Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

6th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் முதன்முறையாகக் காணப்பட்ட ஃபெலிஸ் சில்வெஸ்ட்ரிஸ் ஆர்னேட் என்பது எந்த விலங்கின் அறிவியல் பெயராகும்?

அ) இந்தியப் பாலைவனப் பூனை 

ஆ) மான்

இ) ஆப்பிரிக்க சிறுத்தை

ஈ) ஆசிய யானை

  • மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக இந்தியப் பாலைவனப் பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “Felis silvestris ornate” என்பது இந்த இனத்தின் அறிவியல் பெயர். இந்தியப் பாலைவனப் பூனை பொதுவாக இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் காணப்படுகிறது.
  • இந்தியாவில் அழிந்து வரும் விலங்குகளுள் ஒன்றான மீன்பிடி பூனை, முன்னர் இக்காப்பகத்தில் காணப்பட்டது.

2. எந்தப் பொருளின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வை ஒத்திவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது?

அ) ஜவுளி 

ஆ) ஆட்டோமொபைல்

இ) கையடக்க தொலைபேசிகள்

ஈ) பருத்தி

  • GST கவுன்சில் கூட்டத்தில் ஜவுளிக்கான GST விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. விகித உயர்வை மறுபரிசீலனை செய்ய, அமைச்சர்கள் குழுவுக்கு இது பரிந்துரைத்துள்ளது.
  • பருத்தியில் தயாரிக்கப்படும் ஜவுளிகள் தவிர அனைத்து ஆயத்த ஜவுளிப் பொருட்களுக்கும் GST வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. `1,000’த்துக்கு குறைவான காலணிகளைத் தவிர மற்ற காலணிகளுக்கான GST விகிதம் 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத், மேற்கு வங்கம், இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு மாநில பிரதிநிதிகள் இந்த GST விகித உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

3. ஏழைகள் வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு `25/ஐ குறைத்த மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா

இ) ஜார்க்கண்ட் 

ஈ) கேரளா

  • ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஏழைகள் வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு `25/–க்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒவ்வொரு மாதமும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு இச்சலுகை வழங்கப்படும். ஏழை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் லிட்டருக்கு `25 செலுத்தப்படும்.

4. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, வங்கிக் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கான காலக்கெடு என்ன?

அ) ஜனவரி 31, 2022

ஆ) மார்ச் 31, 2022 

இ) ஜூன் 30, 2022

ஈ) செப்டம்பர் 30, 2022

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிக் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கான கடைசி தேதியை அடுத்த ஆண்டு மார்ச்.31 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • COVID–19’இன் புதிய திரிபினால் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இக்காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே முதல் விதிகளை தளர்த்தியது. KYC ஆவணங்கள் வாடிக்கையாளர்களால் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் வங்கிச் சேவைகளை தடைசெய்யக்கூடாது என்றும் RBI அறிவித்துள்ளது.

5. COVID’க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரிசெப்டர் பைண்டிங் டொமைன் (RBD) புரத உப–அலகு தடுப்பூசி எது?

அ) CORBEVAXTM 

ஆ) NOVAVAX

இ) DIVIVAX

ஈ) SEROVAXTM

  • COVID’க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரிசெப்டர் பைண்டிங் டொமைன் (RBD) புரத உப–அலகு தடுப்பூசி ‘CORBEVAXTM’ ஆகும்.
  • பயோலாஜிக்கல் இ லிட் உருவாக்கியுள்ள இந்தத் தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான இந்தியாவி –ன் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதியை சமீபத்தில் பெற்றுள்ளது. பயோடெக்னாலஜி துறை மற்றும் அதன் PSU பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) ஆகியவை பயோலாஜிக்கல் இ’இன் COVID–19 தடுப்பூசிக்கு ஆதரவளித்துள்ளன.

6. அண்மையில் 25 சீன J–10C போர் விமானங்களை வாங்கிய நாடு எது?

அ) ஆப்கானிஸ்தான்

ஆ) பாகிஸ்தான் 

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

  • பாகிஸ்தான் வான்படைக்கு குறைந்தது 25 சீன ஜே–10சி போர் விமானங்களை வாங்குவதை பாகிஸ்தான் அரசு உறுதிசெய்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் பிரான்சின் ரபேல் போர் விமானங்களுக்கு மாற்றாக இந்த ஜெட் விமானங்கள் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தானிலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F–16 ஜெட் விமானங்கள் உள்ளன.

7. சூர்யா பிராந்திய நீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்ப –டுகிற மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) மகாராஷ்டிரா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தெலுங்கானா

  • சூர்யா பிராந்திய நீர் வழங்கல் திட்டம் மும்பையில் செயல்படுத்தப்படுகிறது. இது மும்பையின் மேற்கு துணை பிராந்தியத்தில் உள்ள இரண்டு மாநகராட்சிகளுக்கு ஒரு நாளைக்கு 403 மில்லியன் லிட்டர் நீர் விநியோகத்தை செய்கிறது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் திட்டத்தின் முதல் சுரங்கப்பணியை நிறைவு செய்துள்ளது. இந்தத் திட்டம் 2023 வரை கட்டம் கட்டமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. Trace Gas Orbiter எந்தக் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது?

அ) வெள்ளி

ஆ) செவ்வாய் 

இ) வியாழன்

ஈ) சனி

  • “ExoMars TGO” என்றும் அழைக்கப்படுகிற Trace Gas Orbiter ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் இரஷ்ய ரோஸ்கோஸ்மோஸ் ஏஜென்சி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாகும். Trace Gas Orbiter 2016இல் செவ்வாய்க்கோளை அடைந்து 2018இல் அதன் முழுப்பணியைத்தொடங்கியது.
  • சமீபத்தில், அவ்விண்கலத்தால் எடுக்கப்பட்ட புதிய படம் வஸ்டிடாஸ் பொரியாலிஸ் பகுதியில் ஒரு சிறிய பள்ளம் இருப்பதைக் காட்டுகிறது. இப்பள்ளம் ஓரளவு நீர் பனியால் நிரம்பியுள்ளது.

9. ‘தேஜாஸ்’ என்பது பின்வரும் எந்நாட்டுடன் இணைந்து இந்தியாவால் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்?

அ) அமெரிக்கா

ஆ) ஐக்கிய அரபு அமீரகம் 

இ) ஆஸ்திரேலியா

ஈ) பிரான்ஸ்

  • “தேஜாஸ்” / அமீரக பணிகள் மற்றும் திறன்களுக்கான பயிற்சியின் புதிய திட்டத்தின்கீழ், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முன்னணி பணியமர்த்துநர்களுடன் அரசாங்கம் கூட்டு சேர்ந்துள்ளது. இது ஒரு ஆண்டில் 10,000 இந்திய பணியாளர்களுக்கும், அடுத்த 5 ஆண்டுகளில் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பிராந்தியத்தில் 100,000 தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளித்து, சான்றளித்து, பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. ஜியுவான்–1 02இ என்ற புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா 

இ) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஈ) இஸ்ரேல்

  • சீனா தனது Chang Zheng 4C ஏவுகலம்மூலம் ‘Ziyuan–1 02E’ என்ற புதிய புவி வள கண்காணிப்பு செயற்கைக் கோளை நிலைநிறுத்தியுள்ளது. ஒரு தொழிற்முறை சாரா வானொலியான ‘CubeSat’ உடன் இச்செயற்கைக்கோள் சமீபத்தில் ஏவப்பட்டது.
  • ‘வளம்’ எனப்பொருள்படும் ஜியுவான் ரிமோட்–சென்சிங் செயற்கைக்கோள்களின் வரிசையிலுள்ளது. இது உயர் தெளிவுத்திறன் கொண்ட நிழற்படங்களை எடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • புவியின் வளங்களை ஆய்வு செய்வதற்கும், பேரிடர் மேலாண்மைக்கும், நிலப்பயன்பாட்டு கண்காணிப்புக்கும் இப்படங்கள் பயன்படுத்தப்படலாம்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சிறப்பு முகாமில் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,12,26,750 பேர் ஆண்கள். 3,23,91,256 பேர் பெண்கள். 18 –19 வயதுள்ள 4,32,600 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தில் 7,804 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.

சோழிங்கநல்லூரில் (7,11,755) அதிக வாக்காளர்களும், கீழ்வேளூரில் (1,78,517) குறைவான வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் 10.10 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

2. `1,000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது: தூத்துக்குடியில் நாட்டின் முதலாவது “சர்வதேச பர்னிச்சர் பூங்கா”

இந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடியில் `1,000 கோடி மதிப்பீட்டில், 1,150 ஏக்கர் பரப்பளவில் ‘சர்வதேச பர்னிச்சர் பூங்கா’ அமைக்கப்படுகிறது. இந்தப்பூங்காமூலம் `4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

பர்னிச்சர் தொழிலுக்கு என நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்தப் பூங்கா அமைகிறது. மர அரவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இப்பூங்காவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பர்னிச்சர் உற்பத்தி தொடங்கி பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து நிறுவனங்களும் இந்தப் பூங்காவில் இடம் பெறுகின்றன.

3.5 லட்சம் பேருக்கு வேலை

பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுக்கு 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் கூடம், பர்னிச்சர்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம் பெறும். இந்தப் பூங்கா மூலம் சுமார் `4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக சிப்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் நாட்டில் 3–வது இடத்தில் உள்ளது.

இவற்றைக் கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களைப் பயன்படுத்தும் வகையிலும் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது.

3. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (EWS) மருத்துவ மேற்படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பதில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10% இடங்களை ஒதுக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி முதல் ஆண்டு வகுப்பில் 10% இடங்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முற்பட்டது. இதையடுத்து, அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நீட் கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே, ஆண்டுக்கு `8 இலட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ எஸ் போபண்ணா, சூர்யகாந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, இந்த வழக்கு மேற்கண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வால் நேற்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை இரண்டாக குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி இரமணா நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், ஏ எஸ் போபண்ணா ஆகியோர் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தவுள்ளது. அதேபோல் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

4. சென்னை ஐஐடி.யில் ‘சாரங் 2022’ கலாசார விழா இன்று தொடக்கம்:

சென்னை ஐஐடி.யில் ‘சாரங் 2022’ கலை- கலாசார விழா வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. அதில் 100’க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியை மாணவர்களே முன்னின்று நடத்துவர். அந்த வகையில் 27ஆவது ஆண்டாக ‘சாரங் 2022’ கலை கலாசார விழா மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான கலாசார விழாவின் கருப்பொருள் ‘செவிவழி அறிவு மற்றும் மரபுகள்’ என்பதாக இருக்கும்.

5. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக மாற்றுவோம்

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையில் கூறியிருப்பது:

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றிட தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இந்த அரசாங்கம் பொறுப்பேற்றபின், கடந்த 7 மாதங்களில் 3 முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியது. இதன் பயனாக `56,230 கோடி முதலீட்டில் 1 லட்சத்து 74,999 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதில், இதுவரை `21,508 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக்கொள்கை ஆகிய 2 புதிய கொள்கைகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பொருளாதாரம், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை அடைய இக்கொள்கைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

தரவு மையங்களின் முகவரி: தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கி, நிர்வாகத்திறனை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகு -ம். பல்வேறு துறைகளின் தரவுகளை, ஒருங்கிணைத்து ஆராய்வதன்மூலம், அரசுத் திட்டங்களின் பலன்களை உரிய பயனாளிகளுக்கு கொண்டு செல்வதே தரவுத் தூய்மைத் திட்டத்தின் நோக்கமாகும்.

வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வையும் மேம்படு -த்தி, கோப்புகளின் மீது விரைவாக முடிவெடுக்கவும் மின் அலுவலக முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் சொத்துகளைத் திறம்பட மேலாண்மை செய்வதற்குத் தகுந்த தொழில்நுட்ப -த்துடன் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு ஒன்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தரவு மையங்களில் `30,000 கோடி அளவிலான முதலீட்டை ஈர்த்து, தரவுமைய முதலீடுகளின் முகவரியாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. மேலும், அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும் தரவுமையங்கள் அமைப்பதை எளிதாக்குவ
-தற்கும் “தரவுமையக்கொள்கை-2021” என்ற புதிய கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

6. சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலா கொள்கை – ஆளுநர்

தமிழகத்தில் சுற்றுலா மூலம் பொருளாதாரம் பொலிவு பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும், சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலாக் கொள்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், இந்த ஆண்டில் `2,989 கோடி மதிப்பீட்டில் 894 கிமீ சாலை
-களை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னைப் பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, `407 கோடி மதிப்பீட்டில் பரங்கிமலை – மேடவாக்கம் சாலை சந்திப்பில் கீழ்பாலம், பரங்கிமலை – பூந்தமல்லி – ஆவடி சாலையில் பல்வழி மேம்பாலம், மத்திய கைலாச சந்திப்பில் மேம்பாலம் என மூன்று முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வரால் அறிவிக்கப்பட்ட, மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தினால், கடந்த நான்கு மாதங்களில் மகளிர் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தி -ற்கு வழிவகை செய்யும். ஒருங்கிணைந்தப் பன்முறை நகரப்போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்கும், பயணிகளுக்குச் செல்லிடம் வரை போக்குவரத்து இணைப்பை வழங்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பார் போற்றும் வரலாறு, செழுமையான பண்பாடு, இயற்கை வளங்களின் அழகியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதன் வாயிலாக, மாநிலத்தில் சுற்றுலா மூலம் பொருளாதாரம் பொலிவு பெறுவதற்கான திட்டம் அரசால் வகுக்கப்படும்.

இந்த ஆண்டு, சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலாக் கொள்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7. புதுச்சேரியில் அட்சய பாத்திரம் மதிய உணவுத் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் தனியார் பங்களிப்புடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அட்சய பாத்திரம் மதிய உணவுத் திட்டத்தை துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என் ரங்கசாமி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

1. Felis silvestris ornate is the scientific name of which animal, spotted for the first time in Madhya Pradesh’s Panna Tiger Reserve?

A) Indian Desert Cat 

B) Deer

C) African Leopard

D) Asian Elephant

  • An Indian Desert Cat has been spotted for the first time in Madhya Pradesh’s Panna Tiger Reserve (PTR). “Felis silvestris ornate” is the scientific name of the species. The Indian Desert Cat is usually found at the Thar desert in Rajasthan. A fishing cat, one of the endangered animals in India, was earlier spotted in the reserve.

2. The GST Council has decided to defer the increase in GST Rate on which product?

A) Textile 

B) Automobile

C) Mobile Phones

D) Cotton

  • The GST Council decided to defer the increase in the rate for textiles to 12% from 5%. It has referred the matter to a panel of Ministers, to review Rate Rationalisation. The GST on all readymade textile items, except those made with cotton, was earlier hiked to 12 per cent. The GST on footwear, except those below Rs 1,000, was also hiked to 12 per cent from 5 per cent. State representatives from Gujarat, West Bengal, Rajasthan and Tamil Nadu opposed the hike.

3. Which state government slashed Rs 25 per litre on petrol price for two–wheelers owned by the poor?

A) Tamil Nadu

B) Odisha

C) Jharkhand 

D) Kerala

  • Jharkhand Chief Minister Hemant Soren announced concession of Rs 25 per litre on petrol price for two–wheelers owned by the poor. The concession will be given for 10 litres of petrol for every month. An amount of Rs 25 per litre would be transferred to the bank account of poor ration card holders.

4. What is the deadline for KYC updation for bank accounts, as per the recent notification of RBI?

A) January 31, 2022

B) March 31, 2022 

C) June 30, 2022

D) September 30, 2022

  • The Reserve Bank of India (RBI) has extended the last date for KYC updation for bank accounts by three months to March 31 next year. The deadline has been extended due to prevalent uncertainty due to new variant of COVID–19.
  • RBI had relaxed the rules first in May last year due to pandemic. It also announced that banking services should not be restricted because the KYC documents are not updated by the customer.

5. Which is India’s first indigenously developed Receptor Binding Domain (RBD) protein sub–unit vaccine for COVID–19?

A) CORBEVAXTM

B) NOVAVAX

C) DIVIVAX

D) SEROVAXTM

  • India’s first indigenously developed Receptor Binding Domain (RBD) protein sub–unit vaccine for COVID–19 is CORBEVAXTM. The vaccine, which has been developed by Biological E Limited, has recently received the Drug Controller General of India (DCGI) approval for Emergency Use Authorization (EUA).
  • The Department of Biotechnology (DBT) and its PSU Biotechnology Industry Research Assistance Council (BIRAC), have supported Biological E’s COVID–19 vaccine candidate.

6. Which country has recently purchased 25 Chinese J–10C fighter jets?

A) Afghanistan

B) Pakistan 

C) Sri Lanka

D) Bangladesh

  • The Pakistan Government has confirmed the purchase of at least 25 Chinese J–10C fighter jets for the Pakistan Air Force. Pakistan claims these jets as an alternative to France’s Rafale fighter jets owned by India. Pakistan also has a fleet of US–made F–16s jets.

7. Surya Regional Water Supply Project, is being implemented in which state?

A) Karnataka

B) Maharashtra 

C) Andhra Pradesh

D) Telangana

  • Surya Regional Water Supply Project is being implemented in Mumbai, which will provide 403 million litres per day (MLD) water supply to two Municipal Corporations, at the western sub–region of Mumbai. Mumbai Metropolitan Regional Development Authority (MMRDA) has achieved the first tunnel breakthrough of the project. The project is expected to be completed in phases till 2023.

8. Trace Gas Orbiter was launched to analyse the atmosphere of which planet?

A) Venus

B) Mars 

C) Jupiter

D) Saturn

  • The Trace Gas Orbiter, also called as ExoMars TGO is a collaborative project between the European Space Agency (ESA) and the Russian Roscosmos agency. Trace Gas Orbiter (TGO) arrived at Mars in 2016 and began its full mission in 2018. Recently, a new image taken by the spacecraft shows a small crater in the Vastitas Borealis region. The crater is partially filled with water ice.

9. ‘Tejas’ is a new programme, launched by India in association with which country?

A) USA

B) UAE 

C) Australia

D) France

  • Under the new programme of Tejas, or Training in Emirate Jobs & Skills, the Government has partnered with leading employers in the UAE to train certify and place Indian workers in the Gulf countries.
  • It aims to train, certify and place 10,000 Indian workers in a year and 100,000 workers across the Gulf Cooperation Council region over the next 5 years.

10. Ziyuan–1 02E satellite is a new Earth Observation Satellite launched by which country?

A) Japan

B) China 

C) UAE

D) Israel

  • China has deployed a new Earth resources observation satellite named ‘Ziyuan–1 02E’, via its Chang Zheng 4C rocket. The satellite, along with an amateur radio CubeSat, lifted off recently.
  • Ziyuan (ZY), meaning Resource, is a series of remote–sensing satellites, that aim to acquire high–resolution images. The images can be used for surveying Earth resources, disaster management, and land use monitoring.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!