TnpscTnpsc Current Affairs

5th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

5th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 5th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ஆண்டுதோறும் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 1 டிசம்பர்

ஆ. 3 டிசம்பர்

இ. 5 டிசம்பர்

ஈ. 7 டிசம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 டிசம்பர்

  • உலக மாற்றுத்திறனாளிகள் நாளானது ஆண்டுதோறும் டிசம்பர்.3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மாற்றுத் திறனாளிகள் நாளானது கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான உலக மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் தோராயமாக 15 சதவீதம் பேர், ஏதோவொரு வகையான ஊனத்துடன் வாழ்கின்றனர். மொத்த ஊனமுற்றவர்களில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

2. எந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களை உருவாக்க ஆற்றல் திறன்கொண்ட கணினியல் தளத்தை உருவாக்கியுள்ளனர்?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி தில்லி

இ. இந்திய அறிவியல் கழகம்

ஈ. ஐஐடி பம்பாய்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்திய அறிவியல் கழகம்

  • இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) அமைந்துள்ள நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் (CeNSE), ஆராய்ச்சியாளர்கள், அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களை உருவாக்குவதில் உறுதியளிக்கும் அதிக ஆற்றல் திறன்கொண்ட கணினி தளத்தை உருவாக்கியுள்ளனர். நிரப்பு உலோக–ஆக்சைடு குறைக்கடத்திகளை (CMOS) பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘மெமிரிஸ்டர்கள்’ எனப்படும் கூறுகளை இக்குழுவானது பயன்படுத்தியது; அவற்றால் தரவைச் சேமிக்கவும் கணக்கீடு செய்யவும் முடியும்.

3. அண்மைய தரவுகளின்படி, 2010 மற்றும் 2021க்கு இடையில் இந்தியாவில் காணப்பட்ட வருடாந்திர HIV தொற்று விகிதத்தின் போக்கு என்ன?

அ. குறைகிறது

ஆ. உயர்த்துதல்

இ. எந்த மாற்றமும் இல்லை

ஈ. தரவு எதுவும் கிடைக்கவில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. குறைகிறது

  • சமீபத்திய தரவுகளின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 2010 மற்றும் 2021க்கு இடையில் நாட்டின் வருடாந்திர HIV தொற்று விகிதம் 46% குறைந்துள்ளது என்று அறிவித்தது. இந்தச் சரிவு உலகளாவிய சராசரியான 32 சதவீதத்திற்கு எதிராக உள்ளது. NACOஇன் கூற்றுப்படி, எய்ட்ஸ் தொடர்பான இறப்புகளும் இந்தக் காலகட்டத்தில் உலகளாவிய சராசரியான 52 சதவீதத்திற்கு எதிராக 76 சதவீதம் குறைந்துள்ளது.

4. மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 76%ஆக உயர்த்துவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. ஒடிஸா

இ. சத்தீஸ்கர்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சத்தீஸ்கர்

  • சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை 76%ஆக உயர்த்துவதற்கான இரு சட்டத்திருத்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களின்படி, பட்டியல் பழங்குடியினர் இப்போது 32%மும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%மும் பட்டியலின சாதியினர் 13%மும் இடஒதுக்கீட்டைப் பெறுவார்கள். அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையில் 4% இடஒதுக்கீட்டைப் பெறுவார்கள்.

5. திருக்கோவில்களுக்குள் கைபேசி பயன்பாட்டுக்குத் தடைவிதித்த உயர்நீதிமன்றம் எது?

அ. சென்னை உயர்நீதிமன்றம்

ஆ. தில்லி உயர்நீதிமன்றம்

இ. பாம்பே உயர்நீதிமன்றம்

ஈ. கல்கத்தா உயர்நீதிமன்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சென்னை உயர்நீதிமன்றம்

  • ஆன்மிக மணம் கமழும் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோவில்களில் கைபேசி பயன்படுத்துவதற்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்நீதிமன்றத்தின் கூற்றுப்படி, வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணவே கைபேசி பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கைபேசி காப்புப்பெட்டகத்தை அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆணையை பின்பற்றுவதை உறுதிசெய்ய பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

6. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதிக எண்ணிக்கையில் புதிய நிறுவனங்களைச் சேர்த்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மகாராஷ்டிரா

  • நடுவண் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, COVID–19 தொற்று பரவியதிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புதிய நிறுவனங்களை மகாராஷ்டிர மாநிலம் சேர்த்துள்ளது. அதைத்தொடர்ந்த இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30,000 புதிய நிறுவனங்களைச் சேர்த்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உத்தர பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

7. ஒவ்வோர் ஆண்டும், ‘சகிப்புத்தன்மைக்கான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 12 நவம்பர்

ஆ. 14 நவம்பர்

இ. 16 நவம்பர்

ஈ. 18 நவம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 16 நவம்பர்

  • கடந்த 1996ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.16ஆம் தேதியன்று சகிப்புத்தன்மைக்கான உலக நாளாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. கலாச்சாரங்களின் இணக்கத்திற்கான சர்வதேச தசாப்தமானது (2013–2022) உலகெங்கிலும் UNESCO அமைப்பால் முன்னெடுக்கப்படுகிறது. UNESCO, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்காக, ‘UNESCO–மதன்ஜீத் சிங்’ பரிசு என்ற பெயரில் ஒரு பரிசை உருவாக்கியது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PSMA ஒப்பந்தம்’ என்பதுடன் தொடர்புடையது எது?

அ. பயங்கரவாத எதிர்ப்பு

ஆ. முறைபடுத்தப்பெறாத மீன்பிடித்தல்

இ. பருவநிலை மாற்றம்

ஈ. சர்வதேச வர்த்தகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. முறைபடுத்தப்பெறாத மீன்பிடித்தல்

  • உணவு மற்றும் உழவு அமைப்பின் “Agreement on Port State Measures (PSMA)” ஆனது சட்டவிரோதமான & முறைபடுத்தப்பெறாத மீன்பிடித்தலைத் தடுத்தற்காக வடிவமைக்கப்பட்ட முதல் சர்வதேச ஒப்பந்தமாகும். அங்கோலா, எரித்திரியா, மொராக்கோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அண்மையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை நூறு ஆனது.

9. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகள ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு ஆளுமை யார்?

அ. பி வி சிந்து

ஆ. மேரி கோம்

இ. ஸ்ரீஜேஷ்

ஈ. ஜோஷ்னா சின்னப்பா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேரி கோம்

  • ஆறு முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியனும் ஒலிம்பிக் பதக்கமும் வென்ற மேரி கோம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகள ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆணையத்தின் துணைத்தலைவர் பதவிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி வி சிந்து, ககன் நரங், மேரி கோம் மற்றும் மீராபாய் சானு உட்பட 10 ஒலிம்பிக் வீரர் / வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகள ஆணைய உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10. தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியத்தின் (NIIF) முதல் முன்மொழியப்பட்ட இருதரப்பு நிதியம் எது?

அ. இந்தியா–இலங்கை நிதியம்

ஆ. இந்தியா–நேபாள நிதியம்

இ. இந்தியா–ஜப்பான் நிதியம்

ஈ. இந்தியா–ஆஸ்திரேலியா நிதியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா–ஜப்பான் நிதியம்

  • நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியத்தின் (NIIF) நிர்வாகக் குழுமத்தின் 5ஆவது கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். NIIFஇன் முதல் இருதரப்பு நிதியம்–தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதி லிட் மற்றும் பன்னாட்டு வளர்ச்சிக்கான ஜப்பான் வங்கி (JBIC) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் முன்மொழியப்பட்டது. அது இந்திய அரசின் பங்களிப்புடன் முன்மொழியப்பட்ட ‘இந்தியா–ஜப்பான் நிதியம்’ ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. 05-12-2022 – உலக மண் நாள்

கருப்பொருள்: Soils: Where Food Begins.

5th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. When is the ‘International Day of Persons with Disabilities’ observed annually?

A. 1 December

B. 3 December

C. 5 December

D. 7 December

Answer & Explanation

Answer: B. 3 December

  • ‘International Day of Persons with Disabilities’ is observed on 3 December every year. The annual observance of the International Day of Disabled Persons was proclaimed in 1992 by United Nations General Assembly. More than one billion people, or approximately 15 per cent of the world’s population, live with some form of disability. 80 per cent of the total disabled people live in developing countries.

2. Researchers from which institution have developed a energy–efficient computing platform to build next–generation electronic devices?

A. IIT Madras

B. IIT Delhi

C. Indian Institute of Science

D. IIT Bombay

Answer & Explanation

Answer: C. Indian Institute of Science

  • Researchers at the Centre for Nano Science and Engineering (CeNSE), IISc, have developed a highly energy–efficient computing platform that offers promise in building next–generation electronic devices. Instead of using complementary metal–oxide semiconductors (CMOS), the team used components called ‘Memristors’ that can both store data and perform computation.

3. As per recent data, what is the trend of India’s annual rate of HIV infection between 2010 and 2021?

A. Declining

B. Raising

C. No change

D. No data available

Answer & Explanation

Answer: A. Declining

  • As per recent data, National AIDS Control Organization (NACO) announced that the country’s annual rate of HIV infection has declined by 46 per cent between 2010 and 2021. The decline is against the global average of 32 per cent. According to NACO, AIDS–related mortalities have also declined by 76 per cent against the global average of 52 per cent during the period.

4. Which state has passed bill to raise Reservations in the state to 76%?

A. Andhra Pradesh

B. Odisha

C. Chhattisgarh

D. Kerala

Answer & Explanation

Answer: C. Chhattisgarh

  • The Chhattisgarh Assembly unanimously passed two amendment bills to raise Reservations in government jobs and admission in educational institutions to 76%. According to the bills, Scheduled Tribes will now get a quota of 32%, Other Backward Classes 27%, and Scheduled Caste 13%, while the Economically Weaker Section (EWS) will get 4% reservation in public employment and admissions in educational institutions.

5. Which High Court has banned use of mobile phones inside temples?

A. Madras High Court

B. Delhi High Court

C. Bombay High Court

D. Calcutta High Court

Answer & Explanation

Answer: A. Madras High Court

  • The Madras High Court has banned mobile phones in temples across Tamil Nadu. As per the Court, the move to ban use of mobile phone is to maintain purity and sanctity of the places of worship. The High Court also said that phone deposit lockers should be set up at temples, to avoid inconvenience to people and Security personnel will be appointed to ensure compliance of this order.

6. As per the corporate affairs ministry, which state added the most number of new companies?

A. Tamil Nadu

B. Karnataka

C. Maharashtra

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: C. Maharashtra

  • As per the data from the corporate affairs ministry, Maharashtra has added the most number of new companies since the outbreak of COVID–19, followed by Uttar Pradesh. Uttar Pradesh added around 30,000 new companies in the last three years and it ranks third state in terms of number of active companies behind only Maharashtra and Delhi.

7. When is the ‘International Day for Tolerance’ observed every year?

A. 12 November

B. 14 November

C. 16 November

D. 18 November

Answer & Explanation

Answer: C. 16 November

  • In 1996, the UN General Assembly declared the International Day for Tolerance on 16 November, every year. International Decade for the Rapprochement of Cultures (2013–2022) is being led forward by UNESCO across the world. UNESCO created a prize for the promotion of tolerance and non–violence called the UNESCO–Madanjeet Singh Prize.

8. PSMA Agreement, which was seen in the news, is associated with which field?

A. Anti–terrorism

B. Unregulated fishing

C. Climate Change

D. International Trade

Answer & Explanation

Answer: B. Unregulated fishing

  • Food and Agricultural Organziation’s (FAO) Agreement on Port State Measures (PSMA) is the first internationally binding instrument designed to prevent, deter and eliminate illegal, unreported and unregulated (IUU) fishing. Angola, Eritrea, Morocco and Nigeria recently signed the agreement, taking the number of signatories of the instrument to 100 countries.

9. Which sportsperson has been elected as the Chairperson of Athletes Commission of Indian Olympic Association (IOA)?

A. P V Sindhu

B. Mary Kom

C. Sreejesh

D. Joshna Chinappa

Answer & Explanation

Answer: B. Mary Kom

  • Six–time World women’s boxing champion and Olympic medallist Mary Kom was elected as the Chairperson of the Athletes Commission of the Indian Olympic Association (IOA). The vice Chairperson position went to Sharath Kamal, ace table tennis player. 10 Olympians, including Olympic medallists PV Sindhu, Gagan Narang, Mary Kom and Mirabai Chanu were elected unopposed as members of the Athletes Commission of the Indian Olympic Association (IOA).

10. Which is the first proposed bilateral fund of the National Investment and Infrastructure Fund (NIIF)?

A. India–Sri Lanka Fund

B. India–Nepal Fund

C. India–Japan Fund

D. India–Australia Fund

Answer & Explanation

Answer: C. India–Japan Fund

  • Union Finance Minister Nirmala Sitharaman chaired 5th Meeting of Governing Council of National Investment and Infrastructure Fund (NIIF). NIIF’s first bilateral fund – an ‘India Japan Fund’ with contribution from Government of India has been proposed through an MoU between National Investment and Infrastructure Fund Limited (NIIFL) and Japan Bank for International Development (JBIC).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!