6th October 2020 Current Affairs in Tamil & English

6th October 2020 Current Affairs in Tamil & English

6th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

6th October 2020 Tnpsc Current Affairs in Tamil

6th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. G20 தலைவர்கள் உச்சிமாநாட்டை மெய்நிகராக நடத்தவுள்ள நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. ஜப்பான்

இ. செளதி அரேபியா

ஈ. இந்தியா

 • செளதி அரேபியாவின் அண்மைய அறிவிப்பின்படி, G20 தலைவர்கள் உச்சிமாநாட்டை அந்நாடு வரும் நவ.21-22 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் இவ்வுச்சிமாநாடு கவனஞ்செலுத்தும் என்றும் அந்நாடு கூறியது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக G20 கூட்டமைப்பு, $21 பில்லியன் டாலர்களுக்கு மேல் பங்களிப்பு செய்தது. குறைந்தபட்ச வளர்ச்சிகொண்ட நாடுகளுக்கான கடன் இடைநீக்க முன்னெடுப்பையும் இந்த அமைப்பு தொடங்கியுள்ளது.

2. COVID-19 தடுப்பூசி தளத்தைத் தொடங்கும்போது, மத்திய சுகாதார அமைச்சர், எந்த நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்று காலச்சுவடை வெளியிட்டார்?

அ. AIIMS

ஆ. ICMR

இ. NMA

ஈ. CSIR

 • மத்திய நலவாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிங், சமீபத்தில், COVID-19 குறித்த அனைத்து சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் இணையதளத்தை தொடங்கினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் COVID-19 தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தவையும் இதில் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நூறாண்டுகால காலச்சுவட்டையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.

3.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘குல்ஹதுபுஷி’ அமைந்துள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. நேபாளம்

இ. மாலத்தீவு

ஈ. இந்தியா

 • தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தின் கொச்சினிலிருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் சேவையின் தொடக்கமாக, ‘MCP Linz’ என்ற கப்பல் வ உ சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு மேலும், பல்வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வடக்கு மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகத்தை அடைந்த பிறகு மாலே துறைமுகத்தை செப்.29ஆம் தேதி சென்றடைந்தது. இந்தக்கப்பல்சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்துக்கு மும்முறை இயக்கும்.

4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Branded Royal” என்பதுடன் தொடர்புடைய உயிரினம் எது?

அ. பாம்பு

ஆ. வண்ணத்துப்பூச்சி

இ. தவளை

ஈ. கடலாமை

 • “Branded Royal” என்று பெயரிடப்பட்ட ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சி, அண்மையில், நீலகிரியின் கோத்தகிரி மலைச்சரிவுகளில் காணப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை, 1888ஆம்‌ ஆண்டில், GF ஹாம்ப்சன்‌ என்பவர் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வண்ணத்துப்பூச்சிபற்றி இதுபோன்ற ஒரு பதிவுமட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இது (Tajuria melastigma) லைசெனிட் வகையினமாகும்.

5.யார் தலைமையின்கீழ், பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 தயாரிக்கப்பட்டது?

அ. அபூர்வா சந்திரா

ஆ. ராஜீவ் குமார்

இ. ராஜ்நாத் சிங்

ஈ. அஜீத் தோவால்

 • பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020’ஐ பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். கடந்த 2002ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகிறது. இதனை வடிவமைப்பதற்காக முதன்மை ஆய்வுக்குழு ஒன்றை தலைமை இயக்குநர் (கொள்முதல்) அபூர்வா சந்திரா தலைமையில் 2019 ஆகஸ்டில் பாதுகாப்பு அமைச்சகம் அமைத்தது. 2020 அக்டோபர் 1 அன்று பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020 அமலுக்கு வந்தது.

6. ‘Health in India’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகம்

ஈ. நலவாழ்வு அமைச்சகம்

 • ‘Health in India’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை புள்ளியியல் & திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, NSS அட்டவணை 25.0 (குடும்ப நுகர்வு: நலவாழ்வு) ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, சொராஷ்டிரிய மக்கள், வெகு எளிதாக நோயால் பீடிக்கப்படுகின்றனர்.

7.இந்திய தரக்கழகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள செயலியின் (app) பெயர் என்ன?

அ. அதிதி (ADHITHI)

ஆ. சாதி (SAATHI)

இ. வருகவே! (WELCOME!)

ஈ. வியக்கத்தக்கது (INCREDIBLE)

 • உலக சுற்றுலாத் துறையை கருத்தில்கொண்டு இந்திய தரக்கழகத்துடன் இணைந்து SAATHI என்ற செயலியை சுற்றுலா அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு தரங்கள் மற்றும் செயல்பாடுகளை பராமரிப்பதிலும் விருந்தோம்பல் தொழிற்துறைக்கும் இந்தச் செயலி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும். வியத்தகு இந்தியா சுற்றுலா வழிநடத்திகள் சான்றழிப்புத் திட்டம் குறித்த ‘Pathik’ என்ற திரைப்படமும் வெளியிடப்பட்டது.

8.அண்மையில், ICT துளிர் நிறுவனங்கள் விருது – 2020’ஐப் பெற்ற இன்டோட் டெக்னாலஜிஸ் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • புத்தாக்கத்தின் மூலம் டிஜிட்டல் ஒலிபரப்பு ஏற்பிகள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக, கேரள மாநிலம் கொச்சியைச் சார்ந்த இன்டோட் டெக்னாலஜிஸ், ICT துளிர் நிறுவனங்கள் விருது-2020’ஐ வென்றுள்ளது. இந்த நிறுவனத்தை கேரள துளிர் நிறுவனங்கள் இயக்கம் (KSUM) ஆதரித்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சார்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பு (ASSOCHAM) மத்திய மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகம் மற்றும் எரிக்சன் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்கா அவலோகன்’ என்றால் என்ன?

அ. பரப்புரை

ஆ. அருங்காட்சியகம்

இ. நினைவு அஞ்சல்தலை

ஈ. கால்வாய்

 • நமாமி கங்கை திட்டத்தின்கீழ் ஆறு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை உத்தரகண்டில் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். கங்கையாற்றைப்பற்றிய பிரத்தியேக அருங்காட்சியகமான ‘கங்கா அவலோகன்’ என்பதையும் அவர் ஹரித்துவாரில் திறந்துவைத்தார். “Rowing Down the Ganges” என்னும் நூலையும் ஜல் ஜீவன் திட்டத்தின் புதிய இலச்சினையையும் அவர் அப்போது வெளியிட்டார். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்பஞ்சாயத்துகள் மற்றும் நீர்குழுக்களுக்கான வழிகாட்டுதல்களையும் அந்நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

10.எந்த நாட்டோடு ‘பசுமை முக்கியத்துவ பங்களிப்பு’ நிறுவப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது?

அ. பின்லாந்து

ஆ. சுவிச்சர்லாந்து

இ. டென்மார்க்

ஈ. பிரான்ஸ்

 • பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க்கின் பிரதமரான மெட்டே பிரடெரிக்சனுடனான முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். கூட்டு அறிக்கையின்படி, அரசியல், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் அடிப்படையில் புதிய ‘பசுமை முக்கியத்துவ பங்களிப்பு – Green Strategic Partnership’ நிறுவப்படும்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

 • உழவர்களுக்கு மிகக்குறைந்த வாடகையில் உழவு எந்திரங்கள் உள்ளிட்ட எந்திரங்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் க. பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார்.

1. Which country is to play host to the virtual G20 Leaders’ Summit?

[A] United States

[B] Japan

[C] Saudi Arabia

[D] India

 • The G20 Leaders’ Summit will be organised virtually on November 21–22 by Saudi Arabia, as per the country’s recent announcement. It also said that the Summit will focus on addressing vulnerabilities resulting from the COVID–19 pandemic. G20 had contributed over $21 billion for the vaccine production and distribution. The bloc also launched a debt suspension initiative for least developed countries.

2. While launching the COVID–19 vaccine portal, the Union Health Minister released the 100–year timeline history of which institution?

[A] AIIMS

[B] ICMR

[C] NMA

[D] CSIR

 • The Union Health Minister Harshvardhan Singh has recently launched an online portal about Covid–19 with all latest information on the disease. It will also include date on research development and clinical trials on potential Covid–19 vaccine in the country. The Minister also launched the 100–year timeline history of the Indian Council of Medical Research (ICMR).

3. Kulhudhufushi, that was seen in news recently, is located in which country?

[A] Sri Lanka

[B] Nepal

[C] Maldives

[D] India

 • The first cargo vessel from India to Maldives, named MCP Linz has reached the northern Maldivian town of Kulhudhufushi. This is the first voyage of the direct Cargo Ferry Service between India and the Maldives and it was jointly launched on September 21. This is also the first ferry service in the Indian Ocean region operated by the Shipping Corporation of India (SCI).

4. “Branded Royal”, that was seen in news recently, belongs to which species?

[A] Snake

[B] Butterfly

[C] Frog

[D] Turtle

 • A rare species of butterfly named the ‘Branded Royal’, was recently spotted in the Nilgiris, along the slopes of Kotagiri. The butterfly was previously documented in the Nilgiris in the year 1888 by G.F. Hampson. There is only one such record about the butterfly in Tamil Nadu. The Branded Royal (Tajuria melastigma) is a species of lycaenid.

5. The Defence Acquisition Procedure (DAP) – 2020 was prepared under the Chairmanship of which personality?

[A] Apurva Chandra

[B] Rajiv Kumar

[C] Rajnath Singh

[D] Ajit Doval

 • Defence Minister Rajnath Singh unveiled the Defence Acquisition Procedure (DAP) – 2020 in New Delhi. The first Defence Procurement Procedure (DPP) was promulgated in the year 2002 and has since been revised periodically to provide impetus to the growing domestic industry and achieve enhanced self reliance in defence manufacturing. Defence Minister had approved constitution of Main Review Committee under Chairmanship of DG (Acquisition) Apurva Chandra in Aug–2019 for preparation of DAP–2020. DAP 2020 will be applicable with effect from 01st October 2020.

6. Which Union Ministry has released the report of a survey titled ‘Health in India’?

[A] Ministry of Statistics and Programme Implementation

[B] Ministry of Women and Child Development

[C] Ministry of Consumer Affairs, Food and Public Distribution

[D] Ministry of Health and Family Welfare

 • The Ministry of Statistics and Programme Implementation has released the report of a survey titled ‘Health in India’. The report is based on information collected through NSS Schedule 25.0 (Household Social Consumption: Health). As per the report, the Zoroastrian community is the most susceptible to ailments.

7. What is the name of the application launched by the Ministry of Tourism along with the Quality Council of India?

[A] ADHITHI

[B] SAATHI

[C] WELCOME!

[D] INCREDIBLE

 • The Ministry of Tourism has launched the SAATHI application, along with the Quality Council of India, on the occasion of World Tourism Industry. The application is expected to assist the hospitality industry, in maintaining the safety standards and operations, which would develop confidence among staff. A film named ‘Pathik’ on Incredible India Tourist Facilitators Certification Programme (IITFC) was also launched.

8. Inntot Technologies, which has bagged a major award the ICT Startups Award 2020 recently, is based at which state?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Andhra Pradesh

[D] Karnataka

 • Inntot Technologies, based at Kochi (Kerala), has bagged a major honour at the ICT Startups Awards 2020, for its outstanding work in the field of digital broadcast receivers through innovation. The company is backed by Kerala Startup Mission (KSUM). The event was conducted by the Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM) in association with the Union Ministry of Electronics and Information Technology and Ericson.

9. What is ‘Ganga Avalokan’, that was seen in news recently?

[A] Campaign

[B] Museum

[C] Commemorative Stamp

[D] Channel

 • Prime Minister Narendra Modi inaugurated six mega development projects in Uttarakhand under the Namami Gange Mission.
 • A first of its kind Museum named ‘Ganga Avalokan’ on the River Ganga at Haridwar, was also inaugurated. The Prime Minister also released a book titled “Rowing Down the Ganges” and a new logo for the Jal Jeevan Mission.

10. India announced establishing a ‘Green Strategic Partnership’ with which country?

[A] Finland

[B] Switzerland

[C] Denmark

[D] France

 • Prime Minister Narendra ­Modi attended a first virtual summit with his counterpart of Denmark, Mette Frederiksen. As per the joint statement, the new ‘Green Strategic Partnership’ will be based on existing Joint Commission for Cooperation for cooperation in various fields including politics, energy, environment and education.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *