Tnpsc

6th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்க வேலு & சரத் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) பளு தூக்குதல்

ஆ) துப்பாக்கிச் சுடுதல்

இ) உயரந்தாண்டுதல் 

ஈ) ஈட்டி எறிதல்

 • டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரந்தாண்டல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மாரியப்பன் தங்கவேலு 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1968 பாராலிம்பிக் பதிப்பிலிருந்து 2016 பாராலிம்பிக் வரை மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

2. தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை இயற்றிய நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) இத்தாலி

இ) தென் கொரியா 

ஈ) இந்தியா

 • கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை தங்கள் செயலிக்கூடங்களில் மாற்று கட்டண முறைமைகளை வழங்குமாறு நிர்பந்திக்கும் உலகின் முதல் சட்டத்தை தென்கொரியா நிறைவேற்றி உள்ளது. இதற்கான அந்த நாட்டின் முதன்மை தொலைத்தொடர்பு சட்டமான ‘தொலைத்தொடர்பு வணிகச்சட்டம்’ திருத்தப்படவுள்ளது.

3. பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த டேல் ஸ்டெய்ன் சார்ந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) தென்னாப்பிரிக்கா 

இ) நியூசிலாந்து

ஈ) மேற்கிந்திய தீவுகள்

 • புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சுமார் 16 ஆண்டுகளுக்குப்பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஸ்டெயின், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபோது 439 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார். ஸ்டெய்ன், 2004 டிச.17 அன்று புரோட்டீஸ் அணிக்காக அறிமுகமானதிலிருந்து, தென்னாப்பிரிக் -காவுக்காக 93 டெஸ்ட், 125 ஒருநாள் மற்றும் 47 T20 பன்னாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

4. இந்திய உச்சநீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட நீதியரசர்களின் எண்ணிக்கை என்ன?

அ) 18

ஆ) 25

இ) 34 

ஈ) 45

 • மூன்று பெண்கள் உட்பட ஒன்பது புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்செய்துகொண்டனர். இந்த நியமனத்தின் மூலம், இந்திய தலைமை நீதிபதி உட்பட, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 பேராக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில், ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றது இதுவே முதல்முறை. ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, 2027 செப்டம்பரில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆகவுள்ளார்.

5. சாகர் திட்டத்தின் ஒருபகுதியாக, 2021 ஆகஸ்ட்டில் INS ஐராவத் சென்றடைந்த நாடு எது?

அ) இலங்கை

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) வியட்நாம்

ஈ) மலேசியா

 • இந்திய கடற்படை கப்பல் – INS ஐராவத் சமீபத்தில் மிஷன் சாகரின் ஒரு பகுதியாக வியட்நாமில் உள்ள ஹோ சி மின் துறைமுகத்தை அடைந்தது. இந்தக் கப்பல், COVID 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் 300 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கொண்டு சென்றது. “Security and Growth for All in the Region” என்பதன் சுருக்கந்தான் SAGAR. இதன்கீழ், துயர காலங்களில், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு உதவிவருகிறது.

6. அண்மையில் உணவு அவசரநிலையை அறிவித்த இந்தியாவின் அண்டைநாடு எது?

அ) பாகிஸ்தான்

ஆ) இலங்கை 

இ) மியான்மர்

ஈ) பூட்டான்

 • தீவு நாடான இலங்கை, உணவு அவசரநிலை மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றை ஓர் அரசாணையின்கீழ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் விலை நிர்ணயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அந்நிய செலாவணி நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட் -டுள்ளது, இதன்காரணமாக அதன் நாணயம் மதிப்பிழப்பை நோக்கிச் சென்றுள்ளது; இதன் விளைவாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

7. “இ-சோர்ஸ்” என்றவொரு இணையதளத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ) பிட்ஸ்

ஆ) ஐஐஎம்-ஏ

இ) ஐஐடி-எம் 

ஈ) இஸ்ரோ

 • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT-M) “இ-சோர்ஸ்” என்ற இணையதளத்தை உருவாக்கிவருகிறது. இத்தளம் முறையான மற்றும் முறைசாரா துறையில் பங்கேற்பாளர்களை இணைப்பதன்மூலம் மின் -அணுக் கழிவுகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் பிரிவில், மின்னணுக் கழிவுகளை வாங்குபவர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இது ஒரு சந்தைத்தளமாக செயற்படும். இது மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் மறுபயன்பாட்டுக்கு உகந்தவாறு மாற்றவும் ஒரு சிறந்த வழியை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. யேமன் அருகே ஏடன் வளைகுடாவில் பின்வரும் எந்த நாட்டுடன் இணைந்து, இந்திய கடற்படை, கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது?

அ) ரஷ்யா

ஆ) ஜெர்மனி 

இ) பிரான்ஸ்

ஈ) இத்தாலி

 • யேமன் அருகே ஏடன் வளைகுடாவில், இந்தியா மற்றும் ஜெர்மனியின் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டனர். இப்பயிற்சியில் உலங்கூர்தி தரையிறக்கம் மற்றும் தேடல் & பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான “INS திரிகண்ட்” ஏடன் வளைகுடாவில் ஜெர்மானிய கப்பலான “பேயர்ன்” உடன் பயிற்சிபெற்றது. INS திரிகண்ட், தற்போது ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை தடுப்பு ரோந்துப்பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற Dr பிர்தௌசி காத்ரி மற்றும் முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் பின்வரும் எந்த விருது பெற்றவர்கள்?

அ) புக்கர் பரிசு

ஆ) இராமன் மகசேசே விருது 

இ) புலிட்சர் விருது

ஈ) ஆபெல் பரிசு

 • வங்கதேசத்தைச் சார்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் Dr பிர்தௌஸி காத்ரி மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த முகமது அம்ஜத் சாகிப் ஆகியோர் இந்த ஆண்டுக்கான (2021) இராமன் மகசேசே விருது பெற்ற ஐந்து பேருள் உள்ளனர். கடந்த 1957இல் நிறுவப்பட்ட இந்த விருது ஆசியாவின் மிக உயரிய கௌரவம் மற்றும் ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
 • பிலிப்பைன்ஸ் மீனவர் மற்றும் சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபர்டோ பாலன், மனிதாபிமானப் பணிக்காக அமெரிக்காவின் ஸ்டீவன் மன்சி & புலனாய்வு இதழியல் பணிக்காக இந்தோனேசியாவின் வாட்ச்டாக் ஆகியோர் இவ்விருதைப் பெற்ற பிற வெற்றியாளர்களாவர். சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் ஆசியாவில் உள்ள தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

10. மாநிலங்களவையின் புதிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

அ) M வெங்கையா

ஆ) Dr ராமச்சார்யுலு 

இ) உத்பல் குமார் சிங்

ஈ) தேஷ் தீபக் வர்மா

 • மாநிலங்களவைத்தலைவரான M வெங்கையா, டாக்டர் பரசராம் பட்டாபி கேசவ ராமச்சார்யுலுவை மாநிலங்களவையின் புதிய பொதுச்செயலராக நியமித்தார். Dr ராமச்சார்யுலு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா செயலகத்தில் செயலராக பணிபுரிந்துவருகிறார். அவர், நான்காண்டுகள் பதவியிலிருந்த பிறகு பதவி விலகிய தேஷ் தீபக் வர்மாவை தொடர்ந்து பதவியேற்றுள்ளார். மாநிலங்களவை செயலகத்தின்படி, பொதுச்செயலர் பதவியை அடைந்த முதல் மேலவை ஊழியர் ராமச்சார்யுலு ஆவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கற்பித்தலில் புதுமை

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகம், புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்கள் நவீன தொழில்நுட்பங்கள்மூலம் கற்பித்தலில் புதுமையைப் புகுத்தியவர்கள் ஆவர். திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே ஆஷா தேவி மாணவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட தனித்திறன் பயிற்சிகள் வழங்குவது, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டி லலிதா ஆராய்ச்சி சார்ந்த கல்வியை, தொழில்நுட் -பங்களைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் வி ஜெயசுந்தர் கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி கற்பித்து வருகிறார்.

2. டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதல்முறையாக 19 பதக்கங்களுடன் வரலாற்று சாதனை படைத்த இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இப் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதல்முறையாக 19 பதக்கங்களைப்பெற்று இந்தியக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆக.24ஆம்தேதி தொடங்கின. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர். சுமார் 2 வாரகாலம் நடந்த பாராலிம்பிக், நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக்கொடியை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லேகாரா ஏந்திச்சென்றார். அவருடன் இந்தியாசார்பில் 11 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

கடைசி நாளான நேற்று இந்தியா இரு பதக்கங்களை கைப்பற்றியது. ஆடவருக்கான பாட்மிண்டன் SH 6 ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 21-17, 16-21, 21-17 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் மான் ஹை சூவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். அதேவேளையில் SL 4 பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் போராடி பிரான்ஸின் லூகாஸ் மசூரிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். சுஹாஸ் யதிராஜ், உ பி மாநிலம் நொய்டா மாவட்ட நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பாராலிம்பிக் தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24ஆவது இடம்பிடித்தது. பாராலிம்பிக் வரலாற்றில் 1968 முதல் இந்தியா பங்கேற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பாராலிம்பிக் வரை மொத்தமாக 12 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், முதல்முறையாக டோக்கியோவில் இம்முறை 19 பதக்கங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 1984ஆம் ஆண்டு நியூயார்க் பாராலிம்பிக் மற்றும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தலா 4 பதக்கங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது முதல்முறையாக இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர் இந்தியக்குழுவினர்.

இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் அவனி லேகாரா, பாட்மிண்டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதலில் சுமித் அண்டில், துப்பாக்கி சுடுதலில்மணீஷ் நார்வால் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸில் பவினாபென் படேல், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா, வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், மாரியப்பன் தங்கவேலு, பிரவீன் குமார், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, பாட்மிண்டனில் சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சுடுதலில் அவனி லேகாரா, வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், உயரம் தாண்டுதலில் சரத் குமார், ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், பாட்மிண்டனில் மனோஜ் சர்கார், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

பதக்கப்பட்டியலில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்கள் குவித்து சீனா முதலிடம் பிடித்தது. 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2ஆம் இடமும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆம் இடமும் பிடித்தன.

3. பயணம்தான், பந்தயமல்ல

சமீபகாலமாக நாடுமுழுவதிலும் உள்ள தேசிய – மாநில நெடுஞ்சாலைக -ளில்தான் அதிக அளவில் விபத்துகள் அரங்கேறுகின்றன.

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் இதனை உறுதி செய்கிறது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சாலைகளின் நீளத்தில் 2.03 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் ஏற்படும் சாலை விபத்து உயிரழப்புகளில் 35.7% தேசிய நெடுஞ்சாலைக -ளில்தான் நிகழ்கின்றன.

நாட்டின் மொத்த சாலைகளில் 3.01 சதவீதமாக இருக்கும் மாநில நெடுஞ் -சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 24.8% மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால், உள்ளூர், கிராமப்புற சாலைகளில் நேரிடும் உயிரழப்புகள் வெறும் 39 சதவீதம்தான் என்று கூறுகின்றது புள்ளிவிவரம்.

சாலை விபத்துகளில் 69 சதவீத விபத்துகள், வாகனங்களை மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டுவதாலேயே நிகழ்கின்றன. சுமார் 6 சதவீத விபத்துகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் நிகழ்கின்றன.

1. Mariyappan Thangavelu and Sharad, who won medals in the Tokyo Paralympics, are associated with which sports?

A) Weight Lifting

B) Shooting

C) High Jump 

D) Javelin Throw

 • Mariyappan Thangavelu and Sharad Kumar won the silver and bronze medals, respectively, in the high jump event in the Tokyo Paralympics. Mariyappan Thangavelu had also won a gold medal at the Rio Paralympics. India had won a total of 12 medals from the 1968 edition until 2016.

2. Which country has passed the world’s first law to force tech companies to offer alternative payment systems?

A) France

B) Italy

C) South Korea 

D) India

 • South Korean lawmakers passed the world’s first law to force tech giants such as Google and Apple to offer alternative payment systems on their app stores. The country is set to amend the ‘Telecommunications Business Act’, the nation’s primary telecommunications law.

3. Dale Steyn, who announced retirement from international cricket, is from which country?

A) Australia

B) South Africa 

C) New Zealand

D) West Indies

 • Legendary South African fast bowler Dale Steyn announced his retirement from cricket, after a career spanning nearly 16 years. Steyn had retired from the Test Cricket last year as South Africa’s highest wicket–taker with 439 wickets. Steyn played 93 Tests, 125 ODIs and 47 T20 internationals for South Africa since making his debut for the Proteas on December 17, 2004.

4. What is the sanctioned strength of judges in the Supreme Court of India?

A) 18

B) 25

C) 34 

D) 45

 • Nine new judges, including three women, were administered oath of office as judges of the Supreme Court. This appointment has taken its strength to 33, including the Chief Justice of India, out of the sanctioned strength of 34. This is the first time in the history of the Supreme Court that nine judges took oath of office, all at the same time. Justice Nagarathna, one among the nine judges, is in line to become the first woman Chief Justice of India in September 2027.

5. INS Airavat has reached which country in August 2021, as a part of Mission SAGAR?

A) Sri Lanka

B) Afghanistan

C) Vietnam 

D) Malaysia

 • Indian Naval vessel – INS Airavat has recently reached Ho Chi Minh City Port in Vietnam, as a part of Mission SAGAR. The vessel has shipped 100 Metric Tons of Liquid Medical Oxygen and 300 Oxygen Concentrators of 10 LPM capacity, to fight against the COVID 19 pandemic. SAGAR stands for Security and Growth for All in the Region, under which India has been helping its neighbors at times of stress.

6. Which Indian neighbour has recently declared a Food emergency?

A) Pakistan

B) Sri Lanka 

C) Myanmar

D) Bhutan

 • The island nation of Sri Lanka has declared food emergency and an economic emergency, under an ordinance. The declaration of this, empowers authorities to impose restrictions on stocking and pricing of food articles. The country was affected with a foreign exchange crisis, due to which it had undertaken a steep devaluation of its currency, resulting in inflation.

7. “e–Source” is an online platform being developed by which institution?

A) BITS

B) IIM–A

C) IIT–M 

D) ISRO

 • The Indian Institution of Technology Madras (IIT–M) is developing an online platform named e–Source. This platform aims to tackle e–waste by linking various participants in formal and informal sector. It would act as a market place between buyers and generators of e waste, in electrical and electronic equipment segment. This is expected to pave a great way for recycle and reuse of electronic wastes, thus achieve the objectives of circular economy.

8. Indian Navy has undertaken a joint exercise with which country, in Gulf of Aden near Yemen?

A) Russia

B) Germany 

C) France

D) Italy

 • Navies of India and Germany carried out a joint exercise, in Gulf of Aden near Yemen. The exercise included helicopter landings and search and seizure operations. The Indian Navy’s frigate ‘INS Trikand’ exercised with German frigate ‘Bayern’ in the Gulf of Aden. INS Trikand is currently deployed in the Gulf of Aden region for anti–piracy patrol.

9. Dr Firdausi Qadri and Muhammad Amjad Saqib, who were seen in the news recently, are the recipients of which award?

A) Booker Prize

B) Ramon Magsaysay Award 

C) Pulitzer Award

D) Abel Prize

 • Dr Firdausi Qadri, a vaccine scientist from Bangladesh and Muhammad Amjad Saqib, the microfinance pioneer from Pakistan are among the five recipients of this year’s Ramon Magsaysay Award. Established in 1957, the award is Asia’s highest honour and regarded as the Asian version of the Nobel Prize.
 • The other winners are Filipino fisher and community environmentalist Roberto Ballon, American Steven Muncy for humanitarian work and refugee assistance and Indonesian torchbearer for investigative journalism, Watchdoc. The award is given every year to individuals or organisations in Asia who provide significant service to the society.

10. Who has been appointed as the new Secretary General of the Rajya Sabha?

A) M Venkaiah Naidu

B) Dr Ramacharyulu 

C) Utpal Kumar Singh

D) Desh Deepak Verma

 • Rajya Sabha chairman M Venkaiah Naidu appointed Dr. Parasaram Pattabhi Kesava Ramacharyulu as the new Secretary General of the Rajya Sabha. Ramacharyulu has been working as Secretary in the Rajya Sabha Secretariat since 2018. He succeeds Desh Dipak Verma, who demitted office after serving for four years in the post. As per the Rajya Sabha Secretariat, Ramacharyulu is the first ever Upper House employee to have reached the Secretary General’s post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content