Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

6th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

6th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 6th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற செமேரு எரிமலை அமைந்துள்ள நாடு எது?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. இந்தோனேசியா

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தோனேசியா

  • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடிப்பினால் ஏற்பட்ட எரிமலை சாம்பலைத் தொடர்ந்து கிழக்கு ஜாவா மாகாணத்திலிருந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின்படி, இதுவரை இதன் காரணமாக எந்தவொரு நபரும் பலியாகவில்லை. இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 640 கிலோமீட்டர் தொலைவில் செமேரு எரிமலை அமைந்துள்ளது.

2. இந்தியாவில் நடைபெற்ற முதல் G20 ஷெர்பா கூட்டத்தை நடத்திய நகரம் எது?

அ. உதய்பூர்

ஆ. ஜோத்பூர்

இ. வாரணாசி

ஈ. காந்தி நகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. உதய்பூர்

  • இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரத்தில் இந்தியாவின் G20 தலைவர் பதவிக்கான ஷெர்பா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சர்வதேச ஷெர்பாக்கள், அவர்களது பிரதிநிதிகள் மற்றும் G20 உறுப்பினர்கள், ஒன்பது விருந்தினர் நாடுகள் உட்பட அழைக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். முதலாவது ஷெர்பா கூட்டத்தின் விவாதங்கள் இந்தியாவின் G20 ஷெர்பா, அமிதாப் காந்த் என்பவரால் தொடங்கப்பட்டது.

3. தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. இராஜீவ லக்ஷ்மன் கரண்டிகர்

ஆ. அமிதாப் காந்த்

இ. இராஜீவ் குமார்

ஈ. பரமேஸ்வரன்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. இராஜீவ லக்ஷ்மன் கரண்டிகர்

  • இந்திய தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பகுதிநேர தலைவராக சென்னை கணித நிறுவனத்தில் தகைமைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இராஜீவ லக்ஷ்மன் கரண்டிகர் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இரங்கராஜன் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ், கடந்த 2005ஆம் ஆண்டு ஜூனில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய புள்ளியியல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சிமிக்க அமைப்பாகும்.

4. அண்மையில், ‘B–21’ எனப்பெயரிடப்பட்ட அதன் சமீபத்திய அணுவாற்றல் திறன்கொண்ட மறைந்திருந்து தாக்கும் குண்டுதாரி விமானத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ரஷ்யா

இ. அமெரிக்கா

ஈ. உக்ரைன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • அமெரிக்க வான்படை தனது சமீபத்திய அணுவாற்றல் திறன்கொண்ட மறைந்திருந்து தாக்கும் குண்டுதாரியான ‘B–21’ஐ வெளியிட்டது. இது பனிப்போரில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட விமானங்களுக்கு மாற்றாக இருக்கும். இந்தப்புதிய குண்டுதாரி விமானம் தயாரிப்பதற்கு, ஒவ்வொன்றுக்கும் சுமார் $700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்தக் குண்டுதாரி விமானத்தால் அணு மற்றும் மரபார்ந்த ஆயுதங்களை எடுத்துச் செல்லவியலும்.

5. இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை விற்பதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் எது?

அ. பாரத வங்கி

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. பாரத வங்கி

  • நாடு முழுவதுமுள்ள பாரத வங்கியின் (SBI) 29 கிளைகள்மூலம் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கும் பணமாக்குவதற்கும் அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை ஓர் இந்திய குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்தால் வாங்கவியலும். ஒரு தனி நபர் தேர்தல் பத்திரங்களை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மற்ற நபர்களுடன் இணைந்து வாங்கலாம்.

6. UNESCOஇன் 2022 – உலக தத்துவ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. The Human of the Future

ஆ. Philosophy and Humanity

இ. Growth and Humanity

ஈ. Development of Thoughts

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. The Human of the Future

  • 2022 – உலக தத்துவ நாளானது நவம்பர் மாதம் மூன்றாவது வியாழனன்று உலகம் முழுவதும் நெஸ்கோவால் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு கலாசாரத்திற்கும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனித சிந்தனையின் வளர்ச்சிக்கு தத்துவத்தின் பங்களிப்பை இந்நாள் எடுத்துக்காட்டுகிறது. 2022ஆம் ஆண்டு உலக தத்துவ நாளைக் கொண்டாட, UNESCOஉம் மற்றும் தற்கால கலைகளின் தேசிய அரங்கமும் லெ ஃப்ரெஸ்னோயும் இணைந்து பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில். ‘The Human of the Future – எதிர்காலத்தின் மனிதன்’ என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்தன.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற காங்க்ரா நுண்ணோவியம் தயாரிக்கப்படுகிற மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற 17ஆவது G20 மாநாட்டின் நிறைவுநாளில், ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா நுண்ணோவியத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார். மேலும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு ஹிமாச்சலின் மந்தி மற்றும் குலு மாவட்டங்களில் தயாரிக்கப்படும் ஒரு கனல் பித்தளை தொகுப்பையும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு வட குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கையால் நெய்யப்பட்ட ஒரு படன் படோலா துப்பட்டாவையும் பிரதமர் வழங்கினார். அது, ‘இரட்டை இகாட்’ என்ற தொழில்நுட்பத்தில் நெய்யப்பட்டதாகும்.

8. 2022 – உலக கழிப்பறை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Hygiene and Growth

ஆ. Making the Invisible Visible

இ. Leaving No one Behind

ஈ. Access to Toilet Services

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Making the Invisible Visible

  • கழிப்பறைகளின் கண்டுபிடிப்பைக் குறிக்கவும், சுகாதார நெருக்கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமாக ஒவ்வோர் ஆண்டும் நவ.19 அன்று உலக கழிப்பறை நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக கழிப்பறை நாளானது ஐநா–நீர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் கூட்டுறவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2022) உலக கழிப்பறை நாளுக்கானக் கருப்பொருள், ‘Making the Invisible Visible’ என்பதாகும்.

9. 2022 – உலக குழந்தைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Inclusion, For Every Child

ஆ. Children’s Rights

இ. International Togetherness

ஈ. Digital Access for All

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Inclusion, For Every Child

  • சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக நவ.20ஆம் தேதி உலக குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில், கடந்த 1954இல் உலகளாவிய குழந்தைகள் நாளாக நிறுவப்பட்டது. ஐநா பொதுச்சபை குழந்தைகள் உரிமைகள்பற்றிய பேரறிவிப்பு மற்றும் தீர்மானம் என இரண்டையும் ஏற்றுக்கொண்ட தேதியின் ஆண்டுநிறைவையும் இது குறிக்கிறது. இந்த ஆண்டு, “Inclusion, For Every Child” என்பது இந்த நாளுக்கானக் கருப்பொருளாக உள்ளது.

10. 2023 – ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. SECURE SCO

ஆ. SAFE SCO

இ. SUSTAINABLE SCO

ஈ. SOVEREIGN SCO

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. SECURE SCO

  • எதிர்வரும் 2023ஆம் ஆண்டில் SCO அமைப்பின் தலைவராக இருந்து அடுத்த SCO உச்சிமாநாட்டை நடத்தும் பொருட்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை இந்தியா தொடங்கியுள்ளது. 2023 – SCO உச்சிமாநாட்டுக்கானக் கருப்பொருள், ‘SECURE SCO’ என்பதாகும். SCO அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே சுழற்சி முறையில் செல்லும் அவ்வமைப்பின் தலைமைப் பதவியை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் இந்தியா அடைந்தது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரத்தில் நடந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில், SCO உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சமர்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தோனேசிய எரிமலையில் சீற்றம்

இந்தோனேசியாவின் மிகவுயரமான எரிமலையில் சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்களை மீட்குப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் மிகவுயரமான செமேரு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 1,500 மீ உயரத்துக்கு சாம்பல் மண்டலம் எழுந்தது. அதையடுத்து அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் ஊர்களில் ஏராளமான வீடுகள் சாம்பலில் புதையுண்டன. இதில் யாரும் உயிரிழந்ததாக உடனடி தகவல் இல்லை.

6th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Semeru Volcano, which was seen in the news, is located in which country?

A. Philippines

B. Indonesia

C. Japan

D. Australia

Answer & Explanation

Answer: B. Indonesia

  • Semeru Volcano has started erupting in Java Island, Indonesia. The eruption caused huge volcanic ash and over 2,000 residents in East Java province were evacuated. As per the Indonesia’s disaster management agency (BNPB), no injuries or deaths have so far been reported. Mount Semeru lies around 640 kilometers southeast of the capital Jakarta.

2. Which city is the host of the First G20 Sherpa meeting held in India?

A. Udaipur

B. Jodhpur

C. Varanasi

D. Gandhi Nagar

Answer & Explanation

Answer: A. Udaipur

  • The Sherpa Meeting of India’s G20 Presidency is being organised in the city of Udaipur, Rajasthan. It is being attended by international Sherpas, their delegations, and heads of invited International Organizations (IOs) from G20 Members, 9 Guest countries among others. Discussions of the 1st Sherpa Meeting were initiated by India’s G20 Sherpa, Amitabh Kant.

3. Who has been appointed as the Chairperson of National Statistical Commission?

A. Rajeeva Laxman Karandikar

B. Amitabh Kant

C. Rajiv Kumar

D. Parameswaran

Answer & Explanation

Answer: A. Rajeeva Laxman Karandikar

  • Rajeeva Laxman Karandikar, professor emeritus at Chennai Mathematical Institute (CMI), has been appointed as part–time chairperson of National Statistical Commission of India (NSCI) for three years. The National Statistical Commission of India is an autonomous body which was formed in June 2005 under the recommendation of Rangarajan commission.

4. Which country launched its latest nuclear stealth bomber named ‘B–21’?

A. Israel

B. Russia

C. USA

D. Ukraine

Answer & Explanation

Answer: C. USA

  • The US Air Force has unveiled its latest nuclear stealth bomber named ‘B–21’, which will gradually replace aircraft first flown in the Cold War. The country’s first new bomber in 30 years could cost about USD 700m each and can carry nuclear and conventional weapons.

5. Which is the only authorised institution for sale and encashment of electoral bonds in India?

A. State Bank of India

B. NITI Aayog

C. Reserve Bank of India

D. Securities Exchange Board of India

Answer & Explanation

Answer: A. State Bank of India

  • The Government authorised sale and encashment of electoral bonds through 29 branches of State Bank of India (SBI) across the country. The electoral bonds can be purchased by a person who is a citizen of India or incorporated or established in India. A person (individual) can buy electoral bonds, either singly or jointly with other individuals.

6. What is the theme of the UNESCO’s ‘World Philosophy Day’ 2022?

A. The Human of the Future

B. Philosophy and Humanity

C. Growth and Humanity

D. Development of Thoughts

Answer & Explanation

Answer: A. The Human of the Future

  • ‘World Philosophy Day’ 2022 is celebrated on the third Thursday of November by NESCO across the world. It highlights the value of philosophy for the development of human thought, for each culture and for each individual. To celebrate World Philosophy Day 2022, UNESCO and Le Fresnoy – National Studio of Contemporary Arts organised a symposium and exhibition on the theme ‘The Human of the Future’ at UNESCO Headquarters in Paris.

7. Kangra miniature painting, which was seen in the news, is made in which state?

A. Gujarat

B. Himachal Pradesh

C. Assam

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • Prime Minister Narendra Modi presented US president Joe Biden with a Kangra miniature painting from Himachal Pradesh on the concluding day of the 17th G20 summit in Indonesia’s Bali. The Prime Minister gave Spanish Prime Minister Pedro Sanchez a Kanal brass set from Himachal’s Mandi and Kullu districts and Italy’s prime minister, Giorgia Meloni– a Patan Patola dupatta – handwoven from northern Gujarat. The scarf was made with a technique called ‘double ikat’ technique.

8. What is the theme of the ‘World Toilet Day’ 2022?

A. Hygiene and Growth

B. Making the Invisible Visible

C. Leaving No one Behind

D. Access to Toilet Services

Answer & Explanation

Answer: B. Making the Invisible Visible

  • World Toilet Day is observed every year on November 19 to mark the invention of toilets and raise awareness of the sanitation crisis. World Toilet Day is celebrated in partnership between the UN–Water and governments around the world. This year the theme for World Toilet Day is ‘Making the Invisible Visible’.

9. What is the theme of the ‘World Children’s Day 2022’?

A. Inclusion, For Every Child

B. Children’s Rights

C. International Togetherness

D. Digital Access for All

Answer & Explanation

Answer: A. Inclusion, For Every Child

  • The ‘World Children’s Day’ is celebrated on 20 November to promote international togetherness, awareness among children worldwide, and improving children’s welfare. It was first established in 1954 as Universal Children’s Day. It also marks the anniversary of the date that the UN General Assembly adopted both the Declaration and the Convention on children’s rights. This year, the theme is ‘Inclusion, For Every Child.’

10. What is the theme of the Shanghai Cooperation Organisation (SCO) Summit 2023?

A. SECURE SCO

B. SAFE SCO

C. SUSTAINABLE SCO

D. SOVEREIGN SCO

Answer & Explanation

Answer: A. SECURE SCO

  • India has launched the official website of the Shanghai Cooperation Organisation (SCO) as it will host the next SCO summit as a chairman of organisation in 2023. The theme of the SCO Summit 2023 is ‘SECURE SCO’. India received the SCO rotating presidency in Samarkand, Uzbekistan. The leaders of SCO Member States signed the Samarkand Declaration in the meeting of the Council of Heads of State in the city of Samarkand, Uzbekistan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!