Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

7th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘சர்வதேச தொற்றுநோய்க்கான தயார்நிலை (Epidemic Preparedness) நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 25

ஆ) டிசம்பர் 26

இ) டிசம்பர் 27 

ஈ) டிசம்பர் 28

  • டிசம்பர் 27 – சர்வதேச தொற்றுநோய் தயாரிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பேரறிவிப்பின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கான முதல் சர்வதேச நாள் குறிக்கப்பட்டது.
  • WHO’இன் கூற்றுப்படி, இந்த நாள் தொற்றுநோய்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

2. ‘உலக சங்கீத தான்சென் விழா’ நடைபெறுகிற மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா

இ) சிக்கிம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • ‘உலக சங்கீத் தான்சென் திருவிழா’ மத்திய பிரதேசத்தில் தொடங்கியது. இந்த விழா குவாலியரில் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும். இது ‘உலக சங்கீத் தான்சென்’ திரு விழாவின் 97ஆம் பதிப்பாகும். ஓம்காரேஷ்வரில் அமைந்து உள்ள சித்தநாத் கோவிலின் மாதிரியில் மேடை அமைக்க -ப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் “தேசிய காளிதாஸ் விருதுகள்” வழங்கப்படும்.

3. துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட் -டுள்ள இந்திய அதிகாரி யார்?

அ) விக்ரம் மிஸ்ரி 

ஆ) அருண் குமார் சிங்

இ) தினேஷ் பாட்டியா

ஈ) மன்பிரீத் வோஹ்ரா

  • சீனாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
  • 1989 பேட்சில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்த இவர், பல தூதரக பதவிகளை வகித்துள்ளார். விக்ரம் மிஸ்ரி, 2019’இல் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். வெளியுறவு அமைச்சகம் பிரதீப் குமார் இராவத்தை சீனாவுக்கான அடுத்த தூதராக நியமித்தது.

4. 6G தொழினுட்பத்தில் 6 பணிக்குழுக்களை அமைத்து உள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ) திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் அமைச்சகம்

இ) தகவல் தொடர்பு அமைச்சகம் 

ஈ) வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம்

  • தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழுள்ள தொலைத் தொடர்பு துறை, 6G தொழில்நுட்பத்தில் ஆறு பணிக் குழுக்களை அமைத்துள்ளது.
  • இப்பணிக்குழுவுக்கு நாடு முழுவதும் உள்ள IIT-மெட்ராஸ், IIT-கான்பூர், ஐஐஎஸ்சி போன்றவற்றின் இயக்குநர்கள் தலைமை தாங்குகின்றனர். இந்தியா இந்த ஆண்டு 5G தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது. இக்குழு 6G’இல் உள்ள செயல்முறை & சவால்களை பகுப்பாய்வு செய்யும்.

5. ‘SMILE’ திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • SMILE (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise) என்பது சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • திருநங்கை/நம்பிகள் மற்றும் யாசகர்களின் நலனுக்கான இரண்டு துணைத் திட்டங்கள் இதில் அடங்கும். இந்தத் திட்டத்தில் மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனை -கள், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார இணைப்புகள் ஆகியவை அடங்கும்.

6. 2021 செப்.உடன் முடிவடைந்த 2ஆவது காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு இருப்பு எவ்வளவு?

அ) $9.6 பில்லியன் உபரி

ஆ) $9.6 பில்லியன் பற்றாக்குறை 

இ) $0.6 பில்லியன் உபரி

ஈ) $0.6 பில்லியன் பற்றாக்குறை

  • 2021 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் (Q2Fy22) இந்தியாவின் நடப்புக் கணக்கு இருப்பு $9.6 பில்லியன் பற்றாக்குறையை பதிவுசெய்து உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.3 சதவீதமாக உள்ளது.
  • 2021 ஜூனுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி $6.6 பில்லியன் (GDP’இல் 0.9 சதவீதம்) இருந்தது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, நடப்புக்கணக்கு பற்றாக்குறை முக்கியமாக வர்த்தக இடைவெளியை விரிவுபடுத்தியது மற்றும் முதலீட்டு வருமானத்தின் அதிகரிப்பு இதற்கு காரணமாகும்.

7. 2022 ஜனவரி.1 நிலவரப்படி, அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின்படி, உலகின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை எவ்வளவு?

அ) 3.8 பில்லியன்

ஆ) 5.8 பில்லியன்

இ) 7.8 பில்லியன் 

ஈ) 9.8 பில்லியன்

  • அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் படி, 2022 புத்தாண்டு நாளின்படி, உலக மக்கள்தொகை 7.8 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 74 மில்லியன் அதிகரிப்பு அல்லது 2021 புத்தாண்டு நாளிலிருந்து 0.9% வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது.
  • உலகளவில் ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்புகளும் இரு இறப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. சீனா, 1.4 பில்லிய -ன் மக்களுடன் உலகின் அதிக மக்கட்தொகைகொண்ட நாடாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை இனங் காண தற்போதுள்ள ஆண்டு வருமான வரம்பு என்ன?

அ) `6 இலட்சம்

ஆ) `8 இலட்சம் 

இ) `9 இலட்சம்

ஈ) `10 இலட்சம்

  • மூவர்கொண்ட குழுவின் பரிந்துரைக்குப்பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரை (EWS) அடையாளம் காண தற்போதுள்ள ஆண்டு வருமான வரம்பு `8 இலட்சத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. NEET-PG சேர்க்கையைக் கையாளும்போது உச்சநீதிமன்றம் 10% இடஒதுக்கீடு குறித்த ஐயங்களை எழுப்பியது மற்றும் EWS ஒதுக்கீட்டின் வருமான வரம்பை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு குழுவை அமைத்தது.
  • இக்குழுவில் முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய்பூஷன் பாண்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

9. 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் என்ன?

அ) 918

ஆ) 920

இ) 937 

ஈ) 951

  • இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் (Sex Ratio at Birth -SRB) தேசிய அளவில் 19 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
  • 2014-15’இல் 918ஆக இருந்த இது, 2020-21இல் 937 ஆக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டு இறுதி மதிப்பாய்வின்போது இது அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 640 மாவட்டங்களை உள்ளடக்கிய “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்” இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. போஷான் டிராக்கர் செயலி நிரப்பு ஊட்டச்சத்தின் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்கிறது. பிரதமர் மாத்ரு வந்தனா திட்டம் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

10. பெரிய மாநிலங்களுள் முதல் டோஸ் தடுப்பூசிகளை 100 சதவீதம் பதிவுசெய்த முதல் மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • 100% முதல் டோஸ் தடுப்பூசிகளை பதிவு செய்த நாட்டின் முதல் பெரிய மாநிலமாக தெலுங்கானா ஆனது. மத்திய அரசின் மதிப்பிடப்பட்ட வயது வந்தோர் மக்கள்தொகை இலக்கின்படி, 2.77 கோடி குடிமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை தெலுங்கானா மாநிலம் செலுத்தியுள்ளது.
  • முதல் டோஸின் அடிப்படையில் தேசிய சராசரியைவிட 9 சதவீதமும், இரண்டாவது டோஸில் தேசிய சராசரியை விட 3 சதவீதமும் அம்மாநிலம் முன்னிலையில் உள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வேட்பாளர் செலவு உச்ச வரம்பு உயர்வு

உபி., உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.

தலைமை தேர்தல் ஆணைய அறிவிப்பு:

பெரிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுத் தொகைக்கான உச்ச வரம்பு 28 லட்சம் ரூபாயில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது. சிறிய மாநிலங்களுக்கு 20 லட்சம் ரூபாயிலிருந்து, `28 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லோக்சபாவுக்கு பெரிய மாநிலங்களின் வேட்பாளருக்கு 70 லட்சம் ரூபாயாக இருந்த செலவுத் தொகை உச்ச வரம்பு 90 லட்சம் ரூபாயாகவும், சிறிய மாநிலங்களில் 54 லட்சம் ரூபாயில் இருந்து 75 லட்சம் ரூபாயாகாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2. பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு? – மத்திய அரசு, பஞ்சாப் தனித்தனியாக விசாரணைக் குழு அமைப்பு

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசு தனித்தனியாக விசாரணைக் குழு அமைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடரபாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதற்கு சுதிர் குமார் சக்சேனா தலைமை வகிக்கிறார். குழுவில் உளவுத் துறை இணை இயக்குநர் பல்பீர் சிங் மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆயியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் பஞ்சாப் மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவானது மூன்று நாட்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் முழுமையாக கேட்டறிந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3. 2ம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம் – தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இரண்டாம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம் அமைப்பதில் தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் சுமார் 10,750 சுற்று கிமீ தூரத்துக்கு மின் பகிர்மான வழித்தடம் மற்றும் சுமார் 27,500 மெகாவோல்ட் – ஆம்பியர் அளவுக்கு மின்பரிமாற்ற திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடையே மின்தொகுப்பு ஒருங்கிணைப்புக்கு -ம் மற்றும் சுமார் 20 GW புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை அனுப்பவும் உதவும்.

இத்திட்டம் மொத்தம் `12,031.33 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது மற்றும் இதில் மத்திய நிதி உதவி, திட்ட செலவில் 33 சதவீதமாக அதாவது `3970.34 கோடியாக இருக்கும். இந்த மின்பகிர்வு அமைப்பு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் வரை 5 ஆண்டு காலத்தில் அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவி, மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வு கட்டணங்களை ஈடுசெய்யவும், மின்சாரத்தை குறைந்த விலையில் வைத்திருக்கவும் உதவும். மத்திய அரசின் உதவியால், நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அமைக்கும் இலக்குக்கு உதவும்.

இத்திட்டம், நாட்டின் நீண்ட கால மின்சக்தி பாதுகாப்புக்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் இது தொடர்பான துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.

முதல்கட்ட பசுமை மின்சக்தி வழித்தட திட்டம் ஆந்திரபிரதேசம், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. 24 ஜிகாவாட் திறனுள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம் 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. தேசிய புற்றுநோய் நிறுவன இரண்டாவது வளாகம் இன்று திறப்பு – காணொலி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார்

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது வளாகம் கட்டப்பட்டுள்ளது. பிரதமரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு 430 கோடி ரூபாய் நிதி உதவியும் மீதி தொகை மேற்கு வங்க அரசாலும் வழங்கப்பட்டுள்ளன.

5. மெட்ரோ சேவையை வண்டலூர் வரை நீட்டிக்கும் திட்டம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்

மெட்ரோ சேவையை வண்டலூர் வரை நீட்டிக்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர்பாக முதல்வரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா? ஆம் எனில், எப்போது? என்ற அவரது கேள்விக்கு, “வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தி -ல் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைக்கருதி, இத்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

1. When is the ‘International Day of Epidemic Preparedness’ observed?

A) December 25

B) December 26

C) December 27 

D) December 28

  • December 27 is observed as the International Day of Epidemic Preparedness. The first International Day of Epidemic Preparedness was marked in 2020 based on the proclamation of United Nations General Assembly. According to WHO, the day marks the significance of preventing, preparing for and partnering against epidemics.

2. ‘World Sangeet Tansen festival’ is being held in which state?

A) Madhya Pradesh 

B) Maharashtra

C) Sikkim

D) Arunachal Pradesh

  • World Sangeet Tansen festival has started from Madhya Pradesh. The festival will be organised till December 30 in Gwalior. This is the 97th edition of the World Sangeet Tansen festival.
  • The stage has been constructed on the theme of Siddhanath temple situated in Omkareshwar. National Kalidas Awards will be presented in the inauguration ceremony.

3. Which Indian bureaucrat has been appointed Deputy National Security Advisor?

A) Vikram Misri 

B) Arun Kumar Singh

C) Dinesh Bhatia

D) Manpreet Vohra

  • India’s former envoy to China Vikram Misri was appointed Deputy National Security Advisor in the National Security Council Secretariat. He was an Indian Foreign Service Officer in the 1989 batch and has held several diplomatic positions. Mr Misri was appointed as India’s Ambassador to China in 2019. The Ministry of External Affairs had earlier appointed Pradeep Kumar Rawat as the next ambassador to China.

4. Which Union Ministry has set up six Task Forces on 6G technology?

A) Ministry of Information and Broadcasting

B) Ministry of Skill Development and Entrepreneurship

C) Ministry of Communication 

D) Ministry of Commerce and Industry

  • The Department of Telecommunications (DoT), under the Ministry of Communication has constituted six Task Forces on 6 G technology. The task forces are headed by various academia from across the country Directors of IIT–Madras, IIT–Kanpur, IISc among others. India is deploying 5G technology this year and the group will analyse the process and challenges in 6G.

5. ‘SMILE’ scheme is to be implemented by which Union Ministry?

A) Ministry of Education

B) Ministry of Women and Child Development

C) Ministry of Social Justice and Empowerment 

D) Ministry of Rural Development

  • SMILE (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise) is an umbrella scheme being formulated by Ministry of Social Justice and Empowerment. It includes two sub–schemes for the welfare of transgender persons and persons engaged in begging. The scheme will include rehabilitation, medical facilities, counselling, education, skill development and economic linkages.

6. What is the Current Account Balance of India, in the second quarter ended September 2021?

A) $9.6 billion surplus

B) $9.6 billion deficit 

C) $0.6 billion surplus

D) $0.6 billion deficit

  • India’s current account balance posted a deficit of $ 9.6 billion in the second quarter ended September 2021 (Q2Fy22). It forms 1.3 per cent of the country’s gross domestic product (GDP).
  • The current account was in surplus $ 6.6 billion (0.9 percent of GDP) in the first quarter ended June 2021(Q1Fy22). As per the RBI, the current account deficit (CAD) was mainly due to widening of trade gap and increase in outgo of investment income.

7. As on January 1, 2022, what is the estimated population of the world, as per the US Census Bureau?

A) 3.8 billion

B) 5.8 billion

C) 7.8 billion 

D) 9.8 billion

  • The world’s population is projected to be 7.8 billion people, as on New Year’s Day 2022, according to the US Census Bureau. This represents an increase of 74 million people, or a 0.9% growth rate from New Year’s Day 2021. 4.3 births and two deaths are expected every second worldwide. China remains the world’s most–populous country with 1.4 billion people and India would overtake it by 2025.

8. What is the existing annual income limit for identification of economically weaker section?

A) Rs 6 lakh

B) Rs 8 lakh 

C) Rs 9 lakh

D) Rs 10 lakh

  • After the recommendation by the three–member committee, the Centre has decided to continue with the existing annual income limit of ₹8 lakh for identification of economically weaker section (EWS). The Supreme Court raised doubts over the 10% quota while dealing with NEET–PG admissions and the Centre set up the committee to revisit the income limit of EWS quota. The committee comprised former union finance secretary Ajay Bhushan Pandey among others.

9. What is the Sex Ratio at Birth (SRB) of India in the year 2020–21?

A) 918

B) 920

C) 937 

D) 951

  • India’s Sex Ratio at Birth (SRB) improved by 19 points at National level, from 918 in the year 2014–15 to 937 in 2020–21. This was announced during the Year End Review of Women and Child Development Ministry. The “Beti Bachao Beti Padhao scheme” is being implemented across India, covering 640 districts across the country.
  • The Poshan Tracker application ensures real–time monitoring of supplementary nutrition. The Pradhan Mantri Matru Vandana Yojana scheme is implemented for pregnant women and lactating mothers.

10. Which is India’s first large state to record 100 percent first–dose vaccinations?

A) Tamil Nadu

B) Telangana 

C) Andhra Pradesh

D) Karnataka

  • Telangana became the country’s first large state to record 100 per cent first–dose vaccinations. The state has vaccinated 2.77 crore citizens with the first dose, as per the Central government’s estimated adult population target. The state is ahead of the national average by 9 percent in terms of the first dose and ahead of the national average by 3 percent in second dose.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!