Tnpsc

5th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. விவசாயத்தில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் தொடங்கிய ஆன்லைன் நிகழ்வின் பெயர் என்ன?

அ) ஆத்மநிர்பார் அக்ரி

ஆ) அக்ரி இந்தியா ஹேக்கதான்

இ) கிசான் மேளா

ஈ) கிருஷி சம்மேளன்

  • மத்திய உழவு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் காணொலிமூலம் ‘அக்ரி இந்தியா ஹேக்கதான் 2020’ஐ தொடங்கிவைத்தார். உரையாடல்களை நடத்துவதற்கும் உழவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஆண்டு, இந்த நிகழ்வை பூசா கிருஷி, ICAR – IARI, ICAR மற்றும் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. 24 சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 1 இலட்சம் ரொக்கப்பரிசும் அக்கண்டுபிடிப்பை வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும் வழங்கப்படும்.

2.அண்மைச்செய்திகளில் வந்த IUC’இன் விரிவாக்கம் என்ன?

அ) Internet usage charges

ஆ) Intermediate usage charges

இ) Interconnect usage charges

ஈ) Interconnect utility charges

  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) கூற்றுப் படி, இன்டர்நெக்னெக்ட் பயன்பாட்டுக் கட்டணங்கள் (IUC) ஜனவரி 1, 2021 முதல் சுழியமாக்கப்பட்டுள்ளது. IUC என்பது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்கள் பிற சேவை வழங்குநர்களின் எண்ணிற்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்பிற்கும் செலுத்தும் கட்டணமாகும். இந்த நடவடிக்கைக்கு முன்னர், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் IUCஆக நிமிடத்திற்கு 6 பைசா செலுத்திவந்தது.

3. முகேஷ் அம்பானியை விஞ்சி ஆசியாவின் செல்வந்தராக மாறியுள்ள ஜாங் ஷான்ஷன் சார்ந்த நாடு எது?

அ) சிங்கப்பூர்

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) தாய்லாந்து

  • புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங் ஷான்ஷனின் நிகர சொத்து மதிப்பு $70.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவர், முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியஇருவரையும் விஞ்சி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப்பெற்றார்.
  • சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘வாண்டாய்’ என்னும் சீன மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் ஜாங் ஷான்ஷன்.

4. இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) A K ஆண்டனி

ஆ) சுனீத் சர்மா

இ) பிரதீப் குமார்

ஈ) P S மிஸ்ரா

  • இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா பொறுப்பேற்றார். இவர் அலுவல் சார்ந்து இந்திய அரசின் முதன்மைச்செயலராகவும் பணியாற்றுவார்.
  • சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பாக, சுனீத் சர்மா, கிழக்கு இரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

5. பின்வரும் எந்த இந்திய மாநிலத்தின் எல்லைக்கு அருகிலுள்ள திபெத்திய நகரங்களான லாசா & நைஞ்சியை இணைக்கும் இரயில்பாதை பணியை சீனா நிறைவுசெய்துள்ளது?

அ) சிக்கிம்

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) மேகாலயா

ஈ) மணிப்பூர்

  • ஊடக அறிக்கையின்படி, திபெத்தின் லாசா மற்றும் நைஞ்சி நகரங்களை இணைக்கும் இரயில்பாதைக்கான தடங்களை அமைக்கும் பணியை சீனா சமீபத்தில் நிறைவு செய்தது. இவ்விரு நகரங்களும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளன.
  • இந்த சிச்சுவான்-திபெத் இரயில்வே, திபெத்துக்கான இரண்டாவது இரயில் ஆகும். அது சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்டுவிலிருந்து தொடங்கி திபெத்துக்குள் நுழைகிறது.

6. பிரதமரால் வெளியிடப்பட்ட, ‘NAVARITIH’ என்பது பின்வரும் எத்துறையுடன் தொடர்புடைய சான்றிதழுடன்கூடிய படிப்பாகும்?

அ) கலாச்சாரம்

ஆ) கட்டுமானத் துறை

இ) செயற்கை நுண்ணறிவு

ஈ) நுண்ணுயிரியல்

  • NAVARITIH (New (புதிய), Affordable (மலிவான), Validated (சரிபார்க்கப்பட்ட), Research Innovation Technologies for Indian Housing (இந்திய வீட்டுவசதிக்கான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள்)) என்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழுடன்கூடிய படிப்பை பிரதமர் வெளியிட்டார்.
  • உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பச்சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் காணொலிக்காட்சிமூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

7. PMAY (U) திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கி முதலிடம் பெற்ற மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஜார்க்கண்ட்

இ) உத்தர பிரதேசம்

ஈ) தெலங்கானா

  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY-U) திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான ஆண்டு விருதுகளை அறிவித்தார். சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில், உத்தர பிரதேசம் முதலிடத்தையும், மத்திய பிரதேச மாநிலம் இரண்டாமிடத்தையும் ஆந்திர பிரதேச மாநிலம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
  • வடகிழக்கு பிராந்தியத்திலும், மலைப்பாங்கான மாநிலங்களிலும், திரிபுரா முதலிடத்தைப் பிடித்தது. சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

8. காலமுறை தொழிலாளர் வள ஆய்வை வெளியிடுகிற மத்திய அமைச்சகம் எது?

அ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஆ) புள்ளியியல் & திட்ட அமலாக்கம் அமைச்சகம்

இ) திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது காலாண்டுக்கு ஒருமுறை காலமுறை தொழிலாளர் வள ஆய்வை (Periodic Labour Force Survey) வெளியிடுகிறது. சமீபத்திய காலாண்டுக்கான PLFS’படி, நகர்ப்புறங்களில் 2019 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 7.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2020 ஜனவரி-மார்ச் மாதங்களில் 9.1 சதவீதமாக உயர்ந்தது. தொழிலாளர் வள பங்களிப்பு விகிதமும் 37.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

9. 51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவை தொகுத்து வழங்கவுள்ள இந்திய நகரம் எது?

அ) கோவா

ஆ) சென்னை

இ) கொச்சின்

ஈ) கொல்கத்தா

  • இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 51ஆவது பதிப்பு, 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு 2021 ஜனவரி.10 வரை திறந்திருக்கும்.

10. ‘K-9 சஞ்சிகை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) மருத்துவம்

ஆ) காவல் பணி

இ) பெருங்கொள்ளை நோய்

ஈ) ரோபாட்டிக்ஸ்

  • “தேசிய காவல் K-9 சஞ்சிகை”இன் முதல் பிரதியை புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். காவல் நாய்கள் பற்றிய இந்தியாவின் முதல் வெளியீடாக இது அமைந்துள்ளது.
  • ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் தேசிய காவல் K-9 சஞ்சிகை, ஆண்டுக்கு இருமுறை ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரும்.

5th January 2021 Tnpsc Current Affairs in English

1. What is the name of the online event launched by Agriculture Ministry, to promote innovation in agriculture?

A) Atmanirbhar Agri

B) Agri India Hackathon

C) Kisan Mela

D) Krishi Sammelan

  • Union Agriculture and Farmers’ Welfare Minister Narendra Singh Tomar inaugurated the Virtual Agri India hackathon 2020 in New Delhi.
  • It is the largest virtual gathering to organise dialogues and promote innovations in agriculture. This year, the event organized by Pusa Krishi, ICAR – IARI, ICAR & Department of Agriculture, Cooperation & Farmers’ Welfare. 24 best innovations will be awarded 1 lakh cash award and incubation support.

2. What is the expansion of ‘IUC’, which was recently seen in the news recently?

A) Internet usage charges

B) Intermediate usage charges

C) Interconnect usage charges

D) Interconnect utility charges

  • As per the Telecom Regulatory Authority of India (TRAI), the Interconnect usage charges (IUC) has been made zero from January 1, 2021. IUC is the charge paid by a telecom company, for every call made from its network to different service providers. Prior to this move, the telecom company has been paying 6 paise per minute as the IUC.

3. Zhong Shanshan, who replaced Mukesh Ambani as Asia’s richest person, is from which country?

A) Singapore

B) China

C) Japan

D) Thailand

  • As per the Bloomberg Billionaires Index, Zhong Shanshan’s net worth rose to USD 70.9 billion making him the richest man in Asia above both Mukesh Ambani and China’s Jack Ma. Zhong Shanshan is the founder of ‘Nongfu Spring’, the largest beverage company in China. He is also the owner of the Chinese pharmaceutical giant ‘Wantai’.

4. Who has been appointed as the new Railway Board Chairman and CEO?

A) A K Antony

B) Suneet Sharma

C) Pradeep Kumar

D) P S Mishra

  • Former General Manager of the Eastern Railway, Suneet Sharma has been appointed as the new Chairman & Chief Executive Officer (CEO), Railway Board (Ministry of Railways). He will also serve as the ex–officio Principal Secretary to Government of India.
  • After the completion of the term of incumbent chief V K Yadav, the appointments committee of the Cabinet has approved Suneet Sharma as the new Chairman & CEO.

5. China has completed a railway line linking the Tibetan cities of Lhasa and Nyingchi, near the border of which Indian state?

A) Sikkim

B) Arunachal Pradesh

C) Meghalaya

D) Manipur

  • As per media reports, China has recently completed the track–laying work for a railway line which links the cities of Lhasa and Nyingchi in Tibet. The cities are close to the Indian border in Arunachal Pradesh. This Sichuan–Tibet Railway is the second railway into Tibet, which starts from the capital of Sichuan Province, Chengdu and enters Tibet.

6. ‘NAVARITIH’, which was released by the Prime Minister, is a certification course associated with which sector?

A) Culture

B) Construction Technology

C) AI

D) Microbiology

  • Prime Minister released a certification course on innovative construction technologies named NAVARITIH (New, Affordable, Validated, Research Innovation Technologies for Indian Housing).
  • He also laid the foundation stone of Light House projects (LHPs) under Global Housing Technology Challenge (GHTC)– at six sites across six states.

7. Which State was awarded the first place for excellence in implementation of PMAY (U) Mission?

A) Uttar Pradesh

B) Rajasthan

C) Punjab

D) Gujarat

  • The Prime Minister of India Narendra Modi announced the annual awards for excellence in implementation of Pradhan Mantri Awas Yojana – Urban (PMAY–U) Mission.
  • In the best performing states category, Uttar Pradesh bagged the first place, followed by Madhya Pradesh and Andhra Pradesh. In the North East region and Hilly states, Tripura bagged the first place. Vishakhapatnam was named the best performing Municipal Corporation.

8. Which Union Ministry releases the Periodic Labour Force Survey (PLFS)?

A) Ministry of Labor & Employment

B) Ministry of Statistics & Programme Implementation

E) Ministry of Skill Development & Entrepreneurship

D) Ministry of Home Affairs

  • The Ministry of Statistics and Programme Implementation (MoSPI) releases the quarterly Periodic Labour Force Survey (PLFS).
  • As per the recent quarterly PLFS, the unemployment rate in urban areas increased to 9.1 per cent in January–March 2020 from 7.9 per cent in October–December 2019. Labour force participation rate increased to over a five–quarter high of 37.5 per cent.

9. Which Indian city is to play host to the 51st edition of the International Film Festival of India (IFFI)?

A) Goa

B) Chennai

C) Cochin

D) Kolkatta

  • The 51st edition of the International Film Festival of India (IFFI) to be held in Goa from 16th to 24th of January, 2021.
  • Recently, the registrations have commenced for media delegates, who desire to attend the event, which will be held in a hybrid mode, on account of the Covid–19 pandemic. The registration will be open till January 10, 2021.

10. K–9 Journal, which was recently released, is associated with which field?

A) Medicine

B) Policing

C) Pandemic

D) Robotics

  • Union Home Minister Amit Shah released the inaugural issue of the National Police K–9 Journal in New Delhi.
  • It is the India’s first such publication on the subject of Police Service K9s, which is the name given for Police Dogs. A special Police K9 Cell was set up in November 2020. The biannual journal will be released in April and October, with sections in Hindi and English.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!