Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

7th & 8th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th & 8th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th & 8th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதிகள் திருத்தப்பட்டு, LIC–இல் எத்தனை சதவீதத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும்?

அ. 10

ஆ. 20 

இ. 25

ஈ. 50

  • LIC–இல் 20 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளை அரசாங்கம் திருத்தியுள்ளது. முதல் பொதுப்பங்கு வெளியீடு (IPO) மூலம் LIC–இல் உள்ள அதன் பங்குகளை நீர்த்துப்போகச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, LIC–இல் அந்நிய முதலீட்டை எளிதாக்குவதற்காக, தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை FDI கொள்கையில் திருத்தஞ்செய்தது. LIC–இன் வரைவு ஆவணங்களுக்கு SEBI ஒப்புதல் அளித்தது.

2. உலகின் முதல் ‘கிரிப்டோ அடிப்படையில் இயங்கும்’ கொடுப்பனவு அட்டையுடன் தொடர்புடைய உலகளாவிய கொடுப்பனவு நிறுவனம் எது?

அ. VISA

ஆ. மாஸ்டர்கார்டு 

இ. ரூபே

ஈ. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்

  • கிரிப்டோ வழங்கியான நெக்ஸோ, ‘கிரிப்டோ அடிப்படையில் இயங்கும்’ உலகின் முதல் கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக உலகளாவிய கொடுப்பானவு நிறுவனமான மாஸ்டர்கார்டுடன் கூட்டிணைந்துள்ளது. தொடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கப்பெறும் இந்த அட்டை, பயனர்கள் பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துக்களை விற்காமல் செலவிட அனுமதிக்கிறது. மாஸ்டர்கார்டைப் பயன்படுத்தி வரும் உலகெங்கிலும் உள்ள 92 மில்லியன் வணிகர்களிடம் இந்த அட்டையைப் பயன்படுத்த முடியும்.

3. ‘மான்டே–கார்லோ மாஸ்டர்ஸ் 2022’ஐ வென்ற ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரராவார்?

அ. பிரான்ஸ்

ஆ. சுவிச்சர்லாந்து

இ. கிரேக்கம் 

ஈ. கியூபா

  • கிரேக்க டென்னிஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், மான்டே–கார்லோ மாஸ்டர்ஸில் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட ஆறாவது வீரரானார். அவர் 2022 பதிப்பின் இறுதிப் போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினாவை நேர்செட்களில் தோற்கடித்தார். இந்த வெற்றி அவரது எட்டாவது ATP டூர் பட்டத்தையும் அவரது இரண்டாவது ‘மாஸ்டர்ஸ் 1000’ பட்டத்தையும் குறிக்கிறது. அவர் தற்போது WTA பட்டியலில் உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

4. அண்மையில் காலமான D விஷ்வாவுடன் சார்ந்த விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. ஸ்குவாஷ்

இ. டேபிள் டென்னிஸ்

ஈ. வாள்சண்டை

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான சிறந்த டேபிள் டென்னிஸ் வீரரான D விஷ்வா, 83ஆவது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஷில்லாங்கிற்குச் செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தேசிய தரவரிசைப் போட்டியில், இளையோர் U–19 சிறுவர்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார். மேலும் 2021 டிசம்பரில் தென் மண்டல தரவரிசைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

5. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட டர்பன் என்னும் நகரம் அமைந்துள்ள நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. தென்னாப்பிரிக்கா 

இ. ரஷ்யா

ஈ. எகிப்து

  • தென்னாப்பிரிக்காவின் கீழைப்பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய புயல் தாக்குதலுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 400 பேரின் மரணத்திற்குக் காரணமான இப்புயல், பல்லாயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது. 3.5 மில்லியன் மக்கள் வசிக்கும் டர்பன் நகரத்தில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளத்தால் 13,500–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 4,000 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. அவசரகால நிவாரண நிதியாக அந்நாட்டு அரசாங்கம் ஒரு பில்லியன் ராண்ட் ($68 மில்லியன்) நிதியை அறிவித்துள்ளது.

6. தடையற்ற இணைய இணைப்புடன் டிஜிட்டல் சேவைகளை வழங்கும், ‘L–ரூட் சர்வரை’ப் பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. இராஜஸ்தான் 

இ. குஜராத்

ஈ. தெலுங்கானா

  • L–ரூட் சேவையகத்தைப் பெற்ற நாட்டின் முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியுள்ளது. இது மாநில அரசு தனது டிஜிட்டல் சேவைகளை வழங்கவும், தடையற்ற இணைய இணைப்புடன் மின்–ஆளுகையைச் செயல்படுத்தவும் உதவும். இந்தப் புதிய வசதி இணைய உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு இணைய அடிப்படையிலான செயல்பாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.

7. ‘பொருளாதார நிலை – State of the Economy’ என்பது எந்த நிறுவனத்தின் முதன்மை அறிக்கையாகும்?

அ. NITI ஆயோக்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி 

இ. நிதியமைச்சகம்

ஈ. FICCI

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் முதன்மையான ‘பொருளாதார நிலை’ அறிக்கையில், பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்துவரும் இறக்குமதிகளுக்கு இடையே பணவீக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது. அடிப்படைகளின் வலிமை மற்றும் சர்வதேச இருப்புக்களின் பங்கு ஆகியவை இடையகங்களை வழங்கினாலும், விரைவாக விரிவடையும் வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகள் மூலதன விலகளுடன் இணைந்து இருப்பது வெளிப்புற நிலைத்தன்மைக்கு ஆபத்துகளாகும்.

8. ‘சீர்மிகு நகரங்கள், சீர்மிகு நகரமயமாக்கல்’ மாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. விசாகப்பட்டினம்

இ. சூரத் 🗹

ஈ. பாலக்காடு

  • ‘சீர்மிகு நகரங்கள், சீர்மிகு நகரமயமாக்கல்’ மாநாட்டை சூரத்தில் உள்ள சூரத் ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் டெவலப்மென்ட் லிட் உடன் இணைந்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா சீர்மிகு நகரங்கள் விருதுகள் போட்டி (ISAC) – 2020இல், சூரத் மற்றும் இந்தூர் சிறந்த நகரத்திற்கான விருதைப் பெற்றன. மேலும், உத்தரபிரதேசம், ‘சிறந்த மாநில’ விருது பெற்றது. நகர்ப்புற விளைவு கட்டமைப்பு – 2022, தரவுத்தளம் – AMPLIFI மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் விளைவுகள் குறித்த தகவல்களை அளிக்கும் தகவல்பலகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் அப்போது தொடங்கப்பட்டன.

9. தேசிய இணையவெளிப் பாதுகாப்பு நேர்வு மீட்புப் பயிற்சியை (NCX இந்தியா)’ ஏற்பாடு செய்கிற நிறுவனம் எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. தேசிய பாதுகாப்புக் கழகம் 

இ. அதிநவீன கணினி வளர்ச்சிக்கான மையம்

ஈ. NITI ஆயோக்

  • தேசிய பாதுகாப்புக் கழகச் செயலகமானது அரசு அதிகாரிகளுக்கு தேசிய இணையவெளிப் பாதுகாப்பு நேர்வு மீட்புப் பயிற்சியை (NCX இந்தியா) ஏற்பாடு செய்கிறது. இந்தப் பயிற்சியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடங்கிவைத்தார். தீங்குநிரல் தகவல் பகிர்வு தளம் (MISP), பாதிப்பு கையாளுதல் மற்றும் ஊடுருவல் சோதனை, வலையமைப்பு, டிஜிட்டல் தடயவியல்போன்ற பல்வேறு முக்கிய இணையவெளிப் பாதுகாப்பு சார்ந்த பகுதிகளில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.

10. ‘அங்கிதா ரெய்னா, ருதுஜா போசலே, ரியா பாட்டியா மற்றும் சௌஜன்யா பவிசெட்டி’ ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. டென்னிஸ் 

இ. டேபிள்–டென்னிஸ்

ஈ. ஹாக்கி

  • அங்கிதா ரெய்னா, ருதுஜா போசலே, ரியா பாட்டியா மற்றும் சௌஜன்யா பவிசெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் டென்னிஸ் அணி பில்லி ஜீன் கிங் கோப்பை–2022இல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. முன்னதாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு எதிரான குழு ஆட்டங்களில் தோல்வியடைந்த பிறகு, அங்கிதா ரெய்னா தலைமையிலான அணி மீளெழுச்சி பெற்று வெற்றி பெற்றது. இந்தோனேசியா, நியூசிலாந்து மற்றும் இறுதியாக தென்கொரியாவுக்கு எதிராக இது மூன்றாவது–நேரான வெற்றியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. 2022 மே 8 – உலக இரத்த அழிவுச்சோகை (தலசீமியா) நாள்

கருப்பொருள்: Be Aware.Share.Care: Working with the Global Community as One to Improve Thalassemia Knowledge.

2. சட்டப்படியான வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம்: பெண்கள் 25%; ஆண்கள் 15%

சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே 18 முதல் 29 வயதுவரையுடைய பெண்களில் 25% பேருக்கு திருமணம் நடந்திருப்பது தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு (NFHS) அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுபோல, 21 முதல் 29 வயதுவரையுடைய 15% ஆண்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச மண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, இருதரப்பினருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தச் சூழலில், சட்டப்படியான வயதை அடைவதற்கு முன்னரே திருமணங்கள் நடைபெறுவது தொடர்பாக 2019 முதல் 2021 வரை NFHS ஆய்வுமேற்கொண்டு, அதன் முடிவை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

சட்டப்படியான குறைந்தபட்ச மண வயதை எட்டுவதற்கு முன்னரே பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் மாநிலங்களில் 42 சவீதத்துடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. பிகார் (42%), திரிபுரா (39%), ஜார்க்கண்ட் (35%), ஆந்திரம் (33%), அஸ்ஸாம் (32%), தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையு (28%), தெலங்கானா (27%), மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்கள் (25%) ஆகியவை இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதுபோல, குறைந்தபட்ச மண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம் நடைபெறும் மாநிலங்களில் 25 சதவீதத்துடன் பிகார் முதலிடத்தில் உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் 24 சதவீதத்துடனும், ஜார்கண்ட் 22 சதவீதத்துடனும், அருணாசல பிரதேசம் 21 சதவீதத்துடனும், மேற்கு வங்கம் 20 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் குறைந்தபட்சமாக லட்சத்தீவு, சண்டீகரில் 1 சதவீதத்துக்கும் குறைவான ஆண்களுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. கேரளத்தில் 1 சதவீத ஆண்களுக்கும், கர்நாடகம், தமிழ்நாடு, நாகாலந்து மாநிலங்களில் 4% ஆண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. 11% மணங்கள் ரத்த சொந்தங்களில் நடைபெறுவதும், இது கேரளம் தவிர்த்து பிற தென்மாநிலங்களில் பொதுவான நிகழ்வாக காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2. தேசிய ஹாக்கி: தமிழ்நாடு வெற்றி

சீனியர் மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழகம் முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை வெற்றியை பதிவு செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கிய இப்போட்டியில் முதல்நாளான வெள்ளிக்கிழமை 5 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் தமிழகம் தனது ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அந்தமான் & நிகோபார் ‘போர்பெய்ட்’ செய்தது. ஆட்டத்தின் விதிகளை ஏதேனும் ஒரு அணி மீறியதாகக் கருதப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அணி ‘போர்பெய்ட்’ செய்ததாக அறிவிக்கப்படும். அந்த அடிப்படையில் அந்தமான் & நிகோபார் ‘போர்பெய்ட்’ செய்யப்பட்டதால் தமிழகம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதர ஆட்டங்களில் கர்நாடகம் – அருணாசல பிரதேசத்தையும் (10-0), உத்தர பிரதேசம் – கோவாவையும் (8-0), தில்லி – குஜராத்தையும் (13-0), ஒடிஸா – தெலங்கானாவையும் (14-0) வீழ்த்தின. தமிழ்நாடு தனது அடுத்த ஆட்டத்தில் கர்நாடகத்தைய ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

3. ‘UNESCO அரங்கில் திருக்குறள் மாநாடு’: தமிழ்நாடு அரசு

பாரிஸில் உள்ள UNESCO அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என்று தமிழ் பண்பாடு மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ் பண்பாடு துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

1. திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டு கல்வி அறிவியல் பண்பாடு அமைப்பின் (யுனெஸ்கோ) அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்த `1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

2. தமிழகம் முழுவதும் 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டிற்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்வுகளை நடத்த `5.60 கோடி வழங்கப்படும்.

3. அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும்.

1. The Foreign Exchange Management Act (FEMA) Rules have been amended, to allow……….. percent of FDI in LIC.

A. 10

B. 20 

C. 25

D. 50

  • The Government has amended rules of the Foreign Exchange Management Act (FEMA), paving the way for up to 20 per cent foreign direct investment in LIC. The government is planning to dilute its stake in LIC through the Initial Public Offering (IPO). After the Cabinet approval, the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) amended the FDI policy to facilitate overseas investment in LIC. SEBI gave approval to the draft papers of LIC.

2. Which global payments company is associated with the world’s first ‘crypto–backed’ payment card?

A. VISA

B. Mastercard 

C. Rupay

D. American Express

  • Crypto lender Nexo has partnered with global payments company Mastercard to launch the world’s first “crypto–backed” payment card. The card available in selected European countries initially, allows users to spend without having to sell their digital assets such as bitcoin. The card can be used at 92 million merchants worldwide where Mastercard is accepted.

3. Stefanos Tsitsipas, who won the Monte–Carlo Masters 2022, is a tennis player from which country?

A. France

B. Switzerland

C. Greece 

D. Cuba

  • Greek Ace Tennis player Stefanos Tsitsipas became the sixth man to defend his title at the Monte–Carlo Masters. He defeated Alejandro Davidovich Fokina in the final of the 2022 edition in straight sets. The victory marked his eighth ATP Tour title and his second Masters 1000 title. He is at present at the rank of World No 5 in the WTA list.

4. D Vishwa, who passed away recently, was an ace player of which game?

A. Tennis

B. Squash

C. Table Tennis 

D. Fencing

  • 18–year–old top Table tennis player from Tamil Nadu D. Vishwa was killed in a road accident while on his way to Shillong to participate in the 83rd senior national championships. He won the Youth U–19 boys’ singles title in the National–ranking tournament in January last year and finished runner–up in the South Zone ranking tournament in December 2021.

5. Durban, which has been hit by storms and heavy rains, is a city in which country?

A. USA

B. South Africa 

C. Russia

D. Egypt

  • South Africa’s eastern region has been hit by more rain after the deadliest storm stroke the country. It has killed nearly 400 people and left tens of thousands homeless. Recovery operations and humanitarian relief are under way in the Durban city of 3.5 million people.
  • The floods have damaged more than 13,500 houses and completely destroyed about 4,000. The government has announced one billion rand (USD 68m) in emergency relief funding.

6. Which is the first state in India to get the ‘L–root server’, to provide digital services with seamless internet connectivity?

A. Kerala

B. Rajasthan 

C. Gujarat

D. Telangana

  • Rajasthan has become the first State in the country to get the L–root server, which will enable the State government to provide its digital services and implement e–governance with seamless internet connectivity. The new facility will strengthen internet infrastructure as well as help improve security of internet–based operations.

7. ‘State of the Economy’ is the flagship report of which institution?

A. NITI Aayog

B. Reserve Bank of India 

C. Finance Ministry

D. FICCI

  • The Reserve Bank of India (RBI) in its flagship ‘State of the economy’ report said that the surge in commodity prices is posing inflation risks amidst surging imports.
  • Though the strength of underlying fundamentals and the stock of international reserves provide buffers, rapidly widening trade and current account deficits co–existing with portfolio capital outflows are risks to external sustainability.

8. Which city is the host of ‘Smart Cities, Smart Urbanization’ conference?

A. Chennai

B. Visakhapatnam

C. Surat

D. Palakkad

  • The ‘Smart Cities, Smart Urbanization’ conference is organised by the Union Ministry of Housing and Urban Affairs in association with Surat Smart City Corporation Development Ltd at Surat.
  • In the India Smart Cities Awards Contest (ISAC) 2020, Surat and Indore received award as Best City and Uttar Pradesh was awarded the Best State. Several initiatives were launched including Urban Outcomes Framework 2022, Data portal– AMPLIFI, and Output Outcome Dashboard for Smart Cities Mission.

9. Which institution organises the ‘National Cyber Security Incident Response Exercise (NCX India)’?

A. Indian Army

B. National Security Council 

C. Centre for Development of Advanced Computing

D. NITI Aayog

  • The National Security Council Secretariat is organising National Cyber Security Incident Response Exercise (NCX India) for government officials. National Security Advisor Ajit Doval inaugurated the National Cyber Security Incident Response Exercise. The participants will be trained on various key cyber security areas such as Malware Information Sharing Platform (MISP), Vulnerability Handling & Penetration Testing, Network, Digital Forensics, among others.

10. ‘Ankita Raina, Rutuja Bhosale, Riya Bhatia and Sowjanya Bavisetti’ are associated with which sports?

A. Squash

B. Tennis 

C. Table–Tennis

D. Hockey

  • The Indian women’s tennis team comprising Ankita Raina, Rutuja Bhosale, Riya Bhatia and Sowjanya Bavisetti finished third at the Billie Jean King Cup 2022. After losing against Japan and China in their initial group matches, the Ankita Raina–led team bounced back and won a third–straight victory against Indonesia, New Zealand and finally South Korea.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!