Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

7th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. பன்னாட்டு வானியல் சங்கமானது நிலவிலுள்ள அம்சங்களுக்கு எட்டுப்பெயர்களை அங்கீகரித்துள்ளது. அப்பெயர்கள் சார்ந்த மொழி?

அ) ஆங்கிலம்

ஆ) சீனம்

இ) ஸ்பானியம்

ஈ) பிரெஞ்சு

  • பன்னாட்டு வானியல் நிலவில் உள்ள பகுதியைச் சுற்றியுள்ள அம்சங்க
    -ளுக்கான 8 சீனப்பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, சீன ஆய்வுக்கலமான சாங்-5, நிலவின் மேற்பரப்பிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்புவதற்காக அவ்விடங்களுக்கு அருகே தரையிற -ங்கியது. சீனா, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நிலவின் நிலக்கூறுகளுக்கு பெயரிட்டு வருகிறது.

2. உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) ஜனவரி 30

ஆ) பிப்ரவரி 28

இ) மார்ச் 31

ஈ) ஏப்ரல் 30

  • தற்போது நடைபெற்றுவரும் 74ஆவது உலக நலவாழ்வு அவை, ஜனவரி.30ஆம் தேதியை “உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்” என அறிவித்துள்ளது. அந்த நாளை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) முன்னெடுக்கப்பட்டு, உறுப்புநாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • வைரசுகள், பாக்டீரியா, முதலுயிரி மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள்போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளின் தொகுப்புதான் உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தால் ஏரி, ஜம்மு-காஷ்மீரின் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?

அ) ஸ்ரீநகர்

ஆ) ஜம்மு

இ) அனந்த்நாக்

ஈ) லே

  • ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகர் நகரத்திலுள்ள ஓர் ஏரிதான் இந்த தால். அது “காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல்” என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த ஏரியில் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகின. ஏரிகள் & நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையமானது அந்த ஏரியைச் சுற்றியுள்ள 170’க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை கடந்த மூன்று மாதங்களில் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. மழைக்கால உணர்த்தியாகக் கருதப்படும் லிட்டில் பிளட் டெயில் சார்ந்த இனம் எது?

அ) தேன்சிட்டு

ஆ) தட்டான்

இ) தவளை

ஈ) ஆமை

  • லிட்டில் பிளட் டெயில் என்பது ஒரு சிறிய தட்டான்பூச்சியாகும். அது கேரள மாநிலத்தில் பரந்த அளவில் உள்ளது. இவ்வகை தட்டான் இனத்தை ஜூன் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில் காணலாம். இதன் வாழ்வுச் சுழற்சி, பருவமழையுடன் மிக நெருக்கமாக ஒத்திருப்பதால், அவை பருவமழையின் உணர்த்தியாகக் கருதப்படுகின்றன.

5. சரக்கு & சேவைகள் வரி (GST) கூட்டமைப்பின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?

அ) பிரதமர்

ஆ) நிதியமைச்சர்

இ) நிதிச்செயலாளர்

ஈ) NITI ஆயோக் தலைமைச் செயலதிகாரி

  • சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்குகிறார். அண்மையில், 43ஆவது GST கவுன்சில் கூட்டம், காணொலிவழி மாநாடாக நடத்தப்பட்டது. COVID தடுப்பூசிகளின் வரிவிகிதங்கள்குறித்த முடிவு அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காலதாமதமாக GST செலுத்தினால் பெறப்படும் அபராதம் தளர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

6. சமீபத்தில் பிரதமரால் தொடங்கப்பட்ட YUVA திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) பெண்கள் அதிகாரமளித்தல்

ஆ) ஆசிரியர் வழிகாட்டல்

இ) காலநிலை மாற்ற கட்டுப்பாடு

ஈ) குழந்தைகள் பாதுகாப்பு

  • இளம் & வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் YUVA (Young, Upcoming and Versatile Authors) – இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வியமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • India@75 திட்டத்தின் ஒருபகுதியாக இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில், விடுதலைப்போராட்ட வீரர்கள், விடுதலையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப்பற்றி எழுதும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படும்.

7. BRICS கூட்டமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பைக் கொண்டுள்ள நாடு எது?

அ) பிரேஸில்

ஆ) இந்தியா

இ) ரஷியா

ஈ) சீனா

  • BRICS கூட்டமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. 2012 மற்றும் 2016’க்குப்பிறகு, இந்தியா, BRICS உச்சிமாநாட்டை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். சமீபத்தில், நடைபெறவிருக்கும் BRICS வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு தயாராவதற்காக, இந்தியா, இரண்டாவது BRICS கூட்டத்தை கூட்டியது. “BRICS @ 15: Intra-BRICS Cooperation with Continuity, Consolidation and Consensus” என்பது இதன் கருப்பொருளாக அமைந்தது.

8. ‘தேசிய AI இணையதளத்தை (indiaAI)’ தொடங்கிய ஒன்றிய அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு அமைச்சகம்

ஆ) மின்னணு & தகவல் தொடர்பு அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) வர்த்தக அமைச்சகம்

  • ‘தேசிய AI இணையதளம்’ (indiaai.gov.in) அதன் முதல் ஆண்டு விழாவை 2021 மே.28 அன்று கொண்டாடியது. இந்த இணையதளம் என்பது மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின்னாளுகை பிரிவு மற்றும் NASSCOM ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும்.
  • இது, உலகம் முழுவதும் AI தொடர்பான செய்திகள், கற்றல், கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றிற்கான மையமாக செய -ல்படுகிறது. ஒரு மெய்நிகர் நிகழ்வின்போது, ‘INDIAai’இன் ஓராண்டு’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையும், வலைத்தள முகப்புப்பக்கத்தின் புதிய தோற்றமும் வெளியிடப்பட்டன.

9. இந்திய தடைக்காப்புறுதி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) சென்னை

ஆ) ஹைதராபாத்

இ) மும்பை

ஈ) புனே

  • தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் COVID சுரக்ஷாவின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க ஒன்றிய அரசு தயாராகவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமானது தேசிய பால்வள வாரியத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவாகும்.
  • அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்துப்பொருட்களை வழங்குவதற்காக இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமும் (Indian Immunological ltd) பாரத் பயோடெக் நிறுவனமும் கூட்டிணைந்துள்ளன.

10. எந்த இந்திய முன்னாள் பிரதம அமைச்சரின் நினைவுநாள், “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” என அனுசரிக்கப்படுகிறது?

அ) இராஜீவ் காந்தி

ஆ) இந்திரா காந்தி

இ) அடல் பிகாரி வாஜ்பாய்

ஈ) மொரார்ஜி தேசாய்

  • இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நினைவுநாள், நாடு முழுவதும், “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” என அனுசரிக்கப்படுகிறது. அவரின் 29ஆவது நினைவுநாள் மே.21 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • கடந்த 1991ஆம் ஆண்டு இதே நாளில், தேர்தல் பரப்புரையின் போது சென்னைக்கருகே அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இராஜீவ் காந்தி தனது நாற்பதாம் வயதில் இந்தியாவின் ஆறாவது பிரதம அமைச்சராக பதவியேற்றதன்மூலம், இந்தியாவின் மிக இளவயது பிரதமராக ஆனார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் நாள்.

கருப்பொருள்: Ecosystem Restoration

2. தமிழ்நாட்டில் முதல்முறையாக – யானைகள் குறித்த விழிப்புணர்வு மையம் கோவையில் உருவாக்கம்:

தமிழ்நாட்டில் முதன்முறையாக யானைகள் குறித்த விழிப்புணர்வு மையம் கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது. வனத்தை பாதுகாப்பதிலும், வன வளத்தைப்பெருக்குவதிலும் யானைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

யானைகள் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்வதற்கான சிறப்பு மையம் தமிழ்நாட்டில் இல்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனத்துறை மரக்கிடங்கு வளாகத்தில், ‘வேழம் இயலியல்’விழிப்புணர்வு மையம் உருவாக்கப்பட்டள்ளது.

இம்மையத்தில் பல்வேறு இன யானைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதனுக்கும் யானைக்குமான தொடர்பு, மனிதர்களால் யானைகளுக்கு -ம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பன குறித்த விளக்கங்கள இங்கு இடம்பெற்றுள்ளன.

3. பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு: ஏ++ மதிப்பீடு பெற்று தமிழகம் சாதனை

பள்ளிக்கல்வி செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன. நாடுமுழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 70 பிரிவுகளின் கீழ் அளவிடுவதற்காக செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு 2019-20-ன் வெளியீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அனுமதி அளித்துள்ளார்.

முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு, இந்த வரிசையில் மூன்றாவதாகும். இந்தக் குறியீடு, கல்வித்துறையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பல்முனை முயற்சிகளின் வாயிலாக மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள உந்துசக்தியாக இருக்கும். பள்ளிக் கல்வி முறை அனைத்து நிலைகளிலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்கும், ஏதேனும் இடைவெளி தென்பட்டால் அதனைச் சுட்டிக்காட்டவும் இந்த குறியீடு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2019-20 ஆண்டில் பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது தர நிலையில் மேம்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ஆகியவை தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் கூடுதலாக 10%, அதாவது 100 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன.

அணுகுதல் என்ற பிரிவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் பஞ்சாப் ஆகியவை 10% (8 புள்ளிகள்) வளர்ச்சியைப் பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பிரிவில் சுமார் 13 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 10% (15 புள்ளிகள்) வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் ஒடிசா, 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சம விகிதம் என்ற பிரிவில் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் 10%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10% வளர்ச்சியை (36 புள்ளிகள்) எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத வளர்ச்சியைப் (72 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகள்) பெற்றுள்ளன.

4. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம்: முதல்வர் உத்தரவு

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. சூழலியல் சவால்! | சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தலையங்கம்

உலகம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான். இதை ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாக அறிந்திருந்தும் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறோம். 1974 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அப்படியிருந்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கொள்கை வாசகம் “சூழலியல் மீட்டெடுப்பு’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூழலியலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக பருவநிலை மாற்றமும், அதன் விளைவாக உயிரினங்களுக்கு இனப்பெருக்க அச்சுறுத்தலும் உருவாகியிருக்கின்றன. இதே நிலைமை தொடர்ந்தால், அடுத்த சில நூற்றாண்டுகளில் உலகில் மனித இனமும் அழிவை நோக்கி நகரத் தொடங்கும் என்பதை நாம் ஏனோ உணர மறுக்கிறோம்.

கடந்த ஒரு நூற்றாண்டாக உலகெங்கிலும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. வனப்பரப்பு குறைந்து வருகிறது. இதனால், பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1970 முதல் 2016 வரையிலான 46 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை சராசரியாக 68% குறைந்திருக்கிறது. சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன. வேறு பல அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.1 கோடி டன் நெகிழிப் பொருள்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இதன் விளைவாக, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சொல்லிமாளாது. அது குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதால், எவையெல்லாம் முற்றிலுமாக அழிந்திருக்கின்றன என்பது குறித்த சரியான புள்ளி விவரம் கிடைக்கவில்லை. நெகிழியால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போலவே, புவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து கடல்நீர் வெப்பம் அதிகரிப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்து கொண்டிருக்கின்றன.

மக்கள்தொகைப் பெருக்கமும், அதனால் தேவைப்படும் கூடுதல் நிலப்பரப்பு அவசியமும் விளைநிலங்களையும், வனப்பகுதிகளையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. வளர்ச்சி என்கிற பெயரில் வனவிலங்கு சரணாலயங்கள்கூட விட்டுவைக்கப்படாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், வனவிலங்குகளும், பறவைகளும், புழு பூச்சிகளும் அழிவை நோக்கி நகர்கின்றன. உலகின் இயற்கை சமநிலையை நிலைநிறுத்த அவையெல்லாம் அவசியம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவுக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதைய சூழலியல் பாதிப்பு, உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 42 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர் காற்றுமாசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். 10-இல் 9 பேர் அதிக அளவு மாசுபட்ட காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். இது குறித்த அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வெளிப்படுத்தியும்கூட, விழிப்புணர்வு ஏற்படாததன் விளைவைத்தான் உலகம் இப்போது எதிர்கொள்கிறது. தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் தொடர்பு உண்டு என்று விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். தீநுண்மிப் பரவலில் காற்றுமாசு மிகப் பெரிய பங்கு வகிப்பதாகவும், அதனால் சுற்றுச்சூழலுக்கும் கொள்ளை நோய்த்தொற்று காரணமான மரணங்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதும் அவர்களது கருத்து.

ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்றை மருத்துவத் துறையினரின் உதவியுடன் உலகம் எதிர்கொண்டு வருகிறது என்றாலும்கூட, இதுபோன்ற பேரிடர்கள் மனித இனத்தை தாக்காமல் இருக்க வேண்டுமானால், சூழலியல் மீட்பு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தடுக்கப்பட்டும், மேலும் பாதிப்புகள் ஏற்படாமலும், சூழலியல் மீட்டெடுக்கப்பட்டும், இயற்கை சமநிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பல்லுயிர்ப் பெருக்கம் மேலும் தகர்ந்து விடாமல் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் எதிர்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம்தான் மனித இனத்தின் வருங்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மனிதர்களால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் மூன்றில் ஒரு பங்கு, உணவு உற்பத்தித் துறையால் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதற்கு வனங்கள் அழிக்கப்பட்டு, கூடுதல் நிலங்கள் விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது முக்கியமான காரணம். உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் அதிகமாக பயன்படுத்துவதும்கூட காரணிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் பசுமைப் புரட்சி உணவுத் தன்னிறைவையும், விவசாயிகளுக்கு அதிக மகசூலையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்றாலும்கூட, அதிகரித்த ரசாயன உரங்களின் விளைவாகப் பல்லுயிர்ப்பெருக்க பாதிப்பும், பசுமை இல்ல வாயு வெளியேற்ற அதிகரிப்பும் ஏற்பட்டிருப்பதை மறந்துவிடுகிறோம். பலவீனமான அஸ்திவாரத்தில் பலமான வீடு கட்டும் முயற்சிதான் இது.

6. கரோனா 2-ஆவது அலை வேளாண் துறையில் பாதிப்பை ஏற்படுத்தாது: NITI ஆயோக்

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை, வேளாண் துறையில் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் வேளாண் பிரிவுக்கான உறுப்பினா் ரமேஷ் சந்த் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை, கடந்த மே மாதத்தில் கிராமப்புறங்களில் வேகமாகப் பரவியது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் வேளாண் சாா்ந்த பணிகள் பெரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை. கோடைக் காலம் என்பதால் சிறிய அளவில் காய்கறி சாகுபடி நடைபெற்றது தவிர, உழவு, அறுவடை என்று எந்த விவசாயப் பணிகளும் மே மாதத்தில் நடைபெறவில்லை.

வழக்கமாக, வேளாண் பணிகள் மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் முடிவுக்கு வந்து, ஜூன் மாதம் பருவ மழை பெய்யத் தொடங்கிய மீண்டும் வேகமெடுக்கும். இதனால், கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேளாண் துறையில் எந்த வழியிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவில்லை. இதனால், பருப்பு உற்பத்தியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, சாகுபடி பரப்பளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

நமது வேளாண் மானியக் கொள்கைகள், விலைக் கொள்கை, தொழில்நுட்பக் கொள்கை ஆகியவை அரிசி, கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கே சாதகமாக உள்ளன. இதேபோன்று பருப்பு வகைகளின் கொள்முதல் விலையையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். சமையல் எண்ணையைப் போல் பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது. ஏனெனில் சா்வதேச சந்தையில் குறைவான அளவே பருப்பு வகைகள் கிடைக்கின்றன. சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயா்வதால்தான் உள்ளூா் சந்தையில் அதன் விலை உயா்கிறது. 2020-21-ஆம் நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 3 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.

7. தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 9.27 லட்சம் சிறாா்கள் பாதிப்பு: மத்திய அரசு தகவல்

நாட்டில் கடந்த ஆண்டு நவம்பா் வரை தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 9,27,606 சிறாா்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களின் விவரங்களை அளிக்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் மத்திய அரசிடம் கோரப்பட்டிருந்தது.

அதையடுத்து, நாட்டில் 6 மாதங்கள் முதல் 6 வயது வரை தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களின் விவரங்களை மத்திய மகளிா்-சிறாா்கள் நல மேம்பாட்டு அமைச்சகம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பா் வரை நாட்டில் 9,27,606 சிறாா்கள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,98,359 சிறாா்களும், பிகாரில் 2,79,427 சிறாா்களும் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக், லட்சத்தீவுகள், நாகாலாந்து, மணிப்பூா், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறாா்கள் யாரும் இல்லையென அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 70,665 சிறாா்களும், குஜராத்தில் 45,749 சிறாா்களும், சத்தீஸ்கரில் 37,249 சிறாா்களும், தமிழகத்தில் 12,489 சிறாா்களும், ஆந்திரத்தில் 11,201 சிறாா்களும், தெலங்கானாவில் 9,045 சிறாா்களும், கா்நாடகத்தில் 6,889 சிறாா்களும், கேரளத்தில் 6,188 சிறாா்களும், ராஜஸ்தானில் 5,732 சிறாா்களும் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இருக்காது. அவா்களது நோய்எதிா்ப்புத் திறன் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், ஏதேனும் நோய் ஏற்பட்டால் மற்றவா்களுடன் ஒப்பிடுகையில் அவா்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 9 மடங்கு அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறாா்களைக் கண்டறிந்து வருகின்றன. மத்திய அரசு அளித்துள்ள எண்ணிக்கை விவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா். உடனடி நடவடிக்கைகள் அவசியம்: இது தொடா்பாக சிறாா் நல ஆா்வலா்கள் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் காரணமாக பலா் வேலையிழந்துள்ளனா். அதன் காரணமாக பல குடும்பங்கள் வறுமையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அதனால் சிறாா்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பொது முடக்கம் காரணமாக அங்கன்வாடி மையங்களுக்கு சிறாா்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்வாடி மையங்களின் பணியாளா்கள் சிறாா்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகள் மூலமாக அனைத்து குடும்பங்களுக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றனவா என்பதையும் அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறாா்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் தனி கவனம் செலுத்தி சிறப்புத் திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும்’ என்றனா்.

8. ஐ.நா. இலக்குகளை அமல்படுத்துவதில் இந்தியாவுக்கு 117-ஆவது இடம்

ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா 117-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வறுமையை ஒழித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 17 இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 193 நாடுகளும் கையெழுத்திட்டன. அந்த இலக்குகளை அடைவதற்காக ஒவ்வொரு நாடும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அந்நாடுகளை யாலே பல்கலைக்கழகம் வரிசைப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி யாலே பல்கலைக்கழகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இந்தியா 117-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 100 புள்ளிகளில் இந்தியா 61.9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முக்கியமாக, பசியின்மையை ஒழித்து உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் (இலக்கு-2), பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் (இலக்கு-5), போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (இலக்கு-9) ஆகியவற்றில் எதிா்பாா்த்த அளவுக்கு முன்னேற்றம் காணப்படாததால், இந்தியாவின் புள்ளிகள் சரிவைச் சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான நடவடிக்கைகளை ஜாா்க்கண்ட், பிகாா் ஆகிய மாநிலங்கள் மந்தகதியில் மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளம், சண்டீகா், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகள் இந்தியாவை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் குறியீடு: சுற்றுச்சூழல் நலன், பருவநிலை மாறுபாடு, காற்று மாசுபாடு, சுகாதாரம், குடிநீா், உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, 180 நாடுகளில் கணக்கிடப்பட்ட சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியா 168-ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக யாலே பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 148-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தங்கள் மக்களை ஒவ்வொரு நாடும் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை அறிவதற்கான குறியீட்டில் இந்தியா 172-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

9. குஜராத்தில் ‘மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி’ பகுதி: நாட்டிலேயே முதல் முறை

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அவ்வாகனங்களுக்கான பிரத்யேக பகுதி குஜராத்தின் கேவாடியாவில் அமைக்கப்படவுள்ளது. மின்சார வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் பிரத்யேக பகுதி அமைக்கப்படுவது நாட்டிலேயே இது முதல் முறையாகும். சுற்றுச்சூழல் மாசுபாடு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனங்கள் மக்களிடையே படிப்படியாக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அவ்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குஜராத்தின் கேவாடியா பகுதியில் அமைந்துள்ள 182 மீட்டா் உயரமுள்ள வல்லபபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலையை’ சுற்றியுள்ள பகுதி முழுவதையும் மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பகுதியாக மாற்றுவதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அப்பகுதி முழுவதிலும் மின்சார வாகனங்கள் மட்டுமே இயங்கும் வகையில் படிப்படியாக மாற்றப்படும் என்று உள்ளூா் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதையடுத்து, நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் நகரமாக கேவாடியா மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஒற்றுமைக்கான சிலை பகுதி வளா்ச்சி-சுற்றுலா நிா்வாக ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.

மின்சார பேருந்துகள், மின்சார இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்காக கேவாடியா பகுதி மக்களுக்குக் கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளது.அரசு அதிகாரிகளுக்கும் பணியாளா்களுக்கும் மின்சார வாகனங்களை வாங்குவதற்காக மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையானது அவா்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். கேவாடியா பகுதியில் வாடகை ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் மின்சார வாகனங்களாக இயக்கப்படவுள்ளன. அந்தப் பொறுப்பு சில நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த வாகனங்களை இயக்குவதற்குப் பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுவா் என்றும் அவா்களுக்கு ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களும், அந்த வாகனங்களைப் பழுது பாா்ப்பதற்கான கடைகளும் கேவாடியா பகுதியில் அமைக்கப்படவுள்ளன.

கேவாடியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் எதுவும் செயல்படவில்லை என்றும், அப்பகுதியில் இயங்கும் 2 காற்றாலைகள் மூலமாக மின்சார வாகனங்களை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, கேவாடியா பகுதியானது, முற்றிலும் மின்சார பேருந்துகள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவை மட்டுமே இயங்கும் பகுதியாக விரைவில் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

10. 5 ஆவது முறை ரசாயனக் கலவை பூச்சுக்கு தயாராகும் திருவள்ளுவா் சிலை

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவா் சிலை உப்புக் காற்றால் சேதமடையாமல் தடுக்கும் வகையில் ரசாயனக் கலவை பூசும் பணி விரைவில் தொடங்கும் என சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், கடலின் நடுவே நீா்மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறையின் மீது 133 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருவள்ளுவா் சிலை. இந்தச் சிலை அமைக்கும் பணி 1990 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, 1.1.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை வேறெங்கும் இல்லை என்ற பெருமையை இந்தச் சிலை பெற்றுள்ளது. இந்தச் சிலை உப்புக் காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

கடந்த 2004, 2008, 2013 மற்றும் 2017 ஆண்டுகளில் ரசாயனக் கலவை பூசப்பட்டது. இந்நிலையில் 5 ஆவது முறையாக திருவள்ளுவா் சிலைக்கு நிகழாண்டு ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும். இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகளை கேட்டபோது, இதற்கான ஒப்பந்தப் பணிகள் விரைவில் கோரப்பட உள்ளதாகவும், இதற்குப் பின்னா் முறைப்படி பராமரிப்புப் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனா். திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பாா்வையிட வசதியாக, தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு சேவையை இயக்கி வருகிறது. இந்தப் படகுகள் மூலம் நாள்தோறும் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை பாா்வையிடலாம்.

11. 50-ஆவது ஆக்சிஜன் ரயில் தமிழகத்துக்கு வந்தது

திரவ ஆக்சிஜனுடன் 50-ஆவது ரயில், தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. இதுவரை ரயில் மூலம் 3,404.85 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மாதம் 14-ஆம் தேதி, ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு முதல் ரயில் தமிழகத்துக்கு வந்தது. இதன் தொடா்ச்சியாக ஏராளமான ரயில்கள் தமிழகத்துக்கு ஆக்சிஜன் எடுத்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வந்த 50-ஆவது ரயிலின் மூலம் இதுவரை தமிழகத்துக்கு 3,404.85 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 444 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு விநியோகிக்கும் வகையில், 4 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்தை வந்தடைந்தன. இவ்வாறு ஒரே நாளில் அதிகளவு ஆக்சிஜன் எடுத்து வந்தது இதுவே முதன்முறை. அதில், 50-ஆவது ரயில், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து மதுரை கூடல் நகருக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 டேங்கா்களில் 89.16 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனுடன் வந்து சோ்ந்தது குறிப்பிடத்தக்கது.

1. The International Astronomical Union (IAU) has approved eight names for features on the Moon, in which language?

A) English

B) Chinese

C) Spanish

D) French

  • The International Astronomical Union (IAU) has approved eight Chinese names for features around the area on the Moon. Last year, China’s spacecraft Chang’e–5 probe landed near those places to collect samples from the lunar surface and return to Earth. China has been naming geographical entities on the Moon since 2010.

2. When is the ‘World Neglected Tropical Diseases Day’ to be observed?

A) January 30

B) February 28

C) March 31

D) April 30

  • The ongoing 74th World Health Assembly declared January 30 as ‘World Neglected Tropical Diseases Day’. The proposal to recognise the day was initiated by the United Arab Emirates and it was adopted unanimously by the member countries. NTDs are a group of infections caused by a variety of pathogens such as viruses, bacteria, protozoa and parasitic worms.

3. Dal Lake, which was seen in the news, is situated in which city of Jammu & Kashmir?

A) Srinagar

B) Jammu

C) Anantnag

D) Leh

  • Dal is a lake in Srinagar city, the summer capital of Jammu and Kashmir. It is also called as the “Jewel in the crown of Kashmir”. Recently, illegal constructions have been reported in the lake. The Lakes and Water Ways Development Authority (LAWDA), has demolished more than 170 illegal structures around the lake, in the last three months.

4. Little Bloodtail, which is considered as a harbinger of monsoon, belong to which type of species?

A) Humming Bird

B) Dragonfly

C) Frog

D) Turtle

  • Little Bloodtail is a small dragonfly, which has wide presence in the state of Kerala. This species of dragonfly can be spotted from the beginning of June till September. Since the life cycle of little bloodtail is very closely linked with monsoon, they are considered as a harbinger of monsoon.

5. Who chairs the Goods and services tax (GST) council meeting?

A) Prime Minister

B) Finance Minister

C) Finance Secretary

D) NITI Aayog CEO

  • Union Finance Minister Nirmala Sitharaman chairs the Goods and services tax (GST) council meeting. Recently, the 43rd GST Council meeting was conducted through video conferencing. The decision over tax rates on COVID vaccines was referred to a group of ministers (GOM). Quarterly returns for small traders will continue and has provided relaxation of the late fee penalty for payment of GST.

6. What is the objective of the YUVA programme, launched by the Prime Minister recently?

A) Women Empowerment

B) Author Mentorship

C) Climate Change Control

D) Protection of Children

  • The Ministry of Education has recently launched YUVA– (Young, Upcoming and Versatile Authors) Prime Minister’s Scheme for Mentoring Young Authors. It is an Author Mentorship programme to train young authors.
  • The launch of YUVA (Young, Upcoming and Versatile Authors) is a part of India@75 Project to highlight the perspectives of young writers on themes like Unsung Heroes, Freedom Fighters and Forgotten Places.

7. Which country holds the BRICS 2021 Chairship?

A) Brazil

B) India

C) Russia

D) China

  • India holds the BRICS 2021 Chairship. It is the third time that India will be hosting the BRICS Summit after 2012 and 2016. Recently, the second BRICS Sherpas’ and Sous Sherpas’ meeting was convened by India to prepare for the upcoming meeting of the BRICS Foreign Ministers. The theme of the Chairship is “BRICS @ 15: Intra–BRICS Cooperation with Continuity, Consolidation and Consensus”.

8. The ‘National AI Portal (indiaAI), is an initiative of which Union Ministry?

A) Health Ministry

B) Electronics and IT Ministry

C) Finance Ministry

D) Commerce Ministry

  • The ‘National AI Portal (indiaai.gov.in), celebrated its first anniversary on May 28, 2021.
  • The Portal is a joint initiative by Ministry of Electronics and IT (MeitY), National e–Governance Division (NeGD) and NASSCOM. It serves as a central hub for AI related news, learning, articles, events and activities etc., across the world. During the virtual event, a report titled ‘One year of INDIAai’ and a new look of the website homepage were unveiled.

9. Where is Indian Immunological limited, (IIL) located?

A) Chennai

B) Hyderabad

C) Mumbai

D) Pune

  • The Central Government is set to provide grants to some public sector companies under the Mission COVID Suraksha, to increase the vaccine production. Hyderabad based Indian Immunological limited, IIL, is a facility under the National Dairy Development Board.
  • As per the Science and Technology Ministry, IIL and Bharat Biotech has collaborated to supply the drug substance for manufacturing Covaxin Vaccine.

10. The death anniversary of which former Indian Prime Minister is observed as ‘Anti–terrorism Day’?

A) Rajiv Gandhi

B) Indira Gandhi

C) Atal Bihari Vajpayee

D) Morarji Desai

  • The death anniversary of former Indian Prime Minister Rajiv Gandhi is observed across the country as ‘Anti–terrorism Day’. The 29th death anniversary of Rajiv Gandhi was observed on May 21. On the same day in 1991, he was assassinated at Sriperumbudur, Chennai during an election campaign. Rajiv Gandhi was the youngest ever Prime Minister of India, when he took over as the sixth Prime Minister at the age of 40.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!