Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

6th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

6th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas” (SHRESTHA) திட்டத்தை அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 

ஆ. கல்வி அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது “Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas” (SHRESTHA) திட்டத்தைத் தொடங்கியது. இது ஏழை பட்டியல் இன மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் SHRESHTA (NETS)–க்கான தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திறமையான SC மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் CBSE உடன் இணைக்கப்பட்ட நல்ல தரமான தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.

2. சுற்றுலா அமைச்சகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து, ‘நிலையான சுற்றுலாவுக்கான தேசிய உத்தி’யை அறிமுகப்படுத்தியது?

அ. FAO

ஆ. UNEP 

இ. உலக வங்கி

ஈ. உலகப் பொருளாதார மன்றம்

  • மத்திய சுற்றுலா அமைச்சகம், ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் இந்திய பொறுப்பு சுற்றுலா சங்கம் (RTSOI) ஆகியவற்றுடன் இணைந்து, புது தில்லியில் ‘நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவ –தற்கான தேசிய உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்தது. இச்சந்தர்ப்பத்தில், சுற்றுலா அமைச்சகம் ‘நிலையான சுற்றுலா மற்றும் பொறுப்பான பயணிகள்’ திட்டத்திற்கான தேசிய உத்தியை’ அறிமுகப்படுத்தியது.

3. 2022 – உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest in our Planet

ஆ. Only One Earth 

இ. 50th Environment Day

ஈ. Live with the Nature

  • மதிப்புக்கேடான சுற்றுச்சூழல் நிலைகள் மற்றும் சூழல் பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) என்பது உலகெங்கிலும் உள்ள நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தும் ஒரு மைய நிறுவனமாகும். 2022 ஆம் ஆண்டு 50ஆவது உலக சுற்றுச்சூழல் நாளைக் குறிக்கிறது. சுவீடன், இந்த ஆண்டு நிகழ்வின் தொகுப்பாளராக உள்ளது. ‘Only One Earth’ என்பது 2022 – உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

4. கர்ப்பிணிப்பெண்களுக்காக, ‘அஞ்சல்’ என்ற சிறப்பு சுகாதாரத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. இராஜஸ்தான் 

இ. உத்தர பிரதேசம்

ஈ. கேரளா

  • கர்ப்பிணிப் பெண்களுக்காக கரௌலி மாவட்டத்தில், ‘அஞ்சல்’ என்னும் சிறப்பு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம் அறிமுகப்படுத்தியது. இந்தச்சமயத்தின்போது, 13000 கர்ப்பிணிப்பெண்களுக்கு அவர்களின் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்து, சரியான மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

5. 2021–22–க்கான ‘தொழிலாளர்’ வருங்கால வைப்புநிதி (EPF) வைப்புகளுக்கு அரசாங்கத்தால் ஒப்பளிக்கப்பட்ட புதிய வட்டி வீதம் என்ன?

அ. 8.7%

ஆ. 8.5%

இ. 8.1% 

ஈ. 7.5%

  • 2021–22ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புகளுக்கு முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திற்கு மாற்றாக 8.1 சதவீத வட்டி வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 8.1 சதவீத EPF வட்டி வீதமானது 1977–78இல் வழங்கப்பட்ட 8 சதவீதத்திற்குப் பின் வழங்கப்படுகிற மிகக் குறைந்த வட்டிவீதமாகும். EPF வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது மற்றும் 2021ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

6. சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன் சார்ந்த விளையாட்டு எது?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. குத்துச்சண்டை 

ஈ. ஸ்குவாஷ்

  • தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதான குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் பிளைவெயிட் (52 கிலோ) பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சாம்பியன்ஷிப்பை வென்ற ஐந்தாவது இந்தியப்பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றார். கடந்த 2009ஆம் ஆண்டில் தனது குத்துச்சண்டை பயணத்தைத் தொடங்கிய அவர், 2011இல் இளையோர் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார் மற்றும் 2016–இல் மூத்த உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதி வரை சென்றார்.

7. இந்தியாவின் முதல், ‘போர் விளையாட்டுக்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்’ (WARDEC) அமையவுள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி 

இ. கொச்சி

ஈ. விசாகப்பட்டினம்

  • இராணுவப் பயிற்சிக் குழு, காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் இணைந்து புது தில்லியில் ‘போர்–விளையாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை’ உருவாக்குதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ‘WARDEC’ எனப்பெயரிடப்பட்ட இத்திட்டம், நாட்டின் முதல் உருவகப்படுத்துதல் அடிப்படையிலா –ன பயிற்சி மையமாக இருக்கும். இது மெய்நிகர் அடிப்படையிலான போர்–விளையாட்டுகளை வடிவமைக்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும்.

8. ‘கலாம்–100 ஏவுகணை’ சோதனையை வெற்றிகரமாக நடத்திய விண்வெளி நிறுவனம் எது?

அ. NSIL

ஆ. ஸ்கை ரூட் 

இ. பிக்ஸ்ஸெல்

ஈ. அக்னிகுல்

  • ஹைதராபாத்தைச் சார்ந்த விண்வெளி தொழில்நுட்ப துளிர் நிறுவனமான ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் அதன் ‘கலாம்–100’ ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இது விக்ரம்–1 ஏவுகணையை இயக்கும். இதன் 3ஆம் கட்டத்திற்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் ஆபஜெ அப்துல்கலாமின் நினைவாக கலாம்–100 எனப்பெயரிடப்பட்டது. விக்ரம்–1 கலம் தாழ் சரிவு வட்டணையில் 480 கிகி முதல் 500 கிலோமீட்டர் வரை சரக்குகளைக் கொண்டுசெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

9. அந்தோனி அல்பானீஸ் என்பார் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்?

அ. ஐக்கிய பேரரசு

ஆ. பிரான்ஸ்

இ. ஆஸ்திரேலியா 

ஈ. நியூசிலாந்து

  • அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அதிபர் தேர்தலில், தொழிலாளர் கட்சி 72 இடங்களை வென்றது. ஸ்காட் மோரிசனின் தாராளவாத தேசிய கூட்டணி 52 இடங்களை வென்றது. அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி 2013–க்குப் பிறகு முதன்முறையாக ஆட்சிக்கு வரவுள்ளது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் பழமைவாத அரசாங்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.

10. 2022 – பல்லுயிர் பெருக்கத்திற்கான உலக நாளின் கருப்பொருள் என்ன?

அ. Building a shared future for all life 

ஆ. Inclusive and Inspiring

இ. Rights for All life

ஈ. Co–exist and Co–operate

  • பல்லுயிர் பெருக்கத்திற்கான உலக நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.22 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. “Building a shared future for all life” என்பது நடப்பாண்டில் (2022) வரும் பல்லுயிர் பெருக்கத்திற்கான உலக நாளுக்கானக் கருப்பொருளாகும். உலகில் பல்லுயிர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை ஐநா சபை அறிவித்தது. சென்னையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பல்லுயிர் பெருக்கங்குறித்த கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ‘ஜன் சமர்த்’ வலைதளத்தை இன்று தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் கடனுதவித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ‘ஜன் சமர்த்’ வலைதளத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன்.6 அன்று தொடக்கிவைக்கிறார்.

நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் ஒருபகுதியாக மத்திய நிதித்துறை, வர்த்தகத்துறை அமைச்சகங்களுக்கான ‘சிறப்பு வார’ கொண்டாட்டங்களைப் பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார். அதில், கடந்த 8 ஆண்டுகளில் இரு அமைச்சகங்களின் பயணங்களை விவரிக்கும் எண்ம கண்காட்சி இடம்பெறவுள்ளது. ஜூன்.6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

மத்திய அரசு செயல்படுத்திவரும் கடனுதவித்திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘ஜன் சமர்த்’ வலைதளத் -தையும் பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார். கடன் வழங்குவோரையும் பெறுவோரையும் ஒரே தளத்தில் சந்திக்கச் செய்து, கடன் பெறும் நடவடிக்கையை எளிதாக்குவதற்கு இந்த வலைதளம் உதவும்.

எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி கடன் பெற்று பல்வேறு துறைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த இந்த வலைதளம் வழிவகுக்கும் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 75ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, `1, `2, `5, `10, `20 நாணயங்களின் சிறப்புத் தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

2. பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு இலக்கு நிறைவேறியது

மத்திய அரசு திட்டமிட்டதைவிட ஐந்து மாதங்களுக்கு முன் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. பின்னர், இந்த இலக்கை முன்கூட்டியே அடையும் நோக்கில், 2025-26-க்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதற்கான வழிமுறைகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கானது தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் நவம்பரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக 10 சதவீதத்தை எட்டியுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் இச்சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, `41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணியை சேமிக்க வழிவகை செய்தது. மேலும் மாசு உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்து, `40,600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு விரைவாக செலுத்த வழிவகுத்தது.

இதன்மூலம் 2025-26-க்குள் எத்தனால் கலப்பு திட்டம் 20 சதவீத இலக்கை எட்டும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் விரிவடையும் என்றும் எண்ணெய் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3. சாம்பியன் நடால்: பிரெஞ்சு ஓபன்-14, கிராண்ட்ஸ்லாம்-22

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நார்வேயின் கேஸ்பர் ரூடை 6-3 6-3, 6-0 என்ற நேர்செட்களில் வீழ்த்தி 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார் ஜாம்பவான் ரபேல் நடால். மேலும் இது அவர் வெல்லும் 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

டென்னிஸ் உலகில் பெடரர், நடால், ஜோகோவிச் உள்ளிட்டோர் ‘பிக் 3’ என அழைக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் நடால் 21 முறையும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 முறையும் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளனர். பிரெஞ்சு ஓபனில் மட்டுமே 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் நடால்.

ஒரே ஆண்டில் ஆஸி, பிரெஞ்சு ஓபன் பட்டம்:

மேலும் ஒரே ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் பட்டங்களை நடால் வெல்வது இதுவே முதன் முறையாகும். மேலும் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார் நடால்.

1. Which Union Ministry launched the “Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas” (SHRESTHA) scheme?

A. Ministry of Social Justice and Empowerment 

B. Ministry of Education

C. Ministry of Women and Child Development

D. Ministry of Tribal Affairs

  • The Ministry of Social Justice and Empowerment launched “Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas” (SHRESTHA). It aims to provide quality education and opportunities for the poorest Scheduled Caste students. Under this scheme, a certain number of meritorious SC students per year will be selected through a National Entrance Test for SHRESHTA (NETS), conducted by the National Testing Agency (NTA). They will be admitted in the good private residential schools, affiliated to CBSE.

2. Ministry of Tourism launched the ‘National strategy for sustainable tourism’ along with which organisation?

A. FAO

B. UNEP 

C. World Bank

D. World Economic Forum

  • Ministry of Tourism, in association with the United Environment Program (UNEP) and Responsible Tourism Society of India (RTSOI) organised the ‘National summit on developing sustainable and responsible tourist destinations’ in New Delhi. On this occasion, the Ministry of Tourism launched the national strategy for sustainable tourism and the responsible traveller campaign.

3. What is the theme of the ‘World Environment Day 2022’?

A. Invest in our Planet

B. Only One Earth 

C. 50th Environment Day

D. Live with the Nature

  • The World Environment Day is celebrated every year on June 5, to raise awareness about degrading environmental conditions and environment protection. The United Nations Environment Programme (UNEP) is the nodal agency that organises and supports events across the world. The year 2022 marks the 50th World Environment Day. Sweden is the host of the event this year and the theme is ‘Only One Earth’.

4. Which state launched a special Health Care scheme called ‘Anchal’ for pregnant women?

A. Tamil Nadu

B. Rajasthan 

C. Uttar Pradesh

D. Kerala

  • Rajasthan launched a special Health Care scheme ‘Anchal’ in the Karauli district for pregnant women. During the campaign, over 13000 pregnant women were tested for their haemoglobin levels and are advised to take right medicines.

5. What is the new rate of interest ratified by the Government for the ‘employees’ provident fund (EPF) deposits for 2021–22’?

A. 8.7%

B. 8.5%

C. 8.1% 

D. 7.5%

  • The Government has approved 8.1 per cent rate of interest on employees’ provident fund (EPF) deposits for the year 2021–22, from 8.5 per cent provided in the previous year. The 8.1 per cent EPF rate of interest is the lowest since 1977–78, when it stood at 8 per cent. The interest rate on EPF deposits was decided by the Central Board of Trustees (CBT) and was ratified by the finance ministry 2021.

6. Nikhat Zareen, who recently won a gold medal for India in World Championship, plays which sports?

A. Table Tennis

B. Badminton

C. Boxing 

D. Squash

  • 25–year–old boxer from Telangana Nikhat Zareen won the gold medal in the women’s World Boxing Championships in the flyweight (52 kg) category. She also became only the fifth Indian woman to win the championship. Nikhat started her boxing journey in 2009, won the youth world championship in 2011 and reached till quarter finals of senior world championship in 2016.

7. India’s first ‘Wargame Research and Development Centre’ (WARDEC) is announced to be set up in which city?

A. Mumbai

B. New Delhi 

C. Kochi

D. Visakhapatnam

  • The Army Training Command signed a memorandum of understanding (MoU) with Rashtriya Raksha University (RRU), Gandhinagar to develop a ‘War–game Research and Development Centre’ in New Delhi. The project named ‘WARDEC’, will be a first–of–its–kind simulation–based training centre in India that will use artificial intelligence (AI) to design virtual reality war–games.

8. Which space company successfully conducted a static fire test of ‘Kalam–100 rocket’?

A. NSIL

B. Sky root 

C. Pixxel

D. Agnikul

  • Hyderabad–based space technology start–up Skyroot Aerospace successfully conducted a static fire test of its Kalam–100 rocket that will power the Vikram–1 launch vehicle. The third stage, named Kalam–100 after former President APJ Abdul Kalam. The Vikram–1 vehicle has been designed to deliver 480 kilograms to 500 kilometers of cargo in the Low Inclination Orbit.

9. Anthony Albanese has won the Presidential Elections of which country?

A. United Kingdom

B. France

C. Australia 

D. New Zealand

  • In the recently held Australian Presidential Elections, Labor Party won at least 72 seats, compared with 52 of Scott Morrison’s Liberal–National Coalition. Anthony Albanese–led Labor Party is set to come into power for the first time since 2013. Prime Minister Scott Morrison’s conservative government conceded defeat.

10. What is the theme of the ‘International Day for Biological Diversity 2022’?

A. Building a shared future for all life 

B. Inclusive and Inspiring

C. Rights for All life

D. Co–exist and Co–operate

  • International Day for Biological Diversity is observed on May 22 every year. The theme for this year is “Building a shared future for all life”. The United Nations proclaimed the day, which aims to spread awareness about issues of biodiversity in the world. Union Minister for Environment, Forest and Climate change Bhupender Yadav inaugurated Biological Diversity Exhibition at Chennai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!