Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

4th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. லாஸ்கர்-டிபேக்கி விருதுடன் தொடர்புடைய துறை எது?

அ) இலக்கியம்

ஆ) விளையாட்டு

இ) அறிவியல் 

ஈ) சமூக சேவை

  • மனித நலத்தை மேம்படுத்துதற்கு உதவிய உயிரியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் அறிவியலாளர்களை கௌரவிப்பதற்காக மேரி மற்றும் ஆல்பர்ட் லாஸ்கர் ஆகியோர் 1945ஆம் ஆண்டில் லாஸ்கர் விருதுகளை நிறுவினர். இந்த ஆண்டு, கேடலின் கரிகோ மற்றும் மருத்துவர் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இரு அறிவியலாளர்களுக்கு, COVID-19 mRNA தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தை உருவாக் -கியதற்காக $250,000 மதிப்பிலான லாஸ்கர்-டிபேக்கி மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா COVID-19 தடுப்பூசிகளில் அடிப்படைகளாக மெசஞ்சர் RNA (mRNA) பயன்படுத்தப்படுகிறது.

2. அண்மையில் 4 ஆண்டுகளை நிறைவு செய்த சௌபாக்கியா திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) எரிசக்தி அமைச்சகம் 

இ) விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • பிரதம அமைச்சர் சகஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா – சௌபாக்யா என்பது உலகின் மிகப்பெரிய வீட்டு மின்மயமாக்கல் திட்டங்களுள் ஒன்றாகும். இது பிரதமர் மோடியால் 2017 செப்டம்பர்.25 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை வீடுகளுக்கும் மின்-இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • சௌபாக்யா தொடங்கப்பட்டதிலிருந்து, 2021 மார்ச் வரை 2.82 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. அல்டிமேட் லடாக் சைக்கிள் ஓட்டுதல் சவாலின் இரண்டாவது பதிப்பை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு எது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை

இ) லடாக் காவல்துறை 

ஈ) இந்தியன் ஆயில்

  • விடுதலையின் அம்ருத் மகோத்சவம் மற்றும் பிட் இந்தியா இயக்கத்தின் ஒருபகுதியாக, அல்டிமேட் லடாக் மிதிவண்டி சவாலின் 2ஆவது பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியாவுடன் இணைந்து லடாக் காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

4. தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்த ரயில் நிலையம், முழுவதும் சூரிய ஆற்றலால் இயங்கும் ரயில் நிலையமாக மாறியுள்ளது?

அ) சென்னை சென்ட்ரல் 

ஆ) சேலம் சந்திப்பு

இ) விருத்தாசலம் சந்திப்பு

ஈ) திருநெல்வேலி சந்திப்பு

  • இந்திய இரயில்வேயின் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், முழு சூரிய சக்தியால் இயங்கும் தமிழ்நாட்டின் முதல் இரயில் நிலையமாக மாறியுள்ளது. இந்த நிலையம் அதன் அனைத்து ஆற்றல் தேவைகளையும், அதன் கூரையில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள்மூலம் பூர்த்திசெய்கிறது. இந்நிலையம், 1.5 MW உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.

5. ‘தேசிய கூட்டுறவு மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) வாரணாசி

ஈ) காந்தி நகர்

  • மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா, புது தில்லியில் நடைபெற்ற, ‘தேசிய கூட்டுறவு மாநாட்டில்’ (சேகரிதா சம்மேளன்) தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
  • மத்திய அரசு, விரைவில் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை அறிமுகப்ப -டுத்தி, கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் அறிவித்தார். கூட்டுறவு பொது சேவை மையங்கள், தேசிய தரவுத்தளம் மற்றும் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைப்பதில் தற்போது அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

6. QUAD தலைவர்களின் முதல் உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது?

அ) வாஷிங்டன் 

ஆ) தாவோஸ்

இ) மெல்போர்ன்

ஈ) புது தில்லி

  • QUAD தலைவர்களின் முதல் நேரடிச்சந்திப்பானது சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் வாஷிங்டன் டிசியில் நடத்தப்பெற்றது. இந்தச் சந்திப்புக்காக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிஹிட் சுகா ஆகியோர் அந்நகரத்திற்கு சென்றனர். 2017ஆம் ஆண்டில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், QUAD கூட்டணியை அமைத்தன.

7. 2021-உலக மருந்தாளுநர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Leaving No one behind

ஆ) Pharmacy: Always Trusted for Your Health 

இ) Pharmacists are our Saviours

ஈ) Sustainable Pharmacy

  • உலக மருந்தாளுநர் நாளானது மருந்தாளுநர்களின் பங்கை அங்கீகரிக் -கும் நோக்கில் செப்டம்பர்.25ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • இந்நாளை, சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு (FIP) நிறுவியது. 1912’இல் FIP நிறுவப்பட்டதும் இதே நாளில்தான். FIP என்பது மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து அறிவியலாளர்களின் தேசிய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். “Pharmacy: Always Trusted for Your Health” என்பது 2021 உலக மருந்தாளுநர் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. வங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சி தொடங்கப்பட்ட நாடு எது?

அ) இந்தியா

ஆ) வங்காளதேசம் 

இ) இலங்கை

ஈ) நேபாளம்

  • வங்கபந்து-பாபு டிஜிட்டல் கண்காட்சியானது சமீபத்தில் வங்கதேசத்தின் டாகாவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. வங்கதேசத்தின் தேசத்தின் தந்தையான வங்கபந்து ஷேக் முஜிபுர் இரஹ்மான் மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை இந்தக் கண்காட்சி காட்டுகிறது.
  • இக்கண்காட்சி, வங்கபந்து நூற்றாண்டு மற்றும் ‘மகாத்மா’ காந்தியின் 150 ஆண்டுகள் பிறந்தநாள் நிறைவு மற்றும் இந்தியா-வங்கதேச இருதரப்பு உறவுகளின் பொன்விழா ஆகியவற்றிய நினைவுகூரும் விதமாக இரு அரசுகளால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.

9. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘AUKUS’ என்ற பாதுகாப்பு கூட்டணி உள்ளடக்கிய நாடுகளின் எண்ணிக்கை என்ன?

அ) மூன்று 

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) பத்து

  • 2021 செப் மாதத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியான ‘AUKUS’ஐ அறிவித்தனர். இந்தியா அல்லது ஜப்பானை இம்முத்தரப்பு கூட்டணியில் சேர்ப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த கூட்டணி இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
  • இது, அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் முதல்முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலிய நாட்டுக்கு வழங்க அனுமதிக்கும்.

10. பன்னாட்டு துளிர்மையங்களின் தரவரிசையில், வளர்ந்துவரும் சூழலமைப்பில் முதலிடத்திலுள்ள இந்திய நகரம் எது?

அ) மும்பை 

ஆ) பெங்களூரு

இ) சென்னை

ஈ) திருவனந்தபுரம்

  • பன்னாட்டு துளிர்மையங்களின் தரவரிசையில், வளர்ந்துவரும் சூழல் அமைப்பில் மும்பை தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இத் தரவரிசை, ஸ்டார்ட்அப் ஜெனோமின் வருடாந்திர உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கை – 2021’க்காக தொகுக்கப்பட்டுள்ளது. லண்டன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நியூயார்க்குடன் இணைந்து 2ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டது.
  • உலக அளவில் பெங்களூரு 23ஆவது இடத்திலும், தில்லி 36ஆவது இடத்திலும் உள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு வெளியே ஒரு தொழில்நுட்ப துளிர்மையத்தை அமைப்பதற்கு இலண்டனைச் சிறந்த இடமாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் இஓஎஸ்-4 (ரிசாட்-1ஏ) மற்றும் இஓஎஸ்-6 (ஓசோன் சாட்-3) ஆகிய 2 செயற்கைக் கோள்களை PSLV ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல் சிறிய வகை ராக்கெட் (எஸ்எஸ்எல்வி) மூலமாக இஓஎஸ்-2 என்ற மைக்ரோசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக் கோளின் செயல்பாடு தகுதிகுறித்து பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 3 செயற்கைக் கோள்களும் விவசாயம், உள்நாட்டு விவகாரங்கள், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவை இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் உள்ளதா என எதிரிகளின் நடமாட்டத்தை கணித்துக் கூறும். பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்புக்கு பயன்படும்.

2. எண்ணிம சுகாதார அட்டை: புரிந்துகொள்வது எப்படி?

சமீபத்தில், ‘ஆயுஷ்மான் பாரத் எண்ணிம இயக்க’த்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன்படி, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ‘எண்ணிம சுகாதார அட்டை’ இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் இயக்கத்தின் நீட்சி இது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுகாதாரப் பதிவை எண்ணிம முறையில் பாதுகாக்கும் இப்புதுக்கருவியை எப்படிப் புரிந்துகொள்வது?

‘எண்ணிம சுகாதார அட்டை’யானது ஆதார் அட்டை போலவே தனித் தன்மை உடையது. பயனாளி இந்த அட்டையில் 14 இலக்க எண்ணைப் பெறுவார். இந்த எண், சுகாதாரத் துறையினருக்கு அவரை அடையாளம் காட்டும். இதில் அவருடைய உடல்நலம் தொடர்பான, உண்மையான தகவல்கள் பதிவுசெய்யப்படும்.

எந்த நோய்க்கு, எப்போது, எந்த மருத்துவமனையில், என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன, என்னென்ன மருந்துகள் வழங்கப்பட்டன, பிற உடல்நலப் பிரச்சினைகள் உண்டா என்பது போன்ற தகவல்கள் இதில் இருக்கும். இதன் மூலம், அவருடைய மருத்துவ வரலாற்றை முழுமையாக அறிய முடியும்.

இந்த அட்டையைக் கைபேசி எண் அல்லது ஆதார் எண் மூலம் உருவாக்கலாம். ndhm.gov.in எனும் இணையதளத்துக்குச் சென்று இதைப் பெற முடியும். இந்த அட்டையைச் சுயமாக உருவாக்க இயலாதவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் குடும்பநல மையம் அல்லது பதிவுபெற்ற சுகாதார அதிகாரி மூலமும் உருவாக்கிக்கொள்ளலாம்.

தகவல்களை உள்ளிடும் முறை

எண்ணிம சுகாதார அட்டையில், பயனாளியின் மருத்துவத் தகவல்களை உள்ளிடுவதற்கு, முதலில் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவகங்கள், மருத்துவர்கள் ஆகியோர் பதிவுசெய்யப்படுவார்கள். இதைத் தொடர்ந்து, பயனாளி ‘NDHM ஹெல்த் ரெக்கார்ட்ஸ் செயலியை’ப்பதிவிறக்கம் செய்ய வேண்டும். பயனாளியின் 14 இலக்க எண் மற்றும் கடவுச்சொல் மூலம் இதனுள் நுழையலாம்.

இந்தச் செயலியில் பயனாளி சிகிச்சை பெற்ற மருத்துவமனையை இணைத்தால், அங்குள்ள பயனாளியின் உடல்நலம் தொடர்பான தகவல்கள், அவரது கைபேசி செயலிக்கு வந்துவிடும். மருத்துவமனைக் -கான ‘QR’ குறியீட்டை ஸ்கேன் செய்தும் அந்தந்த மருத்துவமனையை இணைக்க முடியும்.

அடுத்தடுத்துப் பெறும் சிகிச்சை, நோயறிதல், சோதனை விவரங்கள், பிற தகவல்கள் ஆகியவற்றையும் இந்தச் செயலியில் உள்ளிடலாம். நாடெங்கிலும் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் எந்தவொரு மருத்துவமனையும் பயனாளியின் சுகாதார அட்டை மூலம், அவரது உடல்நலத் தகவல்களைப் பார்க்க முடியும். இதற்குப் பயனாளியின் ஒப்புதல் பெறுவது அவசியம். பயனாளி எப்போது வேண்டுமானாலும் சுகாதாரப் பதிவை நிறுத்தவோ நீக்கவோ முடியும். அவரது தகவல்கள் பகிரப்பட்ட விவரத்தையும் அறிய முடியும்.

என்னென்ன நன்மைகள்?

எண்ணிம சுகாதார அட்டையில் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், இதுவரை தனியொரு மருத்துவமனையில் அல்லது மருத்துவமனைக் குழுவில் மட்டுமே பதிவுசெய்யப்பட்ட பயனாளியின் சுகாதாரத் தகவல்களை இனிமேல் நாட்டின் எல்லா மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ள முடியும். பயனாளி முதல்முறையாக அதைப் பயன்படுத்திய பிறகு, மறுமுறை அதே மருத்துவரிடம் வந்தாலும், வேறு மருத்துவரிடம் சென்றாலும், முந்தைய சிகிச்சைகள், மருந்துச் சீட்டுகள் மற்றும் சோதனை விவரங்களை அவருடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்குச் சிகிச்சைக்குச் சென்றாலும், பயனாளியின் கடந்த கால சுகாதாரத் தகவல்களை இந்தத் தனித்துவமான அட்டை மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது எளிதாகும். மேலும், மருத்துவ ஆவணம் தொலைந்துவிட்டால் கவலையில்லை.

பழைய சோதனை அறிக்கைகள் இல்லையென்றால், எல்லாச் சோதனைகளையும் மறுபடியும் மேற்கொள்ள வேண்டியதில்லை. பிற நோயாளிகளின் ஒப்புதலுடன் பயனாளிக்குத் தெரிந்த ஒருவரின் உடல்நலப் பதிவுகளையும் அவருடைய அட்டையில் நிர்வகிக்கலாம். இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். காகிதத் தேவையைக் குறைக்கும். கோப்புகள் வைக்கும் இடம் சுருங்கிவிடும். போலி மருத்துவர்களை இனம்கண்டுவிடும். எதிர்காலத்தில் பொதுச் சுகாதார முன்னேற்றத்துக்குத் தேவையான முன்திட்ட வரைவைத் தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்வதும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதும் மேம்படும்.

பிரச்சினைகள் இல்லையா?

இந்த அட்டையின் தகவல் பாதுகாப்பு தொடர்பில் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்தான் முதல் பிரச்சினை. கடந்த காலத்தில் ஆதார் அட்டைத் தகவல்கள் திருடப்பட்ட நிகழ்வுகளை முன்வைத்து, நாட்டில் சைபர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றே வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். மேலும், ‘சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் திருடப்பட்ட சுகாதாரத் தகவல்கள் உதவலாம்.

தகவல்களைப் பதிவிடும்போது, மனிதத்தவறுகள் ஏற்படலாம்; தகவல்கள் விட்டுப்போகலாம்; வேண்டுமென்றே மாற்றப்படலாம். இவற்றைக் கண்காணிப்பது யார் என்ற கேள்விக்கு இதில் விடையில்லை. நோய் குறித்த இந்தப் பின்னணிகள், அந்த நபரின் நோயையும் சிகிச்சையையும் மாற்றிவிடலாம். இது அவரது உடல்நலனுக்கு ஆபத்தை வரவழைக்கலா -ம்’ என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில், ‘இந்தியாவில் தகவல் பாதுகாப்புக்கெனத் தனிச்சட்டம் இல்லை. ‘தகவல் பாதுகாப்பு மசோதா – 2019’ மட்டுமே உள்ளது. தனிச் சட்டம் இயற்றினால் மட்டுமே தகவல் தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு அபராதம் அல்லது தண்டனை வழங்க முடியும்’ என்கிறார் பிரபல இணையப் பாதுகாப்பு நிபுணர் பவன் துக்கல்.

அடுத்து, நாட்டில் கிராமப்புறம், கடலோரம் மற்றும் மலைவாழிடங்களில் திறன்பேசி மற்றும் இணைய வசதிகள் குறைவாகவே இருக்கும். அங்குள்ளவர்களுக்கு இந்த அட்டையின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் குறைவு. மொழி ஒரு தடையாக இருக்கும். இவை இத்திட்டத்துக்குப் பெரிய சவாலாக இருக்கும். எனவே, எண்ணிம சுகாதார அட்டையை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றால், கிராமம் தொடங்கி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இணையம் சார்ந்த மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

தகவல்களை உள்ளிடுபவர்கள் மற்றும் அவற்றைச் சரிபார்த்துக் கையாளும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். முன்திட்டமிடுதல் மூலம் சுகாதாரத் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கி, மாநிலங்களுக்குப் பகிர்வது முக்கியம். இந்த அட்டை, இந்திய சுகாதாரத் துறையை மேம்படுத்தும் புரட்சிகர இயக்க சக்தியாக இருக்கும் என்ற பிரதமரின் அறைகூவல் உண்மையாக வேண்டுமானால், இவை அனைத்தும் அவசியமான அடிப்படைகள்.

3. உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி புகழாரம்

உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான்கு மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. போலியோவை அறவே ஒழித்துள்ளது. பேறுகால உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது. இதேபோல குழந்தைகள் உயிரிழப்பையும் குறைத்திருக்கிறது. நான்காவதாக உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த மாபெரும் சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்.

கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பெருந்தொற்றால் சர்வதேச அளவில் காசநோய், தொற்று அல்லாதநோய்கள், குழந்தைகள் பராமரிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

எனவே வரும் மாதங்களில் எந்தெந்த சுகாதார துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அதோடு அடிப்படை சுகாதார சேவைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.

யுனிசெப் அறிக்கையின்படி இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகப்பெரிய பிரச்சினையாக நீடிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பெருந்தொற்றால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் ஏராளமான குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை மேலும் அதிகமாகி உள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு மட்டுமன்றி காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட ஊட்டச்சத்து குறைபாடு மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்த நேரத்தில் ஊட்டச்சத்து பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

4. இதயநோய் மருத்துவர் பினாய் ஜானுக்கு சாதனையாளர் விருது

மருத்துவத்துறையில் சாதனை நிகழ்த்திய மருத்துவர்களுக்கான சாதனையாளர் விருது சென்னை நவீன இதய மருத்துவச் சிகிச்சை (இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி) மருத்துவர் பினாய் ஜானுக்கு வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20’க்கும் மேற்பட்ட மருத்துவத் துறையில் சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதய பொது மருத்துவச் சிகிச்சை பிரிவுக்கும், இதய அறுவை சிகிச்சை பிரிவுக்கும் இடையிலான நவீன இதய மருத்துவச் சிகிச்சையில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் பினாய் ஜான், மத்திய இணை அமைச்சர் பாஹன் சிங் குலாஸ்தி, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெயப்பிரதா ஆகியோரிடமிருந்து சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்டார்.

5. காஞ்சிபுரம் நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகள்

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள -னர். இவர்களுக்கு தேசிய விருதுகளை மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வுசெய்து, மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.

2018-ஆம் ஆண்டுக்கான நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் உயரிய விருதான சந்த் கபீர் விருதும், 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 நெசவாளர்களுக்கும் கிடைத்துள்ளது. இதன்மூலம் சிறந்த நெசவாளருக்கான தேசிய விருதுகளை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

6. உலக மகளிர் அணி செஸ் சாம்பியன்சிப்: முதல்முறையாக இந்தியாவுக்கு பதக்கம்

ஸ்பெயினில் நடைபெற்ற பிடே உலக மகளிர் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா 0-2 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோற்று வெள்ளி பெற்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இறுதிச்சுற்றில் நடைபெற்ற ஆட்டங்களில் டி ஹரிகா – கோரியாச்கினா, ஆர் வைசாலி – அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக் ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. தானியா சச்தேவ் – காடெரினா லாக்னோ, மேரி ஆன் கோம்ஸ் – போலினா ஷுவாலோவா ஆகியோர் மோதிய ஆட்டங்களில் இந்தியர்கள் தோல்விகண்டனர். அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் ஹரிகா – கோரியாச்கினாவை வீழ்த்த, மேரி ஆன் கோம்ஸ் – அலினா காஷ்லின்ஸ்கயா ஆகியோர் மோதிய ஆட்டம் டிரா ஆனது. பக்தி குல்கர்னி – லாக்னோவிடம் தோல்விகண்டார்.

1. Lasker–DeBakey award is associated with which field?

A) Literature

B) Sports

C) Science 

D) Social Service

  • Mary and Albert Lasker founded the Lasker Awards in 1945 to honour the scientists whose biological and clinical discoveries have helped to improve human health. This year, two scientists– Katalin Karikó and Dr Drew Weissman who developed key technology used in the COVID–19 mRNA vaccines have been awarded the $250,000 Lasker–DeBakey Clinical Medical Research Award. The messenger RNA (mRNA) forms the basis of the Pfizer–BioNTech and Moderna COVID–19 vaccines.

2. SAUBHAGYA scheme, which recently completed 4 years, is being implemented by which Union Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Power 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Science and Technology

  • Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana – SAUBHAGYA is one of the largest household electrification schemes in the world.
  • It was announced by the Prime Minister Narendra Modi on 25th September 2017. The objective of the scheme is to achieve Universal Household Electrification in the country and to provide access to electricity to all un–electrified households in rural areas and poor households in urban areas. 2.82 crore households have been electrified since the launch of SAUBHAGYA, till March 2021.

3. The second edition of Ultimate Ladakh Cycling Challenge is organised by which organisation?

A) Indian Army

B) Indian Navy

C) Ladakh Police 

D) Indian Oil

  • The Ladakh police, in association with the Cycling Federation of India has organised the second edition of Ultimate Ladakh Cycling Challenge. This has been organised under the “Fit India Movement” and “Azadi Ka Amrit Mohatsav”. The event was flagged off by the Union Minister of Information and Broadcasting, Shri Anurag Thakur.

4. Which Railway Station in the state of Tamil Nadu has become a fully solar powered station?

A) Chennai Central 

B) Salem Junction

C) Virudhachalam Junction

D) Tirunelveli Junction

  • The Chennai Central Railway Station of Indian Railways, also known as the Dr. M.G. Ramachandran Central Railway Station, has become a fully solar powered station. The station meets all its energy requirements by way of solar panels installed on the rooftop. The station has an installed capacity of 1.5 MW solar power.

5. ‘National Cooperative Conference’ was organised in which city?

A) Mumbai B) New Delhi 🗹

C) Varanasi D) Gandhi Nagar

  • Union Minister of Home Affairs and Minister of Cooperation Amit Shah attended ‘National Cooperative Conference’ (Sehkarita Sammelan) in New Delhi as Chief Guest.
  • He also announced that the Central Government will soon come out with a new cooperative policy and work along with states to strengthen the cooperative movement. The government is working on setting up cooperative common service centres, national database and a National cooperative university.

6. Which city hosted the first ever QUAD leaders’ summit 2021?

A) Washington 

B) Davos

C) Melbourne

D) New Delhi

  • The first in–person meeting of Quad leaders was recently hosted by US President Joe Biden at Washington DC. Prime Minister of India Modi and his counterparts Scott Morrison from Australia and Yoshihide Suga from Japan gathered in the city for the meeting. In 2017, India, Japan, the US and Australia formed the alliance, named QUAD.

7. What is the theme of the World Pharmacist Day 2021?

A) Leaving No one behind

B) Pharmacy: Always Trusted for Your Health 

C) Pharmacists are our Saviours

D) Sustainable Pharmacy

  • World Pharmacist Day 2021 is celebrated on September 25, to celebrate and recognise the role of pharmacists.
  • International Pharmaceutical Federation (FIP) established the World Pharmacist Day. It was on this day FIP was founded in 1912. FIP is the federation of national associations of pharmacists and pharmaceutical scientists. The theme of World Pharmacist Day 2021 is “Pharmacy: Always Trusted for Your Health”.

8. The Bangabandhu–Bapu digital exhibition has been inaugurated in which country?

A) India

B) Bangladesh 

C) Sri Lanka

D) Nepal

  • The Bangabandhu–Bapu digital exhibition was recently inaugurated for public viewing in Dhaka, Bangladesh. The exhibition showcases the lives of the father of the nation of Bangladesh– Bangabandhu Sheikh Mujibur Rahman and Mahatma Gandhi.
  • The exhibition has been specially designed by the two governments to commemorate Mujib Boarsho, birth centenary of Bangabandhu and 150 years of the birth of Mahatma Gandhi and the golden jubilee of India–Bangladesh bilateral relations.

9. The recently announced Security alliance AUKUS includes how many countries?

A) Three

B) Four 

C) Five

D) Ten

  • In the month of September 2021, US president Joe Biden, Australian prime minister Scott Morrison and British prime minister Boris Johnson jointly announced the formation of the trilateral security alliance AUKUS.
  • The US has also ruled out adding India or Japan to the trilateral partnership. This alliance is seen as an effort to counter China in the Indo–Pacific. It will also allow the US and the UK to provide Australia with the technology to develop nuclear–powered submarines for the first time.

10. Which Indian city topped the Emerging Ecosystems category in the ranking of international startup hubs?

A) Mumbai 

B) Bengaluru

C) Chennai

D) Thiruvananthapuram

  • Mumbai maintained its first position in the Emerging Ecosystems category in the ranking of international startup hubs. The rankings are compiled by Startup Genome for its annual Global Startup Ecosystem Report 2021. London retained its second–place ranking tied with New York for the second year in a row.
  • Bangalore was ranked at 23 globally and Delhi was placed at 36th. The report revealed that London is the most attractive destination to set up a tech start–up outside of Silicon Valley.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!