Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

6th & 7th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th & 7th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th & 7th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th & 7th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. ‘யுத் அபியாஸ்’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் இராணுவப்பயிற்சியாகும்?

அ. ஜப்பான்

ஆ. அமெரிக்கா 

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

  • இந்தியாவும் அமெரிக்காவும் வரும் அக்டோபர் மாதத்தில் உத்தரகாண்டின் ஔலியில், ‘யுத் அபியாஸ்’ என்ற பெயரில் 15 நாட்கள் நீடிக்கும் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியை நடத்தும். அப்பயிற்சியின் 18ஆவது பதிப்பு பல சிக்கலான பயிற்சிகளை உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் கடைசிப்பதிப்பு கடந்த 2021 அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது. கடந்த 2016 ஜூனில், அமெரிக்கா இந்தியாவை, ‘முதன்மை பாதுகாப்பு பங்காளர்’ என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர்–வழிகாட்டப்பட்ட ATGM–களை சோதனை செய்த அமைப்பு எது?

அ. HAL

ஆ. DRDO 

இ. BEL

ஈ. BHEL

  • இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) இந்திய ராணுவமும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர்–வழிகாட்டப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை (ATGM) சமீபத்தில் சோதனை செய்தன. இது மகாராஷ்டிராவில் உள்ள கவசப்படை மையம் மற்றும் பள்ளியின் ஆதரவுடன் KK தளத்தில் உள்ள முதன்மை போர் பீரங்கியான அர்ஜுனிலிருந்து சோதனை செய்யப்பட்டது.

3. 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் உருவாக்கப்பட்ட, இஸ்ரோவால் ஏவப்படவுள்ள செயற்கைக்கோளின் பெயர் என்ன?

அ. பாரத்சாட்

ஆ. ஆசாதிசாட் 

இ. கிராம்சாட்

ஈ. கம்யூனிசாட்

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிறு செயற்கைக்கோள் ஏவுகலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. இது இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட சிறு மற்றும் எடைகுறைந்த வணிக ஏவுகலம் ஆகும்.
  • 75ஆவது விடுதலை ஆண்டைக்குறிக்கும் வகையில் விண்வெளியில் பறக்கவிடப்படும் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியையும் அந்த ஏவுகலம் சுமந்துசெல்லும். இந்த ஏவுகலம் EOS–02 என்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் கியூப்சாட் ஆசாதிசாட் ஆகியவற்றைக் கொண்டுசெல்லும்; இது, இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளில் தேசிய கீதத்துடன் ஒரு சிறப்புப் பாடலும் இடம்பெற்றிருக்கும்.

4. 2022 – ஆகஸ்ட் பணவியல் கொள்கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு ரெப்போ விகிதம் என்ன?

அ. 5.0 %

ஆ. 5.2 %

இ. 5.4 %

ஈ. 5.75 %

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணவியல் கொள்கைக்குழு ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவிற்குப்பிறகு, ரெப்போ விகிதம் தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த 5.15 சதவீதத்திற்கு மேல் உள்ளது. மூன்று தொடர்ச்சியான பணவியல் கொள்கை கூட்டங்களில் ரெப்போவின் ஒட்டுமொத்த உயர்வு 140 அடிப்படை புள்ளிகளுக்குச் சென்றுள்ளது.

5. தைவானைச் சுற்றி மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை நடத்திய நாடு எது?

அ. சீனா 

ஆ. இரஷ்யா

இ. இந்தியா

ஈ. கஜகஸ்தான்

  • தைவானைச்சுற்றி சீனா மிகப்பெரிய ராணுவப்பயிற்சியைத் தொடங்கியுள்ளது. அப்போது சீனாவால் எறிகணைகள் ஏவப்பட்டது மற்றும் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்குப் பதிலடியாக இது நடத்தப்பட்டது. தைவானுக்குச் சென்ற முதல் அமெரிக்க உயரதிகாரி பெலோசி ஆவார். இந்தப் பயிற்சிகள் அதன் விமான தகவல் பகுதி வழியாகச் செல்லும் 18 பன்னாட்டு வழித்தடங்களை சீர்குலைக்கும் என்று தைவான் அமைச்சரவை கூறியது.

6. IUCN ஆனது எவ்வகை பட்டாம்பூச்சிகளை, ‘அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில்’ சேர்த்துள்ளது?

அ. அரச வண்ணத்துப்பூச்சி 

ஆ. மயில் வண்ணத்துப்பூச்சி

இ. சிவப்பு அதிகாரி வண்ணத்துப்பூச்சி

ஈ. நீலன்கள் வண்ணத்துப்பூச்சி

  • நாடோடி இனமான ‘அரச வண்ணத்துப்பூச்சி’யை, இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் ‘அழிந்துவரும் உயிரினங்கள்’ பிரிவில் பட்டியலிட்டுள்ளது. IUCN ஆனது அரச வண்ணத்துப்பூச்சியின் கிளையினத்தை (Danaus plexippus) அழிந்துவரும் நிலையில் சேர்த்துள்ளது; அது அக்கிளையினங்கள் காடுகளில் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொள்வதைக் குறிக்கிறது. வாழ்விட இழப்பு, பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடு மற்றும் கால நிலைமாற்றம் ஆகியவை அவ்வண்ணத்துப்பூச்சியின் அழிவுக்கு முதன்மை அச்சுறுத்தல்களாக உள்ளன.

7. இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.24 

ஆ. ஆகஸ்ட்.24

இ. செப்டம்பர்.24

ஈ. ஜனவரி.24

  • நாட்டில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், வருமான வரித்துறை ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.24ஆம் தேதியை வருமான வரி நாளை அனுசரிக்கிறது. 1857ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, 1860ஆம் ஆண்டு இதே நாளில், சர் ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் முதன்முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வருமான வரி விதித்து 150 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு முதன்முறையாக வருமான வரி நாள் கொண்டாடப்பட்டது.

8. ‘முதலாவது கேலோ இந்திய பெண்கள் வாள்சண்டை லீக்’ நடைபெறும் இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி 

இ. குவாலியர்

ஈ. பாட்னா

  • முதலாவது கேலோ இந்திய பெண்கள் வாள்சண்டை லீக் சமீபத்தில் புது தில்லியின் தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பெண்களுக்கான தேசிய அளவிலான வாள்வீச்சுப் போட்டி இதுவே முதல்முறையாகும். 20 மாநிலங்களின் 300–க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பியன் மற்றும் இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டம் (TOPS) தடகள வீராங்கனை பவானி தேவியும் இதில் பங்கேற்கிறார்.

9. அண்மையில், பிரத்யேக, ‘சுற்றுலாக் கொள்கை – 2021’ஐ அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஜார்கண்ட் 

இ. சிக்கிம்

ஈ. அஸ்ஸாம்

  • ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ‘ஜார்கண்ட் சுற்றுலாக்கொள்கை–2021’ஐ வெளியிட்டார். இக்கொள்கையானது மாநிலத்தின் சுற்றுலாத்துறையை புத்துயிர் மற்றும் மறுசீரமைப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘ஜார்கண்ட் சுற்றுலாக்கொள்கை 2021’ ஆனது ஜார்க்கண்ட் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து FICCIஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. இது, 2025ஆம் ஆண்டுக்குள் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஜார்கண்ட் மாநிலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இந்தியக் குழுவை உற்சாகப்படுத்த, ‘கிரியேட் ஃபார் இந்தியா’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. இந்திய விளையாட்டு ஆணையம் 

ஆ. தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்

இ. இந்திய இராணுவ விளையாட்டு நிறுவனம்

ஈ. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இந்தியக் குழுவை உற்சாகப்படுத்த, ‘இந்தியாவுக்காக உருவாக்கு’ என்ற பிரச்சாரத்துடன் இந்திய விளையாட்டு ஆணையம் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 16 பிரிவுகளில் 215 பேர்கொண்ட இந்திய தடகளப் பிரிவு பங்கேற்க உள்ளது. அந்தப் பங்கேற்பாளர்கள் #create4India மற்றும் #cheer4India என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உள்ளீடுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியது ஆர்பிஐ

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 0.5% உயர்த்தியுள்ளது. அதன்காரணமாக, வீட்டுக்கடன், வாகனக்கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தவுள்ளன.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென RBI இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1.4 சதவீதம் உயர்வு:

வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு நிதிக் கொள்கை குழுவின் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மே மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி விகிதம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பணவீக்கம்:

பணவீக்கமானது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என RBI கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று RBI தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் GDP வளர்ச்சி 16.2 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. RBI நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் செப்.28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. குடியரசுத்துணைத்தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வு

குடியரசுத்துணைத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் (71) வெற்றி பெற்றார். அவர் நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத்தலைவராக ஆக.11 அன்று பதவியேற்பார்.

இந்தத்தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 780 எம்.பி.க்களில் 725 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், மாநிலங்களவையில் அக்கட்சி சார்பில் 91 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் காரணமாக ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, தேர்தலில் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார். தேர்தலில் வாக்களித்த 725 எம்.பி.க்களில் 528 பேர் (74.36%) ஜகதீப் தன்கருக்கும், 182 பேர் மார்கரெட் ஆல்வாவுக்கும் வாக்களித்தனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜகதீப் தன்கர்தான். மேலும், பைரோன் சிங் ஷெகாவத்துக்குப்பிறகு ராஜஸ்தானில் இருந்து குடியரசுத்துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையையும் ஜகதீப் தன்கர் பெற்றார்.

3. தகைசால் தமிழர் விருது: ஆர் நல்லகண்ணு தேர்வு!

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டு முதல் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.

இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச் சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணுவுக்கு 2022ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர் நல்லகண்ணுவுக்கு, `10 இலட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குவார். 2021ஆம் ஆண்டுக்கான “தகைசால் தமிழர்” விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான N சங்கரையாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) விண்ணில் ஏவப்படுகிறது. சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட, எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

இந்த நிலையில், சர்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்.

இம்முறை அந்த வகை ராக்கெட், இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ) செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

அதற்கான 5 மணிநேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இஓஎஸ்-02 செயற்கைக்கோளானது 145 கிலோ எடைகொண்டது. இது கடலோர நிலப்பயன்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீ அளவுக்கு துல்லியமாகப் படம்பிடிக்க முடியும்.

கல்விசார் செயற்கைக்கோள்: இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின்மூலம் ‘ஆசாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசார் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இச்செயற்கைக்கோள் நாடு முழுதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5. வேளாண் ஏற்றுமதி 31% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 31 சதவீதம் (7408 மில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வணிக நுண்ணறிவு, புள்ளியியல் தலைமை இயக்ககம் வெளியிட்ட தரவுகளின்படி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2022இல் 7408 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் இது 5663 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல்-ஜூன் 2022-23-க்கான ஏற்றுமதி இலக்கு 5890 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எடுத்த முயற்சிகள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த ஏற்றுமதி இலக்கில் 31 சதவீதத்தை எட்டுவதற்கு உதவியுள்ளன.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரகதின் தரவுகளின்படி, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி 4 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியும் 59.71 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இறைச்சி, பால் மற்றும் கோழிப் பொருள்களின் ஏற்றுமதி 9.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிற தானியங்களின் ஏற்றுமதி 29 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. பிற தானியங்களின் ஏற்றுமதி ஏப்ரல்-ஜூன் 2021-இல் 237 மில்லியன் டாலரில் இருந்து ஏப்ரல்-ஜூன் 2022-இல் 306 மில்லியன் டாலராக அதிகரித்ததாக புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. 150 பாரம்பரிய இடங்களில் தேசியக் கொடி தொல்லியல் துறை ஏற்பாடு

சுதந்திர தின விழாவையொட்டி ஆக.15-ஆம் தேதி 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடியேற்ற இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுதந்திர தின அம்ருத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும். பதேபூர் சிக்ரி, போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தி பிறந்த இடம், லக்னெளவில் உள்ள பிரிட்டிஷார் காலத்திய குடியிருப்பு, பைஸாபாதின் குலாப்பரி, வேலூர் கோட்டை, வாரங்கல் கோட்டை, சித்ரதுர்கா, அஜந்தா எல்லோரா குகைகள் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த இடங்களை மூவண்ணத்தில் ஒளிரச்செய்யவும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,693 பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் உள்ளன. சுதந்திர தின அம்ருத பெருவிழாவையொட்டி இந்த இடங்களில் ஆக.5 முதல் 15-ஆம் தேதி வரை பார்வையாளர்கள் இலவசமாகப் பார்வையிட மத்திய கலாசார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

6th & 7th August 2022 Tnpsc Current Affairs in English

1. ‘Yudh Abhyas’ is a military exercise held between India and which country?

A. Japan

B. USA 

C. Australia

D. France

  • India and the US will conduct a fortnight–long mega military exercise named ‘Yudh Abhyas’ in Uttarakhand’s Auli in October 2022. The 18th edition of the exercise is scheduled to include number of complex drills. The last edition of the exercise took place in October 2021 in Alaska in the US. In June 2016, the US designated India a ‘Major Defence Partner’.

2. Which organisation test–fired indigenously developed laser–guided ATGMs?

A. HAL

B. DRDO 

C. BEL

D. BHEL

  • Defence Research and Development Organisation (DRDO) and the Indian Army test–fired the indigenously developed Laser–Guided Anti–Tank Guided Missiles (ATGM). It was launched from Main Battle Tank (MBT) Arjun at KK Ranges with support of Armoured Corps Centre and School in Maharashtra.

3. What is the name of the satellite developed by 750 girls across 75 rural schools to be launched by ISRO?

A. BharatSat

B. AzaadiSAT 

C. GramSAT

D. CommuniSAT

  • Indian Space Research Organisation (ISRO) is set to launch a Small Satellite Launch Vehicle (SSLV) from Satish Dhawan Space Centre in Sriharikota. It is the smallest and lightest commercial rocket built by ISRO.  The rocket will also carry the Indian tricolour, which will be unfurled in space to mark the 75th year of independence. The SSLV will carry EOS–02, an indigenously developed earth observation satellite, and Cubesat AzaadiSAT, which was developed by 750 school girls across 75 schools in rural India. The satellite will carry a special space song along with the national anthem.

4. What is the repo rate after the August 2022 Monetary policy committee (MPC) Meeting?

A. 5.0 %

B. 5.2 %

C. 5.4 %

D. 5.75 %

  • Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das–chaired Monetary Policy Committee (MPC) raised the repo rate by 50 basis points (bps) to 5.40 percent. The decision was taken to tame persisting high inflation. After the decision, the repo rate is above pre–pandemic levels of 5.15 percent. The overall rate hike in three successive policy meets has gone to 140 basis points.

5. Which country conducted its largest–ever military exercises around Taiwan?

A. China 

B. Russia

C. India

D. Kazakhstan

  • China fired ballistic missiles and deployed fighter jets and warships as it began its largest–ever military exercises around Taiwan, a show of force. This was commenced as retaliation to the visit of the US House Speaker Nancy Pelosi’s to the island. Pelosi was the highest–profile US official to visit Taiwan in years. The Taiwanese cabinet said the drills would disrupt 18 international routes passing through its flight information region.

6. IUCN has listed which species of butterfly in the ‘Endangered species list’?

A. Monarch butterfly 

B. Peacock butterfly

C. Red Admiral butterfly

D. Gossamer–winged butterfly

  • The migratory ‘Monarch butterfly’ has been listed in the endangered species category by the International Union for Conservation of Nature. IUCN listed the butterfly, a subspecies of monarch (Danaus plexippus) as endangered, which indicates that the subspecies is facing a high risk of extinction in the wild. The main threats to the butterfly are habitat loss, pesticide and herbicide use and climate change.

7. When is the Income Tax Day celebrated in India?

A. July.24 

B. August.24

C. September.24

D. January.24

  • The Income Tax department observes July 24 every year as Income Tax Day, to commemorate the introduction of income tax in the country. On the same day in 1860, Sir James Wilson introduced income tax for the first time in India, to compensate for the losses suffered by the British regime during the 1857 war of independence.  Income Tax Day was celebrated for the first time in 2010, to mark 150 years of income tax in India.

8. Which is the venue of the ‘1st Khelo India Fencing Women’s League’?

A. Chennai

B. New Delhi 

C. Gwalior

D. Patna

  • The 1st Khelo India Fencing Women’s League recently commenced at the Talkatora Indoor Stadium, New Delhi. This is the first of its kind national fencing competition for women. Over 300 women across 20 States are participating in the event. Tokyo Olympian and Target Olympic Podium Scheme (TOPS) athlete Bhavani Devi is also a participant.

9. Which Indian state recently launched a dedicated ‘Tourism Policy 2021′?

A. Tamil Nadu

B. Jharkhand 

C. Sikkim

D. Assam

  • The Chief Minister of Jharkhand Hemant Soren launched ‘Jharkhand Tourism Policy 2021’. The policy aims to revive and revamp the tourism sector of the state. ‘Jharkhand Tourism Policy 2021’ was organized by FICCI, jointly with the Jharkhand government. It aims to develop the state as one of the most sought–after tourist destinations by 2025.

10. Which institution has launched campaign ‘Create for India’ to cheer the Indian contingent of the Commonwealth Games?

A. Sports Authority of India 

B. National Sports University

C. Army Sports Institute India

D. Board of Control for Cricket in India

  • Sports Authority of India has started a new initiative to cheer for Indian contingent of the Commonwealth Games with the campaign ‘Create for India’. A 215–member Indian athlete contingent across 16 disciplines is set to participate in the Commonwealth Games in Birmingham. Participants were asked to submit entries using the hashtags #create4India and #cheer4India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!