Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Book Back Questions 10th Social Science Lesson 1

10th Social Science Lesson 1

1] முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கூட்டு நிறுவனம் என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும். தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.

பதுங்குக் குழிப்போர்: போர் வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் எதிரிகளின் சுடுதலின் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின. பிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்து சேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் தனது பதினான்கு அம்சத் திட்டத்தை நேசநாடுகள் பின்பற்றுவதற்காக முன்வைத்தார். அவற்றில் மிக முக்கியமானதாக அவர் கோடிட்டுக் காட்டியது “மிகப்பெரும் நாடுகள் சிறிய நாடுகள் எனும் பேதமில்லாமல் அனைத்து நாடுகளின் அரசியல் சுதந்திரத்திற்கும் அந்நாடுகளின் நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டிற்கும் எல்லைகளின் உறுதிப்பாட்டிற்கும் பரஸ்பரம் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளைக் கொண்ட பொது அமைப்பை உருவாக்க வேண்டும்” என்பதாகும்.

ரஷ்யப் புரட்சி நடந்து சார் மன்னன் வீழ்ச்சியுற்றபோது நம் தேசியக் கவி பாரதியார் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை:

புதிய ரஷ்யா மாகாளி பராசக்தி உருசியநாட்

டீனர்கடைக்கண் வைத்தா ளங்கோ

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;

வாகான தோள்புடைத்தார் வானமரர்;

பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்

போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;

வையகத்தீர், புதமை காணீர்;

1870இல் மத்திய வோல்கா பகுதி அருகே கற்றறிந்த பெற்றோர்க்கு லெனின் பிறந்தார். கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்ட அவர், விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பினார். பெரும்பாலானோரின் (போல்ஷின்ஸ்ட்வோ) ஆதரவைப் பெற்ற லெனினும் அவரது ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சி என்று அறியப்பட்டனர். இவருக்கு எதிரான சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்ட்வோ) மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகளும் யாவை?

(அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

(ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா

(இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

(ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

(அ) சீனா

(ஆ) ஜப்பான்

(இ) கொரியா

(ஈ) மங்கோலியா

3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

(அ) லெனின்

(ஆ) மார்க்ஸ்

(இ) சன்யாட் சென்

(ஈ) மா சே துங்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

(அ) ஆகாயப் போர்முறை

(ஆ) பதுங்குக் குழிப்போர்முறை

(இ) நீர் மூழ்கிக் கப்பல் போர்முறை

(ஈ) கடற்படைப் போர்முறை

5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

(அ) பிரிட்டன்

(ஆ) பிரான்ஸ்

(இ) டச்சு

(ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

6. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

(அ) ஜெர்மனி

(ஆ) ரஷ்யா

(இ) இத்தாலி

(ஈ) பிரான்ஸ்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ­­­­­­­___________ உடன்படிக்கையின் படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

3. ___________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

4. பால்கனில் __________ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

5. டானென்பர்க் போரில் __________ பேரிழப்புகளுக்கு உள்ளானது.

6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ___________ ஆவார்.

7. ___________ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

(அ) i, ii ஆகியன சரி

(ஆ) i, iii ஆகியன சரி

(இ) iv சரி

(ஈ) i, ii, iv ஆகியன சரி

2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.

காரணம்: இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.

(அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.

(ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

(இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

(ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு

3. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம்: சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

(அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி

(ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

(இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

(ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு

பொருத்துக:

1. பிரெஸ்ட் – லிடோவஸ்க் உடன்படிக்கை – வெர்செய்ல்ஸ்

2. ஜிங்கோயிசம் – துருக்கி

3. கமால் பாட்சா – ரஷ்யாவும் ஜெர்மனியும்

4. எம்டன் – இங்கிலாந்து

5. கண்ணாடி மாளிகை – சென்னை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர் 2. ஜப்பான் 3. லெனின்

4. பதுங்குக் குழிப்போர்முறை 5. பிரிட்டன் 6. ரஷ்யா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (1894) 2. லண்டன் 3. (1902) 4. மாசிடோனியா 5. ரஷ்யா 6. கிளமென்சோ

7. (1925)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. i, ii, iv ஆகியன சரி 2. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல

3. காரணம், கூற்று இரண்டும் சரி

பொருத்துக: (விடைகள்)

1. பிரெஸ்ட் – லிடோவஸ்க் உடன்படிக்கை – ரஷ்யாவும் ஜெர்மனியும்

2. ஜிங்கோயிசம் – இங்கிலாந்து

3. கமால் பாட்சா – துருக்கி

4. எம்டன் – சென்னை

5. கண்ணாடி மாளிகை – வெர்செய்லஸ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!