Tnpsc

6th & 7th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th & 7th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th & 7th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th & 7th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. உலகளவில் பட்டு உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது

ஈ) ஐந்தாவது

  • உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மல்பெரி, எரி, டசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
  • சமீபத்தில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியான இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியி -ன் 8ஆவது பதிப்பை தொடங்கிவைத்தார். இது, இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘நெப்டியூன் பிரகடனம்’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) வானியற்பியல்

ஆ) கடல்சார் துறை

இ) கோள்கள் ஆராய்ச்சி

ஈ) விண்மீன்கள் ஆராய்ச்சி

  • ‘கடல்சார் நலவாழ்வு மற்றும் குழு மாற்றம் குறித்த நெப்டியூன் பிரகடனம்’ என்பது உலக கடல்சார் துறையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பாகும். சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட UNGA தீர்மானத்திற்கு இணங்க அனைத்து அரசாங்கங்களும் கடற்படையினரை முதன்மை பணியாளர்களாக அங்கீகரிப்பதில் இவ்வறிவிப்பு கவனம் செலுத்துகிறது.
  • ‘Maritime India Vision 2030’ஐ வகுக்கும் போது இந்த அறிவிப்பை பரிசீலிக்குமாறு இந்திய கடல்சார் சங்கம் நடுவணரசை வலியுறுத்தியது.

3. பாங்காக்கில் நடந்த உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில், ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் வென்றவர் யார்?

அ) ஆண்டர்ஸ் அன்டன்சன்

ஆ) விக்டர் ஆக்செல்சன்

இ) கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஈ) வாங் சூ-வீ

  • அண்மையில், பாங்காக்கில் நடந்த உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில், டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை அவர் தோற்கடித்தார். COVID-19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, இப்போட்டிகளில் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

4. சையத் முஷ்தக் அலி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) ஹாக்கி

ஆ) கிரிக்கெட்

இ) கூடைப்பந்து

ஈ) பூப்பந்து

  • குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் சையது முஷ்தக் அலி கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாட்டின் அணி பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. நடப்பாண்டு (2021) போட்டியின்போது, இறுதிப்போட்டி வரை தமிழ்நாட்டின் அணி ஒரு போட்டியில்கூட தோற்கடிக்கப்படவில்லை. சையது முஷ்தக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

5. பின்வரும் எந்தப்பொதுத்துறை நிறுவனத்தின் புதிய தலைவராக சோமா மொண்டல் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) SAIL

ஆ) ONGC

இ) NTPC

ஈ) GAIL

  • இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக சோமா மொண்டல் அண்மையில் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக (வணிக ரீதியாக) இருந்தார். அவர், தற்போதைய தலைவர் அனில் குமார் சவுத்ரிக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். SAIL’இல் உள்நுழைவதற்குமுன், தேசிய அலுமினிய நிறுவனத்தில் (NALCO) அவர் இயக்குநராக (வணிக) பணியாற்றினார்.

6. இந்திய இராணுவ துணைத்தளபதியாக பொறுப்பேற்றவர் யார்?

அ) M M நரவனே

ஆ) C P மொஹந்தி

இ) யோகேஷ் குமார் ஜோஷி

ஈ) அனில் செளகான்

  • லெப்டினன்ட் ஜெனரல் C P மொஹந்தி, இராணுவ துணைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்பு அவர் தெற்கு இராணுவத்தின் தளபதியாக பொறுப்பிலிருந்தார். தென் இராணுவத்தின் பொறுப்பில் 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இராணுவ துணைத்தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் S K சைனியின் பதவி நீட்டிப்பு காலம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து C P மொஹந்தி பொறுப்பேற்றுள்ளார்.

7. 2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘MITRA’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) வேளாண்மை

ஆ) ஜவுளி

இ) MSME

ஈ) வங்கி

  • 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், Mega Investment Textiles Parks (MITRA) திட்டத்தை அறிவித்தார்.
  • உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு கூடுதலாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது, தொழிற்துறையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும்.

8. ஆதி மகோத்சவம் என்பது பின்வரும் எம்மத்திய அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?

அ) உழவு மற்றும் உழவர் நல அமைச்சகம்

ஆ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ) கலாச்சார அமைச்சகம்

ஈ) சுற்றுலா அமைச்சகம்

  • குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா, புது தில்லியில் உள்ள தில்லி ஹோட்டில் நடைபெற்ற தேசிய பழங்குடியினர் விழாவான, ‘ஆதி மகோத்சவைத்’ தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு, பிப்.1 முதல் பிப்.15 வரை இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • ‘ஆதி மகோத்சவம்’ என்பது ஒரு தேசிய அளவிலான பழங்குடி திருவிழா ஆகும். மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல், வளர்ச்சி கூட்டமைப்பான TRIFED இதனை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, நாட்டின் பாரம்பரிய கலை, கைவினைப்பொருட்கள் & கலாச்சார பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது. இது, 2017 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பட்டாச்சித்ரா’ என்பது, எந்த மாநிலத்தின் பிரபலமான கலை வடிவமாகும்?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • ‘பட்டாச்சித்ரா’ என்பது ஒடிஸா மாநிலத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களுள் ஒன்றாகும். இது, சுருள்சீலையில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய பாணியிலான ஓவியமாகும். இந்தத் தனித்துவமான கலைப்படைப்பு அதன் சிக்கலான கலைப்பணி மற்றும் புராணக்கதைகள் பற்றிய விவரங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி தனது மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில், COVID-19’இன்போது இந்தக் கலை வடிவத்தை பயின்றதற்காக ஒரிசா மாணவர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.

10. பன்னாட்டு வானூர்தி கண்காட்சியான, ‘Aeo India’ நடைபெற்ற இடம் எது?

அ) கொச்சின்

ஆ) சென்னை

இ) பெங்களூரு

ஈ) மும்பை

  • 13ஆவது ‘ஏரோ இந்தியா’ கண்காட்சியானது பெங்களூரு ஏலகங்கா வான்படை நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கண்காட்சி அமைப்பு நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, இந்திய வானூர்தி துறையின் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை வாங்குபவர்கள் சந்திக்க உதவுகிறது.

6th & 7th February 2021 Tnpsc Current Affairs in English

1. What is the rank of India in the production of silk, globally?

A) 1

B) 2

C) 3

D) 5

  • China is the largest producer of silk, in the world. It is followed by India in the second place.
  • India is the only country in the world which produces all four major varieties of silk namely – Mulberry, Eri, Tassar, and Muga. Recently, the Textiles Minister Smriti Irani inaugurated India’s biggest silk fair, the 8th India International Silk Fair. It is held on the virtual platform of Indian Silk Export Promotion Council.

2. ‘Neptune Declaration’, which was seen in the news recently, is associated with which sector?

A) Astronomy

B) Maritime

C) Planetary Research

D) Galaxy Research

  • The ‘Neptune Declaration on Seafarer Wellbeing and Crew Change’, is a declaration released by the global maritime industry recently.
  • The declaration focusses on recognising seafarers as key workers by all governments in line with the UNGA resolution adopted recently. The Maritime Union of India urged the Centre to consider the declaration while formulating ‘Maritime India Vision 2030’.

3. Who won the men’s singles final at badminton World Tour held in Bangkok?

A) Anders Antonsen

B) Viktor Axelsen

C) Kidambi Srikanth

D) Wang Tzu–wei

  • Anders Antonsen of Denmark won the men’s singles final at badminton World Tour held in Bangkok recently. In the final match, he defeated Viktor Axelsen of Denmark. The tournament contained no spectators, to guard against the pandemic.

4. Syed Mushtaq Ali Trophy is associated with which sport?

A) Hockey

B) Cricket

C) Basketball

D) Badminton

  • In this year’s Syed Mushtaq Ali Trophy T20 cricket tournament held at Ahmedabad, Tamil Nadu team defeated Baroda to win the trophy title. During this year’s tournament, Tamil Nadu remained un beaten till the final match. At the finals, the team chased Baroda’s with 7 wickets remaining.

5. Soma Mondal is the new Chairperson of which Public sector enterprise?

A) SAIL

B) ONGC

C) NTPC

D) GAIL

  • Soma Mondal has recently taken charge as the new Chairman of Steel Authority of India Limited (SAIL). Prior to this, she was the Director (Commercial) of the Public Sector enterprise.
  • She replaces the incumbent Chairman Anil Kumar Chaudhary Soma Mandal also had served as the Director (Commercial) at the National Aluminium Company Limited (NALCO), before her venture in SAIL.

6. Who has taken charge as the Vice Chief of Army Staff in India?

A) M M Naravane

B) C P Mohanty

C) Yogesh Kumar Joshi

D) Anil Chauhan

  • Lieutenant General C P Mohanty assumed charge as the Vice Chief of the Army Staff. Prior to this appointment he was the Army Commander of the Southern Army.
  • The area of responsibility of the Southern Army includes 11 states and four Union Territories. C P Mohanty has replaced the previous Vice Chief of the Army Staff, Lieutenant General Satinder Kumar Saini.

7. ‘MITRA’ scheme, which was announced in the recent Union Budget is related to which sector?

A) Agriculture

B) Textile

C) MSME

D) Banking

  • In the Union Budget 2021–22, Finance Minister Nirmala Sitharaman announced a scheme of Mega Investment Textiles Parks (MITRA).
  • The scheme is to be launched in addition to the Production Linked Incentive scheme. It aims to help the industry become competitive, attract investments and boost employment generation. Under the scheme, 7 Textile Parks will be established over 3 years.

8. Aadi Mahotsav is an initiative of which Union Ministry?

A) Agriculture and Farmers Welfare Ministry

B) Tribal Affairs Ministry

C) Culture Ministry

D) Tourism Ministry

  • Vice President M. Venkaiah inaugurated Aadi Mahotsav, a National Tribal Festival at Dilli Haat, New Delhi. The event is scheduled to be held from Feb.1 to Feb.15, this year.
  • Aadi Mahotsav is a national–level tribal festival and a joint initiative of Ministry of Tribal Affairs, and the Tribal Cooperative Marketing Development Federation of India (TRIFED). The event showcases traditional art, handicrafts and cultural heritage of the country. It has been organised from 2017.

9. Pattachitra, which was making news recently, is a popular art form of which state?

A) Andhra Pradesh

B) Kerala

C) Odisha

D) Karnataka

  • Pattachitra is one of the oldest and most popular art forms of Odisha. It is a traditional style of painting performed on a cloth–based scroll. This unique artform is known for its intricate artistic work and details about the mythological stories.
  • Prime Minister Narendra Modi mentioned the name of a Orissa student in his Mann ki Baat radio programme, for practising the art form during COVID–19.

10. Which Indian city is the venue of the Global Air show ‘Aero India’?

A) Cochin

B) Chennai

C) Bengaluru

D) Mumbai

  • The 13th edition of Aero India, the Global Air show ‘Aero India’ is being organised at the Yelahanka Air Force Station in Bengaluru.
  • The exhibition is hosted by the Ministry of Defence’s Defence Exhibition Organisation. This show enables the manufacturers and service providers from the Indian aviation industry meet buyers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!