TnpscTnpsc Current Affairs

5th & 6th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th & 6th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th & 6th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவராக மாதபி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) SEBI 

ஆ) NABARD

இ) PFRDA

ஈ) IRDAI

  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக மாதபி புரி புச் அவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர் செபியின் முதல் பெண் தலைவர் ஆவார். அஜய் தியாகியை அடுத்து ICICI செக்யூரிட்டிஸின் முன்னாள் தலைவரான திருமதி மாதபி புரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. தேசிய வருமானத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2021-22இல் இந்தியாவின் மெய்யான GDP வளர்ச்சி என்ன?

அ) 5.6 சதவீதம்

ஆ) 7.1 சதவீதம்

இ) 8.9 சதவீதம் 

ஈ) 10.5 சதவீதம்

  • தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2021-22 தேசிய வருமானத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மற்றும் 2021-22 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான GDPஇன் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • 2020-21இல் 6.6 சதவீதமாக இருந்த மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 2021-22இல் GDP உற்பத்தியின் வளர்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3. பூமியின் மிகப்பெரிய பள்ளமான ‘யிலான்’ பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) சீனா 

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஜப்பான்

  • வடகிழக்கு சீனாவில், ‘யிலான்’ எனப் பெயரிடப்பட்ட பிறை வடிவ பள்ளமானது கடந்த நூறாயிரம் ஆண்டுகளில் உருவான பூமியின் மிகப்பெரிய மொத்தல் நிலக்குழி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
  • NASA புவி கண்காணிப்பு அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு மொத்தல் நிலக்குழியாக லியோனிங்கில் கண்டறியப்பட்ட சியான் பள்ளம் இருந்தது. யிலான் பள்ளம், சுமார் 1.85 கிமீ விட்டத்துடன் உள்ளது. ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் சுமார் 46,000 முதல் 53,000 ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகியிருக்கலாம்.

4. இந்திய கடற்படையானது பின்வரும் எந்த நகரத்தில் ‘செய்முறை விளக்கத்தை’ நடத்தியது?

அ) புனே

ஆ) கொச்சி

இ) விசாகப்பட்டினம் 

ஈ) எர்ணாகுளம்

  • கடற்படையின் மிலன்-22 கூட்டுப்பயிற்சியை முன்னிட்டு, விசாகாப்பட்டின கடற்கரையில், ‘செய்முறை விளக்க நிகழ்வுகளும் பன்னாட்டுக்கடற்படையினரின் அணிவகுப் -பும் நடத்தப்பட்டன.
  • இந்திய கடற்படை கமாண்டோக்கள் வானில் இருந்து குதித்து சாகச நிகழச்சிகள் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

5. ‘தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டம் – சம்பவ்’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ) கல்வி அமைச்சு

ஆ) MSME அமைச்சகம் 

இ) திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம்

ஈ) பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகம் (MSME) 28.02.2022 முதல் 06.03.2022 வரை ‘அமுதப் பெருவிழாவின்’கீழ் அதன், ‘தனித்துவம்மிக்க வாரத்தை’ கொண்டாடுகிறது. MSME அமைச்சகம் அதன், ‘தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டம் – சம்பவ்’இன் 2ஆம் கட்டத்தைத் தொடங்கவுள்ளது.
  • இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 1300 கல்லூரிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்முனைவோர் முயற்சியில் ஈடுபட ஊக்கப்படுத்தப் -படுவார்கள். இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் 2021’இல் தொடங்கப்பட்டது.

6. கீழ்காணும் எந்த இடத்தில், இந்திய இரயில்வேக்கான சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது?

அ) மும்பை

ஆ) கொல்கத்தா

இ) ஜான்சி

ஈ) பினா 

  • மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பினாவில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிட் (BHEL)மூலம் 1.7 மெகாவாட் சோலார் ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி ஆலை இந்திய இரயில்வேக்காக தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் இழுவை அமைப்புகளுக்கான மின்சாரம் இந்த ஆலை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
  • இதன் வகையில் ரயில்வே நெட்வொர்க்கில் இயக்கப்பட்ட முதல் சூரிய மின்னுற்பத்தி நிலையம் இதுவாகும்.

7. செர்னோபில் பேரழிவு நடந்த ஆண்டு எது?

அ) 1972

ஆ) 1986 

இ) 1997

ஈ) 2000

  • 1986 ஏப்ரலில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உலகின் மிகக்கொடிய அணு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர், ஓர் அணு உலை வெடித்து ஐரோப்பா முழுவதும் அதன் கதிரியக்கக் கதிர்வீச்சு பரவியது.
  • இந்த ஆலை கியேவிலிருந்து 130 தொலைவில் உள்ள பிரிபியாட்டில் அமைந்துள்ளது. கதிர்வீச்சுக் கசிவைத் தடுப்பதற்காக இவ்வணுவுலை இப்போது ஒரு பாதுகாப்பு சாதனத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி, அடுத்த 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் எந்த மனிதனும் வாழவியலாது. இது அணுக்கழிவுகளை சேமிக்கும் மையமாக செயல்பட்டுவருகிறது.

8. 2022 மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?

அ) நோவக் ஜோகோவிச்

ஆ) ரபேல் நடால் 

இ) ரோஜர் பெடரர்

ஈ) டேனியல் மெட்வெடேவ்

  • டென்னிஸில், ரபேல் நடால் (ஸ்பெயின்) பிரித்தானிய வீரர் கேமரூன் நோரியை 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடப்பு 2022ஆம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் (அகாபுல்கோ பட்டம் எனவும் அழைக்கப்படுகிறது) ஒற்றையர் பட்டத்தை வென்றார். இது டென்னிஸ் வாழ்வில் அவரது 91ஆவது ATP பட்டமாகும். கடந்த 2005, 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ரபேல் நடால் மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

9. உலக உடல்பருமன் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 02

ஆ) மார்ச் 03

இ) மார்ச் 04 

ஈ) மார்ச் 05

  • உலக உடல் பருமன் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.04 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உடல்பருமன் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.
  • “Everybody Needs to Act” என்பது 2022’இல் வரும் உலக உடல் பருமன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. ஹேமானந்தா பிஸ்வால் என்பவர் எந்த மாநிலத்தின் முதல் பழங்குடியின முதலமைச்சராக இருந்தார்?

அ) ஹரியானா

ஆ) ஜார்கண்ட்

இ) மத்திய பிரதேசம்

ஈ) ஒடிஸா 🗹

  • ஒடிஸா மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வரும், மாநிலத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வருமான ஹேமானந்த பிஸ்வால் (82) அண்மையில் காலமானார்.
  • ஜார்சுகுடா மாவட்டத்தைச்சேர்ந்த புயான் பழங்குடியினத் -தைச்சார்ந்தவரான ஹேமானந்த பிஸ்வால், 1989-1990 வரையிலும், 1999 – 2000 வரையிலும் என இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வசதி: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்

தமிழ்நாடு, கர்நாடகா கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுவிடும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டபோது, மொத்தம் இருந்த 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற வீடுகளில், 21.76 லட்சம் (17%) வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்ததாகவும், 30.21 லட்சம் (20.4%) வீடுகளுக்கு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, தற்போது 51.97 லட்சம் (41%) வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2. 2030க்குள் புதைபடிவ எரிமம் அற்ற 500 ஜிகாவாட் எரிசக்தி பிரதமர் மோடி உறுதி

2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரிபோன்ற புதைபடிவ எரிமம் அற்ற 50% எரிசக்தி நிறுவும் திறனை இந்தியா அடையும்; இதன்மூலம், 500 ஜிகாவாட் புதைபடிவ எரிமம் அற்ற எரிசக்தித் திறன் இலக்கை அடைய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உஜாலா திட்டத்தின் கீழ் 37 கோடி LED விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 48,000 மில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருடாந்திர கரியமில மாசு 4 கோடி டன் அளவுக்கு குறைந்துள்ளது என்றார் பிரதமர் மோடி.

3. இரயில்கள் மோதி ஏற்படும் விபத்து.. தடுக்கும் ‘கவச்’ கருவி! இந்திய இரயில்வே சோதனை வெற்றி!

இரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் கருவியை இந்திய இரயில்வே வெற்றிகரமாக சோதித்துள்ளது.

லேசர் அடிப்படையிலான ‘கவச்’ என்ற கருவி, ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிரே வர நேர்ந்தால் இன்ஜின் இயக்கத்தை நிறுத்தி விபத்தைத் தடுக்கிறது.

தெலுங்கானாவில் செகந்திராபாத் அருகே இந்தக் கருவி சோதிக்கப்பட்டது.

‘கவச்’ கருவியின் அம்சங்கள்: ‘கவச்’ கருவி பொருத்தப்பட்ட இரயில் நிலையங்களில் நுழையும்போது ஒரு பாதையில் இருந்து மற்ற பாதைக்கு மாறும் முன்பு தானாக வேகத்தை 30 கிமீ அளவிற்கு குறைத்து மெதுவாகப் பயணிக்கும்.

இரயில்வே லெவல் கிராஸிங் கேட்டுகளை ‘கவச்’ கருவி பொருத்திய ரயில் நெருங்கும்போது தானாக ஒலி எழுப்பி சாலை பயன்பாட்டாளர்களை எச்சரிக்கும். விபத்தில்லாத ரயில் பயணமாக ‘கவச்’ கருவி முழு ரயிலையும் கவசமாக பாதுகாக்கும். சிவப்பு விளக்கைக் கண்டால் இரயிலை உடனே நிறுத்தும். ரயில்கள் நேருக்குநேர் வந்தாலும் இரு ரயில்களும் தானாக நின்றுவிடும். அதோடு பாரத கவசம் – அவசர நேரத்தில் ரயில் இன்ஜின் டிரைவர் பிரேக் பிடிக்க தாமதமாகும் போது ‘கவச்’ தானியங்கி கருவி ரயிலை நிறுத்தும். 2 ரயில்கள் நேருக்குநேர் மோதுவதை தடுக்கும்.

4. உலக ரேஸ் வாக்கிங்: இந்திய மகளிர் சாதனை

உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் 20 கிமீ பந்தயத்தில் இந்திய மகளிரணி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியின் 61 ஆண்டுகால வரலாற்றில் இந்திய மகளிர் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்போட்டியில் இந்திய ஆடவர் அணி கடந்த 2012இல் வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது.

5. சுழல் சூறாவளி மறைவு!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக இருந்தவரும், ஆஸ்திரேலிய வீரருமான ஷேன் வார்னே காலமானார். அவருக்கு வயது 52.

‘பால் ஆப் தி செஞ்சுரி’…

ஆஸ்திரேலிய அணிக்காக 1992 முதல் 2007 வரை 15 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார் வார்னே. அந்தக்கால கட்டத்தில் மிகச்சிறந்த ஸ்பின்னராக அறியப்படும் வார்னேவின் ‘பால் ஆப் தி செஞ்சுரி’ என்று பாராட்டப்படும் ஒரு பந்துவீச்சு மிகப்பிரபலமானதாகும். 1993இல் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது. 2-ஆவது நாளில் மைக் கேட்டிங்கிற்கு வார்னே வீசிய ஒரு லெக் பிரேக் பந்து அவர் சற்றும் கணிக்க முடியாத வகையில் திசைதிரும்பி ஸ்டம்ப் பெய்ல்ஸை தட்டியது. அத்தகைய ஓர் எதிர்பாராத பௌலிங்கை கண்டு கேட்டிங் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் சமூகமே ஆச்சரியமடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில், இலங்கையின் முத்தையா முரளீதரனை (800) அடுத்து வார்னே 708 விக்கெட்டுகள் உடன் 2ஆம் இடத்தில் உள்ளார். அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் வகையில் கடந்த 2007இல் ஆஸ்திரேலிய – இலங்கை மோதிய டெஸ்டுக்கு ‘வார்னே-முரளிதரன் கோப்பை’ டெஸ்ட் என்று பெயரிடப்பட்டது.

6. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மார்ச் 30, 31இல் மகாகவி பாரதியார் நினைவுநூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் மார்ச் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் வி திருவள்ளுவன் தெரிவித்திருப்பது:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, வானவில் பண்பாட்டு மையம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘மகாகவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்’ என்ற பன்னாட்டு ஆய்வரங்கத்தை மார்ச் 30, 31ஆம் தேதிகளில் நடத்தவுள்ளன.

7. பிரம்மோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி இந்திய கடற்படை வெற்றிகர சோதனை

இந்திய கடற்படை பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட நிலத்தாக்குதல் இலக்கை துல்லியமாகத் தாக்கி வெற்றிகரமான சோதனையை மேற்கொண்டது. நாசகார கப்பலான INS சென்னையில் இருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை தாக்கியது.

பிரம்மோஸ் ஏவுகணையும், அதனை ஏவிய ஐஎன்எஸ் சென்னை கப்பலும் உள்நாட்டிலேயே நவீன ஆற்றலுடன் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பாகும். தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய இந்தியாவின் முன்முயற்சிகளில் இந்திய கடற்படையின் பங்களிப்பாக இது அமைந்துள்ளது.

இச்சோதனைமூலம், இந்திய கடற்படை, கடலிலிருந்து வெகு தொலைவில் உள்ள நிலப்பரப்பை தேவைப்படும் இடத்திலும் நேரத்திலும் குறிவைத்து துல்லியமாகத் தாக் -கும் திறனைப்பெற்றிப்பது சாதனையாக கருதப்படுகிறது.

8. டிஜிட்டல் பல்கலைக்கழகம் – இந்திய கல்வித் துறையில் புரட்சி: இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம்

இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்றால் என்ன, அது எப்படி செயல்படும்? என்று கல்வியாளர்களும் மாணவர் சமுதாயமும் குழம்பிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் நடத்திய இணைய கருத்தரங்கு மூலம் இதற்கான அடுத்தகட்ட நகர்வு ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் பல்கலைக்கழகம் குறித்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி கல்வித்துறை அறிஞர்களையும், உயர் அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி, ‘அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து உருவாக்குவதுதான் டிஜிட்டல் பல்கலைக்கழகம். இது செயல்பாட்டுக்கு வந்தால் கல்லூரி மற்றும் பல்கலைகளில் இடம் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர் சேர்க்கைக்கு எந்த வரம்பும் இல்லை’ என்று குறிப்பிட்டு டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் வடிவத்தை கோடிட்டுக் காட்டினார்.

பிரதமர் எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாக உயர்கல்வித் துறை செயலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூடி, டிஜிட்டல் பல்கலைக்கழக திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர். அதில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகளை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற முடியும். மாணவர் சேர்க்கை இடங்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அனைவருக்கும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் வழங்க முடியும். தற்போதுள்ள நடைமுறையில் மாணவர்களை கழித்து வெளியேற்றும் சேர்க்கை முறையே பின்பற்றப்படுகிறது. இதில் பல மாணவர்கள் உயர்கல்வி மையங்களில் இடம் கிடைக்காமல் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஹப்-ஸ்போக் மாடல்’

புதிய டிஜிட்டல் பல்கலைக்கழகம், இணையத் தொடர்புடன் கூடிய ‘ஹப்-ஸ்போக் மாடல்’ மூலம் இயங்கும். அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருக்கும். அவை அனைத்திடம் இருந்தும் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் குறித்த வீடியோ விவரங்களைப் பெற்று அவற்றை மாணவர்களுக்கு வழங்கும் மையமாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் செயல்படும்.

இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மையமாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் செயல்பட்டு ஒரே இடத்தில் மாணவர்கள் சேரும் வகையில் உருவாகும். இந்த புரட்சிகரமான முயற்சிக்கு நிலையான இணையத்தொடர்பு, அவசியமான மின்னணு சாதனங்கள், மாணவர்கள் பாடங்களை கவனிக்கும் காலவரையறை, ஆன்லைன் மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறை ஆகியவை சவால்களாக இருக்கும் என்று கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், சவால்களைக் கடந்து 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கால நிர்ணயம் வகுத்துள்ளது.

இந்த முயற்சியில் பைஜுஸ் போன்ற கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள தொழில்நுட்ப உதவிகளை டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்குப் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து கல்விப்பணியில் தனியாருக்கும் முக்கியப் பங்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளை 2 மாதங்களுக்குள் உருவாக்கி வெளியிடும் பொறுப்பு யுஜிசி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 84 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே கல்லூரிகளில் சேருகின்றனர். இன்னும் 15 ஆண்டுகளில் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களில் 50 சதவீதம் பேரை உயர்கல்விக்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக, படித்தவர்கள் நிறைந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கேரள நிர்வாகவியல் ஐஐஐடி-யை தரம் உயர்த்தி அம்மாநில அரசு டிஜிட்டல் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளது. இது மத்திய அரசின் டிஜிட்டல் பல்கலைக்கழக முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. இருசக்கர வாகன விபத்தில் இறப்பு 107 சதவீதம் அதிகரிப்பு – 2021-ல் நடந்த சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 2021-ல் நடந்த 55,713 வாகனவிபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 6,852 பேர்அதிகமாகும். இருசக்கர வாகன விபத்து உயிரிழப்பு 107 சதவீதம் அதிகரித்து உள்ளது,

தமிழகத்தில் சாலை விபத்துகள், இறப்புகளைக் குறைக்க போக்குவரத்து, காவல்துறை, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறைகளோடு இணைந்து தமிழக அரசு பணியாற்றி வருகிறது. இதனால், கடந்த 5ஆண்டுகளாக உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வந்தன.

குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டில் 17 ஆயிரத்து 218 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 2020-ல் 8 ஆயிரத்து 60 ஆககுறைந்தது. அதாவது, இலக்கு நிர்ணயித்த 50 சதவீதத்தை விட 54 சதவீதமாக குறைந்தது, தமிழக அரசின் சாதனையாக இருந்தது. இந்த நிலை தற்போது மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் சாலை விபத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

2021-ல் 14,912 பேர் உயிரிழப்பு

இதுதொடர்பாக தமிழக அரசின் புள்ளிவிவரத்தில், “தமிழகத்தில் கடந்த ஆண்டில்நடந்த 55 ஆயிரத்து 713 சாலை விபத்துகளில்மொத்தம் 14 ஆயிரத்து 912 பேர் இறந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் அதிகமாகும்.

இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் இறந்துள்ளனர். லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேரும், கார்கள், டாக்சி விபத்துகளால் 2,467 பேரும், வேன் மற்றம் சிறிய வகை சரக்கு வாகனங்களால் 1,140 பேரும் இறந்துள்ளனர். அதுபோல், தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 4,129 பேரும், மாநில நெடுஞ்சாலை விபத்துகளில் 4,929 பேரும் இறந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Madhabi Puri Buch has been appointed as the first woman chairperson of which regulatory body?

A) SEBI 

B) NABARD

C) PFRDA

D) IRDAI

  • The Government has appointed Madhabi Puri Buch as the new chairperson of market regulator – Securities and Exchange Board of India. She is the first woman chairperson of SEBI. Ms Madhabi Puri Buch, the former head of ICICI Securities, replaces Ajay Tyagi.

2. As per the 2nd advanced estimates of National Income, what is the real GDP Growth of India in 2021–22?

A) 5.6 percent

B) 7.1 percent

C) 8.9 percent 

D) 10.5 percent

  • The National Statistical Office (NSO), Ministry of Statistics and Programme Implementation has released the 2nd Advance Estimates of National Income, 2021–22 as well as Quarterly Estimates of GDP for the quarter October–December (Q3) of 2021–22.
  • The growth in GDP during 2021–22 is estimated at 8.9 percent as compared to a contraction of 6.6 percent in 2020–21.

3. The ‘Yilan’ Crater, the largest impact crater on Earth, has been discovered in which country?

A) Russia

B) China 

C) Australia

D) Japan

  • A crescent–shaped crater in Northeast China named the ‘Yilan’ Crater holds the record as the largest impact crater on Earth that formed in the last 100,000 years. Before 2020, the only other impact crater ever discovered in China was found in Xiuyan, Liaoning, as per a statement from the NASA Earth Observatory.
  • The Yilan crater measures about 1.85 kilometers across and likely formed about 46,000 to 53,000 years ago, based on radiocarbon dating.

4. The Indian Navy conducted ‘Operational Demonstration’ at which city?

A) Pune

B) Kochi

C) Visakhapatnam 

D) Ernakulam

  • The Indian Navy conducted ‘Operational Demonstration’ at Visakhapatnam and a colourful International City Parade. It showcased various operations including special operations and sky diving, rescue operations and fly–past by naval aircraft.
  • The event was conducted as part of the ongoing Multilateral Exercise MILAN 22. Chief Minister of Andhra Pradesh YS Jagan Mohan Reddy was the Chief Guest for the event.

5. ‘National Level Awareness Programme – Sambhav’ is an initiative of which Union Ministry?

A) Ministry of Education

B) Ministry of MSME 

C) Ministry of Skill Development and Entrepreneurship

D) Ministry of Labour and Employment

  • Ministry of Micro, Small and Medium Enterprises is celebrating its ‘Iconic week’ under ‘Azadi ka Amrit Mahosav’ from 28.02.2022 to 06.03.2022.
  • Ministry of MSME will launch Phase II of its ‘National Level Awareness Programme – Sambhav’, through which more than one lakh students from 1300 colleges all across the country will be motivated to take up entrepreneurship. Phase I of the scheme was launched in 2021.

6. A solar photovoltaic power plant for the Indian Railways, which directly feeds power to traction, has been developed in which place?

A) Mumbai

B) Kolkata

C) Jhansi

D) Bina 

  • A 1.7–megawatt solar photovoltaic plant has been commissioned by Bharat Heavy Electricals Ltd. (BHEL) at Bina, Madhya Pradesh for the Indian Railways. Power to the traction systems of Indian Railways will be fed directly through this plant.
  • This is the first such Solar Power Plant commissioned on the Indian Railways network.

7. In which year, did the Chernobyl Disaster happen?

A) 1972

B) 1986 

C) 1997

D) 2000

  • World’s deadliest nuclear accident occurred at the Chernobyl nuclear plant in April 1986. Then, a nuclear reactor exploded and spread radioactive radiation across Europe. This plant is located in Pripyat, which is at a distance of 130 from Kyiv.
  • The reactor has now been covered with a protective device in order to prevent radiation leakage. Entire plant has been disabled. According to scientists, no human can live in this place for the next 24 thousand years. It acts as a storage centre for nuclear waste.

8. Which Tennis player won the Mexican Open Title 2022?

A) Novak Djokovic

B) Rafael Nadal 

C) Roger Federer

D) Daniil Medvedev

  • In tennis, Rafael Nadal (Spain) beat British number one Cameron Norrie 6–4 6–4 to win the singles title of Mexican Open 2022 (also known as Acapulco title).
  • This is the 91st ATP title of his career. Previously, Rafael Nadal has won the Mexican Open title in 2005, 2013 and 2020.

9. Which day is observed as World Obesity Day?

A) March 02

B) March 03

C) March 04 

D) March 05

  • World Obesity Day is observed every year on March 04. It is observed to spread awareness about obesity and encourage action towards its elimination. The theme of World Obesity Day 2022 is ‘Everybody Needs to Act’.

10. Hemananda Biswal was the first tribal chief minister of which state?

A) Haryana

B) Jharkhand

C) Madhya Pradesh

D) Odisha 

  • Odisha’s first tribal chief minister as well as last Congress chief minister of the state, Hemananda Biswal passed away. He was 82. Biswal, a Bhuyan tribal from Jharsuguda district, served as the chief minister twice from 1989 to 1990 and 1999 to 2000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!