6th & 7th September 2020 Current Affairs in Tamil & English

6th & 7th September 2020 Current Affairs in Tamil & English

6th & 7th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

6th & 7th September Tamil Current Affairs 2020

6th & 7th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.நடப்பாண்டின் (2020) எந்த மாதத்தில், 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளது?

அ. ஜூலை

ஆ. ஆகஸ்ட்

இ. ஜூன்

ஈ. மே

 • இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அண்மைய அறிக்கையின்படி, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு (2020) ஆகஸ்டில், இந்தியாவில் அதிக மழை பொழிந்துள்ளது. ஆகஸ்டில் பதிவான மழைப்பொழிவின் அளவு 296.2 மில்லிமீட்டர் ஆகும்; இது, சராசரி மழைப்பொழிவின் அளவான 237.2 மில்லிமீட்டரைவிட 25 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.

2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்கம்

ஈ. குஜராத்

 • பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண்மைப்பல்கலையின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்தப்பல்கலைக்கழகம், புந்தல்காண்ட் பிராந்தியத்தின் முதன்மை நிறுவனமாக ஜான்சியில் அமைந்துள்ளது. இந்தப்பல்கலை, 2014-15’இல் தனது முதலாவது கல்வி அமர்வைத் தொடங்கியது. வேளாண், தோட்டக்கலை மற்றும் வனப்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை அது வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடம் உருவாகி வருவதால், தற்போது அது, ஜான்சியில் உள்ள இந்திய புல்வெளி & தீவன ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவருகிறது.

3.இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் 20 மீ., நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டறிந்த ஆயுதப்படை எது?

அ. எல்லைப் பாதுகாப்புப் படை

ஆ. மத்திய சேமக்காவல் படை

இ. ஷஷஸ்திர சீமா பால்

ஈ. மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படை

 • ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதி முழுவதும், பாகிஸ்தானிலிருந்து உருவான ஓர் எல்லைதாண்டிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படை கண்டறிந்துள்ளது. இச்சுரங்கப்பாதையை கண்டறிந்த பிறகு, இதுபோன்ற வேறு ஏதேனும் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, BSF, ஒரு பெரும் நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைக்கான நுழைவு வாயில், பன்னாட்டு எல்லையிலிருந்து 170 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

4.எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ. லடாக்

இ. பீகார்

ஈ. கேரளா

 • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூங்கில் தொகுதிகளைத் தவிர, ஒரு மூங்கில் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஒரு மூங்கில் பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் உள்ள கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்படும்.

5.கீழ்க்காணும் எந்த நாட்டோடு, இந்தியா, மெய்நிகராக ஒரு பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தையை நடத்தியது?

அ. தென்னாப்பிரிக்கா

ஆ. இரஷ்யா

இ. சிங்கப்பூர்

ஈ. ஜப்பான்

 • பதினான்காவது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்புக்கொள்கை உரையாடல், காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலுக்கு, பாதுகாப்புச் செயலாளர் Dr. அஜய் குமார் தலைமைதாங்கினர்.
 • இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு சிக்கல்கள்குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர். அப்போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இருதரப்பினரும் உறுதியளித்தனர். இந்த உரையாடல் -களின் முடிவில், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது.

6.ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஹாலோ’ என்ற வாயுவின் அபரிமிதமான உறைகளைக் கண்டறிந்த தொலைநோக்கி எது?

அ. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

ஆ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

இ. சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்

ஈ. கெப்லர் தொலைநோக்கி

 • NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஒளிவட்டம்’ எனப்படும் வாயு உறைகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயுத்தேக்கத்தில், பேரடைக்குள், எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த, கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ‘ஹாலோ’, பரவலான பிளாஸ்மா பேரடையிலிருந்து 1.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரவியுள்ளது. இது பால்வீதி பேரடையில் பாதியாகும்.

7.பாரத வங்கியின் தலைவர் பதவிக்கு, வங்கி வாரிய பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. அரிஜித் பாசு

ஆ. அஸ்வானி பாட்டியா

இ. பூர்ணிமா குப்தா

ஈ. தினேஷ் குமார் காரா

 • பாரத வங்கியின் (SBI) அடுத்த தலைவராக, தினேஷ்குமார் காராவை, வங்கி வாரிய பணியகம் (BBB) பரிந்துரைத்துள்ளது. பாரத வங்கியை அதன் 5 இணை வங்கிகளுடனும், பாரத மகிளா வங்கியுடனும் இணைப்பதில் முக்கியப்பங்கு வகித்தவராவார் தினேஷ் குமார் காரா. தற்போது, அவர் SBI நிர்வாக இயக்குநராக உள்ளார். அதற்கு முன்னர், SBI நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.

8.சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவிக்கவுள்ள நிறுவனம் எது?

அ. பாரத வங்கி

ஆ. இந்திய தங்கம்/வைரம்/ வெள்ளி சங்கம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

 • இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் சவரன் தங்கப்பத்திரம் வழங்கப்படுகிறது. தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது. இந்த 6ஆம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு `5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு 31 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 4 அன்று முடிவடைகிறது.

9.இந்தியா முழுவதும், ‘தெலுங்கு மொழி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 29

ஆ. ஆகஸ்ட் 30

இ. செப்டம்பர் 01

ஈ. செப்டம்பர் 02

 • ‘தெலுங்கு பாஷா தினோத்ஸவம்’ என்றும் அழைக்கப்படும் தெலுங்கு மொழி நாள், நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.29 அன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட்ட இராமமூர்த்தியின் பிறந்தநாளை, ஆந்திர மாநிலம், இந்நாளின்போது நினைவுகூர்கிறது. பண்பாட்டுத் துறையானது தெலுங்கு மொழியை வளர்ப்பதற்கான பல்வேறு நிகழ்வுகளை இந்நாளின்போது ஏற்பாடு செய்கிறது. தென்னாப்பிரிக்க தெலுங்கு சமூகம் ஏற்பாடு செய்த, ‘எங்கள் மொழி, எங்கள் சமூகம் மற்றும் நமது கலாசாரம்’ என்ற நிகழ்வில் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா உரையாற்றினார்.

10.இலண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் யார்?

அ. நூர் இனாயத் ஹான்

ஆ. அடா லவ்லாக்

இ. ரோசாலிண்ட் பிராங்க்ளின்

ஈ. டேம் மெளட் மெக்கார்த்தி

 • இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கான உளவாளியாக பணியாற்றிய நூர் இனாயத் கான், லண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப்பெற்றார். ஒரு காலத்தில் நூர் இனாயத் கான் வாழ்ந்த, இலண்டனில் உள்ள வீட்டிற்கு ஒரு தனித்துவமான நீலப் பட்டயம் கிடைத்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான இவர், ‘மேடலின்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்கியாவார்.

1. Which month of this year has recorded the highest rainfall since 1976?

[A] July

[B] August

[C] June

[D] May

 • As per the recent statement from the India Meteorological Department (IMD), India has received highest rainfall in August this year since 1976. The rainfall recorded in August is 296.2 millimetres, which is around 25 percent more than the average rainfall (237.2 millimeters). IMD also forecasted that the monsoon may slow down in September.

2. Rani Lakshmi Bai Central Agricultural University, that was seen in news recently, is located in which state?

[A] Uttar Pradesh

[B] Assam

[C] West Bengal

[D] Gujarat

 • Prime Minister Narendra Modi inaugurated the College and Administration Buildings of Rani Lakshmi Bai Central Agricultural University virtually. The RLB Central Agriculture University is located in Jhansi, Uttar Pradesh. While the first academic course was started in the year 2014–15, it is operating from the Indian Grassland and Fodder Research Institute, Jhansi.

3. Which Armed Force detected a 20–meter–long tunnel along the Indo–Pakistan border?

[A] Border Security Force

[B] Central Reserve Police Force

[C] Sashastra Seema Bal

[D] Central Industrial Security Force

 • The Border Security Force (BSF) has detected a trans–border tunnel originating from Pakistan across the Samba sector of Jammu and Kashmir. After the force has discovered the tunnel, BSF is set to launch a major operation to check whether any other such tunnel has been developed. The place of opening of the tunnel is around 170 meters from the international border.

4. In which state / UT, three Mega Bamboo Clusters are proposed to be set up?

[A] Jammu & Kashmir

[B] Ladakh

[C] Bihar

[D] Kerala

 • Three mega Bamboo clusters has been proposed to be set up in the Union Territtory of Jammu and Kashmir. In addition to the bamboo cluster, a bamboo technology park and a bamboo training centre will also be set up. These institutions would be set up by the Cane and Bamboo Technology Centre (CBTC) under Ministry of Development of North Eastern Region (DoNER).

5. A Defence Policy Dialogue was conducted virtually by India with which country?

[A] South Africa

[B] Russia

[C] Singapore

[D] Japan

 • The India–Singapore Defence Policy Dialogue (DPD) was conducted virtually where the two parties reviewed their bilateral defence ties in a comprehensive manner. The two countries resolved to enhance their cooperation in defence and security with special focus on maritime security. The meeting was co–chaired by Defence Secretary Dr Ajay Kumar.
 • During the event, the Implementing Arrangement on “Humanitarian Assistance and Disaster Relief” (HADR) was signed between the two countries.

6. Which Telescope detected the immense envelope of gas called ‘Halo’ which surrounds the Andromeda galaxy?

[A] Spitzer Space Telescope

[B] Hubble Space Telescope

[C] Chandra X–ray Observatory

[D] Kepler Telescope

 • Using the Hubble Space Telescope of NASA, scientists have discovered immense envelope of gas called halo which surrounds the Andromeda galaxy. Scientists have stated that the reservoir of gas contains fuel for future star formation within the galaxy. This nearly invisible Halo of diffuse plasma extends 1.3 million light–years from the galaxy, about half way into the Milky Way galaxy.

7. Who has been recommended to the post of Chairman of SBI by the Bank Board Bureau?

[A] Arijit Basu

[B] Ashwani Bhatia

[C] Purnima Gupta

[D] Dinesh Kumar Khara

 • Dinesh Kumar Khara has been recommended as the next Chairman of State Bank of India by Banks Board Bureau (BBB). Dinesh Kumar Khara was instrumental in successfully completing the merger of SBI with its 5 associate Banks and with Bhartiya Mahila Bank. Presently, he is the Managing Director of SBI and prior to it, he was the chief executive of SBI Funds Management Pvt Limited.

8. Which institution announces the Sovereign Gold Bond (SGB) scheme?

[A] State Bank of India

[B] Indian Bullion Association

[C] Ministry of Finance

[D] Reserve Bank of India

 • Sovereign Gold Bond (SGB) is issued by the Reserve Bank India on behalf of the Government of India. The bonds are denominated in the units of grams of gold. The 6th tranche of Sovereign Gold Bond (SGB) Scheme 2020–21 has been announced by the Reserve Bank of India and the issue price of the Bond has been fixed at Rs.5117 per gram. The scheme will be open from 31st August to 4th September.

9. When is ‘Telugu Language Day’ celebrated across India?

[A] August 29

[B] August 30

[C] September 01

[D] September 02

 • Telugu Language Day also called as Telugu bhasha dinotsavam is observed on August 29 every year across the country. The state of Andhra Pradesh commemorates the birthday of the Telugu poet Gidugu Venkata Ramamurthy. The Department of Culture organises various events for developing the language. Vice–President M Venkaiah Naidu addressed ‘Our Language, Our Society and Our Culture’ organised by the South Africa Telugu Community (SATC).

10. Who is the first Indian–origin woman to get a Memorial plaque in London?

[A] Noor Inayat han

[B] Ada Lovelac

[C] Rosalind Franklin

[D] Dame Maud McCarthy

 • Noor Inayat Khan, who worked as a spy for Britain during World War II, becomes the first Indian–origin woman to get a Memorial plaque in London. The house in London, where Noor Inayat Khan once lived, got a distinct Blue plaque. She is a descendant of Tipu Sultan, and she was the first woman radio operator to be sent into occupied France under the code name ‘Madeleine’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *