Tnpsc

6th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச் சவாலுடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) வேளாண் அமைச்சகம்

  • நாடு முழுவதும் மிதிவண்டி சார்ந்த முன்னெடுப்புகளை உருவாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கடந்த 2020 ஆம் ஆண்டில், ‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச்’ என்ற சவாலை அறிமுகம் செய்தது. சமீபத்தில், நாட்டின் 11 நகரங்களுக்கு ‘India’s Top 11 Cycling Pioneers’ என்ற பட்டத்தை அவ்வமைச்சகம் வழங்கியது. அத்துடன் முதல் பருவத்தின் அடுத்த கட்டமும் தொடங்கியுள்ளது. இந்த 11 நகரங்களும் தங்களின் முயற்சிகளுக்காக தலா `1 கோடி பரிசினைப் பெறும்.

2. CSR நிதியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள்மூலம் இலவச COVID-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ள முதல் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • தனியார் மருத்துவமனைகளில் இலவச COVID தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியங்கள் நிதியளிக்கின்றன.
  • இத்திட்டத்தின்கீழ், 130 தனியார் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு இலவச COVID தடுப்பூசிகளை வழங்கவுள்ளன. உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது; மீதமுள்ள 25% தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. அதில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.

3. COVID-19 நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பின் பெயர் என்ன?

அ) COVID BEEP 

ஆ) COVID SYS

இ) C19- MONITOR

ஈ) C19- CHECK

  • “COVID BEEP” என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டு, கம்பியில்லா உடலியல் அளவுருக்கள் கண்காணிப்பு அமைப்பாகும். இதனை COVID-19 நோயாளிகளுக்காக, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிட் & அணுசக்தித் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஐதராபாத்தின் ESIC மருத்துவக்கல்லூரி உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பை பெரிய அளவில் பயன்படுத்துவதற்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் திட்டமொன்று சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

4. மருத்துவக்கல்லூரி சேர்க்கைகுறித்து, “அகில இந்திய ஒதுக்கீடு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

அ) 1975

ஆ) 1980

இ) 1986 

ஈ) 1990

  • 1986ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ், “அகில இந்திய ஒதுக்கீடு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேறொரு மாநிலத்தில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க விழையும் பிற மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு, இருப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% UG இடங்களும் 50% PG இடங்களும் உள்ளன. சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவச் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இடஒதுக்கீடும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடும் அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 2021-22 முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

5. இந்தியாவின் எத்தனை புலிகள் காப்பகங்கள், உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன?

அ) 5

ஆ) 3

இ) 11

ஈ) 14 

  • உலக புலிகள் நாளையொட்டி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரான பூபேந்திர யாதவ் இந்தியாவின் 14 புலிகள் காப்பகங்கள் உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
  • அஸ்ஸாமில் உள்ள மானஸ், காசிரங்கா மற்றும் ஓராங்; மத்திய பிரதேசத்தின் சாத்புரா, கன்ஹா மற்றும் பன்னா; மகாராஷ்டிராவின் பெஞ்ச்; பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகம்; உத்தரபிரதேசத்தின் துத்வா; மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள்; கேரளத்தின் பரம்பிக்குளம்; கர்நாடகத்தின் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை மற்றும் ஆனைமலை ஆகியன அந்த 14 அங்கீகரிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் ஆகும்.
  • CA|TS என்பது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை நிர்வகிக்க, சிறந்த நடைமுறை மற்றும் தரங்களை நிறுவும் அளவுருக்களின் தொகுப்பாகும். இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். CA|TS 2013’இல் தொடங்கப்பட்டது. இது புலிகள் & காப்புப்பகுதி நிபுணர்களால் உருவாக்கப்பட்டதாகும். இது 2022’க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான உலகளாவிய குறிக்கோளான T*2’இன் ஒரு முக்கியப்பகுதியாகும். புலிகளுக்கான பாதுகாப்பான இடத்தை உறுதி செய்வதே CA|TS’இன் நீண்டகால இலக்காகும்.

6. நடப்பாண்டுக்கான (2021) மகாராஷ்டிர பூஷன் விருதினை வென்றவர் யார்?

அ) சச்சின் டெண்டுல்கர்

ஆ) லதா மங்கேஷ்கர்

இ) ஆஷா போஸ்லே 

ஈ) ரத்தன் டாடா

  • முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மகாராஷ்டிர பூஷன் தேர்வுக்குழு, ஆஷா போஸ்லேவை மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருது – 2021’க்கு தேர்வுசெய்துள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார விவகார அமைச்சர் அமித் தேஷ்முக் இதனை அறிவித்தார். மகாராஷ்டிர பூஷன் என்பது மகாராஷ்டிராவின் மிகவுயர்ந்த குடிமக்கள் விருதாகும்.
  • இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், சமூகப்பணி, பத்திரிகை & பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனை புரிவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்படுகின்ற இவ்விருது, முதன்முதலில் கடந்த 1996’இல் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் நபர், புருஷோத்தம் இலட்சுமண் தேஷ்பாண்டே ஆவார். மகாராஷ்டிர பூஷன் விருது வென்றோருக்கு `10 இலட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

7. “அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்புக்காக CBSE மற்றும் கல்வி அமைச்சகத்துடன் ஒத்துழைத்துள்ள நிறுவனம் எது?

அ) மைக்ரோசாப்ட்

ஆ) இன்டெல் 

இ) விப்ரோ

ஈ) டெல்

  • இன்டெல், CBSE மற்றும் கல்வியமைச்சகம் ஆகியவை 2021 ஜூலை.29 அன்று “அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்பைத் தொடங்குவதாக அறிவித்தன. இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படை புரிதலை உருவாக்குவதாகும். அனைவருக்கும் AI என்பது 4 மணி நேர, சுயகற்றல் திட்டமாகும்.

8. ‘சதுப்புநில சுற்றுச்சூழலமைப்பைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.23

ஆ) ஜூலை.26 

இ) ஜூலை.28

ஈ) ஜூலை.30

  • ‘சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச நாளானது, 2015ஆம் ஆண்டில், UNESCO’இன் பொது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. UNESCO ஆனது ஆண்டுதோறும் ஜூலை.26ஆம் தேதியன்று சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாளைக் கொண்டாடுகிறது.
  • இது சதுப்புநில அமைப்புகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றின் நிலைத்த மேலாண்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. UNESCO’இன் கூற்றுப்படி, உலகளாவிய வனப்பகுதியின் ஒட்டுமொத்த இழப்புகளைவிட 3-5 மடங்கு வேகத்தில் சதுப்புநிலங்களை நாம் இழந்து வருகிறோம். உட்கட்டமைப்பு மேம்பாடு, நகரமயமாக்கல் மற்றும் உழவு நிலமாக மாற்றுதல் ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.

9. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது பின்வரும் எந்த மாநிலத்தில் வடகிழக்கின் முதல் சிறப்பு மையத்தை அமைக்க உள்ளது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) மேகாலயா

  • அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகமானது அருணாசல பிரதேசத்தின் பாபம் பரே மாவட்டத்தில் உள்ள கிமினில், வடகிழக்கின் முதல் சிறப்பு மையத்தை நிறுவவுகிறது. உயிரியல் வளங்கள் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான சிறப்பு மையமான இதனை உயிரித்தொழினுட்பத்துறை அங்கீகரித்துள்ளது. இதன் புதிய கட்டடம் மற்றும் பிற உட்கட்டமைப்பு கட்டுமானம் ஆகியவை `50 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

10. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட மின்னணுக்கழிவுகளின் சதவிகிதம், 2020ஆம் ஆண்டில், எவ்வளவுக்கு உயர்ந்துள்ளது?

அ) 12.6%

ஆ) 24.6%

இ) 31.6% 

ஈ) 42.6%

  • கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியா, 10,14,961.2 டன் மின்-கழிவுகளை உருவாக்கியுள்ளது என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற இணையமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கூறினார். இது, அதற்கு முந்தைய ஆண்டில் (2019) உருவான மின்னணுக்கழிவுகளின் அளவைவிட 31.6% அதிகமாகும்.
  • மேலும், மின்னணுக்கழிவுகள் தொடர்பான தேசிய அளவிலான தரவுகள் 2017-18ஆம் ஆண்டிலிருந்துதான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம்: 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கைகூடியது

ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே நாளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தது. அதில், ஹாக்கி போட்டியில் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. மல்யுதத்தில் இரவி தாஹியா 57 கிலோ பிரிவில் வெள்ளி பெற்றார். இத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆகியுள்ளது.

ஹாக்கி வெண்கலம், ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணிக்கு கிடைத்துள்ள பதக்கமாகும். கடைசியாக இந்தியா 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது. தற்போது வென்றுள்ள வெண்கலத்தையும் சேர்த்து, ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.

2. சேதி தெரியுமா?

ஜூலை.24: டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு இந்தியா வென்றுள்ள பதக்கம் இது.

ஜூலை.24: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் முத்துக்கலிங்கன் கிருஷ்ணனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.

ஜூலை.25: ரஷ்யாவில் நடைபெற்ற ‘சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021’ போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை இந்திய மாணவர்கள் வென்றனர். இது உலகின் பழமையான அறிவியல் போட்டி.

ஜூலை.26: ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஜூலை.26, 29: தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமப்பா கோயில், குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள தொன்மையான ஹரப்பா நகரான தோலவிரா ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.

ஜூலை.27: தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியோரை கௌரவிக்க ‘தகைசால் தமிழர்’ என்கிற புதிய விருதை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இதன் முதல் விருதுக்குச் விடுதலைப் போராட்ட வீரரும் நூற்றாண்டு கண்ட இடதுசாரி தலைவருமான என் சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார்.

ஜூலை.27: கல்விச்சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தபட்டோருக்கு 2.5 சதவீதம் சிறப்பு உள்-ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.

ஜூலை.29: கேரளத்தில் ஆண் அரசு ஊழியர்கள் திருமணத்தின்போது உயரதிகாரிகளிடம் வரதட்சணை மறுப்புச்சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

ஜூலை.30: புதுக்கோட்டையில் சங்ககால பழமைவாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

ஆகஸ்ட்.1: டோக்கியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2016’இல் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, இப்போது வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இருபதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாகியிருக்கிறார்.

1. Which Ministry is associated with ‘India Cycles4Change Challenge’?

A) Ministry of Environment, Forest and Climate Change

B) Ministry of Housing & Urban Affairs 

C) Ministry of Science and Technology

D) Ministry of Agriculture

  • Ministry of Housing & Urban Affairs launched the ‘India Cycles4Change Challenge’ in 2020, to create cycle–friendly initiatives across the country. Recently, the Ministry awarded 11 cities with the title of ‘India’s Top 11 Cycling Pioneers’. With this, the next stage of the first season has started. The top 11 cities shall receive an award of Rs 1 crore each to scale up their cycling initiatives.

2. Which is the first state to launch free COVID–19 vaccination through private hospitals using CSR funds?

A) Tamil Nadu 

B) Kerala

C) Karnataka

D) Andhra Pradesh

  • The Tamil Nadu government has become the first in the country to launch free Covid–19 vaccination at private hospitals. The scheme is being funded by Corporate Social Responsibility funds of various companies. Under the scheme, 130 private hospitals have been identified to provide free Covid vaccines to the people.
  • The Union government procures 75% of the vaccines produced and the remaining 25 percent is available for private hospitals, which is largely under–utilised.

3. What is the name of ‘India’s first indigenous physiological parameters monitoring system for COVID–19 patients’?

A) COVID BEEP 

B) COVID SYS

C) C19– MONITOR

D) C19– CHECK

  • “COVID BEEP” is India’s first indigenous, wireless physiological parameters monitoring system for COVID–19 patients, developed by ESIC Medical College Hyderabad in collaboration with Electronics Corporation of India Ltd (ECIL) and Department of Atomic Energy.
  • A proposal has been recently submitted to Ministry of Labour & Employment for large scale deployment of the system.

4. With reference to Medical College Admission, “All India Quota” scheme was introduced in which year?

A) 1975

B) 1980

C) 1986 

D) 1990

  • In 1986, “All India Quota” scheme was introduced under the directions of Supreme Court. It was introduced with an aim to provide domicile–free merit–based opportunities to students from any state who aspire to study in medical college located in another state.
  • The scheme comprises 15% of UG seats and 50% of PG seats in government medical colleges. The Union Health Ministry has recently announced that 27% reservation for Other Backward Classes (OBCs) and 10% reservation for Economically Weaker Sections (EWS) will be offered under the All–India Quota scheme for Undergraduate and Postgraduate medical and dental courses from 2021–22 onwards.

5. How many Tiger reserves of India have received accreditation of the Global Conservation Assured Tiger Standards (CA|TS)?

A) 5

B) 3

C) 11

D) 14 

  • On the occasion of International Tiger Day, Bhupendra Yadav (Minister for Environment, Forest and Climate change) stated that 14 Tiger reserves of India have received accreditation of the Global Conservation Assured Tiger Standards (CA|TS).
  • The 14 accredited tiger reserves are Manas, Kaziranga and Orang in Assam; Satpura, Kanha and Panna in Madhya Pradesh; Pench in Maharashtra; Valmiki tiger reserve in Bihar; Dudhwa in Uttar Pradesh; Sunderbans in West Bengal; Parambikulam in Kerala; Bandipur in Karntaka and Mudumalai & Anamalai in Tamil Nadu.
  • CA|TS is a set of criteria that sets best practice and standards to manage tigers and their conservation. It is a globally accepted conservation tool. CA|TS was launched in 2013. It was developed by tiger and protected area experts. It is an important part of T*2, the global goal to double the number of tigers by 2022. The long–term goal of CA|TS is to ensure safe heavens for Tigers.

6. Who won the Maharashtra Bhushan Award 2021?

A) Sachin Tendulkar

B) Lata Mangeshkar

C) Asha Bhosle 

D) Ratan Tata

  • Under the chairmanship of Chief Minister Uddhav Thackeray, Maharashtra Bhushan Selection Committee selected Asha Bhosle for the prestigious Maharashtra Bhushan Award 2021. It was announced by Amit Deshmukh, the cultural affairs minister of Maharashtra.
  • Maharashtra Bhushan is the highest civilian award of Maharashtra. It is given for the outstanding achievement in the fields of literature, art, sport, science, social work, journalism and public administration.
  • It is presented annually by the Government of Maharashtra. It was first awarded in 1996. Purushottam Laxman Deshpande was the first person to won this award. Cash prize of Rs. 10 lakh, a memento and citation is given to the winner of the Maharashtra Bhushan Award.

7. Which company collaborated with CBSE and Ministry of Education for “AI For All” initiative?

A) Microsoft

B) Intel 

C) Wipro

D) Dell

  • Intel, CBSE and Ministry of Education announced the launch of the “AI For All” initiative on July 29, 2021.
  • The main aim of this initiative is to create a basic understanding of Artificial Intelligence (AI) for everyone in India. AI for All is a 4–hour, self–paced learning programme.

8. When is the ‘International Day for the Conservation of the Mangrove Ecosystem’ observed annually?

A) July.23

B) July.26 

C) July.28

D) July.30

  • The International Day for the Conservation of the Mangrove Ecosystem, was adopted by the General Conference of UNESCO in 2015. UNESCO celebrates International Day for the Conservation of the Mangrove Ecosystem on July 26 annually.
  • It aims to raise awareness about mangrove ecosystems and to promote their sustainable management and conservation. According to UNESCO, mangroves are disappearing at a rate that is 3–5 times faster than overall losses of global forest cover. The main reasons are infrastructure development, urbanisation and agricultural land conversion.

9. The Ministry of Science and Technology is to set up North–East’s first Centre of Excellence in which state?

A) Assam

B) Sikkim

C) Arunachal Pradesh 

D) Meghalaya

  • The Ministry of Science and Technology is setting up a first–of–its–kind Centre of Excellence in the Northeast, at Kimin in Papum Pare district of Arunachal Pradesh.
  • The project to establish the Centre for Bio–Resources and Sustainable Development as a Centre of Excellence was sanctioned by the Department of Biotechnology. The construction of the new building and other infrastructure has been completed at a cost of nearly Rs 50 crore.

10. By what %, the e–waste generated in India has increased in 2020, compared to the previous year?

A) 12.6%

B) 24.6%

C) 31.6% 

D) 42.6%

  • Union Minister of State for Environment, Forests and Climate Change, Ashwini Kumar Choubey has stated that India has generated 10,14,961.2 tonnes of e–waste in the year 2020. This is approximately 31.6 per cent increase from the quantum of e waste generated the previous year. Also, it has been stated that, the national level data pertaining to e waste is available only form the year 2017–18 onwards.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!