Tnpsc

5th March 2020 Current Affairs in Tamil & English

5th March 2020 Current Affairs in Tamil & English

5th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

5th March 2020 Current Affairs Tamil

5th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மையில், சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க மண்டலமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் எது?

அ. தேசிய சம்பல் சரணாலயம்

ஆ. கிர் வனவுயிரி சரணாலயம்

இ. பெரியாறு வனவுயிரி சரணாலயம்

ஈ. கார்பெட் தேசியப்பூங்கா

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அண்மைய அறிக்கையில், தேசிய சம்பல் சரணாலயம், சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள இச்சரணாலயம் 75% சொம்புமூக்கு முதலைகள், நன்னீர் கங்கை ஓங்கில்கள், நன்னீர் ஆமைகள் மற்றும் 180’க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த பறவையினங்களுக்கு வாழ்விடமா உள்ளது.
  • சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க மண்டலத்தில் (ESZ) உள்ள பகுதிகள் வணிகம், குடியிருப்பு அல்லது தொழிற்துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாது என அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது.

2. “EKAM Fest” என்னும் கண்காட்சியை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. ஜவுளி அமைச்சகம்

ஈ. எஃகு அமைச்சகம்

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ், தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டுக்கழகம் (NHFDC) ஏற்பாடுசெய்த, “EKAM Fest” என்ற ஏழு நாள் கண்காட்சியானது சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது. இது, மார்ச் 2-9 வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும். 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த 82’க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் தயாரிப்புகளை இதில் காட்சிப்படுத்துகின்றனர்.
  • NHFDC ஸ்வாவலம்பன் மையம், தில்லியில் பாதுகாப்பான வண்டிகள் மற்றும் இந்தூர் பாதுகாப்பான குடிநீர் மின்-வண்டிகள் போன்ற பல முயற்சிகளை NHFDC இவ்விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

3. மார்ச் 2020 நிலவரப்படி, நட்சத்திரக்குறியிடல் திட்டத்தின்கீழ், எத்தனை சாதனங்களை, எரிசக்தித் திறன் செயலகம் (BEE) உள்ளடக்கியுள்ளது?

அ. 16

ஆ. 26

இ. 36

ஈ. 46

  • ஆற்றல் சேமிப்புச் சட்டம், 2001இன்கீழ், நட்சத்திரக் குறியிடல் திட்டத்தை (Star Labelling Programme) எரிசக்தித்திறன் செயலகம் (BEE) உருவாக்கியுள்ளது. அண்மையில், BEE அதன் 19ஆவது நிறுவன நாளில், தனது நட்சத்திரக் குறியிடலை மேலும் இரண்டு சாதனங்களுக்கு விரிவுபடுத்தியது. அவை, ஆழ் உறைப்பெட்டகம் மற்றும் இலகுரக வணிகப் பயன்பாட்டுக்கான காற்றுப்பதனாக்கி.
  • தற்போது இந்தத்திட்டத்தின்கீழுள்ள மொத்த சாதனங்களின் எண்ணிக்கை 26 ஆகும். எரிசக்தித்திறன் குறித்த ‘உர்ஜா தக்ஷதா தகவல் கருவி’ என்னும் தரவுத்தளத்தை உலக வள நிறுவனத்துடன் (World Resources Institute) இணைந்து BEE தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) மதிப்பிட்டுள்ளபடி, 2020-21ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன?

அ. 4.6 %

ஆ. 4.8 %

இ. 5.1 %

ஈ. 5.4 %

  • 2020-21ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கணிப்பை முந்தைய கணிப்பான 6.2 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக OECD நிறுவனம் குறைத்துள்ளது. 2019 மார்ச் மாதத்துடன் நிறைவடையும் இந்நிதியாண்டில், வளர்ச்சி விகிதம் 4.9% சதவீதமாக இருக்கும் என OECD கணித்துள்ளது. இந்த விகிதங்களைக் குறைப்பதற்கான மிகமுக்கியக்காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரம் அடுத்துவரும் 2021-22ஆம் ஆண்டில் 5.6% ஆக மேம்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

5. லுலு குழுமத்தின் தலைவர் M A யூசுப் அலி, எந்நாட்டின் நிரந்தர வசிப்பிட அனுமதிப்பத்திரத்தைப்பெற்ற முதல் இந்தியராக ஆனார்?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. கத்தார்

இ. சவூதி அரேபியா

ஈ. ஓமான்

  • லுலு குழுமத்தின் தலைவர் M A யூசுப் அலி, அண்மையில், சவூதி அரேபியாவின் நிரந்தர வசிப்பிட அனுமதிப்பத்திரத்தைப்பெற்ற முதல் இந்தியரானார். அபுதாபியைச் சார்ந்த இந்திய சில்லறை வணிக நபரும், கடந்த ஆண்டின் போர்ப்ஸ் இதழால், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசித்துவரும் பணக்கார அயல்நாட்டவராகவும் இவர் மதிப்பிடப்பட்டார். சவூதி நிரந்தர குடியிருப்பு அனுமதி என்றழைக்கப்படும் இது, வெளிநாட்டவர்களுக்கு ஓர் ஆதரவாளரின் தேவையில்லாமல் நாட்டில் வாழ, பணிபுரிய மற்றும் சொந்த வணிக மற்றும் சொத்துக்கான உரிமையை வழங்குகிறது.

6. ‘ஹம்சாபர்’ என்ற அலைபேசி செயலி தொடர்புடைய சேவை எது?

அ. பயணம்

ஆ. வீட்டிற்கே வந்து எரிபொருள் வழங்குதல்

இ. வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்குதல்

ஈ. வானூர்தி பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்தல்

  • பணியாளர் நலன் அமைச்சர் சந்தோஷ் கங்வார், அண்மையில், ‘ஹம்சாபர் – Humsafar’ என்னும் அலைபேசி செயலியை அறிமுகப்படுத்திவைத்தார். தேசிய தலைநகரப் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி சங்கங்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச்சென்று எரிபொருளை வழங்கும் நோக்கத்துடன் இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தமாக எரிபொருள் வாங்குவோருக்கு எரிபொருள் கிடைப்பை இது உறுதிசெய்யும். இந்த நடவடிக்கை, நகரத்தில் எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பற்ற நடைமுறைகளைத் தடுக்கும்.

7. எந்தப் பன்னாட்டு நுகர்வோர் மின்னணு நிறுவனத்தின் அடுத்த தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பெக்கா லண்ட்மார்க் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்?

அ. சாம்சங்

ஆ. நோக்கியா

இ. ஹவாய்

ஈ. மோட்டோரோலா

  • இராஜீவ் சூரிக்கு அடுத்தபடியாக தனது அடுத்த தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பெக்கா லண்ட்மார்க்கை அதன் இயக்குநர்கள் குழு நியமித்துள்ளதாக முன்னணி தொலைத்தொடர்பு & நுகர்வோர் மின்னணு நிறுவனமான நோக்கியா அறிவித்துள்ளது. இராஜீவ் சூரி தனது தற்போதைய பதவியிலிருந்து வரும் 2020 ஆகஸ்ட்.31 அன்று விலகுவதோடு நோக்கியா வாரியத்தின் ஆலோசகராக 2021 ஜனவரி.1 வரை இருக்கவுள்ளார். பெக்கா, வரும் 2020 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொள்வார்.

8. அண்மையில் காலமான, ‘Order of the British Empire’ விருது பெற்ற இராம்னிக்லால் சோலங்கி, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

அ. விளையாட்டு

ஆ. வணிகம்

இ. இதழியல்

ஈ. நாடகம்

  • மூத்த குஜராத்தி மொழி இதழாளரும், பிரிட்டனில் உள்ள ஆசிய ஊடகங்களின் முன்னோடியுமான இராம்னிக்லால் சோலங்கி, அண்மையில் காலமானார். மும்பையைச் சார்ந்த ஜென்மபூமி குழுமத்தின் லண்டன் நிருபராக அவர் பணியாற்றினார். கரவி குஜராத் வார இதழ் மற்றும் ஆசிய ஊடக குழுமத்தின் நிறுவனர்-ஆசிரியராகவும் அவர் இருந்தார். கடந்த 1997ஆம் ஆண்டில், ‘பிரிட்டிஷ் பேரரசின் மரியாதை’ மற்றும் 2007ஆம் ஆண்டில், ‘CBE’ என்னும் மிகவுயர்ந்த மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

9. வங்கிகளின் கடன் விகிதங்களைக் குறைக்க உதவுவதற்காக, 1 ஆண்டு & 3 ஆண்டு காலவரையறை கொண்ட, ‘LTRO’க்களை இந்திய ரிசர்வ் வங்கி நடத்துகிறது. இதில், ‘LTRO’ என்பது எதைக் குறிக்கிறது?

அ. Long Term Reverse Operation

ஆ. Liquidity Term Repo Operation

இ. Liquidity Term Reverse Operation

ஈ. Long Term Repo Operation

  • வங்கிகளின் கடன் விகிதங்களைக் குறைக்க உதவுவதற்காக, 1 ஆண்டு & 3 ஆண்டு காலவரையறை கொண்ட ‘நீண்டகால ரெப்போ நடவடிக்கைளை – LTRO’ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்துகிறது.
  • சமீபத்திய இருமாத கொள்கை மறுஆய்வின்போது, கொள்கை ரெப்போ விகிதத்தில் `1 டிரில்லியனுக்கு 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு காலவரையில் மறு கொள்முதலுக்கான (term repurchase) ஒப்பந்தங்களை RBI அறிவித்திருந்தது. பிப்ரவரி 17, பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் ரிசர்வ் வங்கி மூன்று நீண்டகால ரெப்போ நடவடிக்கைளை நடத்தியுள்ளது. நான்காவது நடவடிக்கை வரும் மார்ச் 9 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாண்டு காலவரையறையின் மூன்றாவது LTRO’இல், ரிசர்வ் வங்கி `1.71 டிரில்லியன் மதிப்பிலான 66 ஏலங்களைப் பெற்றது.

10. ஓய்வுபெற்ற பின்னர் தனது பணியாளர்களுக்கு சேவை நீட்டிப்பு வழங்கும் கொள்கையை சமீபத்தில் இரத்துசெய்த மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. இராஜஸ்தான்

இ. பஞ்சாப்

ஈ. உத்தரபிரதேசம்

  • பணிஓய்வுபெற்ற பின்னர் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு சேவையில் விருப்ப நீட்டிப்பை வழங்கும் கொள்கையை பஞ்சாப் மாநில அரசு சமீபத்தில் இரத்துசெய்தது. இந்த முடிவு மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. 60 அல்லது 62 வயது வரை அனைத்து ஊழியர்களுக்கும் சேவை நீட்டிப்பை வழங்க அம்மாநில அரசு முன்பு அனுமதித்திருந்தது. அண்மையில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அறுபதிலிருந்து ஐம்பத்தெட்டாக மாற்றியது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • தமிழ்நாட்டில் அரியலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!