TnpscTnpsc Current Affairs

5th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘டீப் டைவ் ஆன்லைன் பயிற்சி திட்டத்தை’ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

இ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஒரு வார கால ‘டீப் டைவ் ஆன்லைன் பயிற்சி’ திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
  • சைபர் சுரக்ஷித் பாரத் முன்முயற்சியின்கீழ், MeitY’இல் தேசிய மின் ஆளுகைப்பிரிவினால் இப்பயிற்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வுக்கான முதல் பொது-தனியார் கூட்டாண்மையாக, கடந்த 2018ஆம் ஆண்டில், சைபர் சுரக்ஷித் பாரத் முன்முயற்சியை MeitY அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் பல்வேறு அமைச்சகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் & வங்கிகளின் IT ஊழியர்களுடன் இணைந்து தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு (CISO) பயிற்சியளிக்கிறது.

2. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

அ) பிபேக் தேப்ராய் 

ஆ) ராகேஷ் மோகன்

இ) பூனம் குப்தா

ஈ) டி டி ராம் மோகன்

  • பிரதமர் நரேந்திர மோடி தனது பொருளாதார ஆலோசனைக் குழுவை (EAC-PM) மறுசீரமைக்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பிபேக் தேப்ராய், இக்கவுன்சிலின் தலைவராக உள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் இராகேஷ் மோகன், ஐஐஎம் அகமதாபாத் பேராசிரியர் டி டி இராம் மோகன் மற்றும் என்சிஏஇஆர்’இன் டைரக்டர் ஜெனரல் பூனம் குப்தா ஆகியோர் ஏழு உறுப்பினர்களைக்கொண்ட இக்குழுவில் இணைந்த மூன்று புதிய உறுப்பினர்களாவர். 2 வருட காலத்திற்கு இப்புதிய ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் சபையின் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

3. காலமுறையில், ‘பைங்குடில் வாயு’ குறித்த அறிக்கைத்தாளை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) உலக வானிலை அமைப்பு 

இ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஈ) NABARD

  • சமீபத்திய ‘பைங்குடில் வாயு – GHG’ குறித்த அறிக்கைத்தாளை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பைங்குடில் வாயு உமிழ்வுகளின் அதிகரித்து வரும் போக்கு, 2021’இல் தொடர்ந்தது.
  • மூன்று முக்கிய GHG’களான கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) & நைட்ரஸ் ஆக்சைடு (N2O) ஆகியவையும் அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2020’இல் இதன் செறிவு அதிகமாகியுள்ளது.
  • தற்போதைய அளவிலேயே இந்த உமிழ்வு தொடர்ந்தால், சராசரி புவி வெப்பமடைதல் நிலை, பாரிஸ் ஒப்பந்தத்தின் உலகளாவிய வெப்பநிலை இலக்கைவிடவும் அதிகமாக இருக்கும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘AY.4.2’ என்பது ___?

அ) AI இயலி

ஆ) உருமாறிய கொரோனா வைரஸ் 

இ) விண்கலம்

ஈ) புறக்கோள்

  • அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘AY.4.2’ என்பது ஓர் ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ ஆகும். COVID-19 பரிணாம விளக்கப்படத்தின் கிளைகளுக்கு அவற்றின் தொடர்பை விளக்குவதற்காக கொடுக்கப்பட்ட பெயர்களாகும் இவை. எடின்பர்க் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் குழுவான பாங்கோ நெட்வொர்க்கால் இத்திரிபுக -ள் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் திரிபுகளின் பாதுகாவலர்க
    -ளாக செயல்படுகிறார்கள் மற்றும் புதிய பெயர்களின் ஒதுக்கீட்டைக் கையாளுகிறார்கள். இந்த AY.4.2. திரிபானது இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து அறியப்படுகிறது.

5. ‘கூட்டு புள்ளியியல் வெளியீடு-2021 மற்றும் JSP ஸ்னாப்ஷாட் 2021’ என்பது எந்தப் பிராந்திய சங்கத்தின் வெளியீடுகளாகும்?

அ) ஜி-20

ஆ) ஆசியான்

இ) பிரிக்ஸ் 

ஈ) பிம்ஸ்டெக்

  • BRICS நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகங்களின் தலைவர்களி -ன் கூட்டம் இந்தியா தலைமையில் மெய்நிகர் வடிவத்தில் நடந்தது.
  • இந்தியாவின் தலைமை புள்ளியியல் நிபுணரும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளருமானவர் இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். சந்திப்பின்போது, BRICS நாடுகளுக்கான கூட்டு புள்ளியியல் வெளியீடு-2021 மற்றும் JSP-Snapshot-2021 ஆகியவை வெளியிடப்பட்டன. “நீடித்த வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிப்பதில் NSO’களின் முயற்சிகள்” என்பது இக்கூட்டத்தின் கருப்பொருளாகும்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற குக் ஜலசந்தி உள்ள நாடு எது?

அ) நியூசிலாந்து 

ஆ) யூகே

இ) ஆஸ்திரேலியா

ஈ) பிரான்ஸ்

  • குக் ஜலசந்தியானது நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகளைப் பிரிக்கிறது. இது வடமேற்கில் உள்ள டாஸ்மான் கடலை தென்கிழக்கில் தெற்கு பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கிறது. சமீபத்தில், எலக்ட்ரிக் ஏர் நிறுவனத்தை நிறுவிய பிரீட்மேன், மின்சார விமானத்தின்மூலம் முதல் முறையாக ஜலசந்தியைக் கடந்தார். சுமார் 40 நிமிடம் இந்தப் பயணம் நீடித்தது. 101 ஆண்டுகளுக்கு மின், வழமையான விமானத்தின்மூலம் இந்த ஜலசந்தியை ஒருவர் கடந்திருந்தார்.

7. காலநிலை நடவடிக்கைகளில் சரிஒப்பை மதிப்பிடுவதற்காக இந்திய காலநிலை நிபுணர்களால் தொடங்கப்பட்ட இணைய தளத்தின் பெயர் என்ன?

அ) காலநிலை சரிஒப்பு கண்காணிப்பு 

ஆ) பாரத் காலநிலை கண்காணிப்பு

இ) பாரத் காலநிலை தகவல் பலகை

ஈ) உலகளாவிய சிசி கண்காணிப்பு

  • இந்தியாவைச் சேர்ந்த சுயாதீன ஆய்வாளர்கள் உலகளாவிய கால நிலைக்கொள்கையில் “காலநிலை சரிஒப்பு கண்காணிப்பு – Climate Equity Monitor” என்ற இணையவழி தகவல் பலகையை உருவாக்கி உள்ளனர். காலநிலை சரிஒப்பு கண்காணிப்பு தகவல் பலகையானது, காலநிலை நடவடிக்கை, உமிழ்வுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், உலகம் முழுவதும் உள்ள ஆற்றல் நுகர்வு மற்றும் பல்வேறு நாடுகளின் காலநிலை கொள்கைகளை மதிப்பிடுவதற்கான இணையவழி தகவல் பலகையை வழங்குகிறது.
  • இது UNFCCC (வளர்ந்த நாடுகள்) கீழ் உள்ள இணைப்பு-I உறுப்புகளின் செயல்திறனைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. ‘STRIVE’ என்பது உலக வங்கியின் நிதியுதவியுடன் எந்த மத்திய அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?

அ) திறன் மேம்பாட்டு அமைச்சகம் 

ஆ) கல்வி அமைச்சகம்

இ) கலாச்சார அமைச்சகம்

ஈ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

  • Skills Strengthening for Industrial Value Enhancement (STRIVE) என்பது உலக வங்கியின் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மொத்த செலவினம் `2200 கோடியாகும்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு தொழில் குழுமங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. கனரா தொழிற்சாலைகள் சங்கம் – தொழிற்சாலைகள் குழுமங்கள் மூலம் ‘STRIVE’ திட்டம் மங்களூருவில் தொடங்கப்பட்டது.

9. சிந்து ஆற்று ஓங்கில்களின் கணக்கெடுப்பைத் தொடங்கவுள்ள இந்திய மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) பஞ்சாப் 

இ) ஹரியானா

ஈ) பீகார்

  • பஞ்சாப் மாநிலம் சிந்து ஆற்று ஓங்கில்களின் (Platanista gangetica Miner) கணக்கெடுப்பைத் தொடங்கவுள்ளது. இது பியாஸ் ஆற்றில் காணப்படும் நன்னீர் ஓங்கில்கள் ஆகும். சிந்து ஆற்றில் வாழும் ஓங்கில்கள், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) ‘அருகிவிட்ட இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, பஞ்சாபின் ஹரிகே வனவுயிரி சரணாலயத்தில் ஓங்கில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்து ஆற்று ஓங்கில், கடந்த 2019’இல் பஞ்சாபின் மாநில ‘நீர்வாழ் உயிரினம்’ என அறிவிக்கப்பட்டது.

10. புராஜெக்ட் 15B வகுப்பு டெஸ்ட்ராயர்-யார்டு 12704 (விசாகப் பட்டினம்)’இன் முதல் கப்பலை இந்திய கடற்படைக்கு வழங்கிய நிறுவனம் / அமைப்பு எது?

அ) DRDO

ஆ) மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் 

இ) கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள்

ஈ) HAL

  • மசகான் கப்பல் கட்டும் நிறுவனமானது புராஜெக்ட் 15B வகுப்பு டெஸ்ட்ராயர்-யார்டு 12704 (விசாகப்பட்டினம்)’இன் முதல் கப்பலை இந்திய கடற்படைக்கு வழங்கியுள்ளது. இந்தக் கப்பல், உள்நாட்டு எஃகு DMR 249A’ஐப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய டெஸ்ட்ராயர்களில் இது ஒன்றாகும். இதன் மொத்த நீளம் 164 மீ ஆகும். இது 7500 டன்களுக்கு மேல் இடப்பெயர்ச்சி திறன்கொண்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மொழிவழி மாநிலம்; ஒரு பாா்வை!

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசின் சாா்பில் அதன் பொன்விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் இந்த நாளை ‘உதய தின’மாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்நாடும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா பல மொழிகள் பேசும் ஒரு துணைக்கண்டம். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக மக்கள், தங்கள் மொழி, இன வேறுபாடுகளை மறந்து தேசியத் தலைவா்களை நம்பியே போராடினா். மிதவாதிகள் மகாத்மா காந்தியடிகள் தலைமையிலும், தீவிரவாதிகள் திலகா் தலைமையிலும் போராடினா். இரண்டாம் உலகப் போா் வந்ததும், ஆங்கிலேயா் தங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டம், வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. தேசம் விடுதலை பெற்றதும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளா்ச்சிகளும் வெடித்துக் கிளம்பின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு இதனை அடக்கவும், அமைதிப்படுத்தவும் கருதி, இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தாா்.

அவை, தட்சிண பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு பிரதேசம், கிழக்கு பிரதேசம், மத்திய பிரதேசம் என்பவையாகும். இதில் தட்சிண பிரதேசம் என்பது தமிழகம், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இத்திட்டத்தை மூதறிஞா் ராஜாஜி மட்டுமே வரவேற்றாா்; ஈ.வெ.ரா. பெரியாா் கடுமையாக எதிா்த்தாா்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தாா். தமிழரசுக் கழகத் தலைவா் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போராடின. எனவே, நேருவும் வேறு வழியில்லாமல் இத்திட்டத்தினைக் கைவிட நோ்ந்தது.

1953-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தில் ஓா் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பல மொழிக் கூட்டில் சிக்கிக் கிடந்தவா்கள், தங்களுக்கு, தனியாக ‘விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், ‘ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினா். இதற்காக ‘ஆந்திர மகாசபை’, ‘கேரள சமாஜம்’ போன்ற அமைப்புகளை உருவாக்கி கட்சி சாா்பின்றி ஒன்றுபட்டு குரல் கொடுத்தனா்.

இதன் பிறகுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலம்புச் செல்வா் ம.பொ. சிவஞானம் முதன் முதலாக தமிழ் அரசு அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினாா். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது வேங்கடம் முதல் குமரி வரை தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினாா்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழ்நாடு அமைக்கப்பட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஆதரவையும் பெற்று அறிக்கையும் வெளியிட்டாா்.

1948-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிப்பை வலியுறுத்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘தாா் குழு’ 1948 செப்டம்பா் 13 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினரும் அக்குழுவிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

தமிழக எல்லை மாநாட்டை தமிழரசு கழகத் தலைவா் ம.பொ.சி. 1949-இல் சென்னையில் நடத்தினாா். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத் துறந்த டாக்டா் ஆா்.கே. சண்முகம் செட்டியாா் தலைமை வகித்தாா். சென்னை மாகாண முதலமைச்சா் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினாா். அம்மாநாட்டு முடிவில், வடவேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 1953-ஆம் ஆண்டு, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிா் துறந்தாா். அதன் பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலம் அமைவதற்கான வாக்குறுதியை வழங்கினாா்.

அப்போது ‘சென்னை யாருக்கு’ என்ற பிரச்னை எழுந்தது. சென்னை, தமிழகத்துக்கே உரியது என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சா் ராஜாஜி, காங்கிரஸ் தலைவா் காமராசா், சென்னை மேயா் செங்கல்வராயன், முன்னாள் மேயா் எம். இராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசு கழகத் தலைவா் ம.பொ.சி. முதலியவா்கள் கடுமையாகப் பாடுபட்டனா். அன்று மத்திய உள்துறையமைச்சராக இருந்த லால்பகதூா் சாஸ்திரியையும், பிரதமா் நேருவையும் சம்மதிக்க வைப்பதற்கு பெரும்பாடு பட்டனா்.

25.3.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமா் நேரு ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரபூா்வ பிரகடனத்தை வெளியிட்டாா். இதில் ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகே தமிழா்கள் நிம்மதியடைந்தனா்.

மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் முக்கியமானவை. தென் எல்லைப் போராட்டம் திருவிதாங்கூா் சமஸ்தானத்தைச் சோ்ந்த தமிழா்களால் நடத்தப்பட்டது. இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை கன்னியாகுமரியாகவே நீடிக்கிறது. இதில் மாா்ஷல் நேசமணியின் பங்கு மிகப் பெரியது.

வட எல்லைப் பாதுகாப்புக்குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. கே. விநாயகம் குழுவின் செயலாளா்; மக்களை அணி திரட்ட உதவியவா் மங்கலங் கிழாா். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சா் ஹெச்.வி. படாஸ்கரை விசாரணை அதிகாரியாக இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கா் பரிந்துரையின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் ( ஒரு கிராமம் நீங்கலாக), சித்தூா் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூா் தாலுகாவில் ஒரு கிராமம் ஆக 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் சோ்க்கப்பட்டன. இந்த கிராமங்களின் மக்கள்தொகை 2,39,502. அதே போல தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூா், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சோ்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அா்ப்பணித்துக் கொண்ட தியாக மறவா்கள் ஏராளமானோா். போராட்டத்தின் உச்சகட்டமாக தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்தி 1953-இல் பொட்டி ஸ்ரீராமுலு உயிா் நீத்தாா்; தமிழ்நாடு மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து சங்கலிங்கம் 1956 அக்டோபா் 13 அன்று உயிா் துறந்தாா்.

மொழிவழி மாநில அமைவுக்கு, மாநில முதலமைச்சா் பொறுப்பிலிருந்த ராஜாஜியின் பங்கும், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் பங்கும் குறிப்பிடத்தக்கவை. சென்னைதான் தலைநகா் என்று ஆந்திரா்கள் பிடிவாதமாக இருந்தபோதும் ராஜாஜி அதனை ஏற்கவில்லை. அவா் பிரதமா் நேருவிடம், ‘சென்னை பட்டணத்தை ஆந்திரா்களிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினாா்.

பிரதமா் நேரு மனம் மாற இதுவும் ஒரு காரணம்.

மக்கள் விரும்பியபடி மாநிலம் அமைந்ததா? மாநிலப் பிரிவினை குறித்து எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஒரு குறையாகவே கருதப்படுகிறது. கருநாடக மாநிலத்தில் சோ்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப் பெற மராட்டிய சமிதி தொடா்ந்து போராடி வருகிறது. இவ்வாறே இன்னும் பல.

இந்தச் சிக்கல்கள் தீா்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் சில அரசியல்வாதிகள் சிக்கல்களுக்குத் தீா்வு ஏற்பட்டு விடாமல் பாா்த்துக் கொள்ளுவதிலேயே கவனமாக இருக்கின்றனா். மத்திய அரசு எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

மொழி வழியான இந்தப் பிரிவினை, மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர தொடா்ந்துகொண்டே இருக்கக் கூடாது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் மத்திய – மாநில அரசுகளின் இணக்கமாக இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படுகின்றன. தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனாா்,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

என தமிழ்நாட்டு எல்லையை வரையறை செய்துள்ளாா்.

இந்தியா பல மொழி, பல இன மக்கள் கூடி வாழும் கூட்டாட்சி நாடு என்பதை மொழிவழி மாநிலப் பிரிவு உறுதி செய்கிறது. இதனை மத்தியில் ஆளுவோா் அடிக்கடி மறந்து விடுகின்றனா். இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் மாநிலங்களின் மீது தொடா்ந்து திணித்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டது போல, மாநிலத் தன்னாட்சி அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னாட்சி என்பது வாழ்வது; கூட்டாட்சி என்பது வாழ வைப்பது. நாம் வாழ்வோம்; வாழ வைப்போம்.

2. சென்னையில் கடுமையாக உயர்ந்த காற்று மாசு : அனுமதிக்கப்பட்ட அளவைவிட தீபாவளியன்று பல மடங்கு அதிகம்

சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு உயர்ந்து இருந்தது.

வழக்கமாக தீபாவளிக்கு முன் புகையில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஆட்டோக்களும் இயக்கப்படும். தீபாவளியன்று போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபடுவர்.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பள்ளி, பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த ஆண்டு சற்று குறைவாகவே இருந்தது.

மேலும், அரசு சார்பில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தாலும், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீபாவளியன்று சென்னை மாநகரில் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கும் ஓசைகள், தடை செய்யப்பட்ட சரவெடி வெடிக்கும் ஓசைகள் கேட்டவண்ணமே இருந்தன. இதனால், சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடுமையாக உயர்ந்து இருந்தது. இரவு முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் சுவாசக்கோளாறு உள்ள சிலருக்கு, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுக்கார்பேட்டை ஆகிய 5 இடங்களில், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், தீபாவளியன்றும் காற்று மாசுவின் அளவு கண்காணிக்கப்பட்டது.

இதில் தீபாவளியன்று 10 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு (மாசு) குறைந்தபட்சமாக பெசன்ட்நகரில் 187 மைக்ரோகிராம், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 283 மைக்ரோ கிராம் பதிவாகி இருந்தது. அனுமதிக்கப்பட்ட அளவு 100 மைக்ரோ கிராம் ஆகும்.

இதேபோன்று 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக பெசன்ட்நகரில் 175 மைக்ரோகிராம், சவுக்கார்பேட்டையில் 257 மைக்ரோகிராம் என பதிவாகியுள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 60 மைக்ரோ கிராம் ஆகும்.

காற்றுத் தரவு குறியீடுகளின்படி 385 குறியீடுகளுடன் அதிக மாசு ஏற்பட்ட பகுதியாக தியாகராய நகர் உள்ளது.

ஒலி மாசும் அதிகம்

மேலும், ஒலி மாசு அளவுகளின்படி, தீபாவளியன்று ஒலி மாசும் அதிகமாகவே இருந்தது. அதிகபட்சமாக தியாகராயநகரில் 79 டெசிபல் பதிவாகியுள்ளது.

தீபாவளியன்று நிலவிய மிகவும் குறைந்த காற்றின் வேகம், காற்றில் காணப்பட்ட அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை காரணமாக, பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்பட்ட புகை மற்றும் நுண்துகள்கள் வெகுநேரம் காற்றில் மிதந்து, விரைவாக நிலத்தில் படியாமல் மாசுவில் அளவு அதிகரித்தது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3. ஓய்வூதியர் வீடுகளுக்கே சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல் : அஞ்சல் துறையின் புதிய சேவை

ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது.

பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் (டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்) அளிக்கும் சேவையை இந்தியா போஸ்ட் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் துறை தொடங்கி உள்ளது. இந்த சேவை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்துடன் ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மூத்த குடிமக்கள் வங்கிகள் அல்லது அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க இச்சேவை உதவுகிறது.

சென்னை நகர வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது. அஞ்சல் தகவல் செயலி அல்லது http://ccc.cept.gov.in/covid/request.aspx என்ற இணையதளம் மூலம் வீடு தேடி வரும் சேவைக்கான வேண்டுகோளை அனுப்பலாம். ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையிலான உயிர்வாழ் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணையதள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தகவலை சென்னை நகர வடக்கு மண்டல அஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

4. தாம்பரம் மாநகராட்சிக்கான அவசர சட்டம் பிறப்பிப்பு: 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் இணைப்பு

தாம்பரம் மாநகராட்சி உருவாக்குவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். மேலும், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் முடிவில் துறையின் அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தாம்பரம்மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் குறித்தும், மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கான சட்டத்தை உருவாக்கி, சட்டப்பேரவை கூட்டம் இல்லாத நிலையில், ஆளுநர் ஒப்புதலை பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம் தமிழகஅரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், தாம்பரம் மாநகராட்சி சட்டம், கோவை மாநகராட்சி சட்டத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி மேயர், கவுன்சில், நிலைக்குழு, வார்டு குழு மற்றும் கமிஷனர் நியமனத்துக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. கவுன்சிலில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஒதுக்கீடுகளை பின்பற்ற அறிவறுத்தப்பட்டுள்ளது. தற்போது கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். தாம்பரம் நகராட்சியில் பணியாற்றியஅலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்களாக மாற்றப்படுவார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் தற்போதைய சூழலில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிட்ல பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை பேரூராட்சிகள் இணைக்கப் படுகின்றன.

இவ்வாறு அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

5. அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி: இந்திய விமானப் படை ஒப்புதல்

கடந்த 2019-ல் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட வான் சண்டையில் எதிரியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு குரூப் கேப்டனாக பதவி உயர்வு வழங்க இந்திய விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த 2016 பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது. மறுநாள் இதற்கு பதிலடியாக இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது, அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது இந்திய விமானப் படையின் விங் கமாண்டரான அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் தவறிவிழுந்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. இந்த சம்பவங்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பிறகு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அபிநந்தனை 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் விடுவித்தது.

அப்போது இந்தியர்களின் மனதில் நிஜ ஹீரோவாக அபிநந்தன் உயர்ந்தார். அவருக்கு கடந்த ஆண்டு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் அபிநந்தன் வர்த்தமானுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்க இந்தியா விமானப் படை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட நடைமுறை முடிந்ததும் அவர் பதவி உயர்வு பெறுவார் எனவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நடைமுறை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “எந்தவொரு அதிகாரியும் புதிய பதவிக்கான ஒப்புதல் பெற்ற பிறகு, அப்பதவிக்கான காலியிடம் ஏற்படும்போது அதைப் பெறுவார்” என்று தெரிவித்தார்.

6. கரோனா உயிரிழப்பை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு: ஃபைஸா் அறிவிப்பு

கரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

எங்களின் கரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா்.

அந்த ஆய்வின்போது, எங்களின் கரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது.

அதில், கரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதே நேரம், எங்களின் கரோனா மாத்திரையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படாத குழுவினரில் 7 சதவீதத்தினா் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவா்களில் 7 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஃபைஸா் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டால்ஸ்டென் கூறுகையில், ‘கரோனா சிகிச்சைக்காக நாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, மிக அபாரமாகச் செயல்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த மாத்திரை 90 சதவீத செயல்திறனைக் கொண்டதாகவும் கரோனா மரண அபாயத்திலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கும்’ என்றாா்.

தங்களது கரோனா சிகிச்சை மாத்திரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாக ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

7. டெங்கு: பாதிப்பின் உச்சத்தில் 12 மாநிலங்கள்!

தமிழகம், கேரளம், கா்நாடகம், உத்தரப் பிரதேசம் உள்பட நாட்டின் 12 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதி வேகமாக பரவி வருகிறது. நிகழாண்டில் நாடு முழுவதும் 1.17 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும், கடந்த அக்டோபா் மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையில் டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ மழையே அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய நிபுணா் குழுவினா் விரைவில் சென்று கள ஆய்வு நடத்தவுள்ளனா். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அவா்கள் முன்னெடுக்க உள்ளனா்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 1.5 லட்சம் போ் அக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனா்.

அதேவேளையில், 2020-இல் டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஆண்டில்,மொத்தம் 44 ஆயிரம் பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் 99 சதவீதம் போ் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், நிகழாண்டில் பருவ மழை காரணமாக வட மாநிலங்களிலும் சரி; தென் மாநிலங்களிலும் சரி டெங்கு பாதிப்பு அதி தீவிரமாக பரவி வருகிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 21,954 பேரும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 16,910 பேரும், ராஜஸ்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, குஜராத், கேரளம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை 3,806 போ் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களில் தற்போது 495 போ் சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கரோனாவுக்கும், டெங்கு பாதிப்புக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால், அதனை அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதில் சிரமம் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கியிருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

முழுவதும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு தடுப்பு பணிகளில் மட்டும் 22 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.

மாவட்ட இணை சுகாதார இயக்குநா்களுடனான ஆய்வுக் கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு, சிகிச்சை முறைகள், கொசு ஒழிப்பு பணிகள் குறித்து தொடா்ந்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

மழை பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயா், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீா் போன்றவற்றில் கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால், அந்தப் பொருட்களை உடனடியாக அகற்றவும், கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை அடித்தல் போன்ற பணிகளை நாள்தோறும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மத்தியக் குழு ஆய்வு: மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் அடுத்த ஓரிரு நாள்களில் தமிழகத்துக்கு வந்து ஆய்வு நடத்தவுள்ளனா். அவா்கள் மாநிலத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் அனைத்துக்கும் நேரடியாகச் சென்று பாா்வையிடுகின்றனா்.

அதன் அடிப்படையில் மத்தியக் குழு ஆய்வு முடிவுகளையும், பரிந்துரைகளையும் வெளியிட உள்ளது. அதனை உடனடியாக செயல்படுத்த தயாராக உள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்திய வரைபடத்தில் பதிவிடப்பட வேண்டிய டெங்கு பாதிப்பு தகவல்கள்…

மாநிலம் – பாதிப்பு (2021) – இறப்பு (2021) – பாதிப்பு (2020) – இறப்பு (2020)

தமிழகம் – 3,806 – 3 – 2,410 – 0

உ.பி. – 21,954 – 8 – 3,715 – 6

பஞ்சாப் – 16,910 – 61 – 8,435 – 22

மகாராஷ்டிரம் – 8302 – 14 – 3,356 – 10

ராஜஸ்தான் – 10,080 – 26 – 8,435 – 22

ம.பி – 11,000 – 5 – 806 – 0

மேற்கு வங்கம் – 2,000 – 0 – 5,166 – 2

கேரளம் – 3, 027 – 1 – 4,399 – 5

கா்நாடகம் – 3,572 – 0 – 3,823 – 0

தெலங்கானா – 4,610 – 0 – 2,173 – 0

ஒடிஸா – 4,505 – 0 – 496 – 0

குஜராத் – 4,938 – 1 -1, 564 – 2

8. 23 வயதுக்குட்பட்டோா் உலக மல்யுத்தம்: ஷிவானிக்கு வெள்ளி, அஞ்சுவுக்கு வெண்கலம்

23 வயதுக்குட்பட்டோா் உலக மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ஷிவானி பவாா் வெள்ளியும், அஞ்சு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.

சொ்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை 50 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் உலக ஜூனியா் சாம்பியன் எமிலி கிங்கை எதிா்கொண்டாா் ஷிவானி. இதில் தோல்வியுற்ற அவா் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். 55 கிலோ எடைப்பிரிவு வெண்கல பதக்கப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு 10 புள்ளிகள் முன்னிலை அடிப்படையில் கனடாவின் விா்ஜினி கேஸை வீழ்த்தி வெண்கலம் வென்றாா். 65 கிலோ எடைப்பிரிவில் நிஷா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ரெப்கேஜ் பிரிவில் மோதுகிறாா். மோனிகா 68 கிலோ, பிபாஷா 76 கிலோ ரெப்கேஜ் பிரிவில் தோல்வி கண்டனா்.

1. Which Union Ministry launched the ‘Deep Dive Online Training program’?

A) Ministry of Finance

B) Ministry of Electronics and IT 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Rural Development

  • Ministry of Electronics and Information Technology (MeitY) is organising a week–long Deep Dive Online Training program. The training program is organised by National e–Governance Division at MeitY under the Cyber Surakshit Bharat initiative.
  • MeitY launched the Cyber Surakshit Bharat initiative in 2018, as the first public–private partnership in cyber awareness. This online program trains Chief Information Security officers (CISO) along with IT staff of different Ministries, PSUs and Banks.

2. Who is the Chairperson of the Prime Minister’s Economic advisory council (EAC–PM)?

A) Bibek Debroy 

B) Rakesh Mohan

C) Poonam Gupta

D) Maldives

  • Prime Minister Narendra Modi approved the reconstitution of his Economic advisory council (EAC–PM). Bibek Debroy, President of the Indian Statistical Institute, is the Chairman of the council. Former RBI deputy governor Rakesh Mohan, along with IIM Ahmedabad Professor T T Ram Mohan, and Director–General of NCAER Poonam Gupta, are the three new members to join the seven–member council. The new advisory council has been appointed for a period of two year. The Chairman of the council and three other members have been retained.

3. Which institution releases the periodic Greenhouse gas bulletin?

A) NITI Aayog

B) World Meteorological Organisation 

C) Food and Agricultural Organisation

D) NABARD

  • The latest GHG bulletin has been released by the World Meteorological Organisation (WMO). As per the report, the increasing trend of greenhouse gas (GHG) emissions continued in 2021.
  • The report also highlighted that all three major GHGs, carbon dioxide (CO2), methane (CH4) and nitrous oxide (N2O), recorded an increase in concentration in 2020 compared to previous years. The average global warming would exceed Paris Agreement’s target of global temperature if emissions continue at the current pace.

4. ‘AY.4.2’, which was seen in the news recently, is a ___?

A) AI Chatbot

B) Coronavirus lineage 

C) Space vehicle

D) Exoplanet

  • AY.4.2, which was seen in the news, is a ‘Coronavirus lineage’. Lineages are the labels given to the branches of the COVID evolutionary chart to illustrate their relatedness.
  • The lineages are overseen by the Pango network, a team of researchers from the universities of Edinburgh and Oxford. They act as the custodians of lineages and handle the assignment of new labels. This AY.4.2. lineage is traced back to April this year.

5. ‘Joint Statistical Publication (JSP) 2021 and JSP Snapshot 2021’ are the publications of which regional association?

A) G–20

B) ASEAN

C) BRICS 

D) BIMSTEC

  • The Meeting of Heads of National Statistical Offices of BRICS Countries was held in virtual format, chaired by India.
  • The Chief Statistician of India and Secretary, Ministry of Statistics and Programme Implementation (MoSPI) chaired the meeting. During the meeting, the Joint Statistical Publication (JSP) 2021 and JSP–Snapshot 2021 for BRICS Countries were released. The theme of meeting was “NSOs efforts in monitoring Sustainable Development Goals (SDGs)”.

6. Cook Strait, which was seen in the news, recently is located in which country?

A) New Zealand 

B) UK

C) Australia

D) France

  • Cook Strait separates the North and South Islands of New Zealand. It connects the Tasman Sea on the northwest with the South Pacific Ocean on the southeast. Recently, Freedman, who founded the company ElectricAir, crossed the strait for the first time in an electric plane. This 40–minute solo flight was held 101 years after the first person flew a conventional aircraft over the strait.

7. What is the name of the website launched by Indian climate experts for assessing equity in climate action?

A) Climate Equity Monitor 

B) Bharat Climate Monitor

C) Bharat Climate Dashboard

D) Global CC Monitor

  • Independent researchers from India have conceptualized and developed an online dashboard named “Climate Equity Monitor” on Global climate policy.
  • The Climate Equity Monitor dashboard provides an online dashboard for assessing equity in climate action, inequalities in emissions, energy consumption across the world, and climate policies of several countries. It aims to monitor the performance of Annex–I Parties under the UNFCCC (developed countries).

8. ‘STRIVE’ is World Bank funded project being implemented by which Union Ministry?

A) Ministry of Skill Development 

B) Ministry of Education

C) Ministry of Culture

D) Ministry of Labour and Employment

  • Skills Strengthening for Industrial Value Enhancement (STRIVE) is a World Bank funded project approved in 2016 for a total cost of Rs. 2200 crore. The project aims to create awareness through industry clusters to address issues pertaining to micro, small and medium enterprises (MSMEs). The STRIVE program was launched in Mangaluru, through Kanara Industries Association–Industrial Cluster.

9. Which Indian state is set to commence the census of Indus River dolphins?

A) West Bengal

B) Punjab 

C) Haryana

D) Bihar

  • Punjab is set to commence the census of the Indus River dolphin (Platanista gangetica minor). It is a freshwater dolphin that is found in river Beas. The Indus River dolphin is classified as ‘endangered’ by the International Union for the Conservation of Nature (IUCN).
  • In 2007, the dolphins were discovered in Punjab’s Harike wildlife sanctuary. The Indus River dolphin was declared the State aquatic animal of Punjab in 2019.

10. Which organisation delivered First Ship of Project 15B Class Destroyer– Yard 12704 (Visakhapatnam) to the Indian Navy?

A) DRDO

B) Mazagon Dock Shipbuilders 

C) Garden Reach Shipbuilders

D) HAL

  • Mazagon Dock Shipbuilders (MDL) has delivered First Ship of Project 15B Class Destroyer–Yard 12704 (Visakhapatnam) to the Indian Navy. The ship is constructed using Indigenous Steel DMR 249A and is amongst the largest Destroyers constructed in India. It has an overall length of 164 meters and a displacement of over 7500 tons.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!