Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Questions 10th Science Lesson 7

10th Science Lesson 7

7] அணுக்களும் மூலக்கூறுகளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒப்பு அணுநிறை என்பது ஒரு விகிதம், எனவே அதற்கு அலகு இல்லை. ஒரு தனிமத்தின் அணு நிறையை கிராமில் குறிப்பிடுவதாகக் கொண்டால் அதற்கு “கிராம் அணுநிறை” என்று பெயர்.

ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை = 1 கி. கார்பனின் கிராம் அணுநிறை = 12 கி. நைட்ரஜனின் கிராம் அணுநிறை = 14 கி. ஆக்சிஜனின் கிராம் அணுநிறை = 16 கி.

ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு விகிதம். எனவே அதற்கு அலகு இல்லை. ஒரு சேர்மத்தின் மூலக்கூறுநிறையை கிராமில் குறிப்பிடுவதாகக் கொண்டால் அதற்கு கிராம் மூலக்கூறுநிறை என்று பெயர்.

நீரின் கிராம் மூலக்கூறு நிறை = 18 கி. CO2 ன் கிராம் மூலக்கூறு நிறை = 44 கி. NH3 ன் கிராம் மூலக்கூறு நிறை = 17 கி. HCl ன் கிராம் மூலக்கூறு நிறை = 36.5 கி.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது.

(அ) 6.023 x 1023 ஹீலியம் அணுக்கள்

(ஆ) 1 ஹீலியம் அணு

(இ) 2 கி ஹீலியம்

(ஈ) 1 மோல் ஹீலியம் அணு

2. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

(அ) குளுக்கோஸ்

(ஆ) ஹீலியம்

(இ) கார்பன் டை ஆக்சைடு

(ஈ) ஹைட்ரஜன்

3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்

(அ) 22.4 லிட்டர்

(ஆ) 2.24 லிட்டர்

(இ) 0.24 லிட்டர்

(ஈ) 0.1 லிட்டர்

4. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

(அ) 28 amu

(ஆ) 14 amu

(இ) 28 கி

(ஈ) 14 கி

5. 1 amu என்பது

(அ) C-12 ன் அணுநிறை

(ஆ) ஹைட்ரஜனின் அணுநிறை

(இ) ஒரு C-12ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

(ஈ) O-16 ன் அணு நிறை.

6. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.

(அ) 12 கிராம் C-12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

(ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.

(இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

(ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 x 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

7. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்

(அ) 11.2 லிட்டர்

(ஆ) 5.6 லிட்டர்

(இ) 22.4 லிட்டர்

(ஈ) 44.8 லிட்டர்

8. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்

(அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்

(ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்

(இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்

(ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

(அ) 16 கி.

(ஆ) 18 கி

(இ) 32 கி

(ஈ) 17 கி

10. 1 மோல் எந்த ஒரு பொருளும் ____________ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

(அ) 6.023 x 1023

(ஆ) 6.023 x 10-23

(இ) 3.0115 x 1023

(ஈ) 12.046 x 1023

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் __________ நிறை எண்ணையும் ________ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.

2. ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக _________ முறையில் மாற்றலாம்.

4. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ____________ எனப்படும்.

5. ஒப்பு அணுநிறை என்பது ___________ எனவும் அழைக்கப்படுகிறது.

6. ஹைட்ரஜனின் சராசரி அணுநிற = ____________

7. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை __________ எனப்படும்.

8. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ___________ ஆகும்.

9. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ____________ மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.

10. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ____________

பொருத்துக:

1. 8 கி O2 – 4 மோல்கள்

2. 4 கி H2 – 0.25 மோல்கள்

3. 52 கி He – 2 மோல்கள்

4. 112 கி N2 – 0.5 மோல்கள்

5. 35.5 கி Cl2 – 13 மோல்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்.

2. மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.

3. தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.

4. 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.

5. CO2 – ன் மூலக்கூறு நிறை 42 கி.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.

ஆ. A சரி R தவறு

இ. A தவறு R சரி

ஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

1. கூற்று A: அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.

காரணம் R: ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12-ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.

2. கூற்று A: குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை 35.5 amu.

காரணம் R: குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். (விடைகள்)

1. 1 ஹீலியம் அணு, 2. கார்பன் டை ஆக்ஸைடு, 3. (2.24 லிட்டர்), 4. (14 கி), 5. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை, 6. ஒரு கிராம் C-12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது, 7. (22.4 லிட்டர்)
8. 20 புரோட்டான் 20 நியூட்ரான் 9. (32 கி ), 10. (6.023×1023)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஒத்த, வேறுபட்ட, 2. நியூட்ரான், 3. செயற்கை மாற்றுத் தனிமமாக்கல், 4. நிறை எண் 5. திட்ட அணு எடை, 6. (1.008 amu),
7. ஒத்த அணு மூலக்கூறு 8. அணுக்கட்டு எண், 9. (22400), 10. (4)

பொருத்துக: (விடைகள்)

1. 8 கி O2 – 0.25 மோல்கள்

2. 4 கி H2 – 2 மோல்கள்

3. 52 கி He – 13 மோல்கள்

4. 112 கி N2 – 4 மோல்கள்

5. 35.5 கி Cl2 – 0.5 மோல்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: மந்த வாயுக்கள் அனைத்தும் ஓரணு மூலக்கூறுகள் ஆகும்.

3. தவறு

சரியான விடை: தனிமங்களை கிராம் அணுநிறையில் குறிப்பிடுவதால் இதற்கு அலது உண்டு. மேலும் ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை.

4. சரி

5. தவறு

சரியான விடை: CO2-ன் மோலார் நிறை 44 கி.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க: (விடைகள்)

1. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.

2. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!