Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

5th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

5th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. கீழ்காணும் எந்த இந்திய ஆயுதப்படையால் ஆபரேஷன் சமுத்ர சேது-2 தொடங்கப்பட்டுள்ளது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய வான்படை

இ) இந்திய கடற்படை

ஈ) இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படை

  • இந்திய கடற்படையானது ஆபரேஷன் சமுத்ர சேது-2’ஐ தொடங்கியுள்ள -து. இதன்கீழ், இந்திய கடற்படையானது சமுத்ர சேது II செயல்பாட்டின் ஒருபகுதியாக கொல்கத்தா, கொச்சி, தல்வார், தாபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய 7 இந்திய கடற்படைக் கப்பல்கள், பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ உயிர்வளி நிரப்பப்பட்ட கிரையோஜனிக் கொள்கலன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவத -ற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

2. கீழ்காணும் எந்த மத்திய ஆயுத காவல்படையின் முதல் பெண் அதிகாரியாக வைஷாலி எஸ் ஹிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) BRO

ஆ) ITBP

இ) CAPF

ஈ) CRPF

  • சாலை கட்டுமான நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி -யாக வைஷாலி எஸ் ஹிவாஸை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நியமித்துள்ளது. இந்திய – சீன எல்லை முழுவதும் சாலை இணைப்பு குறித்த ஆணைகளை அவர் நிறுவனத்திற்கு வழங்குவார். M Tech பட்டதாரியான அவர், ஏற்கனவே கார்கிலில் பணிபுரிந்துள்ளார்.

3. கீழ்காணும் எந்த நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இணங்க பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா தொடங்கப்பட்டது?

அ) SDG 1

ஆ) SDG 3

இ) SDG 5

ஈ) SDG 10

  • “நலமான வாழ்வை உறுதிசெய்து, எல்லா வயதினருக்கும் நலவாழ்வை ஊக்குவிப்பது” குறித்து நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) 3 கூறுகிறது. பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் முக்கிய அங்கமாகும்; இது, கடந்த 2018’இல் தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய நலவாழவுத் திட்டமான இது, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு `5 லட்சம் வரையிலான காப்பீட்டு வசதியை 10.74 கோடி ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. ஏப்.30 – ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எனக் கொண்டாடப்பட்டது.

4. நைட்ரஜன் ஆக்கியை உயிர்வளி ஆக்கியாக மாற்றி நிரூபித்துள் -ள நிறுவனம் எது?

அ) IISc பெங்களூர்

ஆ) IIT பம்பாய்

இ) IIT மெட்ராஸ்

ஈ) IIT கெளகாத்தி

  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-பம்பாய், தற்போது அமைக்கப்பட்டுள்ள நைட்ரஜன் ஆலையை மாற்றியமைப்பதன்மூலம் நைட்ரஜன் ஆக்கிகளை உயிர்வளி ஆக்கிகளாக மாற்றுவதற்காக, நிரூபன அலகு ஒன்றை அமைத்துள்ளது. IIT-B ஆய்வகத்தில் இந்த ஆலையால் உருவாக்கப்பட்ட உயிர்வளியை சோதனை செய்தபோது 3.5 வளிமண்டல அழுத்தத்தில் 93-96% தூய்மையானதாக கண்டறியப்பட்டது.

5. மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • பூத்னியில் உள்ள மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனமானது வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். இது மத்திய பிரதேச மாநிலத்தி -ல் அமைந்துள்ளது. சமீபத்தில், நாட்டின் முதல் மின்சார உழவு எந்திரம் இந்நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் புதிய மின்சார உழவு எந்திரம் மற்ற வகை உழவு எந்திரங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

6. இந்தியாவில், ஒரு கூட்டுறவு வங்கியிலிருந்து உருவாக்கப்பட்ட முதல் சிறு நிதி வங்கி எது?

அ) ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி

ஆ) ஜன சிறு நிதி வங்கி

இ) பந்தன் சிறு நிதி வங்கி

ஈ) சிவாலிக் சிறு நிதி வங்கி

  • சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியானது 2020ஆம் ஆண்டில், ஒரு சிறு நிதி வங்கியாக மாற்றுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடமிரு -ந்து கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற்றது. இதன்மூலம், ஒரு சிறு நிதி வங்கியாக மாற்றப்பட்ட முதல் கூட்டுறவு வங்கியாக அவ்வங்கி திக ழ்கிறது. சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியானது ஒரு சிறு நிதி வங்கியா -க ஏப்.26 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

7. ‘CLAP’ என்ற பெயரில் ஒரு தூய்மை இயக்கத்தை தொடங்கவுள்ள இந்திய மாநில அரசு எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) இராஜஸ்தான்

ஈ) கேரளா

  • CLAP (Clean Andhra Pradesh) ஜெகனண்ணா ஸ்வச்ச சங்கல்ப திட்டத்தை ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சிற்றூர்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான 100 நாட்கள் தூய்மை திட்டம் மே.1 முதல் தொடங்கும். சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கும் அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது.

8. பிரபல ஹிந்து யாத்திரையான சோட்டா சர்தாம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) உத்தரகண்ட்

இ) பீகார்

ஈ) ஒடிஸா

  • சோட்டா சர்தாம் என்பது இமயமலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஹிந்து யாத்திரை சுற்று ஆகும். இந்தச் சுற்று யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய 4 தளங்களைக் கொண்டுள்ளது.
  • மே மாதம் தொடங்கவிருந்த சர்தாம் யாத்திரையை உத்தரகண்ட் மாநில அரசு இடைநிறுத்தம் செய்துள்ளது. குருக்கள் மட்டும் சன்னதிகளுக்குள் சடங்குகளை செய்வார்கள்.

9. உலகளவில் மிகவும் மதிப்புமிக்க முதல் பத்து காப்பீட்டு நிறுவன -ங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய காப்பீட்டு நிறுவனம் எது?

அ) UIIC

ஆ) LIC

இ) NIA

ஈ) NICL

  • ஆயுள் காப்பீட்டுக் கழகமானது (LIC) உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்புமிக்க காப்பீட்டு நிறுவனமாக உள்ளது. பிராண்ட் பைனான்ஸ் இன்சூரன்ஸ் 100-2021’இன் அறிக்கையின்படி, LIC’இன் மதிப்பு கிட்டத்தட்ட 7% அதிகரித்து 8.65 பில்லியன் டாலராக உள்ளது.
  • முதல் பத்து இடங்களில் ஐந்து சீன காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் பிங் ஆன் இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

10. சமீபத்தில் 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விண்வெளி நிறுவனம் எது?

அ) NASA

ஆ) JAXA

இ) SpaceX

ஈ) புளூ ஆர்ஜின்

  • எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX சமீபத்தில் 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை அதன் பால்கான் 9 ஏவுகலத்தின்மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
  • இந்த ஆண்டின் பத்தாவது ஏவுதலைக் குறிக்கும் வகையில், முதன்மை பால்கான் 9 ஏவுகலம், புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண் வெளி நிலையத்திலுள்ள விண்வெளி ஏவுதல் வளாகம் நாற்பதிலிருந்து ஏவப்பட்டது. இது வெற்றிகரமாக ஏழாம் முறையாக கடலில் இறங்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவுடன் பிரிட்டன் `10,220 கோடியில் புதிய வர்த்தக ஒப்பந்தம்:

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி ஊடாக உரையாடினார். இக்காணொலிவழி மாநாட்டின்போது, இந்தியாவுடன் `10,200 கோடியில் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வ -து, பிரிட்டனில் புதிதாக 6,500 வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவுசெய்யப்பட்டது.

ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை, அஸ்ட்ராஜென -கா மருந்து நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவில் கோவி ஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிப்பது இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியா-பிரிட்டன் இடையேயான வர்த்தக மதிப்பு தற்போது ஆண்டுக்கு `2.35 லட்சம் கோடியாக உள்ளது. இதை, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக அதிகரிக்க செய்யும் வகையில் இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளது. இதுதவிர விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும் பிரிட்டன் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த ஒப்பந்தம்மூலம் பிரிட்டனில் மருத்துவம், உயிரிதொழில்நுட்பம், தகவ -ல் தொழினுட்பம், மென்பொருள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 20 இந்திய நிறுவனங்கள் `5,453 கோடி முதலீடு செய்யவுள்ளன. அதில், சீரம் நிறுவனம் `2,455 கோடி முதலீடு செய்கிறது. அந்நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பிரிட்டனில் உற்பத்தி செய்து, விற்பனை செய்யவுள்ளது. பிரிட்டனில் விற்பனை அலுவலகத்தையும் அந்த நிறுவனம் திறக்கவுள்ளது. இதுதவிர, விப்ரோ, கியூ-ரிச் கிரியேஷன்ஸ், மாஸ்டெக், ஸ்டெர்லைட் டெக் -னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பிரிட்டனில் முதலீடு செய்யவுள்ளன.

இதேபோன்று பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும், இந்தியாவுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. அதன்படி, இந்தியாவுக்கு `4,563 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்ப அமைப்பை பிரிட்டன் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யவுள்ளன. அந்த வா்த்தகத்தின் மதிப்பு `2,046 கோடியாகும். இந்த ஒப்பந்ததால், இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எளிதாக முடியும்.

புதிய வர்த்தக ஒப்பந்தப்படி, பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பொருள்க -ளுக்கு சுங்கவரி குறைக்கப்படும். இதனால் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் பொருள்களும் தொலைத்தொடர்பு சேவைகளும் ஏற்றுமதி செய்யப்படும். இவைதவிர, கல்வித்துறை, சட்ட சேவைகள் பரிமாற்றம் ஆகிவற்றில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

மின்வாரியத்தில் பணியாற்றுவோருக்கான ஓய்வுபெறும் வயது 59’இல் இருந்து 60’ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசாணையின் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58’இலிருந்து 59’ஆக உயர்த்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59’இல் இருந்து 60 வயதாக உயர்த்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், சட்ட மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவைகளின் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் இதை கவனமாக பரிசீலித்த பின்னர், அரசாங்கத்தின் இந்த உத்தரவுகளை மின்வாரியத்தில் ஏற்க முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்க -ளின் ஓய்வு வயது 59’இலிருந்து 60 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. பணியில் உள்ள அனைவருக்கும் மற்றும் 31.5.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இது பொருந்தும்.

3. கீழடி அகழாய்வு: மூடியுடன் மண் பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை முழுமையான நிலையில் மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் ஏழாம்கட்ட அகழாய்வு கடந்த பிப்.13 முதல் நடந்து வருகிறது. இப்பகுதியில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் இருவண்ண மண் பானைகள், பானை ஓடுகள், பகடை, கல் உழவு கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

தற்போது மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 1½ அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூடியுடன் கூடிய இந்தப் பானை சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. பானையின் மூடி இறுக்கமாக மூடிய நிலையில், இந்த பானையினுள் பொருள்கள் எதுவும் இருக்கும் பட்சத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த விவரம் தெரியவரும் என வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மணலூரில் அகழாய்வு தொடக்கம்: மேலும் ஏழாம்கட்ட அகழாய்வில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வுப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மணலூரில் மட்டும் அகழாய்வு செய்யும் இடத்தை தேர்வுசெய்யும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் மணலூரில் அகழாய்வுக்காக ஜானகி அம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 8 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக இருகுழிகள் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. மணலூார் முனியா -ண்டி கோவிலருகே நடைபெற்று வரும் இப்பணியில் பழங்கால பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

4. தெலங்கானாவில் 8 சிங்கங்களுக்கு கரோனா

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள வன உயிரியல் பூங்காவில் எட்டுச் சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எட்டுச் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் உடல்நிலை சீராக உள்ளது’. என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு ஸ்பெயினின் பார்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

5. இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்:

உயர் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊக்கத்தொகைபெறத்தகுதியான மாணவர்களி -ன் வங்கிக்கணக்கு உள்ளிட்ட முழு விவரங்களை அனுப்புமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தங்கள் படிப்பு முடிந்து உயர்கல்வி பயிலச் செல்லும்போது இடைநிற்றலைத் தவிர்க்க, தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

2011-12ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா `1,500, +2 மாணவர்களுக்கு `2,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

1. Operation Samudra Setu–II has been launched by?

A) Indian Army

B) Indian Air Force

C) Indian Navy

D) Indo–Tibetan Border Police

  • The Indian Navy has launched the Operation Samudra Setu–II, under which Indian Naval warships would ship liquid oxygen filled cryogenic containers from foreign nations. As a part of the operation, two naval ships INS Kolkata and INS Talwar have been deployed to bring oxygen from Bahrain to Mumbai.

2. Vaishali S Hiwase, has been appointed as the first woman officer of which Central Armed Police Force?

A) BRO

B) ITBP

C) CAPF

D) CRPF

  • The Border Roads Organisation (BRO) has appointed Vaishali S Hiwase as the first woman officer to command a Road Construction Company (RCC). The officer would command the company, to provide connectivity in a high–altitude area along the India–China border. She is a M Tech graduate and has already carried out a demanding tenure in Kargil.

3. PM Jan Arogya Yojana was launched in line with which Sustainable Development Goal (SDG)?

A) SDG 1

B) SDG 3

C) SDG 5

D) SDG 10

  • Sustainable Development Goal (SDG) 3 states “Ensure healthy lives and promote well–being for all at all ages”. The Pradhan Mantri Jan Arogya Yoajna is a key component of Ayushman Bharat Yojna and was launched in 2018.
  • Being the largest health scheme in the world, it aims to provide a health cover of ₹5 lakh per family per year to over 10.74 crore poor and vulnerable families. April 30 is celebrated as Ayushman Bharat Diwas.

4. Which institute has demonstrated the conversion of Nitrogen Generator into Oxygen Generator?

A) IISC Bangalore

B) IIT Bombay

C) IIT Madras

D) IIT Guwahati

  • Indian Institute of Technology–Bombay (IIT–B), has set up a demonstration unit to convert nitrogen generators, into oxygen generators by modifying the existing nitrogen plant set up. The oxygen generated by this plant at IIT–B lab was tested and found to be 93–96% pure and at 3.5 atmospheric pressure.

5. Central Farm Machinery Training and Testing Institute (CFMTTI) is located in which state?

A) Tamil Nadu

B) Madhya Pradesh

C) Andhra Pradesh

D) Karnataka

  • The Central Farm Machinery Training and Testing Institute, Budni is a premier institute under the Ministry of Agriculture and Farmers Welfare. It is located in the state of Madhya Pradesh. Recently, the first–ever electric tractor in the country has been tested at the institute. This new electric tractor will be more environmentally friendly than other types of tractors.

6. Which is the first Small Finance Bank formed from a cooperative bank in India?

A) Equitas Small Finance Bank

B) Jana Small Finance Bank

C) Bandhan Small Finance Bank

D) Shivalik Small Finance Bank

  • Shivalik Mercantile Co–operative Bank Ltd. was granted an in–principle approval from the Reserve Bank of India, for transition into a small finance bank in 2020. It is the first cooperative bank to be converted into a small finance bank, under the transition scheme. Shivalik Small Finance Bank Ltd. has commenced operations as a small finance bank with effect from April 26.

7. Which Indian state Government is to launch a Cleanliness Drive named ‘CLAP’?

A) Andhra Pradesh

B) Madhya Pradesh

C) Rajasthan

D) Kerala

  • The state government of Andhra Pradesh is set to launch CLAP (Clean Andhra Pradesh) Jagananna Swachha Sankalpam programme. The scheme is expected to be launched in the month of July. 100 days sanitation drive to keep the villages clean will start from May 1.
  • The state has also planning for better sewage water treatment and solid waste management.

8. Chota Char Dham, a famous Hindu pilgrimage circuit, is located in which state?

A) Uttar Pradesh

B) Uttarakhand

C) Bihar

D) Odisha

  • The Chota Char Dham is an important Hindu pilgrimage circuit located in the Indian Himalayas, in the Garhwal region of the state of Uttarakhand. The circuit consists of four sites: Yamunotri, Gangotri, Kedarnath, and Badrinath. The Uttarakhand government has suspended the Char Dham Yatra, which was scheduled to begin in May. Only priests will perform the rituals inside the shrines.

9. Which Indian insurance company has featured in the top 10 list of most valuable insurance brands globally?

A) UIIC

B) LIC

C) NIA

D) NICL

  • Life Insurance Corporation (LIC) has become the third strongest and the tenth most valuable insurance brand globally. According to a report by Brand Finance Insurance 100 2021, LIC’s brand value increased by almost 7 per cent to $8.65 billion.
  • There are 5 Chinese Insurance companies in the top 10 with Ping An Insurance at the top place.

10. Which space agency has recently launched a new batch of 60 Starlink internet satellites into orbit?

A) NASA

B) JAXA

C) SpaceX

D) Blue Origin

  • Elon Musk–owned SpaceX recently launched a new batch of 60 Starlink internet satellites into orbit onboard its Falcon 9 rocket. Marking the company’s 10th launch of the year, the flagship Falcon 9 rocket blasted off from Space Launch Complex 40 at Cape Canaveral Space Force Station in Florida. It successfully landed at sea, for the seventh time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!