Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

6th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள், கீழ்க்காணும் எந்தத் தேதியில் உருவாக்கப்பட்டன?

அ. நவம்பர் 1

ஆ. நவம்பர் 2

இ. நவம்பர் 3

ஈ. நவம்பர் 4

  • நவ.1ஆம் தேதி, தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நாள் மாநில நாள் அல்லது மாநில உருவாக்கம் நாள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 1956’இல் உருவாக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா 1966’இல் உருவாக்கப்பட்டன.

2. தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ. கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ. தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்

  • தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்விதிகள், பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு பணியமர்த்துநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சங்கங்கள் தாங்கள் பணிநிறுத்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக முன்னறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் அது கட்டளையிடுகிறது. தொழிலாளர் குறியீடுகளை, 2021 ஏப்.1 முதல் செயல்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

3. BRICS வர்த்தக கருத்துக்களம், 2020’ஐ நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரேசில்

இ. இரஷ்யா

ஈ. சீனா

  • BRICS வர்த்தக கருத்துக்களத்தின் முக்கியமான ஆண்டு நிகழ்வான BRICS வர்த்தக கருத்துக்களம், 2020 ஆனது அக்டோபர்.20-28 வரை இரஷ்யாவால் நடத்தப்பட்டது. இரஷ்யாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை சேம்பர் தலைவர் BRICS வணிக கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ளார். “BRICS Business Partnership: Common Vision for Sustainable Inclusive Development” என்ற தலைப்பில் காணொலிக்காட்சி வழியாக இந்தக் கருத்துக்களம் நடைபெற்றது.

4. வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக, எந்த அமைப்பை அரிசி ஆலைகளுடன் இணைந்துகொள்ள அரசு கேட்டுக்கொண்டுள்ளது?

அ. இந்திய உணவுக் கழகம்

ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு

இ. ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம்

ஈ. உலக உணவுத் திட்டம்

  • வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யுமாறு இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நியாய விலைக் கடைகள் மற்றும் பிற நலத்திட்டங்கள்மூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்குமாறு, அந்தக் கழக்கத்திடம் கோரப்பட்டுள்ளது. “வலுவூட்டப்பட்ட அரிசி குறித்த நடுவணரசின் திட்டம் மற்றும் பொது வழங்கல் முறைமை வழியாக விநியோகித்தல்” என அடையாளம் காணப்பட்ட 15 மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள், தலா ஒரு மாவட்டத்தில் இதனை செயல்படுத்துகின்றன.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ருதுஜா போசாலேவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. சதுரங்கம்

ஆ. டென்னிஸ்

இ. இறகுப்பந்தாட்டம்

ஈ. ஹாக்கி

  • எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற $15,000 டாலர் பரிசுத்தொகை கொண்ட ITF பெண்கள் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில், செக் குடியரசின் அன்னா சிஸ்கோவாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய டென்னிஸ் வீரர் ருதுஜா போசலே (24) ஒற்றையர் பட்டத்தை வென்றார். அவர் முன்னாள் ஆசிய ஜூனியர் சாம்பியனும் தேசிய மகளிர் சாம்பியனும் ஆவார்.

6. அண்மையில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) வெளியிட்ட ஓரரறிக்கையின்படி, அடுத்த சில பத்தாண்டுகளில் எத்தனை இந்திய நகரங்கள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்?

அ. ஐந்து

ஆ. பத்து

இ. இருபது

ஈ. முப்பது

  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த சில தசாப்தங்களில் முப்பது இந்திய நகரங்களில் நீர் பற்றாக்குறையானது அதிகரிக்கும். ‘WWF Water Risk Filter’ அறிக்கையின்படி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முப்பது இந்திய நகரங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
  • உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

7. மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகத்துடன் இணைந்து MSME கடன் நலக் குறியீட்டை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. பாரத வங்கி

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

ஈ. டிரான்ஸ் யூனியன் CIBIL

  • டிரான்ஸ் யூனியன் CIBIL ஆனது மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகத்துடன் இணைந்து ‘MSME கடன் நலக்குறியீட்டை’ வெளியிட்டுள்ளது. இக்குறியீடு, இந்தியாவில் MSME துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை அளவிடுகிறது.
  • MSME கடன் நலக்குறியீடானது TransUnion CIBIL நிறுவனத்தால் கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

8. வணிக எதிர்பார்ப்பு ஆய்வை (Business Expectation Survey) நடத்துகிற அமைப்பு எது?

அ. NITI ஆயோக்

ஆ. தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கவுன்சில்

இ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

ஈ. இந்திய தொழிற்துறைகள் கூட்டமைப்பு

  • வணிக எதிர்பார்ப்பு ஆய்வினை தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான கவுன்சில் (NACER) நடத்துகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் வணிக நம்பிக்கைக் குறியீடானது ஆண்டின் முதல் காலாண்டில் 46.4 ஆகக்குறைந்து, நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 65.5 ஆக உயர்ந்து காணப்படுகிறது. NCAER என்பது புது தில்லியில் அமைந்துள்ள, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலாப-நோக்கற்ற மதியுரையகமாகும். நந்தன் நிலகேனி, NCAER நிர்வாகக் குழுவின் தலைவராகவும், Dr சேகர் ஷா, NCAER’இன் தற்போதைய தலைமை இயக்குநராகவும் உள்ளனர்.

9. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழாவை நினைவுகூரும் வகையில் கீழ்க்காணும் எந்தவொன்றை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது?

அ. நினைவு அஞ்சல்தலை

ஆ. நினைவு நாணயம்

இ. சிறப்பு அஞ்சல் உறை

ஈ. புதிய பணத்தாள்

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், புவி அறிவியல் துறைகளின் அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய அஞ்சல், கல்வி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் பொன் விழாவைக் குறிக்கும் வகையிலான அஞ்சல் துறையின் சிறப்பு அஞ்சல் உறையை புது தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

10. காற்றின் தரமேம்பாட்டிற்காக, 15 மாநிலங்களுக்கு, நடுவணரசு, எவ்வளவு நிதியுதவி அறிவித்துள்ளது?

அ. ரூ.1000 கோடி

ஆ. ரூ.2000 கோடி

இ. ரூ.2200 கோடி

ஈ. ரூ.2500 கோடி

  • பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு 15 மாநிலங்களுக்கு `2200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த இந்நிதியுதவி பயன்படுத்தப்படும். காற்றின் தர மேம்பாட்டிற்காக வழங்கப்படும் மானியத்தின் முதல் தவணை இதுவாகும்.

1. On which date, the states of Kerala, Haryana, Madhya Pradesh, Chhattisgarh and Karnataka were formed?

[A] November 1

[B] November 2

[C] November 3

[D] November 4

  • On November 1, several Indian states like Tamil Nadu, Kerala, Haryana, Madhya Pradesh, Chhattisgarh and Karnataka were formed. The day is recognised as Statehood Day or State Formation Day. Andhra Pradesh, Tamil Nadu, Karnataka, Madhya Pradesh and Kerala were formed in 1956. Punjab and Haryana were formed in 1966.

2. Which Ministry has released the draft rules for the Industrial Relations Code, 2020?

[A] Ministry of Heavy Industries

[B] Ministry of Home Affairs

[C] Ministry of Commerce

[D] Ministry of Labour and Employment

  • The Union Ministry of Labour and Employment has notified draft rules for the Industrial Relations Code, 2020. This is expected to enhance the flexibility to employers to retrench workers. It also mandates that Labour Unions should give a prior notice before a strike. The Government has aimed to implement the labour codes from April 1, 2021.

3. Which country has hosted the BRICS Business Forum 2020?

[A] India

[B] Brazil

[C] Russia

[D] China

  • BRICS Business Forum, which is an important annual event of the BRICS Business Council was hosted by Russia from October 20 to 28, 2020. President of the Chamber of Commerce and Industry of Russia is the current Chairman of the BRICS Business Council. BRICS Business Forum was held in via Video Conferencing under the title “BRICS Business Partnership: Common Vision for Sustainable Inclusive Development”.

4. The Government has asked which organisation to tie up with rice mills for increasing supply of fortified rice?

[A] Food Corporation of India

[B] Food and Agriculture Organization

[C] The Energy and Resources Institute

[D] World Food Programme

  • The government has announced that the Food Corporation of India (FCI) has been asked to tie up with rice mills for increasing supply of fortified rice. The state–run organisation is asked to supply fortified rice through ration shops and other welfare schemes. Out of the 15 states identified for ‘Central scheme on fortified rice and its distribution via public distribution system (PDS)’, five states are implementing it in one district each.

5. Rutuja Bhosale, who was seen in news recently, is associated with which sports?

[A] Chess

[B] Tennis

[C] Badminton

[D] Hockey

  • Indian Tennis player Rutuja Bhosale won a singles title in the final of the $15,000 ITF women’s tennis tournament in Sharm El Sheikh, Egypt. In the final, she won Anna Siskova of the Czech Republic 6–3, 7–5. The 24–year–old sportsperson is a former Asian junior champion and National women’s champion.

6. As per the recent report released by the World–Wide Fund for Nature (WWF), how many Indian cities will face water risks in the next few decades?

[A] Five

[B] Ten

[C] Twenty

[D] Thirty

  • As per the recent report released by the World–Wide Fund for Nature (WWF), 30 Indian cities will face increasing water risks in the next few decades. According to the WWF Water Risk Filter report, 30 Indian cities, including Jaipur, Kolkata, Bengaluru, Mumbai among others, will face acute water risks. The report estimates that hundreds of millions of people in cities across the globe could face water risks.

7. Which organisation has launched MSME Credit Health Index, along with the Ministry of Statistics and Programme Implementation?

[A] State Bank of India

[B] Reserve Bank of India

[C] Small Industries Development Bank of India

[D] TransUnion CIBIL

  • TransUnion CIBIL in association with Ministry of Statistics & Programme Implementation (MoSPI) has launched the MSME Credit Health Index. The index measures the growth and strength of the MSME sector in India. MSME Credit Health Index is built by TransUnion CIBIL using credit data furnished by lending institutions / banks.

8. The Business Expectation Survey is conducted by which body?

[A] NITI Aayog

[B] National Council for Applied Economic Research

[C] National Statistical Office

[D] Confederation of India Industries

  • The Business Expectation Survey is conducted by National Council for Applied Economic Research (NACER). As per the report of the survey, the Business Confidence Index (BCI) in India rose to 65.5 in the second quarter of FY 20 after recording a sharp drop to 46.4 in the first quarter. NCAER is a non–profit think tank of economics based at New Delhi. Nandan Nilekani is president of the governing body and Dr Shekhar Shah is current director general of NCAER.

9. The Department of Posts has released what product to commemorate the Golden Jubilee of Department of Science and Technology?

[A] Commemorative Stamp

[B] Commemorative Coin

[C] Special Postal Cover

[D] New Currency Note

  • The Union Minister of Science and Technology Minister Dr. Harsh Vardhan and Minister of State for Posts Sanjay Dhotre have released a Special Cover of Department of Posts. The special postal cover was released in New Delhi, in order to commemorate the Golden Jubilee of Department of Science and Technology.

10. How much financial aid has been released by the Central Government to 15 states for air quality improvement?

[A] Rs. 1,000 Crore

[B] Rs. 2,000 Crore

[C] Rs. 2,200 Crore

[D Rs. 2,400 Crore

  • Based on the recommendations of the 15th Finance Commission, the Central Government has released a financial aid of Rs.2200 crore to 15 states. The aid would be used to improve the air quality in these states by undertaking capacity building measures. This is the first instalment of the grant towards air quality improvement.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!