Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

5th September 2020 Current Affairs in Tamil & English

5th September 2020 Current Affairs in Tamil & English

5th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

5th September Tamil Current Affairs 2020

5th September English Current Affairs 2020

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. லக்னோ

ஈ. ஹைதராபாத்

  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D) தனது பொன்விழாவை 2020 ஆகஸ்ட்.28 அன்று கொண்டாடியது. மத்திய உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி, இந்தப்பொன்விழாவின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவின்போது, ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய துப்பறி பயிற்சி நிறுவனம் & மாணவர் காவல்படை வலைத்தளம் ஆகியவை தொடங்கப்பட்டன.
  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D), 1970 ஆக.28 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின்படி தொடங்கப்பட்டது. காவல்துறையை சிறப்பாக மேம்படுத்துவது, காவல்துறைப் பிரச்சனைகள்பற்றி விரைவான, முறையான ஆய்வை மேற்கொள்வது, காவல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டது.

2. `850 கோடி செலவில் இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்கம்

ஈ. குஜராத்

  • அஸ்ஸாம் மாநில அரசானது தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டோயில், திறன் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளது. இந்தப் புதிய பல்கலைக்கழகம், `850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டு பல்கலை மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், இப்பல்கலைக்கழகம், ‘திறன் நகரம்’ என்று அழைக்கப்படும் என்றும் இது இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 10,000 இடங்களை இப்பல்கலை கொண்டிருக்கும்.

3.நடப்பு நிதியாண்டில், 20 இலட்சம் சந்தாக்களை நெருங்கியுள்ள அரசுத்திட்டம் எது?

அ. அடல் ஓய்வூதிய திட்டம்

ஆ. பிரதமர் ஜன் தன் யோஜனா

இ. பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா

ஈ. பிரதமர் பசல் பீமா யோஜனா

  • அடல் ஓய்வூதிய திட்டமானது (APY) நடப்பு நிதியாண்டில் 2020 ஏப்ரல் முதல் 20 லட்சம் (2 மில்லியன்) சந்தாதாரர்களை எட்டியுள்ளது. APY திட்டத்தின்கீழ் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை இருபத்து ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு ஓர் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு முறையை உருவாக்கும் நோக்கத்துடன், APY திட்டம், 2015’இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தேசிய ஓய்வூதிய முறைமையின்மூலம் (NPS) PFRDA நிர்வகிக்கிறது.

4.பெண்களால் நடத்தப்படும் நாட்டின் முதல் பன்னாட்டு வர்த்தக மையத்தை அமைக்கவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. பீகார்

ஈ. கேரளா

  • பெண்டிரால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் பன்னாட்டு வர்த்தக மையம் கேரள மாநிலம் அங்கமாலி மாவட்டத்தில் அமைக்கப்படும். ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) ஏற்ப இம்மையம் அமைய உள்ளது. பெண்தொழில்முனைவோரை உருவாக்குவதும், நாட்டில் பாலின சமத்துவத்தை அடைவதும் இவ்வர்த்தக மையத்தை அமைப்பதற்கான நோக்கங்களாகும். பெண்கள் தங்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், தங்கள் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கும் இது ஒரு பாதுகாப்பான பணியிடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.அண்மையில் வட கொரியாவில் நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளியின் பெயரென்ன?

அ. வாவி

ஆ. பவி

இ. மகா

ஈ. வாயு

  • ‘பவி’ என்ற சூறாவளி சமீபத்தில் வட கொரியாவின் மேற்கு கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்தப்புயல், குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என்று வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். ‘Typhoon No: 8’ என அந்நாட்டால் குறிப்பிடப்படும் இந்தப்புயல், எதிர்பார்த்ததை விட சிறிய அளவே சேதமேற்படுத்தியதாக கிம் ஜாங் உன் கூறினார். நிலச்சரிவை ஏற்படுத்தும்போது, இந்தப் புயல், அதிகபட்ச வேகத்தை அடைந்திருந்தது. வட கொரியாவைத் தாக்கிய பின்னர், அது, தென் கொரியா மற்றும் சீனாவை நோக்கிச் சென்றது.

6. ‘தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் – ஆசியாவுக்கான போக்குவரத்துத் திட்டத்தின்’ இந்திய கூறுகளைத் தொடங்கவுள்ள அமைப்பு எது?

அ. NITI ஆயோக் ஆ. NHAI

இ. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஈ. இந்திய இரயில்வே

  • ‘தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் – ஆசியாவுக்கான போக்குவரத்துத்திட்டம்’ ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக NITI ஆயோக் தொடக்கவுள்ளது. இந்த விவாதம், இந்திய போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களில் முக்கிய கவனஞ்செலுத்தும். இது பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும். போக்குவரவு, எரிபொருள் மற்றும் பருவநிலை தொடர்பாக, வரும் ஆண்டில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்படவுள்ளது.

7.இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிசுக்கு மதிப்புறு சிலை அமைக்கவுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. இலங்கை

இ. நேபாளம்

ஈ. வங்கதேசம்

  • சீனாவின் அலுவல்பூர்வ ஊடகங்களின் கூற்றுப்படி, இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை கெளரவிப்பதற்காக, சீன நாடு அவருக்கு வெண்கலத்தினாலான சிலையை அமைக்கவுள்ளது. மாவோ சேதுங் தலைமையிலான சீனப்புரட்சி மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது அவராற்றிய பங்களிப்பு -களுக்காக நினைவுகூரப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின்போது சீனர்களுக்கு உதவ, இந்திய தேசிய காங்கிரஸ் அனுப்பிய மருத்துவக்குழுவில் துவாரகநாத்தும் ஒருவராக இருந்தார். பின்னர் அவர், சீன பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

8.நடுவணரசு அறிமுகப்படுத்திய வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான அவசர ஆணைகளுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில சட்டமன்றம் எது?

அ. கேரளம்

ஆ. பஞ்சாப்

இ. இராஜஸ்தான்

ஈ. சத்தீஸ்கர்

  • நடுவணரசின் வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான அவசர ஆணைகளுக்கு எதிராக முதலமைச்சர் அமரீந்தர் சிங் முன்வைத்த தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதா-2020’க்கு எதிரான தீர்மானத்தையும் சட்டமன்றம் நிறைவேற்றியது. மாநில முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தின் கூற்றுப்படி, இந்த அவசர ஆணைகள், விவசாயிகளின் உரிமைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைமைக்கும் எதிரானவையாகும்.

9.மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், ‘போஷான்மா’ ஏற்பாடு செய்யப்படுகிற மாதம் எது?

அ. ஆகஸ்ட்

ஆ. செப்டம்பர்

இ. அக்டோபர்

ஈ. நவம்பர்

  • மக்களிடையே ஊட்டச்சத்து பாதுகாப்பின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘போஷான்மா’ நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. அண்மையில், ‘போஷான்மா’ நிகழ்வை நடத்துவது தொடர்பாக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய கிடங்குக்கழகம் ஆகியவை சந்தித்தன. ‘போஷான்மா’ நிகழ்வு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.

10.எளிதாக தொழில் புரிவது (ease of doing business) குறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

இ. உலக வங்கி

ஈ. NITI ஆயோக்

  • வணிகத்தை மேம்படுத்துதற்கான செயல்பாடுகளின் அடிப்படையில் 190 நாடுகளை தரவரிசைப்படுத்த உலக வங்கி, ‘எளிதாக தொழில் புரிவது’ குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. தரவு கையாளுதலில் நிகழ்ந்த பிணக்குகளுக்கு மத்தியில், அறிக்கை வெளியிடுவதை இடைநிறுத்தியதாக சமீபத்தில் உலக வங்கி அறிவித்தது. வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கையொன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தரவு மாற்றி உள்ளீடு செய்யப்பட்டதாகக் கூறுகிறது.

1. Where is the headquarters of the Bureau of Police Research and Development (BPR &D) located?

[A] Mumbai

[B] New Delhi

[C] Lucknow

[D] Hyderabad

  • The Bureau of Police Research and Development, BPR&D is celebrating its Golden Jubilee Anniversary on August 28, 2020. To mark the day, a virtual event was organised with Union Minister of State for Home Affairs G Kishan Reddy as the Chief Guest. During the occasion, Central Detective Training Institute (CDTI), Jaipur and the website of Student Police Cadets were launched.

2. Which state is to set up India’s first Skill University at a cost of over Rs 850 crores?

[A] Madhya Pradesh

[B] Assam

[C] West Bengal

[D] Gujarat

  • The Government of Assam has proposed to set up a Skill University at Mangaldoi in Darrang district. The new University would be set up at a cost of over Rs.850 crore. Assam Cabinet has approved the Assam Skill Development University Bill. The Director of Assam Skill Development Mission has stated that the university will be called as Skill City and it would be the first of its kind in India. It would have a capacity of 10,000 seats.

3. Which Government scheme has neared 20 lakh subscriptions in the current financial year?

[A] Atal Pension Yojana

[B] PM Jan Dhan Yojana

[C] PM Jan Arogya Yojana

[D] PM Fasal Bima Yojana

  • The Atal Pension Yojana (APY) has reached close to 20 Lakh (2 million) subscribers during the current financial year from April 2020. The total subscriber base under the APY scheme has reached 21 million. The APY scheme was launched in 2015, with an aim to create a universal social security system for all, especially the poor and under–privileged. The scheme is administered by PFRDA through the National Pension System (NPS).

4. Which state/UT is to set up India’s first International Women’s Trade Centre?

[A] Maharashtra

[B] Andhra Pradesh

[C] Bihar

[D] Kerala

  • India’s first International women’s trade centre (WTC) will be set up in Kerala. The WTC would come up in line with the United Nations Sustainable Development Goals (SDG) at Angamaly district of the state. The setting up of women trade centre aims to promote women entrepreneurship and achieve gender equality in the country. It is expected to provide a safe work place for women to start their new businesses and provide a platform for marketing their products globally.

5. What is the name of the typhoon that made a landfall recently in North Korea?

[A] Vavi

[B] Bavi

[C] Maha

[D] Vayu

  • A typhoon named Bavi made its landfall in west coast of North Korea recently. The head of North Korea Kim Jong Un said that the typhoon had caused only minimal damage. Kim stated that the scale of damage caused by the typhoon, which is referred by the country as Typhoon No. 8, is smaller than expected. Bavi had packed maximum wind speed when it made landfall. After hitting North Korea, it approached South Korea and China.

6. Which organisation is to launch the India Component of the ‘Nationally Determined Contributions (NDC)–Transport Initiative for Asia’?

[A] NITI Aayog

[B] NHAI

[C] Airports Authority of India

[D] Indian Railways

  • The think tank of India, NITI Aayog is set to virtually launch the India Component of the Nationally Determined Contributions (NDC)–Transport Initiative for Asia (TIA). This discussion will have a main focus on the challenges faced by the Indian transport sector. This will also provide technical support on reducing Green House Gas emission. The event will inform the transport, energy, and climate stakeholders in India about planned project activities for the upcoming year.

7. Which country is to set up an honorary statue of Indian doctor Dwarkanath Kotnis?

[A] China

[B] Sri Lanka

[C] Nepal

[D] Bangladesh

  • As per the official media of China, the country is set up a bronze statue to honour the Indian doctor Dwarkanath Kotnis. The Doctor is commemorated for his contributions during the Chinese revolution headed by Mao Zedong and the World War II. The Doctor was a part of the medical team sent by the Indian National Congress to help the Chinese during World War II. He later joined the Communist Party of China.

8. Which state assembly passed a resolution against the Ordinances on Agriculture Marketing, introduced by the Centre?

[A] Kerala

[B] Punjab

[C] Rajasthan

[D] Chhattisgarh

  • The Punjab Assembly has unanimously passed a resolution tabled by Chief Minister Amarinder Singh against the Centre’s farm ordinances. The assembly also passed resolution against the proposed Electricity amendment Bill 2020. As per the Chief Minister and the assembly, the ordinances were against the rights of the farmers and the regime of Minimum Support Price.

9. In which month, the Poshan Maah is organised by Ministry of Women and Child Development?

[A] August

[B] September

[C] October

[D] November

  • The Ministry of Women and Child Development organises the ‘Poshan Maah’, to create awareness on the benefits of nutritional security, among the masses.
  • Recently, the Department of Food & Public Distribution, Food Corporation of India (FCI) and the Central Warehousing Corporation had a meeting regarding the commemoration of the Poshan Maah event.

10. ‘Ease of doing business’ report, that was seen in news, is released by which organisation?

[A] World Economic Forum

[B] International Monetary Fund

[C] World Bank

[D] NITI Aayog

  • The World Bank releases the ‘Ease of doing business’ report, to rank 190 countries on the basis of their measures to promote trade. Recently, the World Bank announced that it has paused the publication of the report amidst concerns of Data manipulation. A Wall Street Journal report said that data of four countries including and the UAE is said to have been allegedly altered.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!