Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

4th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

4th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக பொறுப்பேற்றுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) பிரேஸில்

ஈ) இரஷ்யா

  • BRICS அமைப்பின் நடப்பாண்டிற்கான (2021) தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள. BRICS உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மூன்று நாள் கூட்டத்தின் தொடக்கத்துடன் இந்தியா தனது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சின் செயலர் தலைமைதாங்கினார். இச்சந்திப்பின்போது, இந்தியா, 2021ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள்கள் மற்றும் முன்னுரிமைகளை BRICS’இன் உறுப்புநாடுகளுக்கு அறிமுகம் செய்தது.

2. பின்வரும் எத்தேதியிலிருந்து, COVID தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் இந்தியாவில் தொடங்கவுள்ளது?

அ) 2021 மார்ச் 01

ஆ) 2021 மார்ச் 15

இ) 2021 ஏப்ரல் 01

ஈ) 2021 ஜூன் 01

  • COVID-19 நோய்க்கான இரண்டாம் சுற்று தடுப்பூசி செலுத்துதலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது, 2021 மார்ச்.1 முதல் தொடங்க உள்ளது. இச்சுற்று, 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை உடையவர்களையும் இல -க்காகக்கொண்டுள்ளது. பயனாளிகள் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும், தனி -யார் மையங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

3. முதலாவது ‘இந்திய புரத நாள்’ கொண்டாடப்பட்ட ஆண்டு எது?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 1990

  • தேசிய அளவிலான பொதுநல முன்னெடுப்பான ‘Right to Protein’ இந்தி -யாவின் முதல் ‘புரத நாளை’ 2020 பிப்.27 அன்று அறிமுகப்படுத்தியது. புரதத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து -வதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “Powering with Plant Protein” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

4. “உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை – State of Schoolfeeding Worldwide” என்றவொரு அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) FAO

ஆ) IUCN

இ) UN – WFP

ஈ) WTO

  • “உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை” என்ற பெயரிலான ஓர் அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை – உலக உணவுத்திட்டம் (WFP) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, முதன்முதலில் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, பள்ளி அடிப்படையிலான ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

5. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, டிஜிட்டல் தளங்கள், எத்தனை மணிநேரத்திற்குள் தேவையான தகவல்களை வழங்க வேண்டும்?

அ) 12 மணி நேரம்

ஆ) 24 மணி நேரம்

இ) 48 மணி நேரம்

ஈ) 72 மணி நேரம்

  • தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள் – 2021 அண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்த விதிகளின்கீழ், வாட்ஸப்போன்ற தளங்கள் அங்கீகரிக்கப்பட்ட முக -வர் நிறுவனங்களுக்கு அடையாள சரிபார்ப்புகுறித்த தகவல்களை 72 மணிநேரத்திற்குள் வழங்கவேண்டும். சட்டத்துக்குப் புறம்பான செய்திக -ளை பதிபவர்களை புகாரளிப்பதற்காக குறைதீர்க்கும் பொறிமுறையை அமைக்கவேண்டும் எனவும் இவ்விதிகளில் உள்ளது.

6. நகர புத்தாக்க பரிவர்த்தனை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) கல்வி அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் நகர புத்தாக்க பரிமாற்ற (City Innovation Exchange) என்றவொரு தளத்தை தொடங்கியுள்ளது.
  • நகரங்களில் காணப்படும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை வடி -வமைப்பதற்காக கல்வியாளர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கத்தை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தளத்தில், நானூற்றுக்கும் மேற்பட்ட துளிர் நிறுவனங்கள், 100 சீர்மிகு நகரங்கள், 150’க்கும் மேற்பட்ட சவால் அறிக்கைகள் மற்றும் 215’ க்கும் மேற்பட்ட தீர்வுகள் வெளியிடப்பட்டன.

7. மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையின் அண்மைய கணிப்பின்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -யின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?

அ) 7.5 சதவீதம்

ஆ) 9.5 சதவீதம்

இ) 13.5 சதவீதம்

ஈ) 15 சதவீதம்

  • உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் 2021-22 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 13.5 சதவீதமாக திருத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 6.2 சதவீதமாக இருக்கும். மூடிஸ், இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை Baa3’இல் தக்கவைத்துள்ளது. அது, மிகக்குறைந்த முதலீட்டு தரமாகும். மேலும், அது எதிர்மறையான கண்ணோட்டத்தைக்குறிக்கிறது.
  • இந்திய மதிப்பீட்டு நிறுவனமான ICRA, 2021-22ஆம் நிதியாண்டில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 10.5 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று அறிவித்தது.

8. தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், எத்தனை தளங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது?

அ) 8

ஆ) 12

இ) 15

ஈ) 16

  • தூய்மைமிகு சிறப்புவாய்ந்த இடங்கள் (SIP) முன்முயற்சியின் நான்காம் கட்டத்தின்கீழ், 12 சிறப்புவாய்ந்த தளங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது. SIP என்பது தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம் (SBM-G) இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
  • இம்முயற்சி, தளங்களிலும் அதனைச்சுற்றியுள்ள இடங்களிலும் தூய்மை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகமானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக -ம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் மாநில / யூடி அரசாங்கங்களுடன் இதற்காக ஒருங்கிணைந்துள்ளது.

9. விரைவில் இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ள செய்தியனுப்பும் தளத்தின் பெயர் என்ன?

அ) Secure Application for Internet

ஆ) Safe Messaging Service

இ) Secure Instant Messaging

ஈ) Safe Communication Network

  • இந்திய இராணுவத்தளபதி M M நரவனேவின் அண்மைய அறிக்கையி -ன்படி, இந்திய ராணுவம் தனது உள்ளக தொடர்புகளுக்கு SAI (Secure Application for Internet) என்ற செய்தி பரிமாற்ற தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கவுள்ளது. கர்னல் சாய் சங்கர் உருவாக்கிய இந்தச் செயலி, இணைய பாதுகாப்பு & தரவு சோதனை ஆகியவற்றுக்கான அனுமதி பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தச் செயலி பயன்படுத்தப்படும்.

10. கிருஷ்ணதேவராயனின் இறப்புகுறித்த முதல் கல்வெட்டுக்குறிப் -பை, ASI, பின்வரும் எவ்விடத்தில் கண்டுபிடித்தது?

அ) ஆக்ரா

ஆ) மதுரா

இ) தும்கூர்

ஈ) கிருஷ்ணகிரி

  • அண்மையில், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) உறுப்பினர்கள் கிருஷ்ணதேவராய நாயக்கனின் இறப்பு குறித்த முதல் கல்வெட்டுக் குறிப்பை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணதேவராய நாயக்கன் விஜயந -கர பேரரசின் பேரரசராக இருந்து பொ ஆ 1509-1529 வரை ஆண்டார். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் ஹொன்னேஹள்ளியில் உள்ள கோபாலகிருஷ்ணா கோவிலுக்கு அருகே இக்கல்வெட்டு காணப்பட்டது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

1. மரபு சாரா எரிசக்தியின் மற்றொரு வடிவமாக, சர்க்கரை ஆலைகளில் கரும்பில் இருந்து சாறு எடுத்த பிறகு மிச்சமிருக்கும் கரும்புச் சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 18 சர்க்கரை ஆலைகளில் சுமார் 41.10 கோடி வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐசிஏஐ) தென்மண்டல தலைவராக கோவையை சேர்ந்த ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்றார். ஐசிஏஐ-யின் தென்மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்கள், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

3. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக மன்பிரீத் வோஹ்ரா நியமனம். இந்தியாவிற்க்கான, மெக்சிகோ துாதராக பணியாற்றி வருபவர் மன்பிரீத் வோஹ்ரா. ஐ.எப்.எஸ்., (IFS) எனப்படும் இந்திய வெளியுறவு சேவைகள் பிரிவின், 1988ம் ஆண்டு அதிகாரியான இவரை, ஆஸ்திரேலியாவுக்கான துாதராக நியமனம் செய்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

4. சப்-ஜூனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றாா்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சாயாலி 11-8, 7-11, 14-12, 5-11, 8-11, 11-7, 12-10 என்ற செட்களில் ஹரியாணா வீராங்கனை சுஹானா சைனியை வீழ்த்தினாா். சாயாலிக்கு சாம்பியன் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.33,000, சுஹானாவுக்கு ரன்னா்-அப் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.16,500 வழங்கப்பட்டது.அதேபோல், கேடட் பிரிவில் தமிழக வீராங்கனை எம். ஹன்சினி 11-6, 8-11, 11-5, 9-11, 11-5, 11-9 என்ற செட்களில் சக மாநிலத்தவரான அனன்யா முரளீதரனை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

5. பிரான்சில் நடைபெற்ற மாண்ட்பெலியர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆனா பெல்ஜிய வீரர் டேவிட் காஃபின். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஷ்டா அகுட்டை வீழ்த்தினார். பெல்ஜிய வீரர் டேவிட் காஃபினுக்கு ஒட்டுமொத்தமாக இது 5 ஆவது ஏடிபி பட்டமாகும்.

6. இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் – இலங்கை அரசு ஒப்புதல்.

இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. (கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா, ஜப்பானுக்கு வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.) இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை மாா்ச் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இவ்வாறு மேம்படுத்தப்படும் முனையம், வரையறுக்கப்பட்ட அரசு-தனியாா் கூட்டு நிறுவனமாகச் செயல்படும்.அமைச்சரவையின் ஒப்புதல் நகல், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதானி குழுமம் செயல்படுவதற்கு இந்திய தூதரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அந்த முனையத்தை கூட்டு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு இயக்கும்.முன்னதாக, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்த இலங்கை துறைமுக ஆணையம் கடந்த 2019-இல் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. முந்தைய அதிபா் மைத்ரிபாலா சிறீசேனா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இலங்கை துறைமுக ஆணையத்தில் இந்தியா, ஜப்பானில் இருந்து 49 சதவீத முதலீடுகள் வருவதற்கு அந்த சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிரதமா் மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.”

7. ‘புதிய கட்சியைப் பதிவு செய்ய 7 நாள் போதும்’ – இந்தியத் தேர்தல் ஆணையம்!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (02/03/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதிய கட்சியைப் பதிவு செய்ய 30 நாட்கள் தேவை என்ற அவகாசம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் இந்தப் புதிய அறிவிப்பு பொருந்தும். தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடக் கட்சிகள் இனி 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கட்சித் தொடங்குவது பற்றி இரண்டு தேசிய தினசரி நாளிதழ்கள் மற்றும் இரண்டு பிராந்திய மொழிகளின் தினசரி நாளிதழ்களில் விளம்பரம் அளித்து அதைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கரோனாவால் கட்சிகளைப் பதிவு செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்ததால், சலுகை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பு: பொதுவாக ஒருவர் கட்சி தொடங்குகிறார் என்றால் அது தொடர்பான அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் மற்றொரு உள்ளூர் மொழி என இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறை உள்ளது. பின்னர் அதுதொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து பொது வெளியில் அறிவிப்பு ஒன்றினை வெளியிடுவார்கள். அதற்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது.

8. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடி பேரை கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

32 வயதான விராட் கோலி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் நபர் ஆவார். ஐசிசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், “இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி” எனத் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் 4-வது விளையாட்டு வீரர் விராட் கோலி ஆவார். இந்த வகையில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 26.5 கோடி பேரும், மெஸ்ஸியை 18.6 கோடி பேரும், நெய்மரை 14.7 கோடி பேரும் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஹாலிவுட் நடிகரும் முன்னாள் மல்யுத்த வீரருமான டுவைன் (தி ராக்) ஜான்சன், அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் பியோனஸ் மற்றும் அரியானா கிராண்டே ஆகியோரை தலா 10 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

9. சிட்ரன் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ‘லா மேசன் சிட்ரன்’ என்ற பெயரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.

10. நாட்டிலுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இந்திய கடல்சாா் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை (02.03.2021) நடைபெற்றது. அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது: கடல்சாா் பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. கடல்சாா் துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கடல்சாா் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, சீா்திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்டவற்றின் வாயிலாக நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து, சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு மலிவானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 23 உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். நீா்வழிப் போக்குவரத்தில் தொழில்நுட்ப வசதிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். நீா்வழிப் போக்குவரத்து மூலமாக வங்கதேசம், பூடான், மியான்மா் நாடுகளையும் தொடா்பு கொள்வதற்கு ஆராயப்பட்டு வருகிறது. தனியாா் துறை பங்களிப்பு அவசியம்: கடல்சாா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. சாகா்மாலா திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் 574 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். துறைமுகங்கள் மேம்பாட்டில் தனியாா் துறை அதிக அளவில் பங்களிக்க வேண்டும்.ரூ.2.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் 400 திட்டங்கள் செயல்பாட்டுக்குத் தயாா்நிலையில் உள்ளன. அவற்றில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை அளிக்க வேண்டும். நாட்டின் துறைமுகங்களில் சா்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டமைப்பு வசதிகள்: கடல் விமானங்களின் செயல்பாட்டுக்காக 16 இடங்களில் ஓடுபாதைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 5 தேசிய உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து வழித்தடத்தில் படகு முனையத்துக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள 189 இடங்களில் 78 பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகள் பெரும் பலனடையும். தீவுகளை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்த எரிசக்திக்கு முக்கியத்துவம்: நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் சூரிய ஆற்றல் மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் துறைமுகங்களின் எரிசக்தி பயன்பாட்டில் 60 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வா்த்தக மையங்கள்: கடல்சாா் விவகாரத்தில் இந்தியா சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. நாட்டின் கடற்கரைகளில் நாகரிகங்கள் வளா்ச்சி கண்டன. ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு நாட்டின் துறைமுகங்கள் முக்கிய வா்த்தக மையங்களாக விளங்கின. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா.

11. தமிழக பசுமை இயக்கத் தலைவர் ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம் (76) உடல்நலக் குறைவால் (மார்ச்சு 2) காலமானார்.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கச் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் ஈரோடு வெ.ஜீவானந்தம். இவரது தந்தை வெங்கடாசலம் சுதந்திரப் போராட்ட வீரர். திருச்சியில் பட்டப் படிப்பை முடித்த ஜீவானந்தம், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியையும், சென்னையில் மயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டமும் பெற்றவர். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செயல்பட்டவர். குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில்,கூட்டுறவு முறை மருத்துவமனையை ஈரோட்டில் தொடங்கக்காரணமாக இருந்தவர்.

12. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம்: இந்தியா ஆதரவு அளிக்குமென இலங்கை நம்பிக்கை.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் இறுதி தீர்மானத்தில் இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விரைவில் இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசு செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெகிலிய ராம்புகவெல கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, அதற்கு இந்தியா ஆதரவளிக்காது என்று நம்புகிறோம். இலங்கை யல் தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவாக உணர்கிறோம். இது மிகவும் அர்த்தமிக்க நிலைப்பாடு. இலங்கைக்கு அநீதி இழைக்கப்படுவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. ஏனெனில், இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளோம். ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். முன்னதாக, இந்தத் தீர்மானம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசிய இந்தியாவின் நிரந்தரத் தூதர் இந்திரா மணி பாண்டே, இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இலங்கை உறுதியான முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறோம். இலங்கை அரசியல்சாசன சட்டத்தின் 13 ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.

13. இனிமேல் தனித்தனியாக கிடையாது நாடாளுமன்றத்துக்கு ஒரே சேனல் சன்சாத்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப, ‘சன்சாத்’ என்ற ஒரே சேனல் தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவும், மாநிலங்களவை நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தனித்தனி சேனல்கள் உள்ளன. இவை 2ம் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு. ‘சன்சாத்’ என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலங்களவை தலைவரும், மக்களவை சபாநாயகரும் இணைந்து எடுத்த முடிவின்படி, ராஜ்யசபா மற்றும் லோக் சபா தொலைக்காட்சியை ஒருங்கிணைத்து ‘சன்சாத்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் ஒப்பந்த அடிப்படையில் ஓரு ஆண்டுக்கு நியமனம் செய்யப்படுகிறார்,’ என கூறப்பட்டுள்ளது.

14. தேர்தல் பணி அனுமதிக்கு ‘மொபைல் ஆப்’

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு விரைவாக அனுமதி வழங்க ஏதுவாக, ‘என்கோர்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பிரசார கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது; பிரசார வாகனத்துக்கு அனுமதி பெறுவது போன்ற பணிகளுக்கு, ‘சுவிதா’ என்ற செயலி வெளியிடப்பட்டது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது. அதிலிருந்து குறைபாடுகளை நீக்கி, ‘அப்டேட்’ செய்யப்பட்ட ‘என்கோர்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசியல் கட்சியினர், அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலர், மற்ற அதிகாரிகளிடம் அனுப்பி, தனித்தனியாக பரிந்துரைகளை கேட்டுப்பெற வேண்டிய நிலை இருந்தது. கூடுதல் கால விரயம் ஏற்பட்ட நிலையை மாற்றி, ‘என்கோர்’ என்ற ‘அப்டேட்’ செய்யப்பட்ட புதிய செயலி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம், நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரிக்கு சென்றுவிடும். அவர்கள் உடனுக்குடன் பரிந்துரை செய்தால், அடுத்த, 24 மணி நேரத்திற்குள், தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், ‘அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர், பிரசார கூட்டம், பொதுக்கூட்டம், வாகன அனுமதி உட்பட பல தேவைகளுக்கு, இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள், ‘என்கோர்’ செயலி வாயிலாக, 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது’ என்றனர்.இதற்கான, இணைய தள முகவரி: suvidha.eci.gov.in.

15. பங்கு வெளியீட்டில் ‘அனுபம் ரசாயன்’

‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. சூரத்தை சேர்ந்த, ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், சிறப்பு வகை ரசாயனங்களை தயாரித்து வருகிறது. முதலில் பாரம்பரிய ரசாயனப் பொருட்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் இப்போது சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, 6 தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம், 760 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, கடந்த டிசம்பர் மாதத்தில் விண்ணப்பித்திருந்தது.பரிசீலனைக்குப் பிறகு, இப்போது, செபி அனுமதி வழங்கி இருக்கிறது.

16. எண்ணெய், எரிவாயு சேமிப்பு விழிப்புணர்வு – தமிழகத்துக்கு தேசிய அளவில் விருது.

எண்ணெய், எரிவாயு சேமிப்புகுறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய செயல் திறன் விருது கிடைத்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2020-ம் ஆண்டு, ‘சக்ஷம்’ என்றபெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின. இதில், எரிபொருள் சிக்கனம் குறித்து கடந்த ஆண்டில் அதிகஅளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் விருதைப் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், இந்த விருதுக்கான பாராட்டுப் பத்திரம், சான்றிதழை தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனிடம், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர்பி.ஜெயதேவன் அண்மையில் வழங்கினார்.

17. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 9 ன் கீழ் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உள்ளது.

18. தமிழ்நாடு உருது அகாடமி துணை தலைவராக – முஹம்மத் நயீமுர் ரஹ்மான் நியமனம்.

தமிழக அரசின் உயர்கல்வி துறை சார்பில் தமிழ்நாடு உருது அகாடமி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அகாடமியின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இருப்பார். துணைத்தலைவராக டாக்டர் முஹம்மத்நயீமுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

19. அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக சுற்றுப்புற 5 கி.மீ. தொலைவுக்கு வரும் 14 கிராமங்களை நிலா கமிட்டி வரையறை செய்துள்ளது. பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி உறுப்பினர் செயலர், மாவட்ட பதிவாளருக்கு அரசாணையை இணைத்து கடிதம் வழங்கினார். நிலா கமிட்டியின் உத்தரவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக `நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் பாதிக்கப்படும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து குன்னத்தூர் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

20. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் மேரிகோமுக்கு கவுரவ பதவி

சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் தலைவராக 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவரும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியவருமான 37 வயது இந்திய வீராங்கனை மேரிகோம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சர்வதேச குத்துச்சண்டை சங்க இயக்குனர்கள் இ-மெயில் மூலம் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மேரிகோமுக்கு இந்த கவுரவ பதவி கிடைத்து இருக்கிறது. சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் கிரெம்லிவ்

21. இந்தியாவில் ஊடக சுதந்திரம், போராட்டக்காரர்களின் பாதுக்காப்பு பற்றி – பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு

இந்தியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரிட் டன் நாடாளுமன்றத்தில் அடுத்த வார திங்கள்கிழமை (மார்ச் 8) விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதைத் தொடர்ந்து இந்த விவாதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மனுக்கள் குழு புதன்கிழமை தெரிவித்தது. மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து 3 மாதங்களைக் கடந்து போராடி வருகின்றனர். அரசுடன் நடைபெற்ற பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல, பிரிட்டனைச் சேர்ந்த சில நாடா ளுமன்ற உறுப்பினர்கள், ‘விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்று மாறு இந்திய அரசை பிரிட்டன் வலியுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

22. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பரஸ்பர நன்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர பரிமாற்ற அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படையை நிறுவுவதே இந்த ஒப்பந்தத்தின் அம்சம் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளன. இதேபோல் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 5 வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு பிரான்ஸுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் முக்கியப் பங்களிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிஜியுடன் ஒப்பந்தம்: வேளாண் விவகாரங்கள் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஃபிஜியுடன் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-ஃபிஜி நாடுகளின் வேளாண் அமைச்சகங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களும் வேளாண் துறை சாா்ந்த விவகாரங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் வழிவகுக்கிறது. ஆராய்ச்சியாளா்கள், நிபுணா்களைப் பகிா்ந்து கொள்வது, வேளாண் துறை சாா்ந்த தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்வது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வழிவகை ஏற்பட்டுள்ளது.

கூட்டு செயற்குழு: வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஃபிஜியும் இணைந்து செயல்படும். வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும்.வேளாண் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்களை முன்மொழிவதற்கு கூட்டு செயற்குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தி உரிய பரிந்துரைகளை வழங்கும்.ஃபிஜியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினத்திலிருந்து 5 ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை: சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவது தொடா்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சணலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.4,225 அளிக்கப்பட்டு வருகிறது.

23. பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சஷஸ்திர சீமா பல் (சசசுத்திர சீமா பல்) (Sashastra Seema Bal SSB) (எஸ்எஸ்பி) படைப் பிரிவில் 13,000 வீரா்களுடன் புதிதாக 12 குழுக்களை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து எஸ்எஸ்பி தலைமை இயக்குநா் குமாா் ராஜேஷ் சந்திரா, பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டிலும் 3 குழுக்கள் வீதம், அடுத்த 4 ஆண்டுகளில் 12 குழுக்கள் சோ்க்கப்படும். எஸ்எஸ்பி படைப்பிரிவில் புதிய குழுக்களை நியமிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருப்பது பேருதவியாக உள்ளது. படைப் பிரிவுகளுக்கு புதிதாக வீரா்களை நியமிப்பதால், எல்லைப் பாதுகாப்பு மேலும் வலுப்படும். புதிதாக நியமிக்கப்படும் படைக் குழுக்கள், நேபாள எல்லையிலும், பூடான் எல்லையிலும், இவ்விரு நாடுகளும் இந்தியாவுடன் சங்கமிக்கும் சிக்கிம் எல்லையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா். இந்தியாவின் எல்லையில், 1,751 கி.மீ. தொலைவை நேபாளமும், 699 கி.மீ. தொலைவை பூடானும் பகிா்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதிகளில் எஸ்எஸ்பி படைப் பிரிவைச் சோ்ந்த 90,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

24. மேற்குத் தொடர்ச்சி மலையில் 5 புதிய இன தவளைகள் கண்டுபிடிப்பு.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிய இனங்களைச் சார்ந்த 5 புதர் தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மின்னசோடா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தவளைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளாக அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், புதிய இனங்களைச் சேர்ந்த 5 புதர் தவளைகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வெளிப்புற உடலமைப்பு, மரபணு (டிஎன்ஏ), ஒலியெழுப்புதல், நடத்தை உள்ளிட்டவற்றில் அத்தவளைகள் வேறுபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் ஆய்விதழிலில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இடுக்கி, பாலக்காடு, காக்கயம் அணை, அகஸ்தியர் மலை, ஆனைமலை ஆகிய பகு திகளில் புதிய இன புதர் தவளைகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கண்டறியப்பட்டுள்ள புதர் தவளைகளில் 80 சதவீதம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான இனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

1. Which country has assumed the chairship of BRICS for the year 2021?

A) India

B) China

C) Brazil

D) Russia

  • For the year 2021, the chairmanship of BRICS is vested with India. India has commenced its chairship with the inauguration of 3–day–long Sherpas’ meeting. The meeting was chaired by Secretary (CPV & OIA) of Ministry of External Affairs. During the meet, India introduced to the member countries its themes and priorities for the year 2021.

2. From which date, the 2nd phase of COVID vaccination is set to commence in India?

A) 2021 March 01

B) 2021 March 15

C) 2021 April 01

D) 2021 June 01

  • The Government of India has given a nod for 2nd round of vaccination for the COVID–19 disease and it is set to commence from March 1st 2021. This phase of vaccination is targeted at people above the age of 60 years and those above 45 years old. The beneficiaries can get themselves vaccinated in any govt hospital free of cost as well as at private clinics.

3. The first ‘India Protein Day’ is celebrated on which year?

A) 2019

B) 2020

C) 2021

D) 1990

  • A national–level public health initiative, ‘Right to Protein’ has launched India’s first ‘Protein Day’ on February 27, 2020. The day is observed to raise awareness about the nutritional benefits of protein. This year, the theme of the day is selected as “Powering with Plant Protein”.

4. Which organisation publishes the “State of School Feeding Worldwide” Report?

A) FAO

B) IUCN

C) UN – WFP

D) WTO

  • The “State of School Feeding Worldwide” is published by the United Nations – World Food Programme (WFP). It was first published in the year 2013 and the most report has been published for the year 2020. This report provides a detailed analysis on the implementation and coverage of school based nutritional programmes.

5. As per the new Information Technology Rules, digital platforms will have to provide required information within how many hours?

A) 12 hours

B) 24 hours

C) 48 hours

D) 72 hours

  • The Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021 has been framed recently, which was released by the Electronics and IT Ministry. Under the rules, platforms such as WhatsApp will have to provide information on identity verification to the authorised agencies within 72 hours.
  • The originator of unlawful messages would be zeroed on and the platforms will have to set up grievance redressal mechanism.

6. Which Union Ministry has launched the City Innovation Exchange (CiX) platform?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Electronics and IT

D) Ministry of Education

  • Ministry of Housing and Urban Affairs has recently launched the City Innovation Exchange (CiX) platform. The platform aims to bring together academia, businesses, and the government to design innovative solutions for the challenges of the cities. The platform has over 400 start–ups, 100 smart cities, more than 150 challenge statements and over 215 solutions when it was launched.

7. As per the recent forecast by the Moody’s investor service, what would be GDP growth rate of India in 2021–22?

A) 7.5 percent

B) 9.5 percent

C) 13.5 percent

D) 15 percent

  • Global rating agency Moody’s revised India’s 2021–22 GDP growth forecast to 13.5 per cent. The country’s growth will moderate to 6.2 per cent in the following year.
  • Moody’s also retained India’s sovereign rating at Baa3, the lowest investment grade, with a negative outlook. Indian ratings agency ICRA announced that India’s real GDP will grow 10.5 per cent in FY22.

8. Ministry of Jal Shakti has selected how many sites under Phase 4 of the Swachh Iconic Places (SIP) initiative?

A) 8

B) 12

C) 15

D) 16

  • The Department of Drinking Water and Sanitation (DDWS), Ministry of Jal Shakti has announced that it has selected 12 iconic sites under Phase 4 of the Swachh Iconic Places (SIP) initiative.
  • SIP is an initiative of Swachh Bharat Mission Grameen (SBM–G), which aims to improve the sanitation and cleanliness standards at and around the sites. Ministry of Jal Shakti coordinates with the Ministry of Housing and Urban Affairs, Ministry of Tourism, Ministry of Culture and the State/UT governments.

9. What is the name of the messaging platform to be used by the Indian Army shortly?

A) Secure Application for Internet

B) Safe Messaging Service

C) Secure Instant Messaging

D) Safe Communication Network

  • As per the recent statement of the Indian Army chief General MMNaravane, the Indian Army is set to start using a messaging platform called SAI (Secure Application for Internet), for internal communications.
  • The application, which was developed by Colonel Sai Shankar, is undergoing the process of obtaining cybersecurity clearance and data testing. After getting clearance, the platform will be used from April 1, this year.

10. In which place, ASI has discovered the first epigraphical reference to the death of Krishnadevaraya Nayaka?

A) Agra

B) Mathura

C) Tumkur

D) Krishnagiri

  • Recently, members of the Archaeological Survey of India (ASI) have discovered the first epigraphical to the death of Krishnadevaraya Nayaka. Krishnadevaraya Nayaka was the emperor of Vijayanagara empire and ruled the kingdom from 1509–1529 AD.
  • The epigraphical reference was found near Gopalakrishna temple at Honnenahalli of Tumkur district in Karnataka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!