TnpscTnpsc Current Affairs

5th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

5th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில் தில்லி அரசு அறிமுகப்படுத்திய சுற்றுலா செயலியின் பெயர் என்ன?

அ) எனது தில்லி

ஆ) தேகோ மேரி தில்லி 

இ) தில்லி சுற்றுப்பயணம்

ஈ) ஹமாரா தில்லி

  • தில்லி அரசானது அண்மையில் ‘தேகோ மேரி தில்லி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது தில்லி அரசின் சுற்றுலாத் துறையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயலி, தில்லியில் உள்ள அனைத்து சுற்றுலா தொடர்பான தகவல்களையும் வழங்கும். தில்லியில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகளையும் இதில் பெற முடியும்.

2. காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையானது நாட்டின் எத்தனை துறைகளின் வேலைவாய்ப்பு மற்றும் அது தொடர்புடைய மாறிகளை வழங்குகிறது?

அ) 3

ஆ) 9 

இ) 15

ஈ) 23

  • தொழிலாளர் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட காலாண்டு அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வின் ஒருபகுதியாக, காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டுக்கான அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.
  • முடிவுகளை அறிவித்த அமைச்சர் புபேந்தர் யாதவ், தேர்வு செய்யப்பட்ட 9 துறைகளில் முதற்கட்ட ஆய்வின்படி மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வேலை வாய்ப்பு 3 கோடியே 8 இலட்சம் என்றும், இது 6ஆவது பொருளாதார கணக்கெடுப்பு (2013-14) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 கோடியே 37 இலட்சத்தை விட 29% அதிகம் என்றும் கூறினார்.

3. தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் அசல் கால அளவு என்ன?

அ) 2014- 2019

ஆ) 2015-2020 

இ) 2016-2021

ஈ) 2017-2022

  • 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் காலத்தை மார்ச் 2022 வரை நீட்டிக்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தக் கொள்கை முதலில் மார்ச் 31, 2020 அன்று முடிவடைவதாக இருந்தது. இந்தக் கொள்கை, முதலில் 2021 மார்ச் வரையிலும் 2021 செப் வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக, தற்போது மீண்டும் நீட்டிக்க முன்மொழியப்பட்டது. இதை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற “ஆகாஷ் பிரைம்” என்றால் என்ன?

அ) AIR’இன் புதிய ஒலிபரப்பு நிலையம்

ஆ) BSNL வழங்கும் புதிய அகலக்கற்றை சேவை

இ) ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பு 

ஈ) இஸ்ரோவின் வழிசெலுத்தல் செயற்கைக்கோள்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சமீபத்தில் ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் ‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணையை பரிசோதித்தது.
  • ஆகாஷ் ஏவுகணையின் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு டிஆர்டிஓவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

5. ‘தேசிய பயோடிக் ஸ்ட்ரெஸ் டோலரன்ஸ் நிறுவனம்’ அமைந்து உள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) புனே

இ) அகமதாபாத்

ஈ) ராய்பூர் 

  • நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடிக் ஸ்ட்ரெஸ் டொலரன்ஸ் என்பது ஐசிஏஆரின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பல்கலைக்கழகமாக ராய்ப்பூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2012’இல் உருவாக்கப்பட்டது.
  • ராய்பூரில் உள்ள இந்நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தை அடுத்து இந்த நிறுவனம் சமீப செய்திகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது, பிரதம மந்திரி, 35 காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய பயிர் வகைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

6. மருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் அறிக்கை, 2021’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ) ஐஎம்ஏ

ஆ) ஐசிஎம்ஆர் 

இ) NITI ஆயோக்

ஈ) எய்ம்ஸ்

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது (ஐசிஎம்ஆர்) “இந்தியாவில் புற்றுநோய்களின் கிளினிகோபோதாலஜிக்கல் புரொபைல்: மருத்துவ மனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் அறிக்கை-2021” வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அனைத்து புற்றுநோய் பாதிப்புகளின் விகிதமும் பெண்களைவிட (47.4%) ஆண்களில் (52.4%) அதிகமாக உள்ளது.
  • பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. குழந்தைப்பருவ (0-14 வயது) புற்றுநோய்கள் 7.9% அளவுக்கு உள்ளது. தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய்கள் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக (31.2%) உள்ளது.

7. ‘2021 உலகளாவிய துளிர்நிறுவன சூழலறிக்கையின்’படி, மலிவு திறமையுள்ள 5ஆவது ஆசிய சூழலமைப்பாக உருவான இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா

  • 2021 உலகளாவிய துளிர் நிறுவன சூழலறிக்கையில் மலிவு திறமை உள்ள ஐந்தாவது ஆசிய சூழலமைப்பாக கேரளா உருவெடுத்துள்ளது. இந்த அறிக்கை, ஸ்டார்ட் அப் ஜெனோம் மற்றும் உலகளாவிய தொழில் முனைவோர் நெட்வொர்க்கால் தயாரிக்கப்பட்டது. இந்த 2021 அறிக்கை, செயல்திறன், நிதி, இணைப்பு, சந்தை வரம்பு, வள ஈர்ப்பு, அனுபவம் & திறமை ஆகிய 7 அளவுருக்களின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள 140 சூழலமைப்புகளை தரவரிசைப்படுத்துகிறது.

8. வட இந்திய மாநிலத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய பனைப் பூங்காவை (palmetum) திறந்து வைத்துள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) உத்தரகாண்ட் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) பீகார்

  • உத்தரகாண்ட் வனத்துறையானது அம்மாநிலத்தின் முதல் பனைப் பூங்காவை நைனிடாலில் அமைந்துள்ள ஹல்த்வானி மக்களுக்கு அர்ப்பணித்தது. இது, வட இந்தியாவிலேயே மிகப்பெரிய பனைப்பூங்கா ஆகும். இங்கு 110’க்கும் மேற்பட்ட பனைமர வகைகள் உள்ளன. இது, CAMPA திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதாகும்.
  • உத்தரகண்டை பூர்வீகமாகக் கொண்ட டிராச்சிகார்பஸ் தகில் (தகில் பனை) என்ற பனை இனமும் இங்கு உள்ளது.

9.‘ஹுனர்பாஸ்’ விருதுகளுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம் 

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • ‘ஹுனர்பாஸ்’ விருதுகள் நடுவண் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (NIRD&PR) அமைப்பால் நிறுவப்பட்டதாகும்.
  • NIRD&PR ஆனது விடுதலையின் 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அந்தியோதயா நாள் அன்று 75 மாற்றுத்திறனாளிகளுக் -கு விருதுகளை வழங்கியது. இந்த நாள், 2021 செப்.25 அன்று பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளாகும்.
  • தீனதயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா யோஜனா மற்றும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் திட்டங்கள்மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

10.எம்மாநிலத்தில், உலகின் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையம் உள்ளது?

அ) இமாச்சல பிரதேசம் 

ஆ) பீகார்

இ) உத்தரகாண்ட்

ஈ) பஞ்சாப்

  • இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள காசா, உலகின் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையத்தைக் கொண்டுள்ளது. இந்நிலையம் ‘Go Ego’ என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக, இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் இந்த நிலையத்தில் மின்னேற்றம் செய்யப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காஞ்சிபுரம் நெசவாளர்கள் 6 பேருக்கு தேசிய விருது: உயரிய விருதான ‘சந்த் கபீர்’ விருதை ஒருவர் பெறுகிறார்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் 6 பேருக்கு 4 தேசிய விருது கிடைத்துள்ளது. நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சந்த் கபீர்’ விருதையும் ஒரு நெசவாளர் பெறுகிறார். மத்திய அரசு, நெசவாளர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது ‘சந்த் கபீர்’ விருதாகும். 2018-ம் ஆண்டுக்கான ‘சந்த் கபீர்’ விருது இந்திய அளவில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. நிறைய நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது, வழக்கமான சேலைகளுக்கு மாற்றாக 114 வடிவமைப்புகளை சேர்த்து சேலை நெய்தது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது 20 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் 6 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் தர்மலிங்கம் நகரைச் சேர்ந்த சரளா – கணபதி தம்பதி மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த காமாட்சி – ஹரி தம்பதி இணைந் தும், கணிகண்டீஸ்வர் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமாரி, ராயன்குட்டை பிள்ளை தெருவைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தனித்தனியாகவும் தேசிய விருதை பெறுகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 நெசவாளர்கள் 4 தேசிய விருதுகளை பெறுகின்றனர். சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில் நுட்பங்களை கைத்தறியில் பயன்படுத்தியது, சிறந்த வண்ணங்கள் ஆகிய காரணங்களுக்காக இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேசிய சிறப்புச் சான்றிதழை காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், சீனுவாசன் ஆகியோர் இணைந்து பெறு கின்றனர். தேசிய விருதுகளுக்கான தகுதிகளின் அடிப்படையிலேயே இவர் களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2. காவல் துறையின் அதிரடி நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தட்டும்

கொலைக் குற்றப் பின்னணி உள்ளவர்களை முற்றுகையிட்டு, அவர்களிடம் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிவரும் தமிழ்நாடு காவல் துறையின் தொடர் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு தொடர்பில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடுகளாகத் தெரிகின்றன.

கடந்த செப்டம்பர் 23 அன்று இரவு தொடங்கி, அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் டிஸ்ஆர்ம்’ நடவடிக்கையில், பழைய கொலைக் குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் 3,325 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள் -ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா ஓரிரு மாதங்களில் திறப்பு; தறி இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன; பெண்களுக்கு 66 % வேலைவாய்ப்பு

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப் பூங்கா உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு திறக்கப்பட உள்ளது. அங்கு நிறுவப்பட்டுள்ள கைத்தறி இயந்திரங்கள் தற்போது முதல்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இங்கு 66% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ரூ.83.33 கோடியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அரசு, ரூ.14 கோடி மதிப்புள்ள 75 ஏக்கர் நிலம், மானியத் தொகையாக ரூ.7.54 கோடியையும் ஒதுக்கியது. மற்ற தொகை தனியார் மூலம் முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இதற்கான பணிகள் விரைவாக நடைபெறவில்லை. காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகள் அப்படியே கிடப்பில் போட்டப்பட்டன. கடந்தஆண்டு இதற்கான பணிகள் ஓரளவுக்கு நடைபெற்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தப் பட்டுப் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முதல்கட்டமாக தறி நெய்வதற்கான கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தறி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு துணி நெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு தனியார் நிறுவனங்கள் தறி நெய்வதற்கான கைத்தறி இயந்திரங்களை பொருத்தி வருகின்றன. இந்தப் பட்டுப் பூங்காவில் கைத்தறிக்கு என தனிப் பிரிவும், சாயப்பட்டறைகள், விற்பனைப் பிரிவுகள் உட்பட பல அமைக்கப்பட உள்ளன. இங்கு 66 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாயமிடுதல் நடைபெறும்போது நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட உள்ளன.

இங்கு மொத்தம் 2,160 கைத்தறி இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. நெசவாளர்களுக்கு 700 குடியிருப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 82 யூனிட்டுகளாக இவை இயங்க உள்ளன. பட்டு கைத்தறி நெசவுக்காக 22 யூனிட்டுகளும், காட்டன் கைத்தறி துணிகள் நெசவு செய்ய 30 யூனிட்டுகளும் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற 30 யூனிட்டுகளில் சாயமிடுதல் உள்ளிட்ட கைத்தறிச் சார்ந்த இதரப் பணிகள் நடைபெற உள்ளன.

4. சேதி தெரியுமா?

செப்.24: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வகுக்க கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

செப்.25: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக உள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை, அந்தப் பதவிக்கு இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன.

செப்.26: இந்தியாவின் முதல் விளையாட்டுத் துறை நடுவண் தீர்ப்பாயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

செப்.26: செக் குடியரசில் நடைபெற்ற ஆஸ்ட்ராவா ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஷுவாய் ஜங் இணை பட்டம் வென்றது.

செப்.27: அமெரிக்காவின் டகோடா மாகாணத்தில் உள்ள யாங்டன் நகரில் நடந்த 2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

செப்.27: ஆயுஷ்மான் பாரத் என்கிற தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டையையும் பதிவேட்டையும் உள்ளடக்கியது இத்திட்டம்.

செப்.28: சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

செப்.28: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றார்.

செப்.29: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

அக்.1: போலீஸ், அதிகாரிகளின் கொடுமைகள் குறித்து சாமானியர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

5. மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல்

மனிதா்கள் வெப்பநிலையையும் தொடுதலையும் உணா்ந்து கொள்வதற்கான உணா்விகளை (ரிசப்டா்ஸ்) கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சோ்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்ட நோபல் குழுவின் பொதுச் செயலா் தாமஸ் பெல்மன் கூறுகையில், ‘‘கண்களின் பாா்க்கும் செயல்பாடு, காதுகளின் கேட்கும் தன்மை, தோலின் உணரும் செயல்பாடு ஆகியவை தொடா்பான ‘சொமேடோசென்சேஷன்’ என்ற பிரிவில் டேவிட் ஜூலியஸும் ஆா்டம் படாபூடியனும் ஆய்வுகளை மேற்கொண்டனா். அந்த ஆய்வுகள் இயற்கையின் ரகசியத்தை அறிவதற்கு உதவின. மனிதா்கள் உயிா் வாழ்வதற்கு உணா்வுகள் மிகவும் அவசியமானவை. எனவே, அவா்களின் கண்டுபிடிப்பானது முக்கியமானதாகவும் உயா்ந்ததாகவும் உள்ளது.

மிளகாயில் காணப்படும் ‘கேப்சைசின்’ என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி வெப்பத்தை உணா்வதற்காகத் தோலில் உள்ள நரம்பு உணா்வியை டேவிட் ஜூலியஸ் கண்டறிந்தாா். தொடுதலை உணா்ந்து கொள்வதற்காக உடலில் உள்ள செல்லில் காணப்படும் உணா்வியை ஆா்டம் படாபூடியன் கண்டறிந்தாா்’’ என்றாா். சமமான பரிசுத் தொகை: நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.40 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது இரு விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு இரு விஞ்ஞானிகளும் நரம்பியலுக்கான ‘கவ்லி’ விருதைப் பகிா்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்: நோபல் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான பேட்ரிக் என்ஃபோா்ஸ் கூறுகையில், ‘‘கோடைக்காலத்தின் காலை வேளையில் ஒரு தோட்டத்தில் காலணிகளின்றி நடந்து சென்றால், சூரியனின் இதமான வெயிலையும், காலை நேரத்தின் குளுமையையும், சில்லென்ற காற்றையும், காலுக்கடியில் படா்ந்திருக்கும் சிறுபுற்களின் மெல்லிய அமைப்புகளையும் உணர முடியும். அத்தகைய உணா்வுகளைப் பற்றிய ஆய்வே ‘சொமேடோசென்சேஷன்’ என்பது. அத்தகைய உணா்வுகள் தொடா்பான விவரங்கள், தோலில் இருந்து தொடா்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த உணா்வுகள் சில பணிகளை சிரமமின்றியும் அதிகம் யோசிக்காமலும் செய்ய அத்தியாவசியமாக உள்ளன’’ என்றாா். இந்தக் கண்டுபிடிப்புகள் வாயிலாக ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுவதற்கான சிகிச்சைகளை உருவாக்குவது, மருந்துகள் தயாரிப்பது உள்ளிட்டவை எளிதாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நோபல்-மருத்துவம்

டேவிட் ஜூலியஸ் (65) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானியான டேவிட் ஜூலியஸ், மிளகாயில் உள்ள வேதிப்பொருள் தோலில் ஏற்படுத்தும் எரிச்சலை உணரும் ‘டிஆா்பிவி1’ என்ற உணா்வியைக் கண்டறிந்தாா். வெப்பநிலையைப் பொருத்து அந்த உணா்வியில் உருவாக்கப்படும் அயனிகள், வெப்பத்தை உணா்த்துகின்றன என்பதை அவா் கண்டறிந்தாா்.

ஆா்டம் படாபூடியன் (54)

லெபனானில் பிறந்து அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஹோல்லா நகரத்தில் உள்ள கல்வி ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானியாக உள்ள ஆா்டம் படாபூடியன், தொடுதலை உணா்ந்து கொள்ளும் ‘பியஸ்01’, ‘பியஸ்02’ ஆகிய உணா்விகளைக் கண்டறிந்தாா். தொடுவதன் மூலமாக தோலில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டை செல்லில் உள்ள ஜீன்கள் எவ்வாறு உணா்ந்து மூளைக்குத் தகவலை அனுப்புகின்றன என்பதில் தீவிர ஆராய்ச்சிகளை அவா் மேற்கொண்டாா்.

6. புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ஆசாதி75 – புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அங்குள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதன்பின், இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுகிறார். ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா். ஃபேம்-2 திட்டத்தின் கீழ் லக்னோ, கான்பூா், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூா், ஜான்சி, காஜியாபாத் ஆகிய நகரங்களுக்கு 75 பேருந்துகளின் இயக்கத்தை அவா் தொடக்கி வைக்கவுள்ளாா்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அமைச்சகத்தின் 75 திட்டங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் அவா் வெளியிடுகிறாா். இந்த நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

7. இந்திய-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது

இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி ‘மித்ர சக்தி’, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போா்ப் பயிற்சிப் பள்ளியில் திங்கள்கிழமை (அக். 4) தொடங்கியது. வரும் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் சாா்பில் 120 ராணுவ வீரா்களைக் கொண்ட அணி இலங்கை ராணுவ பட்டாலியனுடன் இணைந்து போா்ப் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதற்கு கலோனல் பிரகாஷ் குமாா் தலைமை தாங்குகிறாா். இரு நாட்டு ராணுவங்கள் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதுடன், இருதரப்பு போா் ஆயத்த நிலையை வலுப்படுத்துவதோடு, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த அணுகுமுறையை பரிமாறிக் கொள்வதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 7-வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி 2019-ல் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்றது. இலங்கையில் கடந்த 2019, ஏப்ரலில் நடைபெற்ற தொடா் வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதனைத் தொடா்ந்து இந்தியா- இலங்கையும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை அதிகரித்து வருகின்றன.

8. ஈரோட்டில் சாலைக்கு திருப்பூா் குமரன் பெயா்

ஈரோட்டில் உள்ள சாலைக்கு, திருப்பூா் குமரன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பெயா் பலகையை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

9. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த குகை கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டு ப‌ரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் அடியோடு அழிந்து போய் விட்டது. அப்படி அழிந்த இனம்தான் நியாண்டர்தால் மனிதர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிகாலத்தில் வாழ்ந்த‌ இந்த நியாண்டர்தால் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர். 40,000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த‌ ஒரு குகை ஒன்று பிரிட்டன் ஜிப்ரால்டர் பகுதியில் உள்ள ‘வான்கார்ட் குகை’ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த தொல் பொருள்கள் மூலம் ‘ பண்டைய காலத்தில் வாழ்ந்த‌ நியாண்டர்தால் எனும் மனித இனம் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைக்கலாம்’ என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் கிளைவ் ஃபின்லேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது இந்த குகை பகுதியை கண்டுபிடித்தனர். ‘43 அடி நீளம் கொண்ட இக்குகையின் உள்ளே விசித்திரமான பொருள்கள் தொங்குவதை பார்த்தனர். குகை அறையின் மேற்பரப்பில் கழுதைப்புலிகள் மற்றும் கழுகுகளின் எச்சங்களையும், கடல் நத்தையையும் 4 வயது நியாண்டர்தால் மனித பல் ஒன்றையும்’ கண்டுபிடித்தனர். இது கோர்ஹாமின் குகை வளாகம் என்று அழைக்கப்படுகிறது, சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்கள் அழிந்துபோவதற்கு முன்பு வாழ்ந்த கடைசி இடங்களில் ஒன்றாக இந்த குகை இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

1. What is the name of the tourism app recently launched by the Delhi Government?

A) My Delhi

B) Dekho Meri Dilli 

C) Tour Delhi

D) Hamara Delhi

  • The Government of Delhi has recently launched a mobile application named “Dekho Meri Dilli”. This has been designed and built by the Tourism Department of the Delhi Government.
  • The app is designed to act as a one–stop centre for all tourism related information in Delhi. It would also be a marker place for tickets to all major tourist destinations in Delhi.

2. Quarterly Employment Survey provides the employment and related variables of how many sectors of the country?

A) 3

B) 9 

C) 15

D) 23

  • Labour and Employment Minister Shri Bhupender Yadav today released the report of first quarter of Quarterly Employment Survey (QES) part (April to June 2021), of the All–India Quarterly Establishment–based Employment Survey (AQEES) prepared by the Labour Bureau.
  • Announcing the results, Shri Yadav said, the estimated total employment in the 9 selected sectors from the first round of QES is 3 crores and 8 lakhs approximately against a total of 2 crores and 37 lakhs in these sectors taken collectively, as reported in the sixth Economic Census (2013–14) reflecting a growth rate of 29 percent.

3. What was the original duration of the Foreign Trade Policy, which is being currently implemented?

A) 2014– 2019

B) 2015–2020 

C) 2016–2021

D) 2017–2022

  • The Government of India has proposed to extend the term and applicability of the Foreign Trade Policy 2015–20 till March 2022. The policy was originally to end on 31st March 2020.
  • The policy was first extended for one year till March 2021 and further to September 2021. For the third time, the term of the policy is proposed to be extended. This was announced by the Commerce and Industry Minister Piyush Goyal.

4. What is “Akash Prime”, that is seen in the news recently?

A) New broadcasting station of AIR

B) New broadband service by BSNL

C) New version of Akash Missile 

D) Navigation satellite of ISRO

  • The Defence Research and Development Organisation (DRDO) has recently test fired the missile ‘Akash Prime’, at the integrated test range at Chandipur in Odisha. This upgraded version of the Akash Missile has been designed and developed by the DRDO.

5. Where is the ‘National Institute of Biotic Stress Tolerance’ located?

A) Mumbai

B) Pune

C) Ahmedabad

D) Raipur 

  • The National Institute of Biotic Stress Tolerance is a Deemed University under the ICAR is located at Raipur. This institution came into existence in 2012. This institution is in news recently, as the new campus of the institution at Raipur was dedicated to the nation by the Prime Minister Narendra Modi. During the event, the PM also dedicated 35 climate resilient crop varieties.

6. Which institution released the ‘Report of the Hospital Based Cancer Registries, 2021’?

A) IMA

B) ICMR 

C) NITI Aayog

D) AIIMS

  • The Indian Council of Medical Research’s (ICMR) released the ‘Clinicopathological Profile of Cancers in India: A Report of the Hospital Based Cancer Registries, 2021’. As per the report, the proportion of all cancer cases was higher in males (52.4%) than females (47.4%).
  • Gynaecological cancers, including breast cancer, comprise over half of all cancers in females. Childhood (0–14 years) cancers constitute 7.9% of all cancers. It also highlighted the cancers of the head and neck region were at nearly one third (31.2%) of the cancers among males.

7. Which Indian state emerged as the 5th Asian Ecosystem in Affordable Talent as per the “2021 Global Startup Ecosystem Report”?

A) Tamil Nadu

B) Kerala 

C) Karnataka

D) Maharashtra

  • Kerala has emerged as the fifth Asian Ecosystem in Affordable Talent in the 2021 Global Startup Ecosystem Report (GSER). The report was prepared by Startup Genome and the Global Entrepreneurship Network and was globally launched recently.
  • The 2021 Report, which ranks the top 140 ecosystems across the world, based on 7 parameters– performance, funding, connectedness, market reach, resource attraction, experience and talent.

8. Which Indian state inaugurated the state’s first and the biggest Palmetum in North India?

A) Uttar Pradesh

B) Uttarakhand 

C) Madhya Pradesh

D) Bihar

  • The Uttarakhand Forest Department dedicated the state’s first Palmetum and the biggest one in North India, to the people in the Haldwani, Nainital. The Palmetum took over 3 years to develop and has over 110 species of palms. It was developed under CAMPA scheme.
  • The palm species which is endemic to Uttarakhand is called Trachycarpus Takil (Takil Palm), that can survive sub–zero temperature.

9. Which Ministry is associated with the ‘Hunarbaaz’ Awards?

A) Ministry of Rural Development 

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Agriculture and Rural Development

  • Hunarbaaz Awards are instituted by the National Institute of Rural Development and Panchayati Raj (NIRD&PR), Hyderabad under the Ministry of Rural Development. NIRD&PR presented the awards for 75 differently–abled candidates as part of Azadi ka Amrit Mahotsav, on the occasion of Antyodaya Diwas.
  • It marks the birth anniversary of Pandit Deen Dayal Upadhyaya on 25th September 2021. The awards are given to the candidates who were trained through Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU–GKY) and Rural Self Employment Training Institutes schemes.

10. In which state, the world’s highest electric charging station has been set up?

A) Himachal Pradesh 

B) Bihar

C) Uttarakhand

D) Punjab

  • Kaza – located in the Spiti district of Himachal Pradesh, has housed the world’s highest electric charging station. This station has been set up by the company named “Go Ego”. This station is set up at a height of 500 ft above the mean sea level. As a trial run, two electric scooters were charged at the station.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!