Book Back QuestionsTnpsc

அணு அமைப்பு Book Back Questions 7th Science Lesson 4

7th Science Lesson 4

4] அணு அமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நானோமீட்டர் என்பது சிறிய நீளங்களை அளக்க பயன்படும் அலகாகும். ஒரு மீட்டர் என்பது 1 x 10-9 nm அல்லது ஒரு நானோ மீட்டர் என்பது 1 x 109 ஆகும்.

ஒவ்வொரு வருடமும் நமது உடம்பில் உள்ள செல்கள் 98% செல்கள் இறந்து புது செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நமது உடம்பில் ஏறத்தாழ ஏழு பில்லியன் செல்கள் காணப்படுகின்றன.

ஐசோடோப்புகள்: ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைப் பெற்றிருக்கலாம். அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ன. அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக ஹைட்ரஜன் அணுவானது மூன்று ஐசோடோப்புகளை பெற்றுள்ன. அவை – ஹைட்ரஜன் (1H1), டியூட்ரியம் (1H2), டிரிட்டியம் (1H3).

ஐசோபார்கள்: ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும். (எ.கா) கால்சியம் – 40 மற்றும் ஆர்கான் – 40.

அணுக்களைப் பிணைத்திருப்பது எது? எலக்ட்ரான்கள் எதிர்மின் சுமை கொண்டது புரோட்டான்கள் நேர்மின்சுமை கொண்டது. இவற்றின் இடையே உள்ள ஈர்ப்பே எலக்ட்ரான்களை அதன் வட்டப்பாதைகளில் பிணைத்து வைக்கிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பருப்பொருளின் அடிப்படை அலகு ___________ ஆகும்.

(அ) தனிமம்

(ஆ) அணு

(இ) மூலக்கூறு

(ஈ) எலக்ட்ரான்

2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் ___________ ஆகும்.

(அ) அணு

(ஆ) நியூட்ரான்

(இ) எலக்ட்ரான்

(ஈ) புரோட்டான்

3. ___________ நேர்மின் சுமையுடையது.

(அ) புரோட்டான்

(ஆ) எலக்ட்ரான்

(இ) மூலக்கூறுகள்

(ஈ) நியூட்ரான்

4. ஓர் அணுவின் அணு எண் என்பது ____________ ஆகும்.

(அ) நியூட்ரான்களின் எண்ணிக்கை

(ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை

(இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

(ஈ) அணுகளின் எண்ணிக்கை

4. நியூக்ளியான்கள் என்பது _________ கொண்டது.

(அ) புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

(ஆ) நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

(இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

(ஈ) நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____________

2. அணுவின் உட்கருவில் __________ மற்றும் ____________ இருக்கும்.

3. அணுவின் உட்கருவை _____________ சுற்றி வரும்.

4. கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆகும். எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு ____________

5. மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது. எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் ___________

பொருத்துக:

1. இணைதிறன் – Fe

2. மின்சுமையற்ற துகள் – புரோட்டான்

3. இரும்பு – வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான்

4. ஹைட்ரஜன் – நியூட்ரான்

5. நேர்மின்சுமை கொண்ட துகள் – ஓர் இணைதிறன்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

2. எலக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை.

3. ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டிருக்கும்.

4. அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படும்.

ஒப்புமை தருக:

1. சூரியன்: உட்கரு: கோள்கள்: _____________

2. அணு எண்: ___________ , நிறை எண்: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.

3. K: பொட்டாசியம்: C: ___________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. A: ஓர் அணு மின்சுமையற்றது நடுநிலையானது

R: அணுக்கள் சம எண்ணிக்கையான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டது.

2. A: ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.

R: உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.

3. A: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.

R: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அணு 2. எலக்ட்ரான் 3. புரோட்டான் 4. புரோட்டான்களின் எண்ணிக்கை

5. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் 2. புரோட்டான் மற்றும் நியூட்ரான் 3. எலக்ட்ரான்

4. CH4 5. (2)

பொருத்துக: (விடைகள்)

1. இணைதிறன் – வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான்

2. மின்சுமையற்ற துகள் – நியூட்ரான்

3. இரும்பு – Fe

4. ஹைட்ரஜன் – ஓர் இணைதிறன்

5. நேர்மின்சுமை கொண்ட துகள் – புரோட்டான்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: ஒரு தனிமத்தின் அடிப்படை அலது அணு ஆகும்.

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படும்.

ஒப்புமை தருக: (விடைகள்)

1. எலக்ட்ரான்கள் 2. புரோட்டான் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 3. கார்பன்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து. சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

3. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!