan

D) Bangladesh

  • Pakistan’s Cabinet endorsed the country’s first–ever National Security Policy (NSP), which emphasised that economic progress should be at the center of national security. The Cabinet has adopted the document which was approved by the high–powered National Security Committee (NSC). The Policy is a five–year policy document covering the period 2022–26.

8. The latest version of ‘Consumer Protection Act’ was passed in which year?

A) 2010

B) 2015

C) 2019 

D) 2021

  • The Union Government in exercise of the powers conferred by the Consumer Protection Act, 2019 has notified the Consumer Protection (Direct Selling) Rules, 2021. As per the new rules, Direct selling entity and direct sellers are prohibited from Promoting a Pyramid Scheme or enroll any person to such scheme or participate in such arrangement. They are also prohibited from participating in money circulation scheme in the name of direct selling business.

9. Which state’s legislative council has passed a bill to give more powers to Higher Education Minister in the state–run varsities?

A) Tamil Nadu

B) Andhra Pradesh

C) Maharashtra 

D) Telangana

  • The Maharashtra Legislative Council passed the Maharashtra Public University Act, 2016 (Third Amendment) bill. It seeks to give more powers to the Higher and Technical Education Minister in the state–run varsities.
  • The bill also allows the minister to make recommendations to the Governor who is the chancellor of the universities. It also proposes appointment of the Minister as pro–chancellor of the universities.

10. As per the Ratings agency ICRA, what is the estimated real GDP Growth of India in FY 2022?

A) 12.5%

B) 11%

C) 10%

D) 9% 

  • The Ratings agency ICRA has maintained its forecast of a 9.0% GDP expansion for India in FY2022. It maintained that a K–shaped divergence will be seen amongst the formal and informal sectors of the economy. The ratings agency also expects the economy to maintain a similar 9.0% growth in the next fiscal year FY2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!