Book Back QuestionsTnpsc

மின்னோட்டவியல் Book Back Questions 10th Science Lesson 4

10th Science Lesson 4

4] மின்னோட்டவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நிக்ரோம் என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும். இதன் மதிப்பு 1.5 x 10-6 Ω m. எனவே இது மின் சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது.

குதிரை திறன்: குதிரை திறன் என்பது fps அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது. 1 குதிரை திறன் என்பது 746 வாட் ஆகும்.

இந்தியாவில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 220/230 வோல்ட் மின்னழுத்தமும், 50Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்படுகிறது. USA மற்றும் UK போன்ற நாடுகளில் வீட்டுக்குறிய மின்சுற்றுகளில் 110/120 வோல்ட் மின்னழுத்தமும் 60Hz அதிர்வெண்ணும் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

(அ) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

(ஆ) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

(இ) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

(ஈ) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

2. மின்தடையின் SI அலகு

(அ) மோ

(ஆ) ஜீல்

(இ) ஓம்

(ஈ) ஓம் மீட்டர்

3. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

(அ) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது.

(ஆ) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

(இ) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது.

(ஈ) மின்விளக்கு மின்னேற்றமடையும்.

4. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

(அ) மின்தடை எண்

(ஆ) மின் கடத்து திறன்

(இ) மின் ஆற்றல்

(ஈ) மின் திறன்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _________ பாய்ந்து செல்லாது.

2. மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ___________

3. வீடுகளில் ___________ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

4. ____________ மற்றும் ____________ ஆகியவைகளின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.

5. LED என்பதன் விரிவாக்கம் _____________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

2. வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்கு தடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.

3. மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.

4. ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.

5. மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகு பயன் மின் தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.

பொருத்துக:

கலம் 1 கலம் 2

1. மின்னோட்டம் – (அ) வோல்ட்

2. மின்னழுத்த வேறுபாடு – (ஆ) ஓம் மீட்டர்

3. மின்தடை எண் – (இ) வாட்

4. மின்திறன் – (ஈ) ஜீல்

5. மின்னாற்றல் – (உ) ஆம்பியர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

1. கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.

2. கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.

காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.

3. கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.

காரணம்: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம், 2. ஓம், 3. சாவி மூடியிருக்கும் போது மின் சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது, 4. மின் ஆற்றல்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மின்னோட்டம், 2. மின்தடை, 3. பக்க இணைப்பு, 4. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம், 5. ஒளி உமிழ் டையோடு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறானதைத் திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

2. சரி

3. தவறு

சரியான விடை: மின்னூட்டத்தின் பன்னாட்டு அலது கூலும் ஆகும்.

4. தவறு

சரியான விடை: ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும். அல்லது ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 வாட் மணிக்கு சமமாக இருக்கும்.

5. தவறு

சரியான விடை: மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

பொருத்துக: (விடைகள்)

1. மின்னோட்டம் – ஆம்பியர்

2. மின்னழுத்த வேறுபாடு – வோல்ட்

3. மின்தடை எண் – ஓம்மீட்டர்

4. மின்திறன் – வாட்

5. மின்னாற்றல் – ஜீல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

2. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

3. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!