Tnpsc

5th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபத்தில் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் தொடங்கிய, 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்ற பாதுகாப்புப்பயிற்சியின் பெயர் என்ன?

அ) வஜ்ர பிரகார்

ஆ) டஸ்ட்லிக் II

இ) கருட சக்தி

ஈ) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 

  • நடப்பாண்டின் (2021) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற பயிற்சியானது ஆப்பிரிக்காவின் கீழைக்கடற்கரையில் ஜூலை.26 அன்று தொடங்கியது. இது கீழை ஆப்பிரிக்கா மற்றும் மேலை இந்தியப்பெருங்கடலில், தேசிய மற்றும் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு வருடாந்திர கடற்சார் பயிற்சியாகும். இப்பயிற்சியின் நடப்பாண்டு (2021) பதிப்பில், 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் IMO, UNODC, EUNAVFOR, CRIMARIO மற்றும் EUCAP சோமாலியா போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. INS தல்வார், இதில் பங்கேற்றது.

2. ‘இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?

அ) தஞ்சாவூர் 

ஆ) திருநெல்வேலி

இ) சென்னை

ஈ) சேலம்

  • மக்களவையானது சமீபத்தில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. இது, ஹரியானாவில் உள்ள குண்டிலியில் உள்ள NIFTEM (தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு & மேலாண்மை நிறுவனம்) & தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள IIFPT (உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றுக்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

3. இந்தியாவின் முதல் பசுமை சிறப்புப்பொருளாதார மண்டலம் எது?

அ) சென்னை (தமிழ்நாடு)

ஆ) சாண்டா குரூஸ் (மகாராஷ்டிரா)

இ) கொச்சி (கேரளா)

ஈ) கண்ட்லா (குஜராத்) 

  • CII’இன் இந்திய பசுமை கட்டடக் கவுன்சிலால் (IGBC) தற்போதுள்ள நகரங்களுக்கான IGBC பசுமை நகரங்கள் பிளாட்டினம் மதிப்பீட்டை அடைந்த முதல் பசுமை சிறப்பு பொருளாதார மண்டலமாக கண்ட்லா மாறியுள்ளது.
  • கண்ட்லா, ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலமாகும். இது, இந்தியாவின் மிகப்பெரிய பல தயாரிப்பு செயல்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலமாக கருதப்படுகிறது. இது, குஜராத்தின் மேற்கு கடற்கரையில் கட்ச் வளைகுடாவில் கண்ட்லா துறைமுகத்திலிருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

4. UNESCO’இன் ‘உலக பாரம்பரிய இடமாக’ அறிவிக்கப்பட்டுள்ள இராமப்பா கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) தெலுங்கானா 

ஈ) மகாராஷ்டிரா

  • ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) சமீபத்தில் தெலுங்கானாவின் பாலாம்பேட்டையில் அமைந்துள்ள 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராமப்பா கோவிலுக்கு ‘உலக பாரம்பரிய இடம்’ என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தக் கோவில், 1213ஆம் ஆண்டில் காகத்திய வம்சத்தின் ரீசர்லா ருத்ராவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. உலக பாரம்பரியக் குழுவில் உள்ள 17 நாடுகள் ஒருமனதாக இதற்கு ஆதரவு தெரிவித்தன.

5. கேரள கால்நடை மருத்துவர் ஒருவர் அண்மையில் எதிலிருந்து பயோடீசலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமையைப் பெற்றார்?

அ) கண்ணாடி

ஆ) பருத்தி

இ) கோழிக்கழிவுகள் 

ஈ) மீன் கழிவுகள்

  • கால்நடை மருத்துவரிலிருந்து ஒரு கண்டுபிடிப்பாளராக மாறிய ஜான் ஆபிரகாம், வெட்டப்பட்ட கோழிகளின் கழிவுகளிலிருந்து பயோடீசலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமையைப்பெற்றுள்ளார். இந்தப் பயோடீசல், டீசலின் தற்போதைய விலையின் 40 சதவீதத்தில் லிட்டருக்கு 38 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இது காற்று மாசுபாட்டை பாதியாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய காப்புரிமை அலுவலகம், ‘கோழி எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசலை’ கண்டுபிடித்ததற்காக காப்புரிமையை வழங்கியுள்ளது.

6. எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த மக்கள், 2019-20’இல், அதிக அளவு மீன் உணவை உட்கொண்டுள்ளனர்?

அ) கேரளா

ஆ) குஜராத்

இ) இலட்சத்தீவுகள் 

ஈ) சத்தீஸ்கர்

  • இந்தியாவில் மீன்நுகர்வு குறித்து மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2019-20’இல் லட்சத்தீவைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 105.6 கிலோ மீனைச் சாப்பிட்டுள்ளனர். எனில் அவர்கள் நாளொன்றுக்கு 300 கிராம் மீன் சாப்பிடுகின்றனர். அதே வேளையில் ஹரியானா மக்கள் ஓராண்டுக்கே இவ்வளவுதான் உண்கிறார்கள்.
  • தேசிய சராசரி ஆண்டுக்கு சுமார் 6.46 கிலோவாக உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 59 கிலோ மீனைச் உண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 25.45 கிலோவுடன் திரிபுரா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில், நாட்டில் பிடிபட்ட மீன்களின் அளவு 141.64 லட்சம் டன் ஆகும்; அதில் 30% ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

7. சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற 13 வயது மோமிஜி நிஷியா சார்ந்த விளையாட்டு எது?

அ) ஜிம்னாஸ்டிக்ஸ்

ஆ) ஸ்கேட்போர்டு 

இ) நீச்சல்

ஈ) துப்பாக்கிச்சுடுதல்

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். ஆடவர் போட்டியிலும் ஜப்பானிய வீரர் யூடோ ஓரிகோம் இந்த விளையாட்டின் முதல் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 13 வயதான பிரேசிலியர் ரைஸ்ஸா லீல் இரண்டாவது இடத்தையும், ஜப்பானின் புனா நகாயாமா வெண்கலமும் வென்றனர்.

8. ‘ஆபரேஷன் விஜய்’ என்பது எந்த நாட்டிற்கு எதிராக இந்தியா நடத்திய ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்?

அ) சீனா

ஆ) பாகிஸ்தான் 

இ) மியான்மர்

ஈ) இலங்கை

  • பொதுவாக கார்கில் போர் என்றழைக்கப்படுகிற ‘ஆபரேஷன் விஜய்’, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். அது, 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26ஆம் தேதி விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. அது போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறிக்கிறது.

9. “Vision for Everyone” என்ற தீர்மானத்தை அங்கீகரித்துள்ள உலகளாவிய அமைப்பு எது?

அ) UNGA 🗹

ஆ) WHO

இ) உலக வங்கி

ஈ) AIIB

  • ஐநா பொது அவை தனது முதல் “Vision for Everyone” தீர்மானத்தை அங்கீகரித்தது. இந்தத் தீர்மானம் வங்காளதேசம், ஆன்டிகுவா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் நிதியளித்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இதற்கு நிதியளித்தன.
  • 2030ஆம் வாக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என ஐநா பொது அவை தனது 193 உறுப்புநாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

10. மத்திய வேளாண் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண் டிஜிட்டல் சூழலமைப்பின் பெயர் என்ன?

அ) அக்ரிஸ்டேக் 

ஆ) அக்ரோ இந்தியா

இ) ஆத்மநிர்பார் அக்ரி

ஈ) கிசான்ஸ்டேக்

  • ‘அக்ரிஸ்டேக்’ என்னும் நாட்டின் வேளாண் டிஜிட்டல் சூழலமைப்பை உருவாக்கும் திட்டத்தை வேளாண் அமைச்சகம் தொடங்கியுள்ளது. உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வேளாண் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அரசுக்குத் திட்டமிடல் செய்ய உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உழவர்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலப்பதிவுகளைப் பயன்படுத்தி, தேசிய உழவர்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வேளாண் அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ கிராம் பிரிவு குத்துச் சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 3ஆவது பதக்கமாகும். அரையிறுதிக்கு முன்னேறியிருந்த லவ்லினா, அச்சுற்றில் துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியிடம் (0-5) வீழ்ந்தார்.

குத்துச்சண்டையின் அரையிறுதிகளில் தோல்வி காணுவோருக்கும் வெண்கலம் வழங்கப்படுகிறது. இந்தியாவுக்காக ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற 3ஆவது போட்டியாளர் லவ்லினா. முன்னதாக விஜேந்தர் சிங் (2008 பெய்ஜிங்), மேரி கோம் (2012 லண்டன்) ஆகியோர் இதேபோல் வெண்கலம் வென்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் லவ்லினாவுக்கு முன்பாக, பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளியும், பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து வெண்கலமும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

4ஆவது பதக்கத்தை உறுதி செய்தார் ரவி தாஹியா

இந்தியாவுக்காக, மல்யுத்தத்தில் ஒரு பதக்கத்தை ரவி தாஹியா உறுதி செய்துள்ளார். ஆடவருக்கான 57 கிலோ கிராம் பிரிவு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள அவர், தங்கம் அல்லது வெள்ளியை கைப்பற்றுவார்.

இதன்மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, சுஷீல் குமார் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவ்வாறு இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அதில் வெள்ளி வென்றிருந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக முதலில் பதக்கம் வென்றது கே டி ஜாதவ் ஆவார். அவர் 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். இந்த ஒலிம்பிக்கில் இன்னும் ஹாக்கி, தடகளம் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

2. இந்தியாவில் முதல்முறை; ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். நீரழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. பரவா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக `242 கோடி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, நீரழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தில், முதற்கட்டமாக 30 இலட்சம் பேர் பயன்பெறுவர்.

3. ‘12பி’ அந்தஸ்து பட்டியலில் இடம்பெற்றது தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்

சென்னை காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக்குழு ‘12பி’ அந்தஸ்து வழங்கியுள்ளது. இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்ட செய்தி:

ஆசிரியர்கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் கடந்த 2008’இல் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி, ‘12பி’ அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதியுதவி, கல்விசார்ந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும்.

4. தடகளம்: நீரஜ் சோப்ரா அசத்தல்

ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். 15 போட்டியாளர்கள் பங்கேற்ற ‘ஏ’ பிரிவு தகுதிச்சுற்றில் அவரே முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

1. What is the name of the Defence Exercise by 12 Eastern African countries, which recently commenced along the East Coast of Africa?

A) Vajra Prahar

B) DUSTLIK II

C) Garuda Shakti

D) Cutlass Express 

  • Exercise Cutlass Express 2021, commenced on July 26 along the East Coast of Africa. It is an annual maritime exercise conducted to promote national and regional maritime security in East Africa and the Western Indian Ocean.
  • The 2021 edition of the exercise involves the participation of 12 Eastern African countries, US, UK, India and various international organisations, like IMO, UNODC, EUNAVFOR, CRIMARIO and EUCAP Somalia. Indian Naval Ship (INS) Talwar is participating in Exercise Cutlass Express 2021.

2. Where is ‘Indian Institute of Food Processing Technology’ located?

A) Thanjavur 

B) Tirunelveli

C) Chennai

D) Salem

  • Lok Sabha has recently passed National Institutes of Food Technology, Entrepreneurship and Management Bill, 2021. It has awarded the status of ‘Institutions of National Importance’ to NIFTEM (National Institute of Food Technology Entrepreneurship and Management) at Kundli in Haryana and IIFPT (Indian Institute of Food Processing Technology) at Thanjavur in Tamil Nadu.

3. Which is the first Green Special Economic Zone of India?

A) Chennai (Tamil Nadu)

B) Santa Cruz (Maharashtra)

C) Cochin (Kerala)

D) Kandla (Gujarat) 

  • Kandla Special Economic Zone (KASEZ) is the First Green SEZ to achieve the IGBC Green Cities Platinum Rating for Existing Cities, by CII’s Indian Green Building Council (IGBC).
  • KASEZ was Asia’s first Export Processing Zone and it is considered as India’s largest multi–product functional SEZ. It is situated on the gulf of Kutch on the west coast of Gujarat at a distance of 9 Kms from Kandla port.

4. Ramappa Temple, which has been conferred with the UNESCO ‘World Heritage Site’ tag, is situated in which state?

A) Kerala

B) Karnataka

C) Telangana 

D) Maharashtra

  • The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) has recently conferred the ‘World Heritage Site’ status to the 13th–century Ramappa which is situated in Palampet, Telangana.
  • This temple is said to be built in the year 1213 by Recharla Rudra of Kakatiya Dynasty. At the world heritage committee, a consensus of 17 countries supported this move.

5. A Kerala Veterinary Doctor has recently received patent for inventing biodiesel from which product?

A) Glass

B) Cotton

C) Chicken waste 

D) Fish waste

  • John Abraham, a veterinary doctor turned inventor, has received the patents for inventing biodiesel from slaughtered chicken waste. The biodiesel offers mileage of over 38 km per litre at around 40 per cent of the current price of diesel. It is also expected to lower the air pollution by half. The Indian Patent Office granted the patent for inventing ‘biodiesel produced from rendered chicken oil’.

6. Which Indian state/UT people consumed the highest quantity of fish in 2019–20?

A) Kerala

B) Gujarat

C) Lakshadweep 

D) Chhattisgarh

  • As per a recent data produced in the Lok Sabha on fish consumption in India, people from Lakshadweep ate 105.6 kg fish per person in 2019–20. They eat 300 gm of fish every day, while the people of Haryana need a year to consume as much.
  • The national average was at around 6.46 kg a year. Andaman and Nicobar Islands came second with an annual per capita fish consumption of 59 kg. Tripura was at third position with 25.45 kg. During 2019–20, the quantity of fish caught in the country was 141.64 lakh tonne, 30% of which is produced from Andhra Pradesh.

7. 13–year–old Momiji Nishiya, who recently won gold medal in the Tokyo Olympics, plays which sports?

A) Gymnastics

B) Skateboard 

C) Swimming

D) Shooting

  • Skateboarding player, 13–year–old Momiji Nishiya became the youngest gold medallist from Japan as she won the women’s street skateboarding event of the 2020 Olympics. Another Japanese player Yuto Horigome had won the first ever men’s gold in the sport recently.
  • Nishiya dominated Aori Nishimura, the reigning world champion, in the final. 13–year–old Brazilian Rayssa Leal was second and Japan’s Funa Nakayama bagged the bronze.

8. Operation Vijay was a Major Defence operation conducted by India against which nation?

A) China

B) Pakistan 

C) Myanmar

D) Sri Lanka

  • Operation Vijay or more commonly called as the Kargil war, was a defence operation against Pakistan, conducted in the year 1999. July 26th of every year is celebrated as the Vijay Diwas, which marks India’s victory against Pakistan in the war.

9. Which global body approved its first–ever “Vision for Everyone” resolution?

A) UNGA 

B) WHO

C) World Bank

D) AIIB

  • The UN General Assembly approved its first–ever resolution on vision. The “Vision for Everyone” resolution was sponsored by Bangladesh, Antigua, and Ireland, and co–sponsored by over 100 countries.
  • UNGA called on its 193 member nations to ensure access to eye care for everyone in their countries to help at least 1.1 billion people with vision impairment who currently lack eye services, by 2030.

10. What is the name of the digital ecosystem of agriculture, being created by the Ministry of Agriculture?

A) Agristack 

B) Agro India

C) Atmanirbhar Agri

D) Kisanstack

  • The Agriculture Ministry has commenced the project of creating ‘Agristack’, which is a digital ecosystem of agriculture in the country. It aims to help the government in effective planning towards increasing the income of farmers and improving the efficiency of the agriculture sector.
  • Recently, the Agriculture Ministry also announced that the Government is aiming to create a National Farmers Database using digitised land records, to provide personalised services to farmers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!