TnpscTnpsc Current Affairs

5th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. KSLV-II நூரி ஏவுகலமானது பின்வரும் எந்த நாட்டின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்வெளி ஏவுகலம் ஆகும்?

அ) தென் கொரியா 

ஆ) இஸ்ரேல்

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) வங்காளதேசம்

  • தென் கொரியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்வெளி ஏவுகலமான KSLV-II நூரி ஏவுகலம் தளர்வான ஹீலியம் தொட்டியின் காரணமாக தோல்வி அடைந்தது. இந்த ஏவுகலத்தின் மூன்று நிலைகளும் செயல்பட்டு, 700 கிலோமீ உயரம் சென்று, 1.5 டன் தாங்கு சுமையை வெற்றிகரமாக பிரித்தது.
  • மூன்றாம் நிலை எந்திரம் திட்டமிடப்பட்டதை விட 46 விநாடிகள் முன்னதாக எரிவதை நிறுத்தியதால் இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

2. ‘சிறந்த சுகாதார புகையிலா’ பிரச்சாரத்தைத்தொடங்கிய நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) UK 

இ) இந்தியா

ஈ) பிரான்ஸ்

  • UK அரசாங்கம் ‘Better Health Smoke-Free’ என்ற பெயரில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது வயது வந்தோரிடையே புகைப்பிடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை எடுத்துக்கூறுகிறது. புகைப்பிடிப்பவர்களை புகைபிடிப்ப
    -தை விட்டுவிடுமாறு இப்பிரச்சாரம் வலியுறுத்திகிறது.
  • இந்தப் பிரச்சாரத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, புகைபிடிக்கும் பெற்றோரை உடைய 4.9 சதவீத பதின்ம வயதினரும் அந்தப் பழக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் மக்கள் புகையிலிருந்து விடுபட நியூசிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

3. ‘நிதி நிலைத்தன்மை அறிக்கை’ என்பது எந்த நிறுவன -த்தால் வெளியிடப்பட்ட முதன்மை அறிக்கையாகும்?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி 

இ) உலக வங்கி

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • ‘நிதி நிலைத்தன்மை அறிக்கை’ என்பது ‘இந்திய ரிசர்வ் வங்கி’யால் அரையாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கையின் அண்மைய பதிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி, இந்தியாவில் சில்லறை வர்த்தகம் தலைமையிலான கடன் வளர்ச்சி மாதிரியானது நுகர்வோர் நிதி இலாகாவில் இயல்புநிலை அதிகரிப்பு மற்றும் புதிய கடன் பிரிவில் மந்தநிலை ஆகிய 2 காரணிகளால் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

4. சபா அல்-கலித் அல்-சபா, எந்த நாட்டின் பிரதமராவார்?

அ) பஹ்ரைன்

ஆ) குவைத் 

இ) ஓமன்

ஈ) சவூதி அரேபியா

  • சபா அல்-கலித் அல்-சபா குவைத்தின் பிரதமராகவுள்ளார். குவைத் சமீபத்தில் ஒரு புதிய நிதியமைச்சர் மற்றும் மூன்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு புதிய அமைச்சரவையை அமைத்துள்ளது. இந்தப் புதிய அமைச்சரவையில் 1 பெண் அமைச்சர் மட்டுமே உள்ளார். இதில் மூன்று எதிர்க்கட்சி எம் பி’க்களும், ஒரு அரசு சார்பு சட்டமியற்றுநரும் அடங்குவர்.

5. BRICS புதிய வளர்ச்சி வங்கியின் புதிய உறுப்பினராக இணையவுள்ள நாடு எது?

அ) இத்தாலி

ஆ) எகிப்து 

இ) இஸ்ரேல்

ஈ) வங்காளதேசம்

  • BRICS புதிய வளர்ச்சி வங்கி (NDB) எகிப்தை தனது புதிய உறுப்பினராக சேர்க்கப்போவதாக அறிவித்தது. NDB ஆனது BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க ஆகிய நாடுகளால் 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்குப் பிறகு NDB’இல் இணைக்கப்பட்ட 4ஆவது புதிய உறுப்பினர் எகிப்து ஆகும். மார்கோஸ் டிராய்ஜோ, புதிய வளர்ச்சி வங்கியின் தலைவராக உள்ளார்.

6. சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை (RDSS) செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம் 

ஆ) அணுசக்தி அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) நிலக்கரி அமைச்சகம்

  • நிதி உதவி வழங்குவதன்மூலம் DISCOM’களின் செயல் திறனை மேம்படுத்த இந்திய அரசாங்கம் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள்-REC மற்றும் PFC ஆகியவை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மைய முகமைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகியவை அண்மையில் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்திற்கு (RDSS) முன்னோடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

7. “ஏர்கன் சரண்டர் அபியான்” செயல்படுத்தப்படுகிற மாநிலம் / யூடி எது?

அ) சத்தீஸ்கர்

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) அஸ்ஸாம்

ஈ) மேற்கு வங்காளம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் “ஏர்கன் சரண்டர் அபியான்” செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், பறவைகளை கண்மூடித்தனமாக வேட்டையாடுவதைத் தடுக்க மக்கள் தங்கள் ஏர்கன்களை தானாக முன்வந்து கொடுக்கவேண்டும். “ஏர்கன் சரண்டர் அபியான்” குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் பேசினார்.

8. HDFC வங்கி பின்வரும் எந்த வங்கியுடன் இணைந்து தனது வங்கிச் சேவைகளை புறநகர் & ஊரகங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது?

அ) இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி (IPPB) 

ஆ) கேரளா கிராமின் வங்கி

இ) தமிழ்நாடு கிராம வங்கி

ஈ) சௌத் இந்தியன் வங்கி

  • HDFC வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் (IPPB) இணைந்து தனது வங்கிச்சேவைகளை புறநகர் & ஊரகங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. IPPB’இன் 4.7 கோடி வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதன்மூலம், HDFC & IPPB வங்கிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. IPPB வாடிக்கையாளர்களில் 90% பேர் ஊரகங்களில் வசிக்கின்றனர்.

9. UNSC’இன் பயங்கரவாத எதிர்ப்புக்குழுவின் தலைமை -யாக இந்தியா செயல்படவுள்ள ஆண்டு எது?

அ) 2022 

ஆ) 2023

இ) 2024

ஈ) 2025

  • நடப்பு 2022ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவைக்கு (UNSC) இந்தியா தலைமைதாங்கவுள்ளது.
  • இதற்கு முன்பு கடந்த 2012’இல் இந்தியா இந்தக் குழுவின் தலைவராக இருந்தது. இந்தப்பதவிக்காலத்தில், தலிபான் தடைகள் குழுவிற்கும் இந்தியா தலைமை வகிக்கிறது. 15 நாடுகளைக் கொண்ட இவ்வவைக்கு இந்தியா இரண்டு ஆண்டுகளுக்குத் தலைமை வகிக்கும்.

10. மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அண்மைய வழிகாட்டுதல்களுடன் தொடர்புடைய ‘FFV-SHEV’இன் விரிவாக்கம் என்ன?

அ) Flex Fibre Strong Hybrid Electric Vehicles

ஆ) Flex Fuel Strong Hybrid Electric Vehicles 

இ) Flex Fibre Substitute Hybrid Electric Vehicles

ஈ) Flex Fuel Strong Hybrid Electric Vehicles

  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் Flex Fuel Vehicles (FFV) மற்றும் Flex Fuel Strong Hybrid Electric Vehicles (FFV-SHEV) தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் BS-VI விதிமுறைகளுக்கு உட்பட்ட வாகனங்களை 6 மாத காலத்திற்குள் தயாரிக்க அறிவுறுத் -தப்படுகிறார்கள்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிறுதானியங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டுவந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். அதிக சத்துக்களுடன் நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது.

எனவே, இந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக இந்தியாவுடன் வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து எடுத்த முன்னெடுப்பை 70 நாடுகள் வழிமொழிய 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், வருகிற 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

மருந்தாகும் சிறுதானிய உணவுகள்

உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைகளைப் பயன்படுத்தும் நாம், சிறுதானிய உணவுகளை உண்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டோம். ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் சிறுதானியங்களில் உள்ளன. சிறுதானியங்களில் நார்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவக் குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருட்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள கிளைசிமிக் இன்டெக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

இதிலுள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு ஆகும். சிறுதானியங்களில் உள்ள லிக்னின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. இது குடல் சுத்தமாவதற்கு மிகவும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சினை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கும் வல்லமை சிறுதானிய உணவுக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்சினைகள் வராமல் சிறுதானியங்கள் தடுக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் உடல் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதி அளிக்கின்றன.

சாகுபடிக்கேற்ற சிறப்பியல்புகள்

சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பது பற்றியும் பெரும் பகுதியினருக்குத் தெரிவதில்லை. சிறுதானியங்கள் எளிதாக அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக் கொண்டவை. நெல் விளைவதற்கு 120-180 நாட்கள் மற்றும் அதிக அளவு தண்ணீர் (1,000 – 4,500 மி.மீ) தேவைப்படும். ஆனால், சிறுதானியங்களுக்கு குறைவான அளவு தண்ணீர் (250-400 மி.மீ) இருந்தாலே போதுமானது.

பெரும்பாலான சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதாவது 65-90 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். மிதமான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரக்கூடியவை, மண்வளம் குறைந்த இடங்களிலும் சாகுபடி செய்யலாம், மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றவை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை, சிறுதானியங்கள் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதல் மிகக் குறைவு. மற்ற பயிர்களுக்குக் கொடுப்பதைப் போல அதிகமான ஊட்டத்தை சிறுதானியப் பயிர்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை.

குறைவான அளவுக்குக் கொடுத்தாலே போதுமானது. நெல் மாதிரியான பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்போது, அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானியப் பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்தச் சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலைப் பிரச்சினைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் கிடைக்கும். புவி வெப்பமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் மிகவும் குறைவு. சிறுதானியச் சாகுபடியில் குறைந்த அளவு வேலையில், குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைக்கும். சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியில் சிறுதானியங்கள் சாகுபடி பெரும் பங்கு வகிக்கிறது.

சிறுதானியப் பயிர்களில் ஒன்றான சாமையில் மல்லியச்சாமை, பெருஞ்சாமை, வெள்ளச்சாமை, கட்டவெட்டிச்சாமை, திருகுலாச்சாமை, சடஞ்சாமை, கருஞ்சாமை, செஞ்சாமை, சிட்டஞ்சாமை, பில்லுசாமை போன்ற நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினையில் கெண்டித்தினை, செந்தினை, மரத்தினை, பாலாந்தினை, வெள்ளைதினை, பைந்தினை, சிறுதினை, நாட்டுத்தினை, மாப்புத்தினை போன்ற நாட்டு ரகங்களும். வரகுப் பயிரில் திரிவரகு, புறவரகு, பெருவரகு, உடும்புக்காலி வரகு, செங்காலி வரகு, சிட்டுக்கீச்சான் வரகு போன்ற நாட்டு ரகங்களும்… கேழ்வரகுப் பயிரில் சாட்டைக் கேழ்வரகு, காரக் கேழ்வரகு, கண்டாங்கிக் கேழ்வரகு, பெருங்கேழ்வரகு, பிச்சாகாடிக் கேழ்வரகு போன்ற ரகங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.

சோளத்தில் செஞ்சோளம், கருஞ்சோளம், உப்பஞ்சோளம், கருப்பு ரட்டு சோளம், சிகப்பு ரட்டு சோளம், கோவில்பட்டி மொட்ட வெள்ளைச் சோளம், அரியலூர் நெட்ட மஞ்ச சோளம் போன்ற நாட்டு ரகங்கள் காணப்படுகின்றன. சிறுதானியத்தில் நாட்டு ரகங்களுடன், மகசூல் அதிகம் தரக்கூடிய பல பல்கலைக்கழக ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கேழ்வரகில் பையூர் 2, கோ 14, கோ 15 போன்ற ரகங்கள், தினையில் கோ 7 என்பவற்றில் அதிகக் கிளைப்பு வரும், கதிரும் நீளமாக இருக்கும். பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறுதானியம், பனிக்காலத்தில் எந்தப் பாசனமும் இல்லாமலேயே பனிப்பொழிவினால் கிடைக்கும் நீரிலேயே வளர்ந்துவிடக் கூடியது.

சிறுதானியப் பயிர்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் பல புதிய ரகங்கள் வெளியிடவும் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2013 முதல் சிறுதானிய மகத்துவ மையத்தைத் தொடங்கி கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு போன்ற சிறுதானியப் பயிர்களில் ATL 1 என்ற ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மக்களின் உணவு முறையில் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் நிறைந்த உணவு வகைகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவ்வளவு சிறப்பு மிக்க நம் நிலத்தின் பயிர்களான சிறுதானியச் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, விவசாய நிலங்களின் சூழலியல் சமநிலையையும் பாதுகாத்து சிறுதானியங்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும்.

2. தவறும் வானிலை முன்கணிப்புகள்: தீர்வுதான் என்ன?

ஒரு பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் குடைபிடித்து நிற்கிறார்கள். ஒருவர் மட்டும் குடையில்லாமல் மழையில் நனைகிறார். பக்கத்தில் இருப்பவரிடம் குடை இல்லாதவர் எரிச்சலுடன் இப்படிக் கேட்கிறார், “நான் வானிலைத் துறையில் வேலை பார்க்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று. மழை பெய்யும் என்பதை ஊரே அறிந்திருக்கும்போது, வானிலைத் துறை முன்னறிவிப்புகள் மட்டும் ஏன் அதை கணிக்கத் தவறுகின்றன என்கிற கேள்வியை 2007-ல் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த ஒரு கேலிச்சித்திரம் நறுக்கென உணர்த்திவிடுகிறது. 14 ஆண்டுகள் கடந்தும் இந்திய வானிலை ஆய்வுத் துறை அதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டுதான் வருகிறது.

2021 நவம்பர் 7, அதிகாலையில் பெய்த 21 செ.மீ. மழை, டிசம்பர் மாதம் 30-ல் ஒருசில மணி நேரத்தில் 15 செ.மீ-க்கு மேல் பெய்த மழையைப் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருக்கவில்லை. இந்தப் பெருமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கிவிட்ட பிறகு, மழை தீவிரமாக இருக்கும் என்று அந்த மையம் எச்சரிக்கை விடுத்தது மக்களிடையே ஏமாற்றத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. டிசம்பர் 30 திடீர் மழை குறித்து எச்சரிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய முன்கணிப்பு வசதிகளை மேம்படுத்தும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

நவம்பர் 6 அன்று ஒரே இரவில் பெய்த 21 செ.மீ. மழை 2015-க்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழை. அதே நேரம், மண்டல வானிலை ஆய்வு மையத்தின் 3 ரேடார்களில் சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடாரும் காரைக்காலில் உள்ள ரேடாரும் அதற்கு முன்னதாகவே பழுதுபட்டிருந்தன. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் இந்த ரேடார்களில் பழுது நீக்கப்பட்டிருக்கவில்லை. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது குறித்துப் பிரச்சினையை எழுப்பிய பிறகுதான் அவை பழுதாகியிருந்த தகவலே பொது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ரேடார் தரும் தகவல்களைக் கொண்டே சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கணிப்பை வெளியிட்டுவந்தது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு வானிலை பலூனில் ரேடியோசோண்டே எனப்படும் கருவி வைக்கப்பட்டு, சென்னை, காரைக்காலில் பறக்கவிட்டு, வானிலை ஆய்வுத் துறை ஆராயும். இந்தக் கருவியே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்த தகவலைத் தரும். இந்தப் பரிசோதனை பல மாதங்களாகச் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட பகுதியில்-ஊரில் எவ்வளவு மழை பொழியும் என்பதையும் குறுகிய காலத்தில் கனமழை பெய்யும் Mesoscale நிகழ்வுகளையும் முன்கணிப்பது சிரமம் என்று வானிலை ஆய்வுத் துறை கூறுகிறது.

அறிவியல் அடிப்படை

முந்தைய தரவுகள், கணிப்புகள், கணினி மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மழை, புயல், வெள்ளம் குறித்த எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுவருகிறது. வானிலைக் கணிப்பில் குறுகிய கால முன்கணிப்பு – குறிப்பிட்ட நிமிடத்திலிருந்து அடுத்த ஆறு மணி நேரத்துக்கு வழங்கப்படும் இந்தக் கணிப்பில் காற்றின் வேகம், காற்று வீசும் திசை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

டாப்ளர் வானிலை ரேடார் குறுகிய கால முன்கணிப்புக்குப் பயன்படுகிறது. அதேநேரம் நீண்ட கால முன்கணிப்பு என்பது அதிக காலத்துக்கானது. செயற்கைக்கோள் படங்கள் இரண்டு வகை முன்கணிப்புக்கும் பயன்பட்டாலும் புயல் போன்றவற்றின் நகர்வைத் தீர்மானிக்கவே பெரிதும் பயன்படுகின்றன. அதே நேரம், செயற்கைக்கோள் படங்கள் தரும் தகவல்களைக் கணினி மாதிரியில் உள்ளிட்டு, குறுகிய கால முன்கணிப்பைத் துல்லியமாகப் பெறுவது கடினம்.

வானிலை முன்கணிப்புக்கு ‘குளோபல் ஃபோர்காஸ்ட் சிஸ்டம்ஸ்’ (GFS) எனப்படும் ஒரே ஒரு மாதிரியை மட்டுமே இந்திய வானிலை ஆய்வுத் துறை பின்பற்றுகிறது. இப்படி ஒரு மாதிரியை மட்டும் பின்பற்றுவது தவறான முன்கணிப்புக்கு வழிவகுக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மண்டல அளவிலான வானிலை முன்கணிப்பு சார்ந்து ஜி.எஃப்.எஸ். மாதிரியில் பிரச்சினை இருப்பதாக, புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் ராஜீவன் தெரிவிக்கிறார். 35 ஆண்டுகளாகத் தென்மேற்குப் பருவமழை குறித்து ஆராய்ந்துவருபவர் இவர்.

முன்னெச்சரிக்கைகளில் கவனம்

புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறுப்புக்கு எஸ்.ஆர்.ரமணன் நியமிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளும் பெருகத் தொடங்கியிருந்தன. வானிலை முன்னெச்சரிக்கையைத் தமிழில் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் அவர் கூறிய முறை சாதாரண மக்களையும் கவர்ந்தது. வானிலை முன்னெச்சரிக்கைகள் குறித்து மக்கள் பெரிதாகக் கவனம் கொள்ளாதிருந்த நிலையை அது சற்று மாற்றியது.

2015 சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகு சென்னையில் தனியார் வானிலைப் பதிவர்கள் பெருகினார்கள். ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான், ‘சென்னை ரெயின்ஸ்’ ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் எந்த நேர இடைவெளியில் பெருமழை பெய்யும் – குறிப்பிட்ட எந்தப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும், எப்போது கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை என்கிற தகவல்களை வழங்கிவருகிறார்கள். சர்வதேச வானிலை மாதிரிகள் இணையத்தில் அளிக்கும் தரவுகளை ஆராய்ந்தே இந்த எச்சரிக்கைகளை அவர்களால் விடுக்க முடிகிறது.

அரசு நிறுவனத்தைப் போன்ற தீர்மானிக்கப்பட்ட பொறுப்புகள் அவர்களுக்கு இல்லையென்றாலும்கூட, சமூக ஊடகங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் தொடர்ச்சியாக இந்தத் தகவல்களைப் பதிவிட்டுவருகிறார்கள். இப்படித் தனியார் ஆய்வாளர்களே கூடுதல் தகவல்களைத் தர முடியும்போது, அரசு நிறுவனம் இன்னமும் பொத்தாம் பொதுவாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?

வானிலை சார்ந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புவார். குறிப்பிட்ட நிகழ்வு எப்போது தீவிரமாக இருக்கும்? அது தன்னை நேரடியாகப் பாதிக்குமா? பாதிப்பிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? –இவைதான் ஒருவருடைய எதிர்பார்ப்புகளாக இருக்கும். இது சார்ந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிடும்போதே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.

வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை 100% சரியாக இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நிகழ்வு சார்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையால், தனக்குப் பயன் கிடைத்ததா என்றே பார்க்கிறார்கள். ஒருவருடைய கைபேசியிலேயே ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தின் வெப்பநிலை, மழையளவு, காற்று வீசும் வேகம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளும் நவீனச் செயலிகள் உள்ள நிலையில், வானிலை ஆய்வுத் துறை இன்னமும் பழைய பாணியிலான முன்னெச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருப்பது எப்படிப் பெருமளவு மக்களின் கவனத்தைப் பெறும்?

பருவநிலை மாற்றம்

இந்திய வானிலை ஆய்வுத் துறை கணிதவழி வானிலைக் கணிப்பு மாதிரிகளையே இன்னும் பயன்படுத்திவருகிறது. பிரிட்டன் வானிலை ஆய்வுத் துறையோ முன்கணிப்புக்கு சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் தரும் தரவுகளைக் காட்சிபூர்வமாகச் சித்தரிக்க சூப்பர் கம்ப்யூட்டர்கள் உதவுகின்றன. இந்தச் செயல்முறை மூலம் ஒருசில விநாடிகளில் திட்டவட்டமான வானிலை முன்கணிப்பைத் தர முடிகிறது.

பருவநிலை மாற்றம் குறித்து உலக வானிலை அமைப்பு, ஐபிசிசி உள்ளிட்டவை தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவருகின்றன. இந்திய வானிலை ஆய்வுத் துறை, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை ஆராய்ச்சிக்கான தரவு சேகரிப்பு சார்ந்து மட்டுமே அணுகிவருவதுபோலத் தெரிகிறது. டிசம்பர் 30-ம் தேதி சென்னையில் சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த மழைக்கு பருவநிலை மாற்றத்தின் ஓர் அம்சமான ‘லா நீன்யா விளைவு’ காரணமாக இருக்கலாம் என மேரிலாண்ட் பல்கலைக்கழக வளிமண்டலக்-கடலியல் துறைப் பேராசிரியர் ரகு முருட்டுகுட்டே தெரிவிக்கிறார்.

எனவே, இயற்கைச் சீற்றங்கள் சார்ந்த நடைமுறை முன்னெச்சரிக்கைகளை விடுப்பதற்கு உரிய வகையில் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளை மாற்றியமைத்து வானிலை ஆய்வுத் துறை பயன்படுத்த வேண்டும். அப்படித் தொடர்பு ஏற்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் உரிய பலனைத் தராத சம்பிரதாய அறிவிப்புகளாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

3. ஓஎன்ஜிசியின் முதல் பெண் தலைவர் அல்கா மிட்டல்

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அல்கா மிட்டல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்கும் முதல் பெண்மணி ஆவார்.

ஓஎன்ஜிசியின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி ஷங்கர் மார்ச் 31, 2021 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார், அவருக்குப் பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் பிறகு இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனரான அல்கா மிட்டல், நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் நியமனக் குழு வழங்கியுள்ளது.

ஜனவரி 1, 2022 முதல் ஆறு மாத காலத்திற்கு, அல்லது பதவிக்கு வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது விரைவில் முடியுமோ அதுவரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்மணி எனும் சிறப்பை பெறுகிறார்.

அல்கா மிட்டல் யார்?

அல்கா மிட்டல் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குனராக 2018- ம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றார். இதன் மூலம், ஓஎன்ஜிசி நிறுவன இயக்குனர் குழுவில் முழு நேர இயக்குனராக பொறுப்பு வகிக்கும் முதல் பெண் எனும் சிறப்பையும் அவர் பெற்றார்.

பொருளாதார பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவரான அக்லா மிட்டல் எம்பிஏ பெற்ற பிறகு 1985-ல் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளராக சேர்ந்தார்.

தலைமை திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது 5,000-க்கும் மேற்பட்ட பயிறசியாளர்களை பயன்படுத்தி, தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

4. பிரதான வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, HDFC: ரிசர்வ் வங்கி

தோல்வியடையாத மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் அமைப்பு ரீதியில் பிரதானமாக உள்ள வங்கிகளின் பட்டியலில் (டி-எஸ்ஐபி) எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இடம்பெற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டின் பட்டியலிலும் இதே வங்கிகள்தான் பிரதான வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் டி-எஸ்ஐபி பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.

மேலும், வங்கிகளிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எச்டிஎஃப்சி வங்கியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கடந்த 2017 மாா்ச் 31-இல் ரிசா்வ் வங்கி அறிவித்தது.

5. கடந்த 2021-ம் ஆண்டில் ரூ.4.15 லட்சம் கோடி தங்கம் இறக்குமதி செய்தது இந்தியா

கடந்த ஆண்டில் இந்தியாவில் 5,570 கோடி டாலருக்கு (சுமார் ரூ.4.15 லட்சம் கோடி) வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் விலை சற்று சரிந்ததால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிக எடையிலான தங்கம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.

2020-ம் ஆண்டில் கரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்பட்டன. இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நடைபெற்றதால் தங்கம் அதிகஅளவில் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் அதிக அளவில் தங்கம் நுகரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

2021-ம் ஆண்டு 2,200 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதிசெய்யப்பட்டது. 2011-ல் தங்கஇறக்குமதிக்கு செலவிடப்பட்ட தொகை 5,390 கோடி டாலராகும். இதுதான் அதிகபட்ச அளவாக இருந்தது. ஆனால் அந்த அளவுகடந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 1,050 டன்னாகும். கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 430 டன்னாகும்.

2020-ம் ஆண்டு இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் தங்கம் வாங்குவது பெரிதும் குறைந்தது. திருமண நிகழ்வு மற்றும் அட்சய திருதியை போன்ற காலங்களில்தங்கம் வாங்குவதும் பாதிக்கப்பட்டது. மணப்பெண்ணுக்கு வரதட்சினையாக தங்கம் அளிக்கும் பழக்கம் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. மேலும் திருமண நிகழ்வில் தங்கம் பரிசளிப்பதும் அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று சரிந்திருந்ததால் அதிக அளவில் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.56,191 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.43,320 ஆகக் குறைந்தது. இந்த கால கட்டத்தில் மட்டும் 177 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6. பிரான்ஸில் கண்டறியப்பட்ட அதிவேக கரோனாவின் குணங்கள்!

மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், அதைவிட தீவிரமாகப் பரவும் புதிய கரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

பிரான்ஸின் ஐஹெச்யு மெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள், 12 கரோனா நோயாளிகளின் உடலில் முற்றிலும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.

‘பி.1.640.2’ என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த கரோனா வகைக்கு, அதனைக் கண்டறிந்த ஆய்வகமான ‘ஐஹெச்யு’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், ஐஹெச்யு வகை கரோனாவில் 46 குரோமோசோம் மாற்றங்கள் காணப்படுவதாகவும் 37 உட்கருத் துகள்கள் (நியூக்ளியோடைட்) குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இது ஒமைக்ரான் வகை கரோனாவைவிட மனிதா்களின் உடலில் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கரோனா போன்ற தீநுண்மிகளின் மேற்புறம் காணப்படும் ‘கொக்கி’ புரதங்கள்தான், மனித செல்களில் காணப்படும் புரதங்களோடு இணைந்து தொற்றுகின்றன. பல்வேறு வகை அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து இந்தக் கொக்கிப் புரதங்களை உருவாக்குகின்றன.

தற்போது கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும், கொக்கிப் புரதங்களை இலக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஐஹெச்யு வகை கரோனாக்களின் கொக்கிப் புரதங்களில் 14 வகை அமினோ அமிலங்கள் மாற்றியமைந்துள்ளன. அவற்றில் என்501ஒய் என்றழைக்கப்படும் அமினோ அமிலமும் ஒன்று.

ஐஹெச்யு வகை கரோனாவின் கொக்கிப் புரதங்களில் அந்த வகை அமிலம் காணப்படுவதால் அது தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஏற்கெனவே அந்த வகை அமினோ அமிலம் ஆல்ஃபா வகை கரோனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து பீட்டா, காமா, ஒமைக்ரான் உள்ளிட்ட வேகமாகப் பரவும் தன்மை கொண்ட கரோனா வகைகளில் காணப்பட்டது.

இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில், கரோனா தீநுண்மி தன்னை எப்படி உருமாற்றம் செய்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதை புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஐஹெச்யு வகை கரோனா உணா்த்துகிறது என்றனா்.

கடந்த ஆண்டின் முற்பகுதியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வகை கரோனா மிக வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகை கரோனாவைவிட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடான போட்ஸ்வானாவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கண்டறியப்பட்டது.

இதனால் அச்சமடைந்த உலக நாடுகள், ஒமைக்ரான் வகை கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதையும் மீறி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கானவா்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா பரவியுள்ளது.

அந்த வகை கரோனா இதுவரை இல்லாத வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனால் உயிரிழக்கும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், ஒமைக்ரானைவிட அதிக வேகத்தில் பரவும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. இந்திய பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 அதிநவீன போர் விமானங்கள்

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போா் விமானங்களை இந்தியா சோ்த்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘நீா்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் போா் விமானமும், கடல் பகுதியை வானிலிருந்து உளவு பாா்க்கும் ‘பொஸைடன் 8ஐ’ அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இந்தியா பெற்றது. இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளன’ என்றாா்.

‘பொஸைடன் 8ஐ’ ரகத்தைச் சோ்ந்த 8 விமானங்களை 2013-இல் முதல்முறையாக இந்தியா வாங்கியது. இவை அரங்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இவை இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள், நீா்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கடந்த 2020-இல் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இந்த வகை விமானங்களை இந்தியா பயன்படுத்தியது.

கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த இரண்டு ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து கடந்த ஆண்டு இந்தியா வாங்கியது. மேலும் 30 அதிநவீன ட்ரோன்களையும் அமெரிக்காவிடம் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை சுமாா் 35 மணி நேரம் தொடா்ந்து பறந்து கடல் மற்றும் நிலப் பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் படைத்தவையாகும்.

8. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்பு குழுத் தலைவராக டி.எஸ்.திருமூர்த்தி பொறுப்பேற்பு

இந்த ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்பு குழுத் தலைவராக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பொறுப்பேற்றுள்ளாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடா்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்பாக பயங்கரவாதத் தடுப்பு குழு (சிடிசி) உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் 2022-ஆம் ஆண்டு தலைவராக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பொறுப்பேற்றுள்ளாா்.

இதனைத்தொடா்ந்து பயங்கரவாதத் தடுப்புக்கு எதிரான பலதரப்பட்ட எதிா்வினையை வலுப்படுத்தவும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை திறம்பட இருப்பதிலும் சிடிசியின் பங்கை மேம்படுத்த குழுவின் தலைவராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக உள்ளது. இந்த உறுப்பினா் காலம் நிகழாண்டு டிச.31-ஆம் நிறைவடைகிறது.

9. ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது.

கல்வான் தாக்குதல்

இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

அதே ஆண்டின் ஜூன் மாதம் 15-ந்தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், திடீரென சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, இந்திய படை வீரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஆனால் அந்த நிலையிலும், தாய் மண்ணை காக்க வேண்டும் என்ற தவிப்பில், சீன துருப்புகளை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் எதிர்த்து நின்று பதிலடி கொடுத்தனர். இதில் சீனப்படையினர் 45 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. முதலில் தன் தரப்பு உயிர்ச்சேதத்தை ஒப்புக்கொள்ளாத சீனா, கடைசியில் படைவீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டது.

இந்த மோதலுக்குப்பின்னர்தான் எல்லையில் பதற்றம் தணிக்கவும், அமைதியை பராமரிக்கவும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மறுபடியும் நடந்து வருகிறது.

பெயர் சூட்டி அடாவடி

இதற்கு மத்தியில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத் என்றுசொல்லி சொந்தம் கொண்டாடி வருவதை புதுப்பிப்பது போல சீனா நடந்து கொண்டது.

அந்த பகுதிகளுக்கு பெயர் சூட்டி அடாவடி செய்தது.

பாலம் கட்டும் சீனா

இப்போது சீனாவின் மற்றொரு அடாவடிச்செயல், செயற்கைக்கோள் படம் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த செயற்கைக்கோள் படத்தில் கிழக்கு லடாக்கில் பாங்காங் சோ ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் கட்டுமானம் தெரிகிறது. இதுதான் பாலம்.

கிழக்கு லடாக்கில் பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கிற வகையில் சீனா இந்த பாலத்தை கட்டி வருகிறது. இது சரியாக கிழக்கு லடாக்கில் எல்.ஏ.சி. என்று சொல்லப்படுகிற அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 25 கி.மீ. முன்பாக அமைவ தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாலம் கட்டும் பணி சில காலமாகவே நடந்து வந்துள்ளதாம்.

சீனாவுக்கு என்ன ஆதாயம்?

வடக்கு கரை பகுதியில் குர்னாக் கோட்டையில் சீனப்படையின் பாதுகாப்பு அரண் உள்ளது. தெற்கு கரையில் மோல்டோ என்ற இடம் உள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே 200 கி.மீ. தொலைவு உள்ளது. சீனா கட்டுகிற பாலம் வடக்கு, தெற்கு கரைகளுக்கு இடையே 500 மீட்டர் தொலைவுக்கு அமைகிறது.

இந்தப்பாலத்தால் சீனாவுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழும். ஆதாயம் இருக்கிறது.

இந்த பாலத்தால் பாங்காங் சோ ஏரியின் இரு பகுதிகளுக்கும் இடையேயான தொலைவை கடக்க ஆகிற நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 3 அல்லது 4 மணி நேரம்தான் ஆகும்.

தற்போது வரை சீனப்படையினர் ரூடோக் கவுண்டியை கடந்து ஒரு ரவுண்டானாவை சுற்றித்தான் வர முடியும். ஆனால் இனி சீனப்படை நேரடியாக வந்து விடலாம்.

இந்த பாலம் சீனப்படையினர் பயண நேரத்தை வெகுவாக குறைத்து விடும்.

இந்தியாவுக்கு என்ன பிரச்சினை?

இந்த பாலம் சீனப்பகுதியில்தான் கட்டப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதில் இந்தியாவுக்கு ஒரு சிக்கல். இதற்கு ஏற்ற வகையில் தனது செயல்பாட்டு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்தியாவும் அதிரடி வியூகம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து இந்திய பெண் சாதனை!

இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஹர்பிரீத் சிங். 32 வயதான இவர் தனி ஒருவராக தென்துருவத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்கிற பெருமையும் இவரை சேரும்.

மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து 40 நாட்களாக 1,127 கி.மீ. பயணம் செய்து அவர் தென்துருவத்தை அடைந்தார்.

சவால் மிகுந்த இந்த பயணத்தின் அனுபவங்களை தொடர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்த ஹர்பிரீத் சிங், தென்துருவத்தை அடைந்த சாதனை நிகழ்வை நேரலையில் வீடியோவாக ஒளிபரப்பினார்.

அதன் பின்னர் இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் “பனிப்பொழிவு இருக்கும் தென்துருவத்துக்கு சென்றேன். இப்போது பல உணர்வுகளை உணர்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு துருவ உலகத்தைபற்றி எனக்கு எதுவும் தெரியாது, இறுதியாக இங்கே இருப்பதை யதார்த்தமாக உணர்கிறேன். இங்கு வருவது கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

11. தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.1,297 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 வகையான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்

2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,297 கோடி மதிப்பில் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், 2022ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

அதன்படி, பொங்கலுக்கு தேவையான பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம் மற்றும் துணிப்பை ஒன்றும், ஒரு முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1,297 கோடி செலவில் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை 10 குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை நேற்று காலை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று காலை 10 மணி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுத்தின், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ராஜராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

* ரேஷன் கடைகளில் 10ம் தேதி வரை கிடைக்கும்தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கலெக்டர்கள் பொங்கல் பரிசுப் பை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் சுழற்சி முறையில் சுமார் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 10ம் தேதி வரை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் டோக்கனில் உள்ள நாள், நேரத்தை பின்பற்றி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற கடைகளுக்கு வர வேண்டும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று தொடங்கி வருகிற 10ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவித்தாலும், ஊருக்கு சென்றவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க முடியாதவர்களின் வசதிக்காக பொங்கல் பண்டிகைக்கு பிறகும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

12. சிம்-ஸ்வாப் மூலம் 25 லட்சம் சுருட்டிய கும்பல்… தமிழகத்தில் இதுவே முதன்முறை… 4 பேர் கைது!

தமிழக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் பல்வேறு மாநிலங்களில் கை வரிசை காட்டிவந்த சிம் பரிமாற்ற மோசடி நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த போது இந்த கும்பல் சிக்கியுள்ளது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு, 154 டெபிட் கார்டுகள், 105 சிம் கார்டுகள், 128 ஆதார் கார்டுகள், 22 போலி பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையின் ஊழியர்கள் கடந்த நவம்பர் 22 அன்று சைபர் க்ரைம் பிரிவில் அளித்த புகார் போலீசாரை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அந்த புகாரில், மருத்துவமனை மற்றும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து அவர்களுக்கு தெரியாமல் ரூ. 24 லட்சம் வரை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், பாதிக்கப்பட்டவர்களின் சிம் கார்டு வேலை செய்யவில்லை எனவும் கூறியிருந்தனர். விசாரணையை தொடங்கிய சைபர் க்ரைம், மர்ம நபர்கள் மருத்துவமனை கணக்கில் இருந்து 24 லட்ச ரூபாயை அவர்களுக்குத் தெரியாமல் 5 பரிவர்த்தனையில் எடுத்திருப்பதை உறுதி செய்தது.

மேலும், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ மெயில் ஐடியை ஹேக் செய்து அதன்மூலம் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கும் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட சிம் எண்களை செயலிழக்க வைத்துள்ளனர். பின்னர், அதே எண்ணில் போலி சிம் கார்டுகளை தயார் செய்து அதன் மூலம் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான OTPகளைப் பெற்று பணத்தை சுருட்டியது தெரிய வந்தது. மேலும், அந்த பணத்தை மேற்கு வங்கத்தில் உள்ள 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதை தமிழக சைபர் க்ரைம் கண்டுபிடித்தது.

அதனை தொடர்ந்து, வங்கி அறிக்கைகள் மற்றும் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஸ்னாப்ஷாட்களை எடுத்துக்கொண்டு தனிப்படை போலீசார் மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டனர். அங்கு, மேற்கு வங்க காவல்துறையின் உதவியுடன் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த பிகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங், ரோஹன் ஆகிய இரண்டு பேரை முதற்கட்டமாக பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை மருத்துவமனை வங்கி கணக்கை ஹேக் செய்ததில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், எஞ்சிய குற்றவாளிகளான சயந்தன் முகர்ஜி மற்றும் ராகுல் ராய் கைது செய்யப்பட்டனர். நான்கு பேரிடம் இருந்தும் 154 டெபிட் கார்டுகள், 105 சிம் கார்டுகள் மற்றும் 128 ஆதார் கார்டுகள் மற்றும் 22 போலி பான் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: மாநிலத்தில் சிம்-ஸ்வாப் மோசடி நடப்பது இதுவே முதல் முறை. இந்த மோசடிக்கு ஆளானவர்கள் யார் வேண்டுமானாலும் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்றார்.

13. நாட்டின் மின்நுகர்வு 110.34 பில்லியன் யூனிட்: 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 4.5% உயர்வு

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக முதல் அலையை விட இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலரும் உயிரிழப்புகளை சந்தித்தனர். பெரும்பாலான இடங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, முழுமையான ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்கள் அனைத்தும் முடங்கின. மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருந்தனர்.

குறிப்பாக நாட்டில் உள்ள பெரிய தொழிற்சாலைகளான துணி உற்பத்தி தொழிற்சாலைகள், இரும்பு உருக்கும் தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள், பருத்தி தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த தொழிற்சாலைகள் முழுவதும் இயங்கவில்லை. இதேபோல் ஐடி நிறுவனங்களும் முடங்கியது. இதுபோன்ற காரணங்களினால் சம்மந்தப்பட்ட இடங்களில் மின்சாரம் பயன்படுத்துவது பெருமளவில் குறைந்தது. பிறகு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மேலும் பொதுமக்களும் அதிகப்படியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து 50 சதவீத தொழிலாளர்களுடன் அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு தொற்று மேலும் குறைந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் முழுமையாக செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அவை கொஞ்சம், கொஞ்சமாக முழுமையாக இயங்க தொடங்கியது.

குறிப்பிட்ட சில ஐடி நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக இயங்கி வருகிறது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட இடங்களில் வழக்கம் போல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் மின்நுகர்வு தற்போது அதிகரித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக ஒருநாளினுடைய மின்தேவை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் 183.38 ஜிகாவாட்டாக இருந்தது. இதுவே 2020ம் ஆண்டு 182.78 ஜிகாவாட்டாகவும், 2019ம் ஆண்டு 10.49 ஜிகாவாட்டாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் மின்நுகர்வு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது 2021ம் ஆண்டு நவம்பரில் மின்நுகர்வு 99.37 பில்லியன் யூனிட்டாக இருந்தது. 2020ம் ஆண்டில் 96.88 பில்லியன் யூனிட்டாகவும், 2019ம் ஆண்டில் 93.94 பில்லியன் யூனிட்டாகவும் இருந்தது. இதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பரில் மின்நுகர்வு 110.34 பில்லியன் யூனிட் ஆகும். இது 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும். அதாவது 2020ம் ஆண்டில் மின்நுகர்வு 105.62 பில்லியன் யூனிட்டாகவும், 2019ம் ஆண்டில் 101.08 பில்லியன் யூனிட்டாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

14. மேலும் 2 பி-8ஐ போர் விமானம் இந்திய கடற்படையில் இணைப்பு

நீர்மூழ்கிக்கப்பலைத் தாக்கி அழிக்க கூடிய 2 பி-8ஐ போர் விமானங்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

அதன்படி, முதல் எட்டு பி-8ஐ போர் விமானம் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன. இவை தற்போது அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 2 பி-8ஐ போர் விமானங்கள் கடந்த 30ம் தேதி கோவா வந்தடைந்தன. இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில், ‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு, அனுமதி பெற்ற பிறகு இவை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்களுக்கு மிக் 29கே படையினர் வரவேற்பு அளித்தனர். இரண்டாவது முறை கூடுதலாக வாங்கிய 4 பி-8ஐ போர் விமானங்கள் 316 விமானப்படை பிரிவில் ஐஎன்எஸ் ஹன்சாவில் இருந்து செயல்பட உள்ளன,’ என்றார்.

1. KSLV–II Nuri rocket, is the first domestically produced space launch vehicle of which country?

A) South Korea 

B) Israel

C) UAE

D) Bangladesh

  • South Korea’s first domestically produced space launch vehicle KSLV–II Nuri rocket failed due to a loose helium tank. All the three stages of the rocket worked, taking it to a height of 700 kilometres, and the 1.5–tonne payload separated successfully. The mission failed as the third–stage engine stopped burning 46 seconds earlier than schedule.

2. Which country launched the ‘Better Health Smoke–Free’ campaign?

A) Australia

B) UK 

C) India

D) France

  • The UK government has launched a new initiative named ‘Better Health Smoke–Free’ campaign, which highlights the impact of adult smokers on younger people. The campaign has urged the smokers to quit smoking. As per the data released by the campaign, 4.9 per cent of teenagers whose parents smoke have also adopted the habit. New Zealand has also set goals to go smoke–free by 2030.

3. ‘Financial Stability Report (FSR)’ is the flagship report released by which institution?

A) NITI Aayog

B) Reserve Bank of India 

C) World Bank

D) Asian Development Bank

  • ‘Financial Stability Report (FSR)’ is a half–yearly report released by the ‘Reserve Bank of India’. The recent edition of the report was released by RBI. As per the report, the retail–led credit growth model in India is beginning to face issues due to two factors, increase in defaults in the consumer finance portfolio and slowdown in the new credit segment.

4. Sabah Al–Khalid Al–Sabah is the Prime Minister of which country?

A) Bahrain

B) Kuwait 

C) Oman

D) Saudi Arabia

  • Sabah Al–Khalid Al–Sabah is the Prime Minister of Kuwait. Kuwait has recently formed a new cabinet with a new finance minister and three opposition legislators. The cabinet has only one female minister. It includes three opposition MPs and one pro–government lawmaker.

5. Which country is the new member of the BRICS New Development Bank?

A) Italy

B) Egypt 

C) Israel

D) Bangladesh

  • The BRICS New Development Bank (NDB) announced that it will add Egypt as its new member. NDB was established by BRICS nations, namely Brazil, Russia, India, China, and South Africa, in the year 2015.
  • Egypt is the fourth new member admitted into NDB, after Bangladesh, the United Arab Emirates (UAE) and Uruguay. Marcos Troyjo is the President of the NDB.

6. Revamped Distribution Sector Scheme (RDSS) is implemented by which Union Ministry?

A) Ministry of Power 

B) Ministry of Atomic Energy

C) Ministry of Home Affairs

D) Ministry of Coal

  • The Government of India has approved the Revamped Distribution Sector Scheme (RDSS) to improve the efficiencies of DISCOMs by providing financial assistance. Two PSUs–REC and PFC have been nominated as nodal agencies for implementing the scheme. Assam and Meghalaya have been recently announced as frontrunners for Revamped Distribution Sector Scheme (RDSS).

7. “Airgun Surrender Abhiyan”, is being implemented in which state/UT?

A) Chhattisgarh

B) Arunachal Pradesh 

C) Assam

D) West Bengal

  • ‘Airgun Surrender Abhiyan’ is being implemented in Arunachal Pradesh. Under the programme, people are voluntarily surrendering their airguns to stop indiscriminate hunting of birds. PM Narendra Modi recently appreciated about the Airgun Surrender Abhiyan.

8. HDFC Bank has tied up with which bank, to expand its banking services to semi–urban and rural areas?

A) India Post Payments Bank (IPPB) 

B) Kerala Gramin Bank

C) Tamil Nadu Grama Bank

D) South Indian Bank

  • HDFC Bank has tied up with India Post Payments Bank (IPPB) to offer its banking services to the unbanked segments in semi–urban and rural areas. An MoU was signed between HDFC Bank and IPPB to cater to the 4.7 crore customer base of IPPB, by providing access to finance. About 90 per cent of IPPB customers reside in rural areas.

9. India is set to chair the counter–terrorism committee at UNSC in which year?

A) 2022 

B) 2023

C) 2024

D) 2025

  • India is set to chair the United Nations Security Council (UNSC) during the year 2022. India had earlier chaired this committee in 2012. In this tenure, India also chairs the Taliban Sanctions Committee. India is set to chair the 15–nation council for two years.

10. What is the expansion of ‘FFV–SHEV’, related to the recent guidelines of Union Road Transport and Highways Ministry?

A) Flex Fibre Strong Hybrid Electric Vehicles

B) Flex Fuel Strong Hybrid Electric Vehicles 

C) Flex Fibre Substitute Hybrid Electric Vehicles

D) Flex Fuel Strong Hybrid Electric Vehicles

  • Union Road Transport and Highways Ministry has released guidelines regarding Flex Fuel Vehicles (FFV) and Flex Fuel Strong Hybrid Electric Vehicles (FFV–SHEV). The Automobile Manufacturers are advised to manufacture the vehicles complying with BS–6 Norms within a period of six months.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!