Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

6th & 7th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th & 7th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th & 7th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பாரம்பரிய ‘லாந்தர் விளக்கு விழா’ கொண்டாடப்படுகிற நாடு எது?

அ) வங்கதேசம்

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) தென் கொரியா

  • சீனா தனது பாரம்பரிய, ‘விளக்கு விழா’வை முதல் சீன சந்திர மாதத்தின் 15ஆவது நாளில் கொண்டாடுகிறது. இந்த விழா சீனப்புத்தாண்டு அல்லது ‘வசந்த விழா’ காலத்தின் இறுதிநாளையும் குறிக்கிறது. இந்த ஆண்டு, 2021 பிப்.12 அன்று சீனா ‘காளை ஆண்டு’க்குள் அடியெடுத்து வைத்தது. இந்த விழா, சீன நாட்காட்டியின்படி முதல் முழுநிலா இரவாகும்.

2. ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்த அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) FAO

ஆ) UNCTAD

இ) WTO

ஈ) IMF

  • ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிக்கை-2021’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. நவீன தொழில்நுட்பங்கள் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துகிறதா மற்றும் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றனவா என்பதை UNCTAD’இன் இவ்வறிக்கை ஆராய்கிறது. தற்போதைய $350 பில்லியன் அமெரிக்க சந்தையுடன், தொழில்நுட்பங்கள் 2025ஆம் ஆண்டில் $3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளரக்கூடும் என்று இவ்வறிக்கை காட்டுகிறது.

3. ‘One District One Focus’ தயாரிப்புகளின் பட்டியலை இறுதிசெய்து -ள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ) வேளாண் அமைச்சகம்

ஈ) தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

  • மத்திய உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகமானது, One District One Focus’இன்கீழ் வரவிருக்கும் தயாரிப்புகளின் பட்டியலை இறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் 728 மாவட்டங்களுக்கான தயாரிப்புகளை மத்திய உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் வேளாண், தோட்டக்கலை, விலங்கு, கோழி, பால், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, கடல் துறைகளைச் சார்ந்தவையாகும்.

4. 170 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தோனேசியாவில் காணப்பட்ட பறவையினம் எது?

அ) புருவங்கருத்த தவிட்டுக்குருவி

ஆ) வெண் சிட்டுக்குருவி

இ) வன ஆந்தை

ஈ) வங்கத்து கானமயில்

  • அழிந்துபோனதாகக் கருதப்பட்ட புருவங்கருத்த தவிட்டுக்குருவி, சுமார் 170 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தென்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் போர்னியோவில் இந்தப் பறவை தென்பட்டுள்ளது. இந்தப்பறவை முதன்முதலில் கடந்த 1848’இல் அறிவியலாளர்களால் விவரிக்கப்பட்டது; பின்னர் அது அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. உலகளாவிய வனவுயிரி பாதுகாப்பின்படி, இந்தோனேசியாவின் போர்னியோவில், இருவர் தற்செயலாக இந்தப்பறவையை நிழற்படம் எடுத்தனர்.

5. மக்களவை மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சி அலைவரி -சைகளை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் பெயர் என்ன?

அ) இந்தியா TV

ஆ) சன்ஸாத் அலைவரிசை

இ) LRS TV

ஈ) RS TV

  • இந்திய நாடாளுமன்றம் தனது மக்களவை மற்றும் மாநிலங்களவைக்
    -கான இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒருங்கிணைத்து சன்சாத் டிவி என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசை, அவைகளின் நடவடிக்கைகளை நேர
    -லையாக ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பும். இப்புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமைச் செயல் அதிகாரியாக முன்னாள் ஜவுளித்துறை செயலாளர் இரவி கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலை
-மைத்துவ விருதைப்பெறவுள்ள தலைவர் யார்?

அ) நரேந்திர மோதி

ஆ) இராம்நாத் கோவிந்த்

இ) மம்தா பானர்ஜி

ஈ) நிர்மலா சீதாராமன்

  • இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு CERAWeek உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது. டெக்
    -சாஸின் ஹூஸ்டனில் தகவல் மற்றும் நுண்ணறிவு நிறுவனமான IHS மார்கிட் ஏற்பாடு செய்யும் வருடாந்திர மாநாடான செராவீக் பன்னாட்டு எரிசக்தி மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

7. ISRO தனது PSLV-C51 ஏவுகலத்தைப் பயன்படுத்தி எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது?

அ) 18

ஆ) 19

இ) 20

ஈ) 21

  • இந்தியாவின் PSLV-C51 ஏவுகலமானது ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவைச்சார்ந்த 19 செயற்கைக்கோள்க -ளுடன் பிரேசிலின் 637 கிலோகிராம் எடையுடைய ஆப்டிகல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான அமேஸானியா-1’ஐ விண்ணுக்கு சுமந்துசென்றது.

8. பின்வரும் எவ்வறிவியலாளரின் கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) ஜெகதீஷ் சந்திரபோஸ்

ஆ) C V இராமன்

இ) சீனிவாச இராமானுஜன்

ஈ) ஹோமி ஜே பாபா

  • ‘இராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்.28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதேநாளில், C V இராமன், ‘இராமன் விளைவு’ குறித்து அறிவித்தார். அவருக்கு, 1930’இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • “Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருளாகும்.

9. பிரமோத் சந்திர மோடி என்பவர் பின்வரும் எந்த அமைப்பின் தலைவராவார்?

அ) SEBI ஆ) CBIC

இ) CBDT ஈ) IRDAI

  • மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் (CBDT) தலைவராக பிரமோத் சந்திர மோடி மீண்டும் நியமனம்செய்யப்பட்டுள்ளார். 1982ஆம் தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான PC மோடி, 2019 பிப்ரவரியில் CBDT’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆறு மாதகாலத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

10. BARC உருவாக்கிய, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ இந்தியா எந்த நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது?

அ) மொரீஷியஸ்

ஆ) மடகாஸ்கர்

இ) மியான்மர்

ஈ) மாலத்தீவுகள்

  • பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கிய புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு நவீன, ‘டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை எந்திரத்தை’ தீவு நாடான மடகாஸ்கருக்கு இந்தியா வழங்கியுள்ளது. ‘Bhabhatron-II’, என்ற டெலி கோபால்ட் எந்திரம் அண்மையில் மடகாஸ்கரின் தலைநகரமான அன்ட -னனரிவோவில் அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரி இராஜோலினாவால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவிடமிருந்து ‘Bhabhatron-II’ ரேடியோ சிகிச்சை எந்திரத்தைப்பெற்ற சில நாடுகளுள் இதுவும் ஒன்றாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேர்தல் விதிமீறல்களை தெரிவிக்கும் வசதி; தமிழில் இயங்குமா ‘சி- விஜில்’ செயலி?

வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல்விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க ‘சி-விஜில்’எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலியை (c -VIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், அலை பேசி எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது. இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ’சி – விஜில்’ செயலி இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே உள்ளது. இம்மொழிகள் தெரியாதவர்கள் இச்செயலியை பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது. நேர்மையாக தேர்தலை அணுக விரும்புவோர் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் இந்த ‘சி- விஜில்’ செயலியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

2. அமெரிக்கா, கனடா, 10 ஐரோப்பிய நாடுகள் இணைந்து வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பை (North Atlantic Treaty Organisation – NATO) 1949 ஏப்ரல் 4 – ல் ஏற்படுத்தின. உறுப்பு நாடுகளின் மீது அயலார் தாக்குதல் நடக்கும்போது, அவை பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கிக்கொள்ளும்.

3. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ராணுவத்திற்கு தேவையான ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை (எஸ்எப்டிஆர்) பயன்படுத்தி புதிய ஏவுகணையை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி நேற்று (05.03.2021) சோதித்தது.

வானிலுள்ள இலக்குகளை வானிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மூலமாக துல்லியமாகத் தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. இத்தொழில்நுட்பத்தில், திட எரிபொருளைக் கொண்ட குழாய் வடிவ இயந்திரமானது ஏவுகணையுடன் இணைக்கப்படும். இது ஏவுகணையை ஏவுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் திறன்மிக்கதாகும். இந்தத் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. அத்தொழில்நுட்பத்தின் சோதனை ஒடிஸாவின் பாலேசுவரம் மாவட்டத்திலுள்ள சண்டீபூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (05.03.2021) நடைபெற்றது. சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக டிஆா்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனா். ஏவுகணையை உந்தித் தள்ளும் இயந்திரமானது, எதிா்பாா்த்தபடி வெற்றிகரமாகச் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். வானிலுள்ள இலக்குகளை வானிலிருந்தே தாக்கி அழிக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு நிறுவனம் பயன்படுத்தவுள்ளது. வானிலுள்ள இலக்குகளைத் தரையிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது இந்தத் தொழில்நுட்பத்தைக் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே பயன்படுத்தி வருவதாக டிஆா்டிஓ தெரிவித்துள்ளது.

4. அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் கல்வியில் முதலிடம். நிர்வாகத்தில் கொச்சி டாப்.

இந்திய அளவில் அரசு நிர்வாக செயல்பாட்டில் கொச்சியும், கல்வியில் திருவனந்தபுரமும் முதலிடத்தை பிடித்துள்ளன. நாடு முழுவதும் 111 நகரங்களில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய ஆய்வின் முடிவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் (03.03.2021) அறிவித்தார். அதில், மக்களின் வாழ்க்கை தரத்தை பொறுத்தவரை பெங்களூரு சிறந்த நகரங்களில் முதலிடத்துக்கு தேர்வாகி உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புனே, அகமதாபாத், சென்னை மற்றும் சூரத் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் சிம்லா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து புவனேஸ்வர், சில்வாசா, காக்கிநாடா மற்றும் சேலம் போன்ற நகரங்கள் உள்ளன. மாநகராட்சிகளின் நிர்வாக பிரிவில் கொச்சி முதல் இடத்தை பிடித் துள்ளது. இதில் திருவனந்தபுரம் 40 வது இடத்தில் உள்ளது. அதே சமயம், கல்வியை பொறுத்தவரை திருவனந்தபுரம் நாட்டில் முதலிடத்திலும், கொச்சி 36 வது இடத்தில் உள்ளது.

5. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் சீன ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட 6.8% அதிகரிப்பு.

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 6.8 சதவீதம் அதிகமாகும். உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2வது இடத்தில் சீனா இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கு சீனா கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்கத்தில் ராணுவத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டில் ராணுவத்துக்கு 196.44 பில்லியன் டாலரை சீன அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், 2021ம் நிதியாண்டில் 209 பில்லியன் டாலர் நிதி (ரூ.15,22,878 கோடி) ராணுவத்துக்கு ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் சீன அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.8 சதவீதம் கூடுதலாகும். அமெரிக்கா ராணுவத்துக்கு 740.5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது சீனா ராணுவம் மூன்றில் ஒரு பங்கு நிதியை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது.

6. உலக மக்களுக்கு 7 முறை தரலாம் 93.1 கோடி டன் உணவு வீணடிப்பு: ஐநா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 2019ம் ஆண்டு தோராயமாக 93.1 கோடி டன் உணவு வீணடிக்கப்பட்டதாக உணவு கழிவு குறியீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஐநா. சூழல் திட்டம், கெனியாவின் தலைநகரான நைரோபியை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. ஐநா. சூழல் திட்டம், உணவு கழிவுகளை குறைக்க அரசுகளுடன் இணைந்து செயல்படும் வ்ராப் (WRAP) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட, உணவு கழிவு குறியீடு 2019 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உணவு கழிவுகள் பணக்கார, ஏழை நாடுகளில் பரவலாக ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது. 2019ம் ஆண்டில் 93.1 கோடி டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உலகில் உள்ள மக்களுக்கு 7 முறை உணவு அளித்திருக்கலாம். இதில், 61 சதவீதம் வீடுகள், 26 சதவீதம் ஓட்டல்கள், உணவு விடுதிகள், 13 சதவீதம் இதர சில்லறை வழிகளில் இருந்தும் வீணாக்கப்படுகிறது. உலகளவில் தயாரிக்கப்படும் உணவு உற்பத்தியில் 17 சதவீதம் வீணாகிறது. மேலும், சாப்பிட தயாராக இருக்கும் உணவுகளில் 11 சதவீதம் வீடுகள், 5 சதவீதம் ஓட்டல்கள், 2 சதவீதம் சில்லறை வழிகளிலும் வீணாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலக தனிநபர் வருவாயில் 121 கிலோ, வீட்டு தனிநபர் வருவாய் கணக்கில் 74 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6.8 கோடி டன்

இந்தியாவை பொருத்தவரையில், ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ உணவு பொருட்களை வீண் செய்கின்றனர். இது, அமெரிக்காவில் 59 கிலோ, சீனாவில் 64 கிலோவாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 6 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 163 கிலோ உணவுகள் வீணடிக்கப்பட்டு உள்ளன.

7. மியான்மர் ராணுவ சேனல்கள் முடக்கம்: யூடியூப் நிர்வாகம் அதிரடி.

மியான்மர் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 சேனல்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு எதிராக போராட்டக்காரர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யாங்கூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று முன் தினம் மட்டும் 38 பேர் பலியாகினர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மியான்மர் ராணுவ வீடியோ பக்கங்கள் யூடியூப் சேனலில் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யூடியூப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “எங்கள் விதிமுறை மற்றும் சட்டங்களுக்கு எதிராக இருந்த மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் (2020) நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.

8. 8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்.

நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், பசிபிக் தீவில் 8.1 ரிக்டேர் அளவில் மிக வலுவான பூகம்பம் நேற்று (04.03.2021) காலை ஏற்பட்டது. இதனால், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்திற்குள் அமைந்துள்ள நாடு நியூசிலாந்து. இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது. இதன் காரணமாக, நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜிஸ்போர்ன் டோகோமரு ஜலசந்தி பகுதிகளை மையமாக கொண்டு ரிக்டேர் அளவில் 7.4 மற்றும் 7.3 புள்ளிகளாக பதிவாகின. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் நியூசிலாந்தில் இருந்து 1000 கிமீ தொலைவில் அமைந்துள்ள பசிபிக் தீவான கெர்மடெக் தீவில் நேற்று காலை 8.1 ரிக்டேர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் முக்கிய நகரங்களான ஆக்லாந்து வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களில் உணரப்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளாகினர். பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான சுனாமி வரலாம் என தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் எச்சரித்தது. கடந்த 1976ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் மற்றும் பசிபிக் பெருங்கடலின் குறுக்குவெட்டில் 8.0 ரிக்டேர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பின் இப்பிராந்தியத்தில் வரலாற்றில் மிக வலுவான பூகம்பம் பதிவாகி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 6.3 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் பலியாகினர். தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகள் என்பதால் பெரிய அளவில் உயிர் சேதம், பாதிப்புகள் ஏற்படவில்லை.

9. ‘நிடி ஆயோக்’ மற்றும் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை சார்பில், பி.எல்.ஐ., திட்டம் பற்றிய கருத்தரங்கு:

”பி.எல்.ஐ., எனப்படும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை திட்டத்தால், நாட்டின் உற்பத்தி திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 38 லட்சம் கோடி ரூபாயாகஅதிகரிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீட்டிப்பு:

‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்த கருத்தரங்கில், பிரதமர் மோடி பேசியதாவது: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தான், பி.எல்.ஐ., திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பல துறைகளுக்கும், இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கச் சலுகை திட்டத்தின் வாயிலாக, உலகளவிலான போட்டிகளை, நிறுவனங்கள் சமாளிக்க முடியும். பி.எல்.ஐ., திட்டத்துக்காக, 2021 – 22ம் ஆண்டு பட்ஜெட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், நாட்டின் உற்பத்தி திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத் தொகை:

உற்பத்தி துறைகளில் இப்போது பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கையும், ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது. பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், சராசரியாக உற்பத்தியில், 5 சதவீதம், ஊக்கத் தொகையாக வழங்கப்படும். உற்பத்தி துறைக்கு இதற்கு முன் அளிக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டங்களுக்கும், இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊக்கத் தொகை திட்டத்துக்கும், அதிக வேறுபாடு உள்ளது. இப்போது, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்பாட்டின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மருந்து, மருத்துவ சேவை, மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட, 13 துறைகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடிக்கு ‘செராவீக்’ விருது (சா்வதேச எரிசக்தி & சுற்றுச்சூழல் தலைமை விருது)

‘செராவீக்’ மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, MARCH 1ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவங்கியது. நேற்று வரை நடந்த இந்த மாநாட்டில், ‘செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்’ எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின், பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலைக் கலப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கழிவுகள், வேளாண் கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக 5,000 ஆலைகள் அமைக்கப்படவுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வதை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. அவற்றின் காரணமாக, பாரீஸ் பருவநிலை ஒப்பந்த இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே அடைவதை நோக்கி இந்தியா விரைந்து முன்னேறி வருகிறது என்றாா் பிரதமா் மோடி. பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள், இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புதிய புத்தகம்

மோடி பிரதமராக பதவியேற்ற பின், மாதந்தோறும், ‘மன் கீ பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆலோசனை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரைகளுடன், தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் அதற்கான தீர்வுகளை, எளிய நடையில், ஆங்கிலத்தில், ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி புத்தகமாக எழுதினார். இந்நிலையில், தற்போது இந்த புத்தகத்தில் மேலும் சிலவிஷயங்களை பிரதமர் சேர்த்து உள்ளார். பெற்றோருக்கான மந்திரங்கள், மன நலம், தொழில்நுட்பத்தின் பங்கு, நேர மேலாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி, பிரதமர் எழுதியுள்ளார்.எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் புதிய பதிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ்’ பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகம், 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன்பிரதமருடன் பேச்சு

ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் பிரதமர் ஸ்டீபன் லேபென்னுடன், பிரதமர் மோடி நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது: இந்தியாவும், ஸ்வீடனும், பல துறைகளில் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கழிவுகள் மேலாண்மை, ‘ஸ்மார்ட் சிட்டி’, நீா் சுத்திகரிப்பு, திடக் கழிவு மேலாண்மை, பொருளாதாரம், மின்சார வாகனம் உட்பட பல துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது; இது மேலும் வலுப்பட வேண்டும். புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, ஆராய்ச்சி ஆகிய துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு, நட்பை வலுப்படுத்த வேண்டும். ஜி20 நாடுகளிலேயே இந்தியாதான் நிா்ணயித்த இலக்குகளை அடைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை இந்தியா 162 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

10. 50 ஆவது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், மார்ச்சு 4ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச்சு 4 ஆம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

11. பாடகி பி.சுசீலாவுக்கு இங்கிலாந்தில் கவுரவம்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, இங்கிலாந்தில் விருது வழங்கப்பட உள்ளது. ‘இங்கிலாந்து மகளிர் நெட்வொர்க்’ அமைப்பை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்தில் சாதனை படைத்த பெண்களுக்கு, பாராட்டு விழா நடத்துவர். இவ்விழா அங்குள்ள பார்லிமென்ட் கட்டடத்தில், உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும். இந்தாண்டு, இங்கிலாந்துக்கு வெளியே, சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க உள்ளனர். கொரோனாவால் இவ்விழா, காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது. இதில், பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான, இசை அமைப்பாளர் ரெஹைனா கவுரவிக்கப்பட உள்ளனர்.

12. ரோமில் நடக்கும் சர்வதேச மல்யுத்த போட்டிக்கான ‘கிரிகோ – ரோமன்’ எடைப்பிரிவில் இந்திய வீரர்களான நீரஜ் (63 கி.கி), நவீன் (130 கி.கி) வெண்கலம் கைப்பற்றினர்.

13. கச்சா எண்ணெய் உற்பத்தியை ஏப்ரல் மாதம் வரை அதிகரிக்க வேண்டாமென்று பெட்ரொலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) முடிவெடுத்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்தியா தொடா்ந்து கோரி வந்த நிலையில், அக்கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் உலக நாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் தேவை குறைந்தது. அதனால், அதன் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது. நாடுகளில் இயல்பு நிலை படிப்படியாகத் திரும்பத் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்தது. எனினும், கரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய வேண்டாம் என்று ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவெடுத்தன. அதனால், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்து காணப்பட்டதால் அதன் விலை சந்தையில் அதிகரித்தது. மத்திய அரசு, கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று கோரி வந்தது. இத்தகைய சூழலில், கச்சா எண்ணெய் உற்பத்திக் கொள்கையை நிா்ணயிப்பது தொடா்பாக ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு நாடுகளின் இணையவழிக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், ஏப்ரல் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்று அந்நாடுகள் முடிவெடுத்தன. கச்சா எண்ணெய் தேவை இயல்பு நிலைக்குத் திரும்பாததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்துக்குப் பிறகு சவூதி அரேபிய எரிசக்தித் துறை அமைச்சா் அப்துல்லாசிஸ் பின் சல்மான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் கச்சா எண்ணெயை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி இந்தியா சேமித்து வைத்தது. தற்போது அதை இந்தியா உபயோகித்துக் கொள்ளலாம்’ என்றாா்.

14. சுதந்திர இந்தியாவின் 75-ஆவது கொண்டாட்டம்: பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைக் குழு அமைப்பு.

“சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை திட்டமிடுவதற்காக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 259 உறுப்பினா்களுடன் தேசிய அளவில் ஓா் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரதீபா பாட்டீல், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், 28 மாநிலங்களின் முதல்வா்கள், பாஜக மூத்த தலைவா் அத்வானி, பெரும்பாலான மத்திய அமைச்சா்கள், சில மாநில ஆளுநா்கள் இடம்பெற்றுள்ளனா்.பிரபல பாடகி லதா மங்கேஷ்கா் போன்ற கலைஞா்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞா் அமா்த்தியா சென் ஆகியோரும் உயா்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்களும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டு, வரும் 2022-இல் கொண்டாடப்படுகிறது. இதை வரும் மாா்ச் 12-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை 75 வாரங்களுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் கொண்டாடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தையொட்டி நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளையும் விதிமுறைகளையும் பிரதமா் மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு வகுத்து அளிக்கும். இந்தக் குழுவின் முதல் கூட்டம், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் 2022-ஆம் ஆண்டில் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறவிருந்த நிலையில், 75-ஆவது சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், அதை 2022-ஆம் ஆண்டுக்கு மாற்றும்படி இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாடு, ஆண்டுதோறும் அந்தந்த உறுப்பு நாடுகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

15. இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ்

16. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை

3-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட இந்திய வீரரான அரியானாவை சேர்ந்த 24 வயது நீரஜ் சோப்ரா தனது 5-வது முயற்சியில் 88.07 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். இதற்கு முன்பு கடந்த 2018ல் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதலில் 88.06 மீ., துாரம் எறிந்திருந்தது சாதனையாக இருந்தது. அந்த தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் ஒலிம்பிக் தகுதி இலக்கை (85 மீட்டர்) எட்டிய நீரஜ் சோப்ரா கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் மற்றொரு இந்திய வீரரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷிவ்பால் சிங் (81.63 மீட்டர்) 2-வது இடமும், மற்றொரு அரியானா வீரர் சஹில் சில்வால் (80.65 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர்.

17. இராக்கிற்கு செல்லும் முதல் போப்பாண்டவர் போப் பிரான்சிஸ்.

2012இல் போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, போப் பிரான்சிஸ் மேற்கொள்ளும் மிகவும் ஆபத்தான வெளிநாட்டு பயணம் இது. வெள்ளிக்கிழமையன்று (05.03.2021) இந்த முக்கியமான பயணத்தை மேற்கொண்ட போப் பிரான்சிஸ் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார், ஈராக் இவ்வளவு காலமாக துன்பப்பட்டதால், அங்கு “அடையாள” பயணத்தை மேற்கொள்வது கடமை என்று உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாக்தாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் போப் பிரான்சிஸை ஈராக் அதிபர் பர்ஹாம் சலே (Barham Saleh) வரவேற்றார். 84 வயதான போப்பாண்டவரின் பாதுகாப்புப் பணியில், ஆயிரக்கணக்கான கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை ஈராக் நியமித்துள்ளது. ராக்கெட் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நிகழலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இராக்கில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்சிஸ், விமானம், ஹெலிகாப்டர் மற்றும் கவச வாகனம் மூலம் முக்கிய நான்கு நகரங்களுக்கு செல்வார். பாக்தாத் தேவாலயத்திற்கு சென்று அங்கு பிரார்தனை செய்வார். ஈராக்கின் உயர்நிலை ஷியா முஸ்லீம் மதகுருவை நஜாப் நகரில் சந்தித்து கலந்துரையாடிய பிறகு, போப் பிரான்சிஸ் மொசூல் நகருக்குச் செல்வார். மொசூல் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக இருந்ததும், அங்குள்ள தேவாலயங்களும் பிற கட்டடங்களும் மோதலின் வடுக்களைத் சுமந்துக் கொண்டு போரின் வலிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ரன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

1. உலகெங்கும் மார்ச்-8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது – மார்ச் 8-ஐ ஏன் கொண்டாடுகிறோம்?

உலகெங்கும் மார்ச்-8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப்படுகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், பொதுவெளிகளில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள், இன்றைக்கு போராடிப் பெற்று வருகிறார்கள்.

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவதற்குப் பின்னே, மிக நீண்ட பெண் எழுச்சிக்கான வரலாறு இருக்கிறது. கி.பி. 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி ஏந்தினர். இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும், 16 மணி நேர வேலையைக் குறைக்க வேண்டும், வாக்குரிமை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போராட்டத்தில்இறங்கினர். ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப் போராட்டம் பரவியது.

பெண்கள் வாரிசுகளைப் பெற்றெ டுப்பற்காகவும், வீட்டு வேலைக் காகவும் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த காலமாக அன்றைய காலமிருந்தது. பிறகு, பெண்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. 1907-க்குப் பிறகு போராட்டம் தீவிரமானது. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், 1910-ம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அந்த மாநாட்டில அனைத்து நாட்டிலுள்ள பெண்களும் சேர்ந்து மகளிர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார். அத்துடன் பெண்கள்சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராட வேண்டுமென்றும் குரல் கொடுத்தனர்.

பிறகு, ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் 8-ஐ உலக மகளிர் தினமாக அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ல் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற் றப்பட்டது. உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்தது. அதற்கு முன்னோடியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள் என்றாலும் பெண்களே பிரதான பங்கு வகித்தனர். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னர் தனது அரியணையை விட்டிறங்கக் காரணமாக அமைந்தது. அதை நினைவுகூரும் விதமாக மார்ச் 8 தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலக அளவில், உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் பாதிப் பேர் மட்டுமே, வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஐ.நா. உழைப்புக்கான உடல் தகுதி, திறன், அறிவுக்கூர்மை இருந்தும் குடும்ப சூழல்களால் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இப்போது உழைக்கும் பெண்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதற்கான போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2. டெல்லி பள்ளிகளுக்கு தனி கல்வி வாரியம்.

டில்லிக்கு என, தனி, பள்ளி கல்வி வாரியம் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. (டெல்லியில் அமைந்துள்ள 2,700 பள்ளிகளுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.)

டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு, 1,000 க்கும் அதிகமான அரசு பள்ளிகளும், 1,700 க்கும் அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. டில்லிக்கு என, தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்க, முதல்வர் கெஜ்ரிவால் விரும்பினார்.

இந்நிலையில், டில்லி அமைச்சரவை கூட்டம், நடந்தது. இதில், டில்லிக்கு, தனி கல்வி வாரியத்தை, வரும் கல்வியாண்டு முதல் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில், வரும் கல்வியாண்டு முதல், தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும். இதில், 2,025 பள்ளிகள் இணைக்கப்படும். தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

3. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தேசிய அவையில் 342 இடங்களும் செனட் அவையில் 104 இடங்களும் உள்ளன. கடந்த 3-ம் தேதி செனட் அவையின் 37 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றின.

இதனால் ஆளும் கூட்டணியின் பலம் 47 ஆகக் குறைந்தது. குறிப்பாக, நிதியமைச்சர்அப்துல் ஹபீஸ் ஷேக் செனட் தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து தனது அரசின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இம்ரான் கான் அறிவித்தார்.

இதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அவையின் 342 இடங்களில் ஓரிடம் காலியாக உள்ளது. மீதமுள்ள 341 உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 171 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவாக 178 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் பிடிஐ கட்சிக்கு அவையில் 156 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர். எதிர்க்கட்சி கூட்டணி வாக் கெடுப்பை புறக்கணித்தது.

4. உலகளவில் கிடைக்க கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது: இந்திய, தென் ஆப்பிரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

கரோனா பரவல் தடுப்பு சார்ந்த கண்டுபிடிப்புகளின் காப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என உலக வர்த்தக மையத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பத்தை ஏற்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நான்கு முதன்மை குடியரசு கட்சி செனட்டர்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து அதிபர் ஜோ பைடனுக்கு செனட்டர்கள் எழுதியகடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்க வேண்டாம் எனவும், அதன்மூலம் அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஊக்குவிக்கலாம் எனவும் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் உலக வர்த்தக மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.அவர்களுடைய கோரிக்கையைஏற்று கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் திடீரென்று அதிகரித்துவிடுவார்கள்.

மேலும் அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை ரத்து செய்வதன்மூலம் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன. ஆனால் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம் மட்டுப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், கரோனா தொடர்ந்து உருமாற்றம் பெற்றுவரும் நிலையிலும் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்பு களும் தொடர்ந்து செயல்படுத் தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காப்புரிமை ரத்து செய்யப்பட்டு யாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உண்டாக்கினால் நோய் காக்கும் தடுப்பூசிகளின் தரம் குறித்த அச்சமும் உண்டாகும். கரோனா பரவலைத் தடுப்பதில் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் உதவிகளை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. அப்படியிருக்க அமெரிக்க கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்வதை ஒப்புக்கொள்வது கரோனா பரவலைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கே எதிரானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

5. ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் – சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்.

ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌

சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்றதால், ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

இந்த நிலையில் ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

தனது முடிவுகளில் உலக நாடுகள் தலையிடவேண்டாம் என்று சீனப் பிரதமர் லீ கச்சியாங் (Li Keqiang) எச்சரித்துள்ளார்.

சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இதுதொடர்பான வரைவு திட்டத்தில், ‘தேசபக்தா்கள்’ மட்டுமே ஹாங்காங் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வது; ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகியைத் தோ்ந்தெடுக்கும் சீன ஆதரவு தேர்தல் குழு உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது; அந்தக் குழுவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் சீன அரசின் இந்த நடவடிக்கை ஹாங்காங் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல் என கூறி அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

6. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு: கவாஸ்கருக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார்.

71 வயதான கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா

7. ஹிமாச்சல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள, சோனல் மருத்துவமனையில், திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு, நேற்று (06.03.2021) கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

8. செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக பெர்செவரன்ஸ் என்ற ரோபோ ரோவரை அனுப்பியது.

இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்வதுடன், அங்குள்ள பாறைகளை துளையிட்டு அதன் துகள்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கிய பங்காற்றும்.

இந்த ரோவர் கடந்த மாதம் (பிப்ரவரி) 18-ந்தேதி செவ்வாயில் ஜெசிரோகிரேட்டர் என்ற பள்ளத்தில் தரை இறங்கியது. அது தரை இறங்கும் தருணத்தை காட்டும் வீடியோ வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், நாசாவின் ரோவர் தனது முதல் சோதனை ஓட்டத்தை செவ்வாயில் 4-ந்தேதியன்று வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. செவ்வாய் நிலப்பரப்பில் 6.5 மீட்டர் தொலைவுக்கு இந்த ரோவர் சென்று இருக்கிறது.

இந்த சோதனை ஓட்டம் 33 நிமிடங்களுக்கு நீடித்தது என நாசா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ரோவர், தனது ஆய்வுப்பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக இது ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி நாசா கூறுகையில், “ரோவரில் உள்ள ஒவ்வொரு அமைப்பும், அதன் துணை அமைப்பும், உபகரணங்களும் செயல்படுவதை அளவீடு செய்வதற்கான வாய்ப்பாக இந்த சோதனை ஓட்டம் அமைந்துள்ளது” என கூறியது.

9. மிசோரம் மாநில அரசுக்கு மியான்மர் கோரிக்கை

மியான்மரிலிருந்து அகதிகளாக ஓடி வந்துள்ள எட்டு போலீஸ்காரர்களை ஒப்படைக்கும்படி, மிசோரம் மாநில அரசுக்கு, மியான்மரின் ராணுவ அரசு கடிதம் எழுதியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதை எதிர்த்து, மியான்மரில் மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிசோரமுடன், 510 கி.மீ., எல்லையை, மியான்மர் பகிர்ந்து கொண்டுள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மியான்மரில் இருந்த மக்கள், அகதிகளாக பல நாடுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

10. ஓட்டளிக்க தகுதியான 11 ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து, ஓட்டு போடலாம்’ என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, சட்டசபை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க வரும்போது, தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், ஓட்டு அளிக்க முடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

1. ஆதார்

2. தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை

3. வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம்

4. தொழிலாளர் துறை வழங்கியுள்ள, சுகாதார காப்பீட்டு திட்டம்

5. ஓட்டுனர் உரிமம்

6. பான் கார்டு

7. தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டை

8. இந்திய பாஸ்போர்ட்

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய, மாநில அரசுகள் வினியோகித்துள்ள அடையாள அட்டை

11. எம்.பி., – எம்.எல்.ஏ., அடையாள அட்டை

இந்த 11 அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம். இவ்விபரங்களை, வாக்காளர்கள் அறிந்து கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

11. “இராக்கில் ஷியா பிரிவினருக்கான தலைமை மதகுரு அலி அல்-சிஸ்டானியை போப் பிரான்சிஸ் சனிக்கிழமை (05.03.2021) சந்தித்துப் பேசினாா்.

அந்தச் சந்திப்பின்போது, நாட்டில் நீண்டகாலமாக வசித்து வரும் கிறிஸ்தவா்களுடன் பெரும்பான்மை முஸ்லிம்கள் இணக்கமாக வாழ வேண்டியதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினா். இதுகுறித்து ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஷியா பிரிவினருக்கான தலைமை மதகுரு அலி அல்-சிஸ்டானியை (90) நஜஃப் நகா், உா் சமவெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் போப் பிரான்சிஸ் சனிக்கிழமை சந்தித்தாா். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்புக்கு பல மாதங்களாக திட்டம் தீட்டப்பட்டு வந்தது. அல்-சிஸ்டானியின் இல்லத்தை போப் பிரான்சிஸ் நெருங்கியபோது, சமாதானத்தின் அடையாளமாக வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 40 நிமிஷங்களுக்கு நீடித்த அந்தச் சந்திப்பின்போது, இராக்கிய கிறிஸ்தவா்களைப் பாதுகாப்பதில் மத விவாகரங்கள் தொடா்பான அதிகாரிகளுக்கு முக்கியப் பங்குள்ளதாக அல்-சிஸ்டானி தெரிவித்தாா்.

நாட்டில் கிறிஸ்தவா்கள் பாதுகாப்பாகவும் முஸ்லிம்களுக்கு இணையான உரிமைகளுடனும் வசிக்க வேண்டிய அவசியத்தை அவா் வலியுறுத்தினாா். அப்போது பேசிய போப் பிரான்சிஸ், இராக்கில் மிகவும் சிறுபான்மையான, நீண்டகாலமாக துன்புறுத்தப்பட்டு வந்த கிறிஸ்தவா்களுக்கு ஆதவாக குரல் கொடுத்து வருவதற்காக அல்-சிஸ்டானிக்கு நன்றி தெரிவித்தாா் என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு இடையேயும், வெள்ளிக்கிழமை முதல் இராக்கில் போப் பிரான்சிஸ் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

12. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது . கடந்த 112 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் 1909 – இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதேபோன்று ஆட்டமிழந்துள்ளது .

இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதத்தையும் விளாசினார் இந்திய வீரர் அஸ்வின். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 30 – க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதமும் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அஸ்வின் வசமாகியுள்ளது. மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் 30 அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை இருமுறை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அஸ்வின் வசமாகியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அக்ஸர் படேல் 27 விக்கெட்டுகளை வீழ்த் தியதன் மூலம் அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை திலீப் தோஷியுடன் பகிர்ந்து கொண்டார். திலீப் தோஷி 1979 – இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டியின் 2 – ஆவது இன்னிங்ஸில் 5 விக் கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 30 – ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின் , இதன்மூலம் ஓர் இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த் தியவர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் 6 – ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அஸ்வின்.

8 – ஆவது முறையாக தொடர் நாயகன் விருது. இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் போட்டியில் அவர் தொடர் நாயகன் விருதை வெல்வது 8 – ஆவது முறையாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்றவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி ஆகியோருடன் 3 – ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளீதரனும் (11 முறை), 2 – ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸும் (9 முறை) உள்ளனர்.

13. உத்தரகண்ட் பேரிடருக்கு கனமழையும் வெப்பநிலை உயா்வும் காரணமாக இருக்கலாம்.

உத்தரகண்டில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்குக்கு கனமழையும் சராசரி வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் பாயும் ரிஷிகங்கா, தௌலிகங்கா நதிகளில் கடந்த மாதம் (பிப்ரவரி) 7- ஆம் தேதி திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பனிப்பாறைகள் சரிந்ததன் காரணமாக இந்தப் பேரிடா் நிகழ்ந்ததாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

இத்தகைய சூழலில், பனிப்பாறைகள் சரிந்ததற்கான காரணம் தொடா்பாக சா்வதேச மலைப்பகுதி மேம்பாட்டு மையத்தைச் சோ்ந்த நிபுணா்கள் ஆய்வு நடத்தி வந்தனா். அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பேரிடா் நிகழ்வதற்கு முன்பாக பனிச்சிகரத்தின் உச்சியில் உள்ள பாறையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் பனிப்பாறை சரிந்தது. பனிப்பாறை வேகமாக சரிந்ததன் காரணமாகத் தோன்றிய வெப்பத்தால் பனி உருகி நீரானது. நீரும் மண்துகள்களும் சோ்ந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பனிப்பாறையில் நீண்ட நாள்களாக விரிசல் ஏற்பட்டு வந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 முதல் 6-ஆம் தேதி வரை உத்தரகண்டில் கனமழை பெய்தது. சமோலி பகுதி கடல்மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் இருப்பதால், அங்கு அதீத பனிப்பொழிவு இருந்திருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில், பனிப்பாறை சரிந்ததால் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம்.உத்தரகண்டில் சராசரி வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சமோலி பகுதியின் சராசரி வெப்பநிலை கடந்த 1980 முதல் 2018-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 0.032 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.உத்தரகண்டில் நடப்பாண்டு ஜனவரி, வெப்பநிலை மிகுந்ததாக இருந்தது. கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஜனவரி மாதம் காணப்படாத வெப்பநிலை, நடப்பாண்டு ஜனவரியில் பதிவானது. இதுவும் பேரிடருக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. பிராந்திய மொழிகளில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல். முக்கியத் தீர்ப்புகளை சில உயர் நீதிமன்றங்கள் பிராந்திய அல்லது உள்ளூர் மொழிகளில் வழங்கி வருவதை வரவேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இதேபோன்று மற்ற உயர்நீதிமன்றங்களும் உள்ளூர் மொழிகளில் தீர்ப்புகளை மொழி பெயர்த்து வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அகில இந்திய சட்ட கல்வி இயக்குநர்கள் மாநாடு மத்திய பிரதேசம் மாநிலத்தில் சனிக்கிழமை (05.03.2021) தொடங்கியது . இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை: பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் 9 பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருவது வரவேற்கத்தக்கது . சில உயர்நீதிமன்றங்களும் முக்கிய தீர்ப்புகளை பிராந்திய அல்லது உள்ளூர் மொழிகளில் வெளியிட்டு வருகின்றன. இதேபோல், பிற உயர்நீதிமன்றங்களும் முக்கிய தீர்ப்புகளை உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்த்து வழங்க வேண்டியது அவசியம், என்றார்.

15. சிஐஐ தலைவராக சி.கே.ரங்கநாதன் தேர்வு.

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் பிராந்தியத் தலைவராக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சி.கே.ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரான சுதித்ரா கே.எல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1. The traditional ‘Lantern Festival’, which was making news recently, is celebrated in which country?

A) Bangladesh

B) China

C) Japan

D) South Korea

  • China celebrates its traditional Lantern festival, on the 15th day of the first Chinese lunar month. The festival also marks the final day of the Chinese New Year or ‘Spring Festival’ period. This year, the country entered the ‘Year of the Ox’ on February 12, 2021. This Festival also falls the first full moon night in the Chinese calendar.

2. The ‘Technology and Innovation Report 2021’ has been released by which organisation?

A) FAO

B) UNCTAD

C) WTO

D) IMF

  • The United Nations Conference on Trade and Development (UNCTAD) has recently released a report titled ‘Technology and Innovation Report 2021’. The UNCTAD Technology and Innovation Report 2021 examines whether modern technologies widen the existing inequalities and create more inequalities. The report shows that with a present USD 350 billion market, the technologies could grow to USD 3.2 trillion by 2025.

3. Which Ministry has finalised the list of products for One District One Focus Product?

A) Ministry of Home Affairs

B) Ministry of Commerce and Industries

C) Ministry of Agriculture

D) Ministry of Labour and Employment

  • The Union Ministry of Agriculture and Farmers Welfare, has finalised the list of products to be covered under One District One Focus Product (ODOFP). This list has been prepared in consultation with the Union Ministry of Food Processing and Industries for 728 districts across the country. The identified products belong to agricultural, horticultural, animal, poultry, milk, fisheries and aquaculture, marine sectors.

4. Which bird has been spotted in Indonesia after 170 years?

A) Black–browed Babbler

B) White Sparrow

C) Forest Owlet

D) Bengal Florican

  • Black–browed Babbler, which was considered to be extinct, has reappeared after 170 years.
  • The bird has been spotted in Borneo of Indonesia. The bird was first described by scientists around 1848 and it was then considered to be extinct. According to Global Wildlife Conservation, two men accidentally photographed the bird in Borneo, Indonesia.

5. What is the new name of the merged entity of the Lok Sabha and Rajya Sabha channels?

A) India TV

B) Sansad Channel

C) LRS TV

D) RS TV

  • Indian Parliament has integrated its two TV channels for the Lok Sabha and the Rajya Sabha to create a new entity named Sansad TV. This new platform will continue to live telecast house proceedings and with news and current affairs programme in Hindi and English. Former textiles secretary Ravi Kapoor has been appointed as the CEO of the new channel.

6. Which leader is set to receive CERAWeek global energy and environment leadership award?

A) Narendra Modi

B) Ramnath Govind

C) Mamta Banerjee

D) Nirmala Sitharaman

  • The Prime Minister of India Narendra Modi has been conferred with the CERAWeek global energy and environment leadership award. He is set to be presented the award at the CERAWeek international energy conference, which is an annual conference organized by the information and insights company IHS Markit in Houston, Texas.

7. How many satellites were launched by the ISRO using its PSLV–C51 rocket?

A) 18

B) 19

C) 20

D) 21

  • The Polar Satellite Launch Vehicle–C51 (PSLV–C51) rocket of India successfully lifted off from Sriharikota launch pad. It was carrying 19 satellites from Brazil, USA and India with the Brazil’s 637–kilogram optical earth observation satellite Amazonia 1, as its primary passenger.

8. National Science Day is being observed in India, to commemorate the discovery of which scientist?

A) Jagdish Chandra Bose

B) C V Raman

C) Srinivasa Ramanujan

D) Homi J Bhabha

  • National Science Day is being observed in India every year on 28th of February to commemorate the discovery of the ‘Raman Effect’. On the same day, CV Raman announced the discovery of the ‘Raman Effect’ and he was awarded the Nobel Prize in 1930.
  • The theme for National Science Day 2021 is ‘Future of Science and Technology and Innovation: Impact on Education Skills and Work.

9. Pramod Chandra Mody is the Chairman of which organisation?

A) SEBI

B) CBIC

C) CBDT

D) IRDAI

  • The Appointments Committee of the Cabinet has extended the re–appointment of Pramod Chandra Mody as Chairman of the Central Board of Direct Taxes (CBDT). PC Mody, a 1982–batch Indian Revenue Service officer, was appointed as the CBDT Chairman in February 2019. His tenure was extended in August last year for six months.

10. India has donated a ‘Digital cobalt therapy machine’ developed by BARC, to which country?

A) Mauritius

B) Madagascar

C) Myanmar

D) Maldives

  • India has donated an advanced ‘Digital cobalt therapy machine’ for cancer treatment, developed by the Bhabha Atomic Research Centre, to the island nation of Madagascar.
  • ‘Bhabhatron–II’, the telecobalt machine was recently inaugurated in Antananarivo, capital of Madagascar by the country’s President Andry Rajoelina. It is one of the few countries that have received the Bhabhatron–II radio therapy machine from India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!