TnpscTnpsc Current Affairs

6th & 7th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

6th & 7th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 6th & 7th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகமானது எந்த அமைச்சகத்துடன் இணைந்து, ‘ஒற்றைச் சாளரத்தில் படமெடுக்கும் பொறிமுறை’யை உருவாக்கியுள்ளது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) இரயில்வே அமைச்சகம் 

இ) கலாச்சார அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • இரயில்வே அமைச்சகமும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து, ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றைச் சாளர படப்பிடிப்பு பொறி முறையை உருவாக்கியுள்ளன. இரயில்வே வளாகம் முழுவதும் படப் பிடிப்பு நடத்துவதற்கு பெறப்படும் அனுமதியை எளிதாக மாற்றுவதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

2. COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், எந்த ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் தலைவர்கள் உறுதியளித்தனர்?

அ) 2030 

ஆ) 2040

இ) 2050

ஈ) 2070

  • COP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் முதன்மை ஒப்பந்தத்தில், 110 தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் மாற்றியமைப்பதாகவும் உறுதியளித்தனர்.
  • ‘காடுகள் மற்றும் நிலப்பயன்பாடு குறித்த கிளாஸ்கோ தலைவர்களின் பிரகடனம்’ என்று பெயரிடப்பட்ட இந்த உறுதிமொழியில் $12 பில்லியன் பொது நிதியும் $7.2 பில்லியன் தனியார் நிதியும் அடங்கும். கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், காடழிப்பைக் குறைக்கத் தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மந்தாகினி ஆறு உற்பத்தி ஆகுகின்ற மாநிலம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) உத்தர பிரதேசம்

இ) மத்திய பிரதேசம் 

ஈ) பீகார்

  • யமுனையின் துணையாறான மந்தாகினி ஆறு, மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உற்பத்தியாகி உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் யமுனையில் கலக்கிறது. இந்த ஆறு சதி அனுசுயா என்ற வற்றாத பள்ளத்தின் வழியாக பாய்கிறது, அதில் பல நீரூற்றுகள் உள்ளன. ஆக்கிரமிப்பு, காங்கிரீட், மாசு போன்றவற்றால் இவ்வாறு கடும் பாதிப்புக்கு உள்ளானதால் சமீப செய்திகளில் இது இடம்பெற்றது.

4. பசுமைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக உலக வங்கிக்கு “இந்திய பசுமை உத்தரவாதத்தை” வழங்கவுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) யுகே 

இ) பிரான்ஸ்

ஈ) ஜெர்மனி

  • இந்தியா முழுவதுமான பசுமைத் திட்டங்களுக்கு 750 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதற்காக, உலக வங்கிக்கு இங்கிலாந்து (UK) “இந்திய பசுமை உத்தரவாதத்தை” வழங்கும். கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது. பசுமை உத்தரவாத நிதியானது தூய எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தூய மற்றும் நெகிழ்ச்சியான உட்கட்டமைப்பை கொண்டுவரும். பிரைவேட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் குரூப் கீழ், UN காலநிலை உச்சிமாநாட்டில் 210 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் UK அளித்துள்ளது.

5. ஓய்வூதியம் பெறுவோர்க்கு முதல், ‘வீடியோ லைஃப் சர்டிபிகேட் சேவையை’ அறிமுகப்படுத்திய இந்திய வங்கி எது?

அ) பஞ்சாப் நேஷனல் வங்கி

ஆ) கனரா வங்கி

இ) பாரத ஸ்டேட் வங்கி 

ஈ) பரோடா வங்கி

  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல் ‘வீடியோ லைஃப் சர்டிபிகேட் சேவை’யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வசதிமூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வீடுகளில் இருந்தே காணொளிமூலம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். SBI இன்படி, இந்த வசதி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரின் மனைவி இவ்வசதியைப் பயன்படுத்த முடியாது. வீடியோ வாழ்நாள் சான்றிதழின் செயல்முறை காகிதமற்றது மற்றும் இலவசமாகவும் கிடைக்கிறது.

6. காலநிலை மாற்றம் குறித்த NASA’இன் சமீபத்திய ஆய்வின்படி, காலநிலை மாற்றத்தால் 17% வளர்ச்சியைக் காணவுள்ள பயிர் எது?

அ) அரிசி

ஆ) கோதுமை 

இ) சோளம்

ஈ) பருத்தி

  • நேச்சர் ஃபுட் என்ற இதழில் வெளியிடப்பட்ட புதிய NASA ஆய்வின்படி, பருவநிலை மாற்றமானது 2030ஆம் ஆண்டளவில் மக்காச்சோளம் மற்றும் கோதுமையின் உற்பத்தியை அதீத பைங்குடில் வாயு உமிழ்வு பாதிக்கலாம். இந்த ஆய்வின்படி, மக்காச்சோள பயிர் விளைச்சல் 24% குறையும் என்றும், கோதுமை சுமார் 17% வளர்ச்சியைக் காணக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையில் அதிகரிப்பு, மழைப் பொழிவு முறைகளில் மாற்றங்கள் மற்றும் பைங்குடில் வாயு உமிழ்வுகளில் CO2 செறிவு ஆகியவை இதற்கு காரணமாகும்.

7. கீழ்கண்ட எந்த மாநிலத்தில், ‘பெஸ்து வாரஸ்’ புத்தாண்டு நாள் கொண்டாடப்படுகிறது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) குஜராத் 

ஈ) மகாராஷ்டிரா

  • ‘பெஸ்து வாரஸ்’ (அ) குஜராத்தி புத்தாண்டு ஆனது இந்து நாட்காட்டியின் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பாரம்பரியமாக ‘வர்ஷா பிரதிபதா’ அல்லது ‘பெஸ்து வாரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘சோப்டா’ எனப்படும் கணக்குகளை வைத்து புதிய புத்தகங்களை தயாரித்து மக்கள் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் லட்சுமி மற்றும் கிருஷ்ணரையும் அவர்கள் வழிபடுகின்றனர்.

8. முதலமைச்சர் அவசிய பூ-அதிகார் யோஜனா சார்ந்த மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) ஒடிஸா

இ) ஹரியானா

ஈ) மத்திய பிரதேசம் 

  • சொந்தமாக நிலம் இல்லாத மாநில மக்களுக்கு வீட்டு மனைகளை இலவசமாக வழங்குவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அந்த நிலத்தை மக்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். “முதலமைச்சர் அவசிய பூ-அதிகார் யோஜனா” என்ற திட்டத்தின்கீழ் இந்த இலவச மனைகள் வழங்கப்படுகிறது.

9. ‘PMFME’ திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகம் 

இ) உழவு அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சர் பிரசுபதி குமார் பராஸ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், ‘தில்லி பேக்ஸ்’ என்ற பேக்கரி பிராண்டைத் தொடங்கினார். முழு கோதுமை ரஸ்க் தில்லி பேக்ஸ் பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தயாரிப்பு ஆகும். பிரதமர் நுண் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களின் (PMFME) திட்டத்தின்கீழ், ஒரு மாவட்டத்தில் இருந்து ஒரு பொருளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. NAFED கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘CAATSA’ என்பது எந்த நாட்டுடன் தொடர்புடைய சட்டமாகும்?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) யுகே

  • CAATSA – Countering America’s Adversaries Through Sanctions Act என்பது கடந்த 2017ஆம் ஆண்டின் சட்டமாகும். இது ரஷ்யா உட்பட சில நாடுகளுடன் வணிகம் செய்த நாடுகளைத் தண்டிக்கும் நோக்கம் கொண்டது. ரஷ்யாவின் S400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான தடைகளிலிருந்து இந்தியாவிற்கு விலக்களிக்கும் சட்டத்தை மூன்று குடியரசுக் கட்சி அமெரிக்க செனட்டர்கள் தாக்கல் செய்தனர். இது, ‘CAATSA’ விதித்த பொருளாதாரத் தடைகளில் இருந்து QUAD-ன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு பத்து ஆண்டுகள் விலக்கு அளிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 120 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: அனைத்து மொழியிலும் வெளியிட மத்திய செம்மொழி நிறுவனம் தீவிரம்

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக 58 பழங்குடியின மொழிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

மனித வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்து திருக்குறள் விளக்குகிறது. இதில் உள்ளகருத்துகள் இனம், மொழி, பாலின பேதங்களின்றி எக்காலத்துக்கும் பொருந்துவதால் திருக்குறள் ‘உலகப் பொது மறை’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன்சிறப்பை அறிந்த அறிஞர்களால் 1800-ம் ஆண்டில் இருந்தே 43மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் குறைந்த அளவிலேயே உருவாக்கப்பட்டதால் திருக்குறள், பல மொழிகளில் முழுமையாகச் சென்றடையவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டுமத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முதற்கட்டமாக அரசமைப்பின் 21 மொழிகளில் பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழிகளில்திருக்குறளை ஏற்கெனவே மொழிபெயர்த்திருந்தது. இந்நிலையில், திருக்குறளை உலகின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா சந்திரசேகரன் கூறியதாவது: உலகம் முழுவதும், திருக்குறள் சென்றடைய, மொழிபெயர்க்கும் பணியைத்தொடங்கும் முன்பாகவே, இந்திய மற்றும் சர்வதேச அளவில் 43 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன. ஆனால், அவற்றில் பல, ஒற்றைப் பிரதியாகவே உள்ளன.

மேலும், விளக்கவுரைகள் தெளிவாக இல்லை. திருக்குறள் மீதுஅதிகப்பற்றுள்ள பிரதமர் மோடி, மொழி பெயர்ப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதனைகருத்தில் கொண்டும், உலகப் பொதுமறையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில் தற்போது மொழி பெயர்ப்பு பணியைத் தொடங்கி உள்ளது. அதன்படி, இந்தி, மராத்தி, நேபாளி, மலையாளம், ஒடியா, உருது, அரபி, பாரசீகம், படுகு, வாக்ரிபோலி ஆகிய 10 மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, பாசா, பர்மீஸ், ஃபிஜியன், ஐரிஷ், கெமர், கிரியோல், மலாய், மங்கோலியன், தாய், வியட்நாமிஸ், டேனிஷ், சிங்களம், ஜப்பானியம், கொரியன், சௌராஷ்டிரா, கொங்கனி, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, கொங்கணி, மைதிலி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி உள்ளிட்ட 42 மொழிகளிலும் திருக்குறள் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், இந்திய அரசமைப்பில் இல்லாத 66 மொழிகளிலும் மொழிபெயர்ப்பு நடைபெற்று வருகிறது. இதில், ஆதி, அங்கமி, அவோ, படகா, இருளா, காட்டு நாயக்கர், கோடா, கொண்டா, கோயா, முண்டா, பனியா உள்ளிட்ட 58 பழங்குடியினர் மொழிகளும்அடங்கும். இதற்காகச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள், மொழி அறிஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒரு மொழியில் மொழிபெயர்க்க ரூ.1.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு, உலகின்அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட நூல் என்ற இலக்கை நோக்கி, திருக்குறள் பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2. பாதுகாப்பு தொழில் வழித்தட திட்ட இயக்குநராக கிருஷ்ணமூர்த்தி நியமனம்:

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002’இல் குடிமையியல் பணியில் தேர்ச்சி பெற்ற கிருஷ்ண மூர்த்தி, இந்திய ஆயுத தொழிற்சாலைகளுக்கான சேவைகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்டவர். ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தில் ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, அரவங்காடு கார்டைட் தொழிற்சாலை, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றியவர். ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் ஆயுத்பூஷண் விருது பெற்றவர்.

3. உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி – இந்திய அணி பயிற்சியில் பங்கேற்க கோவில்பட்டி மாணவர் தேர்வு

உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும், இந்திய அணிக்கான பயிற்சியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் மாரீஸ்வரன் (21). இவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு வணிகவியல் படிக்கிறார். உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாரீஸ்வரனின் தந்தை சக்திவேல் தீப்பெட்டிக்கான அட்டைப்பெட்டி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்கிறார். தாய் சங்கரி இதற்கு உதவியாக இருக்கிறார். மாரீஸ்வரன் 8-ம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டு விடுதி வீரர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று, அரியலூரில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சியுடன், 12-ம் வகுப்பு வரை படித்தார். தற்போது, பயிற்சியாளர் முத்துக்குமாரிடம் ஹாக்கி பயிற்சி பெற்றதுடன், கோவில்பட்டி அரசு கல்லூரியில் படிக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வில், 36 பேரில் ஒருவராக தேர்வுபெற்றார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி, ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறார். அங்கு கடந்த மாதம் நடந்த 2ஆம்கட்ட தேர்வில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மாரீஸ்வரனும் ஒருவர் ஆவார்.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளர் செ குரு சித்திர சண்முகபாரதி கூறும்போது, “மாரீஸ்வரன் தற்போது இறுதிக்கட்ட பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள்தான் புவனேஸ்வரில் இம்மாதம் கடைசி வாரம் தொடங்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவர். தற்போது தேர்வு செய்யப்பட்ட 24 பேரில் தென் இந்தியாவில் இருந்து தேர்வானவர் மாரீஸ்வரன் மட்டுமே. தமிழகம் மற்றும் கோவில்பட்டிக்கு மாரீஸ்வரன் பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.

4. நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் ‘கடல்பாசி திட்டம்’

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல் முருகன் கூறினாா்.

மக்களை வீடுவீடாகத் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய இணையமைச்சா் எல் முருகன் கோயம்பேடு பகுதியில் சனிக்கிழமை வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்ததுடன், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உலகிலேயே 100 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய நாடு இந்தியா. தமிழகத்தில் 6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை ஊசியை 93 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா். 2-ஆம் தவணை ஊசியையும் தமிழகத்தைச் சோ்ந்தோா் தாமதிக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் கடல்பாசிக்கு அதிக தேவை உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தின் பொருளாதாரமும் வளரும். தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை வரவேண்டியுள்ளது. அது வெளியானதும் கடல்பாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. அதைத் தொடா்ந்து புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியைக் குறைத்துள்ளன. தமிழக அரசும் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் முருகன்.

5. மும்பை ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா்கள் தயாரிப்பில் புதிய பாம்பன் பால ரயில் பாதைக்கான வரைபடம்

மும்பை ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா்களின் உதவியுடன் பாம்பன் ரயில் பாதைக்கான வரைபடம் தயாராகி வருவதாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிய ரயில் பாதைப் பணிகள், இரட்டை ரயில் பாதைப் பணிகள், அகல ரயில் பாதைப் பணிகள், புதிய பாம்பன் பாலப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி:

அருப்புக்கோட்டை வழியாக அமைக்கப்படும் மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அருகே மீளவிட்டான் முதல் மேலமருதூா் வரை ரயில் பாதைப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் பகுதியில் 4 பெரிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு டிசம்பரில், இந்த 18 கிலோ மீட்டா் புதிய ரயில் பாதை ஆய்வுக்கு தயாராகி விடும். ஆய்வு முடிந்தவுடன் இந்தப் பகுதியில் உள்ள மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மதுரை- தேனி ரயில் பாதை 2022 ஜனவரியில் ஆய்வு

மதுரை- போடிநாயக்கனூா் அகல ரயில் பாதைத் திட்டத்தில், ஆண்டிபட்டி – தேனி பிரிவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த 17 கிலோ மீட்டா் தூரமுள்ள புதிய ரயில் பாதையில், தமிழக மின்வாரியத்தின் சாா்பாக இரண்டு மின் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன் பெங்களூா் தென் சரக பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்தவுள்ளாா்.

இந்தப் பிரிவில் மீதமுள்ள 15 கிலோ மீட்டா் தூர தேனி- போடிநாயக்கனூா் அகல ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் ரயில் பாதை அமைக்கத் தேவையான மண் எடுப்பதற்கு தேனி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் நடைபெற்றும் வரும் 32 சிறிய பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும். 2022 ஜனவரியில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்த உள்ளாா். அதன் பின்னா் இந்த ரயில் பாதை தயாராகி விடும்.

இரட்டை ரயில் பாதைப் பணிகள்:

கோவில்பட்டி – துலுக்கப்பட்டி இடையே 33 கிலோ மீட்டா் புதிய இரட்டை ரயில் பாதைப் பணிகளுக்காக நில ஆா்ஜிதப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரயில் பாதை அமைக்கத் தேவையான மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 6 பெரிய பாலங்கள், 41 சிறிய பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒரு சிறிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை- திருமங்கலம் இடையே நடைபெற்று வரும் இரட்டை அகல ரயில் பாதைப் பணிகள் 2022 பிப்ரவரியில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப்பணிகளுக்காக 17 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்வே பாதையில் 47 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. 3 சிறிய பாலங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பாம்பன் பாலம்

புதிய பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடுவில் கப்பல்கள் சென்றுவர வசதியாக செங்குத்தாக மேலே சென்று வரும் வகையில் அமைக்கப்படும் ரயில் பாதைக்கான வரைபடம் மும்பை ஐஐடி தொழில் நுட்ப வல்லுநா்களின் உதவியுடன் தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

6. மத சுற்றுலாவை பிரபலப்படுத்த ராமாயண யாத்திரை சுற்றுலா:

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்றார் போல், பல்வேறு இடங்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களைக் காணும் வகையில், ராமாயண யாத்திரை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் பயணம் வரும் நவம்பர் 16-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்கிறது. ஹம்பி, நாசிக், சித்ரகூட், காசி, கயா, சீதாமார்ஹி, நேபாளம், ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்மபூமி, அயோத்தியில் ராமஜென்ம பூமி, நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற இடங்களைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 12 இரவுகள், 13 பகல்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு கட்டணம் `14,490 ஆகும். இதில், ரயில் கட்டணம், தங்கும் வசதி, சைவ உணவு ஆகியவை அடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

7. துப்பாக்கி சுடுதல்: மானு/ஜாவத் ஜோடிக்கு தங்கம்

போலந்தில் நடைபெற்ற சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) பிரெசிடென்ட்’ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவின் மானு பாக்கா்/ஈரானின் ஜாவத் ஃபருக்கி இணை கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் பதக்கம் வென்றது.

முதலிடத்துக்கான போட்டியில் இந்த இந்தோ/ஈரானியோ ஜோடி 16-8 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸின் மெதில்டா லமோலே/ஆா்டெம் சொ்னௌசோவ் இணையை தோற்கடித்தது. தகுதிச்சுற்றில் மானு/ஜாவத் இணை முறையே 582/600 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பின்னா் அதில் முதலிடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அங்கு தங்கம் வென்றது.

முன்னதாக 8 ஜோடிகள் தகுதிபெற்ற அரையிறுதிச் சுற்றில் மேலும் இரு இந்தியா்கள் இடம் பெற்றிருந்தனா். இந்தியாவின் அபிஷேக் வா்மா/உக்ரைனின் ஒலெனா கொஸ்டெவிச் இணை 6-ஆம் இடமும், இந்தியாவின் சௌரவ் சௌதரி/ஸ்விட்சா்லாந்தின் ஹெய்தி கொ்பா் டைதெல்ம் ஜோடி 7-ஆம் இடமும் பிடித்தன. இது தவிர போட்டியில் கலந்துகொண்டிருந்த இந்தியாவின் யஷஸ்வி தேஸ்வால்/ஸ்லோவேகியாவின் ஜுராஜ் டுஸின்ஸ்கி 10-ஆவது இடம் பிடித்தது.

சௌரவுக்கு வெள்ளி: ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி வெள்ளியும், அபிஷேக் வா்மா வெண்கலமும் வென்றனா். ஜொ்மனி வீரா் கிறிஸ்டியன் ரெய்ட்ஸ் 34 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, சௌரவ் 24, அபிஷேக் 21 புள்ளிகளுடன் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

8. யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலம்

சொ்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது.

மகளிருக்கான வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் 3 வீராங்கனைகள் வென்ன் பேரில் இந்த எண்ணிக்கை உயா்ந்துள்ளது. 62 கிலோ பிரிவில் ராதிகா 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் அரோரா கேம்பாக்னாவை தோற்கடித்தாா். 65 கிலோ பிரிவில் நிஷா 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் லாத்வியாவின் எல்மா ஸிட்லெரெவை வீழ்த்தினாா். 72 கிலோ பிரிவில் திவ்யா கக்ரான் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் காய்லா மேரி மரானோவை வென்றாா்.

முன்னதாக 50 கிலோ பிரிவில் ஷிவானி வெள்ளியும், 55 கிலோ பிரிவில் அஞ்சு வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் பிரிவு வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவின் சௌரவ் மதுகா் – ஆா்மீனியாவின் மேனுவல் கந்த்சா்த்சியானை சந்திக்கிறாா்.

9. சீனாவிண்ணில் செலுத்தப்பட்ட 3 செயற்கைக்கோள்கள்

தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் ஜிசாங் ஏவுதளத்திலிருந்து 3 தொலையுணா்வு செயற்கைக்கோள்களை சீனா சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

யாவ்கான்-35 ரகத்தைச் சோ்ந்த அந்த செயற்கைக்கோள்கள், லாங் மாா்ச்-2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. லாங் மாா்ச் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 396-ஆவது செயற்கைக்கோள் திட்டம் இது என்று அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

10. 3-ஆவது முறையாக ஷி ஜின்பிங் பதவி நீட்டிப்பு?

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், இதுவரை இல்லாத வகையில் அதிபா் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

68 வயதாகும் ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபா் பொறுப்பையும் வகித்து வருகிறாா். இதன் மூலம், நாட்டின் 3 அதிகார பீடங்களும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தச் சூழலில், வரும் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அவா் பங்கேற்கிறாா்.

அந்த மாநாட்டில், கட்சி அண்மைக்காலமாக ஆற்றியுள்ள வரலாற்றுச் சாதனைகளைப் பட்டியலிட்டு தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மாவோ-சேதுங்குக்குப் பிறகு சீனாவின் மிக சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்படும் ஷின்பிங், 3-ஆவது முறையாக மேலும் 5 ஆண்டுகளுக்கு அதிபா் பதவியில் நீடித்தால் சீன வரலாற்றில் அதுவே முதல்முறையாகும்.

சீனாவில் இதற்கு முந்தைய அதிபா்கள் அனைவரும் 2 முறை ஆட்சி செலுத்தியதற்குப் பிறகோ, தங்களுக்கு 68 வயது பூா்த்தியான பிறகோ பதவியிலிருந்து ராஜிநாமா செய்து வந்தனா். இந்தச் சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்தில், ஒருவா் இரு முறை மட்டுமே அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டது. இது, ஷி ஜின்பிங்கின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அடுத்த வாரம் கூடுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. Ministry of Information and Broadcasting has created ‘Single Window Filming mechanism’, along with which Ministry?

A) Ministry of Defence

B) Ministry of Railways 

C) Ministry of Culture

D) Ministry of Housing and Urban Affairs

  • An integrated Single Window Filming mechanism has been created by the Ministry of Railways and Ministry of Information and Broadcasting. The objective of the scheme is to make the permission for filming across Railways premises easier and more efficient.

2. In the COP26 climate summit’s first major deal, the leaders promised to end and reverse deforestation by which year?

A) 2030 

B) 2040

C) 2050

D) 2070

  • In the COP26 climate summit’s first major deal, as many as 110 world leaders promised to end and reverse deforestation by 2030. Named ‘Glasgow Leaders’ Declaration on Forests and Land Use’, the pledge includes $12 billion in public funds and $7.2 billion of private investment of public and private funds. A previous deal in 2014 had failed to slow deforestation at all.

3. Mandakini River, which was seen in the news recently, starts in which state?

A) Uttarakhand

B) Uttar Pradesh

C) Madhya Pradesh 

D) Bihar

  • River Mandakini, a tributary of the Yamuna, starts in Madhya Pradesh’s Satna district and flows into the Yamuna in Uttar Pradesh Chitrakoot district. The river flows through Sati Anusuiya, a perennial trough where many springs feed into it. It was seen in the news recently, as encroachment, concretisation and pollution are causing severe damages to the river.

4. Which country is set to provide “India Green Guarantee” to the World Bank, to finance green projects?

A) USA

B) UK 

C) France

D) Germany

  • The UK will provide an “India Green Guarantee” to the World Bank, to unlock 750 million pounds for green projects across India. This was announced at the COP26 summit in Glasgow. The green guarantee financing will support clean and resilient infrastructure in sectors including clean energy, transport and urban development. UK committed over 210 million pounds at the UN climate summit under Private Infrastructure Development Group (PIDG).

5. Which Indian bank launched the first ‘Video life certificate service’ for pensioners?

A) Punjab National Bank

B) Canara Bank

C) State Bank of India 

D) Bank of Baroda

  • The State Bank of India (SBI) has launched the first ‘Video life certificate service’ for pensioners. This new facility will allow pensioners to submit their life certificates through video from their homes. As per the SBI, this facility is available for only pensioners and spouse of the pensioner receiving a pension will not be able to use this facility. The process of video life certificate is paperless and also available free of cost.

6. As per a recent NASA study on Climate change, which crop is set to see a growth of 17% due to climate change?

A) Rice

B) Wheat 

C) Maize

D) Cotton

  • According to a new NASA study published in the journal, Nature Food, climate change may affect the production of maize and wheat by 2030 under a high greenhouse gas emissions scenario. As per the study, Maize crop yields are projected to decline by 24%, while wheat could potentially see a growth of about 17%. This is due to increases in temperature, shifts in rainfall patterns, and elevated surface CO2 concentrations from greenhouse gas emissions.

7. ‘Bestu Varas’ is the New year day celebrated in which state?

A) Tamil Nadu

B) Karnataka

C) Gujarat 

D) Maharashtra

  • ‘Bestu Varas’ or Gujarati new year is celebrated in Kartik month of the Hindu calendar. The day is traditionally known as Varsha Pratipada or Bestu Varas. People celebrate this day by preparing new books to keep accounts called the Chopda. They also worship Goddess Lakshmi and Lord Krishna on this day.

8. Mukhyamantri Awasiya Bhu–adhikar Yojna pertains to which state?

A) Maharashtra

B) Odisha

C) Haryana

D) Madhya Pradesh 

  • The Government of Madhya Pradesh has announced to provide Residential Lands, free of cost to people of the state, who do not own any land. The land can be used for building own houses by the people. The free plots would be provided under the scheme named “Mukhyamantri Awasiya Bhu–adhikar Yojna”.

9. ‘PMFME’ scheme is implemented by which Union Ministry?

A) Ministry of Finance

B) Ministry of Food Processing Industries 

C) Ministry of Agriculture

D) Ministry of Rural Development

  • Food Processing Industries Minister Prashupati Kumar Paras launched a bakery brand Dilli Bakes, under the One District, One Product (ODOP) initiative. Whole wheat rusk is the first product launched under the Dilli Bakes brand.
  • The Government is promoting one product from one district under the Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises (PMFME) Scheme. The product has been launched in association with cooperative NAFED.

10. CAATSA, which was seen in sometimes, is an act related to which country?

A) USA 

B) Russia

C) China

D) UK

  • CAATSA–Countering America’s Adversaries Through Sanctions Act is a 2017 law, which intends punish countries that did business with some countries including Russia. Three Republican U.S. senators filed legislation to exempt India from sanctions for purchasing a Russian S400 missile defense system. This would create a 10–year exemption for member countries of the QUAD – Australia, Japan and India – from sanctions imposed by CAATSA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!