Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

7th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அரசின் கடனுதவித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் புதிய தேசிய வலைத்தளத்தின் பெயர் என்ன?

அ. PM ஆத்மநிர்பார் வலைத்தளம்

ஆ. ஜன் சமர்த் வலைத்தளம் 

இ. ஜன் சந்தேஷ் வலைத்தளம்

ஈ. பாரத் சமர்த் வலைத்தளம்

  • ‘ஜன் சமர்த்’ என்ற பெயரில் அரசின் கடனுதவித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் புதிய தேசிய வலைத்தளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ‘ஜன் சமர்த்’ என்பது பயனாளிகளை கடன் வழங்குபவர்களுடன் இணைக்க, அரசின் கடனுதவித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரே டிஜிட்டல் தளம் ஆகும். இது எளிதான டிஜிட்டல் செயல் முறைகள்மூலம் சரியான அரசாங்க நன்மைகளை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது.

2. அதன் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. இஸ்ரேல்

இ. சீனா 

ஈ. தென் கொரியா

  • சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாதங்களுக்குக் கட்டுமானப் பணிகளைத் தொடருவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது. லாங் மார்ச் 2F ஏவுகலம்மூலம் ஷென்சோ–14 விண்கலம் ஏவப்பட்டதாக சீனாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் விண்வெளி நிறுவனம் அறிவித்தது. இந்தக் குழு டியாங்காங் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே மைய தொகுதியில் 6 மாதங்களுக்கு இருந்து பணிகளை மேற்கொள்ளும்.

3. 2022 – பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

அ. நோவக் ஜோகோவிச்

ஆ. ரபேல் நடால் 

இ. காஸ்பர் ரூட்

ஈ. லூகாஸ் அல்கராஸ்

  • டென்னிஸ் வீரர் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி தனது 14ஆவது பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், நடால் தனது 14ஆவது ரோலண்ட் கரோஸ் (பிரெஞ்சு ஓபன்) சாம்பியன்ஷிப்பையும் ஒட்டுமொத்தமாக 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். பிரெஞ்சு ஓபன் என்பது ஒரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியாகும். இது பிரான்சின் பாரிஸில் உள்ள ஸ்டேட் ரோலண்ட் கரோஸில் உள்ள வெளிப்புற களிமண் மைதானத்தில் விளையாடப்படுகிறது.

4. ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை (LiFE) இயக்கம்’ என்ற உலகளாவிய முயற்சியை தொடங்கிய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய பேரரசு

இ. இந்தியா 

ஈ. ஜப்பான்

  • பிரதமர் மோடி, 2022 ஜுன்.5 அன்று, ‘சுற்றுச்சூழல் இயக்கத்திற்கான வாழ்க்கைமுறை’யை கானொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். லைப் யோசனையை, கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற COP26 எனப்படும் ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசியபோது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகம் முழுவதுமுள்ள தனிநபர்கள், சமுதாயத்தினர் மற்றும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் உணர்வுடன்கூடிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவதற்கும், வலியுறுத்துவதற்கும், கல்வியாளர்கள், பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ‘யோசனை கோருவதற்கான லைப் சர்வதேச அழைப்பு’ தொடங்கும்.

5. ‘Ex SAMPRITI–X’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியாகும்?

அ. இலங்கை

ஆ. ஜப்பான்

இ. வங்காளதேசம் 

ஈ. பிரான்ஸ்

  • இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒருபகுதியாக, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான ‘SAMPRITI–X’ வங்காளதேசத்தில் தொடங்கியது. இந்த இராணுவப்பயிற்சியானது இருபடைகளுக்கும் இடையே இயங்குதன்மை மற்றும் ஒத்துழைப்பின் அம்சங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டோக்ரா படைப்பிரிவானது இந்தியாவின் சார்பாக இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.

6. ‘ஷெல்பிரேட்!’ என்பது எந்தப் பன்னாட்டு நாளின் கருப்பொருளாகும்?

அ. உலக ஆமைகள் நாள் 

ஆ. உலக டுனா நாள்

இ. உலக நீர் நாள்

ஈ. உலக சுற்றுச்சூழல் நாள்

  • உலக ஆமைகள் நாளானது மே.23 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆமைகள் அவற்றின் இயல் வாழ்விடங்களில் வாழ உதவும் வழிகள்பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. ‘Shellebrate!’ என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக ஆமைகள் நாளுக்கானக் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் ஆமைகளை நேசிக்கவும் காப்பாற்றவும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இந்தச் சிறப்பு நாள் 1990இல் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான அமெரிக்க டார்டாய்ஸ் ரெஸ்க்யூமூலம் நிறுவப்பட்டது.

7. உலக செஞ்சிலுவை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.08 

ஆ. மே.10

இ. ஜூன்.05

ஈ. ஜூன்.07

  • பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில், உலக செஞ்சிலுவை நாள் ஒவ்வோர் ஆண்டும் மே.8 அன்று அனுசரிக்கப்படுகிறது. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரும் அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவருமான ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளையும் இந்த நாள் குறிக்கிறது. ‘Be Human Kind’ என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.

8. 2022–23ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொத்த உர மானியம் எவ்வளவு?

அ. ரூ.1 இலட்சம் கோடி

ஆ. ரூ.2.15 இலட்சம் கோடி 

இ. ரூ.1.5 இலட்சம் கோடி

ஈ. ரூ.3.5 இலட்சம் கோடி

  • உரங்களின் விலை உயர்வுக்கு இடையே நடுவண் அரசு கூடுதலாக `1.10 இலட்சம் கோடி உர மானியத்தை அறிவித்தது. இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உர மானியம் `1.05 இலட்சம் கோடி கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2022–23ஆம் ஆண்டில் அரசின் மொத்த உர மானியம் `2.15 இலட்சம் கோடியாக உயரும். உர மானியம் 2021–22ஆம் ஆண்டில் `1.62 இலட்சம் கோடியாக இருந்தது.

9. குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 நாள் தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?

அ. ஐக்கிய பேரரசு

ஆ. பிரான்ஸ்

இ. பெல்ஜியம் 

ஈ. நியூசிலாந்து

  • உலகளவில் அதிகரித்துவரும் பாதிப்புகளுக்கிடையே குரங்கம்மை நோயாளிகளுக்கு இருபத்தொரு நாள் கட்டாய தனிமைப்படுத்தலை பெல்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நலவாழ்வு அமைப்பானது இதுவரை 12 நாடுகளில் இதுபோன்ற 92 பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 28 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. குரங்கம்மை என்பது பெரியம்மை குடும்பத்தின் ஓர் அங்கமான குரங்கம்மை வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இது சொறி, காய்ச்சல், தலைவலி, தசைவலி, வீக்கம் மற்றும் முதுகுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

10. வங்கிகள், NBFC–கள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையின் தரத்தை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்ட RBI குழுவின் தலைவர் யார்?

அ. M D பத்ரா

ஆ. B P கனுங்கோ 

இ. M K ஜெயின்

ஈ. உர்ஜித் படேல்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகள், NBFC–கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையின் செயல்திறன், போதுமை மற்றும் தரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழு தனது முதல் கூட்டம் நடந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. உணவுப் பாதுகாப்பு நாளையொட்டி, 4ஆவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மத்திய குடும்பநல அமைச்சகம் வெளியிட்டது.

நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதிசெய்யும் பொருட்டு, மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க, இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4ஆவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். உணவுப் பாதுகாப்புச் சூழலில், போட்டி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2018-19ஆம் ஆண்டில், ஐந்து அம்சங்களை அடிப்படையாககொண்ட உணவுப் பாதுகாப்புக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. குடி மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதற்கு இந்தக் குறியீடு உதவிபுரியும்.

2021-22ஆம் ஆண்டுக்கான தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும், சண்டிகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

2. IRCTC வலைதளத்தில் மாதம் 12 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் – ஆதார் இணைத்தால் 24 பயணச்சீட்டுகள்

இரயில் பயணச்சீட்டு முன்பதிவு வலைதளமான IRCTC (இந்திய இரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா கழகம்) ஒரு மாதத்துக்கான பயணச்சீட்டு முன்பதிவு எண்ணிக்கையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

இரயில்களில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் வகையிலும், தனது ஒரே வலைதள கணக்கிலேயே குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையிலும் முன்பதிவு எண்ணிக்கையை IRCTC உயர்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காக மாதம் 6 இரயில் பயணச்சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற அளவை 12-ஆக உயர்த்த இரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பயணி தனது ஒரே IRCTC கணக்கில் மாதம் 12 பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். மேலும், IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பயணிகள் ஒரே கணக்கிலிருந்து மாதம் 24 பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகள் ஆதார் மூலமாக அவ்வப்போது ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1. What is the name of the new national portal launched for credit–linked government schemes?

A. PM Atmanirbhar Portal

B. Jan Samarth Portal 

C. Jan Sandesh Portal

D. Bharat Samarth Portal

  • Prime Minister Narendra Modi launched the national portal for credit–linked government schemes named ‘Jan Samarth Portal’. Jan Samarth Portal is a one–stop digital portal linking government credit schemes, to connect beneficiaries to lenders. It provides people with the right government benefits through simple and easy digital processes.

2. Which country launched its manned mission to its Tiangong Space station?

A. Japan

B. Israel

C. China 

D. South Korea

  • China successfully launched its third manned mission to its new space station, sending three astronauts to continue construction work for six months. China’s Manned Space Agency (CMSA) announced that the Shenzhou–14 spacecraft was launched by a Long March 2F rocket. The team will live and work at the Tiangong Space Station’s Tianhe core module for six months.

3. Who is the winner of the French Open 2022 Men’s single title?

A. Novak Djokovic

B. Rafael Nadal 

C. Casper Ruud

D. Lucas Alcaraz

  • Tennis player Rafael Nadal won the final match to beat Casper Ruud and claim his 14th French Open Men’s single title. With this victory, Nadal claimed his 14th championship at Roland Garros and 22nd Grand Slam title overall. French Open is a Grand Slam tennis tournament played on outdoor clay courts at the Stade Roland Garros in Paris, France.

4. Which country launched the global initiative ‘Lifestyle for the Environment (LiFE) Movement’?

A. USA

B. UK

C. India 

D. Japan

  • Indian Prime Minister Narendra Modi launched a global initiative Lifestyle for the Environment (LiFE) Movement, on the occasion of World Environment Day through video conferencing. The idea of LiFE was originally introduced by the Prime Minister during the 26th United Nations Climate Change Conference of the Parties COP–26 in Glasgow. ‘LiFE Global Call for Papers’ was initiated inviting ideas and suggestions to adopt an environment–conscious lifestyle.

5. ‘Ex SAMPRITI–X’ is a joint military training exercise between India and which country?

A. Sri Lanka

B. Japan

C. Bangladesh 

D. France

  • ‘Ex SAMPRITI–X’, a joint military training exercise between India and Bangladesh commenced in Bangladesh, as part of bilateral defence cooperation. The military training exercise is aimed at strengthening the features of interoperability and cooperation between both armies. The Indian contingent is represented by a battalion of the Dogra regiment.

6. ‘Shellebrate!’ is the theme of which International Day?

A. World Turtle Day 

B. World Tuna Day

C. World Water Day

D. World Environment Day

  • World Turtle Day is celebrated on 23 May globally, to raise awareness about the ways to help turtles to survive in their natural habitat. The theme for World Turtle Day 2022 is – ‘Shellebrate!’, to ask everyone to love and save Turtles. This special day was founded by the American Tortoise Rescue (ATR), a non–profit organisation in 1990.

7. World Red Cross Day is observed on which date?

A. May.08

B. May.10

C. June.05

D. June.07

  • To commemorate the principles of the International Red Cross and Red Crescent Movement, the World Red Cross Day is celebrated every year on May 8. The day also marks the birth anniversary of Henry Dunant, the founder of ‘International Committee of the Red Cross (ICRC)’ and the recipient of the first Nobel Peace Prize. The theme for 2022 is ‘Be Human Kind’.

8. What is the Government’s total fertiliser subsidy in the year 2022–23?

A. Rs 1 lakh crore

B. Rs 2.15 lakh crore

C. Rs 1.5 lakh crore

D. Rs 3.5 lakh crore

  • The Central Government announced an additional fertiliser subsidy of ₹1.10 lakh crore, amidst the rising prices of fertiliser. This has been announced in addition to the fertiliser subsidy of ₹1.05 lakh crore in the budget. With this, the Government’s total fertiliser subsidy is set to touch a record ₹2.15 lakh crore in 2022–23. The fertiliser subsidy stood at ₹1.62 lakh crore in 2021–22.

9. Which is the first country to introduce 21–day quarantine for monkeypox patients?

A. United Kingdom

B. France

C. Belgium 

D. New Zealand

  • Belgium has introduced a mandatory 21–day quarantine for monkey–pox patients amidst the raising cases globally. The WHO has so far confirmed 92 cases of the disease in 12 countries, with 28 more suspected cases under review. Monkeypox is a disease caused by the monke–pox virus, a part of the smallpox family. It has symptoms including rashes, fever, headaches, muscle ache, swelling and back–pain.

10. Who is the head of the RBI committee formed to evaluate the quality of customer service in banks, NBFCs, and other regulated entities?

A. M D Patra

B. B P Kanungo 

C. M K Jain

D. Urjit Patel

  • The Reserve Bank of India (RBI) has set up a committee to evaluate the efficacy, adequacy and quality of customer service in banks, NBFCs, and other entities regulated by it The six–member committee is headed by former RBI deputy governor B P Kanungo. The committee has been asked to submit a report within three months from the date of its first meeting.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!