4th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சர்தார் படேல் விலங்கியல் பூங்கா’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. குஜராத்

இ. உத்தர பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் ‘ஜங்கிள் சபாரி’ என அழைக்கப்படும் சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த விலங்கியல் பூங்கா, ‘ஒற்றுமை சிலை’க்கு மிகவருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஆரோக்கிய வனம்’ என்ற ஒன்றையும் பிரதமர் திறந்து வைத்தார். சுமார் நானூறு வகையான தாவரம் மற்றும் மர வகைகளை இது கொண்டுள்ளது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு ஆணையக் கூட்டத்துடன் தொடர்புடையது?

அ. ஜப்பான்

ஆ. மெக்ஸிகோ

இ. பிரேசில்

ஈ. ஐக்கியப் பேரரசு

 • 8ஆவது இந்திய-மெக்ஸிகோ கூட்டு ஆணையக் கூட்டமானது அண்மையில் காணொலிக்காட்சிமூலம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு இந்திய வெளியறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் மெக்ஸிக பிரதிநிதி மார்செலோ எப்ரார்ட்டும் தலைமைதாங்கினர். இருநாடுகளும், பொருளாதார ஆற்றலை ஊக்குவிக்கவும், அவர்களின், ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’யை வலுப்படுத்தவும் அப்போது ஒப்புக்கொண்டன.

3. QCI’உடன் இணைந்து, உட்கட்டமைப்புத்துறைக்கு, ‘தேசிய திட்டம் & திட்ட மேலாண்மைக் கொள்கை கட்டமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. நிதி ஆணையம்

ஆ. NITI ஆயோக்

இ. தேசிய வளர்ச்சிக் கழகம்

ஈ. உலக வர்த்தக அமைப்பு

 • இந்தியாவின் உட்கட்டமைப்புத்துறையில் தீவிர சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் NITI ஆயோக், இந்திய தரக்கவுன்சில் ஆகியவை இணைந்து தேசிய திட்டம் மற்றும் திட்ட மேலாண்மைக் கொள்கை கட்டமைப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
 • மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு, குறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய திட்ட நடைமுறை மற்றும் திட்டமேலாண்மைக்கான ‘இந்திய உட்கட் -டமைப்பு அறிவுசார் முறை’ என்ற நூலை வெளியிட்டார்.

4. வழக்குரைஞர்கட்கு காப்பீடு வழங்குவதற்காக `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தில்லி

இ. கர்நாடகா

ஈ. கேரளம்

 • தேசிய தலைநகரத்தில் வசிக்கும் வழக்குரைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக தில்லி அமைச்சரவை, `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் வழக்குரைஞர்கள் நலத்திட்டத்தின்கீழ், `5 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் `10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. வழக்குரைஞர்களின் நலனுக்காக இந்நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைக்க, 13 பேர் கொண்ட குழு இராகேஷ் குமார் கன்னா தலைமையில் அமைக்கப்பட்டது.

5. எந்தத் தயாரிப்பின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கு BIS குறியீட்டை அரசு கட்டாயமாக்கியுள்ளது?

அ. மடிக்கணினிகள்

ஆ. அலைபேசிகள்

இ. தோல் பாதணிகள்

ஈ. கைக்கடிகாரங்கள்

 • BIS குறியீடற்ற எந்தவொரு தோல் பாதணிகளையும் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வணிகம் செய்யவோ, இறக்குமதி செய்யவோ (அ) சேமித்து வைக்கவோ முடியாது என இந்திய அரசு அறிவித்து உள்ளது. தொழிற்துறை & உள்நாட்டு வணிகத்தை ஊக்கப்படுத்துவதற்கான துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்தியாவில் மலிவான தோல் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. கீழ்க்காண்பனவற்றுள் அண்மையில் கப்பல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு மசோதா எது?

அ. கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா

ஆ. வழிசெலுத்தலுக்கு உதவும் மசோதா

இ. முதன்மை துறைமுக அதிகாரிகள் மசோதா

ஈ. தேசிய நீர்வழித்தடங்கள் மசோதா

 • கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா -2020’க்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
 • கப்பல் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துக்களை அனுப்பலாம்.

7. “SERB POWER” திட்டமானது அரசாங்கத்தால் எந்தப் பிரிவை இலக்காகக்கொண்டு தொடங்கப்பட்டது?

அ. சுயவுதவிக் குழுக்கள்

ஆ. தெருவோர வியாபாரிகள்

இ. உழவர்கள்

ஈ. பெண் அறிவியலாளர்கள்

 • அறிவியல் & தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதற்கு பெண் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட SERB POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) திட்டத்தை அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்திய அரசின் அறிவியல் & தொழினுட்பத்துறையின் சட்டரீதியான அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ANTRIX கழகம் என்பது எவ்வமைப்பின் வணிகப் பிரிவாகும்?

அ. DRDO

ஆ. ISRO

இ. BHEL

ஈ. HAL

 • ANRIX கார்ப்பரேஷன் என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) வணிகப்பிரிவாகும். இது விண்வெளித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. 2005ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்காக பெங்களூரைச் சார்ந்த துளிர் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவிற்கு $1.2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் ANTRIX கார்ப்பரேஷனிடம் கோரியுள்ளது.

9. T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் யார்?

அ. விராட் கோலி

ஆ. கிறிஸ் கெய்ல்

இ. ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஈ. ஈயோன் மோர்கன்

 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெய்ல், சமீபத்தில் T20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச்சாதனையை புரிந்தார். 690 சிக்ஸர்களை அடித்த கீரோன் பொல்லார்ட் இப்பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். IPL 2020’இன் தற்போதைய பதிப்பில், கிறிஸ் கெய்ல், இதுவரை மொத்தம் 276 ரன்கள் எடுத்துள்ளார்.

10. மங்களூரு வானூர்தி நிலையத்தை ஐம்பதாண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள குழுமம் எது?

அ. ரிலையன்ஸ் குழுமம்

ஆ. GMR உட்கட்டமைப்பு நிறுவனம்

இ. அதானி குழுமம்

ஈ. GVK ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம்

 • அண்மையில், அதானி குழுமமானது மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கைப்பற்றியது. PPP முறைமூலம் மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய மூன்று வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகள், மேலாண்மை & மேம்பாட்டுக்கான சலுகை ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டன.

1. Sardar Patel Zoological Park, which was seen in news recently, is located in which state?

[A] Bihar

[B] Gujarat

[C] Uttar Pradesh

[D] Karnataka

 • Prime Minister Narendra Modi has recently inaugurated Sardar Patel Zoological Park known as Jungle Safari, in Kevadia, Narmada district of Gujarat. The Zoological Park, also known as Jungle Safari, has been set up near the Statue of Unity. The Prime Minister also inaugurated Arogya Van at Kevadia in Narmada district of Gujarat. It has around 400 species of plants and trees with rich medicinal values.

2. ‘Privileged Partnership’, which was seen in news recently, is associated in the Joint Commission Meeting between India and which country?

[A] Japan

[B] Mexico

[C] Brazil

[D] United Kingdom

 • The 8th India–Mexico Joint Commission Meeting was recently held through Video–Conference. The Meeting was co–chaired by External Affairs Minister S. Jaishankar and his Mexican counterpart Marcelo Ebrard. Both the countries agreed to promote economic strengths and work on strengthening their ‘Privileged Partnership’.

3. Which body has launched ‘National Program and Project Management Policy Framework’ for infrastructure sector, along with QCI?

[A] Finance Commission

[B] NITI Aayog

[C] National Development Council

[D] World Trade Organisation

 • NITI Aayog and Quality Council of India has recently launched the ‘National Program and Project Management Policy Framework’ (NPMPF). The report aims to bring radical reforms in the way infrastructure projects are executed in India. Union Road Transport Minister Nitin Gadkari also released the Indian Infrastructure Body of Knowledge (InBoK).

4. Which Indian state / UT has approved over Rs 40 crore to provide insurance to lawyers?

[A] Tamil Nadu

[B] Delhi

[C] Karnataka

[D] Kerala

 • The Delhi Cabinet has approved over Rs 40 crore to provide medical insurance to lawyers, who are residents of the national capital. Rs 5 lakh medical insurance and Rs 10 lakh life insurance are provided under the Chief Minister Advocates Welfare Scheme. A 13–member committee was set up headed by Rakesh Kumar Khanna, to recommend ways for utilisation of the fund for welfare of advocates.

5. Government has mandated BIS mark for production, sales, import and trade of which product?

[A] Laptops

[B] Mobile Phones

[C] Leather Footwear

[D] Wrist Watches

 • The Government of India has notified that that no leather footwear can be produced, sold, traded, imported or even stocked, unless they bear the BIS mark. The notification has been issued by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT). This move is aimed to contain import of cheaper leather products in India.

6. Which draft bill has been recently released by the Union Shipping Ministry?

[A] Coastal Shipping Bill

[B] Aids to Navigation Bill

[C] Major Port Authorities Bill

[D] National Waterways Bill

 • The draft Coastal Shipping Bill, 2020 has been issued by the Union Ministry of Shipping. The draft has been left open for suggestions from the stakeholders and general public. The draft bill is made available in the Shipping Ministry’s official website and would be available for suggestions till 6th November 2020.

7. “SERB POWER” scheme has been launched by the Government targeting which segment?

[A] Self Help Groups

[B] Street Vendors

[C] Farmers

[D] Women Scientists

 • A scheme named SERB POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) has been launched by the Ministry of Science and Technology, designed exclusively to encourage Women Scientists to work in the field of science and technology.
 • The Science and Engineering Research Board (SERB), a statutory body of the Department of Science and Technology (DST), Government of India is implementing the scheme.

8. Antrix Corporation, that was seen in news recently, is the commercial arm of which organisation?

[A] DRDO

[B] ISRO

[C] BHEL

[D] HAL

 • Antrix Corporation is the commercial arm of the Indian Space Research Organisation (ISRO). It functions under the administrative control of the Department of Space. Recently, a United States court has asked Antrix Corporation to pay compensation of USD 1.2 billion to a Bengaluru–based startup, Devas Multimedia, for cancelling a satellite deal in 2005.

9. Which cricketer has become the first batsman to hit 1000 sixes in T20 cricket?

[A] Virat Kohli

[B] Chris Gayle

[C] Andre Russell

[D] Eoin Morgan

 • Chris Gayle, who plays for Kings XI Punjab, has recently become the first batsman in history to hit 1000 sixes in T20 cricket. Kieron Pollard has hit 690 sixes and ranks second in the list of maximum sixes in T20 cricket. In the ongoing edition of IPL 2020, Gayle has scored a total of 276 runs from six outings.

10. Which group took charge of the Mangaluru airport on 50–year lease?

[A] Reliance Group

[B] GMR Infrastructure

[C] Adani Group

[D] GVK Power and Infrastructure

 • The Adani Group, has recently taken charge of the Mangaluru International Airport. It had earlier won the concession to operate, manage and develop the airport. The concession agreements for the operations, management and development of the three airports – Mangaluru, Ahmedabad and Lucknow through PPP mode were signed earlier this year, by the Ministry of Civil Aviation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *