Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

7th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. நீதியரசர் AM கான்வில்கர் தலைமையிலான 3 நீதியரசர்கள் கொண்ட அமர்வு, எந்த வழக்கில் 2:1 பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது?

அ) ஹத்ராஸ் வழக்கு

ஆ) மத்திய விஸ்டா திட்ட வழக்கு

இ) அயோத்தி நில வழக்கு

ஈ) COVID-19 தடுப்பூசி போடுதல் வழக்கு

  • நீதியரசர் A M கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள்கொண்ட அமர்வு மத்திய விஸ்டா திட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியது. மறு சீரமைப்புத் திட்டத்திற்கு 2: 1 பெரும்பான்மையின் அடிப்படையில் அவ்வமர்வு ஒப்புதல் அளித்தது. நிலப்பயன்பாடு மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் பரிந்துரைகளையும் அது உறுதிப்படுத்தியது.

2. UNICEF’இன் சமீபத்திய அறிக்கையின்படி, புத்தாண்டு நாளன்று அதிக எண்ணிக்கையிலான பிறப்புகளை பதிவுசெய்த நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா

ஈ) இந்தோனேசியா

  • ஐநா சிறார்கள் நிதியத்தின் (UNICEF) கருத்துப்படி, உலகெங்கும் புத்தாண்டு நாளன்று 371,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. 2021’ஆம் ஆண்டில், 84 ஆண்டுகள் என்ற சராசரி ஆயுட்காலத்துடன் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘சரக்கு வர்த்தக மேம்பாடு இணையதளத்தை’ தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ) இரயில்வே அமைச்சகம்

இ) வேளாண்மை & ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

  • இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தை, இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தொடக்கிவைத்தார். சரக்கு வழங்குநர்களுக்கான செலவுகளைக் குறைப்பது, வழங்குநர்களுக்கு ஆன்லைன் கண்காணிப்பு வசதியை வழங்குதல் மற்றும் சரக்குகள் போக்குவரத்து செயல்முறையை எளிதாக்குவது ஆகியவற்றை இந்தத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வணிகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்தளத்தை, இந்திய இரயில்வேயின் வலைத்தளம் வழியாக அணுகலாம்.

4. NPC மற்றும் QCI உடன் இணைந்து வணிக அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட வெபினார் தொடரின் பெயர் என்ன?

அ) ஆத்மநிர்பார் இண்டஸ்ட்ரீஸ்

ஆ) உத்யோக் மந்தன்

இ) MSME மந்தன்

ஈ) தன்-முன்னேற்றத்தொடர்

  • இந்தியத் தொழிற்துறையின் தரத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்காக, வணிகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, இந்திய தர கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து ‘உத்யோக் மந்தன்’ என்ற தொடர் இணைய கருத்தரங்குகளை 2021 ஜனவரி 4 முதல் 2021 மார்ச் 2 வரை நடத்துகிறது.

5. கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம்

இ) இந்திய வெப்பமண்டல ஆய்வுகள் நிறுவனம்

ஈ) DRDO

  • இந்திய வானிலை ஆய்வுமையத்தின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்தது. கடந்த 2020’ஆம் ஆண்டும் எட்டாவது வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6. “மலாலா யூசுப்சாய் உதவித்தொகை மசோதாவை” சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான்

இ) அமெரிக்கா

ஈ) ஆப்கானிஸ்தான்

  • அண்மையில், “மலாலா யூசுப்சாய் உதவித்தொகை மசோதா”வை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது. இம்மசோதா பாகிஸ்தானின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், பாகிஸ்தானிய பெண்டி -ர்க்கு 50% உதவித்தொகையை பன்னாட்டு மேம்பாட்டுக்கான US முகமையின்மூலம் வழங்குகிறது. இவ்வுதவித்தொகை 2020 முதல் 2022 வரை வழங்கப்படவுள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஓம்காரேஷ்வர் அணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) மத்திய பிரதேசம்

இ) குஜராத்

ஈ) ஜார்க்கண்ட்

  • உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தித் திட்டமானது மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் கட்டப்படவுள்ளது. 600 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட இவ்வாலையை நிறுவுவதற்கு `3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2022-23’க்குள் இந்த ஆலையில் மின்னுற்பத்தி தொடங்கும். இந்த அணையில் சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை நிறுவுவது உள்ளிட்ட இத்திட்டத்திற்கு உலக வங்கியின் IFC மற்றும் பவர் கிரிட் நிதியுதவி வழங்கும்.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “பாரதிய நிர்தேஷக் திரவ்யா’ என்றால் என்ன?

அ) COVID-19 தடுப்பூசி கட்டமைப்பு

ஆ) சான்றளிக்கப்பட்ட குறிப்பு பொருள்

இ) விண்வெளி தொழில்நுட்ப கட்டமைப்பு

ஈ) கிரிப்டோகரன்சி நுட்பம்

  • அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய இயற்பியல் ஆய்வகமானது (CSIR-NPL) இந்திய சான்றளிக்கப்பட்ட குறிப்பு பொருள் (CRM) தயாரிப்பதற்கான சர்வதேச நடைமுறையை பின்பற்றியுள்ளது. “பாரதியா நிர்தேஷக் திரவ்யா” என்று முத்திரை குத்தப்பட்ட CRM, பன்னாட்டு தரத்திற்கு இணையான தரத்தை உறுதிசெய்வதற்காக, ஆய்வகங்களின் சோதனை / அளவுத்திருத்தத்தை பின்பற்றுகிறது.

9. சமீபத்தில், கோட்டயத்தில், H5N8-ஏவியன் இன்புளூயன்ஸா உறுதிசெய்யப்பட்டது. கோட்டயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • கேரள மாநிலம் கோட்டயம் நகரத்தில் உள்ள வாத்துகள், ஏவியன் இன்புளூயன்ஸா – H5N8 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 70 நாட்கள் வயதுடைய 1,700 வாத்துகளின் இறப்புக்கு இந்த வைரஸ் காரணமாகியுள்ளது.

10. கீழ்க்காணும் எந்த இடத்திற்கான இந்தியாவின் நாற்பதாவது அறிவியல் பயணத்திற்கு, இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருள் வழங்கியுள்ளது?

அ) அண்டார்டிகா

ஆ) ஆர்க்டிக் பெருங்கடல்

இ) எவரெஸ்ட் சிகரம்

ஈ) சென்டினல் தீவுகள்

  • தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி -யாளர்கள் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இது நாற்பதாவது இந்திய அறிவியல் பயணமாகும். இந்தப்பயணத்தி -ற்கான எரிபொருள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் வழங்கப் -படுகிறது. கோவாவின் மர்மகோவா துறைமுகத்திலிருந்து 43 உறுப்பினர்களுடன் இந்தப் பயணம் தொடங்கப்படவுள்ளது.
  • ஜெட் A1 எரிபொருள், உயவு எண்ணெய் மற்றும் கடலில் பயன்படுத்தக்கூடிய வளி எண்ணெய் ஆகியவற்றை இந்தியன் எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ளது.

1. A three–judge bench headed by Justice A M Khanwilkar delivered verdict on which case, by 2:1 majority?

A) Hathras Case

B) Central Vista Project Case

C) Ayodhya Land Case

D) Covid–19 vaccination case

  • The Supreme Court’s three–judge bench headed by Justice A M Khanwilkar delivered its verdict on Central Vista Project Case.
  • The bench approved the re–development project by a 2:1 majority and upheld the exercise of power by the Centre as just and valid. It also confirmed the modifications in the change in land use and the recommendations of the environmental committee.

2. As per the recent statement of UNICEF, which country recorded the highest number of births on the New Year’s Day?

A) China

B) India

C) United States

D) Indonesia

  • According to the United Nations Children Fund (UNICEF), over 371,500 babies were born on New Year’s Day across the world. It also revealed that India has recorded the highest number of births at around 60,000.
  • India is followed by China, Nigeria and Pakistan. It also estimated that 140 million children are estimated to be born in 2021 with average life expectancy of 84 years.

3. ‘Freight Business Development Portal’, which was making news, was launched by which Union Ministry?

A) Ministry of Commerce and Industry

B) Ministry of Railways

C) Ministry of Agriculture and Rural Development

D) Ministry of MSME

  • Union Minister of Railways Piyush Goyal has recently launched the Freight Business Development Portal.
  • The portal aims to reduce the costs for logistics providers, provide online tracking facility for suppliers and to simplify the process of goods transportation. The portal, which aims to improve ease of doing business, can be accessed via the Indian Railways website.

4. What is the name of the webinar series launched by the Commerce Ministry, along with NPC and QCI?

A) Atmanirbhar Industries

B) Udyog Manthan

C) MSME Manthan

D) Self–Reliance Series

  • The Department for Promotion of Industry and Internal Trade, Ministry of Commerce & Industry, is organizing ‘Udyog Manthan’, in association with Quality Council of India, National Productivity Council, and major Industry bodies. It is a series of sector–specific webinars to promote the quality and productivity in Indian Industries.
  • The webinar marathon focussing on both manufacturing and services is being held from January 4, 2021 to March 2, 2021.

5. Which organisation has issued a Statement on Climate of India during 2020?

A) India Meteorological Department

B) Ministry of Earth Sciences

C) Indian Institute of Tropical Studies

D) DRDO

  • The Climate Research and Services (CRS) of the India Meteorological Department (IMD) has released a Statement on Climate of India during 2020. As per the statement, the annual mean land surface air temperature over India was above normal during the year 2020. The year 2020 was also named the eighth warmest year on record.

6. Which country has passed the “Malala Yousafzai Scholarship Bill” recently?

A) India

B) Pakistan

C) United States of America

D) Afghanistan

  • The US Congress has recently passed the “Malala Yousafzai Scholarship Bill”.
  • The bill makes it mandatory for U.S. Agency for International Development (USAID) to award 50% of scholarships to Pakistani Women under a Pakistan–based higher education scholarship programme. The scholarships are to be awarded from 2020 to 2022.

7. Omkareshwar dam, which was making news recently, is located in which state?

A) Maharashtra

B) Madhya Pradesh

C) Gujarat

D) Jharkhand

  • The world’s largest floating solar energy project is set to be constructed at Omkareshwar dam on Narmada river, Madhya Pradesh. The 3,000–crore project, which will construct a 600 MW plant, will begin power generation by 2022–23.
  • World Bank’s IFC and Power Grid will provide the financial assistance to this project, which includes installing solar panels in the dam.

8. What is ‘Bhartiya Nirdeshak Dravya’, that was seen in the news recently?

A) COVID–19 Vaccination Framework

B) Certified Reference Material

E) Space Technology Framework

D) Cryptocurrency Technique

  • The Council of Scientific and Industrial Research–National Physical Laboratory (CSIR–NPL) has adopted an international practice for production of Indian Certified Reference Material (CRMs).
  • The CRM, which is branded as ‘Bhartiya Nirdeshak Dravya’, supports the testing and calibration of laboratories, for assuring quality at par with international standards.

9. Kottayam, where H5N8 – avian influenza has been confirmed recently, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Karnataka

  • Several ducks in Kottayam city of Kerala state have been found to be infected with Avian influenza – H5N8.
  • The state and district administration have initiated war–footing steps to prevent further spread of the disease. It has been stated that the virus killed 1,700 ducklings in the city which are around 70 days old.

10. India’s 40th Scientific Expedition to which destination is being fuelled by Indian Oil?

A) Antarctica

B) Arctic Ocean

C) Mt. Everest

D) Sentinel Islands

  • Researchers of National Centre for Polar and Ocean Research (NCPOR) are on a voyage to Antarctica, which marks the 40th Indian Scientific Expedition.
  • Fuel for the expedition is provided by the Indian Oil. The expedition is flagged off from Mormugao Port, Goa with 43 members on board the expedition vessel. Jet A1 fuel, lubes and Marine Gas Oil (MGO) have been offered by Indian Oil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!