Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

6th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

6th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படை அதன் முதல், ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது?

அ) இந்திய கடற்படை

ஆ) இந்திய இராணுவம்

இ) இந்திய கடலோர காவல்படை

ஈ) இந்திய வான்படை

  • இந்திய இராணுவம் அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் & வடகிழக்கு போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதன் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • மேஜர் ஜெனரல் கெளதம் சவுகான் முதல் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (மனித உரிமைகள்) பொறுப்பேற்றுள்ளார். அவர் இராணுவ துணைத் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்.

2. இந்தியப்பிரதமர் அவர்கள், IIM’க்கு அடிக்கல் நாட்டிய சம்பல்பூர் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிசா

இ) பீகார்

ஈ) உத்தரகண்ட்

  • ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் உள்ள உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2015-16ஆம் ஆண்டில், இந்நிறுவனம் மூன்றாம் தலைமுறை IIM ஆக தொடங்கப்பட்டதிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தற்காலிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2021’ நடத்தப்படவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) குஜராத்

  • ஆந்திர பிரதேச மாநில மாநில வனத்துறையால் ஆண்டுதோறும் ‘நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது. கோரிங்கா வனவுயிரி சரணாலயம், கோதாவரி கரையோரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள், கொல்லேரு ஏரி, அட்டபகா பறவைகள் சரணாலயம் மற்றும் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிருஷ்ணா வனவுயிரி சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும்.
  • பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் வெட்லேண்ட் இன்டர்நேஷனல் ஆகியவை இதற்கான தங்களது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, தீப்பர் பீல் ஆனது எந்த மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமாகும்?

அ) சிக்கிம்

ஆ) அஸ்ஸாம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) மணிப்பூர்

  • தீப்பர் பீல் ஆனது அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமாகும். இது, கெளகாத்தியின் தென்மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. 219 வகையான பறவைகளுடன் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்களைக் கொண்ட இத்தளம், கடந்த 2002ஆம் ஆண்டில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாவட்ட அதிகாரிகள், அந்த இடத்தில் குழுமி மீன்பிடிக்க தடை விதித்துள்ளனர்.

5. கங்கை பள்ளத்தாக்கின், முதல் மலையுச்சியில் அமைந்துள்ள பெளத்த மடாலயம் கண்டுபிடிக்கப்பட்ட லால் பஹாரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) பீகார்

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) மணிப்பூர்

  • கங்கை பள்ளத்தாக்கின் முதல் மலையுச்சி பெளத்த மடாலயம் பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லால் பஹாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மலையுச்சியில் உள்ள முதல் மடாலயம் ஆகும். இது பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மற்றும் மேற்கு வங்காளத்தின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் கூட்டுப்பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஸ்ரீமதர்மவி
    -ஹாரிக் ஆரியபிக்சுசங்கஸ்யா என பெயரிடப்பட்ட ஒரு விகாரமாகும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம்’ ஆனது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது?

அ) சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

ஆ) கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

இ) தகவல் தொடர்பு அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • சாத்தியமுள்ள வானூர்தி நிறுவனங்களின்மூலம் சிறப்பு நோக்க முகமையின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின்மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இச் சிறப்பு நோக்க முகமையுள் வானூர்தி நிறுவனங்களும் அடங்கும்.

7. சமீபத்தில் தெற்காசிய ஜர்னலில் வெளியான அறிக்கையின்படி, எந்த இந்திய நகரத்தில் அதிகபட்ச CCTV கவரேஜ் உள்ளது?

அ) மும்பை

ஆ) சென்னை

இ) தில்லி

ஈ) ஹைதராபாத்

  • அண்மையில் தெற்காசிய ஜர்னலில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி, சென்னை பெருநகரம், ஒரு ச.கி.மீட்டருக்கும் 1,000 மக்களுக்கும் என அதிகபட்ச CCTV எண்ணிக்கையை கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 130 நகரங்களில் CCTV கேமராக்கள் எண்ணிக்கையை இவ்வறிக்கை பதிவுசெய்கிறது. சீன மற்றும் இந்திய நகர்ப்புறங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

8. 2021ஆம் ஆண்டில், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் அனுமதிக்கப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களுக்கான (TFA) வரம்பு என்ன?

அ) 10%

ஆ) 5%

இ) 3%

ஈ) 1%

  • இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI) எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் அளவை 2021’க்கு 3% ஆகக்குறைத்துள்ளது. இந்த வரம்பு, 2022’க்கு 2% ஆகக் குறைக்கப்படவுள்ளது. டிரான்ஸ் கொழுப்பு மாரடைப்பு & கரோனரி இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக்கண்டறியப்பட்டுள்ளது. 2023’க்குள் டிரான்ஸ் கொழுப்பை ஒழிக்க WHO நோக்கம் கொண்டுள்ளது.

9. பிரயாஸ் என்பது இந்தியாவின் எந்த பொதுத்துறை நிறுவனம் ஏற்றுக்கொண்ட புதிய முன்னெடுப்பாகும்?

அ) NTPC

ஆ) IOCL

இ) ONGC

ஈ) HAL

  • ‘பிரயாஸ்’ என்பது இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சமூக உதவி முயற்சியாகும். இந்தத்திட்டத்தின்கீழ், IOCL தில்லி அலுவலக ஊழியர்கள், IOCL’இன் எரிபொருள் வங்கிகளுக்கு அருகில் அமைந்துள்ள இரவுநேர முகாம்களுக்கு போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பார்கள்.
  • இந்த இரவுநேர தங்குமிடங்களை தில்லி அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக நடத்தி வருகின்றன.

10. பிரிட்டன் ஆனது அண்மையில் கீழ்க்கண்ட எந்தத் தயாரிப்புக்கான வரிவிதிப்பை முற்றிலுமாக நீக்கியது?

அ) அலைபேசிகள்

ஆ) அணையாடை தயாரிப்புகள்

இ) மடிக்கணினிகள்

ஈ) பாரசிட்டமால் மாத்திரைகள்

  • பெண்களின் அணையாடை தயாரிப்புகளுக்கான வரிவிதிப்பை பிரிட்டன் நீக்கியுள்ளது. “tampon tax” என்று அழைக்கப்பட்ட இவ்வரி, தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, முன்னதாக அந்நாட்டின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தில் அதன் கருவூலத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியபோதுதான் செயல்படுத்தப்பட்டுள்ளது.

1. Which Indian armed force has created a ‘Human rights cell’?

A) Indian Navy

B) Indian Army

C) Indian Coast Guard

D) Indian Air Force

  • The Indian Army has created a new human rights cell for the first time in the history. Its aims is to provide more transparency and probity in its functioning in disturbed areas like Jammu and Kashmir and the northeast.
  • Major General Gautam Chauhan has taken charge as the first additional Director General (human rights) and will report directly to the Army vice–chief.

2. Sambalpur, where the Prime Minister of India, laid the foundation stone of IIM, is located in which state?

A) West Bengal

B) Odisha

C) Bihar

D) Uttarakhand

  • Prime Minister Narendra Modi laid the foundation stone for the permanent campus in the Indian Institute of Management (IIM) Sambalpur in Odisha. The institute has been functioning in a makeshift campus for more than five years, since it was launched as a third–generation IIM, in the year 2015–16.

3. Asian Waterbird Census 2021, which was seen in the news recently, is to be conducted in which state?

A) Kerala

B) Tamil Nadu

C) Andhra Pradesh

D) Gujarat

  • The annual waterbird census is to be conducted in the state of Andhra Pradesh, by the state forest department.
  • The regions included are the Coringa Wildlife Sanctuary, areas near Godavari estuary, Kolleru Lake, Atapaka Bird Sanctuary and Krishna Wildlife Sanctuary in Krishna estuary. Bombay Natural History Society (BNHS) and Wetland International will provide technical support.

4. Deepor Beel, which was seen in the news recently, is the only Ramsar site of which state?

A) Sikkim

B) Assam

C) Arunachal Pradesh

D) Manipur

  • Deepor Beel is the only Ramsar site of the state of Assam. It is located in the south–western edge of Guwahati. The site, which houses of a variety of aquatic life forms along with 219 species of birds, was designated a Ramsar site in the year 2002. The District officials has banned Community fishing at the site.

5. Lal Pahari, where the first hilltop Buddhist monastery of the Gangetic Valley has been found, is in which state?

A) Sikkim

B) Bihar

C) Himachal Pradesh

D) Manipur

  • The first hill–top Buddhist monastery of the Gangetic Valley has been found at Lal Pahari in Lakhisarai district of Bihar.
  • This is the first monastery located at the top of a hill. This is discovered during a joint collaboration of Bihar Heritage Development Society and the Visva–Bharati University, West Bengal. It was a Vihara, named as Srimaddharmaviharik aryabhiksusanghasya.

6. Sagarmala Development Company, which was seen in the news recently, will function under Union Ministry?

A) Ministry of Road Transport & Highways

B) Ministry of Shipping

C) Ministry of Communications

D) Ministry of Defense

  • Ministry of Ports, Shipping and Waterways is set to commence Seaplane services on select routes. It is called the Sagarmala Seaplane Services (SSPS).
  • It is to be implemented through a Special Purpose Vehicle (SPV) named the Sagarmala Development Company Ltd (SDCL), which will function under the administrative control of the Shipping Ministry. The SPV will also include airline operators.

7. Which Indian city has the maximum CCTV coverage, according to recent report published in South Asia Journal?

A) Mumbai

B) Chennai

C) Delhi

D) Hyderabad

  • According to a recent report published in South Asia Journal, Chennai has the maximum CCTV coverage per square kilometre and per 1,000 population. The report records the prevalence of CCTV cameras in 130 of the most populous cities in the world.
  • The report also highlights that China and India have the highest densities of CCTV surveillance cameras in urban areas.

8. What is the cap imposed on Trans Fatty Acids (TFA) in oils and fats for the year 2021?

A) 10%

B) 5%

E) 3%

D) 1%

  • India’s food regulator Food Safety and Standards Authority of India (FSSAI) has capped the quantum of trans fatty acids (TFA) in oils and fats to 3% for 2021. The cap is further reduced to 2% for 2022.
  • Trans fat are found to increase the risk of heart attacks and death from coronary heart disease. The WHO has called all its members to eliminate trans–fat by 2023.

9. Prayaas is the new initiative adopted by which PSU in India?

A) NTPC

B) IOCL

C) ONGC

D) HAL

  • Prayaas is the new community helping initiative adopted by Indian Oil Corporation (IOCL). Under this scheme, employees of IOCL Delhi Office would visit the night shelters located near IOCL’s fuel stations for distribution of blankets and essentials.
  • These night shelters are being run by the Government of Delhi and some NGOs to help the weaker section of the society.

10. Britain has recently ended taxation on which product?

A) Mobile Phones

B) Sanitary Products

C) Laptops

D) Paracetamol Tablets

  • Britain became the latest nation that has eliminated taxation on women’s sanitary products. These taxes were called “tampon tax” has been completely abolished in the country.
  • This decision was earlier announced in the country’s annual budget by its Treasury chief, but has been implemented only now, when Britain has left the European Union.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!