Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

7th March 2020 Current Affairs in Tamil & English

7th March 2020 Current Affairs in Tamil & English

7th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

7th March 2020 Current Affairs Tamil

7th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.உயர்கல்விக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதத்தை வழங்குவதாக அண்மையில் அறிவித்த மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. ஹரியானா

இ. ஜார்க்கண்ட்

ஈ. பீகார்

  • உயர்கல்விக்கு வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதத்தை வழங்குவதாக அண்மையில் ஹரியானா முதலமைச்சர் அம்மாநில பட்ஜெட் அமர்வின்போது அறிவித்தார். இதனால், மாணவர்கள் வங்கிகளால் கேட்கப்பெறும் பிணை உத்தரவாதமின்றி கடன்களைப்பெறமுடியும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் (NRI) நலன் மற்றும் வேலைவாய்ப்புக்காக ஒரு தனி அயல்நாட்டு ஒத்துழைப்புத் துறையையும் அம்மாநில அரசு உருவாக்கியுள்ளது.

2.அண்மைய QS உலக தரவரிசையில், மிகவுயர்ந்த தரத்தைப் பெற்றுள்ள இந்திய பொறியியல் கல்லூரி எது?

அ. ஐஐடி கரக்பூர்

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி மும்பை

  • அண்மைய QS உலக தரவரிசைப்படி, மும்பை மற்றும் தில்லியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) உலகெங்கிலும் உள்ள சிறந்த 50 பொறியியல் கல்லூரிகளுள் ஒன்றாக உள்ளன. IIT மும்பை 44ஆவது இடத்தையும், IIT தில்லி 47ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. கலை மற்றும் மனிதநேயம் தொடர்பான QS உலக தரவரிசைப்படி, தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 162ஆவது இடத்திலும், தில்லி பல்கலைக்கழகம் 231ஆவது இடத்திலும் உள்ளது.

3. 10 பொதுத்துறை வங்கிகளை நான்கென இணைத்தபிறகு, இந்தியாவில் அரசுக்கு சொந்தமான மொத்த வங்கிகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

அ. எட்டு

ஆ. பத்து

இ. பன்னிரண்டு

ஈ. பதினான்கு

  • 10 பொதுத்துறை வங்கிகளை 4 பொதுத்துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ஓரியண்டல் வணிக வங்கி-யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் தேசிய வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி-கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி-கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும், அலகாபாத் வங்கி- இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பு 1.4.2020 முதல் அமலுக்கு வரும். இந்தச் செயல்முறைக்குப்பிறகு, இந்தியாவில் மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும்.

4.அண்மைய, ‘நேரடி வரிகள் மசோதா-2020’இன்படி, வரி செலுத்துவோர், தள்ளுபடியுடன் உரிய வரித் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் என்ன?

அ. மார்ச் 31, 2020

ஆ. மே 31, 2020

இ. செப்டம்பர் 30, 2020

ஈ. டிசம்பர் 31, 2020

  • மக்களவையில், ‘நேரடி வரிகள் மசோதா-2020’ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.5 அன்று மக்களவையில் தாக்கல்செய்தார். இம்மசோதாவின்படி, வரி செலுத்துவோர் தங்களின் நிலுவை வரித்தொகையை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டியோ, அபராதமோ வசூலிக்கப்படாது. அதேவேளையில் நிலுவை வரித்தொகையுடன் பத்துச்சதவீத கூடுதல்வரி செலுத்தவேண்டும்.

5. ‘பிரக்யான் கருத்தரங்கம் – 2020’ என்பது இந்தியாவின் எந்த ஆயுதப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச கருத்தரங்கமாகும்?

அ. இந்திய விமானப்படை

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய இராணுவம்

ஈ. இந்திய கடலோர காவல்படை

  • தரைவழிப் போர்முறை ஆய்வுகள் மையம் (CLAWS) ‘பிரக்யான் கருத்தரங்கம் – 2020’ என்ற இரண்டு நாள் இந்திய இராணுவ சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடுசெய்துவருகிறது. இந்தக்கருத்தரங்கு, புது தில்லியில், 2020 மார்ச் 04 அன்று தொடங்கியது. இந்த நிகழ்வு, தேசிய மற்றும் சர்வதேச இராணுவ வல்லுநர்களுக்கு, ‘தரைவழிப்போர்முறையின் சிறப்பியல்புகளை மாற்றுதல் மற்றும் இராணுவத்தின் மீதான அதன் தாக்கம் – Changing Characteristics of Land Warfare and its Impact on the Military’ என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ள ஒரு தளத்தை உருவாக்கித்தந்தது.

6.சுவேதா ராவத் மற்றும் ஷாலினி குப்தா ஆகியோர் தொடர்புடைய துறை எது?

அ. விளையாட்டு

ஆ. இதழியல்

இ. அறிவியல்

ஈ. வணிகம்

  • DRDOஇன் உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் கழகத்தின் (DIPAS) சுவேதா ராவத் மற்றும் IIT தில்லியின் வேதிப்பொறியியல் துறையைச் சார்ந்த ஷாலினி குப்தா ஆகிய இரு அறிவியலா -ளர்களுக்கும் அண்மையில், குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள், “சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இளம் பெண்களுக்கான தேசிய விருதினை” வழங்கினார்.
  • Dr. சுவேதா ராவத், ஒரு பெண்ணுக்கான முழு உடல் பாதுகாவலரை உருவாக்கியுள்ளார். அதேசமயம், Dr. ஷாலினி குப்தா, குருதி நுண்ணுயிர் பெருக்க நோய்க்கான சிகிச்சைக்காக, ‘SeptifloTM’ என்னும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு வழிகாட்டியுள்ளார்.

7.போத்தல் குடிநீரின் சில்லறை விற்பனை விலையை குறைப்பதற்கு, அண்மையில் உத்தரவு பிறப்பித்த மாநில அரசு எது?

அ. உத்தரபிரதேசம்

ஆ. உத்தரகண்ட்

இ. கர்நாடகம்

ஈ. கேரளம்

  • `20 என இருந்த போத்தல் குடிநீரின் சில்லறை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு `13 என நிர்ணயித்து கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. போத்தல் தண்ணீர் ஓர் அத்தியாவசியப் பொருள் என்பதால் இந்தவிலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில உணவு வழங்கல் துறை இந்த உத்தரவை பிறப்பித்ததோடு, இந்தப் புதிய விலை வரம்பை விற்பனையாளர்கள் பின்பற்றவும், இப்புதிய விலையை அனைத்து போத்தல்களிலும் அச்சிடவும் கேட்டுக்கொண்டது.

8.அயல்நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களைப் பட்டியலிடுவதற்கு, அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்தச்சூழலில், ‘GDR’ என்பது எதைக்குறிக்கிறது?

அ. Government Deposit Receipts

ஆ. Global Deposit Receipts

இ. Global Depository Receipts

ஈ. Government Depository Receipts

  • அயல்நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் நேரடி பட்டியலை தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நிறுவனங்கள் சட்டம், 2013’இல் பொருத்தமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மிகச்சில இந்திய நிறுவனங்களுக்கு, உலகளாவிய வைப்பகப் பற்றுச்சீட்டுகள் Global Depository Receipts (GDR) உள்ளன. சிலவற்றில் மட்டுமே அமெரிக்க வைப்பகப் பற்றுச்சீட்டுகள் (ADR) உள்ளன; அந்நிறுவனங்களால் அமெரிக்காவில் வர்த்தகம் மேற்கொள்ளலாம்.
  • ஒரு வைப்பகப் பற்றுச்சீட்டு என்பது வெளிநாட்டு நாணயத்தைக் குறிக்கும் ஒரு கருவியாகும். இது, ஓர் அயல்நாட்டு நிறுவனத்தால் ஓர் உள்நாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், பன்னாட்டுப் பரிமாற்றகத்திலும் அது பட்டியலிடப்பட்டுள்ளது.

9. ‘சிவில் விமானப்போக்குவரத்து தொடர்பான அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கை’யில் மேற்கொண்ட அண்மைய திருத்தத்தின்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI), ஏர் இந்தியாவில், பங்குகளை வாங்குவதற்கான வரம்பு என்ன?

அ. 26%

ஆ. 49%

இ. 76%

ஈ. 100%

  • ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100% வரை முன்அனுமதி பெறாமல் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கொள்கையில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது விமானப்போக்குவரத்துச் சேவை / உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை ஆகியவற்றில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது அனுமதி பெறாமல் 49 சதவீதமாகவும், அதற்கும் கூடுதலானது அரசு அனுமதி பெற்றும் என உள்ளது.

10. P A சங்மா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமையவுள்ள மாநிலம் எது?

அ. அசாம்

ஆ. மேகாலயா

இ. திரிபுரா

ஈ. நாகாலாந்து

  • மேகாலய மாநில முதலமைச்சர் கான்ராட் K சங்மா, சமீபத்தில் துரா மாவட்டத்தில் ஓர் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்திற்கு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் P A சங்மாவின் பெயர் சூட்டப்படவுள்ளது. `125 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், ஒரு கால்பந்து மைதானம் மற்றும் பல்நோக்கு உட்புற மைதானம் ஆகியவை அடங்கும்.
  • இந்த வளாகத்தின் கட்டுமானத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசு ஆகியவை இணைந்து நிதியளிக்க உள்ளன. வரும் 2022ஆம் ஆண்டில், மேகாலயா, தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது. அதற்குள் இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் விளைந்த பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் உள்ளிட்ட மாம்பழ ரகங்கள் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இந்த மாம்பழங்கள், தரப்பரிசோதனைக்குப்பிறகு, “பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனா” என்ற முத்திரை மற்றும் பட்டைக் குறியீட்டுடன் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
  • நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச்.5 அன்று நடந்தது. இந்தக்கல்லூரியின் முதல்வராக மருத்துவர் சாந்தா அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் (97) காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!