Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் வெளியிடப்பட்ட ‘பாலி பிரகடனம்’ எதன் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதை நோக்கமெனக் கொண்டுள்ளது?

அ) தங்கம்

mercury | Definition, Uses, Density, & Facts | Britannica

ஆ) பாதரசம் 

இ) வனவுயிரிகள்

ஈ) மனித உடலுறுப்புகள்

  • பாதரசம் குறித்த மினமாட்டா தீர்மானம் பற்றிய (COP-4) உறுப்புநாடுகளின் நான்காவது கூட்டம் அண்மையில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்றது.
  • சுவிச்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற COP-5’இல் பாதரசத்துடன் கூடிய நான்கு வகையான பொருட்களின் பயன்பாட்டை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத பாதரச வர்த்தகத்தைத் தடுக்க ‘பாலி பிரகடனம்’ வெளியிடப்பட்டது.

2. ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பார் எந்த அமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார்?

அ) ஐரோப்பிய ஒன்றியம்

NATO chief Jens Stoltenberg to head Norway central bank2022

ஆ) NATO 

இ) G20

ஈ) G7

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பின் (NATO) பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் பதவிக்காலம் 2023 செப்.30 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பிரஸ்ஸல்ஸில் நடந்த NATO உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் மற்ற NATO தலைவர்களும் ஜென்ஸ் சுடோல்டன்பெர்க்கின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டனர். நார்வேயின் முன்னாள் பிரதமரான அவர், கடந்த 2014’இல் NATO பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த 2021 செப்டம்பரில் முடிவடைந்தது.

3. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?

அ) ISRO

Functions of AAI (Airports Authority of India) - Paper Tyari

ஆ) DRDO

இ) BEL 

ஈ) HAL

  • இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் அதன் R&D முன்னெடுப்பின்கீழ், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை கூட்டாக உருவாக்க பாரத் மின்னணு நிறுவனத்துடன் (BEL) ஒப்பந்தம் செய்துள்ளது. ஹைதராபாத்தில், ‘WINGS இந்தியா-2022’ நிகழ்ச்சியின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

4. ‘பிரஸ்தான்’ என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் ஒரு கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) இந்திய இராணுவம்

Indian Navy - Wikipedia

ஆ) இந்திய கடற்படை 

இ) இந்திய வான்படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

  • ‘பிரஸ்தான்’ என்பது இந்திய கடற்படையால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியாகும். இதில் இந்திய விமானப்படை, கடலோர காவல்படை, ONGC, மும்பை துறைமுக அறக் கட்டளை, சுங்கம், மாநில மீன்வளத்துறை, கடல்சார் காவல்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்கேற்பு அடங்கும். இந்தப் பயிற்சியானது கடல்கடந்த பாதுகாப்பை உறுதிசெய்வதையும், கடல்சார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து கடல்சார் பங்குதாரர்களின் முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிதியத்தைத் தொடங்க முடிவு செய்துள்ள பரஸ்பர நிதியம் எது?

அ) ஐசிஐசிஐ புருடென்ஷியல் பரஸ்பர நிதியம்

HDFC Mutual Fund announces New Fund Offer - HDFC Multi Cap Fund; NFO to open on 23rd Nov | Zee Business

ஆ) HDFC பரஸ்பர நிதியம் 

இ) SBI பரஸ்பர நிதியம்

ஈ) கனரா ரோபெகோ பரஸ்பர நிதியம்

  • HDFC பரஸ்பர நிதியம், இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிதியமான HDFC பாதுகாப்பு நிதிக்கான திட்டத் தகவல் ஆவணத்தை SEBI-யிடம் தாக்கல் செய்தது. இது ஒரு திறந்தநிலை சரிஒப்பு திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் அதுசார்ந்த துறை நிறுவனங்களில் முதலீடு செய்யும்.

6. 2021-22 நிதியாண்டில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 3ஆமிடத்திலுள்ள இந்திய மாநிலம் எது?

அ) மும்பை

Delhi Govt Logo 2 By Rebecca - Delhi Government Logo Transparent PNG - 1455x485 - Free Download on NicePNG

ஆ) புது தில்லி 

இ) சண்டிகர்

ஈ) புதுச்சேரி

  • 2021-22 பொருளாதார ஆய்வின்படி, சிக்கிம் மற்றும் கோவாவுக்கு அடுத்தபடியாக தனிநபர் வருமானத்தில் தில்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்த ஆய்வின்படி, தில்லியின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 16.81 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் `4,01,982ஆக உள்ளது. தில்லியின் தனி நபர் வருமானம் 2021-22’இல் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

7. ‘MSME செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுப் -படுத்துதலை’ (RAMP) ஆதரிக்கின்ற நிறுவனம் எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

Cabinet approves USD 808 million for “Raising and Accelerating MSME Performance” - NewsOnAIR -

ஆ) உலக வங்கி 

இ) UNICEF

ஈ) உலக பொருளாதார மன்றம்

  • உலக வங்கியின் உதவியுடன் ‘சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்’ திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது `6,062.45 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்தது. இப்புதிய திட்டம் 2022-23ஆம் நிதியாண்டில் தொடங்கும்.
  • சந்தை மற்றும் கடனுக்கான அணுகலை மேம்படுத்துதல், மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மத்திய-மாநில இணைப் -புகள் மற்றும் கூட்டுகளை மேம்படுத்துதல், தாமதமான பணஞ்செலுத்துதல்குறித்த சிக்கல்களை களைதல் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பசுமைப்படுத்துதல் போன்றவற்றை இத்திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.

8. மண்டலம் முழுவதும் 100 சதவீத மின்மயமாக்கலை நிறைவுசெய்துள்ள இரயில்வே பிரிவு எது?

அ) கொங்கன் இரயில்வே 

Konkan Railway's Incredible yet Little Known Indian Success Story

ஆ) வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே

இ) கிழக்குக் கடற்கரை இரயில்வே

ஈ) தெற்கு மத்திய இரயில்வே

  • கொங்கன் இரயில்வே சமீபத்தில் மண்டலம் முழுவதும் 100% மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ளது மற்றும் அது நிலையான வளர்ச்சிக்கான புதிய வரையறைகளை அமைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ரோகா மற்றும் கர்நாடக மாநிலத்தின் தோக்கூர் இடையேயான 741 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில், கொங்கன் இரயில்வே மின்மயமாக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. இந்த மின்மயமாக்கல் திட்டத்திற்கான செலவு `1287 கோடி.

9. இந்தியாவின் எந்த ஆற்றின் கரையில் காசிரங்கா தேசியப் பூங்கா எந்த அமைந்துள்ளது?

அ) கங்கை

Safari Game Drive in Kaziranga National Park | andBeyond

ஆ) யமுனா

இ) பிரம்மபுத்திரா 

ஈ) சட்லெஜ்

  • காசிரங்கா தேசியப் பூங்காவானது அஸ்ஸாமில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பரவியுள்ளது. இந்தத் தேசியப் பூங்கா 2022-இல் 14ஆவது காண்டாமிருகக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது. 2018 புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது 200 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்க -ள் அப்பூங்காவில் அதிகரித்துள்ளன.

10. சிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கிசார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?

அ) HDFC வங்கி

Axis Bank | Customer Success | Cloudera

ஆ) ஆக்சிஸ் வங்கி 

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) YES வங்கி

  • இந்திய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, அமெரிக்க நாட்டு வங்கியான சிட்டி குழுமத்தின் இந்திய நுகர்வோர் வங்கிசார் வணிகங்களை கையகப்படுத்தி உள்ளது. 13 சந்தைகளில் அதன் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து அவ்வங்கி வெளியேறுகிறது. இதன் மதிப்பு `12,325 கோடியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பெண்கள், பொதுமக்களுக்கான ‘காவல் உதவி’ செயலி அறிமுகம்

காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக பெண்கள், பொதுமக்களுக்கான சேவை, ‘காவல் உதவி’ செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக் -கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.

‘காவல் உதவி’ செயலியின் சிறப்பம்சங்கள்: ‘அவசரம்’ உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற ‘அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க ‘Dial-100’ என்ற செயலி ‘காவல் உதவி’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி / புகாரளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார், முதியோர் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள் / குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம். இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் / நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (e-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார் (Lost Document Report), CSR / FIR –குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect), காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112-India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

2. வெளியுறவுச் செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

மத்திய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்தது.

தற்போது மத்திய வெளியுறவுச் செயலராக பதவி வகிக்கும் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஏப்.30-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில், வினய் மோகன் குவாத்ரா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

3. ஏப்.11-இல் இந்தியா-அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா இடையே ஏப்ரல் 11-ஆம் தேதி 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா செல்லவுள்ளனர். அந்நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இருவரும் 2+2 பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான வெளியுறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இம்மாத மத்தியில் இந்தியா-ஜப்பான் இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. QUAD கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. இந்தியர்கள் இருவருக்கு ‘கிராமி’ விருது!

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

64-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரத்தில் நடைபெற்றது. அதில், ‘டிவைன் டைட்ஸ்’ என்ற பாடல் தொகுப்புக்காக பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கெஜ், ‘சிறந்த புதிய ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றார்.

ரிக்கி கெஜ் பெறும் இரண்டாவது கிராமி விருது இதுவாகும். அவர் ஏற்கெனவே ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ என்ற பாடலுக்காக 2015-இல் கிராமி விருதைப் பெற்றுள்ளார்.

மும்பையில் பிறந்த பாடகியான பால்குனி ஷா, ‘சிறார்களுக்கான சிறந்த ஆல்பம்’ என்ற பிரிவில், ‘எ கலர் புல் வேர்ல்டு’ பாடலுக்காக கிராமி விருதைப் பெற்றார். அவர் வெல்லும் முதல் கிராமி விருது இதுவாகும்.

1. ‘Bali Declaration’ which was unveiled recently, aims to prevent illegal trade of which product?

A) Gold

mercury | Definition, Uses, Density, & Facts | Britannica

B) Mercury 

C) Wildlife

D) Human Organs

  • The Fourth meeting of the Conference of the Parties to the Minamata Convention on Mercury (COP–4) was held recently at Bali, Indonesia.
  • It had been decided that 10 types of products contain mercury that can be phased out, while the use of four types of products with mercury should be reviewed at COP–5 in Geneva, Switzerland. ‘Bali Declaration’ was unveiled to prevent illegal mercury trade.

2. Jens Stoltenberg is the Secretary–General of which organisation?

A) EU

NATO chief Jens Stoltenberg to head Norway central bank2022

B) NATO 

C) G20

D) G7

  • North Atlantic Treaty Organization (NATO) extended the term of Secretary–General Jens Stoltenberg by a year until September 30, 2023.
  • At the NATO summit in Brussels, the US President Joe Biden and other NATO leaders agreed to extend Stoltenberg’s term. He was a former Norwegian prime minister and was named NATO Secretary–General in 2014. His term was due to expire in September 2021.

3. Airports Authority of India (AAI), partnered with which institution to develop indigenous Air Traffic Management Systems?

A) ISRO

Functions of AAI (Airports Authority of India) - Paper Tyari

B) DRDO

C) BEL 

D) HAL

  • Airports Authority of India (AAI), under its R & D initiative, has entered into an agreement with Navratna Defence PSU Bharat Electronics Limited (BEL) to jointly develop indigenous Air Traffic Management Systems. The Agreement was signed during ‘Wings India 2022’ in Hyderabad.

4. ‘Prasthan’ is an offshore security exercise, conducted by which Indian Armed Force?

A) Indian Army

Indian Navy - Wikipedia

B) Indian Navy 

C) Indian Air Force

D) Indian Coast Guard

  • ‘Prasthan’ is an offshore security exercise, conducted by the Indian Navy every six months. It includes participation from the Indian Air Force, Coast Guard, ONGC, Mumbai Port Trust, Customs, state fisheries department, Marine Police among others.
  • This exercise aims to ensure offshore security and to integrate efforts of all maritime stakeholders involved in offshore defence.

5. Which Mutual fund House has filed for launching India’s first Defence Fund?

HDFC Mutual Fund announces New Fund Offer - HDFC Multi Cap Fund; NFO to open on 23rd Nov | Zee Business

A) ICICI Prudential Mutual Fund

B) HDFC Mutual Fund 

C) SBI Mutual Fund

D) Canara Robeco Mutual Fund

  • HDFC Mutual Fund filed a scheme information document (SID) with SEBI for India’s first Defence Fund – HDFC Defence Fund.
  • It is an open–ended equity scheme, which will invest in defence & allied sector companies.

6. Which Indian state was ranked third in terms of per capita income in the fiscal year 2021–22?

A) Mumbai

Delhi Govt Logo 2 By Rebecca - Delhi Government Logo Transparent PNG - 1455x485 - Free Download on NicePNG

B) New Delhi 

C) Chandigarh

D) Puducherry

  • According to the Economic Survey of Delhi 2021–22, Delhi ranked third in terms of per capita income behind Sikkim and Goa. As per the survey, Delhi’s per capita income grew 16.81 per cent year–on–year to Rs 4,01,982 in fiscal 2021–22. The per capita income of Delhi was three times higher than the national average in 2021–22.

7. ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP) is supported by which global institution?

A) International Monetary Fund

Cabinet approves USD 808 million for “Raising and Accelerating MSME Performance” - NewsOnAIR -

B) World Bank 

C) UNICEF

D) World Economic Forum

  • The Union Cabinet has approved USD 808 million (₹6,062.45 crore) for a new scheme ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP). The new scheme assisted by the World Bank is expected to commence in the financial year of 2022–23.
  • It aims to improve access to market and credit of the MSMEs. It focuses on strengthening institutions and governance of the MSME programme, and support to market access and access to finance.

8. Which section of Railways has completed 100 per cent electrification across the zone?

A) Konkan Railway 

Konkan Railway's Incredible yet Little Known Indian Success Story

B) North East Frontier Railway

C) East Coast Railway

D) South Central Railway

  • Konkan Railway has recently completed 100 per cent electrification across the zone and it has set new benchmarks for sustainable development.
  • The Konkan Railway has completed the electrification work on its complete 741 km long route between Roha in Maharashtra and Thokur in Karnataka. The cost of this electrification project is Rs 1287 crore.

9. Kaziranga National Park is located along which Indian River?

A) Ganga

Safari Game Drive in Kaziranga National Park | andBeyond

B) Yamuna

C) Brahmaputra 

D) Sutlej

  • Kaziranga National Park is a protected area in Assam, spread along the Brahmaputra River. The National Park has successfully completed 14th Rhino Census in 2022. There was increase of 200 one–horned rhinoceros from the 2018 figures.

10. Which bank acquired the Indian consumer banking businesses of Citibank?

A) HDFC Bank

Axis Bank | Customer Success | Cloudera

B) Axis Bank 

C) ICICI Bank

D) Yes Bank

  • Indian private sector lender Axis Bank has acquired the Indian consumer banking businesses of US bank Citigroup. The sale includes businesses of credit cards, retail banking, wealth management and consumer loans for Rs 12,325 crore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!