Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

7th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு ஹிந்தி சொல்லாக தெரிவு செய்யப்பட்ட சொல் எது?

அ) ஆத்மநிர்பார்தா

ஆ) நாரி ஷக்தி

இ) ஆதார்

ஈ) சம்விதான்

  • ஆக்ஸ்போர்டு குழுமமானது 2020ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு ஹிந்தி சொல்லாக, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல்லைத் தேர்வு செய்துள்ளது. ஹிந்தி மொழியில், இந்தச் சொல்லுக்கு ‘தன்னம்பிக்கை’ என்று பொருள்.
  • ஆக்ஸ்போர்டு தேர்ந்தெடுத்த முந்தைய ஆண்டின் ஹிந்தி சொற்கள் – ‘ஆதார்’ (2017), ‘நாரி சக்தி’ (2018) மற்றும் ‘சம்விதான்’ (2019). பிரதமரின் உரையைத்தொடர்ந்து, ‘ஆத்மநிர்பார்தா’ என்ற சொல் அதிகளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. “ஆசியா மற்றும் பசிபிக்கில் 2021’இல் பொருளாதார மற்றும் சமூக ஆய்வினை” வெளியிட்டு, 2021-22ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியை 7% என மதிப்பிட்ட நிறுவனம் எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) UNESCAP

இ) உலக வங்கி

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆசியா மற்றும் பசிபிக் 2021’இன் பொருளாதார மற்றும் சமூக ஆய்வு என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, 2021-22ஆம் ஆண்டில் இந்தியா 7% பொருளாதார வளர்ச்சியை பதிவுசெய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

3. P K மிஸ்ரா, அனில் கன்வத் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், எந்தப் பிரச்சனையை ஆய்வுசெய்வதற்காக உறுப்பினர்களாக உள்ளனர்?

அ) முதலீட்டைத் திரும்பப்பெறுதல்

ஆ) வேளாண் சட்டங்கள்

இ) தொழிற்சார் சுகாதாரம்

ஈ) மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள்

  • 3 புதிய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றம், நால்வர் குழுவை நியமித்தது. மேலும், அறிவிக்கப்படும்வரை, அம்மூன்று வேளாண் சட்டங்களை அமல் -படுத்துவதை தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. உறுப்பினர்களில் P K மிஸ்ரா, அனில் கன்வத், அசோக் குலாட்டி மற்றும் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் அடங்குவர். அந்தக் குழு தனது அறிக்கையை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

4. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2021-26) நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய பணவீக்க இலக்குக்கற்றை எது?

அ) 2.0 முதல் 6.0 சதவீதம் வரை

ஆ) 1.5 முதல் 5.5 சதவீதம் வரை

இ) 2.5 முதல் 6.5 சதவீதம் வரை

ஈ) 3.0 முதல் 7.0 சதவீதம் வரை

  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934’இன்கீழ் 2021 ஏப்ரல்.1 முதல் 2026 மார்ச்.31 வரையிலான பணவீக்க இலக்கு 4 சதவீதமாக இருதரப்பிலும் 2 சதவீத வித்தியாசத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார செயலாளர் அறிவித்தார். முந்தைய ஐந்து ஆண்டுகளில் (2016-21) அரசாங்கத்தால் ரிசர்வ் வங்கிக்கு ஆணையிடப்பட்ட இலக்கும் இதுதான்.
  • ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31 வரை வருடாந்திர பணவீக்கத்தை 4 சதவீதமாக, 6% உயர்ந்தபட்ச சகிப்புத்தன்மையுடனும், 2% குறைந்தபட்ச சகிப்புத்தன்மையுடனும் பராமரிக்க வேண்டும்.

5. “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற அறிக்கையில், எந்த நிறுவனம், FY22’இல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) S & P

இ) உலக வங்கி

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • உலக வங்கியானது அண்மையில், “தெற்காசிய தடுப்பூசிகள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • தனியார்துறை நுகர்வும் பொதுத்துறை முதலீடும் 2021-22’இல் (FY22) இந்திய பொருளாதாரத்தை 10.1% அளவுக்கு வளர்ச்சியடைய வைக்கும் என அவ்வறிக்கை கூறுகிறது. COVID-19 தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% முதல் 12.5% வரை இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5% சுருங்கக்கூடும் என்றும் அது கணித்துள்ளது.

6. NITI ஆயோக் தொடங்கிய ‘AIM – PRIME’ திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) மாணவர்களிடையே புத்தாக்கங்களை ஊக்குவித்தல்

ஆ) அறிவியல்சார்ந்த துளிர் நிறுவனங்களை ஊக்குவித்தல்

இ) பள்ளிகளில் AI & ML ஐ ஊக்குவித்தல்

ஈ) மாணவ தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல்

  • NITI ஆயோகின் அடல் புத்தாக்க இயக்கம் (AIM), AIM-PRIME (Program for Researchers on Innovations, Market-Readiness & Entrepreneurship கண்டுபிடிப்புகள், சந்தை-தயார்நிலை மற்றும் தொழில்முனைவோர் பற்றிய ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியா முழுவதும் அறிவியல் அடிப்படையிலான துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தை தொடங்குவதற்காக, AIM ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்துள்ளது. இது வெஞ்சர் சென்டர் என்றவொரு இலாப நோக்கற்ற தொழில்நுட்ப வணிக காப்பகத்தால் செயல்படுத்தப்படும்.

7. அண்மையில், 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கி -ராப்பர் விருதுபெற்ற லக்தா மையம் அமைந்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) செளதி அரேபியா

ஈ) ரஷியா

  • ரஷியாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள லக்தா மையத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான எம்போரிஸ் ஸ்கைஸ்கிராப்பர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது உயரமான கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகும். இந்தக் கட்டடம் 462 மீ உயரம் கொண்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷியா முதன்முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளது.

8. ‘உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை’யை வெளியிடுகிற பன்னாட்டு அமைப்பு எது?

அ) உலக பொருளாதார மன்றம்

ஆ) உலக வங்கி

இ) ஐநா வளர்ச்சித் திட்டம்

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • உலக பொருளாதார மன்றமானது அண்மையில் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. 156 நாடுகளில் இந்தியா 140ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையில், இந்தியா 112ஆவது இடத்தில் இருந்தது. நடப்பாண்டில், இந்தியா, 28 இடங்கள் பின்தங்கியுள்ளது. பொதுவில் இந்தியாவின் பாலின இடைவெளி 62.5 சதவீதமாக உள்ளது. அரசியல் அதிகாரமளித்தல் துணைக் குறியீட்டில் பெரும்பாலான சரிவு காணப்பட்டதாக அக்குறியீடு குறிப்பிட்டது.

9. இந்தியாவிற்கும் பின்வரும் எந்நாட்டிற்கும் இடையிலான விரிவா -ன பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (CECPA), 2021 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்தது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஜப்பான்

இ) மொரீஷியஸ்

ஈ) இலங்கை

  • இந்தியா-மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில், 2021 பிப்.22 அன்று இந்திய அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சட்ட முறைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்கள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2021 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

10. ‘Exam Warriors’ நூலின் புதிய பதிப்பின் ஆசிரியர் யார்?

அ) இந்தியப்பிரதமர்

ஆ) இந்தியக்குடியரசுத்தலைவர்

இ) இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர்

ஈ) மக்களவை சபாநாயகர்

  • இந்தியப் பிரதமர் மோடி, ‘Exam Warriors’ என்ற நூலின் புதிய பதிப்பை எழுதியுள்ளார். இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர் -வின்போது ஏற்படும் கவலை மற்றும் மனவழுத்தத்தை சமாளிக்க பல புதிய மந்திரங்களைக்கொண்டுள்ளது. இது, முன்னணி நூல் விற்பனை அங்காடிகளிலும், இணைய அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூல், NaMo செயலியிலும் கிடைக்கப்பெறுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பேரவைத் தேர்தல்: 71.79% வாக்குப் பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71.79 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதனிடையே, வாக்குப்பதிவின்போது கோளாறு காரணமாக 100’க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டப்பேரவைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என வரையறுக்கப்பட்டிருந்தது. இதனால், வாக்குச்சாவடிக -ளின் எண்ணிக்கை 67,775’லிருந்து 88,937 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டன. மாலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 42 அமைவிடங்களில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் உள்ளனர். அவர் -களுள் 411 பெண்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 2 அன்று எண்ணப்படவுள்ளன.

2. ஒரே நாளில் 43 இலட்சம் கரோனா தடுப்பூசிகள்: இந்தியா சாதனை

COVID-19’க்கு எதிரான போராட்டத்தில் புதிய சாதனையாக, கடந்த 24 மணி நேரத்தில் 43 இலட்சம் தடுப்பூசிகள்போட்டு இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை நாட்டில் ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையில் இது மிகவதிகம்.

3. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், நீதிபதி ரமணா, உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக ஏப்ரல்.24 அன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. போப்டே அவர்களின் பதவிக்காலம் ஏப்.23’இல் நிறைவு பெறுவதை அடுத்து, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் என்.வி. ரமணா, 2022ஆம் ஆண்டு ஆக.26 வரை இப்பதவியை வகிப்பார்.

4. புதிய வருவாய்த் துறைச் செயலராக தருண் பஜாஜ் நியமனம்

பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர் தருண் பஜாஜ், மத்திய அரசின் புதிய வருவாய்த் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு -ள்ளனர். இதுதொடர்பாக, மத்திய பணியாளர்-பயிற்சித்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஹரியானாவைச் சேர்ந்த மூத்த இ ஆ ப அதிகாரியும், பொருளாதார விவகாரங்கள் துறை செயலருமான தருண் பஜாஜ், வருவாய்த்துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலராக மூத்த இ ஆ ப அதிகாரி அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை கூடுதல் செயலரான ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகார -ங்கள் அமைச்சகத்தின் செயலராகவும், தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச்செயலர் அலி ராஸா ரிஸ்வி, பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை சிறப்பு செயலர் அனில்குமார் ஜா, பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவ்வுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளரும்: IMF கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. உலக வங்கியின் வருடாந்திர மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதம் அதிகரிக்கும். இது, அடுத்த நிதியாண்டில் 6.9% அதிகரிக்கும். கடந்த ஆண்டு கரோனா பரவலால் பாதிப்புகள் இருந்த போதிலும், சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

நடப்பு நிதியாண்டில் அது, 8.6 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 5.6 சதவீதமாகவும் இருக்கும். நடப்பு நிதியாண்டில் சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து IMF அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியதாவது: கடந்த 2020’இல் சர்வதேச பொருளாதாரம் 3.3 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் பொருளாதாரம் மீண்டும் வரும் என கணித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 6%ஆகவும், 2022’இல் 4.4%ஆகவும் இருக்கும் என்றார் அவர்.

6. ஒருநாள் தரவரிசை: ஷிகா பாண்டே முன்னேற்றம்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பௌலர்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே முதல் 10 இடங்களுக்குள்ளாக முன்னேறியுள்ளார். ICC வெளியிட்ட திருத்தப்பட்ட தரவரிசையின்படி, ஷிகா 610 புள்ளிகளுடன் 10ஆவது இடத்துக்கு திரும்பியுள்ளார்.

சக வீராங்கனைகளான ஜுலன் கோஸ்வாமி 681 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், பூனம் யாதவ் 641 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் நீடிக்கி -ன்றனர். ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட் 762 புள்ளிகளுடன் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அந்த அணியின் நிகோலா கேரி முதல் முறையாக 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசன் (793) முதலிடத்தில் தொடர, தென் ஆப்பிரிக்கா -வின் மாரிஸானே காப் 747 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறார்.

பேட்ஸ்வுமன்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 710 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் இருக்க, கேப்டன் மிதாலி ராஜ் 709 புள்ளிக -ளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி மீண்டும் 3ஆவது இடத்துக்கு (753) வந்துள்ளார். சக வீராங்கனை எலிஸ் பெரி 701 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறார். அந்த அணியின் ஆஷ்லி கார்டனர் முதன்முறையாக 30ஆவது இடத்தைப் பிடித் -துள்ளார். நியூஸிலாந்தின் லௌரென் டௌன் 55 இடங்கள் முன்னேறி 62ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பிரிவில் இங்கிலாந்தின் டேமி பியூ -மௌன்ட் 765 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக் -காவின் லிஸெலெ லீ 758 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தைப்பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் ஒரே இந்தியராக தீப்தி சர்மா 343 புள்ளிகளுட -ன் 5ஆவது இடத்தில் தொடர்கிறாா். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி (461), தென் ஆப்பிரிக்காவின் மாரிஸானே காப் (418), மேற்கிந்தியத் தீவுக -ளின் ஸ்டெபானி டெய்லர் (410) ஆகியோர் இப்பிரிவில் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

7. உலக தடகள ரிலே: இந்திய அணியில் தனலட்சுமி, ஹிமா தாஸ்

உலக தடகள ரிலே போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழக வீராங்கனை தனலட்சுமியுடன் ஹிமா தாஸ், டூட்டி சந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

போலந்தில் மே.1 மற்றும் 2 அன்று நடக்கவுள்ள இப்போட்டி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு வழங்கும் போட்டியாகும். இப்போட்டியில் ஆடவருக்கான 4*400 மீட்டர் ரிலே பிரிவுக்காக அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ், சர்தாக் பாம்ப்ரி, அய்யாசாமி தருண், நிர்மல் நோவா டாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகளிருக்கான 4*400 மீட்டா் ரிலேவில் பூவம்மா, சுபா வெங்கடேஷ், கிரன், அஞ்சலி தேவி, ரேவதி, விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ ஆகியோர் களம் காணுகின்றனர். மகளிருக்கான 4*100 மீட்டர் ரிலேவுக்காக தனலட்சுமி, டூட்டி சந்த், ஹிமா தாஸ், அர்ச்சனா சுசீந்திரன், ஹீமாஸ்ரீ ராய், தானேஷ்வரி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியில் முதல் 8 இடங்களுக்குள்ளாக வரும் அணிகள் நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும். தோகாவில் 2019’இல் நடைபெற் -ற உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதன்மூலம் 4*400 மீட்டருக்கான கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டது.

8. டோக்கியோ ஒலிம்பிக்: வட கொரியா பங்கேற்கவில்லை

கரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவ -தில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. உலக அளவிலான கரோனா பாதிப்பிலிருந்து தங்களது விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையா -ட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 25 அன்று நடந்த தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தங்களிடம் அதிகாரப்பூர்வமாக வட கொரியா இன்னும் தங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. வட கொரியா – தென் கொரியா இடையே சுமூகமற்ற உறவு உள்ளபோதிலும், கடந்த 2018ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளர்களையும், அரசு அதிகாரிகளையும், ஊடகத்தினரையும் வட கொரியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

9. ஏப்ரல்.7 – உலக சுகாதார நாள்.

10. பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று பேர் நியமனம்

தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழ்நாட்டைச் சார்ந்த நீதிபதி எம் சத்தியநாராயணன், முன்னாள் தலைமைச்செயலர் கிரிஜா வைத்திய நாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே சத்யகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க தில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியா -க சென்னை கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழ்நாட்டைச் சார்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம் சத்தியநாராய -ணன், முன்னாள் தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னா -ள் வருவாய் நிர்வாக ஆணையர் கே சத்யகோபால் பெயர்களை பரிந்து -ரைத்து மத்திய அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துரு அனுப்பியது. அதற்கு மத்திய அரசுகடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

அதனடிப்படையில் புனேயில் உள்ள பசுமை தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம் சத்தியநாராயணனையும், தொழில்நுட்ப உறுப்பினராக கே சத்யகோபாலையும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

1. Which word is selected as the Oxford Hindi word of 2020?

A) Aatmanirbharta

B) Nari Shakti

C) Aadhaar

D) Samvidhaan

  • The Oxford group has selected ‘Aatmanirbharta’ as the Oxford Hindi word of 2020. In Hindi language, it means self–reliance. Previous Hindi words of the year selected by Oxford are ‘Aadhar’ (2017), ‘Nari Shakti’ (2018) and ‘Samvidhaan’ (2019).
  • Following the prime minister’s address, there was a significant increase in the usage of ‘aatmanirbharta’ following the Prime minister’s address.

2. Which institution released the “Economic and Social Survey of Asia and the Pacific 2021” and estimated India’s growth at 7% in 2021–22?

A) IMF

B) UNESCAP

C) World Bank

D) ADB

  • The United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP) released a report titled Economic and Social Survey of Asia and the Pacific 2021. As per the report, India is estimated to record an economic growth of 7% in 2021–22.

3. P. K. Mishra, Anil Ghanwat and Ashok Gulati are the members of the Supreme Court–appointed committee to study which issue?

A) Disinvestment

B) Agricultural Laws

C) Occupational Health

D) Anti–conversion Laws

  • The Supreme Court appointed a four–member committee to study the three new controversial agricultural laws in January 2021.
  • It had temporarily suspended the implementation of the three farm laws until further notice. The members include P. K. Mishra, Anil Ghanwat, Ashok Gulati and Bhupinder Singh Mann. The panel has submitted its report to the Supreme Court recently.

4. What is the new inflation target band fixed for the next five years (2021–26)?

A) 2.0 to 6.0 percent

B) 1.5 to 5.5 percent

C) 2.5 to 6.5 percent

D) 3.0 to 7.0 percent

  • The Economic Affairs Secretary announced that the inflation target for the period April 1, 2021 to March 31, 2026 under the Reserve Bank of India Act 1934 has been kept at 4 percent with a margin of 2 percent on either side. This is the same target mandated to the RBI by the Government in the previous five years (2016–21).
  • RBI was to maintain annual inflation at 4% until March 31, 2021 with an upper tolerance of 6% and a lower tolerance of 2%.

5. Which institution in its report “South Asia Vaccinates”, estimates India’s GDP growth in FY22 would be in the range from 7.5% to 12.5%?

A) IMF

B) S & P

C) World Bank

D) ADB

  • World Bank has recently released a report titled “South Asia Vaccinates”. It highlighted that private consumption and public investment will make the Indian economy grow by 10.1% in 2021–22 (FY22). It also estimated that on account of uncertainty caused by the COVID–19 pandemic, it said India’s economic growth in FY22 will be in the range from 7.5% to 12.5%. It also forecasts that the Indian economy to contract by 8.5% in FY21.

6. ‘AIM–PRIME’ programme launched by the NITI Aayog, is associated with which objective?

A) Promote Innovation among students

B) Promote Science–based start–ups

C) Promote AI & ML in Schools

D) Support student entrepreneurs

  • Atal Innovation Mission (AIM), NITI Aayog has launched AIM–PRIME (Program for Researchers on Innovations, Market–Readiness & Entrepreneurship). It aims to promote and support science–based start–ups & ventures across India. AIM has partnered with Bill & Melinda Gates Foundation (BMGF) to launch this program.
  • It will be implemented by Venture Center – a non–profit technology business incubator.

7. The Lakhta Centre that was recently awarded with Emporis Skyscraper award 2019, is located in which country?

A) United Arab Emirates

B) United States of America

C) Saudi Arabia

D) Russia

  • The Lakhta Centre, which is located in St. Petersburg of Russia, has been awarded with the Emporis Skyscraper award 2019. This is the most prestigious award given to high rise architecture. This building is 462 m tall. Russia has for the first time bagged this award since inception of this award 20 years ago.

8. Which international organisation releases the ‘Global Gender Gap Report’?

A) World Economic Forum

B) World Bank

C) UNDP

D) IMF

  • The World Economic Forum (WEF) has recently released the Global Gender Gap Report 2021. India has been ranked at 140th place among 156 countries. In last year’s report, India ranked 112 and, in this year, India has fallen back 28 spots. The report has stated that India had so far closed 62.5% of its gender gap. It noted that most of the decline was seen on the Political Empowerment sub–index.

9. The Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA) between India and which country has come into force from 1st April, 2021?

A) United States of America

B) Japan

C) Mauritius

D) Sri Lanka

  • The Government of India had signed the India–Mauritius Comprehensive Economic Cooperation and Partnership Agreement (CECPA) on 22nd Feb, 2021. The Central Board of Indirect Taxes and Customs has notified that all the legal formalities pertaining to the CCEA has been completed and the agreement has come into force on 1st April 2021.

10. Who is the author of the new version of ‘Exam Warriors’ book?

A) Prime Minister of India

B) President of India

C) Vice President of India

D) Lok Sabha Speaker

  • The Prime Minister of India Narendra Modi has written the new version of Exam Warriors. It contains many new mantras for students and for parents to cope with the anxiety & stress caused during examinations. This is available in leading retail stores as well as in online stores. The Exam Warriors module is also made available on the NaMo App.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!