Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

5th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘இந்திய நீதி அறிக்கை’யின்படி, பின்வரும் எந்த மாநிலமானது தனது காவல்படையில் அதிக பெண்களை பணியமர்த்தியுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) உத்தரபிரதேசம்

ஈ) பீகார்

  • ‘இந்திய நீதி அறிக்கை’ என்பது சமூக நீதி மையம் மற்றும் வேறு சில சமூக நிறுவனங்களுடன் இணைந்த TATA அறக்கட்டளைகளின் ஒரு முன்முயற்சியாகும். பெரிய, நடுத்தர அளவிலான மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் செலவினங்கள், காலியிடங்கள், பெண்கள் மற்றும் SC, ST மற்றும் OBC உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. பீகார் மாநிலம் தனது காவல்படையில் 25.3 சதவீத அளவுக்கு பெண்களை பணியமர்த்தியுள்ளது.
  • பெண் காவல்துறை அதிகாரிகளை அதிக அளவுக்கு கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

2. இரஞ்சிக்கோப்பைக்கு பதிலாக இவ்வாண்டு எப்போட்டியை BCCI நடத்தவுள்ளது?

அ) இரானி கோப்பை

ஆ) தியோதர் கோப்பை

இ) விஜய் ஹசாரே கோப்பை

ஈ) துலீப் கோப்பை

  • BCCI தனது முதல்தர உள்நாட்டு போட்டியான இரஞ்சிக்கோப்பைக்கு பதிலாக விஜய் ஹசாரே கோப்பையை நடத்த முடிவு செய்துள்ளது. பெரும்பான்மையான மாநில அணிகளின் விருப்பப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BCCI தெரிவித்துள்ளது. கூடுதலாக, வினூ மங்கட் டிராபிக்கான U-19 தேசிய ஒருநாள் போட்டிகளையும், மகளிர் தேசிய 50 ஓவர் போட்டிகளையும் BCCI நடத்துகிறது.

3. பேரளவில் காட்டுத்தீ நிகழ்ந்த சுகோ பள்ளத்தாக்கு, பின்வரும் எந்த இரு மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது?

அ) அஸ்ஸாம் – மேகாலயா

ஆ) ஜார்க்கண்ட் – மேற்கு வங்கம்

இ) மணிப்பூர் – நாகாலாந்து

ஈ) ஜார்க்கண்ட் – ஒடிஸா

  • மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் அமைந்துள்ள பிரபல மலையேற்ற இடமான சுகோ பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஒரு காட்டுத்தீ நிகழ்ந்தது. இது நாகாலாந்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகோ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய வான்படை Mi-17V5 ஹெலிகாப்டரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

4. எந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், சமீபத்தில், தேசிய தடுப்பூசி நாளாக அனுசரிக்கப்பட்டது?

அ) கல்லீரல் அழற்சி

ஆ) இளம்பிள்ளை வாதம்

இ) நிமோனியா

ஈ) BCG

  • 2021 ஜன.31 அன்று திட்டமிடப்பட்ட தேசிய போலியோ சொட்டு மருந்து நாளன்று, நாடு முழுவதும் தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தின்கீழ் சுமார் 89 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
  • நடப்பு 2021’க்கான ‘பல்ஸ் போலியோ’ திட்டத்தின் முதல் சுற்றை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கினார். இவ்வியக்கத்தை செயல்படுத்துவதற்காக ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட சாவடிகள் அமைக்க -ப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு முதல் 5 நாட்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

5. எந்தத்தேசியத்தலைவரின் நினைவுநாள், இந்தியாவில், ஜனவரி 30 அன்று தியாகிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது?

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மகாத்மா காந்தி

இ) பகத் சிங்

ஈ) சர்தார் வல்லபாய் படேல்

  • 1948 ஜனவரி 30 அன்று ‘மகாத்மா’ காந்தி, நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாளில், மகாத்மா காந்தி மற்றும் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம்செய்த அனைத்து தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இந்தியா, தியாகிகள் நாள் அல்லது ஷாஹித் திவாஸை அனுசரிக்கிறது. மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவுநாள் தியாகிகள் நாளாக அனுசரிக்கப்பட்டது.

6. ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் புதிய COVID-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ள இந்திய நிறுவனம் எது?

அ) Dr ரெட்டி’ஸ்

ஆ) சீரம் இந்தியா நிறுவனம்

இ) பயோகான்

ஈ) சன் பாரமா

  • சீரம் இந்தியா நிறுவனம், ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் புதிய COVID -19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது, அமெரிக்க தடுப்பூசி உருவாக்குநரான நோவாவாக்ஸுடன் இணைந்து ஜூன் மாதத்திற்குள் உருவாக்கப்படும். இந்நிறுவனத்தின் கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-சுவீட நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

7. 2021-22 மத்திய பட்ஜெட்டில் காணப்படும் “OPC” என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Over the Port Counter

ஆ) One Person Company

இ) On Port Company

ஈ) On the go Private Company

  • 2020-21 மத்திய பட்ஜெட்டின்படி, வணிகத்தை எளிதாக்குவதற்காக அரசாங்கம் ஒரு நபர் நிறுவனங்களை (OPC) உருவாக்க ஊக்குவிக்கும். ஓர் இந்திய குடிமகன், ஒரு நபர் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான கால அளவை 182 நாட்களிலிருந்து 120 நாட்களாக அரசாங்கம் குறைத் -துள்ளது.

8. 2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட நிதிப்பற்றாக்குறை என்ன?

அ) 9.5%

ஆ) 7.0%

இ) 4.0%

ஈ) 2.0%

  • மத்திய நிதியமைச்சர் முன்வைத்த அண்மைய பட்ஜெட்டின்படி, நமது பொருளாதாரத்தின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 6.8% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-22) செலவினங்களின் பட்ஜெட் மதிப்பீடு `34.83 இலட்சம் கோடியாகும்.

9. 2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான புதிய வரம்பு என்ன?

அ) 26%

ஆ) 51%

இ) 74%

ஈ) 100%

  • காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டு உரிமை முறை அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை உயர்த்துவதற்காக, 1938ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்படும்.

10. உலக சுகாதார அமைப்பின்படி (WHO), உலகில் ஆண்டுதோறும் அதிக அளவில் புதிய தொழுநோய் பாதிப்புகள் ஏற்படும் நாடு எது?

அ) பாகிஸ்தான்

ஆ) இந்தியா

இ) வங்கதேசம்

ஈ) இரஷ்யா

  • உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தொழுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இந்தியாவை அடுத்து பிரேசிலும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்தியாவில் பீகார், இலட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவற்றின் கிராமப்புறங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. ஜன.31 – உலக தொழுநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

5th February 2021 Tnpsc Current Affairs in English

1. As per the ‘India Justice Report’, which state has employed most women in its police force?

A) Tamil Nadu

B) Kerala

C) Uttar Pradesh

D) Bihar

  • The ‘India Justice Report’ was an initiative of Tata Trusts, along with the Centre for Social Justice and some other social agencies.
  • The report analysed expenditure, vacancies, representation of women and members of SC, ST and OBCs across large, mid–sized states and smaller states. Bihar has employed most women in its police force at 25.3%. Tamil Nadu has the highest percentage of women police officers.

2. Which tournament would be conducted this year by the BCCI in place of Ranji Trophy?

A) Irani Trophy

B) Deodar Trophy

C) Vijay Hazare Trophy

D) Duleep Trophy

  • The BCCI has decided to conduct Vijay Hazare Trophy in place of its first–class domestic tournament Ranji Trophy.
  • BCCI has stated that the decision has been made as per the wishes of majority of the state units. Additionally, BCCI would also be hosting U–19 National One Day tournament for the Vinoo Mankad Trophy and a Women’s national 50–over tournament.

3. Dzukou Valley, which recorded a massive wild–fire, is located on which border?

A) Assam – Meghalaya

B) Jharkhand – West Bengal

C) Manipur – Nagaland

D) Jharkhand – Odisha

  • A wildfire has recently started in the Dzukou Valley, a popular trekking destination located on the Manipur–Nagaland border. It is said to have started three days ago from the Nagaland.
  • The Indian Air Force has deployed an Mi–17V5 helicopter to put off the massive wildfire in Dzukou Valley.

4. Vaccination against which disease was conducted recently as a National Vaccination Day?

A) Hepatitis

B) Polio

C) Pneumonia

D) BCG

  • On the Polio National Immunization Day scheduled on January 31, 2021, around 89 lakh children were given polio drops under National Polio Immunisation drive across the country. President Ram Nath Kovind launched the first round of Pulse Polio Programme 2021.
  • Over seven lakh booths were set up for implementing the drive. A house–to–house surveillance will also be provided to vaccinate the remaining children.

5. The death anniversary of which national leader was observed as the Martyrs’ Day on January 30 in India?

A) Jawaharlal Nehru

B) Mahatma Gandhi

C) Bhagat Singh

D) Sardar Vallabhbhai Patel

  • On 30th Jan 1948, Mahatma Gandhi was assassinated by Nathuram Godse in the year 1948.
  • On this day, India observes Martyrs Day or Shaheed Diwas, to pay homage to Mahatma Gandhi and all martyrs who sacrificed their life for the nation’s freedom. The 73rd death anniversary of Mahatma Gandhi was observed as Martyrs’ Day recently.

6. Which Indian company is to launch a new COVID–19 vaccine under the brand name Covovax?

A) Dr Reddy’s

B) Serum Institute of India

C) Biocon

D) Sun Pharma

  • Serum Institute of India has announced that it would launch a new COVID–19 vaccine under the brand name Covovax.
  • It would be developed in partnership with American vaccine developer Novavax, by the month of June. The company’s Covishield has been developed in partnership with the Oxford University and British–Swedish firm AstraZeneca.

7. What is the expansion of “OPC”, which is seen in the Union Budget 2021–22?

A) Over the Port Counter

B) One Person Company

C) On Port Company

D) On the go Private Company

  • As per the Union Budget 2020–21, the government would be incentivizing the incorporation of One Person Companies (OPC) in order to boost the ease of doing business. The Government has reduced the time limit for Indian citizen to start an OPC from 182 days to 120 days. This move allows NRIs to incorporate OPCs in India.

8. As per the Budget 2021–22, what is the estimated Fiscal Deficit for the current financial year?

A) 9.5%

B) 7.0%

C) 4.0%

D) 2.0%

  • As per the latest Budget presented by the Union Finance Minister, the Fiscal Deficit of our economy is estimated at 9.5% of GDP for the current financial year. The same is expected to be at 6.8% of GDP for FY 2021–22. The budget estimate of expenditure for next FY (2021–22) is Rs.34.83 lakh crore.

9. What is the new FDI limit in insurance companies, as proposed in Union Budget 2021–22?

A) 26%

B) 51%

C) 74%

D) 100%

  • The Union Budget 2021–22 contain that the permissible Foreign Direct Investment (FDI) limit in Insurance Companies would be increased from 49% to 74%. Foreign ownership with safeguard would be allowed in this segment. Insurance Act of 1938 would be amended to make effect to the proposed hike in FDI limit.

10. According to the WHO, which country has the highest number of new Leprosy cases in the world annually?

A) Pakistan

B) India

C) Bangladesh

D) Russia

  • According to the World Health Organization (WHO), India has the highest number of new cases of leprosy in the world annually. India is followed by Brazil and Indonesia in the largest number of cases.
  • In India, more new cases are reported from the rural belts of Bihar, Lakshadweep, Dadra and Nagar Haveli. January 31 is observed as World Leprosy Day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!