Tnpsc

5th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. கல்வியின் நிலை குறித்த ஆண்டறிக்கை (ASER) 2020’இன்படி, கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைகளில் எத்தனை சதவீதம் பேர் நேரலை ஆன்லைன் வகுப்புகளுக்கான அணுகலைப் பெறுகின்றனர்?

அ. 11

ஆ. 16

இ. 24

ஈ. 37

  • கிராமப்புற இந்தியா முழுவதும் சீரற்ற முறையில் 60,000 மாணாக்கரிடம் தொலைபேசி வாயிலாக மேற்கொண்ட கருத்துக்கேட்பின் அடிப்படையில், கல்வி நிலை குறித்த அறிக்கை – 2020 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைகளில் 11% பேருக்கு மட்டுமே நேரலை இணையவழி வகுப்புகளுக்கான அணுகல் கிடைக்கின்றது. கருத்துக்கேட்கப்பட்ட குழந்தைக -ளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே இணையவழிக் கற்றல் அணுகல் இருந்தது. நாட்டில் நிலவும் டிஜிட்டல் சமத்துவமின்மையை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

2. அண்மையில் திறக்கப்பட்ட, “கெவாடியா சுற்றுலா சுற்று” என்பதன் கருப்பொருள் என்ன?

அ. பெருமை

ஆ. ஒற்றுமை

இ. நேர்மை

ஈ. ஒருமைப்பாடு

  • அண்மையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், சிலை வளாகத்தைச் சுற்றியுள்ள 17 சுற்றுலாத் திட்டங்களைத் திறந்து வைத்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
  • பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த 17 சுற்றுலாத் திட்டங்களும், “ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ், “கெவாடியா சுற்றுலா சுற்று” என அழைக்கப்படுகின்றன.

3. பொது விவகாரங்கள் அட்டவணை-2020’இல் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கேரளா

  • பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்ட பொது விவகாரங்கள் குறியீடு–2020’இன்படி, கேரள மாநிலம், பெரிய மாநிலங்கள் பிரிவில் சிறந்த ஆளுகை உடைய மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
  • நிர்வாக செயல்திறனின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இப்பட்டியலில் கடைசி இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.

4. பிரமோஸ் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையை சோதனை செய்ததற்காக, அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டைகர்ஷார்க்ஸ் படையணி’, எந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கேரளா

  • வங்காள விரிகுடாவில், சுகோய் போர் விமானத்திலிருந்து, ’பிரமோஸ்’ என்ற சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையின் புதிய பதிப்பை இந்திய வான்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இவ்விமானம் தஞ்சாவூரைச் சார்ந்த டைகர்ஷார்க்ஸ் படையணிக்கு சொந்தமானதாகும். அண்மையில், இந்தியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையான, ‘பிரமோசையும்’ கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ‘ருத்ரம்-1’ஐயும் பரிசோதித்தது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆரம்ப்’ என்பது எந்தப் பயனாளிகளுடன் தொடர்புடையது?

அ. உழவர்கள்

ஆ. குடிமைப்பணிகள் பயிற்சிபெறும் அதிகாரிகள்

இ. கல்லூரி மாணக்கர்கள்

ஈ. கீழ்நிலைப் பணியாளர்கள்

  • ‘ஆரம்ப்’ என்ற பெயரில் இந்திய குடிமைப்பணிகள் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டமானது கடந்த 2019ஆம் ஆண்டில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. சமீபத்தில், பிரதமர், LBSNAA முசோரியில் இந்திய குடிமைப்பணிகள் பயிற்சிபெறும் அதிகாரிகளுடன் காணொலிக்காட்சியின் ஊடாக கலந்துரையாடினார். இது, ‘AARAMBH’ திட்டத்தின் ஒருபகுதியாகும்.

6. வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திற்கான திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. பஞ்சாப்

ஆ. கேரளா

இ. சத்தீஸ்கர்

ஈ. ஒடிசா

  • சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அண்மையில், பொது வழங்கல் முறைமைமூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கினார். மெய்நிகராக, மாநில உருவான நாளன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றை ஒழிப்பதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரும்பு, வைட்டமின் B12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும் இச்செறிவூட்டப்பட்ட வலுவூட்டப்பட்ட அரிசி.

7. ஏழைக்குடும்பங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ‘இலவச இணையம்’ திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கேரளா

  • இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஏழை வீடுகளுக்கு இலவச, அதிவேக இணையத்தை வழங்க கேரள மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. இதன்மூலம், இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய முதன்மை மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இது, நடுவணரசின் பாரத்நெட் திட்டத்திற்கு ஒத்ததாகும். கேரள கண்ணாடியிழை வலையமைப்புத் திட்டம் அல்லது KFON, பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிட் தலைமையிலான கூட்டமைப்பிற்கு இதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

8. COVID-19 குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு நிமிட இணையவழி விளையாட்டை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. IIT தில்லி

ஆ. IIT மெட்ராஸ்

இ. IIT கெளகாத்தி

ஈ. IIT கோரக்பூர்

  • மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு டிஜிட்டல் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். சிறார்கள் மத்தியில் விழிப்புண -ர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த விளையாட்டு 12 மொழிகளில் இலவசமாகக் கிடைக்கப்பெறுகிறது. இந்த விளையாட்டு, பிரபல ‘சூப்பர் மேரியோ’ விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

9. இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து, “உத்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு” என்றவொன்றை அமைக்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஆ. நலவாழ்வு & குடும்பநல அமைச்சகம்

இ. நிதியமைச்சகம்

ஈ. AYUSH அமைச்சகம்

  • AYUSH துறையின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், AYUSH துறை அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘உத்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு’ ஏற்படுத்தவுள்ளது. AYUSH அமைச்சகத்தின் உத்திகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தப் பிரிவு செயல்படும். AYUSH அமைச்சகத்தின் திட்டங்களை செயல்படுத்த இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு தனது பயிற்சிபெற்ற நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தும்.

10. அலெக்சிஸ் வாஸ்டைன் போட்டியில் வென்ற சஞ்சீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. F1 கார் பந்தயம்

ஆ. குத்துச்சண்டை

இ. பளு தூக்குதல்

ஈ. சதுரங்கம்

  • 91 கிலோ பிரிவில் நாண்டஸில் நடந்த அலெக்சிஸ் வாஸ்டைன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றார். 52 கிலோ பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றார். காயம் காரணமாக போட்டியாளர் வெளியேறிய காரணத்தால் 75 கிலோ பிரிவில், ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். கவீந்தர் சிங் பிஷ்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவையல்லாமல், இந்தியா, மேலும் மூன்று வெண்கலப்பதக்கங்களை வென்றது.

1. As per the Annual Status of Education Report (ASER) 2020, what percentage of surveyed children had access to live online classes?

[A] 11

[B] 16

[C] 24

[D] 37

  • The Annual Status of Education Report (ASER) 2020 was recently released, by conducting a phone survey of 60,000–odd students across rural India. As per the report, only 11 percent of the surveyed children had access to live online classes. Only one–third of the surveyed children had access to online learning. The report reveals the digital inequality prevalent in the country.

2. What is the theme of the “Kevadia Tourism Circuit”, that has been recently inaugurated?

[A] Greatness

[B] Unity

[C] Honesty

[D] Integrity

  • Prime Minister Narendra Modi has recently inaugurated 17 tourism projects around the Statue of Unity complex, at Kevadia in Narmada District, Gujarat. Sardar Patel’s birthday is being celebrated as Ekta Divas. The Prime Minister inaugurated the projects on the same day, and the 17 tourism projects are called the “Kevadia Tourism Circuit” have been themed around “Unity”.

3. Which Indian state has been adjudged the best governed State in the Public Affairs Index–2020?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Andhra Pradesh

[D] Kerala

  • As per the Public Affairs Index–2020 released by the Public Affairs Centre, Kerala was adjudged the best governed State in the large States category. States were ranked on governance performance based on a composite index in sustainable development. Kerala is followed by Tamil Nadu, Andhra Pradesh and Karnataka. Uttar Pradesh is ranked at the bottom of the list.

4. Tigersharks squadron, which was seen in news for test–fire of BrahMos supersonic cruise missile, is based in which state?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Andhra Pradesh

[D] Kerala

  • The Indian Air Force has successfully test–fired an air launched version of the BrahMos supersonic cruise missile from a Sukhoi fighter aircraft in the Bay of Bengal. The aircraft belongs to the Thanjavur–based Tigersharks squadron. India has recently test fired a new version of the surface–to–surface supersonic cruise missile BrahMos and an anti–radiation missile named Rudram–1.

5. ‘Aarambh’, that was seen in news recently, is associated with which set of beneficiaries?

[A] Farmers

[B] Civil Services Probationers

[C] College Students

[D] Underserved Workers

  • An integrated foundation course for the Officer Trainees (OTs) of the Indian Civil Services named ‘AARAMBH’ was launched for the first time in 2019. The Prime Minister has recently interacted with the Officer Trainees (OTs) of the Indian Civil Services at LBSNAA Mussoorie through a Video conference. This is a part of the AARAMBH course.

6. Which Indian state / UT has launched a scheme for distribution of fortified rice?

[A] Punjab

[B] Kerala

[C] Chhattisgarh

[D] Odisha

  • Chhattisgarh Chief Minister Bhupesh Baghel has recently launched a scheme for distribution of fortified rice through Public distribution System (PDS). The scheme, which was launched virtually on the statehood day, aims at helping in checking malnutrition and anaemia. The fortified rice is a mixture of iron, vitamin B–12 and folic acid enriched fortified rice kernel (FRK).

7. Which Indian state is the first to launch a project for free Internet for poor families and public offices?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Andhra Pradesh

[D] Kerala

  • Kerala aims to start providing free, high–speed Internet to schools, public offices, and poor households in the state by December, this year. Kerala is the first among all states to launch such project, which is similar to the Centre’s BharatNet project.
  • The Kerala Fibre Optic Network Project or KFON has awarded the contract to a consortium led by public–sector company Bharat Electronics Limited.

8. Which institution has developed an online one–minute game to create awareness about COVID–19?

[A] IIT Delhi

[B] IIT Madras

[C] IIT Guwahati

[D] IIT Kharagpur

  • Students of the Indian Institute of Technology (IIT) Madras have developed a digital game to create awareness about COVID–19. The online one–minute game has been created as part of an elective course. The game which aims to create awareness among the children, is available for free in 12 languages. The game has derived inspiration from the popular game Super Mario.

9. Which Union Ministry along with Invest India, is to set up a “Strategic Policy and Facilitation Bureau”?

[A] Ministry of Commerce & Industry

[B] Ministry of Health & Family Welfare

[C] Ministry of Finance

[D] Ministry of AYUSH

  • The Ministry of AYUSH and Invest India will collaborate to set up a “Strategic Policy & Facilitation Bureau”. Invest India will collaborate with the AYUSH Ministry to frame the work plan of the Bureau and define its targets. It will also deploy expert resources to implement and execute the plans of the AYUSH Ministry.

10. Sanjeet, who won the Alexis Vastine tournament, is associated with which sports?

[A] F1 Racing

[B] Boxing

[C] Weight Lifting

[D] Chess

  • Indian boxer Sanjeet won gold in the Alexis Vastine international boxing tournament in Nantes in 91 kg category. World silver–medallist Amit Panghal also won gold in 52 kg category. Ashish Kumar also won gold in the 75 kg category opponent pulled out due to injury. Kavinder Singh Bisht won silver while India earned three bronze medals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!