TnpscTnpsc Current Affairs

6th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அமலாக்க நிறுவனமான வருவாய் புலனாய்வு இயக்குநரகம், பின்வரும் எந்த அமைப்பின்கீழ் உள்ளது?

அ) மத்திய மறைமுக வரிகள் & சுங்க வாரியம் 

ஆ) செபி

இ) அமலாக்க இயக்குநரகம்

ஈ) மத்திய நேரடி வரிகள் வாரியம்

  • வருவாய் புலனாய்வு இயக்குநரகம் என்பது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ், கடத்தல் எதிர்ப்பு விஷயங்களில் இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை மற்றும் அமலாக்க நிறுவனம் ஆகும்.
  • மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 64ஆவது ‘வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நிறுவன நாளில்’ உரையாற்றினார். 2020-21ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிலிருந்து மியான்மருக்கு தங்கக்கடத்தல் நடந்தந்ததாக DRI அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

2. 2021’இல் டேவிஸ் கோப்பையை வென்ற நாடு எது?

அ) ஸ்பெயின்

ஆ) ரஷ்யா 

இ) குரோஷியா

ஈ) செர்பியா

  • டேனியல் மெட்வெடேவின் சிறப்பான ஆட்டத்திற்குப்பிறகு, குரோஷியாவை வீழ்த்தி 2021’இல் ரஷ்யா டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்றது. 25 வயதான அவர், மரின் சிலிக்கை இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் தோற்கடித்து, 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு டேவிஸ் கோப்பையை முதன்முறையாக வென்று தந்து உள்ளார். ரஷ்யா தனது முதல் டேவிஸ் கோப்பையை கடந்த 2002இல் வென்றது.

3. ‘கிரேட்டர் திப்ராலாந்து’ என்ற பெயரில் பழங்குடியின சமூகங்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று எந்த மாநிலத்தில் உள்ள பழங்குடி அமைப்புகள் கோரி வருகின்றன?

அ) சிக்கிம்

ஆ) திரிபுரா 

இ) நாகாலாந்து

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • திரிபுரா மாநிலத்திலுள்ள பல பழங்குடியின அமைப்புகள் இப்பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் நோக்கில் இணைந்துள்ளன. அரசியலமைப்பின் இரண்டு மற்றும் மூன்றாவது பிரிவின்கீழ் திரிபுராவில் உள்ள பழங்குடியின சமூகத்தினருக்காக ‘கிரேட்டர் திப்ராலாந்து’ என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
  • திரிபுரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 19 பழங்குடியினரில், திரிபுரிஸ் (திப்ரா & திப்ராசா என்றும் அறியப்படுகிறது) மிகப்பெரிய பழங்குடியினமாகும்.

4. நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு தொடங்கி எத்தனை ஆண்டுகள் நிறைவாகியுள்ளன?

அ) 50

ஆ) 60

இ) 75

ஈ) 100 

  • நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவில் மேதகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மக்கள் மன்றத்திற்கு நிர்வாகப் பொறுப்புடையவர்களாக அதிகாரிகள் இருப்பதை பொதுக் கணக்குக் குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் உறுதி செய்கின்றன என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

5. ஐந்து பேர் கொண்ட மத்திய விஸ்டா மேற்பார்வைக் குழுவின் தலைவர் யார்?

அ) ரத்தன் பி வாடல் 

ஆ) விவேக் சிங்

இ) அஜய் பாண்டே

ஈ) சுபாஷ் சந்திர கார்க்

  • 20,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நேரடியாகக் கண்காணிப்பதற்காக மத்திய விஸ்டா மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்படி, ஐந்து பேர் கொண்ட மத்திய விஸ்டா மேற்பார்வைக் குழுவின் தலைவராக முன்னாள் நிதிச் செயலர் ரத்தன் பி வாடல் நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளர், MoHUA அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

6. BRICS திரைப்பட விழாவில் “சிறந்த நடிகர்” விருது பெற்றவர் யார்?

அ) ரஜினிகாந்த்

ஆ) தனுஷ் 

இ) குரு சோமசுந்தரம்

ஈ) சிவகார்த்திகேயன்

  • வெற்றிமாறன் இயக்கிய தமிழ்த் திரைப்படமான ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக இந்திய நடிகர் தனுஷ் BRICS திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான (ஆண்) விருது பெற்றார். இந்த ஆண்டு (2021) அதே படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவர் வென்றார்.
  • இத்திரைப்படம் இதுவரை மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. பிரேசிலிய திரைப்படமான ‘ஆன் வீல்ஸ்’ திரைப்படத்தில் நடித்ததற்காக லாரா போல்டோரினி சிறந்த நடிகருக்கான (பெண்) விருது பெற்றார்.

7. ‘வித்யா தீவேனா’ என்னும் கல்வி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிற மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • ஜெகன் அண்ணா வித்யா தீவேனா திட்டத்தின் கீழ், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படுகிறது.
  • ‘ஜெகனண்ணா வித்யா தீவேனா’ கல்வி உதவித் திட்டத்தின் மூன்றாவது தவணையாக ஆந்திர பிரதேச மாநில அரசு `686 கோடியை வழங்கியுள்ளது. 11 லட்சம் மாணவர்களின் தாய்மார்களின் கணக்கில் இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

8. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தை அதன் பொன்விழா கொண்டாட்டங்களுக்கான விளம்பரத்தூதராக நியமனம் செய்துள்ள மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) அஸ்ஸாம்

  • அருணாச்சல பிரதேசத்தின் 50வது ஆண்டை குறிக்கும் பொன்விழா கொண்டாட்டங்களுக்கான விளம்பரத் தூதராக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தை அருணாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
  • திரைப்படத் தயாரிப்பாளரான ராகுல் மித்ராவை தனது விளம்பர ஆலோசகராக அம்மாநிலம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் பேமா கந்து வெளியிட்டார்.

9. வங்காளதேசம் கீழ்காணும் எந்நாட்டுடன் இணைந்து வருடாந்திர “Cooperation Afloat Readiness and Training (CARAT)” என்ற கடல்சார் பயிற்சியை மேற்கொள்கிறது?

அ) அமெரிக்கா 

ஆ) இந்தியா

இ) ஜப்பான்

ஈ) சீனா

  • வங்காளதேச கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆண்டுதோறும் வருடாந்திர “Cooperation Afloat Readiness and Training (CARAT)” என்ற கடல்சார் பயிற்சியைத் தொடங்கினர். இந்தப் பயிற்சி வழக்கமாக வங்காள விரிகுடாவில் மேற்கொள்ளப்படுகிறது.
  • வங்காளதேச கடற்படை 2011 முதல் CARAT பயிற்சியில் பங்கேற்று வருகிறது. இது பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. பின்வரும் எவ்வாண்டில் G20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது?

அ) 2022

ஆ) 2023 

இ) 2032

ஈ) 2033

  • இந்தியா சமீபத்தில் இந்தோனேசியா, இத்தாலி மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய ‘G20 Troika’இல் இணைந்தது.
  • G20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்தோனேஷியா, 2022 அக்.30-31 ஆகிய தேதிகளில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சிமாநாடு முடிவடைந்தபின் ஆண்டுமுழுவதும் G20 கூட்டங்களைக் கூட்டவுள்ளது.
  • “Recover Together Recover Stronger” என்பது இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆகும். இந்தியா இந்தோனேசியாவிடமிருந்து G20’இன் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல்முறையாக G20 தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை வீரா் சபரி டபிள்யூபிசி சாம்பியன்

உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யூபிசி) முதல் முறையாக நடத்திய டபிள்யூபிசி இந்தியா வெல்டா்வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரா் சபரி (24) சாம்பியன் ஆனாா்.

தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் 8 சுற்றுகள் கொண்ட இறுதிச் சுற்றில் அவா் சண்டீகரைச் சோ்ந்த அனுபவமிக்க வீரரான ஆகாஷ்தீப் சிங்கை (27) வீழ்த்தினாா். போட்டி முடிவானது 76-76, 79-73, 79-73 என்ற பெரும்பான்மை புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு சாதகமாக அமைந்தது. தற்போது சாம்பியன் ஆகியிருக்கும் சபரி, அவ்வப்போது இந்தியாவின் இதர போட்டியாளா்களுடன் மோதி தனக்கான பட்டத்தை தக்க வைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தனது தொழில்முறை குத்துச்சண்டையை தொடங்கிய சபரி, முந்தைய மோதல்களில் 4 வெற்றிகளையும், 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளாா். அவருடன் மோதி தோல்வியை சந்தித்த ஆகாஷ்தீப் கடந்த 3 ஆண்டுகளில் 8 வெற்றிகள், 1 தோல்வியை பதிவு செய்துள்ளவா்.

இதேபோட்டியில் ஆசிய சில்வா் லைட்வெயிட் பட்டத்துக்கான பிரிவில் இந்தியாவின் காா்த்திக் சதீஷ் குமாா் – இந்தோனேசியாவின் ஹீரோ டிடோவை தோற்கடித்து பட்டம் வென்றாா். இதில் அவா் 80-72, 79-73, 79-73 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இத்துடன் 8 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள காா்த்திக், அனைத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளாா். டபிள்யூபிசி ரேங்கிங்கில் தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கும் அவருக்கு இந்த வெற்றி முன்னேற்றத்தை அளிக்கும்.

2. அந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா 4-ம் இடம் :

அந்நிய செலாவணி தொடர்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று மக்களவையில் கூறியதாவது.

கடந்த நவம்பர் 19-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 640.4 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-ம்இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான்சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ.16.7 லட்சம் கோடி கலால் வரி பெறப்பட்டுள்ளது. 2013-14-ல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.2, டீசலுக்கு ரூ.3.46 ஆக இருந்தது. தற்போது இது முறையே ரூ.27.9,ரூ.21.80 ஆக உள்ளது என அவர் தெரிவித்தார்.

1. Directorate of Revenue Intelligence (DRI), is an enforcement agency under which organisation?

A) Central Board of Indirect Taxes and Customs 

B) Securities Exchange Board of India

C) Enforcement Directorate

D) Central Board of Direct Taxes

  • The Directorate of Revenue Intelligence (DRI), under the Central Board of Indirect Taxes and Customs (CBIC), is an intelligence and enforcement agency of the Government of India on anti–smuggling matters.
  • The Union Finance Minister Ms Nirmala Sitharaman was addressing the 64th ‘Directorate of Revenue Intelligence (DRI), Foundation Day’. DRI released a report on the occasion, which said that gold smuggling shifted from the Middle East to Myanmar during 2020–21.

2. Which country won the Davis Cup Title in 2021?

A) Spain

B) Russia 

C) Croatia

D) Serbia

  • Russia won the Davis Cup title in 2021 by defeating Croatia, after a brilliant performance from Daniil Medvedev. The 25–year–old player defeated Marin Cilic in the second singles match, to make the country win its first Davis Cup title since 2006. Russia’s first Davis Cup title was in 2002.

3. The tribal outfits in which state are demanding the creation of separate state for indigenous communities named ‘Greater Tipraland’?

A) Sikkim

B) Tripura 

C) Nagaland

D) Arunachal Pradesh

  • Several tribal outfits in Tripura have joined hands to push their demand for a separate state for indigenous communities in the region. The demand has grown to carve out a separate state of ‘Greater Tipraland’ for the indigenous communities in Tripura under Article 2 and 3 of the Constitution. Among the 19 notified Scheduled Tribes in Tripura, Tripuris (also known was Tipra and Tiprasas) are the largest.

4. The Public Accounts Committee of Parliament completed how many years of inception recently?

A) 50

B) 60

C) 75

D) 100 

  • President Ram Nath Kovind was speaking at the centenary celebration of the Public Accounts Committee (PAC) of the Parliament. He said that the PAC ensures “administrative accountability of the executive towards the legislature”.

5. Who is the Chairman of the five–member Central Vista Oversight Committee?

A) Ratan P Watal 

B) Vivek Singh

C) Ajay Pandey

D) Subhash Chandra Garg

  • The Centre has constituted a Central Vista Oversight Committee to directly oversee the Rs 20,000 crore project for a period of two years. As per the Ministry of Housing and Urban Affairs, former Finance Secretary Ratan P Watal has been appointed the Chairman of the five–member Central Vista Oversight Committee. Joint Secretary, MoHUA will be Convenor of the committee.

6. Who has been awarded as the “Best Actor Male” at the BRICS Film Festival?

A) Rajinikanth

B) Dhanush 

C) Guru Somasundaram

D) Sivakarthikeyan

  • Indian actor Dhanush has been awarded with the Best actor (Male) at the BRICS Film Festival for his role in Tamil movie ‘Asuran’, which was directed by Vetrimaaran. He won the National Award for best actor, for the same movie this year. The movie has so far won three National Awards Lara Boldorini was awarded the Best Actor (Female) at the festival for her performance in the Brazilian film ‘On Wheels’.

7. ‘Vidya Deevena’ education assistance scheme, is implemented in which Union state?

A) Gujarat

B) Andhra Pradesh 

C) Madhya Pradesh

D) Maharashtra

  • Under Jagan Anna Vidya Deevena Scheme, the fee of students belonging to Scheduled Castes, Scheduled Tribes, other minority groups are reimbursed. Andhra Pradesh government has released ₹686 crore as the third tranche of the ‘Jagananna Vidya Deevena’ education assistance scheme. The amount has been credited to the accounts of over 9 lakh mothers of 11 lakh students.

8. Which state has signed Bollywood actor Sanjay Dutt as the brand ambassador for its Golden jubilee celebrations?

A) Sikkim

B) Arunachal Pradesh 

C) Gujarat

D) Assam

  • The government of Arunanchal Pradesh has signed Bollywood actor Sanjay Dutt as the brand ambassador on the occasion of the golden jubilee celebrations, marking the 50th year of the naming of the state. It also announced filmmaker Rahul Mittra as its brand advisor. The announcement was made by Chief Minister Pema Khandu.

9. Bangladesh is undertaking the annual Cooperation Afloat Readiness and Training (CARAT) maritime exercise, along with which country?

A) USA 

B) India

C) Japan

D) China

  • Bangladesh Navy and the US military personnel began the annual Cooperation Afloat Readiness and Training (CARAT) maritime exercise. The exercise will be carried out virtually and in the Bay of Bengal. Bangladesh Navy has been taking part in the CARAT exercise since 2011.
  • It aims to address shared maritime security concerns and strengthen partnerships between regional navies.

10. India is set to assume the G20 Presidency in which year?

A) 2022

B) 2023 

C) 2032

D) 2033

  • India recently joined the G20 Troika, which now includes Indonesia, Italy and India. Indonesia has assumed the G20 Presidency and will convene G20 meetings throughout the year ending with the G20 Leaders` Summit on October 30–31, 2022. The theme of this year’s Summit is “Recover Together Recover Stronger”. India will assume the G20 Presidency from Indonesia and will convene the G20 Leaders` Summit for the first time in India in 2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!