Tnpsc

4th September 2020 Current Affairs in Tamil & English

4th September 2020 Current Affairs in Tamil & English

4th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

4th September Tamil Current Affairs 2020

4th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.தென்சீனக்கடல் தகராறில் ஈடுபட்டதற்காக, 24 சீன நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ரஷ்யா

ஈ. பிரேசில்

  • 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஐக்கிய அமெரிக்க நாடுகள் சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தென்சீனக்கடலில் ஒரு செயற்கை தீவை உருவாக்கு -வதிலும் இராணுவமயமாக்குவதிலும் ஈடுபட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அனைத்து 24 நிறுவன -ங்களும் சீனாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘நிறுவன பட்டியலின்’கீழ் வைக்கப்பட்டுள்ளன; இதன்மூலம், இந்த நிறுவனங்களுக்கான பண்டங்கள் ஏற்றுமதிக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) தடுக்கும்.

2.அண்மையில், ‘பிரதீக்ஷா’ என்ற கடல்வழி அவசர ஊர்தியை வாங்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கேரளா

  • கேரள மாநில மீன்வளத்துறையானது, ‘பிரதீக்ஷா’ என்ற பெயரில், முதல் கடல்வழி அவசர ஊர்தியை வாங்கியுள்ளது. இந்தக் கடல்வழி அவசர ஊர்தியை கொச்சி ஷிப்யார்ட் லிட் கட்டியுள்ளது. மணிக்கு 14 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக்கப்பல், ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க பயன்படும். இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மருத்துவ உதவி வழங்கும் அளவுக்கு வசதி உள்ளது.

3.பலவீனமான பிரிவைச் சார்ந்த பெண்களின் பேரில் `22,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை பதிவு செய்து தருவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. ஒடிசா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • Y S ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, மாநிலத்தின் பலவீனமான பிரிவுகளைச் சார்ந்த 30 இலட்சம் பெண்களுக்கு `22,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் பதிவு செய்து தரப்படும் என அறிவித்துள்ளது.
  • வீட்டு மனைகளுக்கான தளவமைப்புகளைக் குறிக்கும் மற்றும் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின்னர், அந்த வீட்டு மனைகளை அரசு விநியோகிக்கும்.

4.வரைவு சுகாதார தரவு மேலாண்மை கொள்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ. தேசிய நலவாழ்வு ஆணையம்

ஆ. நலவாழ்வுச் சேவைகளுக்கான தலைமை இயக்குநர்

இ. குடும்பநல பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்

ஈ. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்

  • தேசிய டிஜிட்டல் நலவாழ்வு இயக்கத்தின் (NDHM) “வரைவு சுகாதார தரவு மேலாண்மை கொள்கை” தேசிய நலவாழ்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவுக்கொள்கை பொதுமக்களின் கருத்துகள் / பரிந்துரைகளுக்காக NDHM’இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கேட்புக்குப்பிறகு, இந்தக்கொள்கை இறுதிசெய்யப்படும். NDHM திட்டத்தை பிரதம அமைச்சர் தனது விடுதலை நாள் உரையின்போது அறிவித்தார்.

5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குல்குமாலே சென்ட்ரல் பார்க் அமைந்துள்ள நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. மொரீஷியஸ்

இ. இலங்கை

ஈ. வங்கதேசம்

  • குல்குமாலே மத்திய பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் ‘வருகை படகுத்துறை’யை புனரமைப்பு செய்தல் ஆகியவற்றிற்காக, மாலத்தீவு, அண்மையில், அடிக்கல் நாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டங்களை, அந்நாட்டின் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், இந்தியாவிலிருந்து பெற்ற 10 மில்லியன் மதிப்புடைய மாலத்தீவு ரூபாய் நிதியுதவிமூலம் உருவாக்கி வருகிறது. இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 18 மானிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.

6.அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் இணைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மேற்கு வங்கம்

  • இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்கீழ் மாநிலத்தைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை அருணாச்சல பிரதேச மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆறாவது அட்டவணை ஆனது, வடகிழக்கு இந்தியாவில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப்பாதுகாக்கிறது.
  • இந்திய அரசியலமைப்பின்கீழ், அதன் பழங்குடி சமூகங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத ஒரே வடகிழக்கு மாநிலமாக அருணாச்சல பிரதேச மாநிலம் இருந்து வருகிறது.

7.இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு மீதான புதிய மன்றத்தின் தலைவர் யார்?

அ. சந்தீப் படேல்

ஆ. சைரஸ் மிஸ்திரி

இ. ரேகா மேனன்

ஈ. இராம்குமார் இராமமூர்த்தி

  • சந்தீப் படேல் தலைமையில் செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய கருத்துக்களத்தை நிறுவியுள்ளதாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) சமீபத்தில் அறிவித்தது. சந்தீப் படேல், IBM’இன் இந்தியா / தெற்காசியா பிராந்தியத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். இந்தியாவில் ஒரு வலுவான AI சூழலமைப்பை உருவாக்குவதில், இந்த CII AI கருத்துக்களம் தனது கவனத்தைச் செலுத்தும். இது, அடிமட்டத்திலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்துவரும் தொழினுட்பங்கள் குறித்து இந்திய பணியாளர்களை மறுதிறனாக்கவும் முற்படுகிறது.

8.இந்திய மருத்துவக் கழகத்தின் அறிக்கையின்படி, மருத்துவப்படிப்பில் (MBBS), எந்தப் பாடத்தொகுதி புதிதாக சேர்க்கப்படவுள்ளது?

அ. நச்சுயிரியியல்

ஆ. பெருந்தொற்று மேலாண்மை

இ. பிளாஸ்மா தொழில்நுட்பம்

ஈ. நோயெதிர்ப்பு

  • MBBS மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின்மூலம் MBBS மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப்போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற சிக்கல்களைக்கையாளவும் அறிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
  • இந்தப்பாடத்திட்டம், முழு இளங்கலைக்கும் நீட்டிக்கப்படும். COVID-19 போன்ற தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவர்களுக்கு இது உதவும்.

9.மிகநீண்டகாலம் ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தவர் யார்?

அ. யோஷிசாக்கி தட்சுஹிகோ

ஆ. ஷின்சோ அபே

இ. மசாகி ஷிரகாவா

ஈ. ஹருஹிகோ குரோடா

  • நீண்டகாலம் ஜப்பானின் பிரதம அமைச்சராக பணியாற்றிய ஷின்சோ அபே, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஆளுங்கட்சித்தலைவரும் பிரதமருமான ஷின்சோ அபேவின் பதவிக்காலம் 2021 செப்டம்பரில் முடிவடைகிறது. அவர் பதவி விலகிய பின்னர், லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்; அதன்பின், அந்நாட்டின் நாடாளுமன்றம் அவ்வேட்பாளரை முறையாக தேர்ந்தெடுக்கும். ஷின்சோ அபே, ‘அபேனாமிக்ஸ்’ என்னும் பிரபலமான தனது பொருளாதார உத்திக்காக குறிப்பாக அறியப்படுகிறார்.

10.பெய்ரூட்டின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்காக, ‘பெய்ரூட்’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ள உலகளாவிய அமைப்பு எது?

அ. UNESCO

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. கிரீன்பீஸ்

  • ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பானது (UNESCO) ‘பெய்ரூட்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்ட இந்த முயற்சி முற்படுகிறது. இம்மாத இறுதிக்குள் நன்கொடையாளர்களுக்கான கூட்டத்தை UNESCO நடத்தவுள்ளது. முன்னதாக, லெபனானில் நிகழ்ந்த வெடிவிபத்தில், பல கட்டடங்கள் சேதமடைந்தன.

1. Which country has blacklisted 24 Chinese companies for having involved in the South China Sea dispute?

[A] United Kingdom

[B] United States of America

[C] Russia

[D] Brazil

  • The United States has imposed sanctions on 24 Chinese companies and officials recently. These companies are said to be involved in building and militarization of an artificial island in South China Sea. All the 24 firms are state owned companies of China. These companies have been put under USA’s “Entity List” by which USA would block exports of materials and goods to these companies.

2. The marine ambulance named “Pratheeksha” has been recently acquired by which state?

[A] Tamil Nadu

[B] Maharashtra

[C] Gujarat

[D] Kerala

  • The Fisheries Department of the state of Kerala has acquired the first marine ambulance named “Pratheeksha”. The marine ambulance is constructed by Cochin Shipyard Ltd. The vessel can move at a speed of 14 knots per hour and will be used to rescue fishermen in distress. The vessel has inbuilt facility to provide medical support to as many as ten people at a time.

3. Which state government has announced to register house sites worth Rs.22,000 crore to women belonging to weaker section?

[A] Chhattisgarh

[B] Odisha

[C] Madhya Pradesh

[D] Andhra Pradesh

  • The State Government of Andhra Pradesh headed by YS Jagan Mohan Reddy has announced that Rs.22,000 crore worth residential building sites would be registered to 30 lakh women belonging to weaker sections of the state.
  • The Government is the process of marking layouts and selection of beneficiaries for the house sites. After favourable verdict from the Supreme Court, the state will distribute the sites.

4. The Draft Health Data Management Policy has been released by which agency?

[A] National Health Authority

[B] Director General of Health Services

[C] Family Welfare Training and Research Centre

[D] All India Institute of Medical Science

  • The “Draft Health Data Management Policy” of the National Digital Health Mission (NDHM) has been released by the National Health Authority. The draft policy has been released on the official webpage of NDHM for public comments and suggestions, after which the Health Data Management Policy would be finalized. The NDHM programme was announced by the Prime Minister during his Independence Day speech.

5. Hulhumalé Central Park, that was seen in news recently, is located in which country?

[A] Maldives

[B] Mauritius

[C] Sri Lanka

[D] Bangladesh

  • Maldives has recently organised the Ground–breaking ceremony for development of the Hulhumalé Central Park and renovation of ‘Arrival Jetty’. The projects are being developed by the Housing Development Corporation (HDC), through 10 million Maldivian Rupee assistance from India. This is a part of the 18 grant projects being financed by India in the island country.

6. Which Indian state has passed a resolution for inclusion in the Sixth Schedule of the Constitution?

[A] Assam

[B] Arunachal Pradesh

[C] Andhra Pradesh

[D] West Bengal

  • The Arunachal Pradesh Assembly has recently passed a resolution to bring the state under the scope of Sixth Schedule of the Constitution. The Sixth Schedule provides protection of tribal people’s rights in the Northeast India. Under the Indian constitution, Arunachal Pradesh is the only North–eastern state without any protective provisions for its tribal communities.

7. Who is the head of the new forum on Artificial Intelligence set up by the Confederation of Indian Industry (CII)?

[A] Sandip Patel

[B] Cyrus Mistry

[C] Rekha Menon

[D] Ramkumar Ramamoorthy

  • Confederation of Indian Industry (CII) has recently announced that it has established a new forum on Artificial Intelligence chaired by Sandip Patel. Sandip Patel is the Managing Director of India/South Asia region of IBM. The CII AI Forum will focus on building a strong AI ecosystem in India. It also seeks to generate awareness at grassroot level and reskill the Indian workforce in emerging technologies.

8. As per the Medical Council of India, which module is to be newly added in the MBBS course?

[A] Virology

[B] Pandemic Management

[C] Plasma Technology

[D] Immunology

  • After the supersession of the Medical Council of India (MCI), the board of governors (BoG) announced that Pandemic management will be included in the MBBS course.
  • The premier medical education regulator said that the Medical students will learn this module along with its social, legal and other portions. This module will extend from foundation course to the final year undergraduate programme. This will help the doctors to meet the challenges posed by pandemics like COVID–19.

9. Who is the longest serving Prime Minister (Premier) of Japan?

[A] Yoshizaki Tatsuhiko

[B] Shinzo Abe

[C] Masaaki Shirakawa

[D] Haruhiko Kuroda

  • Japan’s Prime Minister (Premier) Shinzo Abe, who is also the longest–serving premier, has resigned due to poor health. The term of the ruling party leader and Premier ends in September 2021.
  • After his resignation, the Liberal Democratic Party (LDP) will select a nominee and the winner must be formally elected in Parliament. Abe is known for his famous economic strategy named ‘Abenomics’.

10. Which global organisation launched a new initiative named ‘Beirut’, to rebuild the heritage buildings of Beirut?

[A] UNESCO

[B] WEF

[C] IMF

[D] Greenpeace

  • UN Educational, Scientific and Cultural Organization (UNESCO) has launched a new initiative named ‘Beirut’. The initiative seeks to raise funds to be used in rehabilitating the heritage buildings situated in Beirut. UNESCO will host a meeting for donors by the end of September. Earlier, during a massive explosion that hit Lebanon, several of is buildings were damaged.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!