Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Book Back Questions 9th Social Science Lesson 1

9th Social Science Lesson 1

1] மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி. என். ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்!

சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி (போனோபோ) வகை இனங்கள் நமக்கு நெருக்கமான, தற்போதும் உயிர்வாழும் உயிரினங்களாகும்.

கோதுமை, பார்லி, பட்டாணி ஆகியவை 10000 ஆண்டுகளுக்கும் முன்பே பயிரிடத் தொடங்கப்பட்டுவிட்டன. காய்-கனி மற்றும் கொட்டை தரும் மரங்கள் கி. மு. (பொ. ஆ. மு) 4000 ஆண்டுகளிலேயே விளைச்சலுக்காகப் பயிரிடப்பட்டுள்ளன. அத்தி, ஆலிவ், பேரீச்சை, மாதுளை, திராட்சை அவற்றில் அடங்கும்.

புதிய கற்கால மனிதர்கள்தான் முதலில் மட்பாண்டங்களைச் செய்திருக்க வேண்டும். மட்பாண்டங்களை அவர்கள் கையாலோ அல்லது மெதுவாகச் சுற்றும் சக்கரத்தைக் கொண்டோ வனைந்தார்கள். மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னால் அவற்றைக் கூழாங்கற்கள் கொண்டு மெருகேற்றினார்கள். இதனைத் தேய்த்து மெருகிடுதல் (burnishing) என்பர்.

லெமூரியாவும் தமிழர்களும்: சில ஆய்வாளர்கள், மூழ்கிய லெமூரியா கண்டத்தில் தமிழர்கள் தோன்றியதாகக் கருதுகின்றனர். லெமூரியா கண்டம் குறித்த இந்தக் கருத்து 19ஆம் நூற்றாண்டில் முன் வைக்கப்பட்டது. புவித்தட்டு நகர்வியல் கோட்பாட்டில் (plate tectonics) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இப்போது இந்தக் கருத்து குறித்துப் பல்வேறு பார்வைகளை அறிஞர்கள் முன் வைக்கின்றனர். தமிழ் இலக்கியக் குறிப்புகள் கடல் கொண்டதைப் பற்றிக் கூறுகின்றன. இவை கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள சில பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்டதாகச் சொல்கின்றன. கி. மு. (பொ. ஆ. மு) 5000க்கு முன் இலங்கையின் சில பகுதிகளும் தமிழ்நாடும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. எனவே கடல் மட்ட உயர்வின் காரணமாகக் கன்னியாகுமரிக்கருகே சில நிலப்பகுதிகளும், இலங்கை இந்திய இணைப்பும் கடலுக்கடியில் சென்றிருக்கலாம். இப்பகுதியில் கூடுதல் ஆழ்கடல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இடைக் கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனித இனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து வாழ்ந்திருப்பதற்கான சான்றுகளை அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

(அ) கொரில்லா

(ஆ) சிம்பன்ஸி

(இ) உராங்உட்டான்

(ஈ) பெருங்குரங்கு

2. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய கால கட்டம்

(அ) பழைய கற்காலம்

ஆ) இடைக்கற்காலம்

(இ) புதிய கற்காலம்

(ஈ) பெருங்கற்காலம்

3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ———-ஆவர்.

(அ) ஹோமோ ஹேபிலிஸ்

(ஆ) ஹோமோ எரக்டஸ்

(இ) ஹோமோ சேபியன்ஸ்

(ஈ) நியாண்டர்தால் மனிதன்

4. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ———— எனப்படுகிறது.

(அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

(ஆ) பிறைநிலப் பகுதி

(இ) ஸோலோ ஆறு

(ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு

5. சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் ————— கருவிகளை முதன் முறையாக கண்டுபிடித்தார்.

(அ) நுண்கற்காலம்

(ஆ) பழங்கற்காலம்

(இ) இடைக்கற்காலம்

(ஈ) புதிய கற்காலம்

6. i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.

ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன.

iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.

(அ) i சரி

(ஆ) i மற்றும் ii சரி

(இ) i மற்றும் iv சரி

(ஈ) ii மற்றும் iii சரி

7. i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.

ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது

iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.

iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரி

(ஈ) iv சரி

8. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக்கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக்கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.

(அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

(இ) கூற்று சரி; காரணம் தவறு.

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கை கோடரிகளும் வெட்டுக் கருவிகளும் —————– பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.

2. கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ————— தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன.

3. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ————- எனப்படும்.

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க:

1. அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள “தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்” என்ற கருத்து உதவுகிறது.

ஆ) “உயிர்களின் தோற்றம் குறித்து” என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.

இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத் தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.

ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்.

2. அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.

ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.

IV. பொருத்துக:

1. பழங்கால மானுடவியல் – அ] தேரி

2. கோடரிக்கருவிகள் – ஆ] வீனஸ்

3. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள் – இ] அச்சூலியன்

4. செம்மணல் மேடுகள் – ஈ] நுண்கற்காலம்

5. சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள் -உ] மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சிம்பன்ஸி, 2. புதிய கற்காலம், 3. ஹோமோ சேபியன்ஸ், 4. பிறைநிலப் பகுதி, 5. பழங்கற்காலம், 6. i மற்றும் iv சரி, 7. i சரி, 8. கூற்றும் காரணமும் தவறானவை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ் பழங்கற்காலம், 2. கற்கருவி, 3. இடைக்கற்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க:

1. மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள “தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்” என்ற கருத்து உதவுகிறது, 2. மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக:

1. உ, 2. இ, 3. ஆ, 4. அ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!