Tnpsc

7th December 2020 Current Affairs in Tamil & English

7th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. போதைப்பொருள் தடுப்புப்பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை இந்தியா கீழ்க்காணும் எந்நாட்டோடு இணைந்து நடத்தியது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. ஜப்பான்

இ. பிரேசில்

ஈ. இஸ்ரேல்

  • இந்திய- அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப்பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிகாரிகள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு வாரியத்தின் துணை இயக்குநர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். போதைப்பொருட்களை சட்டத்துக்குப்புறம்பாக தயாரித்தல், உற்பத்தி செய்தல், விநியோகிப்பது ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை இருநாடுகளும் வலுப்படுத்துவதில் தங்களது உறுதித்தன்மையை இருநாட்டு பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர்.

2. கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் நிதி சீர்திருத்தத்திற்காக, $50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி வழங்கவுள்ளது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மேற்கு வங்கம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

  • மேற்கு வங்க மாநிலத்தில் நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களுக்கு சிறந்த சேவைகளை அளிக்கவும், டிஜிட்டல் தளங்களை மேம்படுத்த $50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டன. இக்கடனுதவி மாநிலத்தின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்கள் & நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இணைய அடிப்படையிலான குறைதீர்க்கும் முறையுடன் இணைந்து நிதிக்கொள்கை மற்றும் பொது நிதியத்துக்கான மையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘737 மேக்ஸ்’ என்பது கீழ்க்காணும் எந்தப் பிரபல நிறுவனத்தின் வானூர்தியாகும்?

அ. ஏர்பஸ்

ஆ. போயிங்

இ. குவாண்டாஸ்

ஈ. எமிரேட்ஸ்

  • ‘737 மேக்ஸ்’ என்பது அமெரிக்காவைச் சார்ந்த வான்வெளிப்போக்குவரத்து நிறுவனமான போயிங்கின் அதிகம் விற்பனையாகும் வானூர்தியாகும். ஐந்து மாத காலத்திற்குள் இருவேறு வான்விபத்துகளை இவ்வகை வானூர்திகள் ஏற்படுத்தியதில் மொத்தம் 346 பேர் மரணித்ததை அடுத்து கடந்த 2019 மார்ச் மாதத்தில் இவ்வகை விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன.
  • ‘737 மேக்ஸ்’ வானூர்தியின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பானது அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. அது டெக்சாஸிலிருந்து அமெரிக்காவின் ஓக்லஹோமாவுக்கு 45 நிமிட வான்வெளிப் பயணத்தை மேற்கொண்டது. இவ்வகை வானூர்தியின் முதல் வணிக ரீதியிலான பயணிகள் சேவை டிசம்பர் மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

4. ‘அடிமை முறை உழைப்பில் பெறப்பட்ட பொருள்’ எனக்குறிப்பிட்டு சீனாவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்வதை தடைசெய்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. இரஷ்யா

ஈ. ஐக்கியப் பேரரசு

  • சீனத்தின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவரான ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படையிலிருந்து பருத்தி மற்றும் பருத்திசார்ந்த தயாரிப்புகளை இறக்குமதிசெய்ய தடைவிதித்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. சின்ஜியாங் பிராந்தியத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதற்கான ஆணையை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உய்குர் இசுலாமியர்களை கட்டாயப்படுத்தி, ‘அடிமை முறை உழைப்பின் மூலமாக பெறப்பட்ட பொருள்’ என்பதை தடைக்கான காரணமாக அமெரிக்கா மேற்கோள் காட்டியுள்ளது.

5. இந்தியா-சுரிநாம் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சுரிநாம் அமைந்துள்ள இடம் எது?

அ. ஆப்பிரிக்கா

ஆ. வட அமெரிக்கா

இ. ஐரோப்பா

ஈ. தென்னமெரிக்கா

  • சுரிநாம் (அதிகாரப்பூர்வமாக சுரிநாம் குடியரசு) என்பது தென்னமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்பு ‘டச்சு கயானா’ என்று அழைக்கப்பட்டது. 7ஆம் இந்தியா- சுரிநாம் கூட்டு ஆணையக்கூட்டமானது (JCM) அண்மையில் மெய்நிகராக நடந்தது. இந்த ஆணையக் கூட்டத்திற்கு வெளியுறவு இணையமைச்சர் வி முரளீதரன் & சுரிநாமின் வெளியுறவு இணையமைச்சர் ஆகியோர் இணைந்து தலைமைதாங்கினர்.

6. அனைத்துலக உள்நாட்டு வான்போக்குவரத்து நாள் (International Civil Aviation Day) அனுசரிக்கப்படும் தேதி எது?

அ. டிசம்பர் 07

ஆ. டிசம்பர் 08

இ. டிசம்பர் 09

ஈ. டிசம்பர் 10

  • 1996ஆம் ஆண்டில், ஐநா அவையின் பொது அவை, டிச.7’ஐ அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நாள் என அறிவித்தது. அனைத்துலக உள்நாட்டு வான் போக்குவரத்து மாநாட்டில் கையெழுத்திட்டதன் ஐம்பதாமாண்டு நிறைவுநாளான 1994 டிச.7ஆம் தேதி முதல் பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.

7. ஆயுதப்படைகளின் கொடி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ. டிசம்பர் 07

ஆ. டிசம்பர் 08

இ. டிசம்பர் 09

ஈ. டிசம்பர் 10

  • ஆயுதப்படைகளின், ‘கொடி நாள்’ என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் ஒரு நாளாகும். ஆண்டுதோறும் டிசம்பர்.7 அன்று படைவீரர் கொடி நாளாக இந்திய அரசு கடைப்பிடித்துவருகிறது. இந்தக்கொடிநாள், 1949 டிசம்பர்.7 முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டுவருகிறது.
  • தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்பநலனையும், முன்னாள் படை வீரர்களின் நலனையும் காப்பதற்கான சமுதாயக்கடமையை நிறைவேற்றும் வகையில், தேசியக்கொடி விற்பனைமூலம் திரட்டப்படும் நிதியானது படைவீரர்களின் குடும்பத்தினரின் நலவாழ்வுக்காகவும், உடலுறுப்புகளை இழந்த படைவீரர்களின் மறுவாழ்வுப்பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

8. ‘இமேஜின் கோப்பை-2021’இன் இந்தியா பதிப்பில், மைக்ரோசாப்டின் அறிவுசார் பங்காளர் எது?

அ. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்

ஆ. NITI ஆயோக்

இ. மைகவ்

ஈ. தூர்தர்ஷன்

  • மைக்ரோசாப்ட் இந்தியாவும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும், ‘மைக்ரோசாப்ட் இமேஜின் கோப்பை 2021’இன் இந்தியா பதிப்பிற்காக கூட்டிணைந்துள்ளன. ‘இமேஜின் கோப்பை’ என்பது மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக மைக்ரோசாப்ட் நடத்தும் ஒரு புத்தாக்க சவால் நிகழ்வாகும்.
  • உலகின் நீடித்தல் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்ப -ங்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. 2020 டிசம்பரில் நடந்த ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு புதிய ரெப்போ விகிதம் என்ன?

அ. 4.2 சதவீதம்

ஆ. 4.0 சதவீதம்

இ. 3.8 சதவீதம்

ஈ. 3.5 சதவீதம்

  • 2020 டிச.4 அன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு, வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவுசெய்தது. ரெப்போ வீதத்தை 4% எனவும் தலைகீழ் ரெப்போ வீதத்தை 3.35% எனவும் அக்குழு முடிவு செய்துள்ளது. நிதியாண்டு 21’இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.5% ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அக்குழு எதிர்பார்க்கிறது.

10. CLMV நாடுகள் என்பவை கீழ்க்காணும் எந்தப் பிராந்திய அமைப்பிலும் உள்ளன?

அ. ASEAN

ஆ. காமன்வெல்த்

இ. G20

ஈ. G7

  • CLMV நாடுகள் என்பவை கம்போடியா (C), லாவோஸ் (L), மியான்மர் (M) மற்றும் வியட்நாம் (V) ஆகிய நாடுகளாகும். அவை, தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் (ASEAN) உறுப்பினர்களாகவும் உள்ளன. ஆறாவது இந்தியா–CLMV வர்த்தக மாநாட்டின் தொடக்க அமர்வின்போது, இந்தியா, CLMV நாடுகளை பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி மற்றும் இந்தியாவின் நெகிழ்திறன் விநியோக சங்கிலி முயற்சியில் இணைவதற்கு அழைப்பு விடுத்தது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ‘தீ’ என்னும் திறன்பேசி செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க. பழனிசாமி தொடக்கிவைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவுயிரி மீட்பு, வேதி மற்றும் நச்சு வளிக்கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறையால், ‘தீ’ எனும் திறன்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

7th December 2020 Current Affairs in English

1. India held the inaugural meeting of the Counter–Narcotics Working Group with which country?

[A] United States of America

[B] Japan

[C] Brazil

[D] Israel

  • India and the United States attended the inaugural meeting of the Counter–narcotics Working Group (CNWG), in virtual mode. Indian delegation was represented by the Deputy Director General of Narcotics Control Board, Ministry of Home Affairs.
  • The two countries also agreed to improve their data sharing operations to fight the production, distribution, and export/import of drugs and related chemicals.

2. The Asian Development Bank (ADB) is to finance USD 50 million policy–based loan for Finance Management in which state?

[A] Maharashtra

[B] West Bengal

[C] Andhra Pradesh

[D] Madhya Pradesh

  • Manila–based Asian Development Bank has signed a USD 50–million policy–based loan for the West Bengal Public Finance Management Investment Programme. The loan aims to improve financial management and operational efficiencies of the state. A centre for fiscal policy and public finance will be established along with a web–based grievance redressal system for transport corporations and urban local bodies.

3. ‘737 MAX’, which was making news recently, is the airliner of which famous company?

[A] Air Bus

[B] Boeing

[C] Qantas

[D] Emirates

  • ‘737 MAX’ is the best–selling airliner of US–based leading multi–national aerospace company Boeing. It was grounded in March 2019 after two crashes in five months killing a total of 346 people. The redesigned version of the ‘737 MAX’ airliner has recently staged its first post–grounding flight with media on board. It made a 45–minute flight from Texas to Oklahoma in the US. The flight’s first commercial passenger flight is scheduled in the month–end of December.

4. Which country has banned cotton imports from China citing ‘slave labour’?

[A] India

[B] United States of America

[C] Russia

[D] United Kingdom

  • The United States has issued an order to ban the cotton and cotton products from the Xinjiang Production and Construction Corps (XPCC), one of the largest producers of China. The U.S. Customs and Border Protection agency issued “Withhold Release Order” to increase economic pressure on the Xinjiang region. US cites the reason for the ban as ‘slave labour’ of detained Uighur Muslims used by China.

5. India–Suriname Joint Commission Meeting (JCM) was held recently. Where is Suriname located?

[A] Africa

[B] North America

[C] Europe

[D] South America

  • Suriname, officially the Republic of Suriname, is a small country on the north–eastern coast of South America. It was previously known as ‘Dutch Guiana’. The 7th India–Suriname Joint Commission Meeting (JCM) was recently held virtually. The JCM was co–chaired by Minister of State for External Affairs, V. Muraleedharan and his counterpart in Suriname.

6. International Civil Aviation Day is being observed on which date?

[A] December 07

[B] December 08

[C] December 09

[D] December 10

  • In 1996 the United Nations General Assembly proclaimed that 7 December was to be the International Civil Aviation Day. The day has been celebrated by the International Civil Aviation Organization since 1994 December 7, the 50th anniversary of the signing the Convention on International Civil Aviation. The purpose of the day is to recognize the importance of aviation to the social and economic development of the world.

7. Armed Forces Flag Day is observed on which date?

[A] December 07

[B] December 08

[C] December 09

[D] December 10

  • Armed Forces Flag Day is observed on 7 December. It is observed every year in India. The day is observed to honor the martyrs and the men of the Armed Forces who valiantly fought on the borders to safeguard India’s honor. On this day, the three branches of the Armed Forces of India, the Indian Army, the Indian Air Force, and the Indian Navy, organized a variety of programmes to showcase their efforts towards national security.

8. Which is the knowledge partner of Microsoft for the India edition of the Imagine Cup 2021?

[A] National Skill Development Corporation

[B] NITI Aayog

[C] myGov

[D] Doordarshan

  • Microsoft India and the National Skill Development Corporation (NSDC) have partnered for the India edition of the Microsoft Imagine Cup 2021. Imagine Cup is an annual innovation challenge held by Microsoft for students and technology enthusiasts. It aims to empower students to apply artificial intelligence and other technologies to solve the sustainability issues of the world.

9. What is the new repo rate after the RBI’s Monetary Policy Committee meeting of December 2020?

[A] 4.2 percent

[B] 4.0 percent

[C] 3.8 percent

[D] 3.5 percent

  • The Reserve Bank of India’s Monetary Policy Committee (MPC) held on December 4, 2020 decided to keep interest rates unchanged. The MPC has kept repo rate unchanged at 4% and maintained reverse repo rate at 3.35%. RBI also predicted a real GDP growth of –7.5% for FY21. MPC also expected that the inflation rate will remain high.

10. The CLMV Countries are the group of countries belonging to which regional organisation?

[A] ASEAN

[B] Commonwealth

[C] G20

[D] G7

  • CLMV countries are Cambodia, Laos, Myanmar and Vietnam. They are also the members of the Association of South East Nations (ASEAN). During the Inaugural Session of the 6th India – CLMV Business Conclave 2020, India invited the CLMV countries to join the International Solar Alliance and the Resilient Supply Chain Initiative by India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!