Tnpsc

6th March 2020 Current Affairs in Tamil & English

6th March 2020 Current Affairs in Tamil & English

6th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

6th March 2020 Current Affairs Tamil

6th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. இராஜீவ் குமாரை அடுத்து இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. துகின் காந்த் பாண்டே

ஆ. அஜய் பூஷண் பாண்டே

இ. அதானு சக்ரவர்த்தி

ஈ. ரகுராம் ராஜன்

 • இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக தற்போதைய வருவாய் செயலர் அஜய் பூஷண் பாண்டேவை நியமிப்பதற்கு, அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. வயது மூப்பின் காரணமாக கடந்த மாதம் பணிஓய்வுபெற்ற முன்னாள் நிதிச்செயலாளர் இராஜீவ் குமாரை அடுத்து அஜய் பூஷண் பாண்டே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களிலும் மிக மூத்தவரும் அதிகாரம்மிக்கவருமாக இருப்பவர் பொதுவாக நிதிச்செயலாளர் எனப்படுகிறார். தேபாசிஷ் பாண்டா, அண்மையில் நிதிச்சேவைத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை, லோக்பால் விசாரித்து தீர்த்துவைப்பதற்கான காலவரையறை என்ன?

அ. 21 நாட்கள்

ஆ. 30 நாட்கள்

இ. 45 நாட்கள்

ஈ. 60 நாட்கள்

 • லோக்பால் என்பது நடுவணரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஓர் உச்சபட்ச அமைப்பாகும். பெறப்பட்ட எந்தவொருபுகாரையும் லோக்பால் 30 நாட்களுக்குள் விசாரித்து தீர்வுகாணும். லோக்பாலின் முதல் தலைவராக, நீதிபதி பினாக்கி சந்திர கோசுக்கு குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சத்தியப்பிரமாணம் செய்துவைத்தார். சமீபத்தில், அரசு ஊழியர்களுக்கு (பிரதம அமைச்சர் உட்பட) எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பாலில் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

3. ‘முதலமைச்சர் தால் பட் யோஜனா’ என்பது எந்த மாநில அரசின் மானிய உணவுத் திட்டமாகும்?

அ. உத்தரபிரதேசம்

ஆ. பீகார்

இ. ஜார்கண்ட்

ஈ. மேற்கு வங்கம்

 • ஜார்க்கண்ட் மாநில அரசு, அண்மையில், 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனது வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. வேலையற்ற பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி இளையோர்களுக்கு ஆண்டுக்கு `5000 முதல் `7000 வரை நிதியுதவி வழங்கப்படும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 100 அலகு இலவச மின்சாரம் வழங்கவும், மாநிலம் முழுவதும் 100 மொஹல்லா பரமாரிப்பு மையங்கள் அமைக்கவும் அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது. மாநிலத்தின் ஏழை மக்களுக்கு `5 விலையில் உணவு வழங்குவதற்காக, ‘முதலமைச்சர் தால் பட் யோஜனா’ என்றவொரு திட்டத்தையும் அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.

4. மார்ச் 1-7 வரையிலான காலப்பகுதி, நாடு முழுவதும் எதன் நினைவு வாரமாக கொண்டாடப்படுகிறது?

அ. தூய்மை இந்தியா வாரம்

ஆ. வேளாண் வாரம்

இ. ஜன ஆஷாதி வாரம்

ஈ. பெண் குழந்தைகள் பாதுகாப்பு வாரம்

 • 2020 மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை ஜன ஆஷாதி வாரமும், மார்ச் 7 அன்று ஜன ஆஷாதி வெற்றிநாளும் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின்போது, உடல்நலப் பரிசோதனை முகாம், இலவச மருத்துவர் ஆலோசனை, இலவச மருந்து விநியோகம் போன்ற பல நடவடிக்கைகள் ஜன ஆஷாதி மையங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. “பிரதான் மந்திரி பாரதிய ஜன ஆஷாதி பரியோஜனா” என்பது இரசாயன மற்றும் உர அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மருந்துகள் துறையின் ஒரு முயற்சியாகும். அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

5. 2020 மார்ச் மாதத்துக்கான ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. நேபாளம்

 • ஐ.நா பாதுகாப்புக்குழுவின் 2020 மார்ச் மாதத்தின் தலைவர் நாடாக சீனா பதவியேற்றுள்ளது. பன்னாட்டளவில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக, ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தால் இப் பாதுகாப்புக்குழு நிறுவப்பட்டது. இந்த அவையில் பதினைந்து உறுப்பினர்கள் உள்ளனர் (ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஈராண்டு பதவிக்காலம் உடைய பத்து நிரந்தரமற்ற உறுப்பினர்கள்). இந்த 15 உறுப்பினர்களும், ஒவ்வொரு மாதமும் சுழற்சி அடிப்படையில் ஐ.நா பாதுகாப்புக் குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்கள்.

6. சுற்றித்திரிகிற கால்நடைகளை தமது வீடுகளில் வளர்க்கும் வேளாண் பெருமக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

 • போக்கிடமற்று வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தமது வீடுகளில் வளர்ப்பதோடு அவைகட்கு தங்குமிடமும் வழங்க தயாராகவுள்ள உழவர் பெருமக்களுக்கு மாதந்தோறும் `900 நிதியுதவி வழங்க உத்தரபிரதேச மாநில அரசு செய்துள்ளதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்தார். உத்தரபிரதேச மாநில அரசும், அவ்வாறான கால்நடைகளுக்கு தங்குமிடம் ஏற்படுத்த முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

7. கூட்டுறவு வங்கிகளை ஒழுங்காற்றுவதற்காக, ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க, எந்தச் சட்டம் திருத்தப்படவுள்ளது?

அ. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்

ஆ. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்

இ. கூட்டுறவு சங்கங்கள் சட்டம்

ஈ. பல்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம்

 • 2020ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முன்மொழியப்பட்ட மசோதா, கூட்டுறவு வங்கிகளை ஒழுங் -காற்றுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • இம்மசோதா இந்திய ரிசர்வ் வங்கியைக்கொண்டு துறைமைத்திறம், மூலதன அணுகல் மற்றும் வங்கி நடைமுறைகளை மேம்படுத்துவதன்மூலம் கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த முயற்சி செய்கிறது. நிர்வாகச்சிக்கல்கள் அனைத்தும் கூட்டுறவு பதிவாளராலேயே வழிநடத்தப்படும்.

8. வர்த்தகம் தொடர்பான சட்டத்துக்குப்புறம்பான பணப்புழக்கங்கள் குறித்த அண்மைய அறிக்கையின்படி, 135 நாடுகளுள் இந்தியா பெற்றுள்ள இடம்?

அ. ஒன்று

ஆ. மூன்று

இ. ஐந்து

ஈ. ஏழு

 • Global Financial Integrity என்னும் அமெரிக்காவைச் சார்ந்த மதியுரையகம், அண்மையில், “135 வளரும் நாடுகளில் வர்த்தகம் தொடர்பான சட்டத்துக்குப் புறம்பான பணப்புழக்கங்கள்: 2008-2017” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, சீனா ($457.7 பில்லியன் டாலர்), மெக்ஸிகோ, இந்தியா, இரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
 • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.05 சதவீதத்திற்கு சமமான $83.5 பில்லியன் டாலர் நிதியுடன் (`6.14 டிரில்லியன்) அரசாங்கத்தின் வரி வலையிலிருந்து தப்பிக்கும் மூன்றாவது மிகவதிக வர்த்தகம் தொடர்பான சட்டவிரோத பணப்புழக்கம் இந்தியாவில் உள்ளது.

9. 128ஆவது, ‘Commonwealth Points of Light’ விருதைப் பெற்றவர் யார்?

அ. இராஜேந்திர சிங்

ஆ. ஜாதவ் பயெங்

இ. அஃப்ரோஸ் ஷா

ஈ. சுதர்ஷன் பட்நாயக்

 • ‘வன மனிதன்’ என பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜாதவ் பயெங், 128ஆவது ‘Commonwealth Points of Light’ விருதைப் பெற்றுள்ளார். 57 வயதான இவர், பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள தனித்துவிடப்பட்ட ஒரு மணல்திட்டை வனவிலங்குகளுக்கான ஒரு பரந்த தங்குமிட -மாக மாற்றியுள்ளார். சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்புகளை அளித்துவரும் 53 காமன்வெல்த் நாடுகளில் உள்ள தனிநபரை இந்த விருது அங்கீகரிக்கிறது.

10. பொதுப்போக்குவரத்தை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு எது?

அ. தாய்லாந்து

ஆ. லக்சம்பர்க்

இ. கனடா

ஈ. பிரேசில்

 • ஒரு சிறிய ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் இரயில்கள், டிராம்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் பயணங்கள் மேற்கொள்வதற்கான கட்டணங்களை ரத்துசெய்துள்ளது. இதன்கீழ், தொடரிகளில் முதல்வகுப்பு பயணத்துக்கும் பேருந்துகளில் இரவுநேர பயணத்துக்கும் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இதன்மூலம் பொதுப்போக்குவரத்தை இலவசமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை லக்சம்பர்க் பெற்றுள்ளது.
 • போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் கையாள்வதற்கும், நாட்டின் குறைந்த வருவாய் ஈட்டுபவ -ர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, சிறந்த பொதுப்போக்குவரத்துத் தரம் மற்றும் தூய்மையான சூழலை உறுதிசெய்யும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

 • தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில், உணவு பதப்படுத்தும் தொழில்சார்ந்த எட்டுத் திட்டங்களுக்கு, மத்திய உணவு பதப்படுத்துதல், தொழிற்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் பல்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 • உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் கிசான் சம்பத யோஜனா திட்டத்தின், உணவு பதப்படுத்தும் தொகுப்புத் திட்டத்தின்கீழ், சுமார் `230 கோடி மதிப்பீட்டில் இந்தத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • இந்தத் தொழில் வளாகங்கள் அமைக்கப்படுவதன்மூலம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும். சுமார் 8000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், இந்தத் தொழில் வளாகங்கள் அமைக்கப்படும் பகுதியைச் சேர்ந்த சுமார் 32,000 விவசாயிகளும் பயனடைவார்கள்.
 • உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள்கொண்ட முழு அமர்வு, தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்துமா, பொருந்தாதா என்பது குறித்த வழக்கை விசாரிக்கின்றனர்.
 • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இந்த அமர்வை அமைத்து உத்தர -விட்டுள்ளார். அதன்படி, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோார் அடங்கிய முழு அமர்வு இவ்வழக்கை விசாரிக்கின்றனர்.
 • சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் போர் வீரர்கள் பயன்படுத்திய போர் பதக்கம், கரூர் மாவட்டம், குளித்தலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 100 அடி உயர உலக அமைதி கோபுரம் மார்ச்.4 அன்று திறக்கப்பட்டது. இது, தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் அமைதி கோபுரமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content